Wednesday, May 24, 2006

யாருக்காக? இது மதுவுக்காக!

வலைப்பதிவர் பெயர்: துளசி கோபால்

வலைப்பூ பெயர் : துளசி தளம்

உர்ல் : http://thulasidhalam.blogspot.com/

ஊர்: கிறைஸ்ட்சர்ச்

நாடு: நியூஸிலாந்து

வலைப்பூ அறிமுகம் செய்தவர்: குறிப்பிட்டுச் சொல்லணுமுன்னாயாரும் இல்லை. அப்படியே வலை மேய்ஞ்சப்பக் 'கண்டுகொண்டேன்.'

முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : 24 செப்டம்பர் மாதம் 2004

இது எத்தனையாவது பதிவு: 354

இப்பதிவின் உர்ல்: http://thulasidhalam.blogspot.com/2006/05/blog-post_24.html

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: ப்ளொக்ஸ்பாட் வா வா ன்னு கூப்பிட்டது.

சந்தித்த அனுபவங்கள்: ஏராளம். எதைச் சொல்ல எதை விட!

பெற்ற நண்பர்கள்: எக்கச்சக்கம். உலகம் பூராவும் நண்பர்களே

கற்றவை: என்ன செய்யகூடாது என்று


எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: ஏராளம். அதை விடமுடியாது.ஆனா சுயத்தணிக்கை இருக்கணும்.

இனி செய்ய நினைப்பவை: நல்ல பதிவுகளாப் போடணும்

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு: பெருசாச் சொல்லிக்க ஒண்ணும் இல்லை.

இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்: வலைப்பதிவுகள் உலகின் கவனத்தை ஈர்க்க ஆரம்பித்துள்ளது. அதனால் நாம் எழுதும் பதிவுகள் ஓரளவுக்காவது பொருள் பொதிஞ்சதாக இருக்கணும்.

47 comments:

said...

எப்படியோ புதுசா ஒரு ஐடியாவோட வந்தவங்கள கலாய்ச்சிட்டீங்க...:)

நடத்துங்க...

said...

இதைவிட சூப்பராக யாரும் சொல்ல முடியாது. நல்லாவே எழுதி இருக்கீங்க. என்னைப் போலக் கத்துக்குட்டி எல்லாம் கத்துக்க எவ்வளவோ இருக்கு.

said...

என்னாச்சு டீச்சர். திடீர்னு இப்பிடி ஒரு பதிவு...விளக்கமாச் சொல்லுங்களேன்.

said...

yaar yaar avar yaaro?

said...

//இனி செய்ய நினைப்பவை: நல்ல பதிவுகளாப் போடணும்//

இனி செய்ய நினைப்பவை: 100 பவுன்ல வைரமா பதித்த கீரிடம். கொஞ்சமா ஒரு 50 பவுனுல நகைகள்...

:-)))))

said...

மது மின்னஞ்சல் கொடுத்தாங்கன்னா தனி மெயில் அனுப்பலாம்.பேர் ஊரயெல்லாம் பொதுவாச் சொல்லுற நிலமயில நம்ம நாடு இல்லீங்க.

said...

என்ன இது ஆதியும் அந்தமும் இல்லாமல் இருக்கிறதே என்று பார்த்தேன். அப்புறமே இது மதுவுக்காக என கண்டுகொண்டேன்.:)

said...

//வலைப்பதிவுகள் உலகின் கவனத்தை ஈர்க்க ஆரம்பித்துள்ளது. அதனால் நாம் எழுதும் பதிவுகள் ஓரளவுக்காவது பொருள் பொதிஞ்சதாக இருக்கணும்.//
சரியாச் சொல்லி இருக்கீங்கக்கா..:)

said...

என்னங்க ரவி,

நீங்க இன்னும் விவரங்கள் கொடுக்கலையா?

ஜூன் 10ன்னு சொல்லி இருக்காங்க. ஆனா, 'பந்தி'க்கு முந்திக்க வேணாமா?

இதே ஐடியாவை நம்ம டோண்டு, சென்னை வலைப்பதிவாளர் சந்திப்புலே சொன்னாருதான்.
அப்ப யாரும் அதைப் பெருசாக் கண்டுக்கலை.
சரி.... எதுக்கும் வேளை வரவேணாமா?

said...

கீதா,
என்ன இப்படி சொல்லிட்டீங்க? நீங்க கத்துக் 'குட்டி'யா?:-)))))

said...

வல்லி,

நம்ம மதுமிதா அதாங்க கவிஞர் மதுமிதா ஒரு ப்ளொக்கர் டைரக்டரி போடப் போறாங்களாம்.
அதுலே நம்ம 'பேர்' வரணுமா இல்லையா?

அதுக்காக நம்மைப் பத்தின விவரங்களை ஒரு பதிவாவே போட்டு, அதோட 'சுட்டி'யை அவுங்களுக்கு
பின்னூட்டமாத் தட்டுனாப் போதும். 'டட்டடய்ங்'னு அதுலெ நம்ம பேர் வந்துரும்.

வந்துட்டா....?

அது தெரியாதுங்களே.

வந்துட்டா.....? வந்துட்டா?...... ம்ம்ம்ம் வந்துட்டா......?

said...

மணியன்,

அவுங்க செய்யற முயற்சிக்கு உடனே கை நீட்டணுமா இல்லையா?
( எதாவது கிடைக்குமேன்னுதான்...ஹிஹி...)

said...

பொன்ஸ்,
வாம்மா. சோறு துன்னியாம்மா?

இப்ப சுதந்திரம் இருக்குன்னு கண்டதையும் எழுதிட்டோமுன்னா..... கொஞ்சநாள்
கழிச்சு அதையே திரும்ப நாமே படிக்கும்போது 'ச்சீ'ன்னு போயிராது?
நமக்கே அப்படின்னா... மத்தவங்களுக்கு?
அதான் அப்படி 'பொருளாப் பதிய'ச் சொன்னது.

said...

I am a silent reader of your blog for past 1 year. your blog is very good and i am also reading your series in tamiloviam. keep up your good work

said...

அட! நமக்கு புச்சா ஒரு பின்னூட்டம் வந்துருக்கேன்னு பார்த்தேன்.

வாங்க வாங்க தெய்வா. ஒரு வருசமாவா வாயைத்திறக்காம இருந்தீங்க? ஹய்யோடா.....
என்னாலே வாயை வச்சுக்கிட்டு பத்து நிமிசம் ச்சும்மா இருக்க முடியாது.

நல்லதுங்க. இப்பவாவது வெளியே வந்தீங்களே! நல்வரவு.

(ஹூம்... ஒரு வருசத்துலே எத்தனை பின்னூட்டம் மிஸ் ஆகிப் போச்சு. அதான் கொஞ்சம் வருத்தமாயிருச்சு.!)

said...

ராகவன்,

மாணவர்ன்னா இப்படித்தான் இருக்கணும். 'டீச்சர்' பதிவைத்தவிர மத்ததையெல்லாம் படிக்கறதில்லையா? :-)))))

பாருங்க. நம்ம மது வலைப்பதிவர் டைரக்ட்டரி போடுறாங்க. அங்கே உங்க பேர் வரணுமா இல்லையா?

சீக்கிரம் உங்க விவரத்தையே ஒரு பதிவாப் போட்டு சுட்டியை மதுவுக்கு அனுப்புங்க.

said...

ஏங்க ராபின்ஹூட்,

நீங்களோ ஏழைப்பங்காளன். இதுக்கே பயந்துட்டா எப்படிங்க?
அதான் ஊரைச்சொன்னாலும் பேரைச்சொல்லக்கூடாதுன்னு இருக்குல்லே.

ஏற்கெனவே பேரைச் சொல்லலை நீங்க.

இப்பச் சும்மா ஊரை மட்டும்தானே சொல்லப்போறிங்க?

said...

கல்வெட்டு,
இப்படிப் பட்டுன்னு ப்ரைவேட் லிஸ்ட்டை வெளியே போட்டுட்டீங்க.
பரவாயில்லை. 'மக்கள் ஆசையே இந்த அக்காவின் ஆசை.'
உங்க விருப்பம் போலேயே ஆகட்டும்:-))))

ஆனா, வெறும் அம்பது பவுன் நகை?கொஞ்சம் அல்பமா இருக்கேப்பா:-))))

said...

துளசி குட் மார்னிங். இதுவே ஒரு பதிவாகி விட்டது.நன்றி. அவசரமாக ப்ளொக் என்று எழுதிவிட்டேன். ராபின்ஹூட் எழுதி இருப்பது போல் சில சமயம் சில பேருக்கு ஒபனாக எழுதுவது சிரமம்தான்.மிக உதவும் புத்திமதி தான்.கவனம் தேவை.

said...

மானு,

'பூனை'ப் பெயர்லே எழுதறவங்க அதே பேரையே போட்டுக்கலாம். அப்புறம் நம்மைப் பற்றிய குறிப்புகள்.
இதுக்கு 'ரொம்ப விஸ்தாரம்' தேவையே இல்லை. வெளிப்படுத்த விருப்பம் இல்லேன்னாச் சுருக்கமா முடிச்சுக்கலாம்.
மத்தபடி இதுலே ஆபத்து ஒண்ணும் இல்லை. சவுண்டு பார்ட்டி கேட்டுருக்கார் புகைப்படம் போட்டுக்கலாமான்னு?
இதுவும் அவரவர் விருப்பம்தான்.

நீங்களும் உங்க விவரங்களைப் பதிஞ்சு, மதுவுக்கு 'சுட்டி' அனுப்புங்க.

said...

டீச்சர் நானும் ஒரு பதிவ போட்டு மதுகிட்ட சொல்லி புட்டேன்.!

said...

துளசிம்மா
எப்படி நன்றியை மூணே மூணு எழுத்துல சொல்றதுங்க.

இது அக்மார்க் ஒரிஜினலா என்னுடய முயற்சிம்மா.

டோண்டு ஐயா சென்னை சந்திப்பில் சொன்னாரா?நான் கேட்கலியேம்ம்மா.

சென்னைவாசிங்க ஐடி கொஞ்சம் தனிமடல்ல அனுப்பறீங்களா?
இல்லைன்னா இந்த சுட்டியை அவங்க பார்வைக்கு நீங்களே அனுப்பிடறீங்களா?

அங்க செல்வன்னு ஒருத்தர் ராயல்டில பங்கு கேக்கறாரு.நீங்க வேற கைல எதுனா கிடைக்குங்கறீங்க.அப்படின்னு ஒண்ணு இருந்தா பாக்கலாங்க.

said...

பத்மா,தாணு,ஜோசப் ஐயா,அன்பு,ஜோ,முகமூடி,ஞான்ஸ்,ராமநாதன்...........இப்படி...

அப்படியே உங்க சிஷ்யங்க குழுவுக்கும்
இப்ப சொல்றது போல் சொல்லி புண்ணியம் சேத்துக்கோங்கம்மா

said...

அம்மா,
நானும் பதிச்சாசி,
பதிக்கும் முன் உங்க பதிவை தான் உதாரனமா பார்த்தேன். பிறகே எனக்கு புரிந்தது.

said...

சிங்.செயகுமார் & சிவ முருகன்,

ரெண்டு பேரும் வெரி குட் ஸ்டூடண்ட்ஸ் னு நிரூபிச்சிருக்காங்க பார்த்தீங்களா.

எல்லாரும் கைதட்டிப் பாராட்டுங்க.

வெல்டன்.

said...

மது,

அடடா.... நான் தப்பா 'டோண்டு'ன்னு சொல்லிட்டேனே(-:

இந்த ஐடியாக் கொடுத்தது நம்ம டிபிஆர் ஜோசஃப்.

'பிழைதிருத்தம் போட்டுரவா?

said...

உள்ளேன் மிஸ்.:-)

மிஸ், இன்னிக்கு இதுதான் பாடமா:-)

நிறைய நல்ல விஷயம் சொல்லி இருக்கீங்க.

said...

நன்மனம்,

//நிறைய நல்ல விஷயம் சொல்லி இருக்கீங்க.//

இப்படிச் சொல்லிட்டா எப்படி? பதிவு போட்டுச் சுட்டி கொடுத்தாச்சா?

நாளைக்கு வகுப்புலே கேப்பேன்.

said...

அக்கா நல்லா சொல்லியிருக்கீங்க.

நானும் சொல்லியிருக்கேன், பாருங்க.

said...

//யாருக்காக? இது மதுவுக்காக//

மதுவை குடிச்சிகிட்டு யாருக்காக..இது யாருக்காக -ன்னு நம்ம நடிகர் திலகம் பாடுனாரு .இது என்ன துளசியக்கா மதுவுக்காகவே ஏதோ சொல்லுறாங்களே-ன்னு வந்தா இதுவா சங்கதி?

said...

இப்ப பதிவு போடற எண்ணம் இல்ல மிஸ்,

//அதனால் நாம் எழுதும் பதிவுகள் ஓரளவுக்காவது பொருள் பொதிஞ்சதாக இருக்கணும்.//

இப்படி வேற சொல்லிக்கொடுத்திருக்கீங்க அதனால கொஞ்சம் படிச்சுக்கறேன் அப்புறம் பதியரேன்.

said...

ஜோ,
கையை இப்படிக் கொடுங்க மொதல்லே!

நிஜமாவே 'யாருக்காக, இது யாருக்காக'ன்னு பாடிக்கிட்டேதான் தலைப்பைப் போட்டேன்.

யாருமே கண்டுபிடிக்கலைப்பா, உங்களைத்தவிர.

said...

பார்த்தேங்க பரஞ்சோதி (எ) சுரேஷ்:-)))

said...

துளசியக்கா!
என் பதிவில் அறுசுவை பாபு அவர்கள் உங்கள் கேள்விக்கு பதில் அளித்து உள்ளார். அங்கு வந்து பாருங்கள் என கூறினால் அது என்ன அங்க வர சொல்லுரது என சண்டைக்கு வந்தாலும் வருவீர்கள். அதனால் அவர் கூறி பதிலை கீழே கொடுத்து உள்ளேன். உங்கள் தனி அஞ்சல் முகவரி தெரியாதால் இந்த பதிவில் பின்னூட்டமாக கொடுத்து உள்ளேன்.

//D.V.Babu has left a new comment on your post "கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார்":

அன்பு சிவா,நன்றி. ராமருக்கு அணிலாக அல்ல, ராமருக்கு அனுமனாக நீ(ங்கள்) உதவியதை நான் என்றும் மறக்கமாட்டேன். எனக்காகவும், அறுசுவைக்காகவும் நீங்கள் அனைவரும் செய்த உதவிகள் மிக அதிகம். ஒருவேளை அறுசுவை SONY நிறுவனம் போல் வளர்ந்து விட்டதென்றால் "அறுசுவை நிறுவனம் வளர்ந்த கதை" எழுதும்போது உங்கள் எல்லோருக்கும் நிறையப் பக்கங்கள் ஒதுக்குவேன். சகோதரி துளசி கோபால் அவர்களுக்கு,நலமா? சிவா குறிப்பிட்டுள்ளதுபோல் அறுசுவை இணையத்தளத்தில் மிகவும் பிஸியாக இருப்பதால் வலைப்பதிவுகள் பக்கம் எட்டிப் பார்க்க இயலவில்லை. இயலாது என்று இல்லை. வேண்டாம் என்று என்னை நானே கட்டிப் போட்டுக் கொண்டேன். நான் பெரிதாக ஒன்றூம் வலைப்பதிந்து விடவில்லை என்றாலும் மற்றவர்கள் பதிவுகளை விடாது படித்து வந்தேன். ஒரு கட்டத்தில் வலைப்பதிவுகள் கஞ்சா அபினை விட மோசமான போதை வஸ்தாக இருப்பதை உணரமுடிந்தது. தொட்டால் போதும் விடுவதில்லை. பலமணிநேரங்கள் அதிலேயே செலவழிந்துவிடுகின்றது. படிப்பதில் சில மணி நேரங்கள் செலவழிவது மட்டுமல்லாமல் படித்தவற்றின் பாதிப்புகள் அவற்றைப் பற்றின சிந்தனைகள் மேலும் பல மணிநேரங்கள் மண்டைக்குள்ளேயே இருக்கின்றன. இது எனது வேலைக்கு மிகவும் இடையூறாக இருந்ததினால் என்னை நானே கட்டாயப்படுத்தி தொலைத்துக் கொண்டேன். இதுதான் நான் காணாமல் போனதின் பிண்ணனி கதை. But I will be back. //

said...

துளசியக்கா!
என் பதிவில் அறுசுவை பாபு அவர்கள் உங்கள் கேள்விக்கு பதில் அளித்து உள்ளார். அங்கு வந்து பாருங்கள் என கூறினால் அது என்ன அங்க வர சொல்லுரது என சண்டைக்கு வந்தாலும் வருவீர்கள். அதனால் அவர் கூறி பதிலை கீழே கொடுத்து உள்ளேன். உங்கள் தனி அஞ்சல் முகவரி தெரியாதால் இந்த பதிவில் பின்னூட்டமாக கொடுத்து உள்ளேன்.

http://tsivaram.blogspot.com/2006/04/blog-post_114570088217459448.html

//D.V.Babu has left a new comment on your post "கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார்":

அன்பு சிவா,நன்றி. ராமருக்கு அணிலாக அல்ல, ராமருக்கு அனுமனாக நீ(ங்கள்) உதவியதை நான் என்றும் மறக்கமாட்டேன். எனக்காகவும், அறுசுவைக்காகவும் நீங்கள் அனைவரும் செய்த உதவிகள் மிக அதிகம். ஒருவேளை அறுசுவை SONY நிறுவனம் போல் வளர்ந்து விட்டதென்றால் "அறுசுவை நிறுவனம் வளர்ந்த கதை" எழுதும்போது உங்கள் எல்லோருக்கும் நிறையப் பக்கங்கள் ஒதுக்குவேன். சகோதரி துளசி கோபால் அவர்களுக்கு,நலமா? சிவா குறிப்பிட்டுள்ளதுபோல் அறுசுவை இணையத்தளத்தில் மிகவும் பிஸியாக இருப்பதால் வலைப்பதிவுகள் பக்கம் எட்டிப் பார்க்க இயலவில்லை. இயலாது என்று இல்லை. வேண்டாம் என்று என்னை நானே கட்டிப் போட்டுக் கொண்டேன். நான் பெரிதாக ஒன்றூம் வலைப்பதிந்து விடவில்லை என்றாலும் மற்றவர்கள் பதிவுகளை விடாது படித்து வந்தேன். ஒரு கட்டத்தில் வலைப்பதிவுகள் கஞ்சா அபினை விட மோசமான போதை வஸ்தாக இருப்பதை உணரமுடிந்தது. தொட்டால் போதும் விடுவதில்லை. பலமணிநேரங்கள் அதிலேயே செலவழிந்துவிடுகின்றது. படிப்பதில் சில மணி நேரங்கள் செலவழிவது மட்டுமல்லாமல் படித்தவற்றின் பாதிப்புகள் அவற்றைப் பற்றின சிந்தனைகள் மேலும் பல மணிநேரங்கள் மண்டைக்குள்ளேயே இருக்கின்றன. இது எனது வேலைக்கு மிகவும் இடையூறாக இருந்ததினால் என்னை நானே கட்டாயப்படுத்தி தொலைத்துக் கொண்டேன். இதுதான் நான் காணாமல் போனதின் பிண்ணனி கதை. But I will be back. //

said...

துளசிம்மா,வலைப்பதிவர் டைரக்டரிக்கு,பதிவு போட்டுட்டு,அதுக்கு,இவ்ளோ பிண்ணுட்டம் வாங்க்கியது நீங்களாதான் இருக்கும்

said...

மீனா,

நம்ம அறுசுவை பாபு சொன்னமாதிரி
ராமனுக்கு அணில்ன்னு மதுவுக்காக மக்களுக்குச் சொல்லப்போய் நமக்கும்
லாபமாப் போச்சுன்றீங்களா?:-))))

said...

நாகை சிவா,

இதென்ன விட்டுக்கு வாங்கன்னு கூப்புட்டா அக்கா வரமாட்டேனா?
உணர்ச்சிவசப்பட்டு ரெண்டு பின்னூட்டம் போட்டுட்டீங்க. நானும்
அதே உணர்ச்சிவசப்பட்டு ரெண்டுமுறை பப்ளிஷ் செஞ்சுட்டேன்:-))))

said...

Thulasi
just peepd into madhumitha's blog& learnt about her attempt; got details in ur blog; i will try to join the stream soon.

said...

தாணு,

எங்கே ஆளையே காணொம்?

ரொம்ப 'அறுப்பா'?:-))))

சீக்கிரம் வந்து சேருங்க.

வீட்டில் எல்லாரும் நல்லா இருக்காங்களா?

said...

//இப்ப சுதந்திரம் இருக்குன்னு கண்டதையும் எழுதிட்டோமுன்னா..... கொஞ்சநாள்
கழிச்சு அதையே திரும்ப நாமே படிக்கும்போது 'ச்சீ'ன்னு போயிராது?

நமக்கே அப்படின்னா... மத்தவங்களுக்கு?
அதான் அப்படி 'பொருளாப் பதிய'ச் சொன்னது.//

கரெக்டுக்கா.. இதை நீங்க பதிவிலயே சொல்லி இருக்கலாமே? இதையாரும் பாக்காம போய்டப் போறாங்க!! :(

நானும் டிரெக்டரிக்குப் போட்டுட்டேன் :)

said...

//கற்றவை: என்ன செய்யகூடாது என்று //

புரியலையே.. அப்படின்னா...

said...

//துளசிம்மா,வலைப்பதிவர் டைரக்டரிக்கு,பதிவு போட்டுட்டு,அதுக்கு,இவ்ளோ பிண்ணுட்டம் வாங்க்கியது நீங்களாதான் இருக்கும்//

ரொம்ப சரி. நீங்க என்ன எழுதினாலும் எக்கச்சக்க பின்னூட்டம் வருது. அப்படி எல்லாரையும் அன்பால கட்டிப்போட்டிருக்கீங்க.

said...

பொன்ஸ்,

உங்க விவரங்களைப் பொய்ப் பார்த்துட்டு வந்தேன்.
நல்லாச் சொல்லி இருக்கீங்க.

நம்மது ஓக்கேப்பா. மக்கள் தானாவும்
தெரிஞ்சுக்குவாங்க:-))))

said...

என்னங்க ரமணி,
இப்படிக் கேட்டுட்டீங்க?

அதான் வேடிக்கையைப் பார்த்துக்கிட்டு இருக்கோம்லெ.

எதைப் படிச்சா முகமும், மனசும் அருவருப்பு காமிக்குதோ, எதைப் படிச்சா 'இவுங்களுக்கு வேற வேலை இல்லை'ன்னு தோணுதோ, எதைப் படிச்சா அடுத்தவன் மனசு காயப்படுத்துற விதமா எழுதறதைப் பார்த்து வருத்தம் வருதோ அவையெல்லாம் கூடாதுன்னு 'நான்' கற்றுக்கொண்டேன்.

said...

துளசிம்மா

நூல் கொண்டுவரணும்-னு நினைக்கிறப்ப இல்லாத ஒன்று இப்ப சாத்தியமாயிருக்கு
உங்களைமாதிரி வலைப்பதிவர்களின் ஆர்வத்தாலயும்,ஒத்துழைப்பாலயும்.

டைரக்டரி-ன்னு சொல்லிச்சொல்லி
திட்டம் கொஞ்சம் மாறியிருக்குங்க.

ஐந்து வலைப்பூ ஜாம்பவான்கள் கட்டுரைகள்
250 வலைப்பூ பதிவுகளின் பட்டியல்கள்
சேர்க்கலாம் என்று முடிவாகியுள்ளது.

இன்னும் ஜூன் 10க்குள் வேறு முன்னேற்றங்கள் தெரியலாம்
சொல்றேங்க

இன்றுவரை 53 பதிவுகளின் சுட்டிகள் பதிவாகியுள்ளன.

விளம்பரம் குடுத்ததுக்கு நன்றிம்மா
இனி தாணு,தேன்துளி பத்மா,சிநேகிதி
இளவஞ்சி,கோ.இராகவன்,ரஷ்யா ராமநாதன்,முகமூடி,ஞான்ஸ்......................காணலியே

சொல்லுங்க துளசி

said...

மது,

ஜூன் 10ன்னு சொல்லிட்டீங்க. அதான் நம்ம மக்கள் நிதானமா செயல் படறாங்க போல.

பந்திக்கு முந்திக்க வேணாமோ?:-))))

பேசாம இன்னோரு விளம்பரம் போட்டா?

வேணாம். ஜூன் 7/8க்கு ஒரு ரிமைண்டர் வேணாக் கொடுக்கலாம்.