Thursday, May 04, 2006

கதை கேளு கதை கேளு

ஒரு ஊர்லே ஒரு வீடு. புருஷன் , பொண்டாட்டி , மூணு புள்ளைங்கன்னு இருக்காங்க. புருஷன் வேலைக்குப் போறவர். பொண்டாட்டி வீட்டுலே இருக்கறவங்க.


எப்பவும் வேலைக்குப் போறது வர்றதுன்னு இருந்த புருஷனுக்கு ரொம்ப போரடிச்சுப்போச்சு இந்த வாழ்க்கை. ஒரு நாள்சாமிகிட்டே வேண்டிக்கறார். 'சாமி, நானே எப்பவும் வேலைக்குப் போய் சம்பாரிச்சுக் கொண்டுவந்து போடணும். இவ வீட்டுலே ஜாலியா இருக்கா. ஒரு நாளைக்கு என்னை அவளாவும், அவளை நானாவும் மாத்திரு. ச்சும்மா ஒரே ஒருநாள்,ஜஸ்ட் ஒரே ஒருநாள் நானும் 'ஜாலி'யா இருக்கேன்'ன்னு கேட்டார். சாமியும் 'நீயே இஷடப்பட்டுக் கேக்கறப்ப நானு ஏன் வேணாங்கணும்? அப்படியே ஆகட்டும்'னு சொல்லிட்டார்.


பொழுது விடிஞ்சது.


இவுங்க வீட்டுலே வேலைக்கு உதவியாளர்கள் எல்லாம் கிடையாது. பொண்டாட்டி ரூபத்துலே இருக்கற புருஷி(!) காலையிலே எழுந்து, ப்ரேக்ஃபாஸ்ட் தயாரிச்சாங்க. பிள்ளைங்களை எழுப்பி பள்ளிக்கூடம் போக உடுப்பு எல்லாம் எடுத்துக்கொடுத்து, தலைவாரி, ரெடி செஞ்சாங்க. அதுங்களுக்குக் காலை சாப்பாடு கொடுத்தாங்க. சாப்புட்டு முடிச்சதும் எல்லாரையும்ஸ்கூல் கொண்டுபோய் விட்டாங்க. வீட்டுக்கு வந்தவுடன், துவைக்கிற துணிமணிகளை மெஷீன்லே போட்டாங்க.


கடைக்குக் கிளம்புனாங்க. போற வழியிலேயே பேங்குக்குப் போய், போடவேண்டிய செக்கைப் போட்டுட்டு, வேணுங்கறக் காசை எடுத்துக்கிட்டு சூப்பர் மார்கெட் போய் சாமான் எல்லாம் வாங்கி வந்தாங்க. வீட்டுக்கு வந்து சாமான்களை எல்லாம் எடுத்து அதனதன் இடத்துலே வச்சுட்டு, பூனையோட 'லிட்டர் ட்ரே'யைச் சுத்தம் செஞ்சாங்க. அதுக்கு சாப்பாடு, தண்ணி எல்லாம் எடுத்துவச்சாங்க. நாயைக் குளிப்பாட்டுற நாளா இருந்ததாலே, அதையும் குளிப்பாட்டுனாங்க. அப்புறம் அதுக்கும் சாப்பாடு கொடுத்தாங்க. மெஷின்லே இருந்து துவைச்ச துணிகளை எடுத்து வெளியே காயப் போட்டாங்க.


இப்ப மணியைப் பார்த்தா 1 மணி. வேகம் வேகமா பிள்ளைங்க பெட்ரூமைக் கொஞ்சம் டைடி செஞ்சு பெட் விரிப்பு எல்லாம் சரியாப் போட்டாங்க. அப்படியே இவுங்க பெட்ரூமையும் சரி செஞ்சாங்க. வேக்கும் க்ளீனரை எடுத்துவீட்டைச் சுத்தம் செஞ்சுட்டு, அடுக்களைத் தரையை சோப்புத்தண்ணி போட்டு துடைச்சு விட்டாங்க.மணி மூணாகப்போகுது.


பள்ளிக்கூடத்துக்கு ஓடிப்போய் பிள்ளைங்களைக் கூட்டிக்கிட்டு வந்தாங்க. வர்றவழியெல்லாம் பிள்ளைங்க அதுவேணும், இதுவேணும், இங்கே போகணும் அது இதுன்னு சொல்லிக்கிட்டே விவாதம் செஞ்சுக்கிட்டு வர்றதையெல்லாம் பொறுமையாக் கேட்டுக்கிட்டே வீட்டுக்கு வந்து எல்லாருக்கும், பாலும் பிஸ்கெட்டும் கொடுத்தாங்க. அப்புறம் அதுங்களையெல்லாம் ஹோம்வொர்க் செய்யச் சொல்லிட்டு, வெளியே காய்ஞ்சுகிட்டு இருந்த துணிங்களை எடுத்துவந்து அயர்ன் செய்ய ஆரம்பிச்சாங்க.போரடிக்காம இருக்க,அப்ப மட்டும் கொஞ்ச நேரம் டிவியைப் போட்டுக்கிட்டாங்க.


மணி அஞ்சாயிருச்சு. உருளைக்கிழங்கை எடுத்து தோல் சீவினாங்க. ராத்திரி சமையலுக்குக் காய்கறிகளைச் சுத்தம்செஞ்சு , சமையலை முடிச்சாங்க. வேலையிலிருந்து வீட்டுக்குத் திரும்பி வந்தார் துணைவன்(!)எல்லாரும் உக்காந்து சாப்பாட்டை முடிச்சாங்க. அடுக்களையைச் சுத்தம் செஞ்சு, பாத்திரங்களையெல்லாம் டிஷ் வாஷரிலே அடுக்குனாங்க.

பசங்களையெல்லாம் குளிக்க வச்சாங்க. ( வெள்ளைக்கார ஊர்களிலேபசங்க ராத்திரிதான் குளிக்குதுங்க) அப்புறம் எல்லாருக்கும் பெட் டைம் ஸ்டோரி சொல்லி படுக்க வச்சாங்க.


பூனை, நாய்க்கு ராச்சாப்பாடு கொடுத்தாங்க. மணி 10 ஆகப்போகுது. வீட்டுவேலை எல்லாம் முடிஞ்ச பாடு இல்லை.துவைச்ச துணிங்களை இன்னும் முழுசா அயர்ன் செய்யலை. பெட் ஷீட்டுங்க எல்லாம் மடிக்காம அப்படியே கிடக்கு.ஆனால் ரொம்பக் களைப்பா இருக்கு. நாளைக்குப் பார்த்துக்கலாமுன்னு படுக்கப்போனாங்க. அங்கே பார்ட்னர் ஏதோஆஃபீஸ் வேலை மடிக்கணிலே செஞ்சுக்கிட்டு இருந்தவர், அதை முடிச்சுட்டு துணையோடு கொஞ்ச நேரம் 'ஜாலி'யாஇருந்தார். ரொம்ப டயர்டா இருக்குன்னாலும் அதைச் சொல்லாம பொறுமையா இருந்துட்டாங்க.


மறுநாள் பொழுது விடிஞ்சது. படார்னு படுக்கையை விட்டு எழுந்த மனைவி( ரூபத்தில் இருக்கற புருஷன்) சாமிகிட்டே பிரார்த்தனை செய்யறார்,' கடவுளே, நான் தப்பா நினைச்சுட்டேன். பொண்டாட்டி ச்சும்மா வீட்டுலே இருக்கு. நான் மட்டும் குடும்பத்துக்கு உழைக்கிறேன்னு. இப்பத்தெரிஞ்சு போச்சு. தயவு செஞ்சு எங்களைப் பழையபடியே மாத்திரு. ஒரு நாளே போதுமுன்னு ஆயிருச்சு'ன்னு.


அப்ப சாமி சொன்னார்,' அது இப்ப முடியாது. ஏன்னா நேத்து நீ கர்ப்பமாயிட்டே. குழந்தை பிறக்கறவரைக்கும் நீஇப்படியேதான் இருக்கணும். வேற வழி இல்லே'ன்னு!


பி.கு: நண்பர் அனுப்புன மின்னஞ்சல். கொஞ்சம் நம்ம வேலையையும் காட்டினேன்.

22 comments:

said...

ஹா...ஹா...ஹா...ரொம்ப சூப்பர்ப். நல்லா கவனிச்சு படிச்சேன்! அருமையோ, அருமை. :-)

நேசி.

said...

காலை வணக்கம் துளசி.கடைசி பன்ச் ப்ரமாதம்.நன்றி. நன்றி.ந்றி.றி.மனு

said...

இயற்கை நேசி & மானு,

ஹை,,,கதை பிடிச்சுருக்கா?

ரொம்பத் தேங்க்ஸ்.

said...

இது என்னா 'நியூ' கதையா இருக்கு;)

said...

அக்கா...கதையிலே மணி ரொம்ப வேகமா ஒடுது போல இருக்கே ?

- ராம்

said...

ஐய்யோ துளசி அக்கா

அப்படியே இது எங்க வீட்டுக்கதை.
மீதி தினமும் எங்க வீட்ல நடக்கறதுதான்.
ஓரே ஒரு வித்தியாசம்,எங்களுக்கு ரெண்டு குழந்தைகள்.

கடைசி ''பிட்'' சூப்பர்க்கா.

இதை அப்படியே துணைவியாரிடம் படிச்சு காட்டப்போறேன்

said...

உதயகுமார்,

சும்மாத்தான். நண்பர் அனுப்புனதைப் படிச்சப்ப சிரிப்பு வந்தது. அதான் நான் பெற்ற இன்பம் வையகமும் வலை உலகமும்
பெறட்டுமுன்னு.......

said...

ராம்,

வருகைக்கு நன்றி. 'சிறுகதை'ன்னா இப்படித்தான் மணி வேகமா ஓடிரும்:-))

said...

பெரு(சு)

வீட்டு வீட்டுக்கு வாசப்படிதானேப்பா.
நம்ம ஊர்லேன்னா கொஞ்சம் 'உதவி' கிடைக்கும். இங்கெல்லாம் மணிக்கணக்குப் பார்த்து 12$ குடுக்க
முடியறதில்லையே(-:

said...

துளசி அக்கா

நீங்க சொல்றது 100க்கு 100 ரொம்ப சரி.

உங்களுக்கு என்ன நேரம் இப்போ.

பெருவில் இரவு 08.40

said...

கோபால் சார் எதனா கோவமா சொன்னாரா? அதை வச்சி ஒரு கதை பண்ணிட்டா மாதிரி இருக்கே ....

said...

பெரு(சு)

உங்களுக்குச் செவ்வாய் 8.40 இரவுன்னா எங்களுக்கு புதன் பகல் 1.40. 17 மணி நேர வித்தியாசம்.

said...

வாங்க கொத்ஸ்.

நீங்க வேற. பாவங்க அவர். வீக் எண்டுலே வாய் பேசாம துணிகளை அயர்ண் பண்ணிக்கிடுவார். துவைக்கறது மட்டும்தான்
என் வேலை. அவருடைய துணிகளை மட்டும் அயர்ண் செஞ்சாப் போதும். என்னதுல்லாம் வாஷ் & வேர்தான்.

said...

இங்க போயி படிச்சி பார்த்துட்டு சொல்லுங்க..

உங்க மேல காவ்யா விஸ்வநாதன்மேல போட்டா மாதிரி கேஸ் போடப்போறேன்:-(

said...

டிபிஆர்ஜோ,

உங்க 'இங்க'லே ஒண்ணும் வரலையே? (-:

வெங்கட்,

நன்றிப்பா.

said...

http://tbrblogspotcom.blogspot.com/2006/04/god-make-me-woman.html

இதுதான் அட்றெஸ். இங்க போய் பார்த்துட்டு சொல்லுங்க.

said...

ஆமாங்க டிபிஆர்ஜொ,

இது அப்படியே உங்க பதிவுலே வந்த மாதிரியே இருக்கு.

இப்ப டிஸ்க்ளெய்மர் டைம்:

முதலாவது நான் உங்களுது உட்பட இங்கிலீஷ் ப்லொக் ஏதும் பார்க்கறதில்லை.

ரெண்டாவது, நானே பதிவுலே கீழே ...... அடியிலே பின்குறிப்ப போட்டுருக்கேன் நண்பர்
அனுப்புன மின்னஞ்சல்தான் ஆதாரம்னு.

இப்ப என்னாங்க செய்யறது?
என்னையும் அந்த காவ்யா கணக்குலெ சேர்த்துட்டீங்களா?

said...

என்னையும் அந்த காவ்யா கணக்குலெ சேர்த்துட்டீங்களா?//

சேச்சே.. plagiarism கற மீனிங்ல இது வராதே.. அதனால தப்பிச்சி போங்கன்னு விட்டுடறேன்:)

அந்த பொண்ணும் பாவந்தாங்க.. அறியா பொண்ணாச்சே.. நஷ்ட ஈடு கேக்காம இத்தோட விட்டாங்களே..

said...

என்னக்கா, அந்த மெயில் எனக்கும் வந்துது.. ஆனா அதுல இந்த துளசி டச் இல்லையே...:)

said...

ரசித்தேன்.

தொடரும் போட்டிருந்தா, அடுத்த கதை பதிவுக்கு வசதியா இருந்திருக்கும்ல

said...

பொன்ஸ்,

வாடா என் செல்லம்.

//என்னக்கா, அந்த மெயில் எனக்கும் வந்துது.. ஆனா அதுல இந்த துளசி டச் இல்லையே...:) //
என் வயத்துலே பாலை வார்த்தியேம்மா. நானும் நம்ம டிபிஆர்ஜோ சொன்னதைப் பார்த்து 'நடுங்கிட்டேன்'இல்லெ?

said...

வாங்க நன்மனம்.

அட. இப்படிச் செஞ்சுருக்கலாமுல்லே?

நல்ல ஐடியா கொடுத்த நீங்க உங்க பேரைப்போலவே நல்லா இருங்க.