Saturday, July 12, 2008

இருளும் ஒளியும்

கரும்பெரிக்கும் வேளையிலே.......



ஃபிஜித் தீவுகளில் கரும்பு அறுவடை தொடங்கி இருக்கு. ஒவ்வொன்னா வெட்டிச் சப்பும்சவரும் கழிச்சு எடுக்க நேரமில்லையாமே. அதனாலே சிம்பிள் சொல்யூஷன் இது. எரிஞ்சு போனக் கரும்புக்காட்டில் நிக்கும் கரும்புத்தண்டை மட்டும் சுலபமா வெட்டி அடுக்கிறலாமாம்



இது போட்டிக்கான படம்


மற்றவை வழக்கம்போல் உங்கள் பார்வைக்கு.




எங்கூர் சலீஸ் (Chalice)


அடப்போங்கப்பா....சாலிஸாவது பச்சாஸாவது:-)




காற்றால் விளைந்த பலூன் மரம். கம்ப்ரெஸரைப் புடுங்கிட்டா செத்துரும்:-)




துளசிதளத்தின் தலமைச் செயலகம்:-)





தெருவிளக்கில் கம்பியழி....



அஷ்டமி நிலவு. பவுர்ணமிக்குக் காத்திருந்தால் போட்டி முடிஞ்சுரும்:-)

26 comments:

said...

கரும்புக்காடு நல்லாவே பளிச்சுனு இருக்கு. சர்க்கரை இருக்கு இல்ல அதான்.
ஃபிஜியில இருட்டு போட்டோ கிடச்சுட்டதே. பலே பலே.

said...

//ஃபிஜித் தீவுகளில் கரும்பு அறுவடை தொடங்கி இருக்கு. ஒவ்வொன்னா வெட்டிச் சப்பும்சவரும் கழிச்சு எடுக்க நேரமில்லையாமே. அதனாலே சிம்பிள் சொல்யூஷன் இது. எரிஞ்சு போனக் கரும்புக்காட்டில் நிக்கும் கரும்புத்தண்டை மட்டும் சுலபமா வெட்டி அடுக்கிறலாமாம்//

டீச்சர் பாத்து..அப்புறம் கரும்பு சாறு "சுண்ட" காய்ச்சின ஜீரா மாதிரி ஆகிட போவுது....:P

said...

போட்டிப் படம் வெகு அருமை. வித்தியாசமான களத்தில் எடுக்கப் பட்டதும் கூட. மற்றவையும் வழக்கம் போல கமென்டுகளுடன் கலக்குகின்றன:). அமைதி தவழும் தலைமைச் செயலகத்தின் கம்பி அழிதானா அது? அசத்தல். வாழ்த்துக்கள் மேடம்!

said...

டீச்சர்,

வாழ்த்துகள். :)

தலைமைச் செயலகம் இன்னும் நல்லா இருக்கே....ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...:-|

பி.கு.:வண்டு! வேணாம் வல்லியம்மாப் பதிவுலயும் இதத் தான் சொன்ன...ஒழுங்கா ஓடிப்போயிடு...:D :D

டீச்சர் தோணுச்சு சொன்னேன். தப்பா எடுத்துக்க வேணாம். நமக்கு டெக்னிகாலிட்டி தெரியாது. படம் வேடிக்க பாக்க நல்லாத் தெரியும்.:)

said...

தெருவிளக்கில் கம்பியழி வித்தியாசமான படமா இருக்கு..

said...

போட்டிக்கான படம் சூப்பர் ;)

வாழ்த்துக்கள் டீச்சர் ;)

said...

வாங்க வல்லி.

சரித்திர வகுப்புக்கு எடுத்த படம். திரும்ப வந்தபிறகு பார்த்தால் போட்டிக்குப் பொருத்தமா இருக்குன்னு தோணுச்சு. அதுதான்.....

உண்மையைச் சொன்னா எடுத்த எல்லாப் படங்களுமே போட்டிக்குப் பொருத்தம்தான். அப்படி இருட்டு இருட்டா வந்துருக்கு:-))))

said...

வாங்க விஜய்.

கரும்பு எரிப்பு பற்றி அப்புறம் விவரமா வகுப்பில் விவாதிக்கலாம்:-)

said...

வாங்க ராமலக்ஷ்மி.

எல்லாமே அப்படியப்படி அமைஞ்சு போச்சு:-))))

said...

வாங்க வண்டு.

நல்லா மாட்டிக்கிட்டீங்களா?
தலைமைச் செயலகம் கட்டுனது ஒரு தொடராவே வந்ததே பார்க்கலையா?

வெறும் 47 பகுதிதான்ப்பா:-)

said...

வாங்க கயலு.

பிட்டுக்காக வித்தியாசமான மண் சுமத்தல்.

கலைக்கண்களைத் திறந்து வச்சுக்க வேண்டி இருக்கே இதுக்காக:-)

said...

வாங்க கோபி.

நீங்களும் விடாம வாழ்த்திக்கிட்டு இருக்கீங்கதான். ஆனா....

வாய் முகூர்த்தம் பலிக்கணும்:-)))))

Anonymous said...

தலைமைச்செயலகம் தான் என் சாய்ஸ். வெற்றி பெற வாழ்த்துக்கள்.

said...

போட்டிக்கான படங்கள் அருமை. கரும்பு காடும் சூப்பர்.

said...

போட்டிப்படமும், தெரு விளக்கில் கம்பியழியும் அழகா இருக்கு... :)

said...

கரும்புக்காடு இனிப்பா இருக்கு.
துளசியின் 'மாடமும்' சூப்பர்.
அஷ்டமி நிலவானாலும் அதிஷ்டம் தரும்!!!
உங்களைப் பாத்தால் பொறாமையாயிருக்கு. அள்ள அள்ளக்
குறையாத லொக்கேஷன்களுக்குள் வாசம். அதனால் மணக்க மணக்க படங்கள் ஸ்லைட் ஷோவாட்டம் படங்கள் வந்துண்டேயிருக்கு. பார்ரக சந்தோசமாயுமிருக்கு.

said...

// கரும்பெரிக்கும் வேளையிலே.......//

கண்ணிமைக்கும் நேரத்திலே
கண்ணு வைச்ச (அ) க்னி தேவன்
கட்டிக் காத்த கரும்பையெல்லாம்
காணாமப் போகச் செய்தான்.

//காற்றால் விளைந்த பலூன் //
காயமே அது பொய்யடா !
காற்றடித்த பையடா !!
மூச்சு நின்னா அழுகிப்போவும்.
மூளை
ஆற்றலால் வந்த பலூன்
காற்றால் விளைந்த பலூன்
கம்ப்ரெஸருக்கு காலன் வந்தா
கம்ப்ளீட்டா நின்னு போவும்.
மூச்சு நின்னு முடங்கிப்போவும்.

சுப்பு
தஞ்சை.
பி.கு: முன்னாடி ஒரு பதிவுலே ராகவன் சாரு சொன்னபடி, நானும் தன்னவீனத்துவமா இருக்குன்னு சொல்லிடலாமான்னு பார்த்தேன். ஆனா, தன்னவீனத்துவம்
அப்படின்னா என்னன்னு இந்த தமிழ் வாத்திக்கே சரியா புரியலே. சரி, ராகவன் சார்ட்டே போய்
அய்யா இதுக்கு என்னா அர்த்தம்னு கேட்கணும்னு பார்த்தா, அது டீம் மெம்பர்சுக்கு
மட்டும்தானாம். நோ என்ட்ரின்னு இங்க்லீஷிலே சொல்லுது.
ஏங்க ! உலகத்துலே புறந்த நம்ம தமிழங்க ( அட் லீஸ்ட் தமிழ் எழுதறவங்க )
எல்லாருமே ஒரே டீம்தானே ?

2. ஒரு உதாரணத்துக்கு சொல்லப்போனா, நீங்க ந்யூ சிக்கு போய் ஒரு நாப்பது இல்லை
ஒரு முப்பது இல்லைன்னாலும் ஒரு இருபது வருசம் ஆயிடுச்சு, இருந்தாலும்
தமிழ் மூச்சுல்லே ஓடுது !
நீங்களும் நாங்களும் ஒரே டீம் இல்லைன்னு சொல்ல முடியுமான்ன ?

வயசாயிடுச்சா எனக்கு . பல விசயம் புரியமாட்டேன்னுது.

ஜீ ராகவன் சார் எனக்கு
ஜீக்கிரம் பதில் சொல்வாரா ?

said...

ஆகா துளசி படங்கல் அததனையும் அருமை. இரவிலும் இப்படி படங்கள் எடுக்க முடியுமா - நன்று நன்று. தலைமைச் செயலகம் ( 47 படிக்கணூம்)- கம்பியழி - அஷ்டமி நிலா - அததனையும் அருமை

said...

வாங்க சின்ன அம்மிணி.

தலைமைச் செயலகத்தைக் கண்ணால் கண்ட அஞ்சாவது ப்ளொக்கர் நீங்கதான். அதுதான் அப்படி ஒரு பாசம்:-))))

said...

வாங்க பிரேம்ஜி.

கரும்புக்காடு பகலிலும் சூப்பர்தான்:-)))

said...

வாங்க தமிழ் பிரியன்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
(ரொம்ப ஃபார்மலா இருக்கோ இப்படிச் சொல்றது?)

said...

வாங்க நானானி.
கட்டாயம் இங்கே இந்தப் பக்கம் நீங்க ஒரு விஸிட் அடிக்கத்தான் வேணும்.
அள்ள அள்ளக் குறையாத அழகை அள்ளிக்கிட்டுப் போயிறலாம்.


'மாடம்' பார்த்துப் பார்த்துக் கட்டுனது:-)

said...

வாங்க சுப்பு (ரத்தினம்)
ஊன்னா ஆன்னா கவிதையாக் கொட்டுறீங்களேன்னு பார்த்தா......

நீங்க தமிழ் ஆசானா?

இந்த பின், முன், இடை, பக்கவாட்டு இப்படி நவீனத்துவங்களே ஒன்னும் புரியாம முழிக்கும்போது நம்ம ஜீரா
தன்னவீனத்துவமுன்னு ஒரே போடப் போட்டுருக்கார். நானும் விளக்கத்துக்கு வெயிட்டிங்:-)))

உங்க டீம்லே என்னையும் சேர்த்துக்கிட்டதுக்கு நன்றி.
(எனக்கும் வயசாயிருச்சு:-))))

said...

வாங்க சீனா.
நம்ம புதுக்கேமெராவில் பகலில் எடுத்த படங்களும் இப்படித்தான் வருது:-)))))

அதுக்கு இரவும் பகலும் ஒன்றே!!!

said...

I think the second picture look better .

said...

வாங்க பரமேஸ்வரி.

முதல் படம் எந்தவிதமான செயற்கை டிசைன் இல்லாம wild ஆக இருக்குன்னுதான் அதைப் போட்டிக்கு அனுப்புனேன்.

மற்றதெல்லாம் மேன் மேட் தானே?

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.