Sunday, May 14, 2006

தாயுள்ளம்

இன்னிக்கு அன்னையர் தினமாம். ஒரு அன்னையா ஆகறதுக்கு முடியாம எத்தனையோ பெண்கள் கண்ணுலே வெள்ளம் வச்சுக்கிட்டும், சிலர் வெளியே காமிக்காம மனசுக்குள்ளேயும் மறுகிக்கிட்டும் இருக்கறாங்கதானே?


அதிலும், நம்ம சமுதாயம் இருக்கே, எப்பவும் எல்லாத்துக்கும் பெண்களைக் குறை சொல்லியேபழக்கப்பட்டுப் போனதாச்சேங்க. குழந்தை இல்லேன்னா அதுவும் பெண்ணோட தப்பு மட்டுமேன்னுதானே முந்தியெல்லாம் ஆண்களுக்கு ரெண்டாம்( சிலப்ப மூணாம்) கல்யாணம்னு பண்ணி வச்சுக்கிட்டு இருந்தாங்க.


இதையெல்லாம் விலாவரியா எழுதப்போனா 'பதிவு அடுத்த அன்னையர்தினம் வரை நீண்டு போகும் அபாயம் உண்டு' என்றதாலே இத்தோடு நிறுத்திக்கிறேன்(இந்த வாக்கியத்தை!)


பெற்றால்தான் பிள்ளையா? பிள்ளைகளைத் தத்து எடுத்துக்கிட்டு, தான் பெறாத பிள்ளைகளைத் தன் பிள்ளைபோல வளர்க்கும் எத்தனையோ தாய்கள் உலகில் எல்லா இடங்களிலேயும் இருக்காங்க.அவுங்களோட அன்புக்கு எதை ஈடாகத் தரமுடியும்?


இயற்கையின் தடுமாற்றத்தால் சில/பல பெண்களுக்குத் தாய் ஆகறதுக்கு வேண்டிய முக்கிய பகுதியான கருப்பை இல்லாமலேயே போய்விடுதாம். அந்தப் பெண்களுக்கு இது எவ்வளோ துக்கம் தரும்?


இதைக் கருத்தில் வச்சு, நம் வலைஞர்களிலே ஒரு இளைஞர் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு மும்முரமாக முனைஞ்சிருக்கறார். அவரோட ஆராய்ச்சி வெற்றி பெறணுமுன்னு மனசார வாழ்த்துகின்றோம்.


தாய்மை உணர்வு பெண்களுக்கு மட்டுமே சொந்தமா என்ன?


இந்தப் பதிவு நம் சிவசங்கர் அவர்களுக்குச் சமர்ப்பணம்.


அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்து(க்)கள்.

45 comments:

said...

டீச்சர் அன்னையர் தின வாழ்த்துக்கள்!

said...

செயகுமார்,
நன்றி.
உங்க அம்மாவுக்கு வாழ்த்து சொல்லிட்டீங்களா?
முதல்லே அதைச் செய்யுங்க.
என்னோட வாழ்த்தையும் அவுங்களுக்குச் சொல்லுங்க.

said...

அன்புள்ள துளசி எங்கள் அன்னையர் தின வாழ்த்துக்கள்.எப்போதுமே அன்பு நிறைந்தவர்களுக்கு எல்லாமே அன்னையர் தினம் தானே!!

said...

அம்மா,
அன்னையர் தின வாழ்த்துக்கள்!

said...

அன்னையர் தினத்துக்கு பரிசு ஏதும் கொடுத்தாங்களா? அப்புறம் அந்த கருவடையும் பெண்களின் சிக்கல்னு, ஒரு பொண்ணுக்கு நேர்ந்த சிக்கலை எழுதும் போது அந்த 'invitro fertilization' பத்தி எழுதனும்னு நினைச்சேன், அதுக்குள்ள விஷயம் தெரிஞ்சவங்க எழுதிட்ட சுட்டி கொடுத்ததுக்கு நன்றி!. நான் படிக்க தவறிடுச்சு!

said...

துள்சிங்க,

அமெரிக்கர்களுடைய அன்னையர் தின வாழ்த்துக்கள்! :-))

இன்னிக்கு மட்டும்தான் *அன்னையர் தினமா* இல்லை தினமுமா உங்களுக்கு?

என்னுடைய பழைய பதிவுகளில் குழந்தை தத்தெடுப்பு பற்றி எழுதியிருந்தேனே துள்சிங்க படித்தீர்களா அவைகளை... என்னிடம் நிறைய infos இருக்கிறது... முடிந்தால் படித்துப் பாருங்கள்

அன்புடன்,

தெகா.

said...

எங்கள் "அன்னையர்" நாடென்ற பேச்சினிலே
ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே!!

said...

மானு,

உங்களுக்கும் அன்னையர் தின வாழ்த்து(க்)கள்.

said...

சிவமுருகன்,
நன்றி. உங்க அம்மாவுக்கு வாழ்த்து சொல்லியாச்சா?

said...

உதயகுமார்,

பரிசு கிடைச்சது.

கண்ணாடி பெயிண்டிங். யானைப் படம். மகளே வரைஞ்சது.
நல்லாதான் இருக்கு. அடுத்த பதிவுலே போடறேன்.

said...

தெ.கா,

அதென்ன அமெரிக்க அன்னையர் தினம்?
உலகமெங்கும் இன்னிக்கு அன்னையர் தினம் இல்லையா?

இங்கே தினமும் நம்ம நாளுதான். நாங்க மதுரைக்காரவுக.:-)))

said...

SK,

என்னங்க இந்தப் பாட்டு?
'அன்னை'யை ஓட்டிட்டு இப்படிப் பாடறீங்க?:-)))

said...

தாயென்ற ஒரு தெய்வம் வீட்டோட இருக்கு! நீ தனித்தனியா கோயில் குளம் அலைவதும் எதுக்கு!
அம்மாவின் பாதத்தில் கற்பூரம் கொளுத்து! ஆனந்த கண்ணீரால் அபிஷேகம் நடத்து!

அன்னையர் தின வாழ்த்துக்கள்!

said...

நல்ல கவிதை சிபி.

நன்றி.

said...

அன்பின் அம்மா :)
அன்னையர் தின வாழ்த்துக்கள், இந்த நன்னாளில் என்னையும் ஒரு பொருட்டாய் மதித்து என் சுட்டியினை இங்கிட்டு என்னை பெருமை படுத்தியமைக்கு மிக்க நன்றி அம்மா :), என் எழுத்துக்கள் வலையுலகில் இன்று உலாவர முழு முக்கிய காரணம் தாங்களே, என்னைப்போல் எத்தனையோ இளைஞர்களை(? ;) ) எழுதவைத்து ஊக்கப்படுத்தும் வலையுலக எழுத்துச்சித்தர் துளசி அம்மா அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல....:)
என்றென்றும் அன்புடன் மற்றும் பாசமுடன்,
உங்கள் ஸ்ரீஷிவ்...:)@ சிவா..

said...

சிவா,

//எழுத்துச்சித்தர் துளசி ...//

இது ஃபோர் மச்சாத் தெரியுதே!

சரி. எதோ ஆர்வத்துலே சொல்லிட்டீங்கன்னு வச்ச்சுக்கலாம்:-)

உங்க ஆராய்ச்சி உலகுக்குத் தெரியவரும்போது, சகவலைஞர் என்ற முறையிலே
எங்களுக்கும் பெருமைதானே.

said...

annayar dhina vazhthugal

said...

அனைத்து அன்னையர்களுக்கும் வாழ்த்து சொல்லும் இந்த நேரத்தில் துளசி அன்னை அருமையான ஒரு கட்டுரையுடன் தனது அன்னையர் தினத்தை பதித்துள்ளார்.
அவருக்கு ஒரு ஓ.....

தம்பி சிவாவின் ஆராய்ச்சி ஒரு மிகவும் முக்கியமான ஆராய்ச்சி. கூடிய விரைவில் தம்பி சிவாவின் ஆராய்ச்சி வெற்றிப்பெற்று, அன்னையர்கள் அனைவருக்கும் ஒரு வரப்பிரசாதமாகட்டும் என்று வாழ்த்துகிறேன்.
துளசி மேடத்திற்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

said...

அன்னையர்தினத்திற்கான அருமையான ஆக்கம். ஸ்ரீஷிவ்வின் பதிவு படிக்க விட்டு போயிருந்தது. அதனை சரியான சமயத்தில் எல்லோருக்கும் சுட்டியிருக்கிறீர்கள். அவருடைய ஆராய்ச்சி மானுடத்திற்கு மிகவும் பயனுள்ளது.

அன்னையர்தினத்தன்று அன்னையருக்கும் அன்னை ஆகப் போவோருக்கும் அன்னை யுள்ளம் படைத்த தாயுமானவர்களுக்கும் வாழ்த்துக்கள்!!

said...

வாழ்த்துக்கள் துளசி. எல்லோருக்கும் ஊக்க சக்தியாகச் செயல் படுவதற்கு.

said...

சிவஞானம்ஜி,

நன்றிங்க.

said...

மஞ்சூராரே,

இந்த 'மேடம்' வேணாமே.....

துளசின்னே சொல்லலாம். இல்லையா... கூடவே ஒரு 'அக்கா'வை சேர்த்துக்குங்களேன்.

said...

மணியன்,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.( சரியாச் சொல்லிட்டேனா?)

said...

கீதா,

இப்படிப் பதிவுங்களைப் படிச்சுக்கிட்டு இருந்தா சாம்பாரிலே உப்புப் போடாதது ஞாபகம் இருக்குமா?:-)))

வாழ்த்துகளுக்கு நன்றி.

said...

//நல்ல கவிதை சிபி.//

கவிதையா?

(அது சினிமாப் பாடல் என்று தங்களுக்கே தெரியும், இருப்பினும் எதற்காக அப்படி குறிப்பிட்டீர்கள் என்று எனக்கும் தெரியும் என்பதும் உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன் என்று நீங்கள் நினைப்பீர்கள்)

said...

அக்கா, உங்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்..

யானை படத்தைப் போடுங்க.. பார்க்க ஆவலா இருக்கேன்.. :)

said...

தமிழில் தட்டச்சு செய்யச்சொன்ன
இலவசக்கொத்தனார்,
"இன்னும் என்ன இங்கிலிசுபீசு" என்று
மிரட்டிய கஜமுகி,
வழி காட்டிய மணியன்,
எழில்நிலா தளம்,அண்புடன் பொறுமையாக வழி காட்டிய டிபிஆர்ஜோசப் அனைவருக்கும்
"வந்தோம் வந்தணமே-நாம்
தந்தோம் தந்தணமே..."

said...

நன்றி
நன்றி

(THANKS TO THE POWER OF THANKS)

said...

வாங்க சிவஞானம்ஜி, வாங்க.

உங்களுக்காகன்னே இப்பத்தான் மாஞ்சு மாஞ்சு,'கணினி கைநாட்டுகளுக்குக் கலப்பை'ன்னு ஒரு பதிவு
எழுதி முடிச்சேன். அதைப் போடறதுக்குள்ளே உங்களுக்கு என்ன அவசரம்?:-)))))
இப்ப அவ்வளவும் வீணாப் போயிராதா?

இல்லெ, எடுத்து வத்தல் போட்டு வச்சுக்கிட்டா, இன்னும் யாராவது நம்மளைப் போல வந்தா எடுத்துக் குடுக்க
சுலபமா இருக்குமா?
அடி ஆத்தி...... இப்ப ஆக்கி வச்சதை என்ன செய்ய?

said...

பொன்ஸ்,
உங்க அம்மாவுக்கும் என்னோட வாழ்த்தைச் சொல்லுங்க.

யானைப் படத்தை அடுத்த பதிவுக்கு( சம்பந்தமே இல்லாட்டாலும் கூட) போட்டுரலாம்:-))))

said...

என்னங்க சிபி, இப்படிக் கேட்டுட்டீங்க?
சினிமாப்பாட்டு எழுதறவங்க 'கவிஞர்' இல்லையா?
இல்லே
அவுங்க எழுதறது 'கவிதை' இல்லையா?

கவிஞர்........ அப்படின்னுதானே எல்லாரும் போட்டுக்கறாங்க.

said...

அக்கா,

இப்படி கேட்பீங்கன்னு தான் காலையிலேயே அம்மாவிடம் பேசிட்டேன். மாலையிலும் பேச வேண்டும்.

இப்போ உங்களுக்கும், மற்ற அன்னையர் அனைவருக்கும் இனிய அன்னையர் தின நல்வாழ்த்துகள்.

said...

வாங்க பரஞ்சோதி.
அம்மாகிட்டே பேசியாச்சா?
நல்லா இருங்க.

said...

//தாய்மை உணர்வு பெண்களுக்கு மட்டுமே சொந்தமா என்ன?
//
ஆயிரத்தில் ஒரு வார்த்தை.. :-)

தாயுமானவன்
பாலா
க.பி.கழகம்.

said...

அன்னையர்தின வாழ்த்துக்கள்.

said...

//சினிமாப்பாட்டு எழுதறவங்க 'கவிஞர்' இல்லையா?//

avvvvvvvvvvvvvv................

(Kaippullai Style)
Nandri Nandri Nandri

:-))))))

said...

//தாய்மை உணர்வு பெண்களுக்கு மட்டுமே சொந்தமா என்ன? //

அட இது நல்லா இருக்கே.

அன்னையர் தின வாழ்த்துகள்

said...

சரிங்க மேடம் இல்லெ இல்லே அக்கா

said...

பாலா,

இது என்ன க.பி.கழகம்? இருக்கற க(ல)ழகம் எல்லாம் போதாதுன்னா?:-)))

தர்சன், பச்சோந்தியாரே,

வாங்க. நன்றிங்க.


சிபி,

:-))))))))

மஞ்சூராரே,

இப்பக் கரீட்டா இருக்கு:-)))

said...

யோகன்,

//என்னன்னை! இன்றின்லை//

எனக்கும் இதேதான். அன்னை இருந்தப்ப அன்னையர் தினம் இல்லை.

இப்ப தினம் மட்டும் இருக்கு.

அதனால் என்ன உலக அன்னையர் அனைவரும் நம் அன்னையே.

said...

டீச்சர்,

கௌசிகன் பதிவுல மொத்த ஆளுமை விலைன்னா என்னன்னு கேட்டீங்களே. இங்க பாருங்க.

said...

காலம் தாழ்ந்த அன்னையர் தின வாழ்த்துகள் டீச்சர்.

கருப்பை மாற்று அறுவை சிகிச்சை புதுப் புரச்சியாகும் என்பதில் சந்தேகமில்லை.

இன்னைக்கு அம்மாவுக்கு ஏதாவது வாங்கீட்டுப் போகனும்.

said...

ராகவன்,

நன்றி.
அம்மாவுக்கு என்ன வாங்கிக் கொடுத்தீங்க?

said...

வணக்கம் துளசி கோபால்!
அன்னையர் தினம் அன்று கனமான ஒரு பதிவு! மனம் சார்ந்த நம்பிக்கைகளை சுமந்து கொண்டு இருப்பவர்களின் பிற்ப்போக்கு தன்மையை லேசாக சாடியுள்ளீர்கள்!

இது போன்ற தினக்கொண்டாட்டங்கள் எல்லாம் வாழ்த்து அட்டைகள் தயாரிக்கும் நிறுவனங்களின் வியாபார உத்திகளே! என்பது எனது கருத்து

said...

//உங்க அம்மாவுக்கு வாழ்த்து சொல்லியாச்சா? //

ஞாயிற்றுகிழமை போன் பன்னி சொன்னேன், ரொம்ப சந்தோஷப்பட்டாங்க.

//நாங்க மதுரைக்காரவுக.:-)))//

அட நீங்களும் மதுரைகாரவுகளா?
நம்ம நிகழ்வுகள் பதிவுல சித்திரை மாத 17 நாள் திருவிழா பதித்துள்ளேன் வந்து பாருங்க.நிகழ்வுகள் சுட்டி