Wednesday, April 05, 2006

அட!!

மக்கள்ஸ்,


இன்னிக்கு ரொம்ப சந்தோஷமான நாள். இங்கே நியூஸியின் சரித்திரத்துலேயே,முதல்முறையா ஒரு இந்தியர் கவர்னர் ஜெனரலா ஆகியிருக்கார்.


இவர் பெயர் ஆனந்த் சத்யானந்த். வயது 61


இவரது பெற்றோர்கள் ஃபிஜியிலிருந்து இங்கே வந்து குடியேறிய இந்தியர்கள்.

இங்கேயே படித்து, வழக்குரைஞராக( இது சரியா, இல்லே வழக்கறிஞரா?) இருந்து ,இப்போடிஸ்ட்ரிக்ட் கோர்ட் ஜட்ஜாக இருக்கற இவர் ஆகஸ்டு மாதம் கவர்னர் ஜெனரலாகப் பதவி ஏற்பார்.


இதுவரை வெள்ளைக்காரர்களும், மவோரி இனத்தவர்களும்தான் இந்தப் பதவி வகிச்சுருக்காங்க.

காலம் மாறி வருது.

இவருக்கு நம் நல்வாழ்த்துகள்.


இந்த மகிழ்ச்சியை உங்களோடு சேர்ந்து பகிர்ந்துக்கத்தான் இந்தப் பதிவு.

12 comments:

பொன்ஸ்~~Poorna said...

சூப்பர்.. போட்டோ??

துளசி கோபால் said...

வாங்க பொன்ஸ்,

போட்டோ கிடைக்கலை. டிவியிலெ சொன்னாங்க.

Muthu said...

துளசியக்கா,
நேத்தே இதைப் படித்தேன். இதைப் பற்றி நான் உங்களுக்கு முன்பே எழுதிவிடலாமா என்றுகூட யோசித்தேன் ;-).

துளசி கோபால் said...

அட, இப்பத்தாங்க உங்க கடலைக்குப் பதில் சொல்லிட்டு வரேன். நீங்க வந்துட்டுப் போயிருக்கீங்க!

G.Ragavan said...

வாழ்த்துகள். உலகம் அனைவருக்கும் பொதுவானது. ஒற்றுமை ஓங்கி எங்கும் இன்பம் பெருகட்டும். மத மொழி இனப் பாகுபாடுகள் மறைந்து எங்கும் இன்பம் செழிக்கட்டும்.

Sud Gopal said...

உங்க சங்கத்தின் சார்பா இவருக்கு எப்ப பாராட்டு விழா நடத்தப் போரீங்க?

டிபிஆர்.ஜோசப் said...

உண்மையிலேயே இது சந்தோஷமான செய்திதான் துளசி.

பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி!

துளசி கோபால் said...

ராகவன்,

//உலகம் அனைவருக்கும் பொதுவானது//

நீங்க சொன்னது உண்மைங்க. எல்லாம் நல்லா இருந்தாச் சரி.

துளசி கோபால் said...

சுதர்சன்,

அதெப்படிங்க உடனே? அவர் ஆகஸ்ட்டுலே தான் 'அரியணை' ஏறப்போறாரு.
அதுக்கப்புறம் கூப்புட்டுற வேண்டியதுதான்.
இங்கே 'பந்தா'வெல்லாம் கிடையாதுங்க.பர்த்டே பார்ட்டிக்குக்கூட மந்திரிங்க கலந்துக்குவாங்க.

துளசி கோபால் said...

டிபிஆர்ஜோ,

இனப்பாகுபாடு இன்னும் இங்கே வரலைங்க. அதுவே நல்ல விஷயம்தானே?

siva gnanamji(#18100882083107547329) said...

inge sila per sonia velinadu engirangale avangalukku enna pathil?
adhilum oru amma 'mottai pottuppen'(makkalai mottai adichadhu podhadham)enranga...

துளசி கோபால் said...

சிவஞானம்ஜி,

எல்லாம் அரசியல்ங்க. மொட்டை போட்டுக்கறேன்னு பயமுறுத்தல் எல்லாம் ஒரு 'தம்கி'ங்க.
அப்படியே போட்டுக்கிட்டாலும் என்ன ? திருப்பதியிலே போய்ப் பாருங்க, எத்தனை பெண்கள்
மொட்டை போட்டுக்கறாங்க.