Tuesday, May 02, 2006

தலைக்கு வந்தது....

தலைக்கு வந்தது தலைப்பாவோடு போச்சு.


இப்படி ஒரு பழமொழியைக் கேள்விப்பட்டுருக்கோம்தானே. இதுக்கு என்னாங்க அர்த்தம்? 'வர இருந்த ஆபத்துலே மாட்டிக்காம நல்லவேளையாத் தப்பிச்சோம்' இதானே?


இந்தப் பழமொழி எப்படி வந்துருக்கும்? இப்பெல்லாம் இந்தப் பழமொழிகளை ஆராயும் வேலைசெய்யறேனோ? இல்லீங்களே. அது தானா வருதுங்க.


மகாபாரதப் போர் நடக்கப்போகுது. அரசமாதா குந்தி தேவிக்குத் தெரிஞ்சுபோகுது, எதிராளிகூட கூட்டு சேர்ந்திருக்கும் கர்ணன் தன்னோட பிள்ளைதான்னு.


கர்ணனோ, துரியோதனனால் அங்க தேசத்து ராஜாவாக ஆக்கப்பட்டவன். அந்த நன்றிக்கடனைத் தீர்க்கணுமேன்னு,கெளரவர்களோடு சேர்ந்து யுத்தம் செய்யப்போறான். பாண்டவர்களில் வில்வித்தையில் சூரனான அர்ச்சுனனைக் கொல்வதாக சபதம் வேற செஞ்சிருக்கான்.


குந்திதேவிக்குக் கர்ணன் விஷயம் இப்பத்தான் கண்ணன் மூலம் தெரிஞ்சது. ச்சின்னவயசா இருந்தப்ப கிடைச்ச ஒரு மந்திரத்தைப் பரீட்சை செஞ்சு பார்த்து அதனாலே கிடைச்ச குழந்தையை, ஊர் அபவாதத்திற்கு பயந்து ஒரு பொட்டியிலே வச்சு ஆத்துலே போட்டதும், அதை ஒரு தேரோட்டி எடுத்துப்பார்த்து, அந்தக் குழந்தையை வளர்த்ததும்னு முழுக் கதையையும் சொல்லப்போனா பதிவை இன்னைக்கு முடிக்க முடியாதுல்லெ?


தாய்ப்பாசம் பொங்கிவருது. இது விளையாட்டுப் பேச்சு இல்லீங்க. சந்தர்ப்ப வசத்தாலே குழந்தையைத் தத்துக் கொடுத்துட்டு, பின்னாளில் வேற யாருக்கும் வெளிப்படையாச் சொல்ல முடியாம மனசுக்குள்ளேயேபோட்டுக் கஷ்டப்படுற ஜனங்கள் எவ்வளோ பேர் இருக்காங்க தெரியுமா? இதுக்கு நாடு, மொழின்னு வித்தியாசம்இல்லைங்க. சரி. இதைப் பத்தி இன்னொருநாள் பேசலாம்.


எப்படியும் யுத்தமுன்னு வந்தா யாராவது ஒருத்தர் பக்கம் வெற்றி இருக்கும்தானே? இங்கேயோ ரெண்டு பக்கமும்
தன்னுடைய பிள்ளைங்க இருக்காங்க. குந்திக்கு மனசு ரொம்பக் குழம்பிருது. அப்ப கிருஷ்ணர் கிட்டே அந்தம்மா சொல்ராங்க, 'நான் போய் கர்ணனைப் பார்த்து உண்மையைச் சொல்லி, அவனை நம்ம பக்கம் கொண்டுவரப் போறேன்'னு.


அப்ப கிருஷ்ணர் சொல்றார்,'அது நடக்குமான்னு தெரியலை. ஆனா நீ கர்ணன் கிட்டே ரெண்டு வரம் வாங்கிரு'ன்னு.ஒண்ணு, அவனுக்கு அர்ச்சுனன் மேலேதான் ரொம்பப் பகை. அதனாலே மத்த நாலு பேரை ( பஞ்ச பாண்டவர்களில்) ஒண்ணும் செய்யாம விட்டுறணும்.


ரெண்டாவது, அர்ச்சுனனைக் கொல்ல நாகாஸ்த்திரம் ஏவும்போது அதை ஒரு தடவைக்குமேலே எய்யக் கூடாது.


அம்மா போய், புள்ளையைப் பார்த்தாங்க, மனம் விட்டுப் பேசுனாங்க, எதுக்காகப் புள்ளையை ஆத்துலே விடப்போச்சுன்னுச் சொன்னாங்க. கொஞ்சம் அழுதாங்க ரெண்டு பேரும். அதுதான் 'பிரிந்தவர் மீண்டும் சேரும்போது அழுதால் கொஞ்சம் நிம்மதி'


பாண்டவர் பக்கம் வந்துருன்னு சொன்னாங்க. நியாயவான் கர்ணன், துரியோதனன் காட்டுன அன்பையெல்லாம் சொல்லித் தன்பக்க நியாயத்தையும் சொன்னான். அப்புறம் வரம் கேட்டாங்க. வரமும் கொடுத்தான்.


மகாபாரதம்ன்றது சரியாத்தான் இருக்கு. எப்படிச் சுருக்கமாச் சொன்னாலும் நீண்டுதான் போகுது, என்னா செய்ய? ஹூம்..


பீஷ்மர் போர்லே விழுந்ததும், கர்ணன் தளபதியா பொறுப்பு எடுத்துக்கிட்டு யுத்தத்துக்கு வரான். அவனுக்குத் தேர் ஓட்டசாரதியா வந்தது சல்லியன். உலகத்துக்குக் கர்ணன் ஒரு தேரோட்டியின் பிள்ளை. அதனாலே ஒரு தேரோட்டிக்குத் தான் தேரோட்டறதான்னு எரிச்சல் சல்லியனுக்கு. ஆனால் துரியோதனச் சக்ரவர்த்திப் பேச்சைத் தட்ட முடியாம உள்ளுக்குள்ளே குமைஞ்சுக்கிட்டே சாரத்தியம் செய்றான்.


போர் மும்முரத்துலே பாண்டவர்களில் சிலரைக் கொல்ல சந்தர்ப்பம் வசமாக் கிடைக்குது கர்ணனுக்கு. ஆனா தாய்க்குக்கொடுத்த வாக்கைக் காப்பாத்த வேண்டிய நிர்பந்தம். அவுங்களையெல்லாம் ச்சும்மா விட்டுடறான். அப்ப அர்ச்சுனனோடுநேருக்கு நேர் போர் செய்யும்படி ஆகுது. நாகாஸ்த்திரத்தை எடுத்து வில்லுலே பூட்டறான். அப்ப தேரோட்டி சல்லியன்'அதை அர்ச்சுனனோட மார்பைப் பார்த்துக் குறிவச்சு எறி'ன்னு சொல்றான். ஆனா, கர்ணன் ,'நான் கழுத்தைப் பார்த்துதான் எய்யப்போறேன். அப்பத்தான் கஷ்டப்பட்டுச் சாவான்'னு சொல்லி அதேபோல எய்துட்டான்.


நாகாஸ்த்திரம், பாம்பு ரூபத்துலே தீயைக் கக்கிக்கிட்டே போகுது. அதைப் பார்த்த அர்ச்சுனனுக்கு ஒரே பயம். தன்னுடைய தேரோட்டியான கிருஷ்ணன்கிட்டே அதைச் சொல்றான். அஸ்த்திரம் கிட்டே வர்றசமயம் பார்த்து, கிருஷ்ணன் தன்னோட காலை அழுத்தி, அந்தத் தேரையே ஒரு அடி ஆழம் பூமியிலே இறக்குனதும், நேரா வந்த நாகாஸ்த்திரம் அர்ச்சுனனோட தலையிலே இருக்கற கிரீடத்தை அப்படியே அலாக்காத் தூக்கிட்டுப் போயிருது.


இப்படித்தான் தலைக்கு வந்த ஆபத்து தலை முடி(கிரீடம்)யோடு போச்சு. அதுக்கப்புறம் வந்த காலத்துலே சாதாரணமக்கள் இப்படி மகுடம், கிரீடம் எல்லாமா வச்சுக்கிட்டு இருந்தாங்க? தலைப்பாகை கட்ட ஆரம்பிச்சிருப்பாங்கபோல.இப்ப என்னத்துக்கு இந்த திடீர் ஆராய்ச்சின்னு கேக்கறீங்களா?


நேத்துத்தான் கர்ணன் படம் பார்த்து முடிச்சேன். மூணுநாளா தினம் ஒரு சி டி ன்னு போய்க்கிட்டு இருந்துச்சு. ராஜ் வீடியோ விஷன் போட்ட சி டிதான். ஆனா ப்ரிண்ட் மகா மோசம். கலர் எல்லாம் ஒரே காடியா இருந்துச்சு. ஒருவேளைஒரிஜனல் கலரே அப்படித்தானோ? மறந்து போச்சு.முந்தி எப்பவோ ஒரு காலத்துலே பார்த்த படம்.


மேக்கப் எல்லாம் ஐய்யோன்னு இருக்குது. அதிலேயும் அரசமாதா குந்திக்கு வயசாயிருச்சாம், அத்தாம் பெரிய கொண்டைபோட்டுக்கிட்டு இருக்காங்க.தலைக் கனமா இருந்துக்கும். சாம்பல் நரையாம். வயசானா முடி கொட்டிராதா? போதாக்குறைக்கு மொத்த இடத்தையும் காமிக்க அப்பப்ப டாப் ஆங்கிள் கேமரா. எல்லாரும் அமுங்கிஅமுங்கித் தெரியறாங்க.


பாண்டவர்களிலே அர்ச்சுனன் மட்டும் தெரிஞ்ச முகம். முத்துராமன். டயலாக் டெலிவரி எல்லாம் ரொம்ப சுமார்.திரெளபதி வந்து ஜெயந்தி. சரி இதெல்லாம் ரொம்ப முக்கியமா? இந்தக்கதைக்கு முக்கிய கதாப் பாத்திரங்களைப் பார்க்கலாம்.


கர்ணன் நம்ம சிவாஜி கணேசன். கொடுத்த காசுக்கு, இல்லேன்னா எடுத்த பாத்திரத்துக்கு வஞ்சனை இல்லாம நல்லாவே செஞ்சிருக்கார். கர்ணன் மனைவி சுபாங்கியா வர்றது தேவிகா.


அடுத்த முக்கியமானவர் துரியோதனன். ச்சும்மா சொல்லக்கூடாது நம்ம அசோகன் எவ்வளவு லட்சணமா இருக்கார் பாருங்க. இவரோட மனைவி பானுமதிதான் நம்ம சாவித்திரி.


தேவிகா, சாவித்திரி ரெண்டு பேரும் கொஞ்சம் (!) குண்டடிச்சுக் கிடந்தாலும் அழகா லட்சணமா இருக்காங்க.அதுலேயும் அந்த ப்ளவுஸ்ங்கதாங்க எனக்கு ஒரே ஆச்சரியம். பட்டுத்துணியிலே ஜிகுஜிகுன்னு இருக்கு. ஆனா ஒருசுருக்கம் இருக்கணுமே! கில்லாடி டெயிலருங்கப்பா!


துணிங்களுக்குக் கலர் காம்பினேஷனும் சரியில்லை. ஒருவேளை அந்த மகாபாரதக் காலத்துலே இப்படி இருந்துருக்கலாம். யார் கண்டா? நகையும் நட்டுமா ஜொலிச்சுக்கிட்டு இருந்துச்சு படம் பூராவும். ராஜா காலமாச்சே, இருக்காதா?


பாட்டுங்க எல்லாம் அருமை. அதுக்காகத்தான் இதை வாங்கிட்டு வந்தேன். இன்னும் என்னென்ன வாங்குனேன்னுதெரிஞ்சா என்னை அடிக்க வந்துருவீங்க :-)))



போர்க் காட்சிகள் நல்லா இருக்கு. அப்ப ரொம்ப சிம்பிளா எடுத்துருக்காங்க. கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் இல்லை பாருங்க.இதுவே இப்பன்னா, ஹய்யோ... வெல்லம் ஆப்ட்டமாதிரி. போர்க்களத்தைக் காமிக்கறேன்னு பயங்கரமா தலையும் முண்டமுமாக் காமிச்சு பகீர் பண்ணியிருப்பாங்கல்லே? அதும் யானைங்க வேற நிறைய வருது......


ஒரு விஷயத்தைச் சொல்ல விட்டுப்போச்சு பாருங்க. மஹா விஷ்ணு, கிருஷ்ணர்னு சொன்னாவே அநேகப்பேருக்கு நம்ம என்.டி.ராமாராவ் முகம்தான் நினைவுக்கு வரும். அப்படி ஒரு பொருத்தம் இருக்குங்க.நான் எப்ப கிருஷ்ணனை நேரில் பார்த்தேன்னு கேட்டுறாதீங்க. மனக்கண்ணுலே சாமியை நினைச்சுப் பார்த்தாலும் அவர்முகம் என் டி ஆர்முகமாவே தெரியுதே. அதுக்கப்புறம் எத்தனையோ பேர் இந்த வேஷம் கட்டுனாலும் சரிப்படலைங்க. அன்னமாச்சார்யான்னு ஒரு படம் பார்த்தேன். விஷ்ணுவா வர்றது சுமன். முகம் எல்லாம் 'பொத்'ன்னு இருந்துச்சு. தினம் நெய் வடிய வடிய பிரசாதம் சாப்புடறவர் அப்படித்தான் இருப்பார்னு சமாதானம் செஞ்சுக்கிட்டாலும் மனசுக்கு ஒப்பலைங்க. அதான் ஆந்திராலே இருந்து வர்ற டூரிஸ்ட்டுங்க முந்தி என் டி ஆர் சென்னையிலே இருந்தப்ப, அவரை வந்து 'தரிசிச்சிட்டுப் போவாங்களாம்'.

இந்தப் படத்துலேயும் நம்ம என் டி ஆர்தான் கிருஷ்ணனா வர்றார். விஸ்வரூபம் ஸீன் வந்தப்ப எங்க பாட்டியை நினைச்சுக்கிட்டேன்.
பாட்டுக்களுக்காக ஒருதடவை பார்க்கலாம். கிடைச்சா விட்டுறாதீங்க.


பி.கு: நம்மைவிட ஆயிரக்கணக்கான வருஷங்களுக்கு முன்னே வாழ்ந்த இவுங்களை ஒருமையிலே 'ன்,ள்' போட்டு எழுதும்படி ஆயிருச்சு. மன்னிக்கணும்.கதையின் போக்கு அப்படி. அது என்னமோ கிருஷ்ணனுக்கு மட்டும் மரியாதை எப்படியோ கிடைச்சிருச்சுப் பார்த்தீங்களா?

31 comments:

said...

//தேவிகா, சாவித்திரி ரெண்டு பேரும் கொஞ்சம் (!) குண்டடிச்சுக் கிடந்தாலும் அழகா லட்சணமா இருக்காங்க.அதுலேயும் அந்த ப்ளவுஸ்ங்கதாங்க எனக்கு ஒரே ஆச்சரியம். பட்டுத்துணியிலே ஜிகுஜிகுன்னு இருக்கு. ஆனா ஒருசுருக்கம் இருக்கணுமே! கில்லாடி டெயிலருங்கப்பா!


துணிங்களுக்குக் கலர் காம்பினேஷனும் சரியில்லை. ஒருவேளை அந்த மகாபாரதக் காலத்துலே இப்படி இருந்துருக்கலாம். யார் கண்டா? நகையும் நட்டுமா ஜொலிச்சுக்கிட்டு இருந்துச்சு படம் பூராவும். ராஜா காலமாச்சே, இருக்காதா?//

படத்தை ரொம்ப தெளிவா பார்த்திருக்கீங்கன்னு தெரியுது... அப்படியே அது எந்த பட்டுன்னு சொல்லிருந்த்தீங்கன்னா உங்கள் திரை விமர்சனம் அவள் விகடனில் அச்சேறியிருக்கும் ;-)

(ஸ்மைலி போட்டிருக்கேன், ஆமா சொல்லிட்டேன்)

said...

ஏன், என் இணைவி, இந்த படத்த நாலஞ்சி தடவ திருப்பித் திருப்பிப் பார்த்தாங்கன்னு இப்போ புரியுதுங்க மேடம். நல்ல வேள, அட்ச்ய திரிதயத்துல ஊருல இல்ல....

said...

உதயகுமார்,

எந்தப் பட்டுன்னு தெரிஞ்சாத்தானே 'பட்'னு சொல்ல முடியும்? காஞ்சீபுரமுன்னே வச்சுக்கலாம், இப்போதைக்கு!

ஆமாம், இதுக்கும் அவள் விகடனுக்கும் என்ன முடிச்சு?

said...

கிருஷ்ணா,

//நல்ல வேள, அட்ச்ய திரிதயத்துல ஊருல இல்ல.... //

எல்லா ஊர்லேயும் நகைக்கடைகளும் புடவைக்கடைகளும் எக்கச்சக்கமா இருக்கு. அவுங்க திரும்பி
வர்றப்பப் பாருங்க, பொட்டியின் எண்ணிக்கை கூடியிருக்கப் போகுது.

பி.கு: இந்த ஷாப்பிங் எல்லாம் தனியே போனால்தான் நிம்மதி. இல்லேன்னா பூனையை மடியில்
கட்டிக்கிட்டு(!) சகுனம் பார்த்த கதைதான். இது அவுங்களுக்கும் தெரிஞ்சிருக்கும்:-))))

said...

பொட்டியின் எடை கூடியிருந்தா பயமில்லை மேடம், இங்க ஜப்பான்ல வேல பார்க்கின்ற இடத்தில் புடவை கட்ட முடியாதுன்றதால, புடவையா இருக்காது, தின்பண்டமாத்தான் இருக்கும் (அய்யா, நொறுக்கு தீனி மாஸ்டர் ஆச்சே...). இப்ப என்னவோ, பிளாடினம்றாங்க, வைரம்றாங்க, வைர செட்டுன்றாங்க. கடன் அட்டய வேற கையில வெச்சிட்டிருக்காங்க. அதுதான் பயமாயிருக்கு....

said...

//பி.கு: இந்த ஷாப்பிங் எல்லாம் தனியே போனால்தான் நிம்மதி. இல்லேன்னா பூனையை மடியில்
கட்டிக்கிட்டு(!) சகுனம் பார்த்த கதைதான். இது அவுங்களுக்கும் தெரிஞ்சிருக்கும்:-)))) //

ஆனால், எங்கூட்டம்மாவுக்கு, நான் கூட வந்தாதான் ஜாலியே. நம்ம கண்ணுக்கு நல்லதா படறது எல்லாமெ காஸ்ட்லின்னு தெரிஞ்சுகிட்டு, விலைய காட்டாம, நல்லாருக்கான்னு மட்டும் கேட்பாங்களா, நாமும் நம்ம திறமைய காட்டிபுடனும்னு சொல்வோமா, நீங்க சொன்னீங்கன்னுதான் இவ்ளோ விலையில எடுத்தேங்க, இல்லன்னா, இன்னும் கொஞ்சம் வில கம்மியாவே எடுத்திருக்கலாங்கன்னு ஒரே அடியா அடிச்சிருவாங்க.

said...

ஒருவேளைஒரிஜனல் கலரே அப்படித்தானோ? //

ஆமாங்க.. என்னமோ கேவா கலர்ம்பாங்க.. இப்ப பார்த்தா டல்லடிக்கறா மாதிரி இருக்கும்..

பாட்டுங்க எல்லாம் அருமை. அதுக்காகத்தான் இதை வாங்கிட்டு வந்தேன்//

அதுல உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது என்பது.. சூப்பர்..

said...

கிருஷ்ணா கிருஷ்ணா,

உரலுக்குள்ளே தலையைக் கொடுத்துட்டு உலக்கை இடிக்குப் பயந்தால் ஆகுமா?
(இன்னொரு பழமொழி! ஆஹா....) கடனட்டையைச் சொல்றேன்.

பயப்படாதீங்க. ஒரே ஒரு வைரம் வச்ச ப்ளாட்டினம் நெக்லேஸ் மட்டும்தான்
வாங்குனாங்களாம்.

பொம்பளைங்க சைகாலஜி ஒண்ணு இருக்கு,தெரியுமா? வீட்டய்யா கூடப்போறப்பதான்
மெள்ள விலை கூடுனதை எடுப்போம். தனியாப் போனா,கொஞ்சம் அடக்கிதான் வாசிக்கறது.

நீங்களும் நொறுக்ஸ் பிரியரா? நானும்தான்.

இவர் சிங்கையிலிருந்து திரும்புறப்ப எல்லாம் 'பை நிறையக் கை முறுக்கு'தான்.

ச்சும்மா ஒரு ரைமுக்கு.

நொறுக்ஸ் கொண்டுவந்து இங்கே டிக்ளேர் செஞ்சே, ஏர்ப்போட்டுலே
வெள்ளைக்காரங்களுக்கெல்லாம் பழகிப்போச்சு. ரொம்ப செக் செய்யறதுகூட
இல்லைன்னா பாருங்களேன்.

said...

துளசி மேடம், உங்க பதில்களைப் படிக்க சந்தோஷமாய் உள்ளது.

தமிழ்மணம், என் உற்ற நண்பன் எண்ணக் கிறுக்கல்கள்- செல்வராஜால் அறிமுகப்பட்ட பின்னர், உங்கள் பின்னூட்டங்களைப் படித்ததாலும், டிபிஆர்.ஜோசப் சார் தொடரைப் படித்ததாலும் இன்று ஒரு தினசரி இளைப்பாறுமிடமாகி விட்டது!

இன்று முழுக்க இளைப்பாறல் என முடிவு செய்து விட்டேன்!

ரெண்டு நாளா, சரியா சொல்லனுன்னா, திரிதியையிலிருந்து போனும் இல்ல, சாட்டும் இல்ல, நீங்க சொன்ன மாதிரித்தான் பெரிசா ஒரு பர்சேஸ்னு நினைக்கிறேன்..

என்ன இருந்தாலும் என் இணைவிக்கு வைரம் வச்ச ப்ளாட்டினம் நக்லெஸ் நல்லாத்தான் இருக்கும்.. (புரியுதுங்களா மேடம்..)

said...

துளசி அந்த எடுக்கவொ கோர்க்கவோ சீன் கூட நல்லா இருக்கும்.மேக்கப் மோசம்தான். அந்த காலத்தில் அதுதான் முடிந்ததோ என்னவோ?ஆனால் தேவிகா,சாவித்திரி,சிவாஜி இவர்கலின் கண்களை எப்பவுமெ வசீகரமாக காண்பிப்பார்கள்.பந்தமா பாசமா படம் வாஙக வில்லயா?
பாரதம் படிச்சாச்சு உஙக புண்ணியத்திலே. வல்லி

said...

டிபிஆர் ஜோ,

இது கேவாக் கலருமில்லை கோவாக் கலருமில்லை. ஏதோ டெக்னிக் கலர்ன்னு போட்டுருந்துச்சு.

உள்ளத்தில் நல்ல உள்ளம் நல்ல பாட்டுதான். ஆனா நம்ம ஃபேவரைட் சுசீலா பாடுனதுங்க.

said...

கிருஷ்ணா,

ம்ம்ம்ம்ம்ம்ம் புரியுது.
தலைக்குமேலே போற வெள்ளம் சாண் போனால் என்ன முழம் போனால் என்ன?:-)))

said...

வல்லி,
//பாரதம் படிச்சாச்சு உஙக புண்ணியத்திலே//

இன்னிக்கு ஸ்ரீ ராமானுஜர் பிறந்த நாளாம். பாரதம் படிக்கக் கிடைச்சது அதனாலே கூட இருக்கலாம்:-))))

அதென்ன பந்தமா பாசமா?
இல்லே பணமா பாசமாவா?

இருங்க ஒரு நாள் திடுக்'னு ஒரு விமரிசனம் போடறேன்.

said...

இந்த கதை எனக்கு எப்பவோ தெரியும்..

சன் டிவில புஷ்பவனம் குப்புசாமியும் அனிதா குப்புசாமியும் பழமொழிகளை கலக்குவாங்க...பார்க்கிறீர்களா?
(என்ன அன்னியோன்யம்)

said...

அடடே, நட்சத்திர வருகையா? எப்படிங்க இவ்வளவு பிஸியான நேரத்திலும் வந்துட்டீங்க?

இந்த சன், இன்னும் மத்த எதுவும் பாக்கற 'பாக்கியம்' எனக்கு இல்லீங்களே.
இங்கே ஏது அதெல்லாம்? ஹூம்....

வருகைக்கு நன்றிங்க.

said...

என்னது உங்களுக்கு சன் டிவி வரலையா?

என்ன பெரிய 8000 கோடி குழுமம் சன்டிவி..என் கடுமையாக கண்டனங்களை தயாநிதி மாறனுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.(அவரை திட்டறதுதர்ன இப்ப பேஷன்)

said...

ஏங்க இங்கே 'சன்'னே வராம ஒரே குளிரு. இதுலே 'சன் டிவி'வேறயா? அப்படியே வந்தாலும் யாருக்கு நேரம் இருக்கு அதைப் பார்த்து அழுவறதுக்கு?

said...

துளசி அந்தப் படம் பந்தபாசம்.பாட்டெல்லாம் சூபராக இருக்கும்.ப்லாக்,வைட் காலம். ப ஸீரீஸ் வந்த நேரம். வல்லி.

said...

அருமையான படம். திகட்டாத பாடல்கள் மற்றும் வசனங்கள்(இதை தவிர மற்றவை எல்லாம் over dose தான்)
அன்புடன்
நாகை சிவா

said...

"....rajamaadhava..."enum pozhudhu
sivajiyin kuralil ulla pani, kanivu, mariyadhai...pinbu kundhidhan than than thaai enru arindhadhum andha kural kattum neghizhchi........superb
"ullathil nalla ullam...."
"aranmanai arivan:ariyanai arivan:
andhappuram ondrirupadhai ariyan..."
MSV yum KANNADHASANUM summa pinni eduppanga ille

said...

//devika,savitri....kundadichu...//
yar solradhu.....?

said...

சிவாஜி நடிப்புக்காக இன்னும் ரெண்டு தடவை பார்க்கலாம். கர்ணன், வீரபாண்டிய கட்டபொம்மன் எல்லாம் சிவாஜி special. கிருஷ்ணன்னா எப்படி NTR முகம் வருதோ அது போல வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சி, எல்லாம் சிவாஜி வேடத்தில் தான் நினைவு வரும்.

நல்ல வேளை சன், ஜெயா டிவி வரல, இல்ல குஷ்பு, ரம்யாகிருஷ்ணன் ப்ளவுஸ் பார்த்துட்டு டெய்லருக்கு அவார்ட் கொடுத்திருப்பிங்க.

said...

மானு,

ம்யூஸிக் இண்டியா ஆன் லைன்லே பந்தபாசம் இருக்கன்னு பாக்கறேன். கிடைச்சா அந்தப்
பாட்டெல்லாம் கேட்டுட்டு, அடுத்தமுறை படம் வாங்குனாப் போச்சு. ஒரு பாட்டைச் சொல்லுங்க.
ஞாபகம் வருதான்னு பாக்கறேன்:-)

said...

நாகைசிவா,
நீங்க சொல்றது ரொம்பச் சரி. இந்த அரண்மனை செட்டை விட்டுட்டீங்களே. அதுவும்
பிரமாதம்தான். அப்பெல்லாம் ரொம்பக் கவனம் எடுத்து இதையெல்லாம் செய்வாங்கன்னு
படிச்சிருக்கேன்.

இப்பவும்தான் கவனம் இருக்குதான். ஆனா ஏற்கெனவே இருக்கற இடத்தைப் பார்த்து அசல் எது நகல் எதுன்னு தெரியாம
'செட்' போட்டுடறாங்க.

said...

சிவஞானம்ஜி,

அனுபவிச்சுப் பார்த்துருக்கீங்க. இது சிவாஜியோட படம். ரொம்ப ஈடுபட்டு செஞ்சிருக்கார் இல்லே.
கண்ணதாசனை வெல்லவும் ஆளுங்க இருக்காங்களா என்ன?
////devika,savitri....kundadichu...//
yar solradhu.....? //

இதுதானே வேணாங்கறது? 'பாம்பின் கால்...... ...' தெரியாதா?ஹிஹி(அசட்டுச் சிரிப்புதான்)

said...

மனசு,

// கர்ணன், வீரபாண்டிய கட்டபொம்மன் எல்லாம் சிவாஜி special. கிருஷ்ணன்னா எப்படி NTR முகம் வருதோ அது போல வீரபாண்டிய
கட்டபொம்மன்..........//

சரியாச் சொன்னீங்க. ஆனால் பாரதியார்ன்னு சொன்னதும் முந்தியெல்லாம் எஸ்.வி. சுப்பைய்யாதான் நினைவுக்கு வந்துக்கிட்டு இருந்தார். ஆனா இப்ப
சயாஜி ஷிண்டே ஆயிருச்சே!

ஏங்க எது எதுக்கோ அவார்டு கொடுக்கறப்ப ப்ளவுஸ்ங்களுக்குக் கொடுத்தாத்தான் என்ன? இங்கே ஒவ்வொரு சீஸன்
ஆரம்பிக்குமுன்னே சம்மர் கலெக்ஷன், விண்ட்டர் கலெக்ஷன்ன்னு சொல்லிக்கிட்டும், ட்ரெஸ் டிஸைனருங்க
அவுங்க உடுப்புகளை ஃபேஷன் பரேடுன்னு நடத்தறதையும் பார்த்தா இப்படித்தான் தோணுது. அதுலே பல உடுப்புங்க
வெளியே போட்டுக்கிட்டுக்கூட போகமுடியாதுங்க. அதுக்கு ப்ளவுஸ் எவ்வளோ மேலுதானே?

said...

டீச்சர், கர்ணன் நல்ல படந்தான். அந்தக் காலத்துல நல்லா ஓடுன படம்.

பாட்டுகள்...விஸ்வநாதனும் கண்ணதாசனும் சேந்தாலே அப்படித்தாங்க...ஒன்னும் பண்ண முடியாது...

said...

என்னுயிர்த் தோழி
கேளொரு சேதி...ம்..ம்ம்..அது பாட்டு...

said...

எங்க அப்பாவுக்கு ரொம்பப் புடிச்ச படம்."கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே,கன்ட போதே சென்றன அங்கே","இரவும் நிலவும் வளரட்டுமே","உள்ளத்தில் நல்ல உள்ளம்"..அடடா...

கொசிறு செய்தி:தற்போதைய தமிழக முதல்வரின் செல்லிடப் பேசியின் ரிங்டோனாய் இருப்பது "கண்கள் எங்கே... "பாட்டுத்தானாம்.எங்கேயோ படித்ததாக நினைவு.

said...

ராகவன்,

அருமையான படம்தான்.

தருமி,

இந்த பாட்டுதானே இருக்கறதுலேயே டாப்.

said...

வாங்க சுதர்சன்.

பாட்டுக்காகவே படங்கள் ஓடுன காலம்.

அப்பாவுக்குப் பிடிச்சது மகனுக்குப் பிடிக்கலையா?