Sunday, July 13, 2008

புதுத் துடைப்பமும் புதுக் கேமெராவும்

மனுசனைச் சும்மா இருக்க விட்டாலும்.............
ஃப்ரீயாக் கொடுத்தா ஃபினாயிலும் குடிப்போமுன்றது இவுங்களுக்கு எப்படித் தெரியும்? நான்பாட்டுக்கு அக்கடான்னு நிம்மதியா இருந்தேன், நான் உண்டு என் கோபால் & கோகி உண்டு, அப்புறம் என் பதிவும் தமிழ்மணமும் உண்டுன்னு.


250 டாலரை அனுப்பி எதாவது வாங்கிக்கோன்னு சொன்னாங்க. பரவாயில்லையேன்னு உடனே புகை விட வேணாம். கேஷாக் கொடுக்கலை. எல்லாம் வவுச்சர்தான். உள்ளூர்க் கடைகளில் செலவு செய்யறமாதிரி கொடுக்கக்கூடாதா? ஊஹூம்...... இருந்துக்கிட்டே வாங்காதே பறந்துக்கிட்டே வாங்குன்னு, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் க்ரிஸ் ஷாப்லே வாங்கிக்கணுமாம்.


தூக்கிக் கடாசலாமுன்னா மனசு கேக்குதா? ஓடிப்போய் அவுங்க தளத்துலே என்னென்ன கிடைக்குதுன்னு பார்த்தால்.........வாசனை திரவியம்(??) முதல் தங்கமுலாம் பூசுன சொப்ஸ்டிக் வரை என்னென்னமோ கிடக்கு. எனக்கு இதைப் பிடிச்சுத் தின்னத் தெரியாது அதனால் வேணாமுன்னுட்டேன்.


யோசிச்சுப் பார்த்து நல்லதா எதாவது வாங்கிக்கலாம். அதான் கோபால் எப்பவும் போய்வந்துகிட்டுத்தானே இருக்காருன்னு ஒரு அசட்டை. திடீர்னு ஒரு நாள் இவர் சொல்றார், "வவுச்சரோட ஆயுள் அடுத்த மாசம் முடியப்போகுது. சீக்கிரம் எதாவது பார்த்துச் சொல்லு"


ஒன்னும் சரியாத் தேறலை. ஸ்வராஸ்கி கிறிஸ்டல் நெக்லெஸ் 190க்கு போட்டுருக்கு. வெள்ளியில் செஞ்சது. மகள் போட்டுக்குவாள்னு அதை வாங்கச் சொன்னேன். இன்ஃப்ளைட்லே வாங்கிவந்தார். அதுக்கப்புறமும் 60 மிச்சம் கிடக்கு. விட்டுறமுடியுதா? காலாவதி ஆக ஜஸ்ட் ஒரு நாள் இருக்கும்போது ஒரு டைட்டானியம் 4GB பென்ட்ரைவ் வாங்கிவந்தார். பத்தோ, பதினைஞ்சோ கூடப்போட்டுக் கொடுத்தாராம். தொலையட்டும். எப்படியோ 250 செலவு செஞ்சுட்டேன்னு நிம்மதியா இருந்தா அடுத்த வாரமே தபாலில் இன்னொரு இடி வந்து விழுந்தது. இன்னொரு 250 வவுச்சர்:-)


ஆளும்பாழுமாக்காம இந்த முறை உஷாரா இருக்கணும். வாண்ட் லிஸ்ட்லே இப்ப இருப்பது டிஜிட்டல் வீடியோ கேமெரா. தேடிக்கிட்டே வந்தா...ஆ...ஆப்ட்டுடுச்சு. The RANGER HD DVGenius 700 Digital Video Camcorder. பேரே பிடுங்கித் தின்றது மாதிரியில்ல இருக்கு!!!!சினிமா குவாலிட்டியில் படம் எடுக்கலாமாம்..அட! பரவாயில்லையே. எத்தனை நாளைக்குத்தான் அடுத்தவங்க எடுத்த சினிமாவையே பார்க்கறது? இனிமே சொந்தப் படம்தான். ஜோதிகா கிட்டே கேட்டுப்பார்க்கணும்:-)))



வலையில் பார்த்தால் நல்லாதான் இருக்கு. வர்ணனையோ அபாரம். ஆனா.......மெயில் ஆர்டர்லே மட்டுமே கிடைக்குமாம். அதே க்ரிஸ் ஷாப்தான். எக்ஸ்க்ளூசிவ் ஐட்டமாம். ஊனக்கண்ணுலே பார்க்க எப்படி இருக்குமுன்னு தெரிஞ்சா நல்லது. தேடித்தேடியும் கிடைக்கலை. சிங்கை தயாரிப்பு. (சீனா இல்லை என்பதே கொஞ்சம் மனஆறுதல்)



எப்படியும் ஒரு சுற்றுலா வருதே. அதுக்குப் பயனா இருக்குமேன்னு பல்லைக் கடிச்சுக்கிட்டு ஆர்டர் செஞ்சாச்சு. இந்த முறை கூடப்போட்டுக் கொடுத்தது 150.

ரெண்டுவாரத்துலே (இவர் ஊரில் இல்லாதப்ப) கூரியர் வந்துச்சு. பெரிய அட்டைப் பெட்டி. ஒன்னரைக் கிலோன்னு எழுதி இருந்தது. 'பாஸ் த பார்ஸல் கேம்' போல ஒன்னொன்னாப் பிரிச்சேன். கட்டக்கடைசியில் இருந்த அட்டைப்பொட்டியிலே கைக்கு அடக்கமா ஒரு கேமெரா. கையேடைப் படிச்சப்ப, விருப்பப்பட்டால் மெமரி கார்ட் போட்டுக்கும் இடமுன்னு படம்போட்டுப் பாகங்களைக் குறிச்சிருக்கு. சரிதான். ஏற்கெனவே பில்ட் இன் மெமரி இருக்குபோல. எதுக்கும் எஸ்டி கார்ட் பொதியில் இருக்கான்னு பார்த்தால் ஒன்னுமில்லை.



இமெயில் எதுக்கு இருக்கு? தட்டிவிட்டேன் ஒன்னு. 'கஷ்டம்மர் கேர்'லெ இருந்து பதில் வருது, அதை நீயே வாங்கிக்கணுமுன்னு(-: அதுக்குள்ளே கோபால் வந்துட்டார். இன் பில்ட்லே 10 வினாடிக்கு வீடியோ எடுக்கலாம். இதுலே சினிமா எடுத்தா......விடிஞ்சது போங்க. இல்லைன்னா 12 ஃபோட்டோ. .எங்க லோக்கல் மார்கெட்டில் எல்லாம் தீப்பிடிச்ச விலையாச்சா..... மறுவாரம் இவர் சிங்கை வழியா வந்தப்ப அங்கே ட்யூட்டிஃப்ரீயில் 30க்கு ஒரு 4GB எஸ்டி கார்டு வாங்கியாந்தார். இதைவச்சு 3M லே 3680 படம் இல்லேன்னா 132 நிமிச வீடியோ ( அப்பாடி.... தமிழ்ப்படத்துக்குச் சரியா இருக்கும்)



ஆமாம். இப்ப எதுக்கு இந்தக் கதையைச் சொல்லிக்கிட்டு இருக்கேன்?


அந்த ஜீனியஸை சரியா இயக்க 'இந்த ஜீனியஸுக்கு'த் தெரியலை. ரெஸல்யூஷன் சரி இல்லை போல. ஃபிஜியில் எடுத்த படங்கள் எல்லாம் ரொம்பச் சுமாராத்தான் வந்துருக்கு.


அடுத்தவாரம் மெயிலில் இன்னும் வவுச்சர் மட்டும் வரட்டும்.....மவனே.........எவ்வளோ கொடுத்தாலும் தாங்குவான்னா நினைப்பு?

கேமெரா ஒன்னும் சரியில்லை. இல்லைன்னா நம்ம ரேஞ்சே வேற! அதுக்காக நல்ல பாயிண்ட் ஒன்னுமே இல்லைன்னு நினைச்சுறாதீங்க. கைப்பைக்குள்ளே வச்சுக்கும் அளவுலே அடக்கமா இருக்கு.:-) அப்ப 40GB மெமரியோட சோனி இங்கேயே சேலில் இருந்துச்சு 599க்கு. மரியாதையா அதையே வாங்கி இருக்கலாம்.




புதுத் துடைப்பம் ரொம்ப நல்லாப் பெருக்கும். புதுக்கேமெரா?
சுமாராத்தான் (படம்) எடுக்கும்.


ஆடமாட்டாதவளுக்குக் கூடம் கோணலாமே. நெசமாவா?

46 comments:

said...

////அந்த ஜீனியஸை சரியா இயக்க 'இந்த ஜீனியஸுக்கு'த் தெரியலை.
ரெஸல்யூஷன் சரி இல்லை போல. ஃபிஜியில் எடுத்த படங்கள்
எல்லாம் ரொம்பச் சுமாராத்தான் வந்துருக்கு.////

நீங்க நம்ம கொத்தனாருகிட்ட கேட்டிருக்கலாம். அவருதான் ஆல் ரவுண்ட் ஜீனியஸ் ஆச்சே!

said...

//பாஸ் த பார்ஸல் கேம்' போல ஒன்னொன்னாப் பிரிச்சேன். //

அந்த விளையாட்டில் பிரிச்சுப் பார்த்து கள்ள ஆட்டம் ஆடறது நீங்கதானா? சரிதான்.

said...

வாங்க வாத்தியார் ஐயா.

கொத்ஸ்கிட்டே கேக்கணுமுன்னு எனக்குத் தோணாமப்போச்சு பாருங்க!!!!
அதான் கையில் இருக்கும் பொக்கிஷத்தின் அருமை தெரிவதில்லை:-)

said...

வாங்க கொத்ஸ்.

ஒன் வுமன்ஷோவில் எப்படிக் கள்ளாட்டம்?

வாத்தியார் ஐயா சொன்னதைப் பாருங்க.
விளக்கம் அனுப்புங்க ஜீனியஸைப் பற்றி.

said...

:)) அட பாவமே :((

said...

ஆகா - துளசியால் முடியாததுன்னு ஒண்ணு இருக்கா - துளசிக்கு தெரியாதது ஒண்ணு இருக்கா

நம்ப முடியவில்லை

said...

வாங்க ரம்யா.
நம்ம மக்கள்ஸ்தான் பாவம்.

எல்லா இருட்ஸையும் பார்த்துத் தொலைக்கணுமே(-:

said...

என்னங்க சீனா,
என்னை எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரியா நினைச்சுக்கிட்டீங்களா?

தேவுடா.........

said...

அக்கா, புது கேமரால்லாம் வாங்கி இருக்கீங்க. ஒரு ஸ்வீட் படம் போட்டு டிரீட்ட முடிச்சு இருக்கலாமே? :)

said...

ஆடத்தெரியாதவளுக்கு தரை கோணல்ன்னு எங்கம்மா சொல்லுவாங்க..
பாக்க நல்லாருக்கு.. இப்படித்தான் வெஸ்ட்சைடு காரன் அடிக்கடி இத்தனைக்கு வாங்கினா இத்தனை எடுக்கலாம்ன்னு சொல்லுவான் .. சரின்னு எடுத்தா அதுக்கு இத்தனைன்னு சொல்லுவான் விட்டா கடையை விட்டு வெளியே வராம என்னை குர்தா எடுக்கவச்சிட்டே இருப்பான் போலன்னு நினைச்சுப்பேன்..

said...

காமிராக் கதையில துடைப்பத்துக்கு என்ன வேலை எனப் படித்துக் கொண்டே வந்தேன்:))!

//அடுத்தவாரம் மெயிலில் இன்னும் வவுச்சர் மட்டும் வரட்டும்.....மவனே.........எவ்வளோ கொடுத்தாலும் தாங்குவான்னா நினைப்பு?//

:))!

//அப்ப 40GB மெமரியோட சோனி இங்கேயே சேலில் இருந்துச்சு 599க்கு. மரியாதையா அதையே வாங்கி இருக்கலாம்.//

இந்த அனுபவம் ஏராளம். அதான் மரியாதையா இப்பல்லாம் இருக்குமிடத்திலேயே வாங்கிடறது. எல்லாமே கிடைக்குவும்தான் செய்கிறதே!

said...

ம்ம்.போடுங்க போடுங்க அந்த இருட்டயும் தான் பார்த்துடலாம்.

//நம்ம மக்கள்ஸ்தான் பாவம்.

எல்லா இருட்ஸையும் பார்த்துத் தொலைக்கணுமே(-://
கொஞ்ச நஞ்சமா:)

இப்படிச் சிரிப்பதற்காகவே உங்களுக்கு புதுசு புதுசா அனுபவம் கிடைக்கணும்னு வேண்டிக்கறேன் சாமிய.
:)
இல்லாட்டத்தான் என்ன :)
க்ரேட்! துளசி அடிச்சுப் பிடிங்க.:)படத்தை. ஜோதிகாவும் தியாவும் நடிக்கப் போறாங்களாமே!!!!!

said...

Ranger is not that good on quality.Price may be ok for beginners.

said...

கூட்டி கழிச்சி பாத்தப்போ..வாங்கின கேமரா விளக்குமாறுக்கு சமம் என்கிறீர்கள்.. :))

said...

அடப்பாவமே! நான் கூட ஒரு எலக்ட்ரானிக்ஸ் இல்லிட்டரேட் தான் துளசி மேடம். என் MP3 ப்ளேயரில் பாடல்கள் டவுன்லோட் பண்ணாமல் 1 மாதம் தவித்தேன்.

said...

துளசி மேடம்,இன்னும் நாலஞ்சு தடவை மாத்தி மாத்தி போட்டோ பிடிங்க.பழகிரும்.அப்பறம் பிட்(PIT)பசங்களை கதி கலங்க அடிக்கலாம்.

said...

இன்னும் கொஞ்சம் பழகிட்டா இந்த மாதிரி simple ஆனா powerful படங்களை இயக்கலாம்.

Dancing Queen

said...

//புதுத் துடைப்பம் ரொம்ப நல்லாப் பெருக்கும். புதுக்கேமெரா?//

கலக்கிபுட்டீங்க போங்க...

said...

//அடுத்தவாரம் மெயிலில் இன்னும் வவுச்சர் மட்டும் வரட்டும்.....மவனே.........எவ்வளோ கொடுத்தாலும் தாங்குவான்னா நினைப்பு?//

அது யாருங்க மேடம் உங்களை மட்டும் குறி வச்சி தாகுறதது?....அதுவும் வர வாரம்?

said...

வாங்க தஞ்சாவூரான்.

இருந்த ஜிலேபியை சிவாஜி வாயிலே போட்டுட்டேன்:-)))))

said...

வாங்க கயலு.

கடைக்குள்ளே நுழைஞ்சா வெறுங்கையா வெளியே வரமுடியுதா என்ன?:-))))

said...

வாங்க ராமலக்ஷ்மி.

உள்ளூரே தேவலைன்னு இருந்தாலும் 'இலவசத்தை' விடமுடியலையேப்பா:-))))

said...

வாங்க வல்லி.

ஜ்யோதிகாவின் கால்ஷீட் கிடைக்கட்டும். அப்புறம் தியா வா கயாவான்னு பார்க்கலாம்:-)))

said...

வாங்க குமார்.

உங்ககிட்டே ஒரு வார்த்தை கேக்கத் தோணலை பாருங்க.

உங்க உள்ளூர சமாச்சாரமாச்சே..... விசாரியுங்கன்னு கேட்டிருக்கலாம்.

கலாம்தான்............

said...

வாங்க வெங்கீ.

சரியாப் பாயிண்டைப் புடிச்சீங்க:-))))

said...

வாங்க க.ஜூ.

//எலக்ட்ரானிக்ஸ் இல்லிட்டரேட் //

நீங்க எவ்வளவோ மேல். நான் ஒரு க.கை.நா.:-))))

said...

வாங்க பிரேம்ஜி.

பிட் பசங்க என்னை அடிச்சு விரட்டாம இருந்தால் போதாதா? :-)))

said...

வாங்க முகுந்தன்.

எங்கேங்க கலக்கறது?

ஆனது ஆகட்டுமுன்னு விடவேண்டியதுதான்:-))))

said...

வாங்க கோவை விமல்.

எல்லாம் இந்த PPS Club தாங்க.

said...

//எல்லாம் இந்த PPS Club தாங்க. //

ஓ சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் க்லப் ஆ, அது சரி.. நான் என்னவோ இந்த வ.வ சங்கம் வேலையோனு நினச்சேன்..:-)))

said...

அட.. நம்ம துளசி அக்கா படம் எடுக்க போறாங்களா? அப்போ விமர்சன பதிவுக்கு ஒரு படம் ரெடி:P

said...

வணக்கம் டீச்சர்! புது ஹை டெபனிஷன் கேமரா வாங்கியதுக்கு வாழ்த்துக்கள்!

என்ன பொண்டாட்டி கெட்டிக்காரியாவும் இருக்கணும் அதே சமயம் நல்லவளாவும் இருக்கணும்னு நினைக்கிற மாதிரி ஸ்டில் மற்றும் வீடியோவுக்கு ஒரே கேமராவா பாத்தா பிரச்சனை தான்.

சோனியோ,பானாசானிக்கோ,ஸ்டில்லுக்கும் வீடியோவுக்கும் தனி தனி தான் ரிசல்டுக்கு பெட்டர்.

அதிலும் 40GB ஹார்ட் டிஸ்க்,40எக்ஸ் ஆப்டிகல் சூம், ஸ்டடி ஷாட் வீடியோ கேமரா பெஸ்ட். ஆனால் அது போட்டோவுக்கு உதவாது.

அதிலும் உங்க ஜீனிய்ஸ் 5 மெகாபிக்சலை குல்மால் பண்ணி 8 மெகா எபெக்டிவ் பண்ணியிருக்காங்க போல.. பாருங்க இணைப்பை..

http://www.ranger-technology.com/Imaging/camcorder/dv700/DV700_specs.htm

எனக்கும் இதுபோல புத்தி கொள்முதல் நிறைய ஆகியிருக்கு :(

said...

வாங்க ரசிகன்.

'அடி'ன்றதுக்குப் பொண்டாட்டி இல்லை, புள்ளைக்குப் பெயர் வைக்கப்போறானாம்' என்ற பழமொழி நினைவுக்கு வருது.

:-)))))

said...

வாங்க தமாம் பாலா.

இந்த விவரமெல்லாம் அவுங்க கொடுத்த கையேட்டிலும் போட்டு வச்சுருக்காங்க.

கைக்குக் கனமில்லாம இருக்கு என்றதுதான் ஒரே ஆறுதல்.

எனக்கு ஆன வயசுக்கு இப்படி ஏராளமான புத்தி கொள்முதல்கள் நடத்தியாச்சு.

(ஆனாலும் புத்தி வந்துச்சா?) ஊஹூம்....வந்துட்டாலும்:-))))

said...

These coupons are a marketing tricks to lure the consumers.

You should do your research on the internet, decide on a brand/specifications and then buy a camcorder. The one you bought seems terribly below any good standard!

Don't buy things because you have discount coupons, do buy if you have a definite need.

said...

யாருங்க டீச்சர் அது சும்மாச் சும்மா ப்ரீயா டாலர் டாலரா வவுச்சர் அனுப்புறது? எனக்கும் கொஞ்சம் வழியைக் காட்டிவிடுங்களேன் :)

said...

வாங்க Joe.

கஷ்டமரை இழுக்கும் கொக்கின்னு புரிஞ்சாலும் விட்டுறமுடியுதா சொல்லுங்க.

புத்தி கொள்முதல்:-)

இல்லேன்னா கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்.

இனிவரும்(!!!) வவுச்சர்களுக்கு, மேலே நம்மக் கைக்காசு போடாம, பரிசுப்பொருளாக் கொடுக்க எதாவது வாங்கிக்கணும்:-))))

said...

வாங்க ரிஷான்.

நமக்குச் சேவை செய்யவே இயங்கும் இந்த PPS Club தாங்க.

said...

பல்வேறு சுவையுடன் கூடிய சாப்பாடு

நம்ப முடியவில்லை?

said...

வாங்க புதுகைத் தென்றல்.


//பல்வேறு சுவையுடன் கூடிய சாப்பாடு//

சாப்பாடா? எங்கே போடுறாங்கப்பா

//நம்ப முடியவில்லை?//

எதை? :-))))

said...

//அடுத்தவாரம் மெயிலில் இன்னும் வவுச்சர் மட்டும் வரட்டும்.....மவனே.........எவ்வளோ கொடுத்தாலும் தாங்குவான்னா நினைப்பு?//

:)

உங்களுக்காவது பரவாயில்லை, இங்கெல்லாம் 200 வெள்ளி வவுச்சர் பிச்சி பிச்சி வாங்க முடியாது, வேற வழி வெள்ளி வரை 199.99 வாங்கனும் இல்லாட்டி நட்டமாகிடும், 200 வெள்ளியை செலவு செய்யப் போய் 400 வெள்ளிக்கு பொருள் வாங்கி 200 வெள்ளிக்கு கைகாசையும் செலவு பண்ணவேண்டியும் வந்துரும். அந்தமாத்திரி சமயத்தில் வவுச்சர் வவுத்தெரிச்சலாக போய்டும்.
:)

said...

வாங்க கோவியாரே.

நம்ம சில்லரைப் புத்தித் தெரிஞ்சுதானோ என்னமோ வவுச்சரே 50, 20, 10ன்னு வெவ்வேற வகையா ஒரு கொத்து வச்சு அனுப்பிடறாங்க:-))))

said...

ஹஹ்ஹஹாஆஆஆஆ! சூப்பர் துள்சி!
கேமரா வாங்கினால் துடைப்பம் இலவசமோனு நெனச்சேன்!!

ஜோதிகா கால்ஷீட் 10நாளைக்கு(போதுமில?)வாங்கிவச்சுருக்கேன்.
வாங்க வந்து உங்க துப்பாக்கி காம்கார்டரில் சுடுங்க!!

said...

வாங்க நானானி.

ஜோதிகாவை சமீபத்துலே பார்த்தேன்( இங்கே பதிவில்தான்)

நம்ம படத்துக்குக் கொஞ்சம் மேக்கப் பலமாப் போடணும்போல.

எதுக்கும் கமல்கிட்டே கேட்டு அவரோட ஆஸ்தான மேக்கப்மேனை/ உமனை அனுப்பச் சொல்லணும்:-)

said...

//ஜோதிகாவை சமீபத்துலே பார்த்தேன்( இங்கே பதிவில்தான்)

நம்ம படத்துக்குக் கொஞ்சம் மேக்கப் பலமாப் போடணும்போல. //

ஜோதிகா அக்கா வேணாம் டீச்சர்.
த்ரிஷான்னு ஒரு புது நடிகை ஒருத்தங்க வந்திருக்காங்க. உங்க படத்துக்கு அவங்களைப் போடுவோம். மேக்அப் மேனே தேவைப்படாது டீச்சர்.

said...

வாங்க ரிஷான்.

திரிஷாவா?

ஐயோ..... அவுங்க 'குருவி'கூடத்தான் பறப்பாங்களாம்.

நம்ம பட்ஜெட்டுக்குச் சரிப்படாது:-))))