Thursday, April 06, 2006

பெங்களூரு, நானு பருத்திதேனெ


பயண விவரம் பகுதி 16


இதோ, பெங்களுருக்குப் போக காலை ஏழரை மணிக்கு விமானம். காலையிலே சீக்கிரமா எழுந்து அடிச்சுப்பிடிச்சுக்கிளம்பி ஏர்போட்டுக்கு வந்து சேர்ந்தாச்சு. அங்கெ வாசல்லேயே ஒரு 'டீக்கடை' இப்படி சொல்லக்கூடாதோ, ஒரு டீ ஷாப் இருக்கு. 4 ரூபாயாம், ஒரு வாய் டீ. அதையும் வாங்கி ஊத்திக்கிட்டு உள்ளெ போய் செக் இன் செஞ்சு 20 நிமிஷமே லேட்டாப் புறப்பட்டு எட்டரைக்கு ,ஏன்றி, சென்னாகிதிரா? ன்னு கேட்டுக்கிட்டே பெங்களூருலே இறங்கியாச்சு. பேக்கேஜ் எடுக்க ரொம்ப நேரம் நிக்க வேண்டியதாப் போச்சு. பயங்கரக்கூட்டம். நிறைய வெள்ளைக்காரர்கள்.


டாக்ஸியிலே சிட்டிக்குப் போறப்ப, ஒரு லைட்டுக் கம்பம் விடாம போஸ்ட்டர் அடிச்சு தட்டியில் ஒட்டிக் கட்டி வச்சுருக்காங்க.'ஆர்ட் ஆஃப் லிவிங்' ரவிசங்கர் வர்றாராம். அதுக்கு பழைய ஏர்போர்ட்லே மூணுநாள் விழாவாம்.அதான் கூட்டமாம்.டாக்ஸி ட்ரைவரா நமக்குக் கிடைச்சவர் ஒரு சேட்டன். அது போதாதா? சம்சாரிச்சுக்கிட்டே ஓட்டலுக்குப் போய்ச் சேர்ந்தோம்.


இந்த ஹொட்டல், நான் மூணுவருசம் முந்தி வந்து தங்குனப்ப நல்லாவும், புதுசாவும் இருந்துச்சுங்க. விலையும் ரீஸனபிள்தான். அதைப் பத்தி எங்க இவர்கிட்டே சொல்லித்தான் இப்ப இங்கே வந்தோம். எண்ணி மூணே வருசத்துலேஇப்படிக் குப்பையாக் கிடக்குமுன்னு நான் எதிர்பார்க்கலை. கார்பெட் எல்லாம் கிழிஞ்சு, நிறமெல்லாம் போய்அசிங்கமா இருக்கு. முக்கியமா இந்தக் கிழிசல் ஆபத்துதான். யாராவது கால்தடுக்கி விழுந்தா? போதாக்குறைக்குப்பொன்னப்பா( எவ்வளோ நாள்தான் பொன்னம்மான்னே சொல்றது?) மாதிரி வேக்குவம் க்ளீனரை அங்கெ காரிடோர்லேயே, நீள வயரோடு போட்டு வச்சிருக்காங்க. யாரையாவது கட்டாயமா விழ வைக்கணுமுன்னே முன்னேற்பாடா இருக்குறாங்க போல. நாங்க தங்குன ரெண்டு நாளும் அங்கெயேதான் கிடந்துச்சுங்க. இன்னும் கிடக்கும், நீங்க வேணாப் பாருங்க.இதுக்குப் பேர் ரொம்ப பெத்தபேரு, 'ஹோட்டல் சாம்ராட்'. இதுக்கு நேர் எதிரே நடராஜ் தியேட்டர். அடையாளம் சொல்ல சுலபம்.மச்சினர் வீட்டுக்குப் பக்கமுன்னுதான் முந்தியும் இங்கே வந்தது. சாப்பாடு அங்கே, தூக்கம் இங்கே.


என்னோட தமிழ் இலக்கிய சேவை(!) ஆரம்பிச்ச இடம் மரத்தடி. அப்ப என்னமோ இதோட முக்கியஸ்தர்கள் எல்லாம் பெங்களூருன்னு ஒரு தோணல். அப்படியில்லே, எல்லா ஊர்லேயும் ஆளுங்க இருக்காங்கன்றது வேற விஷயம். அப்பநான் சேர்ந்த காலத்துலெ, இந்த மரத்தடியின் பெங்களூரு கிளை ரொம்ப சலசலத்துக்கிட்டே கலகலன்னு இருந்துச்சா,எனக்கும் ஒரு அபிமானமாப் போச்சு. இப்ப நம்ம வலைஞர்கள் வேற அங்கிருக்காங்களா, எல்லாரையும் சந்திக்கற ஆர்வம் கூடிப்போச்சு.


ஹரிமொழின்னு சொந்த தளம் வச்சு எழுதிக்கிட்டு இருக்கற ஹரிகிருஷ்ணன் அவர்கள் இப்ப நங்கநல்லூர்லே இருந்து பெங்களூரு போயிட்டார். இவரைப் பத்திச் சொல்லணுமுன்னா என்னாலெ ஆகாது. நேத்து முளைச்ச காளான், எக்கச்சக்கமாக் காய்ச்சுக் குலுங்கி நிக்கற மாமரத்தை (இனிப்பு மாம்பழத்தோடு கூடிய)பத்தி என்ன சொல்ல முடியும்? ( நல்லா இருக்காஉவமை?) சமீபத்துலே இவர் எழுதுன அனுமனின் வார்ப்பும் வனப்பும் என்ற புத்தகத்தைப் பாராட்டி, இவருக்குக் கவுரதை கிடைச்சது. பாராட்டுவிழா வெல்லாம் படத்துலெ பார்த்தேன்.


நம்ம இளவஞ்சி, ராகவன்( ஜிரா) சுதர்சன் எல்லோரும் சந்திக்க வரேன்னு சொல்லியிருந்தாங்களா, அவுங்களையும் ஹரியண்ணா( இப்படித்தான் அவரை எல்லோரும் கூப்புடறாங்க. ஆனா நான் மட்டும் ஹரித்தம்பின்னு சொல்லிக்கிட்டு இருக்கேன். என்ன சொல்லுங்க, அவரைவிடக் கொஞ்சம், (கொஞ்சமே கொஞ்சமுன்னாலும்) மூத்தவ இல்லையா?)க்ரூப்போடயே சேர்த்துப் பார்த்தா நல்லா இருக்குமுன்னு நினைச்சேன். ஆனா நம்ம வலைஞர்களுக்கு மரத்தடிஅவ்வளவா பரிச்சயமில்லையாம். அதுவுமில்லாம அன்னைக்கு வேலை நாளாச்சுங்களா, சாயந்திரமாத்தான் கொஞ்சம்நேரம் இருக்குமுன்னு சொன்னாங்க. அதுவுஞ்சரிதான். ஒரு ஏழு, ஏழரைமணின்னு முடிவாச்சு. ஹொட்டலுக்கே வந்துடறோமுன்னு சொன்னாங்க.


இங்க இருக்கப்போறதோ ரெண்டே நாளு. அதுலெ ஒரு நாளைச் சொந்தங்களுக்கு ஒதுக்கணும். ஒரு நாளு நமக்கு.அதானே ஞாயம்?


ஹரியண்ணாவைப் பார்த்துரலாமுன்னு அவருக்குப் ஃபோன் போட்டு எந்நேரம் வசதிப்படுமுன்னு கேட்டா,அவர் சொல்லிட்டார், உங்க நேரமெ என் நேரமுன்னு! ஒரு அஞ்சு மணிவாக்குலே வரேன்னு சொல்லிட்டுப் போனோம்.
வீட்டுக்குள்ளே நுழைஞ்சு மாடிப்படியேறிப் போனா, அவரோட திருமதி, 'மேடம் வந்துட்டாங்க'ன்னு மேல்மாடியைப் பார்த்து உரக்கச் சொன்னாங்க. என்னடான்னு பார்த்தா, ரெண்டாவது மாடியிலே ஒரு அறையிலே இருக்கார். உள்ளே அட்டகாசமான புத்தக அலமாரி, கணினின்னு ஒரு செட்டப்பு. சுவத்துலே அடடாடா... என்னன்னு சொல்றது? அருமையானபுள்ளையார். மரச்சிற்பம். சின்ன விளக்கு எரிஞ்சுக்கிட்டு இருக்கு.


ரொம்ப ஒல்லியா இருக்கார். கண்ணு தீர்க்கமா பார்க்குது. இன்னிக்குத்தாம் மொதமொதலாப் பாக்கறோம்ன்ற எண்ணமே வரலை.ச்சும்மா குசலம் விசாரிச்சுத் தொடங்குன பேச்சு, அப்படியே ஆழமான இலக்கியப் பேச்சாப் போகுது. என்னைப் பயமுறுத்துறாப்பலெ அடிக்கடி கம்பராமாயணத்துலே, இன்னும் புறநானூறுன்னு செய்யுளைச் சொல்றார். ஆஹா, இவர் சாமானியப்பட்ட ஆளில்லைரா, ரொம்ப கவனமா இவர் பேச்சைக் கேக்கணுமுன்னு தோணிப் போகுது. பேச்சு சுவாரஸியத்துலே நேரம் போகறதே தெரியலை. இளவஞ்சிக்கு போன் போட்டு ஏழரையை எட்டாக்கிறலாமுன்னு சொல்லியாச்சு. பாவம் அவுங்கவேற வந்து காத்துக்கிட்டு இருந்தாங்கன்னா?


பாரதியாரின் கவிதைகள் எப்படி தேசிய உடமையா ஆனதுன்னும், இன்னும் பாரதியார் வாழ்க்கையைப் பத்தியும்கூடப் பேச்சுப் பயணம் தொடர்ந்துக்கிட்டு இருந்துச்சு. எங்க இவர்வேற இப்பத்தாம் மொதல் மொதலா ஒரு இலக்கியவாதியைச் சந்திக்கறார். அவருக்குத் தெரிஞ்சதெல்லாம் மெஷின்கள்தான். இப்படி ஒரு உலகம் இருக்கான்னு 'ஆ'ன்னு பேச்சுமூச்சுல்லாமக் கேட்டுக்கிட்டு இருக்கார். இன்னிக்கு நேரம் பத்தாமப் போச்சு. அடுத்தமுறை வரும்போது, ஒருநாள் முழுக்க இவரோட பேச்சைக் கேக்கணுமுன்னு தோணிருச்சுங்க..


மரத்தடியிலே சக்திப்பிரபா, அய்யப்பன், ஷைலஜாவுக்கெல்லாம் கூடச் சொல்லியிருந்தேன். ஷைலஜா இப்ப நாட்டுலேயே இல்லை. சக்தியும் படிப்புலே கொஞ்சம் பிஸி. ஆனா முடிஞ்சா சந்திக்கலாமுன்னு சொல்லி இருந்தாங்க. அய்யப்பன் மட்டும் மனைவியோடு ( புது மணமக்கள்தான்) வந்தார்.


திருமதி பத்மா ஹரிகிருஷ்ணன், கீழே அவசர அவசரமா எங்களுக்கெல்லாம் 'அடை' செஞ்சுச் சுடச்சுட மேலே எடுத்துக்கிட்டு வந்தாங்க. ஒரு குரல் கொடுத்துருந்தா, நாங்களே ஓடிப்போய் கீழே சாப்புட்டுருப்போம். பாவம், ரெண்டாம் மாடிக்கும் , கீழேமுதல் மாடிக்குமா ஓடி ஓடி வந்துக்கிட்டு இருந்தாங்க. இவுங்க வீட்டு இட்டிலியைப்பத்தி பல இடத்துலே கேள்விப்பட்டிருந்தேனா,'என்னங்க அடை? இட்டிலி இல்லையா?'ன்னு கேட்டேன். வாய்க் கொழுப்பு..ம்ம்ம்.


பாவம் பத்மா. ஒரு நொடி திகைச்சுப் போயிட்டாங்க. 'இப்ப செஞ்சுரட்டா?'ன்னு வேற கேக்கறாங்க. இவ்வளவு அப்பாவியா இருந்தா எப்படிங்க? எனெக்கென்னவோ டி.கே.சியோட குற்றாலம் வீடு நினைவு வந்துச்சு. நான் போனேனான்னு கேட்டுறாதீங்க.எல்லாம் வாசிப்பு ஞானம்தான்! இந்த ஆச்சரியக்குறி போடறப்ப எல்லாம் ஹரியண்ணா ஞாபகம் வந்துரும். அவர்தான்கொஞ்சமா எப்பவாவது ஒருக்கப் போடணுமுன்னு சொல்லியிருந்தார். இல்லேன்னா நான் !!! அள்ளித் தெளிக்கிற ஆளு.இருக்கட்டுமே, காசா பணமான்னு போடறதுதான்.


அடையோடு முடியுமா? ச்சுடச்சுட நல்ல அருமையான காஃபி வேற! பத்மா வேலைக்கும் போறாங்க. அப்புறம் வீட்டு வேலை,இதெல்லாம் போதாதுன்னு இப்படி இலக்கியம் பேச வரும் நண்பர்களுக்கு ஓடிஓடி உபசாரம்னு இருக்காங்க. அவுங்க பொறுமையைப் பாராட்டி திரும்புற வழியெல்லாம் இவர்கிட்டே சொல்லிக்கிட்டே வந்தேன்.


சொல்ல மறந்துட்டேனே, இதோடு விட்டாங்களா? கிளம்பறப்ப தாம்பூலம், ப்ளவுஸ் துணி, முழுத்தேங்காய்னு வச்சுக்கொடுத்தாங்க. உடனே, எங்க இவர்கிட்டே, 'இந்தக் கலருலே புடவை என்கிட்டே இல்லேன்றதை ஞாபகம் வச்சுக்குங்க'ன்னு அங்கேயே சொல்லிட்டுத்தான் வந்தேன். சாட்சி வேணாமா? எப்படியோ ஒரு ஹிண்ட் கொடுத்தாச்சு.


நாங்க திரும்ப வந்து ஹோட்டல் லாபியிலே உக்காந்திருந்தோம். சுதர்சன் செல்லுலே கூப்பிட்டு, வந்துக்கிட்டே இருக்கேன்,ஆனாட்ராஃபிக் ஜாம் ஆயிருச்சுன்னு சொன்னார். அப்ப ரெண்டு இளைஞர்கள் வந்து சேர்ந்தாங்க. அவுங்கதான் நம்ம இளவஞ்சியும், ராகவனும்.


அன்னிக்கு காதலர் தினம்வேற. ராகவனோ டிப்டாப்பா டையும் கையுமா இருக்கார். இளவஞ்சி நம்மைப்போல சாதாரணமாத்தான் இருந்தாருன்னு சொல்ல முடியலை. கண்ணுலே அந்த இலக்கிய ஒளி வீசுது. ஒரு அஞ்சாறு நிமிஷம் அங்கேயே இருந்து அறிமுகப்பேச்சை ஆரம்பிச்சோம்.எம்ஜிஆர் மாதிரி கறுப்புக் கண்ணாடி போட்டுக்கிட்டு வராருங்க நம்ம சுதர்சன். ஆஹா ஜமா சேர்ந்தாச்சு. இனி இங்கே என்ன, மேலே போய்ப்பேசிக்கிட்டு இருக்கலாமுன்னு கிளம்பினோம்.


பின் குறிப்பு: இது துளசிதளத்தின் முன்னூறாவது பதிவுன்னு ப்ளொக்கர் சொல்லுதுங்க. அது சொன்னாச் சரியாத்தானிருக்கும்.இல்லீங்களா?


86 comments:

said...

சேச்சி:
வாழ்த்துக்கள் :)
முன்னூறு என்ன , மூணு லட்சமாவது பதிவுக்கும் வந்து வாழ்த்து சொல்லுவோம்.
அன்புடன்
ராஜ்

said...

ஆகா! துளசியக்கா பெங்களூரில யாரோ ஒரு பெரிய தொழிலதிபரோட பேச்சுவார்த்தை நடத்திருக்காங்களேன்னு பார்த்தா ...நம்ம 'ஆன்மீக செம்மல்' ராகவன்!

said...

"ஏன்றி, சென்னாகிதிரா" - இது புரிஞ்சிரிச்சி.
"நானு பருத்திதேனெ " - அப்டின்னா?

said...

முன்னூறாவது பதிவுக்கு வாழ்த்துகள். ஆயிரம் பல்லாயிரமாக என் வாழ்த்துகள்.
சென்னை சந்திப்பு, பெங்களூர் வலை பதிவர் கூட்டம் நன்றாக சுவாரஸ்யமாக இருக்கிறது. பேசிய விஷய்ங்கள் குறித்து இளவஞ்சி முன்னரே பதிந்துவிட்டார்.

said...

துளசி அக்கா! ஜமாய்க்கறீங்க. சூப்பர். இது 100 வது தொடராக தொடர்ந்து போக வாழ்த்துக்கள் :-)

//** அவரைவிடக் கொஞ்சம், (கொஞ்சமே கொஞ்சமுன்னாலும்) மூத்தவ இல்லையா?) **// ஹாஹாஹா :-)).

அதான! ராகவன் என்ன. இண்டர்வியூவுக்கு வந்த மாதிரி வந்திரிக்கிறார். ஆபீஸ்ல இருந்து நேரே வந்துட்டாரோ. ஒங்க புண்ணியத்துல சக ப்ளாக்கர் போட்டோ எல்லாத்தையும் பாத்துக்கிடறோம். நன்றி அக்கா.

said...

முந்நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் துளசியம்மா..

சரி எப்போ துபாய் வலைப்பதிவர்கள் மாநாடுக்கு வரப்போறீங்க ?

said...

300- ஆஆஆஆஆஆஆ.....

அம்மா தாயே. ஆழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.

said...

மன்னிக்கவும் வாழ்த்த எனப் படிக்கவும்.

300ஆவது பதிவுன்னு சொன்னதும் அசந்து போய் கையும் ஓடலை, காலும் ஓடலை.

said...

நீவு பங்களூரு பருவாகா நானு இரலில்லா! இன்னொந்து சரி நோட்தரே ஆயித்து!

ஒந்து ஒள்ள சான்ஸ் மிஸ் மாட் பிட்டே!

நிம்ம கெளயா
சுபமூகா :-))

said...

நீவு பங்களூரு பருவாகா நானு இரலில்லா! இன்னொந்து சரி நோட்தரே ஆயித்து!

ஒந்து ஒள்ள சான்ஸ் மிஸ் மாட் பிட்டே!

நிம்ம கெளயா
சுபமூகா :-))

said...

வாவ்! முன்னூறா, கலக்குங்க!

said...

ஆகா! பெங்களூர் விஜயம் வந்துருச்சா....ஐயோ....பாதி ரிலாக்ஸ் பண்ணுன டையோட என்னோட போட்டோ வந்துருச்சே வந்துருச்சே.....அதுக்கென்ன...நாளைக்கு நான் ஜீன்ஸ் டீ-ஷர்ட்ல எடுத்த படத்த அடுத்த கோயமுத்தூர் டிரிப் பாகத்துல போடுறேன்.

அன்னைக்கு நானும் இளவஞ்சியும் ஒன்னா ஆபீஸ்ல இருந்து கார்ல கெளம்பி (என்னோடது இல்லைங்க ஹி ஹி) இளவஞ்சி வீட்டுக்குப் போயி (இப்பத் தெரிஞ்சிருக்குமே யாரோடதுன்னு) ஒரு காப்பி குடிச்சிட்டு ரெண்டு பிஸ்கட் கடிச்சிட்டு கெளம்பிப் போய் டீச்சரப் பாத்தோம். ஒரேஏஏ டிராபிக் ஜாமு.

டீச்சர் வந்து நடராஜ் தேட்டருக்கு எதுக்கன்னு சொன்னதுமே எனக்குத் தெரிஞ்சி போச்சு...சாம்ராட்டுன்னு...அந்தத் தேட்டர்ல எத்தன படம் பாத்திருப்பேன்...ம்ம்ம்ம்...

சரி டீச்சர்...நம்ம மாடிக்குப் போய் பேசுனதெல்லாம் அடுத்த பதிவுல வருமா?

said...

துளசி..நம்ம ஷைலஜா வோட குரல இங்க (http://tamil.sify.com/fullstory.php?id=14158536)கவிதை வாசிக்க கேக்கலாமே!

எல்லா கூட்டத்திலயும் உங்க கூடவேதான் இருக்கிறோம்!பாக்குறோம்!பேசுறோம்!சாப்டறோம்!
ஆஹா!

said...

நேத்து முளைச்ச காளான், எக்கச்சக்கமாக் காய்ச்சுக் குலுங்கி நிக்கற மாமரத்தை (இனிப்பு மாம்பழத்தோடு கூடிய)பத்தி என்ன சொல்ல முடியும்?

ஆஹா... கவித கவித..

said...

300-ஆ! சூப்பர் :-)

said...

டி ராஜ்,

வாழ்த்துக்கு நன்றி. மூணு லட்சம்? ப்ளொக்கர் தாங்குமா?:-))))

said...

ஜோத்தம்பி,

என்ன இப்படிச் சொல்லிட்டீங்க? உங்க வாய் முஹூர்த்தம் ராகவன் சீக்கிரம் தொழில் அதிபர் ஆயிடுவார்.
நமக்கும் அது ஒரு பெருமைதானே? யார் கண்டா எதிர்காலம் எப்படிப் போகுதுன்னு?
ஆனா ஜோசியம் கேக்கக்கூடாதுன்னு தருமி சொல்லிட்டாரு:-)

said...

தருமி,

உங்களுக்கு இனி கன்னட வகுப்பு எடுக்கட்டுமா?:-)

'நான் வந்து கொண்டிருக்கிறேன்' னு அர்த்தம்

said...

வாங்க பத்மா,

வாழ்த்துக்கு நன்றி. இளவஞ்சியே சொல்லிட்டார். அப்புறம் நாஞ்சொல்ல என்ன இருக்கு?

said...

சிவா,
வாழ்த்துக்கு நன்றி.

என்னைமாதிரி அழுது வடியாம ஒருத்தர் டிப்டாப்பா வந்தா மக்களுக்குப் பொறுக்காதே?:-)))))
ஏன் இப்படி வச்சுக்கலாமே, நியூஸிக்காரங்களை வரவேற்க ஒரு 'ட்ரெஸ் கோடு' வேணுமா இல்லையா?:-)

said...

நிலவு நண்பன்,

வாழ்த்துக்கு நன்றி. துபாய்தானே? வந்துட்டாப் போச்சு. இப்ப இங்கே எமரேட்ஸ் விமான சேவை மலிவா கிடைக்குது.
ஊருக்கு வரும்போது அதுலெ வந்தா, உங்களையெல்லாம் பார்த்துட்டுப் போகச் சான்ஸ் கிடைக்கும். அதுக்கு முன்னாலே
அங்கே வாங்கறதுக்கு ஒரு ஷாப்பிங்க லிஸ்ட் போட்டுக்கறேன்:-)))

said...

சுபமூகா,

கரெக்ட்டா அப்பப் பார்த்து ஊருலே இல்லாமப் போயிட்டீங்க. சரி சரி, இப்ப ஒரு ச்சான்ஸ்
தரேன், பேசாம நியூஸிக்கு வாங்க. இங்கே வலை மாநாடு நடத்திரலாம்.

said...

கொத்ஸ்,

அடடா, இப்படி உணர்ச்சிவசப்பட்டுட்டீங்களே! வாழ்த்துக்கு நன்றிப்பா.

said...

பிரகாஷ்,

அதையேன் கேக்கறீங்க? கம்பன் வீட்டுக் கட்டுத்தறியே கவி பாடுமுன்னா, ஹரி(அண்ணா) வீட்டு அடை தின்ன வாய்
ஒரு சின்னக் கவி(?) பாடாதா?:-))))

said...

பாலா,

வாங்க வாங்க. வருகைக்கும், 'சூப்பருக்கும்' நன்றி.

//300-ஆ! சூப்பர் :-)//

அறுத்துட்டேனா?:-)))

said...

சுதர்சன்,

நன்றி.

அது என்ன கலக்கல்? கலக்கிட்டாப் போச்சு( இன்னும்?)

said...

மீனா,

ஷைலஜா கவிதையை அவுங்களே வாசிச்சதை ரெண்டுமூணு வாரமாக் கேட்டுக்கிட்டுத்தான் இருக்கேன்.

said...

ராகவன்,

அன்னிக்கு வாலண்டைன் டே. அதாலே டிப் டாப்பா ட்ரெஸ் போட்டுக்கிட்டு, கொஞ்சம் கடலையும் வறுத்துக்கிட்டு
மயிலார் கூட போகவேண்டியதாப் போச்சுன்னு தைரியமா 'உண்மையை' எடுத்துவிடக்கூடாதா?
மக்கள்ஸ் கேக்க ஆவலா இருக்காங்கல்லே?:-))))

சரி, கோச்சுக்காதீங்க. டீச்சரை மாணவர்கள்தான் கலாட்டா செய்ய்ணுமா? இப்ப டீச்சருக்கு ஒரு சான்ஸ்:-)

அன்னைக்கு இருந்த சந்தோஷத்துலே என்ன பேசுனோமுன்னே மறந்து போச்சேப்பா?

ஆனா ஒண்ணு, உங்க ப்ளொக்லே ஒரு படம் போட்டுருக்கீங்களே, அதெல்லாம் என்னாத்துக்கு? நேர்லே ஆளு படு ட்ரிம்.

said...

முண்ணூறு நாள்லு ஒட்டிட்டீங்க. பரவாயில்லை உங்க சினிமா (பதிவு) அந்த கால பாகவதர் படங்கள் மாதிரி ஓடிக்கிட்டே இருக்கணும், வாழ்த்துக்கள்!

said...

அம்மா, வாழ்த்த வயதில்லை.

இன்னும் நிறைய ப்ளாகரில் உங்களை போன்றோரிடமிருந்து நிறைய கற்க்கவேண்டும், நீங்கள் இன்னும் நிறைய பதிக்க வேண்டும்.

said...

வாங்க உதயகுமார்.

இது என்னங்க ஆச்சரியமா இருக்கு. நான் ஹரிதாஸ் படம் வாங்கியாந்தது உங்களுக்கு எப்படீங்க தெரிஞ்சது?

அதுக்கே ஒரு விமரிசனம் போடலாமுன்னு பாதி எழுதி வச்சுருக்கேன். இந்த பயணத்தொடர் வேற அதுபாட்டுக்குப்
போயிக்கிட்டு இருக்கே, அது முடியட்டுமுன்னு பொறுமை காத்தேன். ஹரிதாஸ் மட்டுமில்லைங்க, இன்னும் பழைய படங்கள் \
நாலைஞ்சு கொண்டாந்துருக்கேன்.

said...

வாங்க சிவமுருகன்.

இங்கேயும் அறிவுலே ரொம்பப் பெரியவங்க இருக்காங்க. நாமெல்லாம் தினம்தினம் எதாவது நல்ல விஷயத்தைக்
கத்துக்கிட்டே ஆகணும். இதுக்கு வயசு ஒரு பொருட்டல்ல.

said...

ம்ம்.. நடத்துங்க.. நடத்துங்க.. :)

said...

வாங்க ராசா வாங்க.
என்ன இப்படிச் சொல்லிட்டீங்க? எல்லாம் உங்க தயவுதான்.

said...

துளசியக்கா!

300 ஆஆஆஆஆஆஆஆஆஆ!!!!!

உங்க முன்னூறாவது பதிவுல என் பேரு படத்தோடவா!? என்னே என் பாக்கியம்! நாளைய வரலாறு உங்க படைப்புகளை அலசும்போது அப்ப என் பேரும் வருமே! :)))

கோபால் சாருக்கு ஒரு வணக்கம் சொல்லிருங்க!

ராகவன்! //அன்னிக்கு வாலண்டைன் டே. அதாலே டிப் டாப்பா ட்ரெஸ் போட்டுக்கிட்டு, கொஞ்சம் கடலையும் வறுத்துக்கிட்டு
மயிலார் கூட போகவேண்டியதாப் போச்சுன்னு தைரியமா 'உண்மையை' எடுத்துவிடக்கூடாதா? // அதான் அக்கா சொல்லீட்டாங்க இல்ல?! உண்மையை சொல்லீருங்க!!!! :)

said...

வாங்க இளவஞ்சி.

கோபாலுக்குச் சொல்லிட்டேன். இப்பக் கொஞ்ச நாளாத்தான் நம்ம அருமை புரியுது அவருக்கு.பதிவையெல்லாம்
விடாமப் படிச்சு நேரில் காமெண்ட்ஸ் கொடுக்கறார்:-)

வரலாறு...? பேசாம ஒரு டைம் கேப்ஸ்யூல் புதைச்சுரலாமா?:-)))

'நாளைய உலகம் நமதே'ன்னு ( ஆனால் 'இன்று'வைக் கோட்டை விட்டுருவம்)

said...

// ஆகா! துளசியக்கா பெங்களூரில யாரோ ஒரு பெரிய தொழிலதிபரோட பேச்சுவார்த்தை நடத்திருக்காங்களேன்னு பார்த்தா ...நம்ம 'ஆன்மீக செம்மல்' ராகவன்! //

என்ன ஜோ இது...தொழிலதிபர் அது இதுன்னுக்கிட்டு...நடிகைகள் எல்லாரும் தொழிலதிபாரத் தேடுறாங்களாம். இப்ப நான் எங்க ஓடித் தப்பிக்கிறது?

said...

எங்கே ஓடறதா? அதான் நியூஸி இருக்கேப்பா:-)

said...

////அன்னிக்கு வாலண்டைன் டே. அதாலே டிப் டாப்பா ட்ரெஸ் போட்டுக்கிட்டு, கொஞ்சம் கடலையும் வறுத்துக்கிட்டு
மயிலார் கூட போகவேண்டியதாப் போச்சுன்னு தைரியமா 'உண்மையை' எடுத்துவிடக்கூடாதா?
மக்கள்ஸ் கேக்க ஆவலா இருக்காங்கல்லே?:-)))) ////

அந்தக் கதைய ஏன் கேக்குறீங்க....அன்னைக்கு டை கட்டீட்டுப் போக வேண்டிய நாள். அப்படியே ஆபீஸ்ல இருந்து வந்துட்டேன். அவ்வளவுதான். மயிலார் அன்னைக்குக் கூட வரலையே. அவரு தீடீர்னு காணாமப் போயிட்டாரு. ரொம்ப லேட்டா வீட்டுக்கு வந்தாரு. கேட்டா "மாதேவா சம்போ கந்தா"ன்னாரு. நான் ஒன்னும் கேட்டுக்கலை.

// சரி, கோச்சுக்காதீங்க. டீச்சரை மாணவர்கள்தான் கலாட்டா செய்ய்ணுமா? இப்ப டீச்சருக்கு ஒரு சான்ஸ்:-) //

சான்ஸ விட்டுறக்கூடாது. நானும் கோவிச்சுக்கலை.

// அன்னைக்கு இருந்த சந்தோஷத்துலே என்ன பேசுனோமுன்னே மறந்து போச்சேப்பா?

மறந்து போச்சா? எனக்குந்தான்...ஹி ஹி ஹி

// ஆனா ஒண்ணு, உங்க ப்ளொக்லே ஒரு படம் போட்டுருக்கீங்களே, அதெல்லாம் என்னாத்துக்கு? நேர்லே ஆளு படு ட்ரிம். //

டீச்சர் உண்மைக்கும் அப்ப நான் நல்லா வெயிட் போட்டிருந்தேன். இப்போ கஷ்டப்பட்டு கொறைச்சிருக்கேன். ஆனாலும் இன்னும் கொஞ்சம் கொறைக்கனும். மூனு மாசத்துக்குச் சென்னைக்குப் போறதால...அங்க போய்க் கொறைக்கனும்.

said...

முன்னூறு பதிவுகளா ? அப்பாடியோவ் :)) ஆனால் அத்தனையும் முத்துக்கள்.

பெங்களூரு வலையுலக அன்பர்களையும் ஹரியண்ணாவையும் 'நேரில்' காண வைத்ததிற்கு நன்றி. ஹரியண்ணாவின் கம்பராமாயண விளக்கங்களை forumhubஇல் கண்டே தமிழ்வலையில் சிக்கியவன் நான்.

நான் தான் ரொம்ப லேட் போல இருக்கு :)

said...

இது துளசிதளத்தின் முன்னூறாவது பதிவுன்னு ப்ளொக்கர் சொல்லுதுங்க. //

ஐய்ய்ய்ய்ய்ய்ய்யோ... மூன்னூறாவதா? பேஷ், பேஷ் ரொம்ப நன்னாருக்கு!

மேல மேல எழுதி ஆயிரத்த புடிங்க..

ஜிரா சினிமா ஆக்டர் மாதிரி இருக்காரில்லே.. அவர வச்சி ஒரு சீரியலாவது எடுத்துரணும்னு கதை ரெடி பண்ணிக்கிட்டிருக்கேன்.

என்ன ஜிரா கால்ஷீட் கிடைக்குமா?

said...

டாக்ஸியிலே சிட்டிக்குப் போறப்ப, ஒரு லைட்டுக் கம்பம் விடாம போஸ்ட்டர் அடிச்சு தட்டியில் ஒட்டிக் கட்டி வச்சுருக்காங்க//

துளசி இத படிச்சதும் உண்மையிலேயே பயந்துட்டேங்க. எங்க உங்க வரவைத்தான் போஸ்டரா அடிச்சி ஒட்டிட்டாங்களோன்னு.. அடுத்த வரிய படிச்சதும்தான் கொஞ்சம் நிம்மதியா இருந்தது :-()

பொறாமைதான், பின்னே :-(

said...

ராகவன்,

இப்பச் சொல்லுங்க. அதென்ன சென்னையிலே 3 மாசம்? எனிதிங் ஸ்பெஷல்? ( கடலை பிஸினெஸ்?)

அப்புறம் ரொம்ப வெயிட்டைக் குறைச்சுறாதீங்க. உங்க உயரத்துக்குச் சரிப்படாது. அப்புறம்
'சனிக்கிழமை சாவறமாதிரி'ன்னு ( முந்தி ஒல்லிப்பிச்சான்களை நாங்க இப்படித்தான் சொல்வோம்)
சொல்ல வச்சுறாதீங்க.

ஒருவேளை சென்னை சூட்டுக்கு இளைச்சுருவீங்களோ?

said...

மணியன்,

லேட் என்னங்க லேட்டு? அதான் லேட்டஸ்ட்டா வந்துட்டீங்களே! நன்றிங்க.

முத்து மாலை ஒண்ணு (முன்னூறு ) வாங்கிரணும். ஞாபகப்படுத்துனதுக்கும் நன்றி:-)

said...

டிபிஆர் ஜோ,

ஆயிரம் பதிவு போட்டுரலாங்கறீங்க?

உங்களுக்கும் ச்சான்ஸ் கொடுத்துருந்தேன். ஏறக்குறைய ரெண்டு வாரம். நீங்கதான் போஸ்ட்டரை மறந்துட்டீங்க:-))

அடுத்தமுறை நல்ல செயற்குழு அமைச்சுக்கிட்டா, போஸ்டர் எல்லாம் ஜுஜுபி:-)

நம்ம ஜிராவுக்கு நாயகனா ச்சான்ஸ் இருக்கற சினிமாவுலே எனக்கும் ஜிராவோட அம்மா வேஷம் கொடுத்தா நல்லது.
அருமையா நடிப்பேன். தொழிலதிபரோட அம்மான்னா நல்லா நகையும் நட்டும் பட்டுமா ஜொலிக்கலாமுல்லே?

எனக்கு ரோல் இருந்தா அவரோட கால்ஷீட்டுக்கு நான் கேரண்ட்டி:-)

said...

முன்னூறு பத்தி சொல்லலாம்னு நினைச்சேன்.. ஆனா "நேத்து முளைச்ச காளான், எக்கச்சக்கமாக் காய்ச்சுக் குலுங்கி நிக்கற மாமரத்தை (இனிப்பு மாம்பழத்தோடு கூடிய)பத்தி என்ன சொல்ல முடியும்?" :))

said...

அக்கா, நானும் லேட்டா வந்துட்டேன்.. இருந்தாலும், முன்னூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்..
உங்க ஐநூறாவது, ஆயிரமாவது, ஆயிரத்து ஐநூறாவது பதிவுகள்ள நான் தான் வந்து முதல் வாழ்த்து குடுப்பேன் ஆமாம்..

மொத்தல்ல நம்ம ராகவனோட போட்டோ பார்த்து குழம்பிப் போய்ட்டேன்,,, அவரோட பதிவுல இருக்கற போட்டோவுக்கும் இதுக்கும் சுத்தமா சம்பந்தமே இல்லையே.. அப்புறம் தான் டேட் பார்த்தேன்.. பிப்வரி 14த்தா.. சரிதான், சரிதான்... அவரோட ரெசிபில ஏதாச்சும் பண்ணி குடுத்தாரா?

said...

dear thulasi, vaazhthukkal. neenga niraya veliyur poganum, engalukku 1000 posts aavathu udane venum. order kaiyile kidaithathum seyal padavum. anbudan, Valli.

said...

முந்நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்!! வாத்யார்னாலே ஒரே டென்ஷன் பார்ட்டின்னு நெனக்கிற மக்கள், துளசி கோபால பதிவுகள அலசிப்படிக்கணும். டீச்சர்னா- படிப்பு, சரிதானே? இருக்குற டென்ஷன் ஓடிப்போயிடும்! சென்னை வந்தும், கொன்சம் இந்த வலைஞ்ன் வேலைல புதுசுங்கறதுனால, சந்திக்கிற வாய்ப்ப தவற விட்டேன்! அடுத்த முறை சொல்லுங்க. தனி மெயில் போடுங்க,ப்ளீஸ்! அப்பறம் கோபால் சார், மெஷின் பத்திதான் தெரியும்னீங்க? என்னன்னு என்கிட்ட பேசினா, எனக்கு கொஞ்சம் தொழில்ரீதியா உபயோகப்படும்! நீங்கல்லாம் தமிழ்ல பூந்து கட்டுனா, அவருக்கு பேச்சுத் துணை நானாச்சு!

said...

முகமூடி,

இது....

நல்லா இருங்க.

said...

பொன்ஸ்,

வாழ்த்துக்கு நன்றி.

ராகவன் பதிவுலே இருக்க போட்டோ அவர் ப்ரைமரி ஸ்கூல்லே இருக்கச்சொல்ல எடுத்தது:-)))

ரெஸிபியிலே பண்ணிக் கொடுத்தாராவா? என்ன இப்படிக்கேட்டுட்டீங்க..

முழுச்சாப்பாடும் செஞ்சு போட்டாரே!

said...

வாங்க வள்ளி.

எங்கே அடிக்கடி போக முடியுது? அதான் போறப்ப
நின்னு எல்லாத்தையும் ரசிக்கிற பழக்கம் ஏற்பட்டுப்போச்சு.
நன்றி உங்க வருகைக்கும் வாழ்த்துக்கும்.

said...

மரபூராரே,

டீச்சருங்களிலேயும் ஜாலிப் பேர்வழிகள் இருக்காங்க. உண்மையிலேயே நான் டீச்சர்தான்.
ஆனா வேலை செய்யலை.

கோபால் சார்கிட்டே சொல்றேன்.

அடுத்தமுறை கட்டாயம் தனிமடலில் வருகையைச் சொல்றேன். ஆனா, ஏர்ப்போர்ட்டுலே இருந்து
டி. நகர்வரை பேனர் வைக்கணும், ஆமா:-))))

said...

துளசியக்கா,

கலக்குங்க.. வாழ்த்துக்கள்

ஆமா, 300 இடுகைகள் சரி, உங்க பின்னூட்டங்கள் (மற்ற வலைப்பதிவுகளில்) எத்தனைன்னு எண்ணிப் பாத்தீங்களா? :-P

said...

பதிவுகள் முன்னூறு
பிளாக்கர் சொல்லியதே!
இலவச டியூஷன் எடுக்கும்
எங்கள் தலைவிக்கு
வணக்கங்கள் !வாழ்த்துக்கள்!

நேற்றுதான் முன்னூறு
காற்று வாங்கி வருவதற்குள்
கண்டேன் இன்னோரு நூறு
கனவில்லை நிஜம்
என்னா நாஞ்சொல்றது!

எழுதுங்கள் நிறைய
எங்களால் முடிஞ்சது
ரெண்டு வரி பின்னூட்டம்
சேர்ந்து நின்னு ஒரு போட்டோ

அடுத்த பயணத்திற்குள்
ஆயிரங்கள் காண
அன்புடன் வாழ்த்துகின்றேன்!

said...

வாழ்த்துக்கள் மூத்த பதிவாளர் துளசி அவர்களுக்கு..

முன்னூறு எண்ணூறாகி எண்ணூறு எண்ணாயிரம் ஆகட்டும்...

வாழ்க வளமுடன்...

said...

கோபி,

இதுதானே வேணாங்குறது?:-))) இப்ப அதையெல்லாம் எண்ணனுமா?
அதுக்கு எதாவது சுலப வழி இருக்கா?

said...

சிங். செயகுமார்,

மரத்தடியிலே ஒருத்தர் இருக்காங்க. அவுங்கதான் காஃபிக்கு டிக்காஷன் போடற நேரத்துலே கவிதை பாடிருவாங்க.
நீங்க என்னன்னா பேச்சே கவிதையா இருக்கீங்க. ஹப்பா...... நம்மாலே ஆகாது.

said...

ஷாஜி,

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிங்க.

அடிக்கடி வாங்க.

said...

என்னை மறந்ததேன் ( போட்டோவில ) :(( :((

உங்க பேச்சி கா


அன்புடன்
ஐயப்பன்

300 வது பதிவுக்கு பெங்களூர் வந்து ஒரு ட்ரீட் தந்துட்டு போங்க

said...

// ஜிரா சினிமா ஆக்டர் மாதிரி இருக்காரில்லே.. அவர வச்சி ஒரு சீரியலாவது எடுத்துரணும்னு கதை ரெடி பண்ணிக்கிட்டிருக்கேன்.

என்ன ஜிரா கால்ஷீட் கிடைக்குமா? //

என்ன ஜோசப் சார். விட்டா உங்க பேங்குல இருந்தே லோன் எடுத்து படமும் எடுத்திருவீங்க போல இருக்கே. டீச்சர் கேட்ட மாதிரி தொழிலதிபரோட வேஷம்தான. ஏன்னா....போன வாரம் ஒரு நண்பரோட சின்னப் பையன் எங்கிட்ட வந்து "நீங்க முந்தி சஞ்சய் ராமசாமி மாதிரி இருந்தீங்கன்னு" சொல்லீட்டு இழுஇழுன்னு இழுத்தான். எனக்கு அப்பத்தான் நான் மொட்டை போட்டிருந்ததே நினைவுக்கு வந்தது. என்ன சொல்ல வந்தானோ....

படத்துல வசனம் நீங்க எழுதிக்கோங்க. பாட்டெல்லாம் நானே எழுதீர்ரேன். உட்டாலக்கடி உனக்குதான் லட்டாலக்கடி எனக்குதான்னு ஒரு அருமையான செந்தமிழ்க் கவிதை இருக்கு. அதையும் பயன்படுத்திக்கலாம். ரெண்டு பாட்டு எனக்குப் பாடக் குடுத்திருங்க. ரொம்ப நாளா அந்த ஆசை வேற. ஒரே பிரச்சனை என்னன்னா உச்சரிப்புத் தெளிவா இருக்கும். அது தமிழ் சினிமாவுல பாடுற தகுதியக் கொறச்சிரும்.

said...

// ராகவன்,

இப்பச் சொல்லுங்க. அதென்ன சென்னையிலே 3 மாசம்? எனிதிங் ஸ்பெஷல்? ( கடலை பிஸினெஸ்?) //

வேலை விஷயமா டீச்சர். எனக்கு ரெண்டு ஆப்ஷன் இருந்தது. இந்தப் புராஜக்ட்டை ஐதராபாத் இல்லைன்னா சென்னைல செய்யனும்னு. ஐதராபாத்துக்கு ஏன் போகனும்னு சென்னைய டிக்கீட்டேன்.

// அப்புறம் ரொம்ப வெயிட்டைக் குறைச்சுறாதீங்க. உங்க உயரத்துக்குச் சரிப்படாது. அப்புறம்
'சனிக்கிழமை சாவறமாதிரி'ன்னு ( முந்தி ஒல்லிப்பிச்சான்களை நாங்க இப்படித்தான் சொல்வோம்) சொல்ல வச்சுறாதீங்க. //

ஏற்கனவே லேசாக் கொறச்சாச்சு. ஆனா நீங்க சொல்ற அளவுக்கெல்லாம் கொறைக்க மாட்டேன். எனக்கு அதுவும் பிடிக்காது. ரெண்டுக்கும் நடுவுல...

// ஒருவேளை சென்னை சூட்டுக்கு இளைச்சுருவீங்களோ? //

எனக்கு ஒன்னு மட்டும் புரியவேயில்லை டீச்சர்...தமிழ்நாட்டுப் பக்கமோ ஐரோப்பா பக்கமோ போயிட்டா கலர் இம்ப்ரூவ் ஆகுது. பெங்களூர்லயோ அமெரிக்காவுலயோ நேர்மாறா இருக்குது. ஏன்னே தெரியலை. அதே போல சென்னைக்குப் போனா லேசா வெயிட் குறையும். ஆனா மூனு மாசம் வீட்டுச் சாப்பாடுங்குறதால அதுக்கான வாய்ப்புக் குறைவுன்னுதான் நெனைக்கிறேன். உங்களப் பாத்தப்பா அவ்வளவு வெயிட் போட்டிருந்ததுக்குக் காரணமே மூனுமாசம் அம்மா பெங்களூர்ல இருந்ததுதான். :-)

said...

சொல்லவே மறந்துட்டேன் டீச்சர். முந்நூறாவது பதிவிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

said...

முன்னூறா , முந்நூறா என்ற சந்தேகம் வந்து விட்டது,

எனவே/எனிவே
300 க்கு பாராட்டு(க்கள் ! ), 3000க்கும் அட்வான்ஸ் பாராட்டு(க்கள் !)

said...

Triple century போட்ட டீச்சருக்கு ஜே!

said...

ஐய்யப்ஸ்,

உடனே டிக்கெட்டை அனுப்பி வையுங்க ட்ரீட் கொடுக்க ஓடோடி வர்றோம்.

தனிமடல் பார்க்கவும்.

said...

சின்னவரே,

இப்படி எதுக்கெடுத்தாலும் சந்தேகமா?
ஸ்ரீராமநவமி பானகத்துலே கரும்புச்சக்கை நாக்குலே உறுத்துதோ?

பாராட்டுக்கு நன்றி.

said...

பாரதி,

வாங்க .
'ஜே' போட்டதுக்கும் வருகைக்கும் நன்றி.

said...

300 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள் துளசி.

said...

1) துளசி வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ( இப்படி சொன்னால்தான் துளசியை விட வயசு குறைச்சல் என்று தெளிவாக்கலாம்)
2) தலைப்புல சின்ன ஸ்பெல்லிங் மிஷ்டேக். "பெங்களூரு நானு பருத்தியும் இல்லை தேனும் இல்லை.
"பெங்களூரிகே நானு பருத்தேனே"- பெங்களூருக்கு நான் வரேன் - சரியா ஜிரா, சுமூகா, ஐப்ஸ்!
3) மே மாதம் இரண்டாம் வாரத்தில் சென்னையில் பெண் வலைப்பதிவாளர்கள் மாநாடு நடக்க
இருக்கிறது. பொன்ஸ் வரீங்களா? வேற யாரு அம்மணிங்க?
4) தன் வலைப்பதிவில் இஸ்கூல் போகிறப்பொழுது எடுத்த புகைப்படத்தைப் போட்டு ஏமாற்றிய ஜிரா அவர்களை வன்மையாய்
கண்டிக்கிறேன்.

said...

300வது பதிவுக்கு வாழ்த்துகள்..

தொடர்ந்து கொடுங்கள்.

ஜோசப் சார், ராகவன் பாவம் விட்டுடுங்க, அவருக்கு இன்னும் கல்யாணம் ஆகல... சீரியல்ல நடிக்க வச்சு அவரு வாழ்க்கையை அழிச்சிடாதீங்க:-)))))))

said...

நம்ம ஜிராவுக்கு நாயகனா ச்சான்ஸ் இருக்கற சினிமாவுலே எனக்கும் ஜிராவோட அம்மா வேஷம் கொடுத்தா நல்லது.
அருமையா நடிப்பேன். //

ஏன் நடிக்க மாட்டீங்க? ஆனா நியூசிலருந்து நீங்க போக வர ஃப்ளைட் சார்ஜும் சேர்த்து கேட்டா ஒரு வேளை ஹீரோவுக்கு குடுக்கற சம்பளத்தவிட ஜாஸ்தியாயிருமோன்னு பயப்படறேன்:-)

said...

நன்றி ஜெயஸ்ரீ.

ஊருக்குப் போயாச்சா?

said...

ராகவன்,

வாழ்த்துக்கு நன்றி.

சென்னை ரகசியத்தைப் போட்டு ஒடைச்சு, நம் தமிழ்கூறும் நல்லுலகைக் காப்பாத்துனதுக்கும் நன்றி.
வீக் எண்டுலே சிண்டைப் பிச்சுக்கவேணாம்:-)

மொட்டை ஃபோட்டோ ஏன் பதிவுலே போடலை?
ஏனக்குமே ஒரு மொட்டை இருக்கு. அதுக்கு முன்னலே ஒரு 'விக்' தேடிக்கிட்டு இருக்கேன்.

உங்களுக்கு ரெண்டு பாட்டா? அப்ப எனக்கும் ஒரு பாட்டாவது வேணும்,ஆமா:-)

said...

டிபிஆர்ஜோ,

அதைப்பத்தி உங்களுக்கு என்ன கவலை? செலவை ப்ரொட்யூசர் பார்த்துக்க மாட்டாரா?
இல்லே நீங்களே தயாரிப்பாளரா? அப்படீன்னா ஒரு 25 % டிஸ்கவுண்ட்டு குடுத்துடறேனே.
விமானச் செலவுக்கு மட்டும்:-)

said...

என்ன துளசியக்கா,

300ஆவது (முன்னூறா, முந்நூறா கேள்விக்கு யாருமே பதில் சொல்லலையே, அதான் இப்படி சேஃப்பா) பதிவில் 100 பின்னூட்டம் வாங்காம விடறது இல்லைன்னு முடிவா?

நடத்துங்க. நடத்துங்க.

said...

முன்னூறு, முந்நூறு ரெண்டுமே சரிதான் னு நினைக்கிறேன்.
பண்டிதர்கள் பதில் சொல்லணும்.

said...

முத்துகுமரன்,

வாழ்த்துக்கு நன்றி.

என்ன சீரியல் கிடையாதா? அப்ப என் ரோல்? அதுக்காக புதுசா புடவையெல்லாம் வாங்கி வச்சுட்டேனே.

said...

உஷா,

1 நீங்க சொன்னாலும் சொல்லாட்டாலும் நான் வயசுலே மூத்தவதான். அதனால் அந்த வணக்கத்தையே சொல்லலாம்:-)

2. பெங்களூரு, நான் வந்துகொண்டிருக்கிறேன் ( இதுதான் நான் தலைப்புலே சொன்னது)

3.இப்பப்பார்த்து நான் அங்கே இல்லை(-:

4. ராகவன் இப்ப 'மொட்டை'யாம்.

said...

அப்ப துளசிம்மா சென்னை பதிவு போட்டாச்சா
வர்றேன்

இன்றைக்கு பெங்களூரில் இருந்திருக்கணும்

ம்:-)))))))))))போக முடியல

ஆனா எல்லோரையும் சந்திச்ச நிறைவு உங்க பதிவு வாசிக்கையில்

300 பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்தும்மா

said...

அன்பின் துளசியக்கா,
முன்னூறு பதிவுகளுக்கு என் வாழ்த்துக்கள். மேலும் ஆயிரம் ஆயிரம் எழுதவேண்டும். அடுத்ததடவை நீங்க "மும்பை மீ ஆலி" சொல்லணும்.
அடை எனக்கு மிகமிகப் பிடித்தம்.. அடுத்தாபுல நான் பெங்களூருக்கு படையெடுக்கிறேன்... ஹரியண்ணாவுடன் கம்பராமாயணம் பேசும் சாக்கில்....
இந்த ஐயப்ப்பனின் போன் நம்பர் எங்கேயோ தொலைத்துவிட்டேன். இல்லாவிட்டால் போன மாதம் போனபோது புது மணமக்களை கொஞ்சம் நிம்மதியாக இருக்கவிடாமல் படுத்தியிருக்கலாம்.
அன்புடன்
க.சுதாகர்

said...

சுதாகர்,

வாழ்த்துக்கு நன்றி.
அவுங்கவுங்க ஆயிரம் பதிவுபோட்டும் அடக்கமா இருக்காங்க. பத்து , பதினாறுன்னு தளங்கள் வச்சுக்கிட்டு
எழுதித்தள்ளுறாங்க. நான் என்னன்னா முன்னூறுக்கே மூச்சு வாங்கிக்கிட்டு இருக்கேன்.

பெங்களுரு எப்ப போகப்போறீங்க? அடைக்குத் தொட்டுக்க நல்ல தேங்காய்ச் சட்டினி இருந்துச்சு. விட்டுறாதீங்க.

அடுத்தமுறை புனேவுக்கு வரணுமுன்னு ஒரு ப்ளான் இருக்கு.

said...

முன்னூறுக்கு வாழ்த்துக்கள்....

said...

நன்றி சுதர்சன்.

said...

எல்லோருக்கும் அக்கா. ஆனால் எனக்கு தங்கை. அதனால் வாழ்த்தறேன். எப்படி தான் இவங்களுக்கு நேரம் கிடைக்குதோ என நான் பொறாமைப்பட்டதுன்டு. ஹும்ம்ம்.( பெரு மூச்சு தான்). இருந்தாலும் 300 என்பது சாதனை தான். சச்சின் ஆஃப் ப்ளாக்கர் என பெயர் கொடுக்கலாமா

said...

கிறுக்கரே,

நாந்தான் குறைக்குடம் கூத்தாடுறேன்னா நீங்க ஏங்க இப்படியெல்லாம் சொல்லிக்கிட்டு?

உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்றேன் கேளுங்க.

இங்கே நிறையப்பேர் நிறைய ப்ளொக் 11, 16ன்னு வச்சுக்கிட்டு பதிவுகளைப் போட்டுத்தள்ளறாங்க.
கூட்டிக்கழிச்சுப் பார்த்தா எல்லாம் அறுநூறு ஆயிரமுன்னு போகும்.

வேணுமுன்னா நியூஸியிலிருந்து 300ன்னு சொல்லிக்கலாம், இல்லீங்களா?

வாழ்த்தியதுக்கு நன்றிங்க.