பதிவுலகில் ஒரே பூண்டு வாசனை வருதேன்னு பார்த்தால் நம்ம புதுகைத் தென்றல் பூண்டு ரசம், பூண்டு குழம்புன்னு தாளிச்சுக்கிட்டு இருக்காங்க.
போனவாரம் சனிக்கிழமை கோயிலுக்குப் போயிட்டு வரும்போது அப்படியே சூப்பர் மார்கெட் விசிட். பால் வாங்க வந்தேன். நேராப் போனமா பாலை எடுத்தமா.....ஊஹூம்.....
ஒரு சுத்துச் சுத்திட்டுப்போகணும், எல்லாப் பகுதிகளுக்கும். ஒவ்வொன்னும் ஒவ்வொரு கிரகத்துக்குன்னு ஒதுக்கி இருக்குன்னு வச்சுக்கலாம். அப்ப நவகிரகம் சுத்துன பலன் வந்துருதுல்லே?
ஒரு பிரிவில் பூண்டு போட்ட 'வலைப் பை' 450 கிராம் 59 சதம். இது சீனாவிலே இருந்து இறக்குமதி. உள்ளூர் தினசரியில் ஒரு செய்தி வந்துருந்துச்சு. இதைச் சமையலுக்குப் பயன்படுத்தலாமாம். ஆனால் நட்டு முளைக்க விடக்கூடாதாம். ஏனாம்? அதுலே இங்கே நம்ம பூமிக்குச் சரிப்படாத ஏதோ ஒன்னு அவுங்க பயன்படுத்தும் ரசாயன உரத்தில் இருக்காம். அப்படியா? அப்ப எதுக்கு நாட்டுக்குள்ளே விட்டீங்க? ஆகாதுன்னா, 'இறக்குமதி வேணாம். செய்யக்கூடாது' ன்னு சொல்லி இருக்கலாமே.... ஒரு பக்கம் சீனாவோடு ஃப்ரீ ட்ரேடுன்னு ஒப்பந்தம் போட்டுக்கிட்டு.....என்னமோ கதை....
நமக்கும் வருசத்துக்குன்னு பார்த்தால் 3 கிலோ பூண்டு வேண்டி இருக்கு. 5 பை எடுத்துக்கிட்டேன். அப்புறம் இன்னும் சில சாமான்களை வாங்கிக்கிட்டுச் செக்கவுட் வந்து ரசீது போட்டு எல்லாம் ஆச்சு. வழக்கம்போல கடையை விட்டுக் கிளம்புமுன் ரசீதைச் சரி பார்த்தால்......அடப்பாவி இப்படிக் கொள்ளை அடிச்சுட்டாங்களே..... 59க்குப் பதிலா 69ன்னு கணக்குப் போட்டுருக்கு.
இங்கே எல்லாக்கடைகளிலும் இப்படியான விசயங்களுக்குன்னே ஒரு கவுண்ட்டர் இருக்கும். அங்கே இருந்தவரிடம் இப்படி கொள்ளையடிச்சுட்டாங்கன்னு சொன்னேன்:-) அவர் போய் பூண்டு இருந்த பகுதியில் விலை பார்த்துட்டு வந்து 3.50 டாலர் கொடுத்தார். 50 சதம்தானே தரணும். எதுக்கு இவ்வளவு கொடுத்தேன்னு கேட்டேன்.
இது கடையின் கொள்கையாம். தவறா பில் போட்டுட்டா அந்தப் பொருளுக்கான முழுக்காசையும் கொடுத்துருவாங்களாம். எப்ப இருந்து இந்தப் புதுக்கொள்கைன்னு கேட்டால்.... இப்ப புது மேனேஜ்மெண்ட் பிஸினெசை வாங்கி இருக்காம் . அப்ப இருந்துதான் இந்தக் கொள்கையுமாம்.
நல்லா இருப்பான்னு வாழ்த்திட்டு வந்தேன். கடைசியில் பால் வாங்க விட்டுப்போச்சு(-:
நல்லா இருப்பான்னு வாழ்த்திட்டு வந்தேன். கடைசியில் பால் வாங்க விட்டுப்போச்சு(-:
இப்ப அடுத்த சவால். எல்லாத்தையும் உரிக்கணும். போன டிப்ஸுலே சொன்னதுபோல ஹாட் ஏர் அவன்லே போட்டுட்டுத் தமிழ்மணம் பார்த்துக்கிட்டு இருந்தேன். பத்து நிமிசத்துக்குப் பதிலா ** நிமிசம் போட்டுட்டேன் போல இருக்கு. oops.......
நானானியை நினைவுகூறும் விதம் 'சுட்ட பூண்டு' :-)))))
இருக்கட்டும். எதுக்காவது போட்டுத் தீர்க்கலாம். நல்லவேளை ஒரு பொதி மட்டும் அவன்லே போட்டுருந்தேன். வீடு பூராவும் பூண்டு மணம் அப்படியேச் சுத்திச்சுத்தியடிக்குது........ ஜன்னல்களைத் திறந்துவச்சும் பயன் இல்லை.
சரி. இருந்துட்டுப்போகட்டும்.... பேய் வராதுன்னு நினைச்சுக்கிட்டேன். கோபால் வேற ஊரில் இல்லை.
அதுக்குப்பிறகு திடீர்னு நினைவுக்கு வருது பூண்டு உரிக்கன்னு ஒரு சாதனம் வாங்கி வச்சது. அது கிடைச்சப்ப வீட்டில் உரிக்காத பூண்டு இல்லை. கடையில் ஒன்னேஒன்னு வாங்கலாமுன்னா ஒன்னரை வெள்ளி கொடுக்கணும். இருந்துட்டுப்போகுது, பூண்டு வாங்காமலாப் போயிடுவோம்.அப்பப் பார்த்துக்கலாமுன்னு எடுத்துவச்சதை மறந்தே போயிருக்கேன். இது சரியா உரிக்கலைன்னா? அதான் ஒரு வருசத்துக்கு வாரண்ட்டி இருக்கே. திருப்பிக் கொடுத்தால் ஆச்சு.
இது ஒர் சின்ன மிக்ஸி மாதிரிதான் இருக்கு. உள்ளே ஒரு சிலிகான் பலூன். பூண்டைப் பற்களாகப் பிரிச்சு அதுலே போட்டு 10 விநாடி ஓடவிட்டால் போதுமாம். அந்த பலூனை எடுத்துட்டு, கூடவே இணைப்பாக வந்த ஒரு ப்ளேடு மாட்டி, ஓட்டினால் உரிச்சதை அரைச்சும் கொடுத்துரும். வெங்காயம் பச்சை மிளகாய், தக்காளி என்று எல்லா ஈர மசாலாவும் அரைச்சு எடுக்கலாம். ஆனால் தேங்காய் அரைக்க முடியாது. கொஞ்சம் கொரகொரன்னு அரைச்சு எடுக்கணுமுன்னா இதுலே அரைச்சுக்கலாம்.
அவ்வளவா நம்பிக்கை இல்லாமல் பூண்டு எடுத்து போட்டு உரிக்கவிட்டேன்.
அட! நிஜமாவே உரிச்சுக்கொடுத்துருச்சு. வெளியில் எடுத்து ஒரு தட்டில் கொட்டித் தோல் உரிஞ்சதை எடுத்துக்கலாம்.
அட! நிஜமாவே உரிச்சுக்கொடுத்துருச்சு. வெளியில் எடுத்து ஒரு தட்டில் கொட்டித் தோல் உரிஞ்சதை எடுத்துக்கலாம்.
வெற்றி வெற்றி வெற்றி.
Bravetti Garlic peelar. விலை 30 டாலர். கூடுதலுன்னு நினைச்சா........
'கிச்சன் திங்ஸ்' விற்கும் ஸ்பெஷாலிட்டி ஷாப்பில் வெறும் சிலிகான் பலூன் மட்டும் (சின்னதா வாய் இருக்கு) $7.95க்குக் கிடைக்குது. பூண்டை அதுலே போட்டுக் கையால் உருட்டுனாப் போதுமாம். எனெக்கென்னமோ இதுக்குப்போய் எட்டு டாலரான்னு....... கொஞ்ச நாள் பொறுக்கலாம். எப்படியும் சீனர்கள் செஞ்சு அனுப்பத்தான் போறாங்க. சாதாரணக் கடைகளில் ச்சீப்படப்போகுது 2 டாலருக்கு. அப்ப வாங்கிக்கலாம். அங்கே ஸேல் வரும்போது இதுவே ஒரு டாலருக்குக் கிடைக்குமே:-))))
நெல்லுக்குத்த, நீரிறைக்க மாவரைக்க மெசினு
அல்லும்பகலும் ஆக்கிஎடுக்க அடுப்பூதும் மெசினு
இந்த வரிசையில்............
பூண்டு குழம்பு வைக்க ஒரு பூண்டுரிக்கும் மெசினு....
'விஞ்ஞானத்தை வளர்க்கப் போறேண்டி' பாட்டு அடிக்கடி ஞாபகம் வருது.
கொசுறு டிப்ஸ்:
'சம்பவங்களை' அப்பப்ப நடக்கும்போதே படம் மட்டும் புடிச்சுவச்சுக்குங்க. அப்புறமா நேரம் (வரும்)கிடைக்கும் போது பதிவு எழுதிக்கலாம்:-)
38 comments:
பதிவே கம கம ன்னு நல்ல வாசனையா தான் இருக்கு.
பூண்டு உரிக்க கூட ஒரு மெஷினா?
வாங்க பிரேம்ஜி.
வாசனை?
அப்ப நம்ம பதிவு பக்கம் பேய்கள் வராதுன்னு சொல்லுங்க:-))))
வாங்க க.ஜூ.
இன்னுமா சந்தேகம்? உங்க கையைக் கிள்ளிக்குங்க. ஆ.....வலிக்குதா?
அதான் படம் போட்டுக் கதை சொல்லி இருக்கேனேப்பா:-))))
///நானானியை நினைவுகூறும் விதம் 'சுட்ட பூண்டு' :-)))))//
ஃபிரியா கிடைச்சது தான டீச்சர், கண்டுக்காதீங்க,.... :))
///பேய் வராதுன்னு நினைச்சுக்கிட்டேன். கோபால் வேற ஊரில் இல்லை.///
அவ்வ்வ்வ்வ்வ்
ஔவையார முருகன் இன்னைக்கு சந்திச்சிருந்தா, பாட்டி.. சுட்ட பூண்டு வேணுமா, சுடாத பூண்டு வேணுமான்னு கேட்டிருப்பான்னு தோணுது :)))
///கடைசியில் பால் வாங்க விட்டுப்போச்சு(-:///
மாணவர்களுக்கு ஏற்ற (அப்சண்ட் மைண்டட்) ப்ரொஃபஸர்னு நிரூபிச்சிட்டீங்க :)
சைனா காரன் எல்லாமே பண்றான். அது 10ரியால் ஷாப்லே 10ரியாலுக்கு கிடைக்குது. வாங்கின அப்புறம்தான், 2ரியால் ஷாப்புல கூட இருக்குன்னு தெரியுது :((
ப்ராடக்ட் லைஃபை விட வேகமா புதுபுது ப்ராடக்ட் வருது, எல்லாமே யுஸ் அண்ட் த்ரோ தான். கொஞ்ச நாளிலே நாமே யூ.அ.த்ரோ ஆகிடுவோம் போலிருக்கு டீச்சர்.
ரொம்ப நல்லாவே பதிஞ்சிருக்கீங்க, வழக்கம் போலவே :)))
வாங்க தமிழ் பிரியன்.
சரங்கட்டும் நேரத்திலும் சமையலை விடாம வந்ததுக்கு நன்றி.
கோபால் இப்ப வந்துட்டார்:-)
// கடைசியில் பால் வாங்க விட்டுப்போச்சு(-: //
வாங்க மறந்த பொருட்களையும் பிரியாக கொடுக்கிற கொள்கை உடைய கடை இருந்தா எம்புட்டு ஜாலியாக இருக்கும்!!!
வாங்க தமாம் பாலா.
//ஔவையார முருகன் இன்னைக்கு சந்திச்சிருந்தா, பாட்டி.. சுட்ட பூண்டு வேணுமா, சுடாத பூண்டு வேணுமான்னு கேட்டிருப்பான்னு தோணுது :)))//
அட! இது தோணலையே!!!!!
சூப்பர்.
இங்கே ஜஸ்ட் 2 டாலர் ஷாப் இருக்கு.
பத்துவருசமா அமோகமா நடக்குது. அங்கேதான் எப்பவும் கூட்டமும்.
சில பொருட்களைப் பார்த்தால் 'இது 2 டாலருக்கு வித்தாக் கட்டுப்படி ஆகுமா? எவ்வளோன்னு விலை விசாரிக்கணும்'போல இருக்கும்:-))))
அங்கே 50% off சேல் வரும்போது
கொண்டாட்டம்தான்:-)
சீனாக்காரர்கள் BMW வே தயாரிக்கும்போது இதெல்லாம் எம்மாத்திரம்?
ஓ இது எல்லாம் இருக்கா .. என்ன மோ போங்க அதானா.. எனக்கு சமையல் வரமாட்டேன்குது இங்கே இதெல்லாம் இல்லாம.. :)
கொசுறு டிப்ஸ் சூப்பர்.. ஆனா உங்க அளவுக்கு விசயத்தை நியாபகம் வச்சு எழுத முடியுமா ..அப்பப்ப எழுதினாலே மறந்து போகுது..
பதிவைப்பார்த்திட்டு..
மனைவி
ஒன்றையும் விடமாட்டாங்க போலிருக்கே!! என்றார்.
//கொஞ்ச நாள் பொறுக்கலாம். எப்படியும் சீனர்கள் செஞ்சு அனுப்பத்தான் போறாங்க.//
உலகம் முழுவதிலும் அந்த நினைப்பை சீனர்கள் ஏற்படுத்திவிட்டார்கள்.
:)
ஒரிஜினலும் சரி, அதற்கு டூப்ளிக்கேட்டும் சரி இப்போதெல்லாம் சீனாவில் இருந்துதான் வருது. இன்னும் உலகம் முழுவதற்கும் அவரவர்கள் இனத்தில் பிள்ளை பெற்றுக் கொடுத்து அதை விற்பனை செய்யும் தொழிலை மட்டும் தான் சீனர்கள் செய்யவில்லை. அதற்கும் எதும் டெக்னாலஜி இருந்தால் அதையும் செய்துடுவாங்க.
வாங்க கயலு.
உங்களுக்கு மட்டுமா? எனக்கும்தான் இன்னும் சமையல் சரியா வரலை:-)))))
முடிஞ்சதுன்னு முடிக்க முடியாது. புதுசு புதுசா சாதனங்கள் மார்கெட்டில் வந்துக்கிட்டே இருக்கு.
வாங்க குசும்ப்ஸ்.
நம்ம மாமா ஒருத்தர் இப்படித்தான் upto 70% off ன்னு போர்டைப் பார்த்தால் எப்ப 100% off தருவீங்கன்னு கடைக்காரரைக் கேப்பார்:-)
நல்ல ஜாலியான மனிதர். இவரைப்பத்தி முந்தி 'முதுமை ஊஞ்சலாடுகிறது'ன்னு எழுதி இருக்கேன்:-)
வாங்க குமார்.
புதுசுபுதுசா நமக்காகக் கண்டுபிடிச்சு அனுப்புறாங்களே.... என்ன செய்ய?
முதலில் அவுங்களை நிறுத்தச் சொல்லுங்க. அப்புறம் நான் வாங்குவதை நிறுத்தறேன்:-))))
தங்க்ஸ்க்குச் சொல்லுங்க.....கோபாலுக்கு வாய்க்கு ருசியா சமைச்சுப்போடத்தான் இப்படிக் கஷ்டப்படுறேன்னு:-)
வாங்க கோவியாரே.
நல்ல ஐடியாவா இருக்கே. இதை அறிவியல் புனைக்கதைகளில் சேர்த்து ஒரு கதை எழுதுங்க:-)
வார இறுதி நாட்கள்ல விரல் வலிக்க உரிச்சு ப்ரீசர்ல போட்டு வைப்பேன். $30 செலவு பண்ண வைச்சிட்டீங்களெ
//பேய் வராதுன்னு நினைச்சுக்கிட்டேன். கோபால் வேற ஊரில் இல்லை.
//
:))) குசும்பு,
அவரும் பிளாக் எழுத ஆரம்பிச்சா இதையே, வேற விதம எழுதி இருப்பாராக்கும். :p
//என்ன மோ போங்க அதானா.. எனக்கு சமையல் வரமாட்டேன்குது இங்கே இதெல்லாம் இல்லாம//
@முத்தக்கா, நீங்க எப்படி இணையத்துல இவ்ளோ நேரம் இருக்கீங்கன்னு இப்ப தெரியுது. :p
அப்ப துளசி பூண்டு வாசனை போக ஒண்ணும் மெசினு இல்லையா:0
உடம்பேஒரு மாதிரி மணம் கமழுமே:)
ஆனாலும் இது அபார கண்டுபிடிப்பும்மா.
அலுத்து சலித்து பூண்டு குழம்பு ,பத்து பேருக்குத் தயார் செய்வதற்குள் அம்மாடினு போயிடும்.
ஒரு டாலர் வதாட்டு எனக்கும் ஒண்ணு வாங்கி வாங்க,.:)
இந்த பூண்டு உரிக்கும் மெஷின் கோவை பொருட்காட்சிகளில் பார்த்தேன் ஆனால் வாங்கத் தயக்கம் .எல்லாம் அங்க சரியா இருக்கும் வீட்டிற்கு வந்தால் ஏன் வாங்கினோம் என எண்ணத் தோன்றூம்.
( சப்பாத்தி மேக்கரை போல!)
தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com
//இன்னுமா சந்தேகம்? உங்க கையைக் கிள்ளிக்குங்க. ஆ.....வலிக்குதா?
அதான் படம் போட்டுக் கதை சொல்லி இருக்கேனேப்பா:-))))
//
வலிக்குது, வலிக்குது.
இதை பார்த்தவுடன் இந்த மெஷினையும் வாங்கி வீட்டில் அலமாரியில் அடுக்கி வைத்துக்கொள்ளலாமா என்று யோசிக்கிறேன். :)
இது ஒரு அறிவியல் கண்டுபிடிப்பா இல்லையா என்ற சந்தேகம் என்னை ரொம்ப வாட்டுது :(
அப்போ பால் வாங்கலை. நல்லது!! :))
எங்க வீட்டிலேயும் பூண்டு உரிக்கும் மெஷின் இருக்கு. அது பதிவெல்லாம் கூடப் போடுமே!! :)))
//எப்படியும் சீனர்கள் செஞ்சு அனுப்பத்தான் போறாங்க. சாதாரணக் கடைகளில் ச்சீப்படப்போகுது 2 டாலருக்கு. அப்ப வாங்கிக்கலாம். அங்கே ஸேல் வரும்போது இதுவே ஒரு டாலருக்குக் கிடைக்குமே:-))))
//
:))))))...
//பூண்டு குழம்பு வைக்க ஒரு பூண்டுரிக்கும் மெசினு....
///
ம்ம்ம்ம்....பூண்டுக் குழம்பையே வைக்க...?????????? :D :D
வாங்க சின்ன அம்மிணி.
எவ்வளவோ செலவு ஆகுது. அதுக்காக...பயந்துருவோமா என்ன?
Kmart லே பாருங்க. நாப்பதைத்தான் முப்பதுக்குப் போட்டுருந்துச்சு:-)
வாங்க அம்பி.
இதென்ன? தப்பாவே புரிஞ்சுக்கணுமா?
பேய் வரும்போது, கோபால் இருந்தா பயப்படாம விரட்டுவாருன்னு சொல்ல வந்தேன்.
அவருக்கு பேய் பயமே கிடையாது. 34 வருசப் பழக்கம் இருக்காம்:-))))
வாங்க வல்லி.
ஸ்பைஸ்ன்னு பெர்ஃப்யூம் வரும்போது 'பூண்டு' க்குன்னு ஒரு வாசனை திரவியம் வரத்தான் போகுது.பாருங்க:-)))
பாவம் . நம்ம ஜிகே மேலே கூட அன்னிக்குப்பூரா பூண்டு மணம்தான்:-)
இருந்துட்டுப்போகட்டுமுன்னு விட்டேன். வேற லேவண்டர் அது இதுன்னு ஸ்ப்ரே செஞ்சுவிட்டால் எல்லாம் கலந்து 'யக்கியா' இருக்கும்:-)
வாங்க விஜய்.
எனக்கும் இந்தச் சப்பாத்தி மேக்கரின்மேல் ஒரு கண்ணு இருக்கு. அதுக்கு மாவைப் பிசையும் விதம் வேறயோ என்னவோ?
பெங்களூரில் ஒரு கைமுறுக்கு பிழியும் சாதனம்( பிளாட்பாரக் கடை) வாங்கினேன். அந்த ஆள் எவ்வளோ அழகழகா பிழிஞ்சு காமிச்சார். 15 டிஸைன்லே வருது. வாங்கிட்டேன்.
அப்புறம்?
குழந்தையின் விளையாட்டுச் சாமான்கள் கூடைக்குப்போயிருச்சு.:-)
க.ஜூ.
சந்தேகமே வேலையாப் போச்சா உங்களுக்கு:-)
இது கட்டாயம் அறிவிய(ர)ல் கண்டு பிடிப்புத்தான். பாருங்க சின்ன அம்மிணிக்கு இது இல்லாம விரலெல்லாம் வலின்னு எழுதி இருக்காங்க.
வாங்க கொத்ஸ்.
பாதி வழியில் பால் நினைவு வந்து 'யூ டர்ன்' அடிச்சுப்போய் வாங்கியாந்தாச்சு.
எங்க வீட்டில் இருக்கும் பூண்டு உரிக்கும் மெஷினுக்குப் பின்னூட்டம் படிக்கத்தெரியும்:-)))
வாங்க புதுவண்டு.
பூண்டே இல்லேன்னா பூண்டுக் குழம்பு வருமா? அதான்.
'கீரையே இல்லாம எங்க அத்தை ஒரு கீரைக்குழம்பு வைப்பாங்க'ன்னு சொல்லி கோபால் கடுப்பேத்துவார்.
இருக்கட்டும், அந்த அத்தையை ஒரு நாள் சந்திச்சுக் கேக்காமல் விடப்போறதில்லை:-)
ஹையோ!!துள்சி!!
பூண்டு வாசம் இங்காவர அடிக்குதே!!
அதென்ன? //சரி இருந்துட்டுப்போகட்டும்...பேய் வராதுன்னு நினைச்சுக்கிட்டேன்//
அதான் நான் வந்துட்டேனே!!பதிவிலேயே!!!!நான் ஒரு பூண்டுப் பேய்.
எல்லாத்துக்கும் ஒரு மிசினு...மதுரம்
சொன்னாற்போல்...மீ த ஃபஸ்ட்ன்னு
கடைக்கு வந்ததும் உங்ககிட்டேதானிருக்குமோ? பூண்டு உரிக்கும் மெசின் நல்லாருக்கு.
வாங்க நானானி.
'சுட்ட பூண்டு'க்கு ஒரு ரெஸிபி எடுத்து விடுங்கப்பா.
அதையும் செஞ்சு பார்த்துறலாம்:-)
காமிராவக் கையில வச்சுகிட்டே சுத்துவீங்க போலிருக்குது மேடம்!
வாங்க ராஜ நடராஜன்.
எங்க உறவினர் ஒருத்தர் ரொம்ப(வே) வீட்டுத்தரை சுத்தம் பார்த்துக்கிட்டே இருப்பாங்க. இத்தனைக்கும் அவுங்க வீட்டுலே வேலைக்கான உதவியாளர்கள் நாலுபேர் இருந்தாங்க. (பதவி பெருசா இருந்துச்சே)
துடைப்பத்தை இடுப்பிலே செருகி வச்சுக்குவாங்கன்னு கேலி செய்வோம்.
அதுபோல நானு கேமெராவை இடுப்பிலே கட்டிக்கிட்டே இருக்கேன்:-)))
அது ஒன்னுமில்லைங்க. ஓப்பன் ப்ளான் கிச்சன். அதனால் கேமெரா கைக்கு எட்டும் தூரம்.
வாவ்..சூப்பர்..இங்கே எங்காவது கிடைக்கிறதான்னு பார்கக்ணும்.நன்றி துளசிம்மா.
வாங்க ஸாதிகா.
ஸ்மால் அப்ளையன்ஸஸ் பிரிவில் மெகா மால்களில் தேடினால் கிடைக்கலாம்.
Post a Comment