Monday, May 22, 2006

நியூஸிலாந்து பகுதி 36

சரியாச் சொன்னா, லீவுன்ற பேருலே அஞ்சுமாசத்துக்குக் கூடி கும்மியடிச்சிருக்கோம். இந்தத் தொடரோட 35வதுபதிவு போனவருசம் டிசம்பர் 16க்கு வந்திருக்கு. திஸ் ஈஸ் ஃபோர் மச்!!!!!மாணவ, மாணவிகள் எல்லாம் அமைதியா வகுப்புக்கு திரும்ப 'வரும்படி'க் கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.புதியவர்கள் தாராளமாக வரலாம். அர்ரியர்ஸ் எழுதிக்கலாம்.என்ன சொல்றீங்க?


யாருங்க அங்கே முதல் பகுதி எப்ப வந்துச்சுன்னு கேக்கறது? ரொம்ப நாள் இல்லீங்க. போனவருசம் செப்டம்பர்20 தேதிக்கு (20/09/2005)க்கு வந்துச்சுங்க. மூணே மாசம் வந்துட்டு அப்படியே நின்னு போச்சு. சரி சரி. வந்து சேருங்க,என்ன?


நியூஸிலாந்து பகுதி 36
------------------------

ஆன்னா ஊன்னா 'மாட்சிமை தாங்கிய மகாராணி'ன்னு ஆரம்பிச்சு முழங்கிக்கிட்டு இருந்த வெள்ளைக்கார 'அரசாங்கத்தை'க் கவனிச்சுக்கிட்டே இருந்த மவோரிங்களும், நாம இப்படித் தனித்தனியா குழுவாப் பிரிஞ்சுக்கிறதுனாலேதான் நம்ம 'வாய்ஸ்' எடுபடலைப்பா. பதிலுக்கு நம்ம பக்கத்துலே இருந்து எங்க மகாராஜா/மகாராணி இப்படிச் சொல்றாங்க, அப்படிச் சொல்றாங்கன்னு ஒரு போடு போட்டா இவுங்க வழிக்கு வந்துருவாங்கன்னு யோசிச்சாங்க. முக்கிய காரணம் என்னன்னா,வெள்ளைக்காரர் கூட்டம் பெருகிக்கிட்டே போகுது. அவுங்க குறிக்கோளே நிலம் வாங்கி, பண்ணை விவசாயம் செஞ்சு பணம் சம்பாரிச்சுறணுமுன்றது. மவோரிங்களுக்கோ நிலம்ன்றது பெரிய சொத்து. நிலம்தான் அவுங்க ஊர், நாடு எல்லாம்.


இதைக் கொஞ்சமும் புரிஞ்சுக்காதவங்களா இருந்தாங்க இந்த வெள்ளைக்காரங்க. காசு தரோம், இடத்தைக்கொடு!
தனித்தனியா நிலப்பட்டா எதுவும் கிடையாது மவோரிங்களுக்கு. அவுங்க நிலமுன்னு சொல்றது அங்கே இருக்கற குழுவுக்குத்தான். சிற்றரசர்கள் காலம் ஞாபகம் வருதா? அந்தக் குழு அங்கத்தினர் எல்லாரும் மொத்தமாச் சம்மதிச்சால்தான் அந்த நிலத்தை விற்க முடியும்.


எல்லா இடத்துலேயும், முடியாட்சி போய் மக்களாட்சின்னு வந்தா, இங்கே மக்களே, முடியாட்சியைக் கொண்டு வந்துட்டாங்க!யாரை ராஜாவா ஆக்கறது? இங்கே என்ன யானையா இருக்கு? அது கையிலே மாலையைக் கொடுத்து விடறதுக்கு?கூப்புடு நம்ம ஆளுங்களைன்னு ஒரு கூட்டத்தைக் கூட்டுனாரு வில்லியன் தாம்ப்ஸன். ஹங்.... வில்லியன் தாம்ப்ஸன் என்னாத்துக்கு மவோரிங்களைக் கூப்புடணும்? இவரென்னா மவோரியா?

ஆமாம். இவரு மவோரியேதான். இவுங்கபேரை வெள்ளைக்காரங்களாலே சரியாச் சொல்ல முடியலைன்னுட்டு இப்ப மவோரிங்க அவுங்க பேருக்குக் கொஞ்சம் கொஞ்சம் ஒத்துப்போறமாதிரி வெள்ளைக்காரப் பேருங்களை வச்சுக்க ஆரம்பிச்சிருந்தாங்க. விரெமு டாமிஹனா தான் நம்ம வில்லியம் தாம்ப்ஸன்! இவர் Ngatihaua tribe தலைவர். நாலாபக்கமிருந்தும் ஆளுங்க வந்து சேர்ந்துட்டாங்க. கூடுன தலைவர்களிலே ஒரு பேர் பெற்ற தலைவரும் இருந்தாரு. ஆனா வயசானவரு.( அவுங்களுக்கு அப்ப ஆயுசே 40க்கு மேலே போகாதுன்னு இருந்தப்ப, இந்த 'வயசானவர்' என்னத்தை வயசானாவரா இருந்திருக்கப் போறாரு?)


ஃபெரோஃபெரோ, மவோரிகளின் முதல் அரசனாக்கப்பட்டார். Te Wherowhero. Te இதுக்கு 'The' ன்னு அர்த்தம்.பட்டாபிஷேகம் முடிஞ்சது. அவருக்கு ஒரு புதுப்பேர் கிடைச்சது. அரியணை ஏறும்போது ஒரு பேர் சூடிக்கற வழக்கம் அநேகமா எல்லா நாட்டு அரசர்களுக்கும் இருந்தது, இவுங்களுக்கும் எப்படியோ தெரிஞ்சு போச்சு பாருங்க!அந்தப்பேரு என்னன்னா பொடடாவ் Potatau.தனிக்கொடி, அரசவை அதிகாரிகள், படைவீரர்கள், காவல்காரர்கள்ன்னு ஒரு பந்தாவாத்தான் இருந்தார். மன்னராட்சி ஆரம்பிச்சது 1858.
அடுத்தவருசமே டெய்ரான்னு ஒரு மவோரி 'தன்' இடத்தை விக்கப்போறென்னு சொன்னார். அவரோட தலைவர் அவரைக் கூப்புட்டனுப்பி, 'ஏம்ப்பா, இதுலே எது 'உன்னது?' காமி பாப்போம்'ன்னா அவராலே சரியாக் குறிப்பிட்டுக் காமிக்கத்தெரியலை.'பேசாம இரு. அழிம்பு பண்ணாதே. இது எல்லோருக்கும் உரிமையான இடம். விக்கக் கிக்க முடியாது. போய் வேலையைப்பார்'ன்னு சொல்லியனுப்புனார்.


அப்ப வெள்ளையர் அரசாங்க சார்பா கவர்னரோட ஒரு ஆள், இந்த டெய்ரா கிட்டே( இவரும் சொல்றதுக்கு சுலபமா 'டெய்லர்' (Taylor) ஒரு பேர் வச்சுகிட்டார் )வந்து, 'உனக்கும் உங்க குடும்பத்துக்கும் இந்த நிலத்துலே கட்டாயம் பங்கு இருக்குமில்லே. அதைமட்டும் எங்களுக்கு வித்துரு'ன்னு சொல்லி 'புதுக் கலகத்தை' ஆரம்பிச்சுவச்சார். நிலம் அளக்க வந்த ஆளுங்களுக்கும், மவோரிங்களுக்கும் சண்டை தொடங்குச்சு.கலகம் ஆரம்பிக்கறதே இவுங்க தொழிலாப் போச்சுங்க. இப்படித்தானே இந்தியாவுலேயும் சிற்றரசர்களுக்குள்ளே கலகமூட்டி விட்டுட்டு இவுங்க ஜாலியா இருந்துருக்காங்க.


இங்கே வந்து நிலம் வாங்குனவுங்களை 'செட்டிலர்ஸ்'ன்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க. அந்த 'செட்டிலர்ஸ்' ங்க குடியிருப்புக்குத் தீ வச்சாங்க. கொளுத்திவிடற சமாச்சாரம் காலங்காலமா இருக்கு! இழப்பு ரெண்டு தரப்புலேயும்.வெற்றியும் மாறி மாறி ரெண்டு பக்கமும். இதுக்கு நடுவுலே சில மவோரிக் குழுங்க வெள்ளைக்காரங்க பக்கம் சேர்ந்துக்கிட்டு சிநேகிதம் பாராட்டிக்கிட்டு இருந்தாங்க, நம்ம மக்களையே கொல்றாங்கன்ற எண்ணமே இல்லாம. எல்லாம் எட்டப்பனுங்க.வெள்ளைக்காரங்க ஜனத்தொகை மவோரிங்களைவிட அதிகமாயிருச்சு.


அப்ப புது கவர்னர் வந்தார். அவர் பேர் 'கோர் ப்ரவுண்'. வந்து உக்காந்ததுமே முதல் வேலையாச் செஞ்சது 'மவோரிராஜா'வை எதிர்க்கத் திட்டம் தீட்டுனது. ஏனாம்? இன்னும் நிலம் வாங்கிப் போடணுமாம். அவர்கிட்டே 12000 வெள்ளைப்படையும்,1000 சிநேகித மவோரி வீரர்களும் இருந்தாங்க. மவோரி ராஜா கிட்டே வெறும் 4000 படை வீரர்கள்தான். அவுங்களும் 'பார்ட் டைம்'வீரர்கள்தான். சண்டை போட்டுக்கிட்டே இருந்தாக் குடும்பம், குழந்தைகுட்டிகளைக் கவனிக்கறது யாரு? அப்பப்ப வூட்டாண்டை போய் பார்த்து குடும்பத்துக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செஞ்சுக்கிட்டு, பயிரிட நேரமானா நிலத்துலே பயிர் பச்சை விதைச்சிட்டுத் திரும்ப சண்டையிலே வந்து சேர்ந்துக்குவாங்க.


மவோரிங்க அவுங்க நிலம் நீச்சைக் காப்பாத்திக்கறாங்கன்னு இல்லாம, இந்த வந்தேறி வெள்ளைக்காரங்க வேற மாதிரி பிரச்சாரம் செய்ய ஆரம்பிச்சாங்க. 'மகாராணி விக்டோரியாவை பயமுறுத்தத்தான் இந்த மவோரி ராஜா வெள்ளைக்காரங்களுக்கு எதிரா இருக்கார்'னு வதந்தியைப் பரப்புனாங்க. பாவம், இந்த மவோரி ராஜா. அவர் இந்த மகாராணியம்மாவைப் பார்த்ததுகூட இல்லை.


பழமொழின்னு சொல்றமே அது எல்லா ஊருக்கும் பொதுவான சமாச்சாரம் போல இருக்கு. saying ன்னு சொல்லிக்கிறாங்கல்லே, அதை!
'நிலமும், பொண்ணும்தான் காரணம் ஆம்புளைங்க சாவறதுக்கு' இப்படி ஒரு மவோரிப் பழமொழி.


ஆஹா.... நம்மூரு மண்ணாசை, பெண்ணாசை கதைதான் போல இல்லீங்களா? நம்மூர் மகாபாரதம், ராமாயணம் எல்லாம் இதைத்தானுங்களே சொல்லுது!
இன்னும் சில மவோரிங்க வேற மாதிரி சொல்லிக்கிட்டு இருந்தாங்க. 'உண்மையைச் சொல்லணுமுன்னா, இந்த நிலங்களுக்கு சொந்தம் கொண்டாடறதுக்கும், பாதுகாவலனா இருக்கறதுக்கும் மனுஷனுக்கு உரிமையே கிடையாது.இதெல்லாம் காட்டுக் கொடிகளுக்கும், நெட்டில்னு சொல்ற ஒரு புதர்களுக்கும், பெரணி மரத்துக்கும், வேடான்னு சொல்ற ஒருவித வெட்டுக்கிளிகளுக்கும், சிலந்திகளுக்கும், பெரிய பல்லி( tuatara) இனங்களுக்கும், ஊர்வன வகையைச்சேர்ந்த பிராணிகளுக்கும், எல்லாத்துக்கும் மேலா டானிஃபா (taniwha)ன்னு சொல்ற கடல்லே வசிக்கற, நீர்நிலைகளுக்குச்சொந்தமான தேவதைக்கும்( ஒரு வேளை நாம் 'வருண பகவான்' னு சொல்றவரோ?)மட்டுமே சொந்தம்'னு.


அப்பாடா......எத்தனை வகைக்குச் சொந்தம் பார்த்தீங்களா? ஆனா யோசிச்சுப் பார்த்தா இது சரியாத்தான் இருக்குங்க.இந்த பூமி, இதுலே இருக்கற, வாழற எல்லா உயிருக்கும் சொந்தம் இல்லீங்களா? அதை எப்படி மனுஷன் சுயநலமா தனதாக்கிக்கிட்டான்? மனுஷனும் இந்த பூமியிலே வாழறான்றதைத் தவிர, மனுஷனாங்க இந்த பூமியை உண்டாக்குனான்?இல்லைதானே?

35 comments:

said...

கிளாஸுக்கு வந்தேன்...

said...

இந்தியாவின் சமக்கால வரலாறு (பின்ன உங்க பிரயாணம் எல்லாம் வரலாறு இல்லையா!) முடிந்து மீண்டும் ந்யூசிலாந்தின் பண்டைக்கால வரலாறா? போட்டுத்தாக்குங்க.

said...

நன்மனம்,
ப்ரெஸெண்ட் போட்டுட்டேன்.

said...

கொத்ஸ்,
அட, ஆமாம், இல்லே?
விளையாட்டாச் சொன்னாலும் இப்படிப் பயணக்குறிப்புகள்
இல்லேன்னா வரலாறே இல்லாமப் போயிருக்கும்.

அப்ப நடந்தெல்லாம் யாராவது எழுதுனதாலேதானே தெரிய வந்திருக்கு.

said...

உள்ளேன் துளசி!
//இப்படிப் பயணக்குறிப்புகள்
இல்லேன்னா வரலாறே இல்லாமப் போயிருக்கும்.//
ம்ம்..துளசியும் இப்ன் பதுதா, மார்க்கோ போலோ ரேஞ்சுதான்!! :O)

//மனுஷனும் இந்த பூமியிலே வாழறான்றதைத் தவிர, மனுஷனாங்க இந்த பூமியை உண்டாக்குனான்? இல்லைதானே?//
படைக்கறவுங்களுக்குப் "படைக்கறதோட" மனுசன் வேலை முடிஞ்சு போச்சு!
[ யாருங்க அது, "எப்பவுமே துளசிதளத்துலே சாப்பாட்டுப் பேச்சுதான்"றது? ;O) ]

said...

வாங்க ஷ்ரேயா.

//.....இப்ன் பதுதா, மார்க்கோ போலோ .....//

இவங்கெல்லாம் யாருங்க ? :-)))))))

//........துளசிதளத்துலே சாப்பாட்டுப் .........//

இப்படிச் சொல்றவங்க ரெண்டு நாள் ஒண்ணுமே சாப்புடாம இருந்து பார்க்கவும்.:-)))))

said...

ப்ரசண்ட் மேடம்...

said...

வஞானம்ஜி,
ம்ம்ம் இப்படி ஆஜர் சொல்லிட்டாப் போதாது?
பாடம் புரிஞ்சதா? இல்லே கஷ்டமா? எதாவது சந்தேகம் இருக்கா? ன்னெல்லாம்
ரெண்டு வரி சொல்லணும். முக்கியமா புது ஸ்டூடண்ட்டுங்க எல்லாம்:-))))

said...

ஜி,
'சி' விட்டுப்போச்சு முன்னாலெ போட்டதுலே.மன்னிக்கணும்.

said...

//...முக்கியமா புது ஸ்டூடண்ட்டுங்க எல்லாம்:-)))) //

சரி சரி... தூங்கிட்டேன், எப்படி சந்தேகம் கேக்கறதுனு நேனச்சு, பிரசண்ட் மட்டும் சொல்லிட்டேன், அதுக்காக இப்படி சிறிச்சுகிட்டே அடிக்காதீங்க. அடுத்த வகுப்புலேந்து ஒழுங்கா சந்தேகம் கேக்கறேன்.

இது தான மொத கிளாசு, போக போக பாருங்க.

said...

நன்மனம்,

சந்தேகம் இருக்கட்டும். மொதல்லே புரிஞ்சதா?

said...

மிஸ், அதான் தூங்கிட்டேன்னு சொல்லறேன் இல்ல:-)))சும்மா...

நல்லாவே இருக்கு உங்க எழுத்து நடை. இத இப்ப தான் வந்திருக்கற நான் சொல்ல என்ன தகுதி இருக்குதுனு நேனச்சு பேசாம இருந்துட்டேன். மன்னிக்கவும்

said...

ஹ்ம்..புரிஞ்சாப்ல இருக்கு..ஆணா ஒரு சந்தேகம்...நியூசி ..நீயூசி,ன்றீங்களே
அது இன்னா ஓல்ட்சி பக்கமா?

said...

நன்மனம்,

இதுக்கெல்லாம் என்ன 'மன்னிப்பு'?

புரிஞ்சது சந்தோஷம். அம்புட்டுதான்:-)))

said...

ஏம்ப்பா, வகுப்புலே இருக்கற சீனியர் மாணவர்கள் ஒடிப்போய் ஒரு உலக மேப் கொண்டுவந்து நம்ம சிவஞானம்ஜிக்குக் காமிச்சு விளக்குங்கப்பா நியூஸி எங்கே இருக்குன்னு:-)))

ஓல்ட்ஸி இல்லே , OZ தான் இருக்கு பக்கத்துலே:-)))

said...

நல்லாப் புரிஞசது மிஸ்.நன்றி. செப் 2005லெ யே முதல் வகுப்பா? அடாடா!! க்ளாஸ் மிஸ் பண்ணவங்களுக்கு ரீ காப் உண்டுமா?

ரொம்ப சிரமப்பட்டு நல்லா எழுதி இருக்கீங்க. 2 ஆம் தரம் படிக்கிறென்.இபன் பதூதா அரேபியன் ட்ராவலாக் எழுதினவர் என்று நினைக்கிறென். அவர் பேரில ஒரு சூபெர் மால் தூபாயில் இருக்கு.

said...

மானு,

வாங்க வாங்க. அது என்ன?
//... ரொம்ப சிரமப்பட்டு நல்லா எழுதி...//
?????????????

ஷ்ரேயாகிட்டே இப்படி
////.....இப்ன் பதுதா, மார்க்கோ போலோ .....//

இவங்கெல்லாம் யாருங்க ? :-)))))))//

ச்சும்மா ஃபன்னுக்கு.
அந்த ரேஞ்சுலே நம்மளை வச்சதுக்கு:-)))

said...

//அப்பாடா......எத்தனை வகைக்குச் சொந்தம் பார்த்தீங்களா? ஆனா யோசிச்சுப் பார்த்தா இது சரியாத்தான் இருக்குங்க.இந்த பூமி, இதுலே இருக்கற, வாழற எல்லா உயிருக்கும் சொந்தம் இல்லீங்களா? அதை எப்படி மனுஷன் சுயநலமா தனதாக்கிக்கிட்டான்? மனுஷனும் இந்த பூமியிலே வாழறான்றதைத் தவிர, மனுஷனாங்க இந்த பூமியை உண்டாக்குனான்?இல்லைதானே?//

இது.. மனிதன் நிலத்தை தனதாக்கிக் கொண்டதொடல்லாமல் மற்ற உயிரினங்கள் வாழவியலாமல் மாசும் படுத்துகிறானே ?அழகான மலைகள் தகர்க்கப்பட்டு, நதிகளின் ஓட்டம் நிறுத்தப்பட்டு செடிகொடிகள் அழிக்கப்பட்டு ... இயற்கையன்னை அழுவது கேட்கிறதா ?

said...

மானு:// சிரமப்பட்டு நல்லா எழுதியிருக்கீங்க...//
மானு, அதென்ன சிரமப்பட்டு நல்லா
எழுதியிருக்கீங்கனு டீச்சரை மட்டும்
பாராட்ரீங்க? நாமளும்தான் சிரமப்பட்டு
படிக்கோம்...ஓஹோ ஹோ கிளாஸ் லீடர் ஆகப்போறீங்களா?..ஜமாய்ங்க

said...

நன்மனத்தின் பின்னூட்டம் சிரிப்பினை வரவழைத்தது அம்மா :) , வழக்கமா நானும் அப்படித்தான் வகுப்பில் தூங்குவேன், அதனால்தான் ஆசிரியர் வேலை கிடைத்தது ;)
ஸ்ரீஷிவ்...:)

அருமையான பதிவு அம்மா, தேவையானதும் கூட, நியூசி பற்றி அறியக்கொடுத்தமைக்கு நன்றீ....

said...

இந்த வெள்ளைத்தோல் மனுசங்க உலகம் பூரா செஞ்ச இந்த மாதிரி வேலைகளைப் பத்தி பேசுறதுனால ரொம்ப கஷ்டமாயிடுது...

said...

சிவா ஜி சார்,

இவ்வளவு காலை வாருவாங்குனு தெரிஞ்சா, சீக்கிரம் காமெண்ட் போட்டு இருக்க மாட்டேனே.அம்மா துளசி டீச்சர்,நியூசிக்கு தனி டிஸ்க் உங்க சிபியுவில இருக்காமே. சிரமப்படாம எழுதலாமாமே!!!!அதை ஃபீட் பண்ணால் போறுமாம்,அப்படியே ப்லொகில் ,தமிழில் பதிஞ்சுடுமாம்.காத்துவாக்கிலே வந்த சேதிம்மா.:-)))))))))))))))))சிரமப்படாம எழுதற எல்லோருக்கும் ஜே!

said...

டீச்சரை இன்னும் காணோம்...
மட்டம் போட்டுடாங்களா
சினிமா போய்டாங்களா
23/05/06...12-45 pm(IST)

said...

வாங்க மணியன்.

நட்சத்திரமே இறங்கிவந்து சொன்னதுக்கப்புறம் அப்பீல் ஏது?:-)))

ஆனாலும், மனுஷனே ரொம்ப அடாவடி ஜீவன் தான்.

said...

என்ன சி,ஜி
புது மாணவர்களே ஒருத்தருக்கொருத்தர் கலாய்க்கறிங்களா?

பழைய மாணவர்கள் எப்படி ராகிங் பண்ணாம நல்லபிள்ளைகளா
இருக்காங்க,பாருங்க.

said...

தருமி,

இவுங்க அட்டகாசம் செய்யாத இடம் எது? எல்லாம் நிறமப்பா, நிறம்.

said...

சிவா,

ரொம்ப தூங்கிறாதீங்க. இப்பெல்லாம் மாணவர்கள் படு உஷாராக்கும்:-))))

said...

வாங்க வல்லி.

சபாஷ் சரியான போட்டின்னு சொல்லிறவா?

said...

சி.ஜி,

சரித்திர வகுப்பு தினமுன்னா போரடிச்சுருமே./ அதான் ஒண்ணுவிட்டு ஒரு நாள்.

இன்னிக்கு சினிமாவுக்குப் போகலை. நேத்து 'ஆனந்தபத்ரம்'னு ஒரு படம் பாம்புக்கதை
சந்தோஷ் சிவனோடது பார்த்துட்டு சிவனேன்னு இருந்துட்டேன்.
பெரிய ஆளுங்களுக்கு இப்படி சிலசமயங்களில் 'தலை திருகி போதாதி'( இது தெலுங்கு)
படம் மலையாளம்.

said...

valli://இவ்வளவு காலை வாருவாங்கன்னு......மாட்டேனே//

அய்யோ அய்யோ வல்லி காமெண்ட்
காணோம்
வல்லி ப்ளீஸ் ரீபோஸ்ட்

said...

innum payana kurippu padhivugal.... hmm akka maarave illai.. good

nalla irukeengala akka?

said...

வாங்க வி.எம்.

அக்கா எப்படி மாறமுடியும்? நேத்து ஒரு பேச்சு, இன்னிக்கு ஒரு பேச்சா?
அப்படி இருந்தா நல்லாவா இருக்கும்?

பயணம்தானப்பா சரித்திரமாக மாறிடுச்சு.

நீங்கதான் ரொம்ப நாளாக் காணாமப் போயிட்டீங்க.

நீங்க நலமா?

said...

அப்பாடா..

காலைலருந்து இந்த பளாக்கர் படா மக்கார் பண்ணிருச்சீங்க..

ஒங்க பின்னூட்டம் பாக்ஸ் திறக்கறதுக்கே ஏறக்குறைய பத்து பதினஞ்சி நிமிஷம் ஆயிருச்சி..

திஸ் ஈஸ் ஃபோர் மச்!!!!!மாணவ, மாணவிகள் எல்லாம் அமைதியா வகுப்புக்கு திரும்ப 'வரும்படி'க் கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.புதியவர்கள் தாராளமாக வரலாம். அர்ரியர்ஸ் எழுதிக்கலாம்.//

நமக்கு ஹிஸ்டரின்னால பயங்கர அலர்ஜிங்க.. அதனால ஸ்கூல்ல நாப்பது மார்க் வாங்கறதுக்கே முளி பிதுங்கி போயிரும்.. அதுவும் பெரிசா, நெத்தி நெறைய நாமத்த போட்டுக்கிட்டு.. நொடிக்கொருதரம் புர், புர்னு பொடிய உறிஞ்சிக்கிட்டு வர்ற எங்க ஹிஸ்டரி மாஸ்டர நினைச்சாலே ஹிஸ்டரி மேல ஒரு வெறுப்பே வந்துரும்..

ஆனா நிங்க சொல்ற ஹிஸ்டரி நல்லாவே இருக்கு. அதனால நிச்சயம் அரியர்ஸ் எல்லாம் தேவையிருக்காதுன்னு நினைக்கிறேன்:))

said...

ஹலோ..

நான் போட்ட பின்னூட்டம் இன்னும் பப்ளிஷ் ஆகாததுனால இது ஒரு என்க்வயரி பின்னூட்டம்..

இன்னைக்கி ப்ளாகர்ல ஏதோ பிரச்சினையான்னு தெரியலை..

கிடைச்சிதா இல்லையா?

said...

டிபிஆர்ஜோ,

ஆமாங்க. ப்ளொக்கர்லே என்னவோ குழப்பம் இருக்கு.

உங்க ஊட்டங்கள் காலையிலேதான் வந்து சேர்ந்துச்சுங்க.

எல்லாம் சிலசமயம் லேட்டாவே வருது. படம் எதாவது போடலாமுன்னா, ஹய்யோ.......

ஹிஸ்டரின்னா சின்ன வகுப்புதாங்க பெஸ்ட். அதான் மூணாப்பு, நாலாப்பு போல. எல்லாப் பொற்காலத்துக்கும் மரம் நட்டார், குளம் வெட்டினார்னு சொல்லியே மார்க் வாங்கிரலாம்.

சரித்திரத்துலே பெயர்களும், வருசங்களும், இடங்களும் தாங்க நினைவு வச்சுக்கக் கஷ்டம். அதாலேயே சரித்திரமுன்னதும் போராப் போயிருது.

கொஞ்சம்கூட கவர்ச்சி சேர்க்கமுடியாத சமாச்சாரங்க இது(-: