இன்றைக்கான முதல் ஐயம்:
கலப்பை ஓட்டுனா...... சரி..... கலப்பையை வூட்டுக்குளே கொணாந்து வச்சுக்கிட்டாக் கணினி மெதுவா நடக்குமா?
வலை உலகத் 'தோழி'யின் ஐயம் தீர்ப்பவர்களுக்கு ஒரு பத்துப் பின்னூட்டம்
பரிசு அளிக்கப்படும்(தோழியின் கையால்)
Friday, July 25, 2008
நாட்டாமை.... தீர்ப்பைச் சொல்லு(ங்க)
Posted by துளசி கோபால் at 7/25/2008 08:59:00 AM
Labels: ekalappai
Subscribe to:
Post Comments (Atom)
38 comments:
டீச்சர், ஈகலப்பையை ஊட்டுக்குள்ள வைங்க..கணனி நடக்கிறதென்னங்க..ஓடவே செய்யும் :)
ஆமா - துளசி
எங்க வூட்லே கலப்பை வூட்டுக்குள்ளே தானிருக்கு - கணினி அப்பப்ப தவழுது
கலப்பையைத்தட்டுனா கணினி பாடக்கூட செய்யும், நடக்கறதென்ன பெரிய காரியம் :):)
ஆயிரம் பொற்காசு பரிசாத் தந்தா சொல்லுறேன்?? :))
வாங்க சின்ன அம்மிணி.
பாடறது இருக்கட்டும். முதல்லே நீங்க பறக்காம இருங்க.
உங்கூரில் 100 கி.மீ வேகத்துலே காத்து வீசுச்சாமே.....
வாங்க புதுகை அப்துல்லா.
அந்த ஆயிரம் பொற்காசை வச்சு ஒரு புது மடிக்கணினி, தமிழ்மணத்துக்காக மட்டுமேன்னு வாங்கிக்கச் சொல்லிறவா? :-))))
நன்றி, சீனா.
பாடறது ஓடறதுன்னுதான் நான் நினைத்தேன். இந்த மெனொருளை மற்றவர்கள் கண்ணினியில் இறக்கும்போது, மற்ற பயனாளர்களுக்குத் தொல்லையாக இருப்பதாக ஒரு சந்தேகம்.
இல்ல டீச்சர் அப்படி ஒருநாளும் வேகம் குறையாது தாரளமா நீங்க பாவிக்கலாம்... என்னா நானும் அதுதான் பாவிக்கிறேன் இதுவரை அதுமாதிரி பிரச்சனை எதுவும் வரவில்லை
வாங்க இவனே.
பிரச்சனை எனக்கில்லை. தமிழுக்கு மட்டுமேன்னு என் மடிக்கணினி தவம் செய்யுது.
சந்தேகம்....அடுத்தவங்களுக்குச் சொந்தமான கணினியில் நாம் கலப்பையை இறக்கினா அவுங்களுக்கு பிரச்சனை (வேகக்குறைவு) வருமாங்கறதுதான்.
வாங்க சீனா.
தவழுதா? அப்ப தூக்கி(வச்சு)றணுமா?
ஏனுங்க கலப்பைய கணிணியில பூட்டுனா, ஒன்னும் ஆகாதுங்க.
கலப்பை ஒன்னும் ராமசாமிய திங்கிற ஆசாமி இல்லீங்க. அதுபாட்டுக்கு தன் வேலைய பார்க்குமே. ஒரு வேளை உங்க ராமசாமி ரொம்ப சின்னவரா இருப்பாரு, நீங்க புதுசா ஒரு பெரிய ராமசாமி வாங்கி போடுங்க. இல்லனா, புது பொட்டி வாங்கிருங்க.
கலப்பைய வைச்சிக்க முடியலனா, கருமம் அந்த கணிணி எதுக்குங்கிறேன்.
நாங்க எல்லாம் கலப்பையிலேருந்து கணிணிக்கு வந்தவனுங்க. எங்கள விட யாரு இதுக்கு சரியா தீர்ப்பு சொல்ல முடியும்? நமக்கு கலப்பை தாங்க முக்கியம்.
துளசி,
NHM ஐ பூட்டிப் பாருங்க..நல்லா இருக்கு.
கலப்பை நிலத்தை உழட்டுமே,பாவம் கணினியை ஏன் உழனும்?
என்னாதிது?
இந்தக் கேள்வி செல்லாது செல்லாது!
வாங்க ஜோசப் பால்ராஜ்,
வணக்கம். நலமா?
முதல்முறையா வந்துருக்கீங்க போல!
பிரச்சனை எனக்கில்லைங்க. நம்ம தோழிக்குத்தான்....
நம்ம மாடு(?) கலப்பையை நல்லாவே இழுக்குதுங்க:-))))
வாங்க அறிவன்..
குழம்பி இருக்கும் தோழியை இன்னும் கொஞ்சம் கூடவே குழப்ப ஏதோ என்னால் ஆன கைங்கர்யம் இது.
அவுங்களும் எல்லாப் பின்னூட்டங்களையும் கவனிச்சுக்கி்ட்டுத்தான் இருப்பாங்கன்னு
நம்புகின்றேன்.
வாங்க பினாத்தலாரே?
ஏன் செல்லாது? எங்கே மாத்தக் கொடுத்தீங்க?
இங்கே வாங்க நான் மாத்தித் தாரேன்.
குறையுமா இல்லே குறையாதா?
ஒரு சொல்லில் பதில் தருக.
உங்களுக்கு ஒரு சாய்ஸ்
ஆமாம்
இல்லை
வாத்தியாரிணி அவர்களே,
ஈகலப்பை கொண்டு நோட்பேட் அல்லது வோட் நிலங்களை உழும் வரை எந்த பிரச்சனையும் இல்லை.. ஆனால் பின்னூட்ட வயலில் சில சமயம் கலப்பை சிக்கிவிடுகிறது என்பதே என் (சொந்த) அனுபவம்! :))
இன்னாக்கா நடக்குதுங்க ரொம்ம பேஜாராக்குது!
ஒன்னும் விளங்கல
காது!
தோழி கவனிச்சுக்கிட்டுதான் இருக்காங்கப்பா. கலப்பை கொண்டு வாழவில்லையானால் நமக்கு உறக்கம் வருலேது.
நம்ம கணினிக்கும்(சென்னையில்)இது வரை பிரச்சினை கிடையாது. இந்த ஊரில இவங்களுக்குத் தொந்த்தரவாயிடக் கூடாதேன்னு தான் கேட்டேன். பொறுப்பா வருகிற பின்னூட்டப் பதில்களைப் படிச்சா கொஞ்சம் பயம் போகுது,போகுது,போகுது.
ஒரே கன்பீயூசன்..! ;)
இந்த காலத்திலாமா வீட்டில் கலப்பை வைத்திருக்கார்கள்? :-)
சரி, அவங்க ஆசை, வைத்திட்டு போகட்டும்.எனக்கு தெரிந்தவரை அதற்காக மெதுவாகவெல்லாம் போகாது.
எங்கூட்டுல கலப்பை சும்மனாசும் வெயிட்டிஸ்ல ஒக்காந்திட்டிருந்தாலும் / உழாத போதும் ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப ஸ்லோ. ரங்கமணிக்கு ஏற்கனவே அதுமேல ஒண்ணரை கண். ஸோ மடிக்கணிணியில இருந்து எடுத்தாச்சு.
நான் கவனிச்ச வரைக்கும், //பின்னூட்ட வயலில் சில சமயம் கலப்பை சிக்கிவிடுகிறது என்பதே என் (சொந்த) அனுபவம்! :))// இது உண்மை.
//ராமசாமி ரொம்ப சின்னவரா இருப்பாரு, // அது முக்கிய காரணம்.
இதுல போனீங்கன்னா இணையத்தை தமிழ்ல உழலாம். என்ன இப்போ, உள்ள போறதுக்கு இணையம் வேணும். இணையம் போனப்புறமும் வேலை செய்யும். இன்னும் NHM Writer ஐ முயற்சி செய்து பார்க்கல.
வாங்க தமாம் பாலா.
பிரச்சனை இங்கே உழுவதில் இல்லை.
கலப்பையை 'வீட்டுக்குள்ளே இறக்கி'வைப்பதில்தான்:-)
வாங்க தென்றல்.
இதுலே வெளங்கரதுக்கு என்னப்பா இருக்கு? ( வெளெங்கிட்டாலும்.....)
கலப்பையை இறக்கி வச்சாக் கணினி வேலைசெய்யும் வேகம் குறையுமா இல்லை குறையாதா?
ஐயோ.....இப்படி வெளக்கி வெளக்கியே என் வேகம் குறைஞ்சுரும்போல இருக்கே......
யாராவது ஒரு சோடா....கொண்டுவாங்க.....
வாங்க கொத்ஸ்.
காதா....?
ஆலாகே ஆலாகே:-)
வாங்க வல்லி.
பொற்கிழி எனக்கே கொடுக்கணும்.
உங்க வாயா இங்கே நான் அல்லாடிக்கிட்டு இருக்கேன்:-)
வாங்க கோபி.
//ஒரே கன்பீயூசன்..! ;)//
என்ன புதுசா இப்படி?
தென்றலிடம் புலம்புனதுதான் உங்களுக்கும்:-)
வாங்க குமார்.
என்ன இந்தக் காலத்திலும்.....?
இப்ப எல்லாம் விண்டேஜ் & ஆண்டீக் பொருட்களுக்கு ஏகப்பட்ட மதிப்பு இல்லையோ!!!!
நானும் வீட்டுக்குள்ளே மணை போட்டு வச்சுருக்கேன்:-)
வாங்க கெக்கேபிக்குணி.
மடியில் இருந்து இறக்கிவிட்டதும் கணினி ஓடுச்சா? அதைச் சொல்லுங்கப்பா.
டுச்சு.
றி :-)
எதுக்குங்க, நான் ஒண்ணு சொன்னா , 'நாட்டாமை, தீர்ப்பை மாத்திச் சொல்லு' என்று ஒருத்தர் சொல்வார். வேண்டாங்க.
சகாதேவன்
வாங்க 'சகா'தேவன்.
இன்னும் சரியான தீர்ப்பு வரலையோன்னு சந்தேகமாத்தான் இருக்கு:-)
//தவழுதா...அப்ப தூக்கி(வச்சு)றணுமா?//இதுதான் துள்சி லொள்ளுன்றது.
கலப்பை எங்கூட்டிலே நல்லாவே உழுது பயிர் பச்சை எல்லாம் செழித்து
நல்ல வெள்ளாமைதான்.
வாங்க நானானி.
வல்லி வீட்டுலேதான் துள்ளி வெளையாட மாட்டேங்குதாமே!!!
வல்லி வீட்டில துள்ளி விளையாட இன்னோரு கணினி கொடுத்துட்டாங்க. நன்றி, மருமகனுக்கு.
இருந்தாலும் இந்த கலப்பை பயம் போகணும்.
உழாமலியே அரிசி விளயுமா:)
ஜோடா அனுப்பி இருக்கேன்பா. நன்றிம்மா.
வலையுலக தூதரகம்னு உங்கள் தளத்துக்கு இன்னோரு பேர் வைக்கலாமா:)
கெ.பிக்குணி இந்த ஊரில இருக்காங்க இல்லை.அதான் அவங்களுக்கும் இந்தப் பிரச்சினை வந்திருக்கு. குமரனைக் கேட்டு இருக்கணுமோ. ரவி,கொத்ஸ் எல்லாரும் எப்படி ஹாண்டில் செய்யறாங்கனு தெரிஞ்சுக்கறேன்.
கொத்ஸ் தான் காதுனுட்டாரே:)
நண்பர்களே,
இந்த விவகாரத்தை நம்ம 'தமிழா'விடம் கேட்டாச்சு.
அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை. தாராளமா இறக்கி வச்சுக்கலாமுன்னு பச்சை விளக்கு காமிச்சுட்டாங்க.
ஆர்வமா பதில் அளித்த அன்புள்ளங்களுக்கு நன்றி.
Post a Comment