Friday, April 28, 2006

மஃப்பின்


இன்னிக்கு ஒரு பேஜாரான செய்தி கேக்கும்படி ஆயிடுச்சுங்க. நம்ம பக்கத்து வீட்டுலேஒரு அழகான நாய்க்குட்டி இருக்குன்னு சொல்லி இருந்தேன்லே. அது பேருதான் மஃப்பின்.


இன்னும் ஒரு வயசுகூட ஆகலைங்க. பத்தரை மாசம்தான் ஆகியிருக்கு. நேத்து வீட்டுக்குவெளியே போய்த் தெருவைக் கடந்து ஓடும்போது, வண்டியிலே அடிபட்டு.......


இன்னிக்கு அந்த வீட்டு அம்மாதான் ஷவல் கேட்டு வந்தாங்க. அப்பத்தான் சொல்றாங்க இப்படி ஆயிருச்சுன்னு.


கேட்டதுலே இருந்து மனசே சரியில்லைங்க. ரொம்ப அழகா இருக்கும். அவுங்க வீட்டுலேவெளியே விட்டதும் நைஸா நம்ம வீட்டுக்கு வந்து நம்ம ஜிகேயோட பூனைச் சாப்பாட்டைஒரு பிடி பிடிச்சுட்டுப் போயிரும்.


ஒரு மாசம் அவுங்க ஊருலே இல்லீங்க. மஃப்பின்னை அவுங்க தோழி வீட்டுலே விட்டுட்டுப்
போனாங்களாம். அதுவோ ஒரு பண்ணை வீடு. நல்லா ஓடியாடித் திரிஞ்சிருக்கு.


முந்தாநாள் ராத்திரி இவுங்க ஊர்லே இருந்து வந்துட்டுக் காலையிலே போய் இவரைக் கூட்டிட்டு வந்திருக்காங்க. எனக்கும் பக்கத்து வீட்டுலெ குலைக்கற சத்தம் கேட்டது.


சரி. மஃப்பின் வந்துட்டான்னு சந்தோஷமா இருந்துச்சு. எதுத்த வீட்டுலே ஒருத்தர் இருக்கார். டெரியர்.கொஞ்சம் வயசானவர். எப்பவும் ஃப்ரீயாத்தான் விட்டிருப்பாங்க. அவர் நம்ம வீட்டுக்கு எதிர்ப்பக்கம் தெருவோரமா வாக் போறப்பப் பார்த்தா என்னவோ தெரியலை, கிராமத்துலே ஒரு பெரியவர் கையைப் பின்னாலே வச்சுக்கிட்டு நடந்துபோற மாதிரியே இருக்கும். அதான் அவருக்குப் பெரியவர்னு பேரு வச்சிருந்தேன். பெரியவரும் மஃப்பினும் கொஞ்சம் ஃப்ரண்ட்ஸ். அதான் இவனும் பண்ணை வீட்டுலேஇருந்து வந்தவுடனே அவரைக் கண்டுக்கிட்டு வரலாமுன்னு போயிருக்கான். அதுக்குள்ளே யமன்கார்லே வந்து........ட்டான்.


என் சந்தோஷத்தை உங்ககிட்டே பகிர்ந்துக்கறமாதிரி இந்த துக்கத்தையும் உங்ககிட்டே சொல்லி மனசைஆத்திக்கறேன். பக்கத்து வீட்டுப் பசங்களும் மூஞ்சே சரியில்லாம கிடக்குங்க.


ச்சு ....பாவங்க மஃப்பின். கண்ணுக்குள்ளேயே இருக்கான்.

25 comments:

said...

:(

said...

சென்ற வாரம் சென்னை சென்ற போது இதே போன்ற ஒரு சம்பவம் காண நேரிட்டது..

என் வலைப்பூரில் இருக்கும்
http://vizhiyan.wordpress.com

said...

ராசா,
நன்றி.

உமாநாத்,

அதை நம்பிக்கை மடல்களிலேயே படிச்சேன். பாவங்க இதுங்க.

said...

:(

said...

என்னக்கா, கார் ஓட்டுரவங்க பார்த்து ஓட்ட மாட்டாங்களா.. நாயெல்லாம் பெரிய உயிரினம் தானே.. தூரத்துல பார்த்தாலே தெரியும் இல்ல..

ம்ஹ்ம்.. என்ன சொல்லி என்ன.. மஃபினுக்கு அவ்வளவு தான் வாழ்க்கை போலிருக்கு..

ஏதோ இந்த மட்டும் வளத்தவங்க வீட்டுக்கு வந்துட்டு இப்படி ஆச்சே.. அவங்க ஊர்ல இல்லாத போதுன்னா அவங்களுக்கு இன்னும் வருத்தமா இருக்கும் :(

said...

பொன்ஸ்,

அது ஊர்லே இருந்துவந்து நான் பார்க்கவே இல்லை. எல்லாம் வந்த சில மணிநேரத்துலே ஆயிருச்சு.
இப்ப அவுங்க வீட்டுப் பூனைவந்து நம்ம வீட்டுலே உக்காந்திருக்கு. அவுங்க ஊருக்கு ஒருமாசம் போனப்ப
அந்த அம்மாவோட தம்பி வந்து பூனைங்களுக்கு சாப்பாடு போட்டுப் போவார். அதுக்குப் பத்தலை போல.
இல்லேன்னா மனுஷா நெருக்கம் வேணும் போல. ஏதோ ஒண்ணு. நம்ம வீட்டு வாசல்லே வந்து நின்னுச்சு.
நான் சாப்பாடு கொடுத்துருவேன். இப்ப அவுங்க வந்தாலும் அங்கே போக இஷ்டமில்லாம நம்ம தோட்டத்துலெயே
வளைய வருது.

said...

மனுஷங்க, அதிலயும் பழகின மனுஷங்க இல்லைன்னா பூனைங்க இருக்கறது இல்லை.. எங்க வீட்டுப் பூனைக்கு நாங்க ஊர்ல இல்லாத நாள்ல எதிர் வீட்ல சாப்பாடு போட்டா சாப்பிடவே சாப்பிடாது.. ஒரே பட்டினி தான்..

உங்கப் பக்கத்து வீட்டுப் பூனைக்குப் பேர் என்னக்கா? அதுக்கு என்ன சோகமோ.. அதோட நண்பனுக்கு இப்படி ஆனதுல..

said...

பொன்ஸ்,

அவுங்ககிட்டே ரெண்டு பூனைங்க இருக்கு.ஒண்ணு Mill ,
இன்னொண்ணு Boon ( Mills & Boons) இதுலே Boonyதான்
வருது. ஜிஞ்சர் கலர். பையன்.

said...

:(

said...

வருத்தமான விசயம் தான். பல வருடங்கள் பிள்ளைகள் போல் பாசம் காட்டி வளர்த்த பிராணிகள் இறப்பது தாங்க முடியாத சோகம் தான். அதும் இயற்கையாக இல்லாமல் விபத்தில் இறப்பது ஒரு குற்ற உணர்ச்சியை நமக்கு ஏற்படுத்துகிறது.

said...

தூத்துக்குடீல எங்ககிட்ட ஒரு நாய் இருந்துச்சு..தெரு நாய்தான். தானா வீட்டுக்குள்ள (பெரிய காம்பவுண்டு) வந்திருச்சி. வந்ததுக்கு சோறு கீறு போட்டு நல்லா வளத்தோம். நாங்க என்ன செஞ்சாலும் ஏத்துக்கிரும். ஆனா எங்கள யாரையும் எதுவும் செய்ய விடாது. பால்காரனப் பாத்தா மட்டும் கொலச்சிக்கிட்டே இருக்கும்.

ஒரு நாள் காலைல இப்பிடித்தான் ரோட்டுல அடிபட்டுக் கிடந்துச்சு.......ராஜான்னு பேரு அதுக்கு....

said...

மணியன், சிவா, ராகவன்

நன்றிங்க.

இது பார்க்கப் பெருசே தவிரச் சின்னக் குட்டிதாங்க. இன்னும் ரோடு சென்ஸ் படிக்கலை.
இன்னும் கொஞ்சம் கவனமா இருந்துருக்கலாம். இல்லே?

ராகவன்,
தெரு நாய்ன்னா என்ன? நம்ம வெள்ளச்சியும்( பூனா) வெள்ளையப்பனும் கூட தெருவிலே இருந்து வந்தவங்கதான்.
அன்பு காட்டறதுலே இதுங்க மனுஷனை மிஞ்சி இருக்குங்க.

said...

எங்க வீட்டு நாய் ஆறு மாசத்துக்கு முன்னாடி செத்துப் போச்சு....தாங்கவே முடியலைங்க...ரொம்ப நாளாச்சு மனச தேத்திக்க...அவங்கள சீக்கரம் வேற நாய் வாங்க சொல்லுங்க...கொஞ்சம் ஆறுதலா இருக்கும்.....

said...

அருவி,

அவுங்க வீட்டுலே ஏற்கெனவே ரெண்டு பூனையும், ஒரு நாயும் இருக்குங்க. இது ஏதோ ஒரு இம்பல்ஸ்லே
வாங்கிட்டாங்க. விலையும் கூடுதல். மூணுமாசம் முன்னேதான் இதுக்கு ஹேர்கட் பண்ணி அலங்காரம் எல்லாம்
ஆச்சு. நாலு புள்ளைங்க வேற இருக்கு. அதுவே போதும்.

said...

அம்மா,

வருத்தாமான விஷயம்.

எனக்கு ஆறேழு வயசு இருக்கும் போது எங்க வீட்ல ஒரு பூனை வந்துச்சி. நாங்க அத கொஞ்ச நாள் பார்த்துகிட்டோம். அப்புறம் தானா அடுத்த தெருவுக்கு ஓடி போச்சி. கூப்டாலும் வர்ல. சரி போகட்டும் விடுனு வந்துட்டோம். அப்பறம் 2 வருஷம் கழிச்சி ஒரு குடும்பமா (5 பூனைகள்) நம்ம எதிர்வீட்ல (ஓட்டு வீடு) குடிவந்தது. அந்த வீடு இடிச்சி கட்டும் போது அதுங்க எல்லாம் எங்க போச்சின்னே தெர்ல, ஆனா அப்பப்ப வரும், எலி, புறானு எதாவது புடிச்சி சாப்புடும். எலி புடிச்சிருந்தா விட்ருவேன், புறாவா இருந்தா அவ்ளோதான் அந்த பூனைய உண்டு இல்லை பண்ணிருவேன். இப்பகூட எதிர்வீடு மாடியில் உலாவிகிட்டு இருக்கு போன தடவை மதுரைக்கு போன போது பார்த்தேன். அதுங்களுக்கு என்ன சாப்பாடு எங்கிருந்து கிடைக்குதுன்னு ஒன்னும் தெரியாது ஆனா நல்லா கொழு கொழுன்னு இருக்கும்.

said...

Sorry...

said...

சிவமுருகன்,

//அதுங்களுக்கு என்ன சாப்பாடு எங்கிருந்து கிடைக்குதுன்னு ஒன்னும் தெரியாது
ஆனா நல்லா கொழு கொழுன்னு ......//

கல்லினுள் தேரைக்கும்..... பாட்டு நினைவு இருக்கா? ஆண்டவன் படி அளந்துக்கிட்டுத்தான் இருக்கான்.


ராம்ஸ்,

நன்றி.

said...

ஐயோ பாவம்.

இவ்வளவு கவனக்குறைவாவா இருப்பாங்க?

பாக்கறதுக்கும் ரொம்ப அழகா இருக்குங்க. அதான் மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு :-((

said...

ஆமாங்க டிபிஆர்ஜோ.
அதுக்கு ரோடு சென்ஸே கிடையாது. ச்சின்னக்குட்டிதானே. வெளியே வந்ததும் தலைகால் தெரியாம ஓடும்.
எங்க வீட்டுமுன்னாலே ஸ்பீட் லிமிட் 50 கிலோமீட்டர்தான். ஆள் நடமாட்டம் கம்மின்றதாலே எல்லாம் 60ன்னு
போற ஜனங்கதான். சிட்டி கவுன்சிலுக்குச் சொல்லி ஸ்பீடு ப்ரேக்கர் வைக்கச் சொல்லணும்.

said...

லண்டனில் நாய் கடித்தால், நாய்க்குச் சொந்தக்காரர் 5000 பவுண்டுகளை கடிபட்டவருக்குத் தண்டம் கட்ட வேண்டும். அங்கு சட்டம் எப்படி?

எப்படியாவது ஒரு தடவை நாய்கடித்து விட்டால், பத்து நாட்கள் லீவும் எடுத்து, இலவச வைத்தியமும் பார்த்து, 5000 பவுண்டுகள் வாங்கி இந்தியாவில் லட்சாதிபதி ஆகிவிடலாம்.

நாய்தான் கடிக்க மாட்டேங்குது

:))

said...

மகேஸ்,

இங்கே நாய் கடிச்சால் முதல்லே அந்த நாய்க்கு ஆப்பு வைக்கப்படும்.
உடனடியாக கொண்டு போயிருவாங்க. நிரந்தரத் தூக்கம்தான்.
அப்புறம் ACC தான் எல்லா செலவுக்கும் காசு தரும். நாய் சொந்தக்காரருக்கும் எதோ ஃபைன்.

ராத்திரி 10 மணிக்கு மேலே நாய் குரைக்கக்கூடாது. பாவம் அதுங்க.மணி பார்க்கத்தெரியுமான்னு
தெரியலை:-)))
இருக்கு போல. சரியாத் தெரியலை. ஆனா நாய்க்கு வருஷாவருஷம் லைசன்ஸ் வாங்கணும்.

said...

வீட்டுச்செல்லம் ப்ரிவதன் வேதனை வளர்த்தவர்களுக்குத்தான் புரியும். நான் அனுபவித்து இருக்கிறேன். பாவம். என்சார்பில் அந்த வீட்டுக்காரர்களுக்கு வருத்தங்களைத் தெரிவித்து விடவும்.

said...

"yarukkendrum azhudha ullam........"

said...

கீதா,
கட்டாயம் சொல்றேன். அவுங்க இன்னொரு நாய்க்குட்டி வாங்கப்போறாங்களாம். இந்த முறை வீட்டுக்குள்ளேயே
இருக்கற வெரைய்ட்டியாம்.

said...

சிவஞானம்ஜி,
நன்றிங்க. நான் கதையிலே, சினிமாவுலே எதாவது மிருகங்களுக்குக் கஷ்டமுன்னாலெ அழுதுருவேன்.
பாவம் இல்லையா அதுங்க.