Monday, April 10, 2006

டெக்கா, ஞாயமா?



பயண விவரம் பகுதி 17

மத்த இடங்களிலேயாவது நம்ம வயசுக்குப் பக்கம்வர்றமாதிரி சிலபேராவது இருந்தாங்க. இங்கே எல்லாம் பொடிசுங்கப்பா:-) கொஞ்சம் போனா நம்மளை அங்கிள், ஆன்(ண்)ட்டி கூப்புட்டுருவாங்க போல. இனிமே என் பேரே'துளசியக்கா'ன்னு மாத்திவச்சாத்தான் பொழைக்கமுடியும்:-)

என்ன பேசுனோமுன்றதை எழுதலான்னு பார்த்தா, எல்லாத்தையும் இளவஞ்சி எழுதிட்டார். மிச்சம் மீதி விட்டுப்போனது எதாச்சும் இருக்கான்னு கண்ணுலே விளக்கெண்ணெய் ( அட, ஒரு பேச்சுக்கு இப்படிச் சொல்றதுதான்)விட்டுப் பார்த்தேன். அய்யடா....

ஹைய்யா, பேச்சுக்கு நடுவுலே காஃபி வரவழைச்சுக் குடிச்சுட்டு, வந்த தூக்கத்தை விரட்டுனதைச் சொல்லலை.ப்ளாஸ்க்குலே வந்த காஃபி 'யக்'கா இருந்துச்சு(-:

சரி மணிவேற ஓடிக்கிட்டு இருக்கே. கீழே போய் ரெஸ்ட்டாரண்ட்டு மூடறதுக்குள்ளே எதாச்சும் சாப்புட்டுக்கலாமுன்னுபோனோம். கிளம்பறப்ப நம்ம எம்ஜிஆர் ஒரு அன்பளிப்பை எடுத்து நீட்டுறார். பிரிச்சுப் பார்த்தா, எப்படி அவரைச் சுட்டுட்டாங்கன்னு போட்டுருக்கு.. ஆனா எனக்குப் புரிஞ்சுபோச்சு, இந்த எம்ஜிஆர் வேஷம் கட்டிக்கினு வந்தது எதுக்குன்னு. அன்பளிப்புக்கு மேட்ச்சிங்கா இருக்காரு:-) 'சுட்டாச்சு சுட்டாச்சு' எழுதுனவர் சுதாங்கன். 1967 லே எம்ஜிஆர்கொலை முயற்சி வழக்கு நடந்தப்ப நீதிமன்ற விசாரணகளை உள்ளடக்கியது. ( இதைப் பத்தியே ஒரு தனிப்பதிவுபோடணும். பார்க்கலாம் எப்பன்னு)


இந்த உண்மை புரியாத இளவஞ்சியும், ராகவனும் அவருக்குக் கண்வலின்னு நம்பிட்டாங்க:-) இல்லாட்டா,மறுநாள் ரஷ்யா 'நாட்டுவைத்தியம்' செஞ்சு குணமாயிருச்சுன்னு எழுதுவாராமா?


நமக்கோ 'திம்'னு அடை குந்திக்கிட்டு இருக்கு வயித்துலே. அதாலே எங்களைப் பாக்க வச்சு, அவுங்க மூணுபேருக்கும் பூரி ஒரு ப்ளேட்.


கிளம்பறப்ப மணி 11 ஆயிருச்சு. நேரம் போறதே தெரியாம அரட்டை அடிச்சுருக்கோம். மறுநாள், சொந்தங்களோடு கொஞ்சம் ஊர்சுத்தல். பக்தியோடு ஆரம்பிக்கணுமுன்னு 'ஹரே கிருஷ்ணா' கோயிலுக்குப் போனோம். பள்ளிக்கூடப்பசங்க வந்திருந்தாங்க. அவுங்கெல்லாம் 108 தடவை 'மந்திரம்' சொல்லிக்கிட்டு வர்ற பாதையிலெ வந்தாங்க. நாமோகுறுக்கு வழி( மந்திரம் சொல்லாம வர்ற சோம்பேறிங்களுக்குன்னே வேற வழி வச்சுருக்காங்க. ) மூணு அடுக்காப் போய்சாமியைக் கும்பிட்டுக்கிட்டு, அங்கெ மேலே இருந்து பெங்களூரைப் பாக்கறப்ப நல்லாவே இருந்துச்சு. பக்கத்துலேஊருக்கே, வெளுத்துக் காயவச்சுக்கிட்டு இருந்தாங்க சலவைத்தொழிலாளிங்க. காத்துலே படபடன்னு அடிச்சுக்கிட்டுப் பச்சக் கலரு ஜிங்குச்சா, சிகப்புக் கலரு ஜிங்குச்சான்னு கலர்கலரா ஆடுதுங்க துணிங்க.


நம்ம ஆளுங்க பாருங்க, ஆதிகாலத்துலெ இருந்தே குன்று, மலைன்னு எது கிடைச்சாலும் அங்கெ ஒரு கோயிலைக்கட்டிருவாங்க. ஜனங்களும் 'சாமி கும்புட'ன்னு மேலே ஏறிப் போய் அங்கிருந்து 'வ்யூ' பாப்பாங்க. உடற்பயிற்சிக்குஉதவியாவும் ஆச்சு. இல்லே, 'வாங்க மலை ஏறிப்போய் வேடிக்கை பாக்கலாம். உடம்புக்கு நல்லது'ன்னு சொல்லியிருந்தா,சொன்ன பேச்சைக் கேட்டுருப்பாங்களா? 'வேற வேலை இல்லெ போ'ன்னு விரட்டியிருக்குமுல்லெ ஜனங்க.



'அங்கேயே கொஞ்ச தூரத்துலே ஒரு ஆஞ்சநேயர் கோவில் இருக்கு. ரொம்பப் பெரிய சிலை'ன்னு கேள்விப்பட்டு அங்கேயும் போனோம். படியேறி மேலே போனா ஒரு பெரிய ஹால், தியான மண்டபமா இருக்கு. அதுக்குள்ளே நுழைஞ்சு வலதுகைப் பக்கம் இருக்கற திறந்த முற்றத்துலே அனுமன் இருக்கார். அதுக்கப்புறம் வீடு வந்து, சாப்பாடு, ப்ரெளசிங் செண்ட்டர்ன்னு மதியம் ஓடிப்போச்சு. சாயங்காலம் கேம்ப் ஏரியாவுக்குப் போய் கொஞ்சம் ஷாப்பிங் செஞ்சுக்கிட்டு,ஆந்திரா ஸ்டைல் சாப்பாடுன்னு 'நந்தினி'க்குப் போனோம். எனக்கு, நம்ம ராகவன் சொன்ன 'பெர்ஷியா'வுக்குப் போகணுமுன்னுஇருந்துச்சு. ஆனா சொந்தங்களோட ச்சாய்ஸ் நந்தினி. சாப்பாடு எப்படின்னு என்னைக் கேக்காதீங்க. அசைவம் அவுங்களுக்குமட்டும். ருமாலி ரோட்டியும், பருப்பும்தான் நாங்க ரெண்டு பேரும். எல்லாம் பயம்தான். ரெண்டுநாளுலே எங்க இவர் கிளம்பறார். அதுவரை ஏதும் 'அபகடம்'வராம இருக்கணுமே.


மறுபடியும் பொழுது விடியுமுன்னே எழுந்து ஏர்ப்போர்ட்டுக்கு ஓடியாச்சு. செக்கின் செய்யறப்ப, நாங்க கேக்காமயே20 நிமிஷம் தாமதமுன்னு சொன்னாரு ஏர்டெக்கன்கார். நான் வாயை வச்சுக்கிட்டுச் சும்மா இல்லாம, 'இந்த நிமிஷம்'னு சேர்த்துக்கலையான்னு கேட்டேன். 'எட்டுமணிக்குக் கிளம்பி ஒம்போதுக்குள்ளே அண்ணன் வீட்டுக்குப் போய் காலைஉணவு' ன்னு ஏற்பாடு.


இப்ப அதுலெ மாற்றம் வந்துருச்சு. ரொம்ப லேட்டாயிரும். பேசாம இங்கேயே ப்ரேக்ஃபாஸ்ட் சாப்புட்டுறலாமுன்னு மாடியிலே இருக்கற ரெஸ்டாரண்டுக்குப் போய் சாப்பிட ஆரம்பிச்சோம். 'சென்னைக்குப் போனதும் செய்யவேண்டிய வேலைங்க எக்கச்சக்கமா இருக்கு. நாளைக்கு கிளம்பறேனே. அதுக்குள்ளே என்னென்ன செய்யலாமுன்னு ஒருலிஸ்ட் போட்டுக்கறேன்'னு பட்டியல் எழுதிக்கிட்டு உக்காந்துருக்கார் எங்க இவர். நானோ எதிர்லே இருக்கற டிவிப்பொட்டியிலே கண்ணை நட்டுக்கிட்டுச் சாப்புடறேன். அதுலே ஃப்ளைட் இன்ஃபோ வந்துக்கிட்டு இருக்கு. ஏன் இவ்வளோநேரமான பின்னும் 'டிலேய்டு'ன்னே இருக்கு?


தலையை உசத்திப் பார்த்த இவர், 'உன் பக்கத்து டேபிளில் பாரு, யாருன்னு' சொன்னார். பரக்காவெட்டியாட்டம்திரும்பக்கூடாதுன்னு மெதுவாத் தலையைத் திருப்புனா, அட! நம்ம மாதவன்.


பேசலாமான்னு யோசிக்கறதுக்குள்ளே, பொட்டி சொல்லுது 'ச்சென்னை ஃப்ளைட் கேன்ஸல்டு' அடப்பாவிகளா, இதை அனெளன்ஸ்கூடச் செய்யலே? ஓடு கீழே, என்னாச்சுன்னு பாக்கணுமுன்னுஒரே பாய்ச்சல். போற அவசரத்துலே மாதவனுக்கு ஒரு தலை அசைப்பு.


கீழே கவுண்ட்டருக்குப் பக்கத்துலே கும்பல். மொத்தம் 6 பேர். நாங்க ரெண்டு பேர். சென்னைக்கு ஒருஆஃபீஸ் மீட்டிங் போறவர் ஒருத்தர், உடம்பு சரியில்லாத உறவைப் பார்க்க ஓடுற ஒரு அம்மா, ரெண்டு இளைஞர்கள்,தோளில் லேப்டாப் பையோடு. எங்களைச் செக்இன் செஞ்சு பெட்டிகளை வாங்குனவர் காலடியிலே நாங்க வச்சுட்டுப் போன பெட்டிங்க அப்படியே இருக்கு.

"ஏன் என்னாச்சு? "

"எதுக்கு ஒரு அறிவிப்புக்கூட செய்யலை? "

"நாங்க ஆறேபேர்ன்றதாலே கேன்ஸலாக்கியாச்சா?"

"இப்ப முக்கியமான மீட்டிங் போயே ஆகணும். எப்படிப் போறது?"

"அடுத்த ஃப்ளைட்டுலே போடுவீங்களா?"

"வேற எதுலேயாவது போக ஏற்பாடு செய்வீங்களா?"

ஆறுபேர்தானே? ஆறே கேள்விங்க.

கவுண்ட்டர் பேர்வழி, ' ஒன் மினிட் 'னு எழுந்து என்னவோ விசாரிக்கப் போறவர்போல போனவர், போனது போனதுதான்.

இதுதான் எனக்கு எரிச்சலா இருந்துச்சு. எங்க ஆறுபேரையும் அம்போன்னு விட்டுட்டு போயிட்டார் அந்த ஆள்.

என்ன மாதிரி கஸ்ட்டமர் சர்வீஸ் பாருங்க? எங்களுக்கு எதாவது பதில் வேணுமா இல்லையா?

சரி, இதே நான் ஏர்டெக்கன் ஆளாயிருந்தா என்ன செஞ்சுருப்பேன்? மொதல்லே பயணிகள்கிட்டேமன்னிப்புக் கேட்டுக்குவேன். 'கடைசி நிமிஷத்துலேதான் எஞ்சின்லே ஒரு ப்ராப்ளம் இருக்குன்னுதெரிஞ்சதுங்க. உங்க உயிர்களுக்கு ஆபத்துவராமப் பாதுகாக்கறதுக்காகத்தான் இந்த ஃப்ளைட்டைக்கேன்ஸல் செய்ய வேண்டியதாப் போச்சு. இஞ்சிநீயர்கள் பார்த்துக்கிட்டு இருக்காங்க. சென்னைக்குப் போற
வேற ஏர்லைன்ஸ் ஃப்ளைட்லே இடம் இருக்கான்னு கேட்டுப் பார்க்கறோம். தொந்திரவுக்கு மன்னிக்கணும்'னு
சொல்லி, பயணிகளுக்கு, 'அவுங்க பாதுகாப்புக்காக மட்டுமே விமானத்தை ரத்து செய்ய வேண்டியதாப் போச்சு'ன்னு ஒரு உணர்வை உண்டாக்கி இருப்பேன்.

மக்களும், 'ஏதோ அந்தவரை தப்புனோம்' ன்ற எண்ணத்துடன் அடுத்து ஆகவேண்டியதைப் பத்தி யோசிக்க முடியும்.அதையெல்லாம் விட்டுட்டு, ஆட்கள் கேள்வி கேட்டவுடனே, ஓடிப்போய் ஒளிஞ்சுக்கறது என்ன நியாயம்? என்னதான்சீப் டிக்கெட்டுன்னாலும், டிக்கெட்டு மட்டும்தானே ச்சீப்? ஜனங்களுமா?


ஸ்டாஃப்ங்களுக்கு நல்லவிதமான ட்ரெயினிங் கொடுத்து கஸ்ட்டமர்ஸை தக்க வச்சுக்கணுமா இல்லையா?

அதுக்கப்புறம், அங்கே அடுத்த பகுதியிலே இருந்த ஏர்டெக்கன் ஆஃபீஸை நோக்கிப் போனோம். அப்ப அங்கே இருந்துவந்த ஒரு ஏர்டெக்கன் அம்மா, 'உங்க டிக்கெட்டுக்கு ரீபண்ட் வாங்கிக்க வெளியே வலதுபக்கம் ஒரு கவுண்ட்டர்இருக்கு. அங்கே போய் வாங்கிக்குங்க'ன்னு சொல்லிட்டுப் போறாங்க. ஏங்க, என்னங்க நடக்குது இங்கே? இவுங்களைசாயங்காலம் 5 மணி ஃப்ளைட்டுக்கு நம்ப முடியுங்களா?


'பெட்டிங்களை யார்வேணுமுன்னாலும் எடுத்துக்கிட்டுப் போயிருக்கலாம்' ன்றமாதிரி, அங்கே கிடக்கு. கூட இன்னொருபெட்டியைக் கொண்டு போனாக்கூட கேக்க நாதி இல்லை.

வெளியே வந்து காசுக்கு நிக்கறோம். அங்கேயும் ரெண்டு பொண்களும், ஒரு ஆளும் இருக்காங்களே தவிர வேலைஒண்ணும் நடக்கலை. ஆறே ஆறு பேருக்குக் காசைத்திருப்ப எவ்வளவு நேரமாகும்? நீங்களே சொல்லுங்க. 15 நிமிஷம்ஆச்சு. இன்னும் மொத ஆளுக்கே காசைக் கண்ணுலே காட்டலை. சட்டுப்புட்டுன்னு கொடுத்தாத்தானே திரும்ப சிட்டிக்குவந்து பஸ்ஸோ, ரயிலோ ஏற்பாடு செய்யலாம்?


இன்னும் 15 நிமிஷம் ஆச்சு. ஊஹூம்.... அப்படியே நிக்கறோம் ஆறுபேரும். எனக்குக் கோபம் கூடிக்கிட்டேப் போகுது. சகிக்கமுடியாம கவுண்ட்டர் உள்ளெ இருக்கற ஆளுங்களைப் பார்த்துக் கத்துனத்துக்கப்புறம், கையைநீட்டி, டக்குன்னு நம்ம டிக்கெட்டை வாங்கிக்கிட்டு ரெண்டே நிமிஷத்துலே காசு வருது.


இப்ப அடுத்து செய்யவேண்டியது என்ன? மொதல்லே அண்ணனுக்குப் போன் போட்டு , சமையலை ஆரம்பிச்சாச்சான்னுகேட்டு, அதை நிறுத்தச் சொன்னேன். விஷயத்தைக் கேட்டுக்கிட்ட அண்ணி சொல்றாங்க,'இங்கெல்லாம் இப்படித்தாங்க.ராத்திரிக்கு வந்து சேர்ந்துருவீங்கல்லே?'


இந்த கலாட்டாவுலேதான் கவனிக்கறோம், போன்லே வெறும் ஆறுரூபாத்தான் இருக்காம். முத்தாநாள் ஐந்நூறு
இருந்தது எப்படி? மச்சினருக்குப் போன் செஞ்சு ப்ளைட் இல்லே. ட்ரெயினில் கிடைக்குமான்னு பாருங்கன்னு சொல்லிக்கிட்டுஇருக்கறப்பவே அந்த ஆறும் போயிருச்சுங்க.


இங்கே நியூஸியிலே இருந்து கொண்டுபோன 'ரோமிங் வசதி' இருக்கறது ஒண்ணு கையிலே இருக்கு. ஆனா அதுக்குஒவ்வொரு 'காலும்' இங்கே வந்துல்லே டைவர்ட் ஆகும். போச்சுரா. அதுலே மச்சினரைத் திரும்பக் கூப்பிட்டப்ப,அங்கேயே இருங்க வண்டி அனுப்பறேன்னு சொன்னார். சொந்த வண்டி இல்லைதான். ஆனா தெரிஞ்ச பையனோட ப்ரைவேட் டாக்ஸி. அதுலேதானெ நேத்துக் கோயில் குளமுன்னு சுத்துனோம். சரின்னு உக்கார்ந்துக்கிட்டு இருக்கோம்.


அந்த இடம்தான், பயணம் போறவங்களை இறக்கி விடுறதுக்குனு இருக்கு. விதவிதமான வண்டிங்க வந்து விதம்விதமான ஆளுங்களை உதிர்த்திட்டுப் போகுதுங்க. எங்க 'அம்பாஸிடரை'க் காணோம்!

21 comments:

said...

ச்சும்மா ஒரு டெஸ்ட்

said...

//மெதுவாத் தலையைத் திருப்புனா, அட! நம்ம மாதவன//
நற நற!... வலைப்பதிவுப் பெருமைய மாதவன்கிட்டே "எடுத்து விட" முடியாமப் பண்ணின ஏர்-டெக்கனை...(என்ன தண்டனைனு நீங்களே தீர்மானிச்சுக்கங்க மக்களே!!!) :O)

said...

//நம்ம ஆளுங்க பாருங்க, ஆதிகாலத்துலெ இருந்தே குன்று, மலைன்னு எது கிடைச்சாலும் அங்கெ ஒரு கோயிலைக்கட்டிருவாங்க. ஜனங்களும் 'சாமி கும்புட'ன்னு மேலே ஏறிப் போய் அங்கிருந்து 'வ்யூ' பாப்பாங்க. உடற்பயிற்சிக்குஉதவியாவும் ஆச்சு. இல்லே, 'வாங்க மலை ஏறிப்போய் வேடிக்கை பாக்கலாம். உடம்புக்கு நல்லது'ன்னு சொல்லியிருந்தா,சொன்ன பேச்சைக் கேட்டுருப்பாங்களா? 'வேற வேலை இல்லெ போ'ன்னு விரட்டியிருக்குமுல்லெ ஜனங்க.// திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோவிலுக்கு இப்படி ஏறி இறங்கி தான் அந்த காலத்தில உடற்பயிற்சி செஞ்சேன்! நீங்க சொன்னது கரக்ட் தான். ஆனா கொஞ்சு வயசுலே, கீழே ஆண்டாத்தெருவௌ சுத்தினது கோவில் சுத்து பிரகாரம்னு நினைக்கக்கூடாது. சும்மா சாய்ந்திரம் கோலம் போடறதை ஜொள்ளு விடறதுக்குத்தான்! அது மனபயிற்சிகாக!

said...

ஆஹா வாங்க வாங்க. ஆளு ஊர்லேதான் இருக்கீங்களா?:-)))
'கண்டு' கனகாலமாச்சே!

ஆமாம், மாதம் மும்மாரி பொழியுதுங்களா?

said...

ஊர்லதான் இருக்கேன். என் சோகக்கதையக் கேளு தங்கமே!!! :O)
வேலை -> வீடு -> அவசர அவசரமா வெளிக்கிட்டு கோயில் (அதான் கோயில் "விழாக்கோலம் பூண்டு விளங்குது"ல்ல!!)
இப்பிடியே 10 நாள் ஓடிப்போச்சு. நாளையோட அதுவும் முடிஞ்சுடும். மறுபடி வேலை பாக்கணும். :O(

மாதம் மும்மாரியெல்லாம் இல்ல. குளிர்தான் எங்களைப் பாக்கறதுக்கு மே மாதம் வரை பொறுக்க முடியலைன்னு இப்பவே வந்திருச்சு!

said...

அந்தப் புத்தகத்தைப் படிச்சி நான் சொன்னதில விட்டுப்போன முக்கியமான விஷயங்களைச் சொல்லுங்க.

said...

என்ன அக்கிரமம் பாருங்க.

அதான் ஆளுங்க கோபத்துல கையில கெடச்சத எடுத்து அடிச்சி ஒடைக்கறாங்க.

இப்படி ஒரு கம்பெனி அதுக்கு ஒரு ஆஃபீசு.

ஏங்க சும்மாவா விட்டீங்க அந்த ஆளுங்களை பிடிச்சி வச்சி நாலு சாத்து சாத்தியிருக்கணும்.

சரி, அப்புறம் எப்படித்தான் சென்னை திரும்பினீங்க?

said...

தருமி,

அதுலே ஒரே குழப்பம்தான். தேவையில்லாத விசாரணைக் கேள்விங்க இருந்துச்சே தவிர, 'நடந்த உண்மை'
வெளிவரவே இல்லை. என்னென்னவோ சந்தேகங்கள் வருது. ராதாவுக்குத் தண்டனை கொடுத்துட்டாங்களே தவிர,
அதுலேயும் ஏதோ அரசியல் பூந்து விளையாடுன மாதிரிதான் இருக்கு.

என்னவோ நடந்திருக்கு, மர்மமாயும் இருக்குது.

எழுதுனவர் என்ன சொல்ல வரார்னே தெரியலை. அவுங்கவுங்க இஷ்டப்படி ஊகிச்சுக்கட்டுமுன்னு விட்டுட்டார்.

said...

டிபிஆர் ஜோ,

இங்கே நியூஸியிலே போலீஸ்காரங்ககூட திருடனை அடிக்க முடியாது.
இவ்வளவு என்னத்துக்கு, நம்ம குழந்தைகளைக்கூட எதாவது தப்பு செஞ்சாலும் அடிக்க உரிமை இல்லை.
அடி உதவறமாதிரி...ன்னு பழமொழியெல்லாம் இங்கே பிரயோஜனப்படாது. இப்படி இருக்கறப்ப
நான் எங்கே அந்த ஆளுங்களை நாலு சாத்து சாத்தறது?

அதுக்குத்தான் கோபம் வந்து ஒரு சின்ன சாமியாட்டம் ஆடுனேன் பீட்டர் விட்டுக்கிட்டு:-)

அதுக்குக் கொஞ்சம் பலன் இருந்துச்சு.

said...

ஏர் டெக்கான் இப்படி தான்.. ஒண்ணும் பண்ண முடியாது.. நீங்க பெங்களூரில் இருந்து பஸ்லயோ ட்ரெயின்லயோ வந்திருக்கலாம்.. சீக்கரமே வந்திருப்பீங்க... ஆனாலும் மாதவனை மிஸ் பண்ணது தான் ரொம்ப கஷ்டமா இருக்கு... ப்ளேனுக்கு என்னக்கா அவசரம்?... ச்சும்மா நம்ம மாதவன் கிட்ட ரெண்டு வார்த்தை பேசி இருக்கக் கூடாது???

said...

டீச்சர் நீங்க ஏர் டெக்கான்ல கெளம்புறோம்னு சொன்னப்பவே எனக்கு ஒரு திக்குதான். ஆனாலும் எதுக்குப் பயமுறுத்தனும்னு விட்டுட்டேன்.

ஏர்டெக்கான்ல போறத விட கூட ஆயிரமோ ரெண்டாயிரமோ கொடுத்து வேற ஃபிளைட்ல போறது உத்தமம். இவங்க சர்வீஸ் ரொம்ப மோசம். டவுண் பஸ்ஸை விடக் கேவலமா நடத்துறாங்க.

இங்க பெங்களூர்ல கொஞ்ச நாளைக்கு முன்னாடி விமானத்தை இறக்கத் தெரியாம இறங்கி...எப்படியோ ஒருத்தருக்கும் ஒரு கெடுதியும் ஆகலை......

அந்தப் பக்கமே போகாதீங்க.........

பேரு பெத்த பேருலு...தாகதானிகி நீளு லேனேவாளுன்னு ஆந்திராக்காரங்க சொல்ற மாதிரிதான் இருக்கு.

said...

// இந்த உண்மை புரியாத இளவஞ்சியும், ராகவனும் அவருக்குக் கண்வலின்னு நம்பிட்டாங்க:-) இல்லாட்டா,மறுநாள் ரஷ்யா 'நாட்டுவைத்தியம்' செஞ்சு குணமாயிருச்சுன்னு எழுதுவாராமா? //

அதுவும் அப்படியா!

இன்னைக்கு சுதர்சனம் வீட்டுக்கு வர்ராரு....அவர கவனிச்சிக்கிறேன். நல்ல கனமான போர்வையை இப்பவே எடுத்து வைக்கிறேன். :-))))))

said...

// எனக்கு, நம்ம ராகவன் சொன்ன 'பெர்ஷியா'வுக்குப் போகணுமுன்னுஇருந்துச்சு. ஆனா சொந்தங்களோட ச்சாய்ஸ் நந்தினி. //

ஆகா! இப்பிடி ஆயிருச்சே...நந்தினி ரொம்பவே சுமாரான ஓட்டல். சோற்றைப் பிணைஞ்சு கட்டனும்னு நெனைக்கிறவங்க அங்க விரும்பிப் போவாங்க....பெர்ஷியாவுக்குப் போயிருந்திருக்கனும் டீச்சர்...சரி விடுங்க...பெட்டர் லக் நெக்ஸ் டைம்.

said...

நம்ம உதயகுமார் போட்ட பின்னூட்டம் எங்கியோ ஒளிஞ்சுக்கிட்டு இருந்து இப்பத்தான் வந்து சேர்ந்துச்சு.

'கோலங்கள் 'பார்க்கறது அப்பவே ஆரம்பிச்சுருச்சா?:-))

said...

பொன்ஸ்,
மாதவன் எங்கே போயிரப்போறார்? இங்கே வர்றப்பப் பேசிக்கலாம்.
மாதவனும் சென்னைக்குத்தான். ஆனா ஜெட் ஏர்வேஸ்.

said...

ராகவன்,

ஏர்டெக்கனை ப்ளாக் லிஸ்ட் செஞ்சாச்சு. ஆனா மதுரைக்குப் போய்வந்தப்ப லேட்டுன்னாலும் போச்சுப்பா.

அடுத்தமுறை பெர்ஷியாதான். சென்னையிலே வெய்யில் எப்படி இருக்கு?

சுதர்சன் வர்றதுக்கு கனமான போர்வை எதுக்கு? அப்படியே போட்டு கோழி மாதிரி அமுக்கவா?

said...

என்னவோ போங்க 2 நாளாகத் தமிழ்மணம் சரியாக வரவில்லை.Cannot connect to local MySQL server through socket'/var/lib/mysql/mysql.sock'(11)என்றே வருகிறது. ராத்திரித் தூக்கத்திலே கூடத் தமிழ் மணம், தமிழ் மணம் என்றே பெனாத்துவதாகக் கணவர்கிட்டேயிருந்து புகார், விஷயம் தெரிஞ்சவங்க யாராவது உதவினால் புண்ணியமா இருக்கும்.மனசே சரி இல்லைங்க. உங்கள் விலாசமெல்லாம் அடிக்கடி பார்ப்பதாலே சேமிப்புல இருக்கு. ஏதோ ஒப்பேத்தறேன்.

said...

கீதா,

எனக்கும் தமிழ்மணம் வரலை.

இந்த சைட்டுலே பாருங்க. இதுவும் ஒரு திரட்டிதான்.
இதுலேயும் எல்லாம் வரும். ஆனா வேற செட்டப்( பார்க்கறதுக்கு)

http://www.thenkoodu.com/

said...

// ராகவன்,

ஏர்டெக்கனை ப்ளாக் லிஸ்ட் செஞ்சாச்சு. ஆனா மதுரைக்குப் போய்வந்தப்ப லேட்டுன்னாலும் போச்சுப்பா. //

நல்ல வேலை செஞ்சீங்க....

// அடுத்தமுறை பெர்ஷியாதான். சென்னையிலே வெய்யில் எப்படி இருக்கு? //

தெரியலையே...பெங்களூர்ல போட்டுத் தாக்குது...சென்னைக்கு இந்த மாசக் கடைசிதான் போறேன்.

// சுதர்சன் வர்றதுக்கு கனமான போர்வை எதுக்கு? அப்படியே போட்டு கோழி மாதிரி அமுக்கவா? //

அதே அதே.... :-))

said...

துளசியக்கா!

ஏர்டெக்கான் ல போனதுக்கு இங்க ஆட்டோ புடிச்சிருந்தீங்கன்னா இன்னும் சீக்கிரமா போய் சேர்ந்திருக்கலாம்! :)

ராகவன்! நீங்களும் சுதர்சனும் சந்திக்கறீங்களா! இதெல்லாம் நல்லால்லை! ம்ம் நடத்துங்க! அப்பப்ப என்னையும் கண்டுக்கங்க! :)

said...

இளவஞ்சி,

ஆட்டோ ஐடியா உண்மைக்கும் வொர்கவுட் ஆயிருக்கும். இது தோணாமப் போச்சு,ஹூம்...

ஆமாம், இவுங்க அதான் ராகவன் & சுதர்சன் உங்களை ஓரங்கட்டிட்டாங்களா?
'குடும்பி'ன்னு வுட்டுருப்பாங்களோ?