Friday, May 19, 2006

கனவு பலித்ததம்மா!!!!

'...................... போல் கனவு கண்டால் உங்களது தேவையற்ற முயற்சிகள் யாவும் தோல்வி அடையும்.உங்களதுஇன்றியமையாத தேவைகள் யாவும் உங்களுடைய முயற்சியை எதிர்பாராமலே நிறைவேறிக் கொண்டு வரும்.உங்கள் கண்ணுக்குத் தெரியாத ஒரு சக்தி, உங்களுடைய வாழ்க்கையை ஒழுங்குபடுத்திக் கொண்டு வருவதை நீங்களே உணர்வீரகள்.'


ஒரே கனவு அடிக்கடி வர்றதாலே அதுக்கு அர்த்தம் என்னன்னு தமிழ்வாணனின் 'கனவுகளுக்குப் பலன்' பார்த்தே மனப்பாடமாகிக் கிடக்கு. இந்தப் புத்தகத்தை தலைமாட்டுக்குப் பக்கத்துலே வச்சுக்கணுமாம்.அப்பத்தானே மறக்காமப் பலன் பாக்க முடியும்.


புத்தகம் என்னவோ 20 வருசப் பழசு. அப்ப 21 ரூபாய்க்கு வாங்குனேன். நம்ம கூட்டாளிங்களுக்கெல்லாம் கனவுப்பலன் சொல்றது நாந்தான். அவுங்க கேக்கறப்பப் புத்தகம் பார்த்துட்டு, நல்ல பலனா இருந்தா அப்படியே சொல்றதும்,கெட்ட பலன்னா அதை அப்படியே மாத்தி நல்ல கனவுன்னு என் வழிப்படி இட்டுக்கட்டி ரீல் விடுறதும்தான் பழக்கம்.( ஷ்ரேயா, உங்களுக்கு இதுவரை சொன்னதெல்லாம் ரீல் கிடையாது)


கனவு எல்லாம் நாம ப்ளான் பண்ணியாங்க வருது? அது, தானே அப்படியே வர்றதுதானே? அதுக்குப் பலன் கெட்டதாப் போட்டுருந்து, அதை அப்படியே நாம் சொல்லப்போக,அதை நினைச்சு மனசுக் கஷ்டப்பட்டுக்கிட்டு இருந்தா, ஒருவேளைஅப்படியே நடந்து போச்சுன்னா?


நான் ச்சின்னப்புள்ளையா இருந்த காலத்துலேயும் தினமும் ஒரே கனவுதான் வரும். அது பறக்கரது. எனக்கு ரெக்கை எல்லாம் இருக்காது. ஆனா... என்னைத் துரத்திக்கிட்டு வர்ற (தீயசக்தியோ?) ஏதோ ஒண்ணுகிட்டே இருந்து தப்பி ஓடுவேன். ஓடமுடியாதஇடம், இல்லேன்னா அது(!) கிட்டே நெருங்கி வர்ற சமயமுன்னா,அப்படியே ஆகாயத்துலே எழும்பி போய்கிட்டே இருப்பேன்.ஒரு நாளும் அதன் கையிலெ அகப்பட்டதே இல்லை. என்ன, ராத்திரியெல்லாம் ஓடோ ஓடுன்னு ஓடி, காலையிலே எழுந்திரிக்கறப்பக் காலெல்லாம் ஒரே வலியாவும் களைப்பாவும் இருக்கும். இந்தக் கனவு ஏறக்குறைய என்னோட22 வயசு வரை வந்துக்கிட்டே இருந்தது.


அதென்ன, கரெக்ட்டா 22 வயசுன்றேனா? அதுக்கப்புறம்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேனே! அப்ப இருந்து கனவுகள் வேறமாதிரி ஆனது. இப்ப அடிக்கடி வர்றது என்னன்னா , கோபாலோட கழுத்தைத் திருப்பாச்சியாலே ஒரே வெட்டு. அதுக்கப்புறம் 'ஐய்யோ இப்படிக் கொன்னுட்டேனே' ன்னு அழுகை. கனவுன்னு இல்லாம நிஜமாவெ சத்தமா அழுவேனாம். இவர் வேற ' ராத்திரியெல்லாம் தேம்பித் தேம்பி என்ன அழுகை? மனுசன் தூங்க வேணாமா?'ன்னு திட்டிக்கிட்டே எழுப்புவார். 'உங்களை வெட்டிட்டேன்'ன்னு சொல்லிக்கிட்டே இன்னும் அழுதுகிட்டே இருப்பேன். சிலநாட்களிலேஅழுது அழுது முகமெல்லாம் வீங்கி , கண்ணீராலே தலகாணி எல்லாம் நனைஞ்சிரும்.


இப்பெல்லாம் கனவோட 'ஸீன்' மாறிப்போச்சு. வீச்சரிவாள் வெட்டறது எல்லாம் எப்பவாவதுதான்:-)))ஒரு பத்து வருசகாலமா வேற ஒண்ணு, 'கோவிலுக்குப் போய் ஒரு தெய்வத்தைக் கும்பிடுறது.'இதுக்குத்தான் நான் முதல் பத்தியிலே சொன்ன பலன்.


சரி, நம்ம நியாயமான ஆசைகள் நிறைவேறட்டுமுன்னு ச்சும்மா இருந்துடறதுதான். போனமாசம்,எங்க இவர் ஆஃபீஸ் வேலையா ச்சீனாவுக்குப் போயிட்டு வந்தார். முந்தியெல்லாம் இவர் திரும்ப வர்றநாளுக்கு, ஏர்ப்போர்ட் போய்க் கூட்டிக்கிட்டு வர்றதுதான். எப்பவாவதுன்னா சரி. போலாம், வரலாம். இதுமாசம் மூணுதடவைன்னு ஆனபிறகு 'நீங்களே டாக்ஸி'யிலே வந்துருங்க'ன்னு சொல்லிட்டேன். இப்ப ஏழெட்டு வருசமா போறதும் கூட டாக்ஸின்னெ ஆயிருச்சு.


அன்னிக்கு, இவர் வர்ற நாள். ஃப்ளைட் சரியான நேரத்துக்கு வருதான்னு, ஏர்ப்போட்டுக்குப் ஃபோன் செஞ்சு கேட்டுக்கிட்டுச் சமையலை செஞ்சுக்கிட்டு இருந்தேன். கொஞ்ச நேரத்துலெயே, இவர் கூப்புட்டு, வீட்டுக்குவந்துக்கிட்டு இருக்கேன்'னு சொன்னார். அதே போல மூணு நிமிஷத்துலே வந்து இறங்கிட்டார். உள்ளேநுழைஞ்சதும், முதல்லே இதைப் பாரு'ன்னு சொல்லி ஒரு ச்சின்னப் பொதியை கேபின் பேக்லே இருந்துஎடுத்துக் கொடுத்தார்.


பிரிக்கறப்பவே வாசனை தூக்குது. உள்ளே....... ஹை! மசால்வடை!!!!!

ஐய்யய்யோ, மசால்வடை! எப்படிக் கொண்டுவந்தீங்க? நாய் பிடிக்கலையா?ன்னு கூவறேன்.


"பிடிச்சுருச்சே"

சிங்கை வழியாத்தானே இங்கெ வரணும். அதனாலே ட்ரான்சிட்லே இருந்தாலும், சிட்டி வரை (என்ன பொல்லாதசிட்டி, லிட்டில் இண்டியா வரை) ஒரு ரெண்டு மணிநேரமாவது வந்து சுத்திட்டுப் போறதுதான் வழக்கம். அப்படி வந்துட்டுப் போறப்ப கோமளவிலாஸ் ( பழசு. இதுதான் நமக்கு ஆகிவந்த இடம்) போய் சாப்புட்டப்ப, சர்விங் கவுண்ட்டருக்கு வடையைக் கொண்டுவந்து நிறைச்சாங்களாம். என்ன வடை? ன்னு கேட்டப்ப, அது நம்ம வடை!!!!


ஆனது ஆகட்டுமுன்னு துணிஞ்சு ஒரு நாலுவடையைப் பேக் செய்யச் சொல்லி வாங்கிட்டு வந்துட்டார். இங்கே பெரிய பெட்டியை எடுக்க 'பெல்ட்'கிட்டே நிக்கறப்ப, நாய் (வழக்கம்போல அப்படியே வாசனை புடிச்சுக்கிட்டு வர்றது,) இவர் கிட்டே வந்து 'டக்'னு நின்னுருச்சாம். நாயோட இருந்த அம்மா என்ன வச்சுருக்கீங்கன்னு கேட்டதுக்கு இவர் ம. பொதியைக் காமிச்சாராம். வெங்காயவாசனை தூக்கலா இருந்துருக்கு. இங்கே நம்ம ஊர்ஏர்ப்போர்ட் மோப்ப நாய்கள், பழ வாசனை இருந்தாவே புடிச்சுரும். ஒருதடவை, பைக்குள்ளெ 'முந்தி வச்சிருந்த' ஆப்பிள் வாசனையவே புடிச்சதாச்சே இதுங்க.


அப்புறம் சமைச்ச பதார்த்தமுன்னு சொன்னதும்( அதான் ஏற்கெனவே டிக்ளேர் செஞ்சு எழுதிட்டாருல்லே) சரின்னுவுட்டுட்டாங்களாம்.


வாங்கி 13 மணிநேரம்தானே ஆயிருக்கு. அதுக்குள்ளே கொஞ்சம்(???!!!!) ஆறிப்போச்சு. இதுக்கெல்லாம் அசர முடியுமா? சூடான எண்ணெயிலே ஒரு நிமிசம் போட்டு எடுத்தேன்.


ஆஹா........... மணக்க மணக்க கரம் கரம் ம .....ம.....ம..... மசால் வடை!!


........உங்களது இன்றியமையாத தேவைகள் யாவும் உங்களுடைய முயற்சியை எதிர்பாராமலே நிறைவேறிக் கொண்டு வரும்...................


கனவு பலித்ததம்மா!!!

56 comments:

said...

ஏங்க உங்க வீடல மைக்ரோவேவ் ரிப்பேரா? வடைய திருப்பி சுட்டா கொலஸ்ட்ரால் இன்னும் ஜாஸ்தி ஆயிடும் ஜாக்கிரதை.

அப்புறம் சொல்ல மரந்துட்டேன். நியுஸ் பாத்தேன். வாக்கிங் போறதா இருந்தா ஜாகிரதையா போங்க, கத்தியால குத்திடபோறாங்க (கோபால கூட ஏதொ ப்ளான் வெச்சுருக்காரு போல)..

பிகு: பேர மாத்திட்டேன். நீங்க பாட்டுக்கு என்னோட பின்னூட்டத்த வெட்டீடாதீங்க, ஏற்கனவே அருவா அது இதுன்னு கனவு வேர.

said...

:oD

//கெட்ட பலன்னா அதை அப்படியே மாத்தி நல்ல கனவுன்னு என் வழிப்படி இட்டுக்கட்டி ரீல் விடுறதும்தான் பழக்கம்//வரிய வாசிச்சதும் "பக்"னு இருந்துது!!
//ஷ்ரேயா, உங்களுக்கு இதுவரை சொன்னதெல்லாம் ரீல் கிடையாது)// அப்பாடா!!

"அத்தியாவசிய"ன்றீங்க. குமரன் (அல்லது ராகவனா?) வந்து "இன்றியமையாத" என்று சொல்லுங்க என்று சொல்லப்போறார். பாத்து!

said...

என் கண்களுக்கு என்னமோ ஆகிப்போச்சு. இல்லாததெல்லாம் வாசிக்கறேன்!!! வைத்தியரைக் கூப்பிடுங்கப்பா!! :O)

said...

சுரேஷூ,

கிவியன்??????????????

இப்படிப் பேரை மாத்திட்டேன்னு சொன்னா உடனே எப்படி நம்பறதாம்? 'கெஸட்'டுலே வரலையேப்பா(-:

அங்கே போய்ப் பார்த்துட்டுத்தான் 'பப்ளிஷ்' செஞ்சேன்.:-))))

மைக்ரோவேவ் லே சுடவச்சா, அந்த 'க்ரிஸ்ப்னஸ்' போயிருமே. க்ரஞ்ச் க்ரஞ்ச்
காலங்காலமாக் காத்திருந்ததுக்குக் கொஞ்சம் கொலஸ்ட்ரால் கூடுனாக் கூடட்டும்னு விடறதுதான்.

ஒரே ஒருதடவை தின்னுக்கறனே,ப்ளீஸ்

said...

ஷ்ரேயா,

நான் பயந்தே போயிட்டேன், இதை( இந்தப் பதிவை)எல்லாம் படிக்கிறேனேன்னு சொல்லிட்டீங்களோன்னு.
அப்பாடா.... நிம்மதி ஆச்சு.

கண்ணுலே கோளாறா? குமரன், ராகவனையெல்லாம் கூப்புட்டதைப் பார்த்தா அப்படித்தான் தோணுது:-))))

said...

//இப்பெல்லாம் கனவோட 'ஸீன்' மாறிப்போச்சு. வீச்சரிவாள் வெட்டறது எல்லாம் எப்பவாவதுதான்:-)))//

இன்னும் இருக்கு... மறந்துடல சொல்லிபுட்டேன்..... அதான சொல்ல வரீங்க?

:-)

said...

உங்களது இன்றியமையாத தேவைகள் யாவும் உங்களுடைய முயற்சியை எதிர்பாராமலே நிறைவேறிக் கொண்டு வரும்...................

என்னங்க நீங்க.. இன்றியமையாத தேவைகள்ல மசால் வடை திங்கறதும் சேர்த்தியா என்ன?

இருந்தாலும் ரொம்பத்தான் குசும்பு ஒங்களுக்கு.. சிங்கப்பூர் போயி மசால் வடை... தேவைதான்:)

said...

நன்மனம்,

அதே அதே:-))

பாயிண்ட்டைக் 'கப்'னு பிடிச்சிட்டீங்க.

said...

நன்மனம் - கோபால் அங்கிள் சிங்கப்பூ..ஊ..ஊ..ர் {சிட்னியிலே ஒரு மூலையிலே புகையுதே..;O)} போய் துளசிக்காக மசால்வடை வாங்கிட்டு வர்றார் பாருங்க! இதாங்க பாசம்/அன்பு/காதல்ங்கிறது.
(இதெல்லாம் சிலபஸ்லே சேத்துக்கச் சொல்லி இளவஞ்சிகிட்டெ சொல்லணும்.)

said...

சொல்ல வந்ததுலே பாதி விட்டுப்போச்சு!! இன்னைக்கு நமக்கு பின்னூட்ட நேரம் சரில்லேன்னு நினைக்கிறேன்.

நன்மனம் - துளசி இன்னும் கனவு காண்றாங்க. ஆனா பாருங்க கோபால் அங்கிள் சிங்கப்பூ..ஊ..ஊர்(சிட்னியிலே ஒரு மூலையிலே புகையுதே..) போய் துளசிக்காக மசால்வடை வாங்கிட்டு வர்றார். பாருங்க! இதாங்க பாசம்/அன்பு/காதல்ங்கிறது.
(இதெல்லாம் சிலபஸ்லே சேத்துக்கச் சொல்லி இளவஞ்சிகிட்டெ சொல்லணும்.)

(கோச்சுக்காதிங்க துளசிம்மா. சும்மாதான். smile please)

said...

ஆமாம், கனவு வராதவர்களுக்கு என்ன செய்வது ?

யாரங்கே,அடுத்து TBRக்கு நியூசி போஸ்டிங் போடுங்கப்பா, சிங்கை வடை எப்படி இன்றியமையாதது எனத் தெரியட்டும் :)))

said...

டிபிஆர்ஜோ,

உங்களுக்கென்னங்க, 'ஊரைச்சுத்தி' மசால்வடையா இருக்கும். எங்கமாதிரி காஞ்சவங்களுக்குத்தானே
அதோட அருமை தெரியும்.

பாருங்க, நம்ம மணியன் உங்களுக்காக ரெகமெண்ட் செஞ்சுருக்கறதை:-))))

said...

மணியன்,

ரொம்ப டேங்க்ஸ்ங்க .


அது எப்படிங்க கனவு வராதவங்கன்னு சொல்றீங்க? அப்படி ஒண்ணு இல்லவே இல்லையாமே.
பலருக்கு, 'என்ன கனவு'ன்றது ஞாபகம் இருக்காதாம்.
எனக்கும் இதர கனவுகள் வந்தாலும் 'என்னமோ வந்துச்சு' ன்றதைத் தவிர நினைவு இருக்கறதில்லைங்க.

அருவா மட்டுமே நினைவுலே :-)))))

said...

ஷ்ரேயா,

எனக்கென்ன கோபம்?
பின்னூட்டம் 4 # கூடி இருக்கு:-))))

இளவஞ்சிகிட்டே சொல்லிட்டீங்களா?

said...

//கெட்ட பலன்னா அதை அப்படியே மாத்தி நல்ல கனவுன்னு என் வழிப்படி இட்டுக்கட்டி//

பீர்பால் மாதிரின்னு சொல்லுங்க.

said...

நீங்களுமா துளசி? வெட்டரதெல்லாம் எனக்கு மட்டும் என்று நினைத்தென். இத்தனை பேரோட ப்ரார்த்தனை நிறைவேறிவிட்டது. அடுத்த விஷ் என்ன என்று இப்போவே போஸ்ட் போடவும்.10 நாளில் நிறைவேறூம்.எனக்கு கொஞச வருடங்கள் முன்னால் வரை மாடி டெரஸ் வழியா யாரோ உள்ள வர மாதிரி கனவு வரும். நான் எழுந்து பெப்பே நு போடற சத்தத்திலே இவர் எழுந்து நல்ல முகத்திலே தண்ணி தெளிச்சு விடுவார். அப்புறம் ஈஜிப்ட் பத்தின புத்தகம் படிக்கிறதை எல்லாம் விட்டு விட்டேன். இப்போ கூட பசங்க மறந்து கூட மம்மினு சொல்லிட மாட்டாங்க.

said...

என்னங்க துளசி நேற்று மட்டம் பொட்டுடீங்க?
11-30 க்கு துளசிதளம்; 12 க்கு திரும்பிப்பார்க்கிரேன்; 2-00க்கு சூரியன் னு டைம்டேபிள்போட்டு படிக்ரவன் நான் நேற்றுந் நீங்கள் மட்டம்...நாளையும் மறு நாளும் டிபிஆர் இடுகை போடமாட்டார்
தினம் தினம் எழுதுங்க மேடம்

said...

ஆஆஆஆஆஆஆஆஆஆஆழ் மனதிலெ
அமுங்கி கிடப்பதுதான் கணவா வருமாமே...மெய்யாலுமா?

said...

தம்மாதுண்டு மசால் வடைக்கு இவ்வளவு பெரிய பில்டப்பா.தமிழ்நாட்டுல இருந்துப்ப மெகா சீரியல் பாத்திங்களா என்ன? அதும் 13 மணி நேரம் தாண்டிய வடைக்கு இது எல்லாம் டூ மச்.............

said...

சிவமுருகன்,

பாதித்துன்பம் மனசுலே வர்ற பயத்தாலே தானே? அதான் அப்படிச்
சொல்லி கவலையை லேசா ஆக்கிடறது.

நம்ம வாயாலே ஏங்க கெட்டதைச் சொல்லணும்? இல்லையா?

said...

மானு,

நீங்களும் ஈஜிப்ட் படிக்கிற ஆளா?

அங்கே பூனை, ஸ்வாமி. அதாலே எனக்கும் ரொம்பப் பிடிக்கும்.

மம்மின்னதும் ஞாபகம் வருது. லண்டன் ப்ரிடிஷ் ம்யூஸியத்துலே ஒரு லெட்டர் செட்
பார்த்தேன். மம்மி டிஸைன்லே ஆன்வெலப், ரைட்டிங் பேப்பர்ஸ் நல்லா இருந்தது.

ஊருக்குக் கொண்டு போய் சொந்தக்காரப் பிள்ளைங்களுக்குக் கொடுக்கலாமுன்னா, அவுங்க
அம்மாசொன்னாங்க, 'மம்மி' இருந்தா வீட்டுக்கு அச்சான்யமாம்! வாயைத் திறக்காம திருப்பிக்
கொண்டுவந்துட்டேன்:-))))

said...

என்னங்க சிவஞானம்ஜி,

சரியாப் போச்சு போங்க.

முந்தி நம்ம கால்கரி சிவா சொன்னாப்புலே, தினசரியா நடத்தறோம்?:-))))

நேரம் இருக்கறப்ப எழுதறதுதான். தோணும்போது போஸ்டிங் போடறதுதான்.
அப்பப்ப வீட்டு வேலையும் கொஞ்சம் செஞ்சுக்கணுமில்லையா?:-))))


ஏங்க ஆழ்மனசுலே, கோபாலை வெட்டணுமுன்னு ஆசை இருக்கா எனக்கு?
அடக் கடவுளே! இந்த பின்னூட்டத்தை அவர்கிட்டே இருந்து மறைக்கணுமோ?:-))

said...

நாகை சிவா,

என்ன இது? மசால்வடையின் மகாத்மியம்(அருமை பெருமை) தெரியாமயா சூடான்( இடம் சரியா?) போய்
உக்காந்துக்கிட்டு இருக்கீங்க?

வேணுமுன்னா 'எலி' யைக் கே(கெ)ட்டுப் பாருங்க.

said...

சிவஞானம்ஜி,

சொல்ல மறந்துட்டேன்.

//தினம் தினம் எழுதுங்க மேடம் //

இப்படி ஒரு ரசிகரா நீங்க?
புல்லரிச்சுப் போச்சுங்க.

said...

//ஏங்க ஆழ்மனசுலே, கோபாலை வெட்டணுமுன்னு ஆசை இருக்கா எனக்கு?
அடக் கடவுளே! இந்த பின்னூட்டத்தை அவர்கிட்டே இருந்து மறைக்கணுமோ?:-))//

அவங்க சாதாரணமா ஒரு கேள்வி கேட்டா ஆமாம்/இல்ல னு பதில் சொல்ல வேண்டியது தானே, அத விட்டுட்டு நீங்களே வந்து விழறீங்களே:-))

அவங்க அந்த அர்த்தத்துல தான் கேட்டாங்கனு நெசமாவே உங்க பதில பாத்ததுக்கு அப்புறம் தான் தெரியும்:-))

said...

நன்றி ங்க

said...

டீச்சர் சிங்கை "கோமள்விலாஸ் " நியூசியில் உதயம்னு கனவு கண்டேன் . பலிக்குமான்னு பாத்து சொல்லுங்க. இல்லாட்டா நேரா போயி பேசிட்டு வந்திடுறேன்.


போன மாசம் கோபால் மாமா வந்தப்ப இதோ ஒரு நிமிஷம் இருங்கன்னு கோமளவிளாஸுக்குள்ளே போனாரே !மசால் வடைதான் சங்கதியா!

said...

துள்சிங்க,

எப்படிங்க இப்படியெல்லாம் மனுசனப் பத்தி படிச்சி வைச்சுருக்கீங்க...

//பாதித்துன்பம் மனசுலே வர்ற பயத்தாலே தானே? அதான் அப்படிச்
சொல்லி கவலையை லேசா ஆக்கிடறது.//

ரொம்ப உண்மைங்க அது. அப்புறம் கனவுகள் வந்து ஒருத்தருடைய மனக் கண்ணடி மாதிரின்னு நினைக்கிறேன். அதுக்காக எல்லாம் உண்மையா போகணும்மின்னு பொருள் கிடையாது.

நீங்க பறக்கிரமாதிரி கனவு கண்டா நீங்க ஹெல்த்திய திங்கிங் குட்டுன்னு பொருளமா, அப்படியா?

தெகா.

said...

நன்மணம், நான் அந்த அர்த்ததிலெ கேட்கலே....பொதுவா கணவுகள் பற்றி அப்படி ஒரு கருத்து நிலவுகின்றது

said...

யோகன்,

நீர் இன்னும் கல்யாணம் கட்டலையா? ( இல்லேன்னு மனசு சொல்லுது)
ஷ்ரேயாவோட பின்னூட்டத்தைப் படிச்சீரா?( அவுங்க கல்யாணம் கட்டுனவுங்க)
மசால்வடையை பார்க்காதீரும். அதுக்குப்பின்னாலே இருக்கற அன்பு, பாசம், காதல் இதெல்லாம்
கண்ணுலேயும், கருத்துலேயும் படலையோ?

சீக்கிரம் போங்க இளவஞ்சியோட வகுப்புக்கு. அங்கே கூட்டம் அலை மோதுதாம்.:-)))))


அதுசரி, புருனி மன்னர் விஷயம் புருடாதானே?

said...

நன்மனம்,

இது என்ன செய்தித்தாளா? அப்படியே மேலோட்டமா படிச்சுக்கிட்டே போறதுக்கு?
இது ப்ளொக் ஐயா ப்ளொக். ஒவ்வொருத்தரும் எப்படியெல்லாம் மூளையைக் கசக்கிக்கிட்டு
எழுதறாங்க தெரியுமா? இதை எப்படியெல்லாம் படிக்கணுமுன்னா, ரெண்டு வரிகளுக்கு இடையிலும்
கூடப் படிக்கணும்.

யாரும் இங்கே லேசுப்பட்டவங்க இல்லை ஐயா. புரிஞ்சாச் சரி:-)))))

said...

சிவஞானம்ஜி,
நன்றியா?
ம்ம்ம் இருக்கட்டும் இருக்கட்டும்.....:-))))

said...

சிங்.செயகுமார்,

உங்க கனவு பலிச்சாலும் பலிக்கும். நானே ஃப்ராஞ்சைஸ் எடுக்கலாமான்னு இருக்கேன்:-)))

said...

வாங்க தெ.கா.

கனவைப் பத்தியெல்லாம் ஆராய்ச்சிகள் இன்னும் நடந்துக்கிட்டு இருக்குதானே.'மரணத்துக்குப் பின் என்ன'ன்னு
தெரியாம இருக்கற ரகசியம் மாதிரி இதுவும் கூட ஒரு ரகசியம்தான்.

பகல் கனவுக்கு வேணா அர்த்தம் சரியாச் சொல்லிறலாம்:-)))))

said...

துளசி அக்கா!

//என்னைத் துரத்திக்கிட்டு வர்ற (தீயசக்தியோ?) ஏதோ ஒண்ணுகிட்டே இருந்து தப்பி ஓடுவேன். ஓடமுடியாதஇடம், இல்லேன்னா அது(!) கிட்டே நெருங்கி வர்ற சமயமுன்னா,அப்படியே ஆகாயத்துலே எழும்பி போய்கிட்டே இருப்பேன்.ஒரு நாளும் அதன் கையிலெ அகப்பட்டதே இல்லை. //

//அதென்ன, கரெக்ட்டா 22 வயசுன்றேனா? அதுக்கப்புறம்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேனே! //

கல்யாணம் பண்ணினவுடனே சார் வந்து அதை சண்டை போட்டு வெரட்டிட்டாரா :-)))

said...

ஆஹா! மசால் வடை கெடக்கிறதுக்குக் கூட கனவு பலன் இருக்கா? இந்த புத்தகத்தைப் பத்தி ரெண்டு நாளைக்கு முன்னாடி தான் துபாய்ராஜா சொன்னாரு.

அக்கா...கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு குட்டிக் குரங்கு என் தலைமுடியைப் பிடிச்சு இழுக்கற மாதிரி ஒரு கனவு...இதுக்கு எதாச்சும் பலன் இருக்கா? எதயும் தாங்கும் இதயம் தான்...எதுவா இருந்தாலும் சொல்லுங்க.
:))

said...

சிவா,

அதேதான். சார் விரட்டிட்டார். இப்ப சாரை நான் விரட்டுறேன்:-))))

said...

கைப்புள்ளெ,

இதுக்கு எதுக்குக் கனவுப் புத்தகத்தைப் பார்க்கணும்?

உங்களுக்குக் கல்யாணம் ஆயிருந்துச்சுன்னா, குழந்தை பிறந்து அது உங்க தலைமுடியை இழுக்கப்போகுது.

கல்யாணம் இன்னும் ஆகலைன்னா,
ஆனப்புறம் பொறக்குற குழந்தை இதையேதான் செய்யப்போகுது.

அம்புட்டுதான்:-)))))

said...

மசால வடை கொண்ட தங்கத்தலைவி வாழ்க.

கனவுக்குப் பலன் சொல்லும் கனவுத் தலைவி வாழ்க.

சிங்கப்பூர் வடையை நியூசிலாந்திற்கு கொண்டு வந்த தங்கத்தாரகை வாழ்க.

(ம்ம்ம்...இங்க சென்னைலயும் மசாலா வடைக கிடைக்குது. சின்னச் சின்னக் கடைகள்ள... பெங்களூர்ல மத்தூர் வடா-ன்னு ஒன்னு கிடைக்கும். ஆமவட மாதிரிதான். ஆனா பெருசா தட்டமா இருக்கும். பெங்களூர்ல இருந்து மைசூர் போற வழியில இருக்குற மத்தூர்ங்குற ஊர்ல கண்டுபிடிச்ச வடையாம். அதுக்கு என்ன அடிதடி தெரியுமா?)

said...

//கல்யாணம் இன்னும் ஆகலைன்னா,
ஆனப்புறம் பொறக்குற குழந்தை இதையேதான் செய்யப்போகுது.//

நம்ம கனவுக்கு இப்பிடி ஒரு பலனா? ஐயோ...எனக்கு வெக்கம் வெக்கமா வருதே?
:)))-

said...

////கெட்ட பலன்னா அதை அப்படியே மாத்தி நல்ல கனவுன்னு என் வழிப்படி இட்டுக்கட்டி ரீல் விடுறதும்தான் பழக்கம்//

இதயும் பாத்துட்டேன்.
:))-

said...

சின்ன வடை - பெரிய தத்துவம்...ம்ம்.. சில 'பெருசு'களாலதான் இதெல்லாம் முடியும். வேற சிலதுகளும் இருக்குதுகளே..!

said...

ராகவன்,

அதென்ன ச்சென்னை போனதும் 'கோஷங்கள்' தானா வருதா? :-)))))

அதான் டீக்கடையிலே தின்ன முடியலையேப்பா(-:

மத்தூர் வடை ரெஸிபி இருக்கா?

said...

கைப்புள்ளெ,
எப்படியோ சந்தோசமா இருந்தாச் சரிதானே?
என்னா நாஞ்சொல்றது?:-))))

said...

நல்லபடியா சாதம் கிடைக்க என்ன மாதிரி கனவு காணனும்க்கா?? :))

said...

பொன்ஸ்,
என் தங்கமே...
இதுக்கு என்ன செய்யணுமுன்னா...

சமைக்கறப்பக் கனவு காணாம, ஒழுங்காக் கவனமாச் சமைச்சாலே நல்ல சாதமாக் கிடைச்சிரும்:-))))

ஊருக்கெல்லம் போய் வந்தாச்சா?

பூனாவுலே எங்கே? தனிமடல் அனுப்புங்கோ விவரமாக.

said...

ஆமாங்க தருமி,

எல்லாம் பூஜ்ஜியத்துக்குள்ளே ராஜ்ஜியம் தான். இல்லீங்களா?

said...

அக்கா,
பூனா போய்வந்தது ரொம்ப பழைய கதைக்கா.. இப்போ கடல் கடந்து எங்கயோ வந்து உட்கார்ந்திருக்கேன்.. நம்ம பக்கத்துக்கு வந்து பாருங்க.. (லிங்க் கொடுத்தா விளம்பரமாகிடப் போகுது :-D ). அதைப் பார்த்தீங்கன்னா, நான் சாப்பாட்டுக்கு எத்தனை கனவு காணறேன்னு புரியும்.. :)

said...

துளசி மேடம், என்னோட இந்த கனவுக்கு உண்மையான பலன் சொல்லுங்களேன். please!

said...

ஹலோ கோமளவிலாஸா..10 மசால் வடை பார்சல்!

said...

அருள் குமார்,

எல்லாம் இந்த சினிமாவாலெ வந்த வினை. அநியாயத்துக்கு சண்டைக் காட்சிகளை வச்சு, மனுஷனோட தூக்கம் போச்சு.

சரி, பலனுக்கு வர்றேன்.

உங்க ஆற்றலை நீங்கள் பயனற்ற துறைகளில் செலவு செய்கிறீர்கள்( ஐய்யய்யோ இந்த ப்ளொக் எழுதறதைச் சொல்றாங்களா?) அதனால் பலருடைய மனக்குறைக்கு ஆளாகிறீர்கள். இப்படியே போனால் அப்புறம் தேவையான நேரத்தில் நண்பர்கள்கூட உதவி புரியத்தயங்குவார்கள். அதனால் உங்கள் போக்கை மாற்றிக்கொள்ள வேணும்.

said...

ஜோ,
ஒரு ஆளுக்கு இப்படி 10 வடையா? உங்களுக்கே அநியாயமாத் தெரியலையா?:-)))

said...

//ஜோ,
ஒரு ஆளுக்கு இப்படி 10 வடையா? உங்களுக்கே அநியாயமாத் தெரியலையா?:-)))//

துளசியக்கா,
ஒரு ஆளா! நம்ம வீட்டுல தற்காலிகமா வந்திருக்கிற அப்பா,அம்மாவ சேர்த்து 5 உருப்படி இப்போ.

said...

தம்பி ஜோ,

அப்படியா விஷயம். சரி. ஆளுக்கு ரெண்டுன்னு வச்சுக்கலாம். ஆனா பச்சைக் குழந்தை வடை சாப்புடாதேப்பா:-))

என் பேரைச் சொல்லி நீங்களும், அப்பாவும் ஆளுக்கொண்ணு எக்ஸ்ட்ராவா சாப்புட்டுக்குங்க.

அம்மா அப்பாவைக் கேட்டதாவும் சொல்லுங்க.

said...

பலன் சொன்னதுக்கு ரொம்ப நன்றிங்க. இனிமேல் கொஞ்சம் ஜாக்கிறதையாக இருந்துக்கறேன்.

சினிமா என்பதை விட, எனது நெருங்கிய நண்பன் ஒரு சாலை விபத்தில் இறந்த சில மாதங்களில் கண்ட கனவு அது. சின்ன அஜாக்கிறதையால் எவ்வளவு பெரிய இழப்பை அந்த குடும்பம் சந்தித்தது என்பதை மிக அருகிலிருந்து பார்த்ததன் பாதிப்பு அது என்றே சொல்லவேண்டும்.

//ஐய்யய்யோ இந்த ப்ளொக் எழுதறதைச் சொல்றாங்களா?// ஆமாங்க. இருக்கலாம். இருந்தாலும் நாம யார் வம்பு தும்புக்கும் போறதில்ல! :)

said...

'சூஷிச்சால் துக்கிக்கண்டா'ன்னு மலையாளத்துலே ஒரு பழமொழி இருக்கு.

கவனமா இருந்தால் துக்கம் இல்லை.

எப்பவுமே ச்சின்ன விஷயத்துலேதான் கோட்டை விட்டுருவோம். இல்லையா?