Friday, July 11, 2008

கியா ஓரா டு பூலா (ஃபிஜிப் பயணம் பகுதி 1)

அரக்கப் பரக்க மூணரைக்கு எழுந்து, குளிச்சு சாமி கும்பிட்டுட்டு பயணத்துக்கு ரெடியானோம். 4.35க்கு சொல்லி இருந்த டாக்ஸி 4.10க்கே வந்து காத்துக்கிடக்கு. காஸ் ஸ்விட்ச் எல்லாம் அணைச்சுக் கடைசியா ஒரு சின்ன செக்கப் செஞ்சுட்டுக் கிளம்புனோம். காலநிலை மைனஸ் 2. நடுக்கமான நடுக்கம். போற வழியில் மகளையும் அவள் தோழரையும் கூட்டிக்கிட்டு ஏர்ப்போர்ட் போய்ச் சேர்ந்து செக்கின் ஆச்சு.


கோபாலின் புண்ணியத்தால் ஏர் நியூஸிலாந்து லவுஞ்சில் காலை உணவு. ப்ளேனுக்கு ஃப்யூயல் மாதிரி எனக்கு ஒரு காஃபி & க்ரஸாண்ட்.
நடுவில் கொஞ்ச நாளா நிறுத்தி வச்சுருந்த (Christchurch To Nadi) இந்த நேரடிச் சேவை இப்ப ஆரம்பிச்சு இன்னைக்குத்தான் முதல் ஃப்ளைட். அதுவும் வாரம் ஒரு நாள் செவ்வாய்க் கிழமைகளில் மட்டும். மற்ற நாட்களுன்னா ஆக்லாந்து போய் அங்கிருந்து பன்னாட்டு சேவையில் போகணும். 6.30க்கு (ஏர்)பஸ் கிளம்பிருச்சு. 152 பேர் பயணிக்கலாம். ஆனால் ஒரு 50 தேறினால் அதிகம்.

வாழ்க்கையில் இதுபோல ஒரு மகா போரிங் ஃப்ளைட் நான் பார்த்ததே இல்லை. ஏர் நியூஸிலாந்து இன்னும் நிறையக் கத்துக்கணும். படிக்கக்கூட ஒன்னும் இல்லை. தூங்கலாமுன்னா பகல் நேரத்துலே......ஊ...ஹூம். ப்ரேக் ஃபாஸ்ட்ன்னு என்னமோ வந்துச்சு. அதுக்கும் ஒரு ஊஹூம்னு ஒரு தலை அசைப்பு. மேலே உச்சாணிக்கொம்புலே குட்டியூண்டு ஸ்க்ரீன். காமெடி படம் ஒன்னு. இருந்துட்டுப் போகட்டும் கழுதை. வெள்ளை மேகத்துக்கு மேலே வந்தவுடன் தேவலோக ஆட்கள் நடமாடுறாங்களான்னு பார்த்தேன். யாரையும் காணோம்.

நேத்து சாயங்காலம் அஞ்சரைக்கு நம்ம கோபால கிருஷ்ணனை ஹாஸ்டலில் கொண்டு விட்டோம். ஜேன் நல்லா பார்த்துக்குவாங்க. அவனுடைய தட்டு, தண்ணீர் பாத்திரம், ஸ்பெஷலான சாப்பாடு வகைகள்ன்னு எல்லாத்தையும் மூட்டைக் கட்டிக் கொடுத்துருவோம். கேட்டரியில் எல்லா ரூம்களும் ஃபுல். வகைவகையான மிய்யூஸ். அதுகள் நம்மைப் பார்த்ததும் மியாவ் மியாவ் வாங்க வாங்கன்னு வரவேற்புதான்:-)

இந்தக் கல்யாணத்துக்காக நாலைஞ்சு முறை வற்புறுத்தி அழைச்சதும் போகலாமான்னு ஒரு தோணல். வழக்கம் போல் மகளைக் கேட்டேன் கூட வர விருப்பமான்னு. அவளும் வழக்கம்போல் நான் வரலைன்னு சொல்வாள்ன்னு கொஞ்சம் அசால்ட்டா இருந்தேன்:-) வர்றேனு சொல்வாள்னு நான் கண்டேனா? இனிப் பின் வாங்க முடியாது. அங்கே போய் என்ன செய்யப்போறோமுன்னு ஒரு கலக்கம். நமக்குத் தெரிஞ்சவங்க எல்லாம் இங்கேயும், ஆஸ்தராலியாவிலேயுமா குடிபுகுந்தாச்சு. மிச்சம்மீதியா யாராவது இருக்கணுமே.....

நமக்குத் தெரிஞ்ச ஒரு பெண்மணியும் இதே விமானத்துலே வர்றாங்க. அவுங்க வந்து நம்ம பக்கத்துலே உட்கார்ந்து கொஞ்சம் 'கப்பா மார்'னாங்க.

"எத்தனை நாளாச்சு அங்கே போய் வந்து?"

" இருபது வருசம் ஆச்சு"

"வந்தபிறகு போகவே இல்லையா?"

" நாந்தான் போகலை. கோபால் போய் வந்துக்கிட்டுத்தான் இருக்கார்"

இன்னும் நாட்டு நிலவரம், பயணத்தின் காரணம் எல்லாம் பேசினோம்.
இன்னும் அரைமணியில் போயிறலாமுன்னு அறிவிப்பு வந்துச்சு. விமான ஓட்டிக்கும் தாங்க முடியலையோ? ஒரு நாலுவயசுப் பையன், பணிப்பெண் துணையுடன் முட்டாய் கூடையைக் கெட்டியாப் பிடிச்சுக்கிட்டு வந்து நீட்டுனான். அவனுக்கும் ஒரு பொழுது போக்கு வேணுமுல்லையா?
பெரியவங்களுக்கே போரா இருந்தாச் சின்னப்புள்ளைகளுக்குக் கேக்கணுமா?

திட்டுத்திட்டாத் தீவுகள் கடலில் மிதந்தன. 500க்கும் அதிகமான தீவுக்கூட்டங்கள் உள்ள நாடு இது. பல தீவுகளில் ஆளரவமே இல்லை. ரெண்டு மூணு ஆடு மாடுகளைக் கொண்டுபோய் விட்டுட்டு வந்துருவாங்க. அதுகள் தானே பல்கிப் பெருகுனதும் பிடிச்சுக்கிட்டு வந்து விற்பதும் உண்டு. கொஞ்சம் சுமாரான அளவில் இருக்கும் தீவுகளைத் தனியார் வாங்கி ரிஸார்ட்களா ஆக்கி இருக்காங்க. எல்லாம் வெளிநாட்டு ஹோட்டல் செயின்கள்தான். இருப்பதில் பெரிய தீவு விட்டீ லேவு. ரெண்டாவது பெரியது வனுவா லேவு. பெருசுலேதான் பன்னாட்டு விமான நிலையம் இருக்கு. விமான நிலையம் இருக்கும் இடம் நந்தி. Nadi என்று எழுதுனாலும் சொல்லும்போது Nandi என்ற உச்சரிப்பு. பெயர்களுக்கு நடுவிலே ஒரு கூடுதல் 'n' பல இடங்களில் வருது. ஃபிஜி மொழிக்கு எழுத்துரு இல்லை. ஆங்கிலமே பயன்படுத்துகிறார்கள். இந்தி மொழியும் இங்கே அதிகாரப்பூர்வமான அரசு மொழிகளில் ஒன்று. ஃபிஜியன், ஆங்கிலம், ஹிந்தின்னு மூன்று மொழிகள்.

நியூஸியும் ஃபிஜியும் ஒரே தீர்க்க ரேகையில் இருப்பதால் நேர வித்தியாசமுன்னு ஒன்னும் இல்லை. வெறும் நான்கு மணி நேர விமானப்பயணம் மட்டும்.

பத்தரைக்குப் பதிலா பத்துக்கேக் கொண்டுவந்து தள்ளிட்டாங்க. இறங்குனதும் 29 டிகிரி சூடு. 'பளிச்'னு சுத்தமான விமான நிலையம். கொஞ்சம் பெருசா ஆக்கி இருக்காங்க. மகளும் நண்பரும் தங்க ஒரு ரிஸார்ட்டுலே ஏற்பாடு ஆகி இருந்துச்சு. ரெண்டு பேருக்கும் சங்குமாலை போட்டு வரவேற்பு. அவுங்களுக்கான பிக்கப் கார் வந்து காத்திருந்துச்சு. அதுலே அவுங்களை அனுப்பிட்டு எங்கள் வண்டிக்குக் காத்திருந்தோம். அரைமணி முன்னாலே வருமுன்னு தெரியாததால் பத்தேமுக்காலுக்கு வந்தது வண்டி. தீபக் பையா வந்துருந்தார். இருபதே வருசத்தில் ரொம்பக் கிழவனா ஆகி இருந்தார்.
( ஆஸியில் படிப்பை முடிச்சுட்டு வந்த மூத்த மகன், வந்த மறுநாளே ஒரு விபத்தில் போய்ச் சேர்ந்துட்டான். இந்த ஒரு சோகம் போதாதா மூப்பு பட்னு வந்து சேர)

அப்ப ஒரு மணி நேரப்பயணமா இருந்தது இப்ப ஒன்னரை மணி நேரப் பயணமா ஆகி இருந்துச்சு 'பா' ( MBA) என்ற ஊருக்கு. உள்நாட்டின் தலைசிறந்த ஃபுட்பால் சாம்பியன்ஸ் இருக்கும் ஊர். வழி நெடுகக் கரும்புக்காடுகள். மாமரங்கள் 'கொல்'னு பூத்துருக்கு. அங்கங்கேத் தார் ரோடை ஒட்டியே வாழைக்கூட்டம். இந்த வருசம் நல்ல மழையாம்.

பகல் சாப்பாட்டுக்கு அப்புறம் டவுன் வரை பொடிநடையா நடந்து போனோம். போகும் வழியில் நாங்க முந்தி வசித்த வீடு, சுற்றுப்புறங்கள்னு காட்சிகள்.
(கிரிமினல்ஸ்
மனப்போக்கின்படி கிரைம் நடந்த இடத்தைப் பார்வையிடல்)
டவுன் கவுன்சிலுக்கு முன்புறம் சின்னதா ஒரு பார்க். அதுலே ஒரு ராணுவ வீரன் துப்பாக்கியோடு நிற்கும் சிலை. ராணுவப்புரட்சி நடந்ததன் நினைவாம்.
இது மட்டும் புதுசு!


கல்யாண வீட்டு விஷயங்கள்:

முதல் நாள்.

ஏழு நாள் கல்யாணம். இன்று முதல் ஆரம்பம். நாங்க மாப்பிள்ளை வீட்டு ஆளுங்க. பகலுணவில் அவ்வளவா ஆட்கள் இல்லை. 100 பேர் இருக்கலாம். இது கல்யாண வீட்டு ஆட்கள் மட்டுமே. நாங்கள் போய்ச் சேர்ந்தப்ப பெண்கள் பந்தி மூணாவதோ நாலாவதோ நடந்துக்கிட்டு இருந்துச்சு. எப்பவுமே குழந்தைகள் & பெண்கள்தான் முதலில். அப்ப ஆண்கள்?

தாகசாந்தி செஞ்சுக்கிட்டு இருந்தாங்க. 'பார்' காலை 10 மணிக்கே திறந்துருது:-)

வெளிநாட்டு விருந்தினர் எண்ணிக்கை நம்மையும் சேர்த்து 42. இப்போதைக்கு எல்லாருக்கும் தங்குமிடம் அங்கங்கே உறவினர் வீடுகளில். இடமில்லாமல் போனதும் மேற்கொண்டு வருபவர்களுக்கு உள்ளூர் ஹோட்டலில்( Ba Hotel) இடம் போட்டுருக்கு. இங்கே ஒவ்வொரு ஊருக்கும் ஒரு ஹோட்டல்தான். அந்தந்த ஊர்ப்பெயர்தான் ஹோட்டலுக்கும். ரொம்ப சிம்பிள்.

மாப்பிள்ளைப் பையனின் அம்மாவின் அக்கா தங்கைகள், அண்ணிகள், தம்பி மனைவிகள் எல்லாம் மாப்பிள்ளை வீட்டில். சமையல் முழுதும் அவர்கள் பொறுப்பு. எல்லாருக்கும் பகல், இரவுன்னு தினம் ரெண்டுவேளை சாப்பாடு அங்கேதான்.

ஆரம்ப நாளான இன்று மாலை, பா டவுன் ( இவர்களுடைய சமூகத்தினர்)முழுக்க ஹாலில் கூடி 'ட்ரிங்க்ஸ் பார்ட்டி'. அநேகமா எல்லாருக்கும் எங்களை நினைவிருந்தது. விஸ்கியும், ஃபிஜி பிட்டர்(Fiji Bitter Beer) என்ற பியரும், கோக், ஸ்ப்ரைட்டும் ( பொம்பளைகளுக்கு) Ba River போல ( ஆறுகளுக்கும் இப்படி அந்தந்த ஊர்ப்பெயர்தான்) வெள்ளமாப் பெருகி ஓடுச்சு. தொட்டுக்க டோக்ளாவும், மிக்ஸர், சிப்ஸ் வகைகளும். 300 பேர்கள் என்று கணக்குச் சொன்னார்கள்.


அரும்சொற் பொருள்:

கியா ஓரா ( Kia Ora) = நியூஸி மவோரி மொழியில் ஹலோ, நல்வரவு, வணக்கம் இத்தியாதி

பூலா (Bula)= ஃபிஜியன் மொழியில் ஹலோ, நல்வரவு, வணக்கம் இத்தியாதி

தொடரும்.............:-)

36 comments:

said...

அடுத்த தொடர் ஆரம்பமா?.....
அரும்சொற்பொருள் கொடுங்களேன்...
//நம்ம பக்கத்துலே உட்கார்ந்து கொஞ்சம் 'கப்பா மார்'னாங்க. //

///வெள்ளை மேகத்துக்கு மேலே வந்தவுடன் தேவலோக ஆட்கள் நடமாடுறாங்களான்னு பார்த்தேன். யாரையும் காணோம். ///
எனக்கும் யாரும் தெரிய மாட்டேங்கிறாங்க... தசாவதார தொலைநோக்கி வைத்து பாக்கனும்னு நினைக்கிறேன்... :))))

said...

வாங்க தமிழ் பிரியன்.

கப்பா மார் = கதை அடி
:-)

இந்தியில் இது ஒரு ஸ்லாங்.

//தேவலோக ஆட்கள் நடமாடுறாங்களான்னு ...//

ஆடை அலங்காரத்தை வச்சு இது ரம்பா, இது ஊர்வசின்னு கண்டுபிடிக்கலாமேன்னு ஒரு ஆசைதான்:-)

said...

அது என்ன 4:30க்கு சொல்லாம 4:35க்கு டாக்ஸி வர சொல்லறது?

said...

கியா ஓரா துளசி மேடம்.நீங்க இல்லாம பொழுது போக ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.பிஜி தீவு தொடர் ஆரம்பமே அமர்க்களமா இருக்கு.

said...

நீண்ட நாட்கள் வலையில் காணவில்லையே என்று நினைத்தேன். பிஜி பயணம்!!!
:)

படத்துடன் விரிவாக எழுதி இருக்கிறீர்கள். பழைய வீட்டைப் பார்த்ததும் லேசான மன அழுத்தம் வந்ததா ? இல்லை இங்கிருந்து தான் தப்பித்தோம் என்று நினைத்தீர்களா ?

said...

624 படங்களும் போடப்போகிறீர்களா?
கொண்டாட்டம் தான்.

said...

வாங்க கொத்ஸ்.

எல்லாம் ஒரு கணக்குதான்:-)

அஞ்சு நிமிஷம் சாமான்கள் எடுத்துக்கிட்டு வீட்டைப் பூட்ட.

அஞ்சு நிமிஷம் மகள் வீட்டுக்கு

அங்கே எப்படியும் ஒரு 10 நிமிஷம்.

அதுக்கப்புறம் ஏர்போர்டுக்கு 10 நிமிச ட்ரைவ். இப்படி:-)))))

said...

வாங்க பிரேம்ஜி.

நீங்கதான் இப்படிச் சொல்றிங்க. வகுப்புலே பாருங்க, திண்ணையில் உக்கார்ந்து, படுத்துத் தூங்கின்னு ஒரே அமர்க்களம். :-))))
டீச்சர் இல்லைன்னதும் கூடிக் கும்மிதான்:-)

said...

ஆரம்பமே அமர்களம். அடிச்சு ஓட்டுங்க, அடிச்சு ஒட்டுங்க. ரெண்டு நாள் கழிச்சு வந்து படிச்சுக்கறேன். :)

said...

மேம், உங்க முந்தய பதிவில் பின்னூட்டம் போட்டா "PUBLISH YOUR COMMENT" அழுத்துன ஒடனே பிளாக் ப்ரொபைலுக்கு, ஸ்கிரீன் எகிறுது. ஏன்ணு தெரியல. அதனால இங்க காப்பி பண்றேன்.

டீச்சர்,

பா (MBA) வந்து டீச்சர்,...ம்ம்..ம்.. ஒரே நிமிஷம் டீச்சர்..... வந்து ....வந்து....(பிளீஸ்...நெக்ஸ்ட் சொல்லிடாதீங்க டீச்சர்....)..ம்.. ம்.... ஆங்....கால்பந்து விளையாட்டு வீரர்கள்(தலை சிறந்த) இருக்குற ஊரு...அப்போ அது கால்பந்து விளையாட்டில் புகழ் பெற்றது...ரைட்டுங்களா டீச்சர்?

said...

//வகுப்புலே பாருங்க, திண்ணையில் உக்கார்ந்து, படுத்துத் தூங்கின்னு ஒரே அமர்க்களம். :-))))//

இல்ல டீச்சர், நீங்க சொல்லி கொடுத்ததெல்லாம் ஜஸ்ட் ரிவைஸ்தான் டீச்சர் பண்ணினோம். பாருங்க அம்பி "பாங்க் எக்ஸாம்" பதிவுல....சரி...சரி....ஒண்ணும் இல்ல டீச்சர்....:(( (அதான் விட்டுட்டேன் இல்ல...ஏன் இப்பிடி எல்லாரும் எழுந்து வந்து மொறைக்கிரீங்க....போய் அவங்க அவங்க எடத்துல ஒக்காந்து பாடத்த கவனிங்க...) :(((((

said...

ஆரம்பமே அருமை. அப்படியே உங்களுடன் பயணிப்பது போன்றதொரு ஃபீலிங்.

//வகுப்புலே பாருங்க, திண்ணையில் உக்கார்ந்து, படுத்துத் தூங்கின்னு ஒரே அமர்க்களம். :-))))
டீச்சர் இல்லைன்னதும் கூடிக் கும்மிதான்:-)//

:))! இது எல்லாப் பள்ளியிலும் நடப்பதுதானே! ஆனா பாருங்க, டீச்சர் வந்ததும் எல்லாப் பசங்களும் எப்படி வரிசையா ஒழுங்கு மரியாதயா ஆஜர்னு. நல்ல டீச்சருக்கு நல்ல பசங்க!

said...

முதல் பகுதி நல்லா தான் இருக்கு...அடுத்த பகுதிக்கு வெயிட்டிங் ;))

said...

//பல தீவுகளில் ஆளரவமே இல்லை.//

சென்னைலே இப்ப ஸ்கோயர் ஃப்ட் 4500 ரூபாய் ஆகிவிட்டது. ஃப்ளாட்
வாங்கவே முடியாது.
அதனாலே நீங்க சொல்ற தீவு ஒன்னு ரன்டு சல்லிசா வந்தா
வாங்கிப்போடலாம்னு தோணுது.
துணைக்கு நீங்க இருப்பீங்க இல்ல !
நீங்க வந்துட்டா உங்க வலைப்பதிவு அத்தனை பேரும்
அவங்கவங்க ஃபாமிலியோட வந்துடுவாங்க.
அப்பறம் ஏது கஸ்டம் ?

மீனாட்சி பாட்டி. ( மறந்துட்டேன். உங்களுக்கு அக்கா இல்லையா ?)
தஞ்சை.

said...

n

said...

துளசி டீச்சர் உங்கள் வகுப்புக்கு முதல் முறையா வந்தூளேன், ஏற்கனவே வாத்தியார் வகுப்பில் மாணவனை உள்ளத்தால் உங்கள் வகுப்பில் அமர இடம் கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன், உங்கள் Fiji சுற்றுலவை படித்தேன் அருமை, தொடருக்குக்காக காத்திருக்கிறேன்.

//தாகசாந்தி செஞ்சுக்கிட்டு இருந்தாங்க. 'பார்' காலை 10 மணிக்கே திறந்துருது:-)//


அது சரி டீச்சர், அது என்ன தாகசாந்தி, இரு வரங்கள் முன் ஒரு படுகா திருமணம்(Ooty) சென்று இருந்தேன், அங்கேயும் இதுபொலத்தான். டீச்சர் கட்டுரையை படித்தவுடன் அந்த நினைவுகள்-தான் வந்தது. ...:))))

said...

சுவாரஸ்யமா + இன்ஃபார்மேடிவா எழுதி இருக்கீங்க துளசி மேடம். அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன்.

said...

ஆகா டீச்சரின் அடுத்த தொடர் தொடங்கியாச்சேய்...

ஆனா ஒன்னு டீச்சர். தன்னவீனத்துவமான தலைப்பு வெச்சிருக்கீங்க. தன்னவனீத்துவத்தின் தனிச்சிறப்பு பதிவு முழுக்க இருக்கு. புதுமைகளைப் புகுத்துறதுல நீங்க பெரிய ஆள். வலைப்பதிவுல முதன்முதலா தன்னவீனத்துவப் பதிவு போட்ட பெருமை ஒங்களுக்குத்தான். :)

பிஜித் தீவுகளை இன்னும் பாக்கலை. சீக்கிரம் பாக்கனும்னு ஆசைய உண்டாக்குதுங்க ஒங்க பதிவு. :)

நானும் மேகத்தச் சுத்திச் சுத்திப் படமெடுத்திருக்கேன். ஆனா தேவலோகாஸ் இருக்காங்களான்னு பாக்கவேயில்லையே!!! சேச்சே! விட்டுட்டேனே.. அடுத்த வாட்டி தெளிவாப் பாத்துர்ரேன் டீச்சர். :)

said...

படிப்பதற்கு சுவாரசியமாக எழுதுறீங்க..
பிஜி.. ம்.. பக்கத்தில இருந்த போது போயிருக்கணும்.

ஒரு வேளை ஜோடியா போகணும்னு விதியோ என்னமோ..

பார்க்கலாம்

said...

Hi,

Nice Post.
I love travelling a lot.Your narration gives me a direct participation.Photos adds to the attention.
By the way,my friend Subramani is working in sydney,i am eager to visit the down under.
Thanks for sharing and expecting the next episode.

Best Wishes,
Kannan Viswagandhi
http://www.growing-self.blogspot.com

said...

வாங்க கோவியாரே.

நம்ம சரித்திர வகுப்புக்கான சுற்றுலா:-)))

பழைய வீடு இப்ப கொஞ்சமா சிதிலம் ஆனாப்போல இருக்கு. வாடகைவீடு என்றபடியால் அவ்வளவா மன அழுத்தம் வரலை. ஆனா பார்த்தால் பாவமா இருந்துச்சு. நம்ம முதல் வீடு அது. 2 வருசம் இருந்தோம்.அதுக்கப்புறம் இன்னொரு வீட்டில் 4 வருசம். அதுவும் வாடகை வீடுதான்.

முதல் வீட்டுக்காரம்மா இப்ப டிசம்பர்லே இறந்துட்டாங்களாம்(-:

said...

வாங்க குமார்.

படங்கள் ஒன்னும் சரியாத் தேறலை. இருப்பதில் சுமாரா உள்ளதைப் போடணும். கூடவே 'அன்றும் இன்றுமா' சிலதையும் சேர்க்க நினைக்கிறேன்.

said...

வாங்க அம்பி.
பக்கத்து சீட்டுலே ப்ளொக்கர் இல்லைன்னா இங்கேவந்து படிச்சுட்டுப்போங்க:-))))

said...

வாங்க விஜய்.
இந்தப் பதிவுக்கான பின்னூட்டத்துக்கு எதுக்காக முந்தின பதிவுக்குப் போனீங்க?

said...

வாங்க ராமலக்ஷ்மி.

உங்க திண்ணையிலே எல்லாரையும் வளைச்சுப்போட்டுட்டீங்க. இனிமே நம்ம வகுப்பை (உங்க) திண்ணைப்பள்ளிக்கூடமா மாத்திறலாமுன்னு இருக்கேன்:-))))

said...

வாங்க கோபி.

வாரம் ஒரு நாள் சரித்திர/சுற்றுலான்னு வச்சுக்கலாமா?

said...

வாங்க மீனாட்சி அக்கா.

இதையேதான் அப்ப எங்க அண்ணனும் 26 வருசம் முன்பு சொன்னார். மிதக்கும் தீவை மெதுவா இங்கே தள்ளிக்கிட்டு வந்துருன்னு:-))))

நம்மூர்லே விலை எகுறுனதுக்கு மக்கள் பெருக்கம்தானே காரணம்(-:

said...

வாங்க கோவை விமல்.

புதுவரவா? ஆஹா.....

வணக்கம். நல்லா இருக்கீங்களா? நல்ல இடமாப் பார்த்து வசதியா உக்கார்ந்துக்குங்க. அரியர்ஸ் நிறைய இருக்கும். அதுக்கெல்லாம் அஞ்சாதீங்க. மெள்ளப் படிக்கலாம்.

படுகர் திருமணமா? அடடா.... அதைப் பற்றி எழுதுங்களேன். நாங்க தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்கோம்.

எத்தனை பேருக்கு இப்படி வாய்ப்பு கிடைக்குது?


நம்ம வகுப்பில் ஷோ & டெல் உண்டு:-)

said...

வாங்க கயல் ஜூனியர்.

வாரம் ஒரு நாள் போதாதா?

said...

வாங்க ராகவன்.
சொன்னா நம்பணும். உங்களையும் இன்னும் சிலரையும் ரொம்ப நினைச்சுக்கிட்டேன் அங்கே.

அடுத்த பகுதியில் விளக்கம் வருது:-)

said...

வாங்க சயந்தன்.

சோடியாப் போக ரொம்பவே பொருத்தமான இடம்தான்.

ரொம்பக் குட்டித் தீவுக்கு ஹெலிகாப்ட்டர்லே கொண்டுபோய் விட்டுருவாங்க. ஜாலியா இருக்கலாம் நீங்க:-))))

said...

வாங்க கண்ணன்.

புதியவரா இருக்கீங்க.... நலமா?

சிட்னிவரை வரும்போது அக்ராஸ் த டிச்ன்னு இங்கே நம்ம நியூஸிக்கும் வந்துட்டுப்போங்க.

முக்கோண டிக்கெட்டுன்னா மலிவாவே கிடைக்குமே.

நம்ம தெற்குத்தீவில் அழகெல்லாம் கொட்டிக்கிடக்கு:-)))

said...

ம் சுவாரசியமா இருக்கு.. அப்பறம்..?
அந்த குடும்பமா சாப்பிடர போட்டோ நல்லாருக்க்கு.. கல்யாணம்னா கலகலப்பு தான்..

said...

வாங்க கயலு.

கல்யாணக் கலகலப்புன்னாலும் ஒரு துரும்பையும் தூக்கிப்போடாம இருக்க ஒரு ச்சான்ஸ்:-)))))

said...

சூப்பர் தொடர்...
பழைய தோழிகளைப் பார்த்து மகிழ்ச்சியில் ஆழ்ந்திருப்பீர்களே?

ஆமா..கல்யாணப்பரிசா என்ன எடுத்துட்டுப் போனீங்கன்னு சொல்லவேயில்லையே டீச்சர்..

said...

வாங்க ரிஷான்.

பழைய தோழிகளில் பலரை நான் 'அங்கே' போனதும் சந்திப்பேன்.

இருக்கும் சிலரில் பலர் நியூஸி & ஆஸியில்.

ஒரு சிலரை மட்டுமே ஃபிஜியில் பார்த்தேன்.

கல்யாணப்பரிசா?

நியூஸியின் புகழ்பெற்ற மீன் கொக்கிதான்.
ஆயுள் ஆரோக்கியம், ஐஸ்வரியம் எல்லாத்துக்கும் சிம்பாலிக்கா இருக்கும்.

வெளிநாட்டில் செஞ்சு வந்த கண்ணாடிச் சிற்பம்.