Saturday, May 27, 2006

எவ்ரிடே மனிதர்கள் -4

ஓ.... மை ஸ்வீட்டி.....
---------------

"காலி காலி மைனா..........வ், டொங்கருச்சே மைனா......வ்"

கத்திக்கொண்டே போய்க்கிட்டு இருக்கார் தள்ளுவண்டி வியாபாரி.

" ஓ பாபா... ருக்கோ. காலி மைனா... ருக்கோ"

தடதடன்னு மாடிப்படி அதிர ஓடற ஸ்வீட்டிக்கு வயசு நாலு. ஒல்லியான தேகம். தலையில் அடர்த்தியானபாப் செஞ்ச முடி. பெரும்பாலும் போட்டுக்கற உடுப்பு ஒரு ஷிம்மீஸ் மட்டும்.

நம்ம ஊருலே களாக்காய், இலந்தப்பழம் மாதிரி இங்கே இது ஒரு பழம். கறுப்பாச் சின்னதா இருக்கும். பத்துபைசா கொடுத்து அதை வாங்கிட்டு வந்து படியிலேயே உக்கார்ந்து அதைத் தீர்த்துட்டுத்தான் மேலே ஏறி வர்றாள்.காலா மைனா....ன்னா கறுப்புப் பழம். டோங்கர்ன்னா மலை, குன்று. டோங்கர் ச்சே. மலையிலிருந்து....ஆகக்கூடி, மலையிலிருந்து வந்த கறுப்புப்பழம் தான் இந்தக் காலி மைனா. வியாபாரி கூவும்போது நெடில் குறிலாகிருது.இலக்கணம் தெரிஞ்சவுங்கதானுங்க சொல்லணும். எப்படியோ வாங்கியாச்சு, தின்னாச்சு. மேலே வந்து ஒரு பத்துப் பதினைஞ்சு நிமிஷத்துலே 'பேரு... பேரு... மீட்டாப் பேரு.....' அடுத்த வியாபாரி. தள்ளுவண்டி நிறைய கொய்யாப்பழம்.


"ஓ பாபா...... பேருவாலா... ருக்கோ"


வீட்டில் உக்காந்த இடத்துலே இருந்தே தினமும் ரெண்டு ரூபாய்க்கு வாங்கிரணும் ஸ்வீட்டிக்கு. அவளோட அம்மாவும் காலையிலே பத்துப் பைசாவா மாத்துன ரெண்டு ரூபாயை ஒருச் சின்ன வாட்டி( கிண்ணம்)யிலே போட்டு வச்சுருவாங்க.


ஸ்வீட்டிக்கு ரெண்டு அண்ணன்கள். எட்டும், ஆறும் வயசு. அவுங்க ரெண்டு பேரும் பள்ளிக்கூடத்துக்குப் போனபிறகு, இந்தத் தள்ளுவண்டிங்கதான் முக்கிய பொழுது போக்கு. அதான் நாலு வயசாச்சே, நர்ஸரிப் பள்ளிக்குப் போகலாம்தானே? ம்ஹூம்.... முடியாதாம். அஞ்சு வயசு ஆனதும் ஒரேடியா ஒண்ணாங்கிளாஸ் சேர்த்துடப் போறாங்களாம்.


ரெண்டு வண்டிங்களுக்கு நடுவிலே வர்ற இடைவேளை நேரம் நம்ம வீட்டுலே வந்து இருந்துக்கிட்டு, நம்ம நாய்க்குட்டியோடு விளையாட்டு. எனக்கு அப்ப ஒரு கெட்ட பழக்கம் இருந்தது. ஆன்னா ஊன்னா காஃபி குடிக்கணும். நாளைக்கு இத்தனைன்ற கணக்கு வழக்கெல்லாம் இல்லை. ச்சும்மா ஒரு அரைக் கப் போதும். காலையிலேயே பெரிய ஃபில்டர்லே டிகாக்ஷன்போட்டு வச்சுக்குவேன். அப்புறம் இதே கதிதான். ஸ்வீட்டிக்கும் எப்பவாவதுக் கொஞ்சம், ஒரே ஒரு வாய் குடிக்கக் கொடுப்பேன்.


நான் சமையல் செஞ்சுக்கிட்டு இருந்தா, சமையல்லே உப்பு பாக்கறது எல்லாம் ஸ்வீட்டிதான். நாலு வயசுக்குப் போடு போடுன்னுபேசும். நான் குளிக்கப்போனா, நம்ம நாய்க்குட்டிக்குக் கம்பெனி கொடுக்கறதும் ஸ்வீட்டிதான். எங்களுக்குள்ளெ அப்படி ஒரு அண்டர்ஸ்டேண்டிங்!


ஸ்வீட்டி அவுங்க அப்பா, ஒரு கம்பெனியில் வேலை செய்யறார். ஷிஃப்ட் வேலை. பார்க்க ரொம்ப சுமாரா இருப்பார். இதுலே ஸ்வீட்டியோட அம்மாவுக்குக் கொஞ்சம் மனவருத்தம். அவுங்களும் சுமாராத்தான் இருப்பாங்க.ஆனா...தான் பேரழகின்னு ஒரு நினைப்பு அவுங்க மனசுக்குள்ளெ இருந்துச்சு. குட்டை முடியை ரெட்டைச் சடை போட்டுருப்பாங்க.முகத்தைச் சுத்தி அங்கங்கே முடிக்கற்றைகளைச் சுருட்டி ஸ்ப்ரிங்கு போல தொங்கவிட்டிருப்பாங்க. அவுங்க கைவிரல் எப்போதும் அந்த ஸ்ப்ரிங்குகளைச் சுத்தி விட்டுக்கிட்டே இருக்கும்.நம்ம வீட்டுக்கு வந்தாங்கன்னா, நேராப் போய் கண்ணாடி முன்னாலேதான் நிப்பாங்க. அந்த் வீட்டுலே பிரமாண்டமான நிலைக்கண்ணாடிகள் இருந்துச்சு. அது வந்துங்க, வீட்டு ஓனர் ஒரு காலத்துலே ஹோட்டல் வச்சு நடத்துனாராம்.அப்ப நல்ல பெல்ஜியம் கண்ணாடிங்களை வாங்கி இருக்கார். எல்லாம் அட்டகாசமான வேலைப்பாடுள்ள ப்ரேம்கள்.தங்க நிறத்துலே ஜொலிக்கும். கொஞ்சம் பழசாப்போச்சுன்னாலும் ஜொலிப்புக்குக் குறைவில்லே. இங்கிலாந்துக்குபோற டூரிஸ்ட்டுங்க, அரண்மனை பார்க்கவும் போறாங்கல்லே. அங்கெல்லாம் இப்படி அலங்காரமான நிலைக்கண்ணாடிங்க அங்கங்கே வச்சுருக்காங்களாம்.


அது இருக்கட்டும். இப்ப நம்ம வீட்டுக் கண்ணாடிகளைப் பார்க்கலாம். ஹோட்டலுக்கு வாங்கி வச்சுருந்ததெல்லாம், ஹோட்டல் பிஸினஸ் மூடுன பிறகு, வீட்டுலே கொண்டு வந்து மாட்டிட்டாராம். அப்படி இப்படின்னு ஓனர் வேற வீட்டுக்குப் போயிட்டாலும், கண்ணாடிங்க என்னமோ இங்கேயே நின்னு போச்சு. கழட்டி எடுத்துக் கொண்டு போகறப்பஎதுவாச்சும் ஆயிருச்சுன்னா?ன்ற பயம்தான். நான் கூட பயந்துக்கிட்டு அதைத் துடைக்கக்கூட மாட்டேன்:-)))


எப்பவுமே என்னைச் சுத்திக் கண்ணாடிங்க இருந்ததாலே அதுலே பாத்துக்கறது ஒண்ணும் விசேஷமா எனக்குத்தெரியலை. கூடவே இருந்தா அருமை தெரியாதுங்கறது இதான் போல.


கண்ணாடிங்க முன்னாலே, இப்படி அப்படின்னு திரும்பி நின்னு முன்னாலே பின்னாலெ எல்லாம் பார்த்து மறுபடிப் புடவையை உதறிக்கட்டி, ப்ளீட்ஸ் எல்லாம் சரியா வச்சு, இன்னும் நூறுதரம் குழல்கற்றைகளைச் சுருட்டின்னு நேரம் போறதேதெரியாம நிப்பாங்க. எப்பவும் ச்சின்னதா ப்ளவுஸ் போடுவாங்க. அவுங்க செய்யற சேஷ்டைகளையெல்லாம் திறந்தவாய்மூடாம பார்த்துக்கிட்டு நிக்கும் நம்ம ஸ்வீட்டி.


ஒருநாள் என்னவோ கொஞ்சம் வாக்குவாதம் அதிகமாப் போனதுமாதிரி ஒரு சத்தம் அவுங்க வீட்டுலே இருந்து.அடுத்த வீட்டு விஷயத்துலே மூக்கை நுழைக்க முடியாது,இல்லீங்களா? நாள் போகப்போக என்னவோ சரியில்லை அங்கே.


கண்ணாடி முன்னாலேவந்து நிக்கறதும் கொஞ்சம் குறைஞ்சுதான் போச்சு. திடீர்னு ஒரு நாள் எல்லோருமாக் கிளம்பிபோனாங்க.ரெண்டு நாளிலே அவரும், ஆம்புளைப் பசங்களும் வந்துட்டாங்க. ம்ம்......ஸ்வீட்டியும் அம்மாவும் காணொம்.


நானும், கீழே வீட்டு அம்மாவும் ஒருநாள் மாடிப்படியில் உக்காந்து பேசிக்கிட்டு இருந்தோம். நாளைக்கு ஆயிரம் தடவை தடதடன்னு படியிலே ஓடி இறங்கும் சப்தம் இப்பெல்லாம் இல்லை. அப்ப ஸ்வீட்டியின் அப்பா கீழே இறங்கிவந்தார். நைட் ஷ்ஃப்ட் போல. கீழேவீட்டு அம்மா எல்லாருக்கும் அம்மாவைப் போலன்றதாலே, மரியாதைக்காக ரெண்டு வார்த்தை பேச நின்னார். பேச்சு, ஸ்வீட்டி இல்லாதவெறுமையைப் பத்தி நகர்ந்தப்ப, நாங்க யாருமே எதிர்பார்க்காத விதத்தில் 'மனுஷர்' கண்ணுலே இருந்து கரகரன்னு கண்ணீர். எங்களுக்கெல்லாம் ஒரே அதிர்ச்சி.


மெதுவாச் சொன்னார், "ஸ்வீட்டியாலேதான் விஷயமே எனக்குத் தெரியவந்துச்சு. ச்சின்ன ப்பொண்ணு.அது சொல்லுச்சு, 'தூஸ்றா மர்தோங்க்கே ஸாத், இத்னா ஹஸ்ஹஸ்கி பாத் கரேங்காத் தோ, அச்சா லக்தா ஹை க்யா?டாடி '( வேற ஒரு ஆணோடு இப்படிச் சிரிச்சுச்சிரிச்சுப் பேசறது நல்லாவா இருக்கு?)"


"ச்சீச்சீ, குழந்தை ஏதோ சொல்லுச்சுன்னா நீங்க இப்படி சந்தேகப் பட்டுச் சண்டை போட்டீங்க?"


"இல்லேம்மா. மொதல்லே நான் நம்பலை. அப்புறம் அவுங்களே உண்மையை ஒத்துக்கிட்டாங்க. என்கூடவாழப் பிரியம் இல்லைன்னு சொன்னவங்களை என்ன செய்யறது? அதான் அவுங்க வீட்டுலே கொண்டுபோய்விட்டுட்டேன்."
இறுக்கமான முகத்தோடு வாசலைக் கடந்து போனார். என்ன செய்யறது, என்ன சொல்றதுன்னு தெரியாம நாங்கமுழிச்சோம்.


இதோ 'ஜாமூன், ஜாமூன்,மீட்டா ஜாமூன்' னு கூவிக்கிட்டே வண்டியைத் தள்ளிக்கிட்டுக்கூவுறார்.வண்டி நிறையமினுமினுன்னு கறுப்பா நாகப்பழம் குவிஞ்சு கிடக்கு.


அந்தப் பக்கம் போற ஒவ்வொரு வண்டிக்காரரும், நம்ம வீட்டு வாசலிலே நின்னு ஒரு குரல் எக்ஸ்ட்ராவாக் கொடுத்துக்கிட்டே பால்கனிப் பக்கம் அண்ணாந்து பார்க்கறாங்க.


அவுங்க கண்ணு தேடறது நம்ம 'ஸ்வீட்டி'யை!


---------
அடுத்தவாரம்: கிருஷ்ணமூர்த்தி.


நன்றி: தமிழோவியம்

34 comments:

said...

:-(

வேற ஒன்னும் சொல்லறதுக்கு இல்ல.

said...

நன்மனம்,

பல இடங்களில் மெளனமே பெரிய பேச்சுதான்.

said...

ஒண்ணும் சொல்ல முடியலே.மெள்னத்தால் கூட சோகத்தை முழுமையாக வெளிப்படுத்த முடியாது

said...

துளசி,
ரெண்டு (ரெண்டுதான்னு இப்போதைக்கு னினைக்கிறேன்) விசயம் எனக்கு சம்மதமில்லை.

அழகு பார்க்கிற பொண்ணு தப்புங்கிறமாதிரி implyஆகுது. தான் அழகுன்னு நினைக்கிறது தப்பில்லை. தன் கணவன் தனக்குத் தகுந்தவனாக இல்லன்னு நினைக்கிறது தப்பில்லை. பிடிக்கலன்னா வேறொரு இடத்தில மனசு போகத்தான் செய்யும். just because of that "marraige" no one owes entire life to anyone. it is quite acceptable to feel otherwise and it is quite understandable if that lady felt feelings for another man.

(ரெண்டுன்னு சொன்னேன். ஒண்ணுதேன் எழுதியிர்க்கேனோ?)

said...

சி.ஜி,
வந்ததுக்கும், கருத்துக்கும் நன்றி.

said...

இன்னொண்ணு,

தூஸ்ரே மர்தோங்கே சாத் ஹஸ்கே ஹஸ்கே பாத் கர்னமே க்யா கல்தி ஹை? this is totally irrelevant to the rest of the situation.

said...

பிரேமலதா,

உங்க கருத்துக்கு நன்றி.

இது நான் சந்திச்ச சில மனிதர்களைப் பற்றிச் சொல்கிற தொடரே தவிர, யார் செய்ததையும்
சரின்னோ, தவறுன்னோ சொல்ல வரலை.

இப்ப நீங்க சொன்னதுக்காக, உங்களுக்கு ஒரு பதில் கொடுக்கலாம். சம்பவம் நடந்தது 26 வருசத்துக்கு முன்னால்.
அப்ப பெண்ணுரிமைன்ற ஒரு விஷயம் இருக்குன்னே பல பெண்களுக்குத் தெரிஞ்சிருக்குமான்னே தெரியலை.
நம்ம சொஸைட்டியும் பெண்கள்மேலெயே எல்லாத்துக்கும் பழி சுமத்தறதாவும் இருந்துச்சு.

இவுங்க கண்ணாடி பார்க்கறதைத் தப்புன்னே சொல்லலை. கணவர் பிடிக்கலைன்னா கல்யாணத்துக்கு முன்னேயே
அப்பா அம்மாகிட்டே சொல்லி இருக்கலாம். ( சொன்னாங்களா இல்லையான்னு கூட எனக்குத் தெரியாது) நான் சந்திச்சப்பவே
அவுங்க கல்யாணம் முடிஞ்சு 10 வருசமாயிருந்துச்சு. பிள்ளைகளையும், வீட்டையும் சரிவரக் கவனிக்கவே மாட்டாங்க.
கணவர்தான் வெளிவேலை முழுக்க ஓடி ஓடிச் செய்வார். இதெல்லாம் வெளிப்படையா எல்லோருக்கும் தெரிஞ்சது.
உள் விஷயம் நமக்குத் தெரியாதுல்லையா?

// just because of that "marraige" no one owes entire life to anyone. it is
quite acceptable to feel otherwise and it is quite understandable if that
lady felt feelings for another man. //

இதை வெளிநாட்டுலே இருந்துக்கிட்டுச் சொல்லலாம். உள்ளூர்லே சமூகம் இதை ஏத்துக்குமுன்னு நிஜமாவே
நினைக்கிறீங்களா?

said...

பிரேமலதா,

குச் கல்தி நஹீ(ன்)ஹை. மை பி காம் கர்னே ஜாகாமே, அவுர் ஹமாரா தோஸ்த் லோக் கே
ஸாத் கித்னா ஹஸ்ஹஸ்கிதோ பாத் ஹமேஷா கர்ரஹீன்ஹூங். ஹமேஷா ஐஸாயி ஹை.
மகர், ராத்மே பதி காம்கோ ஜானேகே பாத், கர்ஸே பாஹர் சுப்சுப்கி ஜாகீத்தோ நை.

please try to understand the situation.

said...

குடும்பத்தை கவனிக்கறதுன்னு பொம்பளையோட தலைல ஏன் எழுதியிருக்கு?
சிலருக்கு வீட்டு வேல பிடிக்காம இருக்கலாம்.

கல்யாணத்துக்கு முன்னாடியே சொல்லணும்னு அவசியமில்லை. அப்ப பிடிச்சுக்கூட இருந்திருக்கலாம். கல்யாணத்துக்கு அப்புறம் பிடிக்காம போகலாம்.


துளசி, நான் வெளி நாட்டுல இருக்கும்போது எப்படியோ அதேமாதிரிதான் கிராமத்துலயும் இருந்தேன்.

சமூகம்ங்கிறது யார்? அக்குவேற ஆணிவேற பிரிக்கும்போது தனிமனிதர்கள்தான் சமூகம்.

அவ பிள்ளைகளை கவனிக்கல, குடும்பத்த கவனிக்கல, கண்ணாடி பார்த்தா, அடுத்தவன்கூட சிரிச்சு சிரிச்சு பேசினான்னு சொல்றத நிறுத்தினா மட்டுமே சமூகம் மாறும்.

புனைவு இல்லன்னு தெரியும். உங்க எழுத்து கண்டிப்பா "யார் குற்றவாளி இதுல" தெளிவா சொல்லுது, which is what I am disagreeing with.

வேல பார்க்கிற இடத்துல ஏன், பக்கத்து வீட்டுக்காரன் நல்லா இருந்தா கண்ணயும் கருத்தயும் மூடிக்கணுமா?

மனசு ஒத்துப்போகலன்னு ஆனதுக்கப்புறம் கண்டிப்பா மனசு அலையும்தான். வீட்டுக்காரர் என்ன பண்ணின்னார் to please her and talk it through with her? did he ever bother to please her? Did he ever bother to ask her is there any fault of him that is driving her away?

anyway, I am not going to comment further.

said...

btw, நீங்க ஹிந்தியா பேசறீங்க? இல்ல குஜரத்தியா? என்னோட ஹிந்திக்கும் உங்க ஹிந்திக்கும் வித்தியாசம் வருது.

said...

பிரேமலதா,
உங்க கருத்துக்கு நன்றி.

என்னோட ஹிந்தி மராத்தி, போஜ்புரியெல்லாம் கலந்துகட்டுன ஹிந்தியா இருக்கும்.

கத்துக்கிட்ட இடங்கள் அப்படி:-))))

said...

//கலந்துகட்டுன//

:)))))

said...

அந்த சின்னப் பொண்ணு இப்ப எப்படி இருக்குதோ...என்ன பண்ணுதோ? எனமோ தெரியலை ஒரு சோகம் வந்து தாக்குது மனசை.

said...

நிகழ்வை அழகாக படம் பிடித்து பதிந்துள்ளீர்கள். அதன் குற்றம் குறைகள் அவரவர் சூழல், எண்ணமுதிர்ச்சி, பட்டறிவு, கொள்கைகள் ஆகியவை பொறுத்து அமையும்.

Anonymous said...

Ennanga Tulasi avangalla "mudhal mariyaththai" sivajiya paartha maathiri kongam jaaasthi anbooda parthrikalamey? Avar kooda kallellam thookki parthaarungaley - ponnu kannadi parkaruthukum athey arththam thannanga? "Enna solluven ennullam thangaley"na pada vecherukalamey onga heroineh? Gandhimathiyaa anniyaayama villiya kamichcha mathiri antha purushanap pakkamma, muzhuu anboda parthirukeenga - periya manasoda - bharadhirajavoda usandhitteenga. Rettachadda potta surutta mudi potta ponna - "ungukuththama, enguththamma" nu oru fellowship anbu kaamicherukalamey?! Aduththa kathiyela ethirparkuranga!

said...

இந்த பதிவும் பின்னூட்டங்களும்
ஏற்படுத்திய சோர்விலிருந்து விடுபட உதவியது.....
இன்று மாலையில் சென்னையில்
நடைபெற்ற
வலைப்பூவர்கள் மாநாடு.
மாநாட்டில் மசால்வடை கொடுக்கல்லெ;
போண்டாதான் கொடுத்தார்கள்

said...

கைப்புள்ளெ,

காலம் ஓடிப்போச்சேங்க. இப்ப அந்தச் சின்னப்புள்ளெ பெரிய பொண்ணாகி இருக்கும். அதுக்கேகூட குழந்தைங்க இருக்கலாம்.

said...

ஆமாங்க மணியன்.

எல்லாம் அந்தந்தகாலக் கட்டத்துலே இருந்த சூழ்நிலையைப் பொறுத்ததுதான்.

said...

வாங்க மதுரா.

புதுசா இருக்கீங்களே. நலமா?

தங்கலீஸ் கொஞ்சம் படுத்துதே படிக்கறதுக்கு.
பேசாம கலப்பையாலெ உழுதுருங்களேன்.

இந்த சம்பவத்துலே குற்றம் யார் மேலேன்னு சொல்றதுக்கு நான் யாருங்க.

இது நடந்தது நடந்தபடி ( நமக்குத் தெரிஞ்சது தெரிஞ்சபடின்னு)சொல்லப்பட்டது. அவ்வளோதான்.

said...

சி.ஜி,

மாநாட்டுக் கவரேஜ் கொடுத்து ஒரு பதிவு போட்டுருக்கலாம். நல்ல சான்ஸை விட்டுட்டீங்களே.

போண்டா பரவாயில்லை. ம.சாவுக்குச் சொந்தம்தான்:-))))

இன்னும் யார்யார் வந்திருந்தாங்க?

said...

துளசி,காலம் எதுவாக இருந்தாலும் கடமை எப்போதுமே ஒன்றுதான்.
பெத்தவங்க தப்பு செய்தால் பாதிக்கப்படுவது பசங்க தான். ஸ்வீட்டி கல்யாணம் செய்து குழந்தைகளுக்குத் தாயும் ஆகி இருக்கும். பழய பாதிப்பு இல்லாமல் மனசு விட்டு பேசி இருந்தால் தான் அதும் குழந்தைக்ளும் நல்லா இருக்கும். சங்கடமா இருக்கும்மா.

said...

வல்லி,
வருகைக்கு நன்றி.

எனக்கும்தான் சங்கடமாப் போயிருச்சு.

said...

டோண்டு தனிப்பதிவே போட்டிருக்கின்றார். பார்த்திருப்பீர்கள்;
படித்திருப்பீர்கள்(பயந்திருக்க மாட்டீர்கள் தானெ?)

said...

வாங்க சி.ஜி,
இப்பத்தான் அவருக்கு ஒரு பின்னூட்டம் போட்டேன்.
அதையே இங்கே போடறேன்.

11.30 க்கு முடிவு செஞ்சு மாலை 5 மணிக்குன்னு ஆனதுனாலேதான் என்னாலே வந்து கலந்துக்க முடியலை:-))

அது என்ன எப்பவும் இப்படி ஒரு செட் மெனு? புதுசா வேற எதாவது சாப்புட்டு இருக்கலாமே?

சிவஞானம்ஜியை எங்க கண்ணுலே காமிச்சதுக்கு நன்றி. அவரோட விவரம் ஒண்ணும் இதுவரை தெரியாததாலே
பாவம், அவரை மிரட்டி, விரட்டியெல்லாம் பின்னூட்டத்துலே கலாய்ச்சு இருக்கேன்.(-:

தப்பா நினைச்சுக்க மாட்டார்னு நம்பறேன்.

மீட்டிங் விவரம் போட்டதுக்கு நன்றி.

இப்பச் சொல்லுங்க, நீங்க தப்பா நினைக்கலைதானே?:-))

said...

///
தங்கலீஸ் கொஞ்சம் படுத்துதே படிக்கறதுக்கு.
பேசாம கலப்பையாலெ உழுதுருங்களேன்.//

சரியாச்சொல்லுங்க. தமிழில் உழச்சொல்லி, அப்புறம் உங்களை மாதிரி ஹிந்தியில உழுதா என்னை மாதிரி தி.ரா.க்கள் கதி என்ன ஆவறது?

said...

கொத்ஸ்,

ஹிந்தியைத் தமிழ்மூலம் சொல்லித்தர்றதுக்கு இதைவிட எளிய வழி இருக்கா?

தமிழ்வழிக்கல்வியைத் தப்பாப் புரிஞ்சுக்கிட்டேன் போல இருக்கு(-:

said...

துளசி அக்காவ தப்பா நினைப்பேனா?
(ஹே சி.ஜி வுடு ஜூட்...ஓடு..ஓடு
சப்பாத்தி கட்டை பறந்து வருது..?)

said...

சி.ஜி,

அப்பாடா......:-))))

நல்ல நட்புக்கு வயசெல்லாம் ஒரு தடையே கிடையாது.

said...

அக்கோவ்....துளசி அக்கோவ்
ஒரெ கன்ப்யூஸ்ணா இருக்கு
போண்டோவும் மசால்வடையும் சொந்தம்னு நீங்க சொல்றீங்க
போண்டோவும் வடையும் ஒன்னுதான்னு டோண்டு சொல்றார்.
அப்ப மசால் வடையும் வடையும் ஒன்னுதானா?
எதாவது கமிஷன் போட்டு ஆய்வறிக்கை கொடுக்கச்சொல்லுங்க

said...

சி.ஜி,

பொருளாதாரத்தையே தமிழ்ப் 'படுத்தின'வங்களுக்கு இப்ப போண்டா வடை விளக்கம் புரியலையா?:-)))

ஏங்க, சாப்பிட்டது நீங்க. நான் எப்படிங்க கமிஷன் ( கேக்க) போட முடியும்?

ஆனா ஒண்ணு, போண்டா வடை சொந்தமோ இல்லை ஒண்ணொ இருக்கட்டும்.
மசால்வடை மட்டும் வேற இனம். பருப்புலேயே வித்தியாசம் வந்து வாதம் அடிபட்டுப் போயிருதுல்லே?:-)))


நம்ம டூடில் போர்டுலே ஒருத்தர் பருப்பு வெந்துச்சான்னு 13 நாளாக் கேட்டுக்கிட்டே இருக்கார்:-)
ஹூம்.. அவர் கவலை அவருக்கு.

said...

கண்ணாடி பாகிறதும் ரொம்ப ஓவரா வச்சுக்ககூடாது! அப்பிடிதானே டீச்சர்!

said...

வாங்க சிங்.செ.

ஓவரா இல்லே அண்டரான்னு தெரியாது. ஆனா அவுங்கவுங்க வீட்டுக்குள்ளேயே வச்சுக்கிட்டா எந்த வம்பும் இல்லை. அடுத்தவங்க வீட்டுலேன்னும்போதுதான், மத்தவங்க பார்வைக்கு வந்துருது.

said...

ஏங்க துளசி..

ஜோசஃப்னு பேர் வச்சாலே ஸ்மார்ட்டாத்தாங்க இருப்பாங்க.. அத வேற சொல்லணுமா என்ன:))

said...

ஏங்க டிபிஆர்ஜோ,
இந்தக் கமெண்டுக்கு என்ன அர்த்தம்?

பேருக்கும் ஸ்மார்ட்னஸ்ஸுக்கும் சம்பந்தம்......ஹூம்.... ஒண்ணும் புரியலையே?