Sunday, May 28, 2006

கடப்பாரை

மக்கள்ஸ்,


நம்ம ஊர் 'கடப்பாரை' ஞாபகம் இருக்குங்களா? இதுக்கு இங்கிலீசுலே என்னான்னுங்க சொல்றது?


'க்ரோ பார்'ன்னு சொல்லிக்கலாமுன்னாலும், இதுக்கு ஒரு சரியான பேர் இருக்கு. அதுவும் அந்தப் பேர்' நெஞ்சாங்கூட்டில் கடப்பாரையா நிக்குது'. வெளியே வந்து விழுந்தாத்தானே?

தெரிஞ்சவுங்க கொஞ்சம் சொல்லுங்கப்பா, சொல்லுங்கம்மா.

கடப்பாரை படுத்தும் பாடு!

இதுவரை நான் எழுதுன பதிவுகளிலே மிகச் சிறியது என்ற வகையில் இது ஒரு ரெக்கார்ட்.

34 comments:

said...

டீச்சருக்கே சந்தேகம் வந்தால் ஸ்டூடென்ட்ஸ் நாங்க எங்க போவோம் ? என் firefoxஇல் இருக்கும் அனைத்துsearch engineஇலும் தேடி விட்டேன். கிடைக்கவில்லையே. கூகிளுக்கு நெஞ்சாங்காட்டை திறந்து விட வேண்டியதுதான்.

said...

மணியன்,

ஒரு கடப்பாரை மனுஷனை இந்தப் பாடு படுத்துமா?:-)))

நட்சத்திர வாரத்துலே இது ஒண்ணு(-:
இல்லீங்க?

said...

wrecking bar, point hex, as u said corwbar.

got these words in wikipedia and toolfinder.co.uk.

point hex ku potruka padatha parthal namma oor kadapparai mathiri than irukku

said...

i checked with a english man who is working with me, he tells crowbar only,also jimmy a slang word for corwbar.

encarta dictionary for jimmy is

a short crowbar used as a lever, usually for prying things open.

said...

pry, pry bar, crowbar, wrecking bar - கடப்பாரை.
jemmy - a short crowbar(Handy), jim crow - To pull the Nails. But we mostly use hammer to pull the Nails.
என்ன துளசியக்கா பதில் சரியா............

said...

அக்கா, கடப்பாறை (பாறை தானே? பாரை யா?)எல்லாம் வச்சி என்ன செய்யறீங்க?!! மாமா பாவங்கா... :)

இதுவரை இந்த ஊர்ல கடப்பாறை வாங்குற வேலை வரலை.. வாங்கி இருந்திருந்தா தெரிஞ்சிருக்கும் :)

said...

manasu முந்திட்டார்...ஒ.கே
கடுகு சிறுத்தாலும்........
பதிவு சிறிதானாலும் பெரிய பதிவுகள்
அளவிற்கு.......குடுத்துடிச்சி

said...

துளசி, கடப்பாறை க்ரோபார் தான். ஆதெண்டிக் ஆளு கிட்டே கேட்டு சொல்றென்.

said...

துளசி
கடப்பாரைக்கு இன்னோர் ஆங்கில வார்த்தை தேடிகிட்டு இருக்கீங்க. தமிழிலேயே அதுக்கு இன்னோர் பேர் இருக்கு , என் பதிவில் போய்ப் பாருங்க டீச்சர்.
மயில் பார்த்தேன்

said...

அக்கா!
நீங்கள் கடப்பாறை; என்று குறிப்பிடுவது ஒருபக்கம் 2 அங்குல அளவில் உளி போன்ற அமைப்பிலும்;மறு முனையில் v போன்ற அமைப்பிலும் உள்ள சுமார் 4 அடி, நீளமான 1.5 அங்குலச் சுற்றுவட்டம் உள்ள இரும்புக்கம்பியானாலதானால், ஈழத்தில் அலவாங்கு என்போம். இது ஒரு போத்துக்கேயச் சொல்.
ஒரு பக்கம் உளி போலும்; மறுபக்கம் ஆணிபோல் கூராகவும் சுமார் 2 அடி நீளமானதும்; நடுவில் மரப்பிடி போட்டும் சுமார்;5 கிலோ நிறையுடன் கூடிய உபகரணமும் கல்லுக்கிண்டியெடுக்கப் பாவிப்போம்;அதைப் "பிக்கான்" என்போம்.
இவற்றின் தூய தமிழ் தெரியவில்லை.
யோகன் - பாரிஸ்

said...

மனசு,

ரொம்ப நன்றிங்க. நானும் இங்கே வலையிலே தேடித்தேடி ஓய்ஞ்சு போய்த்தான், நம்ம
ஆட்கள் கிட்டேயே கேட்டுக்கலாமுன்னு பதிவாப் போட்டுட்டேன்.

இங்கேயும் ஹார்ட்வேர் கடைகளில் இதே பேர்தான்(க்ரோ பார்) சொல்றாங்க.

நாகை சிவா,

மேலே நம்ம 'மனசு'க்குச் சொன்னதுதான் உங்களுக்கும். பதில் சரியான்னு கேட்டா நான் என்னங்க சொல்றது?
இன்னும் மனசுக்குள்ளே வேற எதோ வார்த்தை இருக்கறமாதிரி தோணுதே(-:


பொன்ஸ்,

மாமா ஈஸ் ஃபைன். இதுவரை ஆபத்து இல்லை:-))))


சி.ஜி.
ஆமாங்க................... குடுத்துருச்சு:-)))))

( நீங்க இப்படிக் கேட்டுட்டதாலேயே எல்லாருக்கும் சேர்த்து இப்படி ஒரு நீண்ட...... குடுக்கறேன்.)
எண்ணிக்கை குறையட்டுமுன்னுதான்:-))


வல்லி,

கேட்டுச் சொல்லுங்க ப்ளீஸ்.

தாணு,

காக்கைக் கம்பி சரிவராது போல இருக்கேப்பா:-))))


கடப்பாரை என்ற பேர் எப்படி வந்திருக்கும்? gadda bar ன்னு வெள்ளையர்கள் சொல்லி
அதே கட்டப் பார்னு வந்து பிறகு கடப்பாரை ன்னு ஆயிருச்சோ?


மக்கள்ஸ்,

'ஏன் கடப்பாரை எனக்குத் தேவை' னு ஒரு பதிவு போடறதுக்கு ஒரு ச்சான்ஸ் கிடைச்சிருக்கு.
பேசாம போட்டுறவா? இல்லே அடிக்க ( கடப்பாரையாலேயே அடிக்க) வந்துருவீங்களா?

said...

யோகன்,

வாங்க. நீங்க சொல்றது போல ஒண்ணு இங்கே இருக்கு. அதைத்தான் க்ரோபார் ன்னு சொல்றாங்க.

நான் சொல்ற கடப்பாரை இப்படி.
ஒரு நாலஞ்சடி நீளமா ரெண்டு/மூணு அங்குல சுற்றளவுள்ள
நீளக் கம்பி. ஒரு முனை நல்லா கூராக சீவின பென்சில் மாதிரி இருக்கும். மற்ற பக்கம் வட்டமாத்தான் இருக்கும்.

said...

கடப்பாறை கடப்பாறை தான். க்ரொபார் க்ரொபார் தான்.
னம்ம தோட்டம் கொத்தும் கடப்பாறை தான் நீங்க சொல்வது துளசி.
தமிழிலிருந்துதான் ஆங்கிலத்துக்குப் போயிருக்கும்.
இதிலேயே குண்டு கடப்பாறையும் உண்டு. ச்லிம் கடப்பாறையும் உண்டு!!!

said...

மானு,

கல்லுரல்லே மிளகாய்ப்பொடி இடிக்கறதுக்கு
முந்தியெல்லாம் ஒரு இரும்புலே செய்த
சின்ன உலக்கை இருக்குமே அதுவும் ஒரு வகை கடப்பாரைதானே?
ஆனா அது கூர்மையா இருக்காது. தட்டையாத்தான் முடியும்.

இது நீளமான வஸ்து. குண்டாவும் இல்லாம ஒல்லியாவும் இல்லாம
மீடியமா இருக்கும்.

said...

காக்கா பட்டை அப்படியெ இருக்கட்டும்
ஜொசப் சார்ட்டெ சஸ்பென்ஸ் கேட்டிருந்தா ச்சப்னு போயிருக்கும்
அதான் கேட்கல்லெ
இப்ப பாருங்க..
என்ன அடயாளம் தெரியரத்க்கு முன்னெ இருந்த விரட்டல் மிரட்டல் கலாய்த்தல் எல்லம் இப்போ காணுமில்ல...

said...

சி.ஜி,

நீங்கவேற. இன்னும் கொஞ்சம் ஷாக்லே இருக்கோம். ரெண்டொரு நாளுலே பழையபடி ஆயிருவோமுல்லெ. வாத்தியார்ன்னதும் மனசுக்குள்ளெ ஒரு பயம் வந்துருதுல்லே. கொஞ்சம் யோசிச்சுப் பார்த்தால் இன்னிக்கு, இப்போதைக்கு நாந்தான் உங்க சரித்திர டீச்சர். அப்ப யாருக்கு பயம் வரணும்?

சரிசரி. கடப்பாரையை ஒரு ஓரமா வச்சுட்டு, சரித்திரவகுப்புப் பதிவுக்கு ஓடுங்க பார்க்கலாம்:-))))

said...

கடப்பாறையை முழுங்கிட்டு, இஞ்சி கஷாயம் குடிச்சார்போல ( வேற என்ன செரிக்கத்தான்)- இதுக்கு
பொருள் கேக்காதீங்க, பழமொழியை அனுபவிக்கணும்- சொன்னது பி.கே.எஸ்

said...

உஷா,

ஏற்கெனவே கடப்பாரையை முழுங்கிட்டேன். நல்லவேளை சொன்னீங்க, இஞ்சிக்கஷாயம் குடிக்கணுமுன்னு.

இதோ போறேன், இஞ்சி வாங்க. விலைதான் கொஞ்சம் கூடியிருக்கு.

அது பரவாயில்லை:-))))

பிகேஎஸ் எப்பச் சொன்னார்? எதாவது சுட்டி உண்டா?

said...

அட, அட, அட..

ஒங்க பதிவ விட நீளமாருக்குங்க சில பின்னூட்டங்கள்..

மாணவனுக்கு டவுட்டுன்னா டீச்சர்கிட்ட போலாம்.. டீச்சருக்கே டவுட்டுன்னா.. மணியன் சும்மா நச்சுன்னு கேட்டுட்டார்..

சாரிங்க நாந்தான் கொஞ்சம் லேட் போல..

அதுசரி அது என்ன கடப்பாற டவுட்.. அதவச்சி வேற ஏதாவது செய்ய போறீங்களா என்ன?

said...

டிபிஆர்ஜோ,

நீங்க நினைக்கிற மாதிரியில்லைங்க, இந்தக் கடப்பாரைத் தேவை.

(கோபால் நலம்):-)))))

வீட்டுக்கு லோ மெயிண்டெனன்ஸ்னு
புல்தரை போட்ட பாக்கி இடம் இருக்கு பாருங்க வீட்டைச் சுத்தி, அங்கே தரையை காம்பேக்ட் செஞ்சு அதுலே பெப்பிள்ஸ் பரத்தி இருக்கோம். டக்'னு பார்த்தா பீச்லெ இருக்கற உணர்வு வருது.( எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு)

இப்போ சோலார் லைட்டுகளை ஓரமா வரிசையா நட்டு வைக்கணும். குழியாத் தோண்டுனா காம்பேக்ட் பண்ணது கலைஞ்சிருமே. கடப்பாரைன்னா 'நச்'ன்னு நேரா குழிச்சு நடலாமுன்னுதான்.

said...

இந்தக் கல்லுளி மங்கன், அப்படீன்னு சொல்வாங்களே1
அவனைப் பத்திச் சொல்லும்போது நம்ம ஊருல, குறிப்பாகத் தஞ்சை மாவட்டத்தில்,
இப்படிச் சொல்வார்கள்!


"அவனா! அவன் கடப்பாரையையும் முழுங்கிட்டு இஞ்சி கஷாயமும் சாப்பிட்டுவிட்டு வருவானே!"


சரி, படிச்சுப் பாத்தா ஒண்ணும் புரியலே!

கடப்பாரைக்கு ஆங்கில சொல் கிடைச்சுதா இல்லியா!?

said...

SK,

//சரி, படிச்சுப் பாத்தா ஒண்ணும் புரியலே!//

என்ன புரியலை? எதைப் படிச்சீங்க? எனக்கொண்ணும் புரியலையே?:-)))

இன்னும் ஆங்கிலவார்த்தை கிடைக்கலை(-:

said...

A search found 3 entries with கட்டப்பாரை in the entry word or full text. The results are displayed using roman characters without diacritics and South Asian scripts.
alavangku (p. 33) [ alavāngku ] , s. crowbar, kattapparai.

kattapparai (p. 181) [ kaṭṭappārai ] , s. (Tel.) a crow-bar.

parai (p. 687) [ pārai ] , s. a crow-bar, kattapparai; 2. a flat fish of several varieties.

paraikkol, an iron-bar.

said...

'[k]கடப்பாரை' தேடினேன்!
'கடப்பாறை' தேடினேன்!

'[g]கடப்பாரை' தேடினேன்!
'கடப்பாறை' தேடினேன்!

கடைசியில்,.......

கட்டப்பாரை தான் கிடைத்தது!


:))

said...

SK,
உங்க விடாமுயற்சிக்கு உண்மையான நன்றி.

said...

எஸ்கே, துளசி அக்கா, எல்லாரும் என்னைக் குழப்பறீங்க.. ஆங்கிலவார்த்தை இருக்கட்டும்..

கடப் பாரையா? கடப் பாறையா? சரியானது எது?!!!

said...

பொன்ஸ்,

பாறையை உடைக்கிறப்போ இது கடப்பாறை.

சும்மா ஓரமா இருக்கும்போது இது 'இரும்பு பார்' இல்லையா, அப்போ கடப்பாரை.


சந்தேகம் தெளிவிச்சதுக்கு பொற்காசுகள் உடனடியா அனுப்பவும்:-))))

said...

சும்மா இந்தப் பக்கம் 'கடப்பாரை' எல்லாம் வந்து பின்னூட்டம் போட வைக்குதே இந்தப் பதிவு. வெரி குட்.

said...

இன்னும் இங்கிலிபீஸுலே பேர் தெரியலையே, கொத்ஸ்(-:

said...

துளசி அக்கா (ஹை இதுகூட நல்லாதான் இருக்கு),

நீங்க கடப்பாரைக்கு இங்க்லீஷ்ல என்னன்னு உலகமே உங்களுக்காக விழுந்து விழுந்து தேடுது. அட.. அட..

//அக்கா, கடப்பாறை (பாறை தானே? பாரை யா?)எல்லாம் வச்சி என்ன செய்யறீங்க?!! மாமா பாவங்கா... :)//

அதானே.. எதுக்கும் மாமாவ எதுத்து பேசவேணாம்னு முன்னாடியே சொல்லிடுங்க !!

//இதுவரை இந்த ஊர்ல கடப்பாறை வாங்குற வேலை வரலை.. வாங்கி இருந்திருந்தா தெரிஞ்சிருக்கும் :)//

ஆமா.. நாங்க எல்லாம் இத்தனை வருசம் அமெரிக்காவுல இருந்துகிட்டு டெய்லி கடப்பாரையோடதான் சுத்திட்டிருக்கோம் பாருங்க..

said...

ஓ இது பழைய மேட்டரா. நான் இப்பதான் மெதுவா வந்து பாக்கறேன். சரி, முடிவா என்னதான் வார்த்தை?

said...

துள்சிங்க...

வந்துட்டேன் ஒரு புது யுக்தியோட, ஏங்கா எப்பப் பார்த்தாலும் வெள்ளைக் காரங்களெ நம்பிக்கிட்டு, இந்த *கடப்பாரை* ஒரு indigenous product - நம்மூருல மட்டுமே ஒரு குறிப்பிட்ட நீள அகலத்தோட பார்க்க முடியுறதாலே - இப்பே நாமே இதுக்கு ஒரு பெயர் வைக்கப் போறொம், சிம்பிள் - let it be "CUDBAR' ;-))) எப்படி கட்டுமரம் cuttamara ஆனோச்சோ அதோ மாதிரித் தான் இதுவும்.

சரி நீங்க ஆக்ஸ்போர்ட் பக்கமா போனா இந்த வார்த்தையை முன்மொழியுங்க அதெ நான் போயி வழிமொழிந்துடறேன்... :-)))

said...

ரமணி,

மேட்டர் ரொம்ப சிம்பிள். அக்கம்பக்கத்துலே இருக்கற தரை அலுங்காம நேரா ஒரு துளை
பூமியிலே போடணும். (பூந்தொட்டியிலே ரோஸ் குச்சியை நட்டுவைக்க ஒரு கம்பியாலே நேரா
குத்திட்டு நட்டுருவேன். அது பாட்டிங் மிக்ஸ் என்றபடியாலே சுலபமாக் குழி இறங்கிடும்.)
இதுவே ஏற்கெனவே கெட்டிப்படுத்திய தரைன்றபடியாலேதான் இந்தக் கடப்பாரைத் தேடல்.

அப்புறம் ஒரு கடையிலே 'கன்ஸ்ட்ரக்ஷன் டூல்ஸ்' என்ற ஷெல்ஃப்லே கண்டு பிடிச்சேன்.
அங்கேயும் க்ரோபார்ன்னுதான் எழுதி வச்சிருக்கு. ஆனா இது நம்ம கடப்பாரை மாதிரியே
இருக்கு. ஆனா இரும்புத் தண்டு வழுவழுன்னு இல்லாம 'பட்டை' போட்டுருக்கு.

கையிலே எடுத்துப் பார்க்கலாமுன்னா தூக்கவே முடியலை. கனமான கனம். விலையும்
90$. கட்டாயம் இது வேணுமா? 20$க்கு 8 சோலார் லைட்ன்னு வாங்கி வச்சிருக்கறதை
நட்டு வைக்க இது டூ மச்ன்னு ஆனதாலே கடைசியிலே வாங்கலை(-:

said...

வாங்க தெ.கா.

பேசாம நீங்க சொன்னாப்புலே நம்மளே பேர் வச்சுரவேண்டியதுதான். அப்படியே செய்யலாம்.