Wednesday, April 12, 2006

பூவுக்கென்ன பதில்?

வலைஞர்களில் பலர் ஆர்வமாப் பதில் சொன்னாங்கதான், ஆனாலும் சரியான விடை யாருமே தரலை(-:


அந்த மஞ்சப்பூ டாண்டலியன் இல்லை, தலைவெட்டிப்பூவும் இல்லை. தலைவெட்டிப்பூ இங்கெயும் இருக்கு. வெள்ளைக்கலரு சுத்தியும் மஞ்சள் கலரு நடுவிலேயும் இருக்கும்.


'ஏதோ ஒரு பூ'ன்னே அதுக்குப் பேர் வச்சுரலாம்:-)


இப்ப முக்கியமான பூவான பர்ப்பிள் பூ. நம்மூர் சந்தையிலே தற்செயலாப் பார்த்தப்ப எதிர்பாராத இன்ப அதிர்ச்சியைக் கொடுத்த பூ.(உடனே வாங்கிட்டமுல்லெ.)


இதோட தாவரப்பேர் Crocus sativus

இன்னும் விளக்கம் வேணுமுன்னா Saffron Crocous

அட, நம்ம குங்குமப்பூ.


ஒரு கிலோ குங்குமப்பூ எடுக்க சுமார் ஒன்னரைலட்சம் பூ சேகரிக்கணும். அதுலேயும் பாருங்க அது எடுத்தவுடனே ஈரமா இருக்குமுல்லையா? அதனாலே அதைக் காயவச்சு வியாபாரத்துக்கு அனுப்பணுமாம். அப்படிக் காய வச்சா வெறும் 200 கிராம்தான் தேறுமாம்.


கணக்குப் போட்டுப் பாருங்க, ஒரு கிலோ குங்குமப்பூ விக்க ஏழரை லட்சம் பூ சேகரிச்சுக்கணும்.இப்பத்தான் நம்ம வீட்டுலே ஒரு பூ வந்திருக்கு. ஏழரை லட்சம் வந்தவுடனே வியாபாரத்தை ஆரம்பிச்சுருவேன். இனிமே நீங்க எல்லாம் நம்ம கடையிலேதான் குங்குமப்பூ வாங்கணும். இப்பவே சொல்லிட்டேன், ஆமா.

12 comments:

said...

துளசி
ஏற்கெனவே 3 நட்சத்திரம் உங்களுதுன்னு சொல்லியாச்சு, இப்ப குங்குமபூ வியாபாரத்துக்கு இப்பவே கஸ்டமர் சேர்க்க வேற ஆரம்பிச்சாச்சா? பரவாயில்ல, நல்ல டெக்னிக்தான்:)

said...

பத்மா,
அந்த 3 நட்சத்திரம் எனக்கு எங்க அம்மா( ரியல் அம்மா, என்னைப் பெற்ற தாய்.எப்படியெல்லாம்
விளக்கம் கொடுக்கும்படி ஆயிருச்சுப் பாருங்க!) நான் ச்சின்னப்பிள்ளையா இருக்கறப்ப, நம்ம வீட்டு
மொட்டைமாடியில் ஒரு நாள் படுத்துக்கிட்டுக் கதை அளந்துக்கிட்டு இருந்தப்பப் பரிசாக் கொடுத்தாங்க)

இந்தக் குங்குமப்பூ வியாபாரம், எல்லாம் ஒரு ரிட்டயர்மெண்ட் ப்ளான் தான்:-))))

ஆமாம், இந்த ரிட்டயர்மெண்ட் ப்ளான்பத்தி ஒரு பதிவு போடுங்களேன் பத்மா. எப்படியெல்லாம்
செஞ்சா பிறருக்குப் பாரமில்லாம இருப்போமுன்னு.

said...

குங்கும பூவா! அடடா! ரொம்ப காஸ்ட்லி பூ தான். சீக்கிரம் தோட்டம் போட்டுட்டு கூப்பிடுங்க. :-)

said...

சிவா,
இப்பத்தான் 10 செடி முளைச்சிருக்கு. ஏழரை லட்சத்துக்கு இன்னும் எவ்வளோ குறையுது?:-))

said...

துளசி அம்மா,

தோட்டம் போட்டு பூ யாவாரம் செய்யும் போது உங்க கடைல எதாவது வேலை போட்டுகொடுங்க. இப்பவே சொல்லிவச்சிடேன் ஆமா :-)

said...

கார்த்திக்,

உங்க வேலை உரப்பிச்சு. பொண்ணுங்க பூப்பறிச்சுக்கிட்டு இருக்கறதை சூப்பர்வைஸ் பண்ணிடுவீங்கல்லெ?

said...

ரொம்பவும் ஆசைப் படாதீங்க துளசி.. அப்புறம் த.நாவின் அடுத்த ஜெ (உதாரணம் சரியா?) நீங்கதான்.

சாதா துளசி அப்புறம் பூக்கார துளசியாயிராதீங்க.

said...

அட இதுதானா குங்குமப் பூ. இதத் தொட்டு நெத்தியில் வெச்சுக்கலாமா......

அது சரி குங்குமப் பூ சாகுபடிக்குச் சாம்பல் சத்தும் தழைச் சத்தும் சரியாகக் கலந்து இட வேண்டும். டெண்டோ பைரட் பாஸ்பேட்டாவை காலையில் எம்பது வாட்டியும் மாலையில் அம்பது வாட்டியும் தெளிக்க வேண்டும்.

தாய் நிலம் தந்த வரம் தா-வரம்
அது தழைக்கத் தழைக்க மகிழ்வார்கள் யாவரும்....

said...

துளசி அம்மா,

உரப்பிச்சு அப்படின்னா என்ன.. நீங்க அலாட் பண்ணுன வேலை நல்லா இருக்கு. கொட கூலி கொஞ்சம் முன்ன பின்ன இருந்தாலும் ஓகே.

இண்ணும் எம்புட்டு நாள்தான் கம்யுட்டர்குள்ள தலைய உடுறது. கொஞ்ச நாள் கழிச்சி ஜிலோன்னு இருக்கலாம்ன்னுதான் இந்த ரிட்டயர்மெண்ட்பிளான்.

said...

என்னங்க டிபிஆர் ஜோ,

கொஞ்சம் கடை கண்ணின்னு வச்சுப் பொழைச்சுக்கலாமுன்னு நினைச்சா, அதிக ஆசைன்னு
ஒரு குண்டைத்தூக்கிப் போட்டிட்டீங்க.

இப்பப்பாருங்க, இதாலே நம்ம கார்த்திக்கோட வேலை வாய்ப்புக்கு ஆப்பா?

said...

ராகவன்,

ஏங்க இப்படியெல்லாம் சொல்லிப் பயமுறுத்தறீங்க? நானே கிச்சன் விண்டோஸில்லுலே
வச்சு, முளைக்குமா, பூ வருதான்னு கவலைப்பட்டுக்கிட்டு இருக்கேன்(-:

இந்தப் பக்கம் நீங்க வர்றப்ப, நம்ம வீட்டுக் குங்குமப்பூ போட்ட ஸ்வீட் செஞ்சு தரேன்.

said...

உரப்பிச்சு = உறுதியாயிருச்சு.

வேலை பெர்மனண்ட்டு ஆகிப்போச்சுன்னு புரியுதுங்களா?:-))))