Sunday, April 30, 2006

கதை கேக்க வாங்க

கடவுள் மனுஷங்களைப் படைச்சார்(!?) என்னென்னமோ தியரி இருக்குதேன்னு யாரும்சொல்லிக்கிட்டு குறுக்கே வராதீங்க. இது கதை. கட்டுக்கதை. கதை மட்டுமே.


எல்லாருக்கும் சாப்பாடு என்னன்னும் மெனு கொடுத்தார். நமக்கு இட்டிலி, தோசைவடக்கே இருக்கறவங்களுக்குச் சப்பாத்தி, வெளிநாட்டு ஆளுங்களுக்கு 'Pan Cake' இப்படி. அதுக்கெல்லாம் தொட்டுக்கறதுக்கும் என்னென்ன சரியா இருக்குமுன்னும் சொன்னார்.


அப்பதான் பொறந்த ச்சின்னக்குழந்தைங்க, எங்களுக்கு என்ன மெனு?ன்னு கேட்டுச்சுங்க.அந்த நிமிஷம்தான் பொறந்திருந்தாலும் அதுங்களாலே சாமிகிட்டே மட்டும் பேச முடியும். ஆமா.


'உங்களுக்கு சாப்பாடு பால்'னு சொன்னார். அதுலே ஒண்ணு ரொம்ப வாயாடி. அது கேட்டுச்சாம்,'பாலுக்குத் தொட்டுக்கறதுக்கு என்ன?'ன்னு. அதெல்லாம் இல்லை. வெறும் பால் மட்டும்தான்னுபதில் வந்துச்சு.பசங்களுக்கு ஒரே கோபம். 'தொட்டுக்க என்ன? தொட்டுக்க என்ன?'ன்னு கூச்சல் போட்டுச்சுங்களாம். கத்துனதெல்லாம் நம்ம தென்னிந்தியக் குழந்தைகளாம்.இதுங்க கத்துன கத்தல்லே கடவுளுக்கு எரிச்சல் வந்துருச்சு. 'பாலுக்குத் தொட்டுக்க உங்கம்மா தாலி'ன்னாராம்.


குழந்தைங்க தாய்பால் குடிக்கறப்பப் பார்த்தீங்கன்னா, தன்னோட பிஞ்சுக் கையாலே தாலிச்செயினையோ,தாலிக்கயிறையோ பிடிச்சுக்கிட்டே பால் குடிக்கும். சரிதானுங்களே?


இதையெல்லாம் கவனிச்சுக்கிட்டு இருந்த மனுஷங்க, நாமும் கத்திக் கூச்சல் போட்டா எதுவாவதுஇன்னும் கிடைக்குமேன்னு நினைச்சாங்க. அவுங்களும் கூச்சலை ஆரம்பிச்சாங்க.

இது என்னடா கிரகச்சாரமுன்னு பார்த்தார் சாமி.ச்சும்மா இருங்கன்னு சொன்னார். மனுஷனாச்சே,ச்சும்மா இருக்க முடியுமா? அடங்க மாட்டேங்கறாங்க.


'எல்லாருக்கும் ஞாபக சக்தியை எடுத்தறலாம். அப்பதான் யோசனை செய்ய முடியாதுன்னு அவுங்களுக்குஎன்ன வேணுமுன்னு' ன்னு ஒரு ஐடியா வந்துச்சு. அப்படியே ஆச்சு. ஜனங்களோ இந்த நிமிஷம் செய்யறதைஅடுத்த நிமிஷம் மறந்து போதுங்க. எங்கே பார்த்தாலும் குழப்பம். வீட்டை விட்டு வெளியே வர்றவன் எதுக்குஎங்கே போகணுமுன்னு மறந்து போறான். சமையலை கவனிக்கறவனுக்குத்தான் கஷ்டம் கூடிப்போச்சு. எல்லாம் அடிப்பிடிச்சு தீஞ்சுக்கிட்டு இருக்கு. ஊர் பூரா தீஞ்சநாத்தம். இப்படி ஏகப்பட்டது.


சாமிக்கே அய்யோன்னு போச்சு. சாமியே ஆனாலும் அதைக் கொஞ்சம் மாத்திக்கலாமே தவிர கொடுத்ததை எடுக்க முடியாதே. எல்லார் தலையிலே இருந்தும் ஞாபக மறதியை எடுத்து ஒரு இடத்துலே சேர்த்துவச்சுஅதை ஒரேடியா இல்லாமச் சின்னச்சின்ன ஞாபகமறதியா ஆக்குனார். போன வருசம் தீபாவளிக்குஎடுத்த புடவை ஞாபகம் இருக்கும், ஆனா முந்தாநாளு வச்ச குழம்பு மறந்துரும். இப்படிச் சின்னச்சின்னது.


கடைசியிலே ஜனங்க எல்லாரும் திரும்பிப் போனபிறகு பார்த்தா ஒரு பெரிய கட்டி ஞாபகமறதியை அங்கே கிடக்கு. அடடா.... இதை என்னா செய்யலாமுன்னு பார்த்தப்ப அவர் முன்னாலே, சுத்துற உலகத்தோட இந்தியப்பகுதி மெதுவா சுத்திக்கிட்டே வருது. அவசரத்துலே அந்தக் கட்டியைத் தூக்கி இந்தியாவுலேவீசிப்போட்டுட்டு 'அஞ்சு வருசத்துக்கு ஒருக்கா எல்லாரும் மறதி வசப்படணும்'னு சொல்லிட்டுத் தூங்கப்போயிட்டார்.


பி.கு: இதுக்கு எதாவது டிஸ்க்ளெய்மர் போடணுமா? இல்லே ச்சும்மா இருந்துறலாமா?

30 comments:

said...

இப்பல்லாம்தான் நெனச்சப்பல்லாம் தேர்தல் வருதே!

அருமையான கற்பனைல அந்த அஞ்சு வருஷம் மட்டும் கொஞ்சம் உறுத்துது.

ஆனாலும் கதை தூள்!

அதுலியும், அந்தக் கொழந்தைங்கள்லாம் தாலியைப் பிடிச்சுக்கிட்டு பால் குடிக்கிறது.... அருமை!

said...

அஞ்சு வருசம் உறுத்துதா?

சரி. இப்படி மாத்திரலாம்.

பெரிய கட்டி ஞாபகமறதி விட்டுப் பார்த்து அதிர்ச்சியாகி, தேம்பித்தேம்பி அழ ஆரம்பிச்சுட்டார்.
அவருக்கு ஆறுதல் சொல்றதுக்காக அவரோட மனைவிக் கடவுள் வந்து,
'இதுக்கெல்லாம் ஏங்க அழறீங்க? மனசைத் தேத்திக்குங்க. தேறுதல் நல்லது'ன்னு சொன்னாங்க.
சாமிக்கு இருந்த குழப்பத்துலே அந்தக் கட்டியை இந்தியா மேலே வீசிட்டு 'தேர்தலுக்கு வச்சுக்குங்க'ன்னு
சொல்லிட்டுத் தூங்கப்போயிட்டார்.

said...

Amazing!!

said...

நன்றாக உள்ளது
குழந்தைகள் எப்பொழுதும் சும்மா இருக்காது எதையாவது அப்படித்தான் செய்யும்

said...

என்னமோ சொல்ல வந்தேன் மறந்து போச்சுங்களே. ஓ. தேர்தல் நேரமில்லையா? அதான்.

ஹிஹி.

said...

துள்சி,கட்,காபி,பேச்ட் நம்ம ஜகா வாஙிர இடம்.அதனாலே எதை எடுப்பது எதை விடிவது என்று குழம்புகிரென்.

அப்பவெ சொல்லிட்டார் செலக்டிவ்
அம்னீசிஆ வரும் நமக்கு என்று.
துளசி அக்கா வந்து நமக்கு க்யாபக படுத்த வேண்டி வருது
குருவெ துணை. மனு

said...

SK,என்னார் & கொத்ஸ்,

'மறக்காமல்' வந்ததுக்கு நன்றி:-)))

said...

மானு,

இப்ப எதை கட், காப்பி பேஸ்ட் செய்யணும்?

மறக்காம சொல்லுங்க. நானும் மறக்காமச் செஞ்சுடறேன்.
கம்ப்யூட்டர்லே ஒரு முடிச்சுப் போட்டு வச்சுக்கலாம்:-)))

said...

பராவாயில்லை தேர்தல் கதை அம்மா மாதிரி நல்லாதான் சொல்றீங்க!

said...

fantastic-ங்க! ரொம்ப நல்லா இருந்திச்சி. அதிலேயும் - "தேறுதல் நல்லது'ன்னு சொன்னாங்க.
சாமிக்கு இருந்த குழப்பத்துலே அந்தக் கட்டியை இந்தியா மேலே வீசிட்டு 'தேர்தலுக்கு வச்சுக்குங்க'ன்னு
சொல்லிட்டுத் தூங்கப்போயிட்டார்."// இந்த இடம் கொன்னுட்டீங்க போங்க. அதெப்படி இவ்வளவு கற்பனாசக்தியை உள்ளே வச்சி 'அடக்கிக்கிட்டு' இருக்கீங்க?

said...

இந்திய ஜனநாயகத்தையே கேலிக்கூத்து ஆக்கும் விதமாக இப்படி ஒரு பதிவை வெளியிட்டு இருக்கும் துளசி கோபாலை அனைத்து இந்திய அரசியல் வாதிகள் சங்கத்தின் சார்ப்பில் வன்மையாக கண்டிக்கிறோம். இது போன்ற செயலில் மேலும் அவர் ஈடுப்பட்டால் அனைத்து கட்சிகள் கூட்டம் போட்டு இது பற்றி விவாதிப்போம். பார்லிமெண்ட்டில் இப்பிரச்சனையை எழுப்பி நியுஸி அரசாங்கத்துக்கு கடிதம் எழத செய்வோம். ......................................................
அன்புடன்
நாகை சிவா

said...

உதயகுமார்,

நானும் அம்மவோட ரெட்டைப் பிறவிதான். ஜுருவா பெஹன்:-))))
அதான் கதையெல்லாம் அப்படியே வருது....:-)))

said...

தருமி,
ஏன்? மண்டபத்துலே 'எனக்கும்' யாராவது எழுதிக் குடுத்தாங்கன்னு நினைச்சுட்டீங்களா?

எல்லாம் உங்க வீட்டுக்கு வந்து 'போபோ & டாம்மி' தரிசனம் ஆச்சு பாருங்க. அன்னையிலே
இருந்து 'கற்பனாசக்தி' பெருகிக்கிட்டே வருதுங்க. தடுக்க முடியலை.:-))))

said...

நாகை சிவா,

//அனைத்து கட்சிகள் கூட்டம் போட்டு இது பற்றி விவாதிப்போம். பார்லிமெண்ட்டில் இப்பிரச்சனையை ...//

இந்த மாதிரிதான் எதையாவது 'தடால்'னு சொல்லி சிரிப்பு மூட்டுறதா?

அதான் ஒருத்தருக்கொருத்தர் அடிச்சுக்கிட்டு இருக்காங்களே.
என்ன என்ன? இவுங்க எல்லாரும் ஒண்ணா சேர்ந்தா....ஹாஹாஹாஹா

பார்லிமெண்ட்டில் ....... இதுவேற கூத்தா?:-))))))

அங்கெதான் பேரம் பேசிக்கிட்டு இருக்காங்களாமே!

ஆமாம் ஸ்மைலியை எங்கே காணோம்?

said...

நல்ல கதை. லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்திருக்கீங்க :)

said...

அக்கா.. பாத்துக்கா.. நல்லா கதை சொல்றீங்கன்னு பிரசாரத்துக்குக் கூப்டுறப் போறாங்க.. :) :).

இதுல ஜுருவா பெஹன் வேற சொல்லிக்கிறீங்க... ம்ம்ம்ம்..

said...

வாங்க மணியன்.

தமிழ்நாட்டுலே கதைகதையாச் சொல்றாங்களாமே எல்லோரும். அதான் நானும் ஒண்ணு சொல்லிப் பார்த்தேன்.
சரியா வந்துச்சுன்னா அடுத்த எலக்ஷனுக்கு நிக்கலாமுன்னு ஒரு ஐடியா:-))))

said...

பொன்ஸ்,

தினம் நல்ல 'பேட்டா' கிடைக்குதாமே.அதை விடமுடியுமா? :-)))))

said...

Amma,
The story is Super.

said...

எங்கள் ஓட்டு யானைப் பிரியை, வலைப்பதிவின் மூத்த வலைப்பதிவாளர்.(வலை பதியறதிலே மட்டும்தான்.நீங்க என்னடா இதுனு நினைக்க வேண்டாம்.நான் வயசுங்குற பேச்சுக்கே வர மாட்டேன். பெரிய ஸ்மைலி போட்டுக்குங்க).திருமதி துளசி அவர்களுக்கே எங்கள் ஒட்டு சீச்சீ ஓட்டு.நீங்க நிக்கப்போறேன் என்றதுமே என் ஒரு வோட்டு உறுதி ஆச்சுப் பாருங்க.

said...

சிவமுருகன்,
நன்றிப்பா.

said...

கீதா,
பேசாம 'யானைச் சின்னம்' பதிவு செஞ்சுறலாம். சீக்கிரம் தொண்டர் படைகளை திரட்டுங்க. இப்பவே ஆரம்பிச்சாத்தாத்தான்
அடுத்த தேர்தலுக்குள்ளே வாக்காளர்கள் 'அத்தனை பேரையும்' சந்திச்சு, ஓட்டு 'வேட்டை ஆடலாம்':-)))

நமக்கு ஓட்டுப் போட்டா எல்லாருக்கும் 'இலவச வலைப்பதிவு' தொடங்க ப்லொக்ஸ்பாட்லே இடம் புடிச்சுத்தருவோம்.

said...

நான் பிரச்சாரத்திற்கு ரெடி . நமக்கு ஒரு வெயிட்டான போஸ்டிங் குடுத்தா பக்கத்து கட்சி சொல்றத காதுல வாங்கிக்க மாட்டேன்.என்ன நாஞ்சொல்றது :-?

said...

Good Story!! Keep up!!!

said...

சிவபாலன்,

நன்றிங்க.


சிங்.செயகுமார்,

என்ன நல்ல போஸ்ட்டா கொடுக்கணுமா?

விடிஞ்சது. வர்றப்பயே பேரம் பேசிக்கிட்டு வந்தா ஏன் ஊழல் வளராது?

போதும்ப்பா. ஊழல் ரொம்பவே போரடிச்சிருச்சு.
ஒரு மாறுதலுக்காவது கொஞ்சம் நல்லது பண்ணப் பாருங்கப்பா.

said...

காலை வனக்கம் துளசி.யானை கட்சிக்கு டிஸைன் நம்ம டான்ஸர் சார் தானெ?பாவம் இத்தனை நாட்களாக நடனம் ஆடி சந்தொஷபடுதுகிரார். அவர் தான் நம்ம தேர்தல் சின்னம்.வாழ்க அம்மா ஜுடுவா பெஹன்.வளர்க ப்லொகெர் உலகம்.வல்லி

said...

வாங்க வல்லி.

அப்பாடா நாலு ஓட்டு சேர்ந்துடுச்சு:-))))

said...

போன வருசம் தீபாவளிக்குஎடுத்த புடவை ஞாபகம் இருக்கும், ஆனா முந்தாநாளு வச்ச குழம்பு மறந்துரும்//

ரொம்ப கரெக்டா சொன்னீங்க.. எங்க வீட்ல இதையேத்தான் கேப்பாங்க.. ஏங்க தி.பா.ன்னு என்னைக்கோ நடந்தத எழுதறீங்க ஆஃபீஸ்லருந்து வரும்போது நாலு ஜாமான வாங்கிக்கிட்டு வாங்கன்னா ஒன்ன மறந்துட்டு வந்து நிக்கறீங்களேன்னு..

said...

வாங்க டிபிஆர்ஜோ,

அது நாம கொடுக்கற முக்கியத்துவத்தைப் பொறுத்து மறதியும் நினைவும் :-))))

said...

நல்ல சதாய்ப்பு...ஓகே என் ஓட்டு உங்களுக்குத்தான். கூட கூப்பிட்டுட்டுப் போய் கும்பிடு மட்டும் போடச் சொல்லிடாதீங்க.