"சாந்த மோளுக்கு டாக்ட்டராவான் எளுப்பமா."
பேசிக்கிட்டே ஒரு குண்டைத்தூக்கிப் போட்டார் சாந்தாவின் அப்பா.
'அப்படியா ' இல்லே 'ஆமாம்'னு கூட தலை ஆட்டமுடியாத நிலை. சரியாக் கழுத்துலேக் கத்தியைவச்சுக்கிட்டு இப்படி சொன்னா?
லேசாப் புருவத்தை மட்டும் உயர்த்தி அதை ஆமோதிச்சாராம் எங்க இவர்.
ஜோஸ்குட்டி கத்தியை ஒருத் தீட்டுத் தீட்டிக்கிறார்.
"மோளு மிடுக்கியா. பின்னே மெடிக்கல் கோளேஜ்லே ஸ்தலம் கிட்டான் அத்தர ப்ரயாசம் வேண்டிவரில்லா"
வாயைத்திறந்து பதில் சொல்றதுக்குள்ளே கத்தி மறுபடி முகத்துக்கருகில் வந்தாச்சு.
"ஓஓஓஓஓஓஓ"
"பின்னே மற்றொரு செளகர்யம் கூடி உண்டல்லோ. அம்ம எல்லாம் பரஞ்ஞு தரும்.படிக்கான் எளுப்பம் தன்னே"
'ஓஓஓஓ அம்ம மெடிகல் கோளேஜ்லே புரொஃப்ஸராணோ ?' தொண்டை வரைக்கும்வந்த வார்த்தைங்களை அப்படியே அமுக்கிப் பிடிச்சு முழுங்கறதுக்கும், 'தே வேகம் வா. காப்பிகுடி கழிஞ்ஞிட்டாணு எனிக்குப் பள்ளீ போணும்'னு சொல்லிக்கிட்டே சாந்தயுட அம்மெ அவிடெவந்து சொன்னதுக்கும் சரியா இருந்துச்சு.
கொரட்டி பஸ் ஸ்டாப்புலே இறங்கி அப்படியே தேவமாதா ஹாஸ்ப்பிட்டல் போற வழியிலே வந்தீங்கன்னா வலது பக்கம் அஞ்சாவது கடை நம்ம ஜோஸ்குட்டியோடது. என்னது கடையைக் காணொமா?என்னங்க நீங்க! பாப்புலர் ஸ்டோருக்கு ரெண்டாவது இருக்கே அதாங்க. கடை மாதிரி இல்லேல்ல?
என்னங்க செய்யறது, இவ்வளோ ச்சின்ன ஊர்லே 'மென்ஸ் ப்யூட்டி பார்லர்'ரா இருக்கும்? நாட்டு ஓடுவேய்ஞ்ச, வீட்டுத் தாழ்வாரத்தை ஒட்டி இருக்கற இடம்தான் சலூன். அந்த ஏரியாவுக்கே இது ஒண்ணுதான்.
எப்படியும் மாசம் ஒருக்கா அங்கே போய்த்தானே வரணும். பெரிய சிட்டின்னா, வெய்யில், மழைன்னு எதாவதுச்சின்னப்பேச்சு( ஸ்மால் டாக்) இருக்கும். 'இவ்விடம் அரசியல் பேசாதீர்'னு போர்டு வேற சில இடங்களிலே வச்சிருப்பாங்களாம். ஆனாப் பாருங்க, எல்லா முடிவெட்டுற கடைகளிலும் ஒரு தினசரிப் பேப்பரை வாங்கிப்போட்டுதான் இருப்பாங்க, வாடிக்கையாளர் காத்திருக்கும் நேரத்துக்கு வாயாடாம எதையாவது படிக்கட்டுமுன்னு.பேப்பரைத் திறந்தா அதுலே அரசியல்தான் முக்காவாசி இடத்தைப் பிடிச்சுக்கிட்டு இருக்கு. மீதிக் காவாசி என்னவா?சினிமா. இதுலே, அப்பப் படிச்ச விஷயத்தைப் பேசக்கூடாதுன்னு கண்டீஷன்!
இதே, ஊர் ச்சின்னதுன்னா,அநேகமா எல்லாருக்கும் எல்லாரையும் தெரியும். அதாலே அப்பப்பக் கொஞ்சம் குடும்பக்காரியங்களையும் பேசறது உண்டுதான். ஜோஸ்குட்டிக்கு நாலு பசங்க. மூத்ததுதான் சாந்தா. இப்ப ப்ரீ டிகிரி படிக்குது.அடுத்த ரெண்டு பசங்க ஆம்புளைப் புள்ளைங்க. பக்கத்துப் பள்ளிக்கூடத்துலே ஆறாவது, ஏழாவதும் படிக்குதுங்க.கடைசிப் பொண்ணு மூணாப்பு.
அவுங்க குடும்ப சொத்தா ஒரு பரம்பும், கொஞ்சம் பாடமும் இருக்கு. நான்வேற அப்படியே சொல்லிட்டேன்,இல்லே.அதாங்க கொஞ்சம் வீட்டை ஒட்டின ஒரு இடமும், கொஞ்சம் வயலும் இருக்கு. கமுகு, தெங்கு, பலான்னு நிறையமரங்கள். அதுலெ வர்றதை வித்தும், கடையிலே கிடைக்கற காசுமா நாள் ஓடிக்கிட்டு இருக்கு.
பொன்னம்மா சேச்சிக்கு இன்னொரு வேலையும் தெரியும். அக்கம்பக்கத்துலே போய் மருத்துவம் பாக்கறது. எப்படிக்கத்துக்கிட்டாங்கன்ற விவரம் எனக்குத் தெரியலை. கிராமத்துப் பக்கம் எப்பவும் ஓடியாடி உழைக்கிற கர்ப்பிணிங்களுக்குப் பல சமயத்துலேச் சிக்கல் இல்லாத சுகப்பிரவசம் ஆயிருது. அதுக்குச் சிலசமயம் நம்ம பொன்னாம்மாச் சேச்சியைக்கூப்புட்டுப் போவாங்க.
ஆனா, ச்சும்மா சொல்லக்கூடாதுங்க. பார்த்தவுடனே தெரிஞ்சுருமாம் சேச்சிக்கு, இது சரி ஆகுமா ஆகாதான்னு.நேரம் கடத்தாம உடனே 'தேவமாதா'க்குக் கொண்டுபோகச் சொல்லிரும். இதுவரை அது கைபட்டு உயிர் நஷ்டம் ஒண்ணும் வரலை. அதுக்காகவே ஆன்னா ஊன்னா பள்ளிக்குப் போயி ஜெபிக்கும். கடவுள் நம்பிக்கை ஜாஸ்தி.
அதான் அப்பா சொல்லிட்டாரு, 'மகளுக்கு, அம்மா எல்லாம் சொல்லிக் கொடுக்கும். டாக்டர் ஆவறது மகளுக்கு சுலபம்'னு.
எல்லாப் பெற்றோர்களுக்கும் உள்ள கனவுதானே, புள்ளைங்க பெரிய படிப்புப் படிச்சு பெரிய ஆளா வரணுமுன்னு.இவர் வந்து சொன்னவுடனே எனக்கே ஆச்சரியமா இருந்தது. ரொம்ப சுமாராப் படிக்கிற பொண்ணுதான். ஒருசினிமா விடாது. நல்லாப் பாட்டுப் பாடும். எப்பவாவது வீட்டுப் பக்கம் வந்து போகும். 'என்ன மெடிக்கல் போகப் போறீயா?'னு கேட்டப்ப ஒருமாதிரி முழிச்சது.நாளும் ஓடுச்சு. நாங்களும் பக்கத்து ஊர்லே வேற இடத்துக்கு வீடு மாத்திப் போயிட்டொம்.
ஒரு நாளு தற்செயலா டவுன்லே சாந்தாவைப் பார்த்தேன். படிச்சுக்கிட்டு இருக்காம். வீட்டுக்குப் போக பஸ்ஸுக்குக் காத்திருந்துச்சு. இந்த ஊர்லே ஏதுரா மெடிக்கல் காலேஜுன்னு சந்தேகம். மெல்ல விசாரிச்சேன், எங்கே படிக்குதுன்னு?கோளேஜ்தானாம், ஆனா டுட்டோரியல் கோளேஜ்.
----
அருஞ்சொற் பொருள்:
பள்ளி- சர்ச்
பரம்பு- இடம்,
பாடம்- நிலம்
கோளேஜ்- கல்லூரி
ப்ரீ டிகிரி- பி.யு.சின்னு முந்தி இருந்தது. இப்ப ப்ளஸ் 1 & 2 ஆயிருச்சு.
-------
அடுத்தவாரம் : பானு
நன்றி: தமிழோவியம்
Saturday, May 06, 2006
எவ்ரி டே மனிதர்கள் -1
Posted by துளசி கோபால் at 5/06/2006 04:51:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
22 comments:
என்னங்க துளசி, நானே உங்க வீட்டுக்கு வரேன். நீங்க வரக்கூடாதா? எங்க வீடு பிடிக்கலியா?
கீதா,
அடே, கோச்சுக்கிட்டீங்களா?
உங்க வீட்டுலே போய்ப் பாருங்க. யார்வந்துட்டு போனாங்கன்னு!
அது இருக்கட்டும் அது என்னங்க 'நானே'?
திரும்பத் திரும்ப நானே வருகிறேன் என்று அர்த்தம். நீங்களே என்னை உபசரிக்கிறீர்கள் எனக்கும் சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும் இல்லையா?
சத்தியமா ஒன்னும் புரியவில்லை. ஒரு நாலு ஐந்து தடவை படித்து பார்த்து பின்னூட்டம் இடுகின்றேன்
அன்புடன்
நாகை சிவா
அம்மா,
மலபார் போலீஸ் படத்ல முதல் ஒரிரு காட்சிகள் சுத்தமான (தமிழே வராது) மலையாளத்தில் வரும் அது மாறி நாமும் எங்க இது வேற எதாவது தளத்துக்கு போய்ட்டொமோன்னு நினைத்து விட்டேன், நல்ல வேளை தமிழ்ல இருந்தது. எனக்கு மலையாளம் படிக்க தெரியும், புரியாது, என்ன பண்றது அதுக்குள்ள ஊர விட்டு வந்துட்டன்.
சில வார்த்தைகள் தெரிஞ்ச்சுக்கவும் முடிஞ்சது. ரொம்ப நன்றி.
கீதா,
அந்த அர்த்தமா? அப்பச் சரி.
நாகை சிவா,
ஐயகோ, ஒரு படைப்பாளிக்கு இதைவிட 'கொடுமை' வேற இருக்கா?:-)))))
சிவமுருகன்,
இந்த சாக்குலேயாவது உங்களுக்கெல்லாம் 'மலையாளம்'
சொல்லிக் கொடுக்கலாமுன்னு முடிவு செஞ்சுட்டேன்:-))))
என்னது துளசியக்கா, துளசி சேச்சி ஆயிட்டீங்களா-:)
பின்னே? அங்கெனெ ஆகாதிருக்கான் பற்றோ?
உதயகுமார்.
சேச்சி, அக்கைய்யா, பெஹன், சிஸ்டர் இப்படி பலவிதமாவும் கூப்புடலாம்:-)))))
துளசி அம்மா,
நமக்கு தமிழே தகராறு.. இதுல நீங்க இப்படி பல்மொழி வித்தகரா எழுதுனா எப்படி ?
ஒரு தடவை பார்த்தேன் .. ஒன்னும் புரியல.. நிதானமா படிச்சி எதாவது புரியுதான்னுதான் பாக்கனும் :-)
துளசி, 2 ஆம் தரம் படிக்கும்போதும் அப்படியே சுவாரஸ்யமாக இருக்கிறது.எங்க வீட்டுலே(நாச்சியார்) சம்திங் ராங்க்.
பார்க்கலாம்.மனு.
புரிந்துவிட்டது. புரிந்துவிட்டது. அப்பாடா.................
அன்புடன்
நாகை சிவா
ஆமாங்க துளசி,
ஆசையிருக்கு தாசில் பண்ண அதிர்ஷ்டம் இருக்கு எதையோ மேய்க்கம்பாங்களே. இதுபோல எத்தனையோ கனவுகள்.. நிறைவேற்ற முடியாமற்போய் கலங்கி நிற்கும் எத்தனை, எத்தனையோ இளம் நெஞ்சங்கள்.. எவ்ரிடே மனிதர்கள் நீங்க கொடுத்த தலைப்பு மிகவும் பொருத்தம்..
கார்த்திக்,
'காவியங்களை' எல்லாம் ஒருதரத்துக்கு மேலேயும் படிகணுமாம்.
அப்பத்தான் விளங்கும்:-))))
இப்பப் பாருங்க நம்ம நாகை சிவா புரிஞ்சுக்கிட்டார்.
மானு,
நன்றி. அங்கே நீங்க மட்டும்தான் பின்னூட்டி இருந்தீங்க. அதுக்கும் ஒரு நன்றி.
நாகை சிவா,
அப்பாடா..... எனக்கு இப்பத்தான் நிம்மதியா இருக்கு.
டிபிஆர்ஜோ,
நன்றிங்க. நல்லவேளை, தலைப்பு நல்லதாக் கிடைச்சிருச்சு!
துளசி சேச்சி
வெரு வெரு
கோபால் சேட்டன் சுகந்தன்னே
எனிக்கி அத்தறயும் மறந்நு போயி,ஓர்ம இல்யா.
பட்சே , ஞான் நாட்ல இருந்நு போயி எத்தற வர்ஷம் தீர்ந்நு கேட்குன்ன வார்த்தகளா.
குருவாயூரப்பன் நிங்கள ரக்ஷிக்கணும்
பெரு(சு)
எந்தா, மறந்நு போயா? அது சாரமில்லெ கேட்டோ. பின்னே அது தானே திரிச்சு வரும்.
குருவாயூரப்பன் ஈ லோகம் முழுவனும் ரக்ஷிக்கட்டே. ( ஆமென்)
§ºîº£! ( ¡Õõ À¢Ã¢îÍ ÀÊîͼ¡¾£í¸ôÀ¡!) º¡Ä À¡¸ ¯ýɾ¢! À¢ýÉ ¿£í¸ À¡ðÎìÌ ¯í¸ÙìÌ ¦¾Ã¢ïº À¡¨„Ä ÀÃﺢ¸¢ð§¼ §À¡É¡, ¿¡í¸ ±ýÉ ÀñȾ¡õ? ¿£í¸ ¦Á¡ò¾ À¾¢× ±Ø¾¢ Á¨Ä¡ǡõ ¦º¡øÄ¢ò ¾§Ãí¸È£í¸,¿¡í¸ À¢ëð¼õ §À¡ð§¼ ¦¾ÖÌ ¦º¡øÄ¢¾Ã§Å¡§Á! (§¸¡Å¢î͸¡¾£í¸ §ºîº¢)
நம்ம ஜெய சந்திரசேகரன் திஸ்கியிலே போட்டதை அப்படியே இங்கே
போடறேன்.
§ºîº£! ( ¡Õõ À¢Ã¢îÍ ÀÊîͼ¡¾£í¸ôÀ¡!)
º¡Ä À¡¸ ¯ýɾ¢! À¢ýÉ ¿£í¸ À¡ðÎìÌ
¯í¸ÙìÌ ¦¾Ã¢ïº À¡¨„Ä ÀÃﺢ¸¢ð§¼
§À¡É¡, ¿¡í¸ ±ýÉ ÀñȾ¡õ? ¿£í¸ ¦Á¡ò¾
À¾¢× ±Ø¾¢ Á¨Ä¡ǡõ ¦º¡øÄ¢ò ¾§Ãí¸È£í¸,
¿¡í¸ À¢ëð¼õ §À¡ð§¼ ¦¾ÖÌ ¦º¡øÄ¢¾Ã§Å¡§Á!
(§¸¡Å¢î͸¡¾£í¸ §ºîº¢)
சரி. தெலுங்கு தெரியாதவங்கெல்லாம் கை தூக்குங்க.
அட! என்னப்பா யாரும் இல்லை:-))))
நம்ம ஜெய சந்திரசேகரன் திஸ்கியிலே போட்டதை அப்படியே இங்கே
போடறேன்.
ஆர்வக்கோளாறில் நானும் திஸ்கியை மாத்தாம அப்படியே போட்டுட்டேன்.(-:
சேச்சீ( யாரும் பிரிச்சு படிச்சுடாதீங்கப்பா!)
சால பாக உன்னதி! பின்ன நீங்க பாட்டுக்கு
உங்களுக்கு தெரிஞ்ச பாஷையிலே பரஞ்சிகிட்டே
போனா, நாங்க என்ன பண்றதாம்? நீங்க மொத்த
பதிவு எழுதி மலையாளம் சொல்லித் தரேங்கறீங்க,
நாங்க பின்னூட்டம் போட்டே தெலுகு சொல்லித்தருவோமே!
( கோவிச்சுகாதீங்க சேச்சி)
சரி. தெலுங்கு தெரியாதவங்கெல்லாம் கை தூக்குங்க.
அட! என்னப்பா யாரும் இல்லை:-))))
Post a Comment