பயண விவரம் பகுதி 21
" அட... என்னங்க இப்படி திடீர்னு கரண்டு போயிருச்சு. கொஞ்சம் ஃபோன் போட்டுக் கேளுங்க"
" சாந்தாம்மா இன்னேரம் போன் போட்டுருப்பாங்க. இன்னும் கொஞ்ச நேரத்துலே கரண்டு வந்துரும் பாரேன்"
" ஏங்க இந்தப் பையன், வீட்டுப்பாடம் செய்யாமத் திரியறான். கேட்டாச் சொல்லித்தான்னு உயிரை எடுக்கறான்.நான் நாலு எழுத்துப் படிச்சிருந்தாத்தானே இவனுக்குச் சொல்லித்தர முடியும்? இவனாவது படிச்சு மேலே வருவான்னுபார்த்தா......"
" எதுக்கு இப்படிப் புலம்பறே? பையனை நம்ம சாந்தாம்மாட்டே கொண்டுபோய் விடறேன்"
" என்னடி பார்வதி, இப்ப என்னா ஆச்சுன்னு இப்படிக் கண்ணீர்விட்டுக்கிட்டுக் கலங்கிப்போயிருக்கே.வா, நம்ம சாந்தாம்மாவீட்டுக்குப் போய் மேல்கொண்டு என்னா செய்யறதுன்னு கேட்டுக்கலாம்."
இப்படி அந்தப் பகுதியிலே எதுக்கெடுத்தாலும் சாந்தாம்மா, சாந்தாம்மாதான்.
இவுங்களை நான் சந்திச்சதைச் சொல்லலேன்னா எனக்குத் தலை வெடிச்சுரும். நம்ம மது, அதாங்க காற்றுவெளி மதுதான் சொன்னாங்க, 'நீங்க சாந்தாம்மாவைக் கட்டாயம் சந்திக்கணும்'னு. இதோ அதோன்னுசரியான நேரம் வாய்க்கலை. ஒரு பத்து நிமிஷமாவது போய்ப் பார்த்துட்டு வரலாமுன்னு வெள்ளிக்கிழமை சாயங்காலம் போனோம்.
தோட்டத்துலே, வீட்டை ஒட்டி ஒரு கூரையை இறக்கியிருக்கற காத்தோட்டமான இடத்துலே பத்துப்பன்னெண்டு புள்ளைங்க உக்காந்து படிச்சுக்கிட்டும், வீட்டுப்பாடம் எழுதிக்கிட்டும் இருக்காங்க. 'கேட்' திறக்கற சத்தம் கேட்டதும் திரும்புன பசங்க, மதுவைப் பார்த்ததும் ஓடிவந்துக் கையைப் புடிச்சுக்கிச்சுங்க. அவுங்களுக்குப் பாடம் சொல்லிக்கொடுத்துக்கிட்டு இருந்த டீச்சரும் எழுந்து வந்தாங்க.
ஆமா மதுவுக்கும் இந்தப் புள்ளைங்களுக்கும் என்ன சம்பந்தம்? ஆங்.....
சொல்றேன். ஓசைப்படாம சமூகசேவைசெய்யறதுலே மது கில்லாடி. வாரம் மூணு நாள் மது இங்கே வந்து பாடம் சொல்லித்தராங்க. மத்த ரெண்டு நாளுக்குரெண்டு பேர் வராங்களாம். இன்னிக்கு இங்கே இருக்கற டீச்சர் வெள்ளிக்கிழமைக்கு வர்றவுங்க.
அதுக்குள்ளே வாசல்லே படுத்திருந்த ஜீனாவைக் கடந்து வெளியே வந்தாங்க நம்ம சாந்தாம்மா. பார்த்தவுடனே'சட்'னு பிடிச்சுப்போகும் புன்னகை.
பசங்களுக்கு சந்தோஷம். சின்னது ஒண்ணு, பாட்டெல்லாம் பாடி அமர்க்களப்படுத்திருச்சு. எல்லாரையும் கொஞ்சம் 'க்ளிக்'கிட்டு, பேசிட்டு நாங்க வீட்டுக்குள்ளே போனோம்.ஜீனாவுக்கு பக்கத்துலே புள்ளையார் உக்கார்ந்திருந்தார். அவருக்கென்ன? மகராஜனா இருக்கட்டும்.
பெண்களுக்கான சுய உதவிக் குழுக்களுக்கு ரொம்ப உதவி செஞ்சுக்கிட்டு இருக்காங்க இவுங்க. ஒண்ணு ரெண்டா இருந்தாவிவரம் கேக்கலாம்தான். ஆனா 65 குழுக்கள். அம்மாடியோ........
வாரம் ஒருநாள் வெள்ளியன்னிக்குத் தன்னோட மகன் வீட்டுக்குப்போய் பேரப்பிள்ளைகளோட கொஞ்சநேரம்இருந்துட்டு வர்றது வழக்கமாம். மகனோட போய் இருக்கலாம்தான். ஆனா இங்கே இவுங்க உதவியை எதிர்பார்த்துநிக்கறவங்க எங்கே போவாங்க? தனியா இருந்தா எல்லோருக்கும் அவுங்கவுங்க சுதந்திரம் இல்லையா?
இன்னிக்கு வெள்ளியாச்சே. நீங்களும் போகணுமில்லையா? நாங்களும் கிளம்பறொமுன்னு சொன்னோம். 'இன்னிக்குப் போகலை. பேரக்குழந்தை வேற எங்கோ வெளியே போயிருக்காங்க'ன்னுட்டாங்க. அப்புறம்? பேசாம அங்கியேரொம்ப நேரம் டேராப் போட்டுட்டோம். பாருங்க எனக்கு எப்படி அமைஞ்சதுன்னு!
ரெண்டுமூணு ஃபோட்டோ ஆல்பம் கொண்டுவந்து கொடுத்தாங்க. ரொம்பப் பழசு. தொட்டாவே கிழிஞ்சுரும். பத்திரமாத் திறந்தேன். அட......பெரிய பெரிய ரங்கோலிக் கோலங்கள். கோலம் மட்டுமில்லை, ப்ரிட்டிஷ் அரச கிரீடம், காந்தி,தேசியக் கொடி, இன்னும் சில நிகழ்வுகள்னு காட்சி கண்ணுமுன்னாலெ விரியுது. காட்சி மட்டுமா என் கண்ணும்தான்!
இது நேரு, இதோ முதல் குடியரசுத்தலைவர் ராஜேந்திர பிரசாத், ராஜாஜி, இன்னும் அப்ப இருந்த பெரிய தலைங்க.இப்படி அடுக்கடுக்கா படங்கள். நம்ம எலிஸபெத் ராணியம்மாகூட இருக்காங்க. கறுப்பு வெள்ளைப் புகைப்படங்கள். சாந்தாம்மாஅப்ப இளவயது சாந்தா. அழகா இருக்காங்க. ரங்கோலிக் குவீன்!
இதெல்லாம் எப்பேர்ப்பட்ட ஆவணங்கள். பத்திரப்படுத்தணுமேன்னு ஆதங்கமா இருந்துச்சு. பேசாம எல்லாத்தையும் ஸ்கேன் செஞ்சு சிடியிலே போட்டுவச்சுருங்கன்னு சொன்னேந்தான். மறக்காம செஞ்சாங்கன்னா புண்ணியமாப் போகும்.பழுதாப் போனா மறுபடிக் கிடைக்குமா? மதுகிட்டேயும் சொல்லி வச்சிருக்கேன்.
அந்தக் காலத்துலேயே சாந்தம்மா, காதல் கல்யாணம். காதல் கணவனுக்காக மீன் சமைக்கவும் தயங்காத மனசு. பக்கா வெஜிடேரியன் நம்ம சாந்தம்மா. ஒரு கட்டத்துலே குடும்பத்துலே வன்முறைகள் அளவுக்கு மீறுனப்ப, தைரியமாமுடிவெடுத்து விவாகரத்து செஞ்சுக்கிட்டாங்க. அவுங்க படிப்பும், அரசாங்க உத்தியோகமும் இப்படி ஒரு நல்லமுடிவெடுக்க உதவியா இருந்துருக்கு. ஒரே மகன். 'ஏரியல் வியூ' புகைப்படங்களும், வீடியோக்களும் எடுக்கறதுலேநிபுணர். அமெரிக்காவுக்குப் போய் இதுக்காக ஸ்பெஷலாப் படிச்சிட்டு வந்துருக்கார். இந்தியாவிலேயே இப்படிப்பட்டவேலைகளுக்கு இவர்தான் நம்பர் 1. வாசல்லே இருக்கற புள்ளையாரும் இப்படி ஒரு ஷூட்டிங் ஸ்பாட்லே கால்லெ இடறுன கல்தானாம். அப்புறம் என்னன்னு பார்த்தாப் பிள்ளையார்!
கோயிலுக்கெல்லாம் போறதில்லையாம். சாமி மனசுலெ இருக்கார். அவரை அங்கே கும்பிட்டாப்போதும்னு சொல்லிட்டாங்க.சாஸ்த்திர சம்பிரதாயங்கள் எல்லாம் கடைப்பிடிக்கறதில்லை. ஆனா உதவின்னு கேட்டு வர்றவங்களுக்கு இதோன்னுஆறுதல் கொடுக்க எப்பவும் தயார். இதைவிடவா ... கோயில் குளமெல்லாம்? தயை இருக்கற இடத்துலே சாமி கட்டாயம் இருப்பாரில்லையா?
ரிட்டயர்டு வாழ்க்கையை ரொம்பப் பயனுள்ளதா அமைச்சுக்கிட்டு இருக்காங்க. எக்ஸ்நோரா இண்ட்டர்நேஷனல் செனட்டர், சி,ஐ.டி. நகர் இன்னொவேடர்ஸ் க்ளப் பிரெஸிடெண்ட் ன்னு இன்னும் புள்ளி பயங்கர பிஸிதான்.நாங்க இருந்தப்பவே ஃபோனுங்க வந்துக்கிட்டே இருக்கு. என்ன ஏதுன்னு விசாரிச்சு செய்யவேண்டியதைக் குறிப்பெடுத்துக்கிட்டேதான் எங்ககிட்டெ பேசுனாங்க.
உள் அறையிலே விதவிதமான ஹெலிக்காப்டர் மாடல்கள் சுவத்துலே அலங்காரமா இருக்கு. சினிமாக் காட்சிகளுக்கு இதையெல்லாம் சிலப்பக் கொண்டு போறாங்களாம். முந்தி அஜீத் அடிக்கடி வர்றது வழக்கமாம். இப்ப நம்ம 'மேடி' எப்பவாவது வந்து இதையெல்லாம் எடுத்துவச்சுப் பார்த்துட்டுப் போறதுண்டாம்.
பேச்சு பலவிஷயத்தைச் சுத்திப் போய்க்கிட்டு இருந்தப்ப, மரணத்தைப் பத்தியும் பேசுனோம். ரொம்ப நாள் எல்லாம்இருக்கவேணாம். கைகால் நல்லா இருக்கப்பவே பிறருக்குக் கஷ்டம் கொடுக்காமப் போயிரணுமுன்றது என் விருப்பம்னு நான் சொன்னதும், சாந்தாம்மாவும் அதெதான் அவுங்க ஆசையுமுன்னு சொன்னாங்க. என்னைப்போலவே நினைக்கிறவங்களைப் பார்த்ததும் எனக்கு அவுங்க மேலெ இன்னும் அன்பும் மதிப்பும் கூடிப்போச்சுங்க.
பேசிக்கிட்டு இருக்கறப்பவே, ஸ்வீட், ஜூஸ்ன்னு கொண்டுவந்து வச்சாங்க. இதுக்குள்ளே ஜீனாவுக்குத் தெரிஞ்சுபோச்சு,அவுங்க க்ரூப் ஆளு வந்துருக்கேன்னு. மெதுவா உள்ளெ வந்து என் பக்கத்துலே காலடியிலே படுத்துக்கிச்சு. கண்ணுதான்தெரியாதே தவிர மூக்கும் காதும் ரொம்ப ஷார்ப். ஸ்வீட்டுன்னா உயிராம். கொஞ்சம் ஸ்வீட் எடுத்துக் கீழே வச்சவுடனெ
'டக்'னு எழுந்து வந்து தின்னாச்சு!
இதுக்குள்ளே புள்ளைங்களும் ட்யூஷன் முடிச்சுட்டாங்க. உள்ளெ வந்து சொல்லிட்டுப் போனாங்க. கல்விக்கண்ணைத்திறந்துவைக்கறது எவ்வளோ மகத்தான சேவை. நம்ம மதுவும், இன்னும் சில தோழிகளும் இதுக்குத் தோள் கொடுத்துஉதவி செய்யறதை நினைச்சா எனக்குச் சந்தோஷமா இருக்கு.
அடுத்தமுறை இந்தியா வரும்போது இன்னும் கொஞ்சநேரம் கூடுதலா இவுங்களோடு பேசணுமுன்னு அப்பவே தீர்மானிச்சுக்கிட்டேன். கிளம்பறப்ப சுவத்துலே மாட்டியிருந்த மகனோட குடும்பப்படம் கவனத்தை இழுத்துச்சு.ரெண்டு குழந்தைகள்,மகன் & மருமகள். இவுங்க மருமகளும் ரொம்ப பிஸியானவங்கதான், யாருன்னு சொல்லலையே. நம்ம செளகார் ஜானகியம்மாவோட பேத்தி வைஷ்ணவிதான்.
Thursday, April 27, 2006
சாந்தம்மா
Posted by துளசி கோபால் at 4/27/2006 12:18:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
33 comments:
1) இந்த மாதிரி இருக்கறவங்களை எல்லாம் பாத்து பேசறதே ஒரு அருமையான சந்தர்ப்பம்தான்.
2) அந்த ஹெலிகாப்டர் படமெல்லாம் போட்டு இருக்கலாமில்ல.
3) வைஷ்ணவி படமும் போட்டு இருக்கலாமே.
hi Thulasi, a very goodmorning. uga mail vanthathu.thank you. is this mrs.shantha narayanan? Rangoli expert?enna nalla sevai!Trust Thulasi to find good persons to write abt!
NAL vaazhthukkal.
வாங்க கொத்ஸ்,
நலமா?
1. ஏதோ போன ஜென்மத்துலே செஞ்ச புண்ணியம்
2. நிறைய படம் இருக்குதான். ஆனா ப்ளொக்கர் கருணை காட்டறதில்லைங்க.
3. குடும்பம்- பெர்சனல். அதான் போடலை.
மானு,
நன்றி. ரொம்ப நல்லவங்களா இருக்காங்க சாந்தாம்மா.
இவுங்க ரங்கோலி எக்ஸ்பெர்ட்டா? முந்தி எனக்குத் தெரியாமப்போச்சே(-:
//ரெண்டுமூணு ஃபோட்டோ ஆல்பம் கொண்டுவந்து கொடுத்தாங்க. ரொம்பப் பழசு. தொட்டாவே கிழிஞ்சுரும். பத்திரமாத் திறந்தேன். அட......பெரிய பெரிய ரங்கோலிக் கோலங்கள்.//
//இவுங்க ரங்கோலி எக்ஸ்பெர்ட்டா? முந்தி எனக்குத் தெரியாமப்போச்சே(-://
என்னங்க இப்படி கன்பியூஸ் பண்ணறீங்க? படீகும்போதே நான் அவங்க போட்ட ரங்கோலின்னுதான் நினைச்சேன். நீங்க என்னடான்னா தெரியாதேன்னு சொல்லறீங்க.
அய்யோ கொத்ஸ்,
இவுங்கதான் அந்த 'சாந்தா நாரயணன்' என்ற விஷயம் எனக்குத்தெரியாது.
எல்லாம் இவுங்க போட்ட ரங்கோலிதான். அறிமுகம் 'சாந்தாம்மா'ன்னு ஆனதுலே தான் இத்தனை குழப்பமும்.
அதுவுமில்லாம தமிழ்நாட்டை விட்டே 32 வருசமாச்சே. அப்ப எது இந்த 'நெட்' எல்லாம்? கிணத்துத்தவளையா
இருந்துருக்கேன்(-:
நல்ல சந்திப்புக்கா..
//கொஞ்சம் ஸ்வீட் எடுத்துக் கீழே வச்சவுடனெ
'டக்'னு எழுந்து வந்து தின்னாச்சு!//
ஸ்வீட் சாப்பிடற நாயா?!!! எங்க வீட்டு துளசி அல்வா சாப்பிடறதையே நாங்க ஆச்சரியமாப் பார்த்தோம்...
பொன்ஸ்,
நம்ம வீட்டுலே ஜிகே, கப்பு எல்லாம் ஐஸ்க்ரீம் தின்னுவாங்க.
நிறைவான பதிவு!
வாழ்த்துகள்.
தமிழகத்தில் இது பல நல்ல மனங்கள் இருந்தாலும் நமக்கு தெரிவதில்லை. வாழும் வாழ்க்கையை அர்த்தமுடன் வாழு தெரிந்த திருமதி. சாந்தாம்மா! வாழ்க! வளர்க ! பதிவிற்க்கு நன்றி துளசி(ஆண்ட்டி,அக்கா, மாமி, பாட்டி) எப்படி கூப்பிடுவது என்ற கேள்விக்கு என் பதிவில் தாங்கள் இன்னும் விடை அளிக்கவில்லை. அனைவரையும் ஊக்கப்படுத்தும் துளசி அவர்க்கள் இவ்வாறு நடந்து கொள்ளாலாமா?
ஒரு கட்டத்துலே குடும்பத்துலே வன்முறைகள் அளவுக்கு மீறுனப்ப, தைரியமாமுடிவெடுத்து விவாகரத்து செஞ்சுக்கிட்டாங்க//
பார்த்தீங்களா? இப்படிப்பட்டவரோட வாழ்க்கையிலும் ஒரு சோகம்.
அவுங்க படிப்பும், அரசாங்க உத்தியோகமும் இப்படி ஒரு நல்லமுடிவெடுக்க உதவியா இருந்துருக்கு//
ஆமாங்க. பெண்கள் தங்களுடைய சொந்த கால்ல நிக்கணும்னு சும்மாவா பெரியவங்க சொல்லியிருக்காங்க?
தயை இருக்கற இடத்துலே சாமி கட்டாயம் இருப்பாரில்லையா?//
நிச்சயமா.
கொஞ்ச நாள்தான் சென்னையில இருந்திருக்கீங்கன்னாலும் ரொம்பவும் உபயோகமாத்தான் செலவழிச்சிருக்கீங்க.
மதுங்கறது அன்னைக்கி ட்ரைவின்ல பார்த்தவங்கதானே? ஒல்லியா?
நல்ல ஆத்மாதான்.
என்னங்க டிபிஆர்ஜோ,
அவுங்களேதான்.
நல்ல ஆத்மா மட்டுமா? நல்ல கைப் பக்குவமும் இருக்கு. உடலாலும் மனதாலும் தொண்டு செய்யறாங்க.
நாட்டு முன்னேற்றம் சாந்தாம்மா போன்றவர்களால் தான் ஏற்படுகிறது. பதிவுக்கும் படங்களுக்கும் நன்றி.
மது இராஜபாளயத்தில் சிறுமியர் வாசகசாலைக்கு கட்டிடம் கட்ட ஏற்பாடு செய்பவர் தானே ?
துளசி
ரொம்ப நன்றி இந்த பதிவுக்கு. நிறைய பேர் ஏதாவது செய்யனும் நினைச்ச பணம் ஒன்னுதான் கொடுக்க முடியும் என்று நினைப்பது வழக்கம். இதுபோல விஷயங்கள், மது செய்யறமாதிரி படிப்பு சொல்வது மிகவும் நல்லது.மது, ரம்யா(சிங்கப்பூர்) பத்தி கேள்விப்படும் விஷயங்கள் ரொம்ப பிரமிக்க வைக்கிறது.
சாந்தாவின் ரங்கோலி பற்றி அவள் விகடனில் நிறைய தடவை வந்திருக்கிறது.
மணியன்,
//மது இராஜபாளயத்தில் சிறுமியர் வாசகசாலைக்கு
கட்டிடம் கட்ட ஏற்பாடு செய்பவர் தானே ?//
ஆமாங்க அவுங்களேதான்.
காற்றுவெளிபதிவு வச்சிருக்கற 'நம்ம' மதுமிதா.
பத்மா,
கல்விக் கண்ணைத் திறக்கறதுன்றதும், ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்னு
இருக்கறதுக்கும் எத்தனை பெரிய மனசு வேணும். இல்லையா?
எனக்கு மதுவை ரொம்பவே பிடிச்சுப்போச்சு பத்மா. அவுங்க நல்லா இருக்கணும்.
சிவா,
சாந்தம்மாவைப் பாராட்டி வாழ்த்தியதற்கு நன்றி.
என் கேள்விக்கென்ன பதில்? என் கேள்விக்கென்ன பதில்?னு.....
இதுதானா இப்ப பெரிய பிரச்சனை, என்னை எப்படிக் கூப்புடறதுன்னு?
அக்கா- எனக்குப் பிடிச்சிருக்கு
ஆண்ட்டீ- அவ்வளவாப் பிடிக்கலை
மாமி - வேணவே வேணாம்
பாட்டி- இன்னும் சிலபல வருஷங்கள் போகட்டுமே.
ஆமாம். அது என்ன உங்க ப்லொக்லே வந்து பதில் சொல்லணுமுன்னு நிர்பந்தம்?
நிறைய சாந்தம்மாக்கள் வரணும்..
பல சமயங்களில் நீங்கள் நல்ல மனுஷங்களையா பார்க்கிறீங்க...!
"சென்னையில் பார்க்க வேண்டிய இடங்கள்" நோட் பண்ணிகிட்டேன்
தருமி,
//பல சமயங்களில் நீங்கள் நல்ல மனுஷங்களையா பார்க்கிறீங்க...! //
ஆமாங்க. சிலசமயம் 'கெட்ட' மனுஷங்களையும் பார்க்கறொமே!
ஆனால், அவுங்களைப் பத்தி ரொம்ப எழுதறது இல்லை.
சிங்.செயகுமார்,
ச்சும்மா நோட் பண்ணி வச்சு என்ன பண்ணறது? பேசாம அடுத்தமுறை போகும்போது
கூடவே வந்துருங்க. வேணாம் வேணாம். நீங்க போகும்போது என்னையும் கூட்டிக்கிட்டுப்
போங்க. எல்லா நல்ல இடத்தையும் காமிச்சாப் போச்சு:-)
ஏர் டெககான்ல இரண்டு டிக்கெட் புக் பண்ணிட்டேன். எப்போ பயணம் வச்சுக்கலாம்
துளசி அக்கா! இப்படி பட்ட மனுசங்களை பாக்கறச்சே மனசுக்கு தான் என்ன திருப்தி. அழகா சொல்லி இருக்கீங்க. அப்படியே அவங்க முகவரியும் கொடுத்தீங்கன்னா ஊருக்கு போகும் போது நாங்களும் போய் பார்த்துட்டு வருவோம்லா :-)) (சீரியஸாகவே கேக்கறேன்).
அன்புடன்,
சிவா
நம்ம துளசி அக்கா தானே என்று அடம் பிடித்தேன். காயப்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
தெய்வம் கடவுள்னு எல்லாம் சொல்றாங்களே....அதக் கண்ணால பாக்க முடியுங்குறதுக்கு இவங்க ஒரு எடுத்துக்காட்டு.
சாந்தம்மா போன்றவங்க உதாரணமா இருந்து இப்ப நிறைய இளைஞர்களும் இந்த மாதிரி தங்களால முடிஞ்ச அளவுக்கு செய்யறாங்க அக்கா. பதிவுக்கும் படங்களுக்கும் மிக்க நன்றி.
http://abtdreamindia2020.blogspot.com/
சிங். செயகுமார்,
என்ன ஏர் டெக்கானா? என்னமோ ஆயிருச்சு உங்களுக்கு :-))))
சிவா,
தனி மடல் கிடைச்சதுதானே?
சிவா,
அது பரவாயில்லை. எல்லாம் ஒரு குடும்பமப்பா:-)))
ஆமாம், சிவான்ற பேரு நம்ம 'குடும்பத்துலே' நிறைய ஆயிருச்சே. எதாவது அடைமொழி சேர்த்துக்குங்கப்பா.
இல்லேன்னா ஒரு கன்ஃப்யூஷன் வந்துருது.
ராகவன்,
சரியாச் சொன்னீங்க.
குமரன்,
ரொம்ப நல்ல விஷயம். இப்படியே எல்லாரும் நினைச்சா சீக்கிரம் சமுதாயத்துலே நல்ல மாற்றங்கள்
வந்துரும்.
சுட்டிக்கு நன்றி.
//dhayai iukkra idathile swamy iruppar..//
// kudumbam pesonal...//
nalladhai paraattavum nalla manasu
venum
yanaiyakka manasu romba periya manasu
ஏங்க சிவஞானம்ஜி,
சொன்னதுலே தப்பேதும் இல்லையே.
அத்தாம் பெரிய யானைக்கு எப்படிங்க ச்சின்ன மனசு இருக்க முடியும்?
பொதுவாவே மனுஷனைத்தவிர மத்த உயிர்களுக்கு பெரிய மனசுதாங்க.
Post a Comment