பழசை எடுத்துப் போட்டா இப்படித்தானேங்க சொல்லணும்?
வலைப்பதிவாளர்கள் டைரக்டரிக்காக, என் முதல் பதிவு போட்ட தேதியை ஆராயப்போக இது கண்ணுலே பட்டுச்சு.
'அப்ப' இருந்ததை விட 'இப்ப' பதிவாளர்கள் எண்ணிக்கை ஏறக்குறைய 'டபுள்''
ஆகிப் போச்சுங்களா, அதனாலே திருப்பி எடுத்து விட்டா, புது நண்பர்கள் பார்க்க ஒரு ச்சான்ஸ் கிடைக்குமேன்னுதான்....... இது................
--------
1, 2, 3 என்று வரிசைப் படுத்திப்.....
ஒரு நாளு ச்சும்மா அப்படியே வல மேய்ஞ்சுகிட்டு இருந்தப்ப 'கிரியேட் யுவர் ஓன் ப்ளாக்' ன்னுமேலே ஓடிகிட்டு இருந்தது. அதைப் பார்த்தேனே தவிர, வேற ஒண்ணூம் மனசுலே தோணலை.
இதுக்கு ரொம்ப நாள் கழிச்சு, வேற ஒரு சமயத்துலே இதே ஓட்டத்தைப் பாத்தேன்.
ரொம்ப பழைய சினிமா ஒண்ணு, பேரு 'ரத்னகுமார்' அதுலே கதாநாயகன் ரொம்ப ஏழை. சாப்பாடு இல்லாமஒரு பாழுஞ்சத்திரத்திலே தூங்கிகிட்டு இருப்பார். அப்ப 'திடீர்'னு ஒரு பயங்கரமான சத்தம் வரும். பூமி
எல்லாம் நடுங்கும். பாத்தா ஒரு எலும்புக்கூடு, பெரிய பாறாங்கல்லைத் தலைக்கு மேலத் தூக்கிகிட்டு நிக்கும்!
'போடட்டுமா போடட்டுமா'ன்னு கேக்கும். நம்ம நாயகன் பயந்து ஓடுவாரு. எங்கே? எல்லாம் அந்தக் கட்டிடத்துக்குள்ளேய தான்!
எலும்புக்கூடும் விடாம அவரு போற இடத்துலே எல்லாம் 'டாண்'னு ஆஜராகும். நாயகன் சலிச்சுப் போய் 'போட்டுதான்
தொலையேன்' அப்படிம்ம்பாரு. அது கல்லை 'டமார்'னு கீழே போடும்.
இன்னொரு பூகம்ப, புகை .
அடுத்த நொடியிலே ..! அட!
அதே பாழடைஞ்ச இடம் ஒரு அரண்மனையாக மாறி இருக்கும். நாயகனும் 'ராஜா'உடுப்பு போட்டுகிட்டு இருப்பார்.எலும்புக்கூடு சாப விமோசமன்ம் கிடைத்து ஒரு தேவனா இருக்கும். ஒரு மோதிரத்தை நம்ம கதாநாயகனுக்குக் கொடுக்கும்! இப்படிப் போகும் கதை!
இப்ப இதை எதுக்குச் சொல்லறேன்னா, நானும், அடிக்கடி இந்த 'வலப்பதிவு ஆரம்பிங்க'ன்னு ஓடறதைப் பார்த்துட்டு, என்னதான் சொல்லுதுன்னு உள்ள்போனா, 'திருவிளையாடல் படத்துலே அவ்வையே, எமை 1 2 3 என்று வரிசைப் படுத்திப் பாடுக'ன்னு வரமாதிரி வருது!
க்ளிக்,க்ளிக்,க்ளிக். வந்துருச்சு. எல்லாம் உங்க போதாத காலம்! 'என்ன பேரு வைக்கலாம், எப்படி வைக்கலாம்'னு முடிவு செய்யததாலேமனசுலே வந்த பேரையும் போட்டாச்சு.
முதல் பதிவு போட்டுப் பாக்கிறேன். ஐய்யோடா? எழுத்து என்னவோ போல வருதெ!
நம்ம 'காசி' இருக்கற தைரியத்துலே, அவருக்கு மடலுக்கு மேலே மடலா அனுப்பி, அவருக்குப் பைத்தியம் பிடிக்கற லெவலுக்குக்கொண்டுபோனேன். நம்ம காசிக்கு,'பொறுமையின் பூஷணம்' என்ற பட்டத்தை நியூஸிலாந்து வட்டம் சார்பாக அளிக்கின்றோம்!
அப்புறம் அவரோட'தமிழிலில் வலை பதிக்க வாரீங்களா?'வை (இப்பத்தான நிதானமா)படிச்சு, குழப்பம் எல்லாம் நாம வச்சிருக்கற ஒண்ணா நம்பர் கலப்பையாலெதான். ரெண்டு நம்பர் கலப்பை இருக்கணும்னு தெரிஞ்சிகிட்டு,அதை இறக்கினப்புறம் எல்லாம் சரியாச்சு!இன்னும் சிலது சரியா இல்லெ, ஆனா அதையெல்லாம் மெதுமெதுவா சரி செஞ்சுரலாம். உதவறதுக்கு நீங்கெல்லாம் இருக்கறீங்கதானே?
இதை இப்ப எழுதறது எதுக்குன்னா, என்னைபோல சில பேரு எங்கேயாவது இருக்கலாம். கணினி கைநாட்டான எனக்கே புரியறமாதிரி, நம்ம காசி எழுதியிருக்கிறாரு. அவுங்க இந்த சேவையைப் பயன்படுத்திகிட்டு, வலைப் பதிவு செய்யுங்க. 'வந்து இந்த ஜோதியிலே கலந்துருங்க'்னு அன்போடு அழைக்கிறேன்!
இன்னொரு முக்கியமான விஷயம்.
இந்த வலைப்பதிவுகளிலே நான் இடம் பிடிச்சு உக்கார்ந்து இருக்கறதுக்கிப் பின்னாலே பலபேருடைய உழைப்பு அடங்கியிருக்கு!அவுங்களுக்கெல்லாம் என் நன்றியைத் தெரிவிக்காம இருந்தா நான் ஒரு 'நன்றி கொன்ற பாவி'யாக இருப்பேன்.
முதலிலே என்னையும் ஒரு படைப்பாளியா ஏத்துகிட்ட நம்ம 'மரத்தடி'க்கு, ( எனக்கு ஏதாவது எழுத வருமான்னே எனக்குத்தெரியாது)அதன் மட்டுறுத்தினர்களுக்கு, அப்புறம் மதி, காசி, ரவியா,சுபமூகா, ஷக்தி, உஷா,குமார்,கேவிஆர்,பரி,பத்ரி,அருள்குமரன்,யூனா,ஜெயந்தி சங்கர்,சங்கமம் விஜயகுமார், இன்னும் தனி மடல்களிலே அன்போடு வாழ்த்துக்கள் தெரிவிச்சவங்க, ஐய்யய்யோ பட்டியல்ரொம்ப நீளமாப் போகும்போல இருக்கே, ஐந்நூறு பேருக்குமேல ( இப்ப மரத்தடிலே எவ்வளவு உறுப்பினர் ? )அனைவருக்கும் என்நன்றியை ( நன்றிக்கு வேற வார்த்தைத் தமிழிலலே இருக்கான்னு சொல்லுங்க ப்ளீஸ்) தெரிவித்துக் கொண்டு இந்த சிற்றுரையை(!) முடிக்கிறேன்.
வணக்கம்.
ஏம்ப்பா, யாராவது ஒரு சோடாவை உடைச்சுத் தாங்க!
Friday, May 26, 2006
இது ஒரு மீள் பதிவு.
Posted by துளசி கோபால் at 5/26/2006 10:03:00 AM
Subscribe to:
Post Comments (Atom)
26 comments:
இது எப்போ எழுதினதுங்க.. நீங்களும் கலப்பையாலதான் உழுதுட்டிருக்கீங்களா? நானும் அதே.
ரமணி,
இதைத்தான் 'விடிய விடிய ராமாயணம் கேட்டுட்டு, சீதைக்கு ராமன் சித்தப்பான்னு சொன்ன கதை':-))
அதான் முதல் பதிவுன்னு கொட்டை எழுத்துலே கலர் போட்டுக் காமிச்சுருக்குல்லே:-))))
முதல் பதிவு சரிதாங்க. அதான் எப்போ?
செந்தில் வாழைப்பழம் ஜோக் மாதிரி இருக்கா.. எந்த ஆண்டு, மாசம்னு கேக்கறேன்.
ஹெல்லோ துளசி குட் மார்னிங்.எழுத ஆரம்பிச்சதுமே இத்தனை நகை சுவையா?இது புன்னகைப் பதிவு.
இப்போ வரதெல்லாம் என் எஸ் கே. பெருஞ்சிரிப்பு.:-))))))))இன்னொரு கதை. அது யாரெல்லாம் அக்காவைப் பார்த்து கத்துக்கிட்டாங்கன்னு போடவும்.மனு
தினம் ஒரு பதிவுன்னு ஆரம்பிச்சிட்டீங்க போலருக்கு? எதுவும் கிடைக்கலேன்னா திரும்ப ஒண்ணுலேர்ந்தா?
தேவுடா காப்பாத்துறாப்பா...
தயவு செஞ்சு புதுசா வரவய்ங்க துளசிதளத்தை முழுசுமா படிச்சுடுங்க புண்ணியமா போகும்.
ரமணி,
வலை பதிய ஆரம்பிச்சது செப்டம்பர் 24. வருஷம் 2004.( கோபாலோட பொறந்தநாள்)
ரெண்டு மூணு ச்சின்ன பதிவு டெஸ்ட்டாப் போட்டுப் பார்த்ததும்,
கொஞ்சம் பெருசாப் போட்டது இதுதான், 29/09/2004
வாங்க வல்லி.
பிடிச்சிருந்ததா? சந்தோஷம்.
நீங்க இப்படிச் சொல்லி என்ன பயன்? சந்தோஷத்தை அனுபவிக்க விடாம 'கிவியன்' அடிக்கவர்றார் பாருங்க:-)))
சுரேஷூ,
இது நல்ல ஐடியாவா இருக்கேப்பா,
இதோட எண் 355. இனும் 10 போட்டுட்டோமுன்னு வச்சுக்குங்க.365.
நாளுக்கு ஒரு ரிப்பீட்டு..:-)))))))
பி.கு: அப்ப இதுக்கு பின்னூட்டமே வரலை. (-:
அதுக்குத்தான் இப்பப் போட்டது:-))))
அப்போது பின்னூட்டம் வராத இடுகைகளெல்லாம் ரிபீட்டா ?
மணியன்,
பாயிண்டைப் புடிச்சதுக்கு தேங்க்ஸ்:-)))))
இந்தாங்க. :)
இது அந்த பதிவுக்கான பின்னூட்டம்.
இந்தாங்க. :)
இது இந்த பதிவுக்கான பின்னூட்டம்.
// மணியன் said...
அப்போது பின்னூட்டம் வராத இடுகைகளெல்லாம் ரிபீட்டா ?
துளசி கோபால் said...
மணியன்,
பாயிண்டைப் புடிச்சதுக்கு தேங்க்ஸ்:-))))) //
சொல்லிட்டீங்க இல்ல. இனி உங்களோட பின்னூட்டம் இல்லாத பதிவா பாத்து ஒரு குத்து போட்டா போச்சு. அப்ப தான் உங்க புது கற்பனை கிடைக்கும்.:-)
//இன்னொரு கதை. அது யாரெல்லாம் அக்காவைப் பார்த்து கத்துக்கிட்டாங்கன்னு போடவும்.மனு//
அக்காவைப் பார்த்து கத்துகிட்டவங்க பத்தி பதிவு போடணும்னா 356 எல்லாம் பத்தாதே!! :)
கொத்ஸ் & நன்மனம்
கற்பூர புத்தி போங்க.
ம்ம்ம் நடக்கட்டும். நல்லாத்தான் இருக்கு.:-)))))
பொன்ஸ்,
இங்கே ஏற்கெனவே குளிர்(ர) ஆரம்பிச்சாச்சு.:-))))
அப்போதெல்லாம் நிறையபேர் படித்துவிட்டு பின்னூட்டாமல் சென்று இருக்கிறார்கள் என நினைக்கிறேன். அதான் பின்னூட்டம் குறைவாக உள்ளது.
//ஆரம்பிச்சது செப்டம்பர் 24 வருஷம்
2004...//
அது சரி..மாதம் சொன்னிங்க.தேதி
சொன்னீங்க,வருஷம் சொன்னீங்க...
முக்கியமானதெ வுட்டுட்டீங்களே....
கி.மு வா அல்லது கி.பி யா?
தேவுடா காப்பாத்துடா...
சி.ஜி.
கவனமா இருங்க. வீட்டுக்கு ஆட்டோ வந்தாலும் வரும்:-))))))
ஆமாங்க ரமணி.
அப்ப நம்ம 'கவுண்(ட்)டர் வேற இல்லீங்களா, யாராவது வந்து பார்த்தாங்களா இல்லையான்னுகூடத் தெரியாம 'வாழ்ந்து'க்கிட்டு இருந்தேங்க.:-)
ஆட்டோ காலம் பூட்சிம்மே
இப்போ ஹெலிகாப்ட்ர் காலம்மே
ஆங்க்கும்
சி.ஜி,
தமிழ்வகுப்புக்குப் போகவேண்டியவர் தவறுதலா இன்னிக்கு இங்கே வந்துட்டீங்க போல இருக்கே:-))))
டீச்சர் இந்தாங்க புடிங்க பின்னூட்டத்த!
சிங்.செ,
'காட்ச்' புடிச்சுக்கிட்டேன்:-) தேங்க்ஸ்.
உள்ளேன் அம்மா
சிவமுருகன்,
அட்டெண்டன்ஸ் இங்கேயும் கொடுக்கறிங்களா?:-))))
சரி சரி.
Post a Comment