சண்டை, போர், வார்னு சொல்லிக்கிட்டு இருக்கோமே, நமக்குத் தெரிஞ்ச சண்டைங்க எது? எல்லாம், (அட சினிமாவுலேபார்த்ததையெல்லாம் வச்சு )இப்படித்தான் இருக்கும்னு ஒரு எண்ணம் வந்துருக்குதானே?
கோட்டையைக் கட்டிக்கிட்டு ராஜா உள்ளெ இருப்பார். எதிரி வந்து முற்றுகை போடுவார். ரெண்டு தரப்புலேயும்உயிர்ச்சேதம் இத்யாதி...... இல்லையா, ரத கஜ துரக பதாதிகள்னு நால்வகைப் படையோடு வந்து ஒரு பெரிய மைதானத்துலே எதிரும் புதிருமா நின்னு, சரிக்குச் சரியாப் போடற சண்டைகள். அதுவும் இல்லையா, மந்திரஅஸ்த்திரங்கள் எல்லாம் 'சர்சர்'னு வில்லுலே இருந்து புறப்பட்டு எதிரிகளைக் கொல்ற ராமாயணப்போர்.......
இதெல்லாம் ரொம்பப் பழைய முறைகள். எல்லாம் இப்ப ரொம்ப மாடர்னா வந்துருச்சுன்னு சொன்னாலும், ஒரு 130 வருசத்துக்கு முன்னாலே இங்கே நடந்த சண்டைகள் எல்லாம் கொஞ்சம் வேற மாதிரிதான் இருந்தது.
ஒரு தோப்புக்குள்ளே ரெவி மனியாபோடோ( Rewi Maniapoto)ன்றவர் வெவ்வேற மவோரி குழு ஆட்கள் 300 பேரை வச்சு ஒரு 'பா ( pa)' ன்ற போர்க்குழுவை உண்டாக்குனாரு. அவுங்களை எதிர்க்க, ச்சின்ன பீரங்கியெல்லாம் எடுத்துக்கிட்டு 2000 பிரிடிஷ் படைவீரர்கள் வந்துட்டாங்களாம். மூணு நாள் தாக்கு பிடிச்சிருக்காங்க. 'பேசாம சரணடைஞ்சுருங்க'ன்னு ஜெனெரல் கேமரோன் சொன்னதுக்கு, நம்ம ரெவி 'முடியவே முடியாது'ன்னு சொல்லிட்டாராம்.திடீர்னு 'பா'லே இருந்தவங்க எல்லாம் வெளியே ஓடித்தப்பி இருக்காங்க. எதிரிங்க பார்த்துக்கிட்டு சும்மா இருப்பாங்களா?பாய்ஞ்ச்சாங்க. 150 பேருக்கு ஆயுள் முடிஞ்சது. பேர் பாதி தப்பிச்சுருச்சு.
இப்படியே வேற இடங்களிலும் நடந்துக்கிட்டு இருந்துச்சு. எட்டு வருசம் இதே கதி. வைக்காட்டோ, டாவ்ராங்கா,டாரனாகின்னு பல இடங்களிலே இந்த நிலங்களையெல்லாம் வெள்ளைக்காரங்க பிடிச்சுக்கிட்டாங்க. இந்த 'டாரனாகி'ன்னு சொல்ற இடத்துலேதான் மொத மொதல்லே மவோரிங்க ஒரு ராஜாவைத் தேர்ந்தெடுத்தது. அந்த இடத்தை இப்பவும்'கிங் கண்ட்ரி'ன்னு தான் குறிப்பிட்டுப் பேசறாங்க.
நம்ம வில்லியம் தாம்ப்ஸன், கிறிஸ்த்துவ மதத்துலே தீவிர நம்பிக்கை வச்சுட்டார். இங்கே இருந்த வெவ்வேற குழுக்களுக்கும்,வெள்ளை இனத்துக்கும், சமாதானம் உண்டாகறதுக்காக பாடுபட்டார். ஆனாலும் ரெண்டு பிரிவுக்கும் சண்டைநடந்துக்கிட்டுத்தான் இருந்துச்சு. சிப்பாய்க்கலகம், பானிப்பட்டு யுத்தம்னு சண்டைகளுக்கு நம்ம பக்கம் பேர் இருந்தமாதிரி, இங்கேயும் பேர் இருந்துச்சு.
மவோரிங்க இதை டெரிரி பாகிஹா, வெள்ளையரின் கோபம்(teriri pakeha, the white man's anger)சொன்னாங்க.
வெள்ளைக்காரங்க ( pakeha) என்னத்துக்கு நீட்டி முழக்கறதுன்னு, ரொம்ப சிம்பிளா 'மவோரி வார்'னு சொல்லிட்டாங்க.
டெ ஆவாமுட்டு( Te Awamutu)ன்ற இடத்துலெ இருக்கற ஒரு தேவாலயத்துலே , இந்த சண்டைகளிலே இறந்துபோன மவோரிகளுக்கு ஒரு நடுகல் வச்சாங்க, 'எதிரிகளை நேசி' ( I say unto you, love your enemies)ன்னு.இது உண்மைதானாம், பிரிட்டிஷ் படைகள் மவோரி எதிரிகளை ரொம்ப மரியாதையோடுதான் நடத்துனாங்களாம்.
இந்த கலாட்டாங்களுக்கு நடுவிலே புதுசா ஒரு மதம் உருவாச்சு. இதுக்குப் பேரு ஹவ் ஹவ்( Hau-Hau) இதுலேசேர்ந்துக்கிட்டவங்க எல்லாம் சண்டை போடறப்ப 'Pai marire hau-hau'ன்னு கத்தினாப் போதும். வெள்ளைக்காரங்க துப்பாக்கி குண்டு இவுங்க மேலே பாயாது, ஆபத்து இல்லைன்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க. இதெல்லாம் நம்பறமாதிரியா இருக்கு? குண்டடி பட்டு இவுங்களும் செத்துக்கிட்டுத்தான் இருந்தாங்க. மனுஷனுக்கு மதங்களை சிருஷ்டிக்கறதுக்குப் பிடிச்சிருக்கு.இல்லீங்களா?
Pai marireன்னு சொன்னா Good & Peaceful னு அர்த்தமாம். இங்கே டாரனாகி ( Taranaki)லே இருக்குற Te Uaடெ உவா ன்றவர்தான் இந்த மதத்தை உண்டாக்குனார். இவர்கிட்டே இருந்தவங்களிலே டிடொகொவாரு(Titokowaru) ன்னு ஒரு குழுத்தலைவர் இருந்தார். பயங்கரமான ஆள். இவர் வெள்ளைக்காரங்களைப் பயமுறுத்தி சில இடங்களையெல்லாம் மீட்டார்.
அதெப்படி இவருக்கு மட்டும் வெள்ளைக்காரன் பயந்துட்டான்? ரொம்பவே சிம்பிள். 'மவோரிங்க நரமாமிசம் சாப்புடறவங்களா மாறப்போறோம்'னு அறிவிச்சார். கத்தியாலே சாதிக்க முடியாததை புத்தியாலே சாதிக்கறது இப்படித்தான் போல!
பிரிட்டிஷ்காரர்களுக்கு நண்பனா டெ கூடி( Te Kooti)ன்னு ஒரு மவோரி, கிழக்குக் கடற்கரைப் பக்கம் இருந்தார்.வெள்ளைக்காரங்ககூட சேர்ந்துக்கிட்டு தன் இனத்து எதிரா சண்டையும் போட்டார். ஆனா, வெள்ளைக்காரங்க இவரைநம்பலை. ஹவ்-ஹவ் மதத்துக்கு இவர் ரகசியமா உதவறார்னு நினைச்சுக்கிட்டு, இங்கே இருக்கற இன்னொரு தீவான சாத்தம் தீவு( Chatham Islands)க்கு இவரை கடத்திட்டாங்க. அங்கெ போன டெ கூடி, பைபிளை நல்லாக் கரைச்சுக் குடிச்சுட்டு,ரிங்காட்டு(Ringatu- the Upraised Hand)ன்னு இன்னுமொரு புது மதத்தை உண்டாக்கிட்டார். அவருக்கும் ஒருகூட்டம் சேர்ந்துச்சு. 1868லே சாத்தம் தீவுலே இருந்து படகுலே இங்கே நியூஸிலாந்துக்கு வந்து இங்கே செட்டில்ஆகி இருந்த 'வெள்ளைக்கார செட்டிலர்கள், அவுங்களுக்கு நண்பர்களா இருந்த மவொரிகள்' னு பலரையும் கொன்று குவித்தார்.
ச்சீச்சீ, ரொம்ப ரத்தக் களறியாப் போச்சுங்களே.......... மதம் என்ற பெருலே மக்களைக் கொல்றது நல்லவா இருக்கு?
தீர்க்கதரிசிங்க அப்பப்ப உதிக்கறாங்களாமே. அதுபோல உதிச்சவர்தான் டெ விடி( Te Whiti). அமைதியான முறையிலே எதிர்ப்பைக் காமிக்கணுமுன்னு சொன்னார். டாரனாகியிலே இருக்கற 'பாரிஹக'ன்ற கிராமத்தைச்சேர்ந்தவர். 'மதுவைக் குடிக்கக்கூடாது. நீண்ட நேரம் சாமி கும்புடணும்'னு சொல்லிக்கிட்டு இருந்தார். இவருக்கும் ஒரு கூட்டம் சேர்ந்துச்சு. சர்வேயர்கள் அளந்து குச்சி நட்டு வச்சிருந்த நிலத்தையெல்லாம் இவுங்க திருப்பி எடுத்துக்கிட்டு, அங்கே உழவு செஞ்சு பயிர் போட ஏற்பாடு செஞ்சுக்கிட்டு இருந்தாங்க.
வெள்ளை அரசாங்கம் இதைக் கேள்விப்பட்டு, தடுத்து நிறுத்தறதுக்காக, 1600 படைவீரர்களை அனுப்புச்சு. இங்கே வந்து பார்த்தா, நிலம் முழுசும் நூத்துக்கணக்கான ச்சின்னப் புள்ளைங்க! ஆடிக்கிட்டும், பாடிக்கிட்டும் இருக்குதுங்க.எல்லாம் இந்த டெ விடியோட வேலை. இந்த ஆள் ஒரு புதுத் தலைவலின்னு, பிடிச்சு 'உள்ளே' போட்டுட்டாங்கஒரு வருசத்துக்கு.
இந்த நியூஸிலாந்து போர்களிலே ரெண்டு பக்கத்துலேயும் சரிசமமா ஆயிரம், ஆயிரம்னு ஆட்கள் செத்துப் போனாங்க.
வீரர் டிடொகொவாரு, அதாங்க ஹவ்ஹவ் க்ரூப் ஆளு, அவரை யாராலேயும் ஜெயிக்க முடியலை. ஆனா திடீர்னு1869லே அவரோட ஆட்கள் எதோ மர்மமான முறையிலே அவரை விட்டுப் பிரிஞ்சு போயிட்டாங்க. இவர் மட்டும் அம்போன்னு நின்னுட்டார். அதுக்கப்புறம் தனியா இவராலே தாக்குப் பிடிக்க முடியலை. இவரோட கதை கந்தலாயிருச்சு. பாவம்.
1880வரை, 'கிங் கண்ட்ரி'யிலே வெள்ளைக்காரங்களை நுழையவெ விடாம மவோரி ராஜாவும் அவரோட குழுவும் சாமர்த்தியமாப் பார்த்துக்கிட்டாங்க தான். அதுக்கப்புறம் கொஞ்சம் கொஞ்சமா அங்கெயும் தொய்வு. படைகள் பலவீனப்பட்டுப் போச்சு.நிலத்தைக் காப்பாத்தணுமுன்னு இனியும் சண்டை போட்டுச் சாவறதுலெ அர்த்தமே இல்லை.பேசாம இருக்கறதைவித்துட்டுக் காசாவது பார்க்கலாமுன்னு அவுங்களும் நிலத்தை விக்க ஆரம்பிச்சுட்டாங்க.
ஒரு வருசம், ஜெயிலுக்குள்ளே இருந்த டெ விடி பல விஷயங்களைக் கத்துக்கிட்டு வெளியே வந்தார். அவரோட கிராமத்துக்குப் (பாரிஹக-Parihaka) போய், நாகரீகமான முறையிலே குழாய்த்தண்ணி, மின்சாரவசதியோடு கூடிய ஒரு மாடல் கிராமம் உருவாக்குனார். வெள்ளையர்களோட உலகத்துலே ஜெயிச்சு வரணுமுன்னா, நம்ம ஆட்களும் நாகரீக வாழ்க்கைமுறையோடு இருக்கணும். பட்டிக்காடா இருந்து பிரயோஜனமில்லைன்னு சொன்னாராம்.
ரெண்டு பக்கத்து ஜனத்தொகையும் கொஞ்சம் கொஞ்சமாப் பெருகி வந்துச்சு. வெள்ளைக்காரங்களோட ஜனத்தொகைதான் கூடிக்கிட்டே போய் இங்கே இருக்கற மவோரிகளைவிட அதிகமாப் போச்சு. அதான் இங்கே ஏற்கெனவே வந்து சேர்ந்தாங்களே,அவுங்களோட சொந்தக்காரங்களும், நண்பர்களும் நல்ல வாழ்க்கைதேடி அலுக்காமப் பயணம் பண்ணி வரத் துணிஞ்சிட்டாங்களே!
நடந்த சம்பவங்கள் எல்லாம் அப்படி ஒரு ஆச்சரியமானது இல்லேன்னாலும், இந்த மவோரி ஜனங்களொட பேர்களும், அவுங்க ஊருங்களோட பேர்களும் சொல்றதுக்கும், ஞாபகம் வச்சுக்கறதுக்கும் நமக்குக் கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்குல்லே. இதுவே கொஞ்சம் அலுப்பாவும் ஆயாசமாவும் போயிருது. அதுக்காக, பேர்களை மாத்திவச்சுக்க முடியுதா? ஆனா இதே கஷ்டம் அவுங்க பக்கத்துலேயும் இருக்குமுல்லெ?
மொத்தத்துலே பரிச்சயம் இல்லாததாலேதான் சரித்திரம் போரடிச்சுப் போயிருதோ?
இன்னிக்கு வகுப்புலே நிறைய ரத்தம் பார்த்துட்டோம். மனசுக்கு நல்லாவே இல்லை.....
Wednesday, May 24, 2006
நியூஸிலாந்து பகுதி 37
Posted by துளசி கோபால் at 5/24/2006 11:57:00 AM
Subscribe to:
Post Comments (Atom)
14 comments:
பரவாயில்லே துளசிக்கா
http://thacnathaku.blogspot.com/ போய் பாருங்க
//மொத்தத்துலே பரிச்சயம் இல்லாததாலேதான் சரித்திரம் போரடிச்சுப் போயிருதோ?//
ஆமாங்க, நடுநடுவுலே நகைச்சுவையை நீங்கள் தெளிக்கவில்லையென்றால் இன்னுமே போரடிச்சுப் போயிடும். :(
திருப்பி கச்சேரி ஆரம்பிச்சிட்டீங்களா, நல்லது!
எவ்வளவு சண்டை போட்டும் பார்த்தீங்களா, ஆங்கிலேயர்கள் உள்ள நுழைஞ்சு நாட்டு ஆள்றாங்க!
//சண்டை, போர், வார்னு....//
ஆகா நல்லா ஆரம்பிச்சிருக்கீங்கனு ஒரு அவசரத்துல போர் உடை இல்லாம வந்துட்டேன்.
கத்தி ரத்தம் பாத்துட்டுது... அட என் கத்தி இல்லீங்க என் ரத்தம் தான்.
இருங்க பாண்டேஜ் போட்டுக்குனு வந்துற்றேன்.
இப்ப சந்தேகம்... அந்த காலத்துல பாண்டேஜ்லான் இருந்துது இல்ல?
மிஸ் சந்தேகம் கேட்டுப்புட்டேன்.:-))
பெரு(சு)
எதுக்குப் பரவாயில்லை?
காலை '6' மாதிரி சுத்தறதுக்கா:-))))
மணியன்,
வேற என்னங்க செய்யறது? எப்படியாவது 'சிரிப்பைக் கொண்டு வெறுப்பைப் போக்கணும்'தானே?
( ஐய்யோ, எனக்கென்னமோ ஆகிப்போச்சு, இப்படி ரைமிங்கா வார்த்தைங்க வந்து வுழுதே!)
வாங்க உதயகுமார்.
ரொம்ப நாள் நிலுவையிலே நிக்குதே.... அதானிந்த வாரம் ஆரம்பிச்சுட்டேன்.
ஆங்கிலேயர்கள் ஒரு நாட்டுலே நுழைஞ்சால்.... அது 'ஆமை 'புகுந்த வீடுதானே?
துளசி, தெளிவாவே இருக்கு. ரத்தமில்லாமே எந்த நாடு சரித்திரம் படித்தது? தெரிஞ்சும் இன்னும் சிந்திக்கிட்டேதானெ இருக்காங்க? நல்லா இருந்த்ததுப்பா.பெரெல்லாம் தான் வாயிலே நுழையக் கஷ்டப்படுது. அதனாலே என்ன என் பேரும் தான் அவங்களுக்கு சிரமம். உங்களை மாதிரி டீச்சர் எங்களுக்கும் இருந்தாங்க. நவமணி மிஸ்.அவங்க சொல்லிக்கொடுத்த சரித்திரம் இன்னும் மறக்கலை. அது போல இதுவும் மறக்காது. நன்றி.
வல்லி,
நன்றின்னு சொல்றதைப் பார்த்தா 'நைஸா க்ளாஸ்லே இருந்து ஜகா வாங்குற மாதிரி' இருக்கே?:-))))
நன்மனம்,
சந்தேகம் பாடத்துலெ இருக்கணும், 'பாண்டேஜ்'லே இருக்கக்கூடாது!
thanks pa. vera eppadi nanriyai therivikkirathu? namakku ippadi paadam nadaththinaal thaan theriyum.
puriyum. ore he storyaa irukke.
ladies yaarum saritthiram padaikkaliyaa ange?
history of the erstwhile world is the history of violence--MARX
இப்படி சொல்லலாமா, மிஸ்?
'ஏடறிந்த வரலாறெல்லாம் வன்முறையின் வரலாறே'
ஏனெனில், ஏட்டில்(எழுத்தில்)உள்ளதற்கும் முற்பட்ட வரலாறு
யாருக்குத்தெரியும்?
ஒரு வேளை டீச்சருக்குத் தெரியுமோ?
மிஸ், சந்தேகம் கேட்டுபுட்டேன்....
க்ளியர் பண்ணுங்க
சி.ஜி,
அதான் நீங்களே சொல்லிட்டீங்களே, 'ஏடறிந்த'ன்னு!
'எழுதுனவன் ஏட்டைக் கெடுத்தான், பாடுனவன் பாட்டைக் கெடுத்தான்'ன்னு ஒரு பழஞ்சொல் இருக்கு.
அப்படியும் அவுங்க எதாவது எழுதப்போயித்தானெ இவ்வளவாவது தெரிய வந்துருக்கு.
அதுக்கு முன்னாலே நடந்தது என்னன்னு தெரியாதுதான். எனக்கு அந்த ஜென்மத்துலே நடந்தது மறந்து போச்சு!
இப்ப இங்கே புது தியரி என்ன சொல்றாங்கன்னா, மவோரிகளுக்குமுன்பே சீனர்கள்தான் இந்த நிலத்தை முதன்முதல்லே கண்டு பிடிச்சாங்கன்னு.
இப்பத்தான் ஆரம்பமாயிருக்கு. இனி போகப்போகத்தெரியும்.
அதுவரை 'டெக்ஸ் புக்'லே இருக்கறதைத்தான் நம்பணும், ஆமா.
Post a Comment