பானு, இரவல் பானு.
பொழுது விடியக்கூடாதே. கொஞ்சநேரம் நிம்மதியாத் தூங்க முடியுதா?காலையிலே அஞ்சரை ஆறு மணிக்கே நடமாட்டம் ஆரம்பிச்சுரும்.
கடன் கேக்கவே காத்திருக்காங்கப்பா. ஆமாம். கடன். பொல்லாத கடன். எல்லாம் திரும்ப வராத கடந்தான்.அதுக்காக நாளுக்கு அரை இஞ்சுன்னு கணக்குப் போட்டு இதுவரை நாலரை இஞ்சு ஆயிருச்சு. எப்பத் திருப்பித்தரப்போறேன்னு கேக்க முடியுமா?
இல்லே நேத்து ரெண்டு,முந்தாநேத்து ரெண்டு, அதுக்குமுதல்லெ....ன்னு மொத்தம் 10 ஸ்லைஸ்ன்னுச்சொல்ல முடியுமா?
தொலையட்டுமுன்னு விட்டுறதுதான்.
என்னன்னு கேக்கறீங்களா?
நம்ம ஹாஸ்டல்லே நடக்கற கூத்துங்கதான். எல்லாம் வேலைக்குப் போற மக்கள்தான். ஆனா ச்சின்னச் சின்ன அல்ப சமாச்சாரத்துக்குன்னே மறதியைக் 'கவனமா' வச்சுக்கிட்டு இருக்கறவங்க. மறதி(!)ன்றது மக்களுக்குப் பழகிப்போன ஒண்ணுன்னு அங்கேதான் தெரியவந்தது. காலையிலே, பொழுது விடிஞ்சவுடனே டூத் பேஸ்ட்லே ஆரம்பிக்கற இரவல், கடன் இதெல்லாம் ராத்திரி ப்ரெட்டோட முடிஞ்சிரும்.
அதென்ன ப்ரெட்?
சாரதா டீச்சருக்கு, ராத்திரி தூங்கறதுக்கு முன்னாலெ கொஞ்சம் சாப்புடணும். இல்லேன்னா தூக்கம் வராத கேஸ்.அது எதாவது பழமா இருக்கலாமா? ஊஹூம்....கூடவே கூடாது. ப்ரெட் தான் வேணும். ரெண்டே ரெண்டு ஸ்லைஸ்.ஒரு ஒம்பதே முக்காலுக்குப் பக்கம் அப்படியே ரூம் ரூமா வருவாங்க.அப்பெல்லாம் பத்துமணிக்கு லைட் ஆஃப் ரூல்ஸ்.
'யாரிட்டேயாவது ப்ரெட் இருக்கா?' இல்லைன்னு எப்பவும் சொல்ற 'புண்ணியவதி' இல்லேன்னே சொல்லிருவா.இருக்குன்னு சொல்ற அப்'பாவி'தான் மறக்காம வாங்கிவந்து வைக்கணும். ஆனா வச்சுக்கிட்டே இல்லேன்னு சொல்ல வாய் வருதா?
இதோ அடுத்த கேள்வி. 'எங்கே வாங்குனது?'
இன்னும் நேரம் இருக்கு, தப்பிக்க! வேற எந்தக் கடைப் பேரைச் சொல்லலாமுன்னு யோசிக்கறதுக்குள்ளே,
"சி.வி.கே பேக்கரிதானே?"
அதட்டுற குரலைக் கேட்டதும், ஆமாம்னு தலை ஆட்டறேன். சாரதா டீச்சருக்கு எப்பவும் ஒரு கம்பீரமான குரலும்,அலட்டான நடையும் இருக்கும். இருக்காதா பின்னே?அப்ப சினிமாவுலே நடிச்சுக்கிட்டுருந்த ஜெயசுதாவோட க்ளாஸ் டீச்சராச்சே . அதைச் சொல்லிச் சொல்லியே எங்க எல்லோருடைய மரியாதையையும் ஏகப்பட்ட அளவுலேசேர்த்து வச்சுருந்தாங்க.
"ரெண்டு ஸ்லைஸ் கொடும்மா, நாளைக்குத் திருப்பிக் கொடுக்கறேன். "
'ஆமாம். ப்ரெட் மட்டும் வாங்கிட்டுப்போறாங்களே, தொட்டுக்க என்ன செய்வாங்க? ஜாம் வாங்கி வச்சிக்கிட்டு இருப்பாங்க போல'ன்னு ஓடும் மனசுக்குள்ளே.
தினப்படி வேணுங்கறது எப்படி மறக்கும்? பஸ்ஸைவிட்டு இறங்குற உடனே ஏழெட்டுக்கடைங்க இருக்குதானே. ம்ம்ம்.........
சரி போட்டும், இதெல்லாம் பெருசா? இனி இருக்கு பாருங்க.
எல்லாரும் அரக்கப்பரக்க ஆஃபீஸ்க்குக் கிளம்பற மும்முரம். ஒரு ச்சின்னக் கவலை ரேகை எல்லார் முகத்துலேயும் ஓடுது. கையிலே எடுத்த ' நம்ம' புடவையை இன்னிக்கு 'நாமே' கட்டிக்கக் கொடுத்துவச்சிருக்கா?
இதோ வராங்க பானு . கையிலே ஒரு ப்ளவுஸ்.
ப்ளவுஸைப் பார்த்தவுடனே பலருக்கு நிம்மதி. அப்பாடா இன்னிக்குத் தப்பிச்சோம்.
"இந்தக் கலர்லே புடவை இருக்கா?"
ரூம்ரூமாப் போறதெல்லாம் ச்சும்மா. அவுங்களுக்குத் தெரியும் யார்கிட்டே இருக்குன்னு! அதான் மக்கள்ஸ்கட்டறப்ப பார்த்து வச்சுருப்பாங்கல்லே! 'டக்'னு ஆளைப் புடிச்சுருவாங்க.
புடவை கிடைச்சதும் அதுக்குத் தோதான ஆக்ஸெஸரீஸ் வேட்டை தொடரும். வளையல், செருப்பு, ஹேண்ட் பேக்னு.வெவ்வேற ரூம்லே இருந்து சம்பாரிச்சுருவாங்க. செண்ட்ரல் ஸ்டேஷன் பக்கத்துலே 'மூர் மார்கெட்டு'ன்னு ஒண்ணு இருந்துச்சுங்க. அங்கே எல்லா கலருலேயும் செருப்புங்க ரொம்ப மலிவாக் கிடைக்கும்.சொன்னா நம்ம மாட்டீங்க, ஜோடி அஞ்சு ரூவாதான் அப்ப!
ஃபிட்டிங் சரியா இருக்கணுமேன்னுதான் நம்ம பானு ப்ளவுஸ்ஸை மட்டும் தைச்சுக்கறது! அன்னிக்கு ராத்திரியே வாங்கிட்டுப் போனதெல்லாம் 'டாண் டாண்'னு உடமஸ்த்தர்களுக்கு வந்துரும்.கொடுக்கல் வாங்கல்லே கரெக்ட்டா இருந்தாத்தானே நாளை மத்தநாளுக்கு நல்லதுபாருங்க.
ஒருநாளைப்போல தினமும் எப்படி இவுங்களாலெ இந்த 'ஒழுங்கைக் கடைப்பிடிக்க முடியுது?
ஆனா ஒரு விஷயத்தைப் பாராட்டியே ஆகணும். 'விடா முயற்சி வெற்றி தரும்' ன்ற கொள்கைப்பிடிப்பு பானுவுக்கு இருந்துச்சுங்க. எக்ஸாக்ட் மேட்சிங் கண்டு பிடிச்சுருவாங்க. ஷீ வில் நெவர் செட்டில் ஃபார் லெஸ்!!!!
புடவை மட்டுமே புழங்குன காலம் என்றபடியாலே சரியாப்போச்சு. இப்ப பானு என்ன செய்வாங்க? துப்பட்டா மட்டும் வாங்கிக்கிட்டுச் சுரிதார் தேடுவாங்களோ?
---------
அடுத்தவாரம்: தாடி மாமா
நன்றி: தமிழோவியம்
Saturday, May 13, 2006
எவ்ரி டே மனிதர்கள் - 2
Posted by துளசி கோபால் at 5/13/2006 02:57:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
24 comments:
இந்த ட்ரிம்மர், ஹாம்மெர், ஸ்பானர், லாடெர் இதெல்லாம் இரவல் கேட்டு வாங்கிக்கிட்டுப் போய், கரெக்டா திருப்பிக் கொடுத்துருவாங்க இங்க!
ஆனா, ஒரு ரெண்டு அல்லது மூணு தடவைதான் நடக்கும்!
அப்புறமா, தன்மானம் தடுக்கும்!
'சிசி'யைத் தேச்சாவது, ஒண்ணை வாங்கிப் போட்டுருவாங்க வீட்டுல!
இத மாதிரியெல்லாம், உங்க ஊரிலயும் உண்டா?1
அந்த ப்ரெட் டீச்சர்!
அவங்களுக்கெல்லாம் நல்லத் தெரியும் உங்களைப் போல உள்ளவங்களோட இளகின மனசு!
வெரி இன்டெரெஸ்டிங் கரெக்டெர்ஸ்!
BTW, as I was typing the above , I 'discovered' that the word 'interesting' is perhaps the first word i figurred that types in Tamil exactly as you type in English!
பானு கதை ந்ல்லாயிருக்கே!
ஆமா அங்கிலேய அமைத்த சாதியம் தொடர் வரலாறு பார்த்தீங்களா?
interesting column...good observation and very good narration
SK,
17 வருஷம் நெய்பர்ஸ் இல்லாத வீட்டுலே இருந்தோம். ரெண்டு பக்கம் வீடு இருந்தாலும், ஒண்ணு க்ளினிக்
அடுத்தது யாரோ ஸ்டூடெண்ட்ஸ். அதாலெ ஒண்ணும் தெரியலை.
இப்ப வேற வீடு. இங்கே பக்கத்தூட்டுக்காரங்க ஒருக்கா ஷவல் மட்டும் கடன் வாங்கினாங்க. அதுவும்
நம்ம மஃப்பினுக்காக(-:
இந்த 'interesting' தட்டினா 'இந்தெரெச்டிங்' இல்லே வருது. உங்களுக்கு இண்டரஸ்டிங்'னு வருதா?
quite interesting!!!!
உதயகுமார்,
இன்னும் படிக்கலை. வீட்டுலே drive way வேலை
செஞ்சுக்கிட்டு இருக்கோம். அதனலெ கொஞ்சம் பிஸியாப் போச்சு.
சிவஞானம்ஜி,
இன்னுமா இங்கிலிபீஸு?
'கலப்பை'யாலே உழ வேண்டியதுதானே? என்ன தயக்கம்?
intere-sting
இன்டெரெஸ்டிங்
suratha unicode
என்னமோ சொல்ல வந்தேன் ஆனா மறந்து போச்சு. ஆனா எங்க இணையக்கோனார் மருத்துவர் சின்ன ஐயா அவர்கள் சொல்லிக் குடுத்த ஒரு பாடம் நல்ல நினைவிருக்கு. நம்ம பதிவிற்கு வந்து பின்னூட்டம் போடறவங்க பதிவில் போய் நாம கட்டாயாம் பின்னூடமிடணும்ன்னு சொன்னாரு. அவரு சொன்னாரு, நான் செஞ்சிட்டேன். :)
அக்கா, எங்கிட்ட இந்த வெள்ளை கலர்ல கருநீல பூ போட்டு ஒரு துப்பட்டா இருக்கு, அதுக்கு ஏத்த சுடிதார் இருக்கா உங்க கிட்ட?? ;) :)
இந்டரெஸ்டிங்க். பானு, இரவல் பானு. உங்களுக்குத் தான் இந்த மாதிரி ஆள்கிட்ட மாட்டிக்கிற நேரம் இருந்திருக்கு.எங்க பக்கத்து வீட்டுக்காரஙக என் வாக்கர் வாங்கிக்கிட்டு,
நான் 2 ஆம் தரம் விழுந்த போது கொடுக்கட்டுமான்னு கேட்டாங.
என்ன ஒரு 4 வருஷம் தா ஆச்சு
SK,
ஊஹூம். கலப்பையிலே உழும்போது வரலை. அப்புறமா 'சுரதா'லே போய்ப் பார்க்கறேன்.
கொத்ஸ்,
இதென்ன 'மொய்' எழுதறதா? மருத்துவர் இப்படியெல்லாமா ப்ரிஸ்க்ரிப்ஷன் கொடுத்துருக்கார்?
பொன்ஸ்,
அக்காகிட்டே இல்லாத கலரா? ஆனா பழைய அக்கான்னா கவலை இல்லை. இப்ப இருக்கற
சைஸுக்கு 'ரெண்டு' பொன்ஸ் உள்ளே நுழையலாம்:-))))
மானு,
சரியான ஆளா இருப்பாங்க போல இருக்கே. நம்ம பானு எவ்வளவோ தேவலாம். இல்லே?
அதுசரி. பத்திரம். விழாம இருங்க.
interesting tulsi,..enjoyed. Had a good laugh ! as usual good naration. sorry for petering,...: )
இரவல் ஒருபக்கம்் என்றால் பொசஸிவ்னஸ் அடுத்தப் பக்கம். அப்பா புதிய சைக்கிள் வாங்கிக் கொடுத்திருந்தாலும் நான் பள்ளிக்கு எடுத்துச் செல்ல மாட்டேன்; ஏனென்றால் தோழர்கள் ஓசி கேட்பார்களே என்று. :)
How to say No என்று புத்தகங்களை கண்டபிறகுதான் இது எல்லாருக்கும் இருக்கும் பலவீனம் என்று புரிந்து கொண்டேன்.
i dont have even the basic knowledge of computer...i am trying...give me some time
இதெல்லாம் ஹாஸ்டல்லெ சகஜமுங்கோ
அட, நம்ம ஜெயந்தி!
வாங்க வாங்க. பீட்டர் விட்டாலும் கவலை இல்லீங்க.
அவரும், அதாங்க நம்ம பீட்டரும் இப்ப நம்ம எல்லோரோடும் ரெண்டறக் கலந்துட்டாருங்களே!
மணியன்,
ஆமாங்க அந்த No லேயும் இங்கே நம்ம புள்ளைங்களுக்கு அதைச் சொல்றப்ப
which part of the NO, you don't understand னு கேக்கும்படியாவும் ஆயிருது:-)))
சிவஞானம்ஜி,
உங்களுக்காக ஒரு பதிவு போட்டே ஆகணும் போல இருக்கேங்க.
இன்னிக்கு 'அன்னையர் தினமாச்சே'. அதாலே முழு ஓய்வு( அப்பாடா...)
நாளைக்குப் போட்டுறலாம்.
மஞ்சூராரே,
இப்ப இது இன்னும் மோசமாயிருச்சுன்னு கேள்வி. அதுவும் ஆண்கள் ஹாஸ்டலிலே
ஷூ மொதக்கொண்டு இரவல்தானாமே! சினிமாவுலே வேற காமிக்கறாங்க!
ஆகா! கடன் வாங்கியே வாழ்க்கை ஓடீருமா......கடைசியாக் கேட்ட கடன் என்ன? யோசிச்சுப் பாக்குறேன்...சட்டுன்னு நெனவு வர மாட்டேங்குதே....
முடிஞ்ச வரைக்கும் கடன் வாங்குறத நிப்பாட்டனும். ரொம்பவுமே தேவைப்பட்டால் ஒழிய அதச் செய்யக் கூடாது.
ராகவன்,
அதான் 'கடன் அன்பை முறிக்கும்'னு சொல்லி இருக்கே.
கடன் கொஞ்சம் பேஜார்தான்.
ச்சும்மவா சொன்னாங்க 'கடன்பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான்.....//னு.
ஆனா எதுக்கும் அசராமக் கடன் வாங்கறவங்களும் இருக்காங்களே!
Post a Comment