Friday, April 21, 2006

ஒரு டிக்கெட்

"என்னங்க, காஃபி மக்கை வச்சுட்டு வர்றதுக்குள்ளெ இப்படிக் கம்ப்யூட்டரைப் பிடிச்சுக்கிட்டீங்க. எந்திரிங்க.நான் எழுதிக்கிட்டு இருக்கறதை முடிச்சுட்டுச் சமையலைக் கவனிக்கணும்."

"அதான் நீ பகல்பூராவும் கம்ப்யூட்டர்லே இருக்கேல்ல. எனக்குத்தான் கொஞ்சம் விடேன்."

"போங்க, நீங்க உங்க லேப்டாப்லே பாருங்க. எனக்கு மனசுலே நினைச்சிருக்கறதை இப்ப எழுதலேன்னா மறந்துருவேன்"

"தமிழ்நாட்டுலெ என்ன நியூஸ்?"

"எல்லாம் எலக்ஷன் நியூஸ்தான். வேற என்ன?"

"நீதான் தினம் இ பேப்பர் பார்க்கறியே. அது எங்கேன்னு சொல்லு. நானும் கொஞ்சம் ஒரு அஞ்சு நிமிஷம் பார்த்துக்கறேன்."

"நியூஸ்பேப்பர்னு புக்மார்க் பண்ணியிருக்கேன் அங்கே பாருங்க. அங்கெபோய் லாக் இன் செஞ்சுக்குங்க."

"அட.. இது என்னம்மா இவ்வளோ கூட்டம்? விஜயகாந்துக்கா?"

"சினிமாக்காரங்களுக்குக் கூட்டம் சேராதா என்ன? சீக்கிரம் பார்த்துட்டு எனக்குத்தாங்க."

"ஆமா, நமக்கு மாசம் எவ்வளொ அரிசி செலவாகுது? "

"அஞ்சு கிலோதான் வாங்குறோம். அதுவும் பாக்கி ஆயிருதுல்லே."

"பத்துகிலோ போதுமுன்னா இலவசமாமே. அப்ப நாம இந்தியாவுக்குத் திரும்பிப் போயிட்டோமுன்னா அரிசிக் கவலை இல்லை."

"தோடா....."

"இது ஜெயலலிதா பிரசாரம் பண்ணுற படமா? ஏன் வேனுக்குள்ளேயே இருக்காங்க? பக்கத்துலே இருக்கறதுதான்அந்தத் தங்கச்சியா? என்னா கூட்டம் என்னா கூட்டம்! ஆமாம். இதுதான் கறுப்புப் புலிங்களா? ஏ.கே.47 கையிலேஇருக்கு. இவுங்கெல்லாம் யாரு? ஒரே கலர்லே யூனிஃபார்ம் மாதிரி போட்டுக்கிட்டு வேனைச் சுத்தி நிக்கறாங்க?செக்யூரிட்டியா இல்லை ப்ளையின் க்ளோத் போலீஸா? கேண்டிடேட் மட்டும் வெளியே நின்னு ஓட்டுக்கேக்கறாரு."


"கறுப்புப்புலின்னு ஒண்ணும் இல்லீங்க.கறுப்புப்பூனைங்கதான் இருக்கு."

"ஆமாமாம். பின்னாலே போலீஸ் வேனா? சர்ச் லைட் எல்லாம் இருக்கு...... ஆமா இது......"

"ஏங்க ஒரு டிக்கெட் எடுத்துக் குடுக்குறீங்களா?"

"இரு. அடுத்த பக்கமெல்லாம் எப்படிப் பாக்கறது? ஓ இங்கேயே க்ளிக் செஞ்சுறலாமா? கோயில் தேர் வருது. இங்கேயும்கூட்டம் இருக்கு."


"ஏங்க. சாமிக்குக் கூட்டம் வராதா? ஜேஜேன்னு இருக்கு பாருங்க. சீக்கிரம் ஆவட்டுங்க"

"இண்டியா ஜெயிச்சுருச்சா? நல்ல கேமா இருந்திருக்கும்."

"ஆமாமா, இந்தியா ஜெயிச்சாத்தான் நல்ல கேம். இல்லே? ஏந்தான் இப்படிக் க்ரிக்கெட் பைத்தியம் புடிச்சுக் கிடக்கீங்களோ?"

"ஸ்ரீலங்காவுலெ பழையபடிக் கலவரமா? ம்ம்ம்ம்ம்ம்"

"சீக்கிரம் ஆகட்டுங்க."

"என்னமோ கேண்டில் கொளுத்தி வச்சுருக்கு? பள்ளிக்கூடம் அனுமதி ஆயிருச்சா? என்ன ஆச்சாம்?"

"ஒரு டிக்கெட்"

நகைக்கடையில் கன்னம் வச்சுத் திருடிட்டாங்களாமே? ஏழுகிலோ வெள்ளி....."

"ஒரு டிக்கெட்"

"இந்தப்பிள்ளைக்கு என்ன? இதய நோயா? அடப்பாவமே. டாஸ்மாக்குன்னா என்ன?"

"ஒரு டிக்கெட்"

"ஓஓஓஓஓஓஓஒ குடிக் கடையா? தண்ணி ஊத்திக் கொடுத்துடறாங்களாமா? ஹாஹாஹா......."


"ஆமாம். ஏற்கெனவெ போதையிலே கிடக்கறவங்களுக்கு எதாவது தெரியுமான்னு தண்ணி ஊத்திடறாங்க போல.அப்ப எப்படிக் கண்ணுபிடிச்சாங்களாம்?"


"கிக் வராதுல்லே?"

"ஏன் வராது? காலாலே ஓங்கி ஒரு கிக் விட்டா வந்துட்டுப் போகுது. "

"இதுதான் நீ சொல்லிக்கிட்டு இருந்த வைஷ்ணவியா? இந்த ஆளா காரணம்? ஏமாத்திட்டானாமா?"

"ஒரு டிக்கெட்"

"தெலுங்குப்படத்துலே நயன்தாரா சாதிக்கிறார். ஆ.......ங். பரவாயில்லையே!"

"அதான் தமிழ்ப்படத்துலே எல்லாரும் வந்து சாதிச்சுட்டாங்கல்லே, இனி தெலுங்குப் பக்கம் போகவேண்டியதுதானே."

"பாக்கிஸ்த்தான்லெ இந்திப்ப்டம் போடறாங்களாம்.ம்ம்ம்ம்ம்ம்ம்ம் மூணாறுலே அமிதாப் ஷூட்டிங்."

"ஒரு டிக்கெட்"

"இனிமே ஜட்ஜை யுவர் ஆனர்னு சொன்னாப் போதுமாமே."

"ஏங்க, தமிழ்லே கனம் கோர்ட்டார் அவர்களேன்னு சொல்லக்கூடாதா? இதெல்லாம் நின்னு நிதானமாப் படிச்சுக்கிட்டுஇருக்கீங்க பாருங்க. சீக்கிரம் முடிங்க."

"நீதான் தினம் பார்க்கறே. எனக்கு இன்னிக்கு ஒரு நாள் விடேன், கேரளாவிலேயும் எலக்ஷன் வருதா?"

"மொபைல் ஃபோன் பெங்களூர்...... எப்படியெல்லாம் திருடறாங்க.... கில்லாடிங்க"

" ஐய்யோ......"

"தனியார் துறையில் இட ஒதுக்கீடு....."

"ஏங்க நீங்கதான் தினம் சமாச்சார் படிச்சுக்கிடறீங்கல்லே. இப்ப என்னாத்துக்கு வேணுமுன்னே என் இடத்தைபிடிச்சுக்கிடறீங்க?"

"அட. ஒருநாள் தமிழ்ப்பேப்பர் பார்க்க விடேம்மா. இங்கேபார். தங்கம் விலை சீறுதாம்...."

"தெரியுங்க. நான் அதெல்லாம் எப்பவோ பார்த்தாச்சு. அதான் நகை ஓண்ணும் கேக்காம இருக்கேன்"

"இது என்னம்மா பொம்பளைங்கெல்லாம் ஆடறாங்க?"


"அதுக்குப் பேர் குத்தாட்டம். ஆமா நாங்க ஆடுனா என்ன ? ஆம்புளைங்களே ஆடணுமா எப்பவும்?"

"சரி. ஆடும்மா நீயும் ஆடு."


"நீங்க இப்ப இடம் விடலேன்னா பேயாட்டம் ஆடுவேன்,ஆமா"


"அதான் தினம் ஆடறேல்லெ. டிஜிட்டல் பேனர்.... தேர்தல் விதிமுறைகளை மீறினால்...."


"இனி மீறினால் என்ன மீறினால்? அதான் பப்ளீக்கா லஞ்சம் கொடுக்கறேங்கறாங்களே. அரிசி, கலர் டிவி,கேபிள்னு. லட்டுக்குளே மூக்குத்தி, கொடம், காசு ரொக்கமா கொடுத்துட்டுச் சாமிப்படம் காமிச்சுச் சத்தியம்வாங்கறது எல்லாம் மாறிப்போச்சு. இப்படி மேடை போட்டு அதைத்தரேன், இதைத்தரேன்னு சொல்றதுகூடிப்போச்சு.ம்ம்ம்ம் இடத்தைக் காலி பண்ணுங்க."


"இது கார்த்திக்கா? எதுக்கு இந்த வேண்டாத வேலை எல்லாம்?"


"டிக்கெட்"

"சரத் அம்மாகூட சேர்ந்தாச்சா? ஏனாம்?"

"டிக்கெட்"

"தேனியிலே வைகோ பிரசாரம். கூட்டம் ரொம்ப இல்லையே?"

"டிக்கெட்"

"அது என்னா டிக்கெட் டிக்கெட்ன்னு சொல்லிக்கிட்டே இருக்கே."

"இதபாருங்க. நானும் இங்கே பேப்பர் பார்த்துத்தான் நியூஸ் தெரிஞ்சுக்கிறேன். இதுலே, அது ஏன் இது எப்படின்னுகேட்டா எனக்கு என்ன தெரியும். ஒரு டிக்கெட் வாங்கிக்குடுத்தீங்கன்னா ஊர்ப்பக்கம் போய் என்னா ஏதுன்னு பாத்துட்டுவந்து விலாவரியாச் சொல்வேன்லே."


"ஒரு நாள், ஒரே ஒருநாள் நாட்டு நடப்பைப் பார்த்தாலெ இப்படி கிறுகிறுன்னு வருதே, தினம் இதைப் பாக்கற ஜனங்களுக்கு எப்படி இருக்கும்? யம்மா... ஆளைவிடு. இந்தா உன் கம்ப்யூட்டர்."

"அட போங்க. உங்ககிட்டே மல்லுக்கட்டி எழுத நினைச்சது மறந்தே போச்சு."


பி.கு: செய்திகளுக்கு ஆதாரம் 20/4/06 தினமலர் இ பேப்பர்.

52 comments:

said...

//இது ஜெயலலிதா பிரசாரம் பண்ணுற படமா? ஏன் வேனுக்குள்ளேயே இருக்காங்க? பக்கத்துலே இருக்கறதுதான்அந்தத் தங்கச்சியா?//

தங்கச்சி(???)

எந்த அளவிற்கு பயம் இருந்தா...அதுவும் அவ்ளோ தூரத்தில் இருந்தாலும் ஆட்டோ பயமா?

said...

ஏங்க துளசி,

ஓசியில தினமலர படிக்கிறப்பவே இந்த கலாட்டான்னா எங்கள மாதிரி தந்தி, தினமணி அப்புறம் ஒரேயொரு ஒரு ரூபாய்க்கு விக்கற தினகரன் எல்லாம் படிச்சா என்னாவறது?

இருந்தாலும் ஒரு முழு ந்யூஸ் ரீல் பார்த்தா மாதிரி இருந்திச்சி. சரி.. நீங்க பேசிக்கிட்டிருந்தீங்களே அவர் யாருங்க? பேரே போடலை?

said...

:)
நீங்களாவது ஈ-பேப்பர்ல பார்க்கிறதோட சரி.. எங்க நிலமையெல்லாம் நினைச்சு பாருங்க..

said...

:-)

said...

எல்லா வீட்லேயும் ஆம்படையான்ஸ் கம்ப்யூட்டர் பக்கம் வர்றது இப்படித்தான் போலிருக்கு துளசி. நான் ஏதாச்சும் எழுதணும்னு வர்றப்போதான் ம்யூசிக் எழுதப் போறேன்னு உக்காந்துக்குவாங்க!

said...

ஆம்படையான்ஸ் அழிச்சாட்டியம் தாங்க முடியலை துளசி. நான் ஏதாச்சும் எழுத வரும்போதுதான் ம்யூசிக் எழுதப் போறேன்னு உக்காந்துக்குவாங்க!

said...

என்னக்கா ஒரு டிக்கெட்டுக்கு மாமாகிட்ட இத்தனை கெஞ்சறீங்க.. எங்க கட்சிக்கு வாங்கக்கா.. உங்க விருப்பமான உசிலம்பட்டிலயே ஒரு டிக்கெட் குடுத்துருவோம் :)

இன்னிக்கு பேப்பர் படிக்க வேண்டிய அவசியமே இல்லாம பண்ணிட்டீங்கக்கா... :). சூப்பர் :)

said...

எம்பாடு தேவலையில்லே. என் வீட்டம்மாவை கணினி பக்கமே விடுவதில்லை. போட்டியே இல்லை ஹி ஹி ஹி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

தாணு, மியூசிகல் சேர்ல விளையாட்டுல வாரிசுகளை விட்டு விட்டீங்களே

said...

ஜோசப் சார், அவர் யாருன்னு புரியலையா? கீழே தாணு எழுதியிருக்கறதையும் படியுங்க! சுத்தமான Female chauvinistங்க் கூட்டமா இருக்கே!

இதை கோபால் சாருக்கு படிக்கக்காட்டவும்!

அய்யா, உங்கள் தலைமையில், ஆண் விடுதலைக்காக போராட கோடிக்கணக்கான மக்களைத் திரட்டிவிடலாமா?

said...

ஹ்ம்ம் ஒரு current affairs நடத்திட்டீங்க

said...

அடடா... இப்படிப் பின்னூட்டமழையிலே நனைய வச்சுட்டீங்களே. எல்லாரும் நல்லா இருங்க.

said...

முத்து(தமிழினி),

தங்கச்சி= அம்மாவின் தங்கச்சிங்க. அவுங்களைத்தாங்க இதுவரை(நேரில்) பார்த்தது இல்லை.
நானே அம்மாவோட இரட்டைப்பிறவி( ஜுருவாபெஹன்)ன்னு நம்ம வீட்டுலெ பரவலான அபிப்பிராயம்
எல்லாம் அராஜக ஒத்துமைதான்:-)

said...

டிபிஆர்ஜோ,

வேணாம். இது நல்லா இல்லே:-))) நிஜமாவே யாருன்னு தெரியாதா?

said...

ராசா,

இதைச் சொல்லித்தாங்க வருத்தப்பட்டுக்கிட்டாரு நம்மூட்டுலே.

said...

பட்டினத்து ராசா,

நன்றிங்க. நல்லா இருங்க. ஏதோ இன்னிக்குப் பொழுது சிரிச்சுச் சந்தோஷமா இருக்கலாம்.

said...

தாணு,
ரொம்ப உணர்ச்சிவசப்பட்டுட்டீங்க. சாந்தி சாந்தி. வீட்டுக்கு வீடு வாசப்படிம்மா வாசப்படி:-)

'சிக்' ஆளுங்களுக்கு மருந்துச்சீட்டு எழுதாம 'ம்யூசிக்' எழுதறது? ம்ம்ம்ம்ம்ம்ம்

உஷா என்னமோ கேக்குறங்க பாருங்க.

said...

பொன்ஸ்,

அதென்ன உசிலம்பட்டிலெ? ஆண்டிப்பட்டி இல்லையா?

said...

டோண்டு,

இது நியாயமா இருக்கா? நீங்களே சொல்லுங்க.

said...

உஷா,

நாலுலெ ஆரம்பிச்சு இப்ப ஒரு சேர் ரெண்டு ஆள்னு நிக்குது:-)

said...

பினாத்தலாரே,

உங்க படத்துக்கு ஆக்ட்டிங் ச்சான்ஸ் கொடுக்கப்போறிங்கன்னு ஐயா ரெடியா இருக்கார். இப்பப்போய் ஆண்கள் விடுதலைன்னு
என்னமோ ஆரம்பிக்குறீங்க?

கோடிக்கணக்கான மக்களைத்திரட்டி அப்படியே ஏரியல் ஷாட் எடுத்து ஒரு பாட்டுப் போட்டுருங்க. நடுவிலே நம்ம
'கிறைஸ்ட்சர்ச் விஜயகாந்த்' பாடிக்கிட்டே வருவார்:-)

said...

இளா,

வாங்க வாங்க. நல்லா இருக்கீங்களா? நன்றிங்க.

said...

அக்கா, ஆண்டிப்பட்டியாக்கா? ஆண்டிப்பட்டி தொகுதியும் உங்களுக்குத் தான்.. பாத்துருவோம்க்கா, அம்மாவா, அக்காவான்னு ;)

said...

//ஒரு நாள், ஒரே ஒருநாள் நாட்டு நடப்பைப் பார்த்தாலெ இப்படி கிறுகிறுன்னு வருதே,//

எதுக்கு இப்படி கிறுகிறுக்கனும்? மனசாட்சி படி நல்லவனுக்கு ஓட்டு போட்டுட்டு கடமைய முடிச்சிட்டு, போய்டனும்.

//தினம் இதைப் பாக்கற ஜனங்களுக்கு எப்படி இருக்கும்? யம்மா...//

இதுக்குதான் நான் தினம் பார்ப்பதில்லை எப்பவாவது, அவ்ளோதான்.

மொத்தத்தில் நால்ல ஹாஸியமாக இருந்தது.

ஏதோ டிக்கட் டிக்கட்னு வருதே?
ஓ அது தான் மறந்துட்டீங்களா?

சீக்கிரம் ஞாகபடுத்தி எழுதுங்க.

said...

vivek,vadivelu,vaiyapuri, all of them are calling to book comedy track from thulasi thalam.shall I take the advance cheques?

said...

"ஒரு நாள், ஒரே ஒருநாள் நாட்டு நடப்பைப் பார்த்தாலெ இப்படி கிறுகிறுன்னு வருதே, தினம் இதைப் பாக்கற ஜனங்களுக்கு எப்படி இருக்கும்?"



கல்யாணம் ஆன ஆம்ப்ளங்களை இப்பிடித்தான் படுத்துவங்களோ.செத்த நேரம் கம்பியூட்டர் பாக்க விட மாட்டாங்களோ!

வாழ்க தாய்குலங்களே!

said...

துளசியக்கா!

கலக்கிட்டீங்க போங்க! :)

கோபால் சார் பாவம்! நிம்மதியா இருப்பாரு! தமிழ்நாட்டுல நடக்கற எல்லாத்தையும் சொல்லி அவரை கணினி பக்கமே வரவிடாம செஞ்சுறாதீக!! :)

said...

பூரா தான் படிக்கவிடுங்களேன், எத்தனை நாளைக்கு அவெங்கே கிணத்து தவளையா இருகிறது! நாள்பூர நீங்க தானே முன்னாடி உட்கார்ந்துக்கிட்டிருங்கீங்க-:)

said...

அடக்கடவுளே....தேர்தலோட தாக்கம் அங்க வந்துருச்சா....சரி...பேசாம நம்ம பமக-ல சேந்துருங்க....தினமும் நாப்பது பின்னூட்டம் கொடுக்கிறோம். நியூசிலாந்து வட்டத் தலைவராக உங்களையும் ஆஸ்திரேலியா வட்டத் தலைவராக கோபால் சாரையும் பதவி குடுத்து பெருமைப் படுத்தீர்ரோம். சரி நாலஞ்சு பெரிய சூட்கேஸ் வைக்க வீட்டுல எடம் இருக்குதுதான....சுவிஸ் அக்கவுண்ட் நம்பர் சொல்லுங்க...

எல்லாம் சரி....ஆனா வ.வா.ச-ல மட்டும் சேராதீங்க...அவங்க இலவச கலர் மானிட்டர் கொடுக்கிறாங்கன்னு புளுகுறாங்க....நாங்கதான் பத்துப் பின்னூட்டத்துக்குப் பத்துப் பின்னூட்டம்னு செயல் படுத்துற மாதிரியான செயல் திட்டங்களைச் சொல்றோம்.

said...

'நியூஸ்பேப்பர்னு புக்மார்க்கைப் பாருங்க'ன்னு சொல்லிட்டு மட்டும் போயிருந்தீங்கன்னா,
எங்களுக்கு இப்படி ஒரு நல்ல பதிவு கிடைச்சிருக்காதே!

ஆனாலும், ரொம்பத்தான் வறுக்கிறீங்கம்மா, திரு. கோபாலை!

ஒருநாள் இல்லாட்டி ஒருநாள், டிக்கட்டை வாங்கிக் கொடுத்துடப் போறார், பாருங்க!!

:-)

said...

துளசி அக்கா

பெனாத்தல் குடும்பத்தில் குழப்பம் பண்ண பாக்குறார்.

கவனமா இருங்க.

பெருசு

said...

பொன்ஸ்,

என் தங்கத் தங்கச்சி( அதான் பேருலேயே பொன்னை வச்சுருக்கியேம்மா), நீதாம்மா இனி என் உ.பிச. அக்காவுக்குமட்டும் அதிகாரம்
வரட்டும்.அப்புறம் பாரு நீ எங்கியோ போயிருவேம்மா, போயிருவே:-)

said...

சிவமுருகன்,
//மனசாட்சி படி நல்லவனுக்கு ஓட்டு போட்டுட்டு ...//

இங்கேதானெ இடிக்குது? அந்த நல்லவன் எங்கே? எங்கே? எங்கே?

//ஏதோ டிக்கட் டிக்கட்னு வருதே?
ஓ அது தான் மறந்துட்டீங்களா//

தெய்வமே நான் எங்கெபோய் முட்டிக்க? ஐய்யகோ....அந்த டிக்கெட்டே நாட்டு நடப்பைத்
தெரிஞ்சுகிட்டு வர்றதுக்குத்தானே(-:

said...

மானு,

நீங்க வலைஉலகத்துக்குப் புதுசுன்னு நல்லாத்தெரிஞ்சுபோச்சு.

நம்ம டிபிஆர்ஜோ இருக்காரே. அவரோட பார்த்திபன் & வடிவேலு பகுதிகளைப் படிங்க.
அப்பத்தெரிஞ்சுரும் யாரு சினிமா ரைட்டர்ன்னு:-)

அப்புறமாச் சுட்டித் தேடித்தரேன்.

said...

செயகுமார் & உதயகுமார்

இதானே வேணாங்கறது. அதான் மடிக்கணினி இருக்கே அதுலெயே பாத்துக்கலாமுல்லே? காலுக்கு ஹீட்டர் வச்சுக்கிட்டுச்
சுகமா என்னோட கணினிலே பாக்கணுமுன்னா எப்படி?

said...

இளவஞ்சி,

நீங்கவேற. நாட்டு நடப்பையெல்லாம் இங்கிலிபீஸுலே பார்த்துக்கிட்டுத்தான் இருக்கார். த ஹிண்டு, ஹிந்துஸ்த்தான்
டைம்ஸ், சமாச்சார் இப்படி.

நாந்தான் அங்கெல்லாம் போகாம 'உண்மைச் செய்திகளை'த் தெரிஞ்சுக்க மட்டும் தினமலர், தினகரன், தினத்தந்தின்னு தினம்தினம்
மேயறது.

said...

ராகவன்,

நான் ஏற்கெனவே கொ.ப.செ.யாக இருக்கும் ப.ம.க.தானே நீங்க சொல்ற கட்சி? இல்லே தாய்க்கட்சியிலே இருந்து பிரிஞ்சாச்சா? :-)

வட்டத் தலைவர்ன்னா கேக்க நல்லாத்தான் இருக்கு. ஆனா கோபாலுக்கு ஆஸின்னா அங்கே இருக்கும் 'தல'ங்க
என்ன சொல்லுமோ? பேசாம பெட்டிகளை உடனே அனுப்பவும். இடம் ரெடி. புது பாத்ரூம் கட்டிக்கிட்டு இருக்கேன்.

said...

வாங்க எஸ்.கே.

கோபாலை நான் எங்கே வறுக்கறது? வறுபடாம இருந்தாப் போதாதா? :-)))

//ஒருநாள் இல்லாட்டி ஒருநாள், டிக்கட்டை வாங்கிக் கொடுத்துடப் போறார், பாருங்க!! :-)//

கிடைச்சால் நல்லதுதான். இன்னும் கொஞ்சம் ஷாப்பிங் பாக்கி இருக்கு:-))

said...

பெரு(சு)

பினாத்தலார் இப்படிச் சொல்றாரே தவிர,அக்காவுக்குத் தம்பியா நம்ம பக்கம்தான் இருப்பார்.
பார்க்கலாம், படத்துலே எதாவது வேசம் கொடுக்கறாரான்னு.

said...

இந்த மீடியா-வாட்ச் டீம் மாதிரி, நீங்க கூட, 'இன்றைய செய்திகள்'னு 'து-கோ' டீம் மூலமா வழங்கலாம்--- அட் லீஸ்ட், இந்த எலெக்க்ஷன் முடியற வரைக்குமாவது!

said...

எஸ்.கே,

இது சரிப்படாது. நம்ம 'டீம் மேட்' எப்பவும் டூர் பார்ட்டி(-:

ஆத்துலே ஒருகால்........

எப்பவாவது இப்படி மாட்னாத்தான் உண்டு.

said...

அக்கா, அக்கா, உங்க வீட்டுக்கு வந்து இறங்கி இருக்கற சூட்கேஸ் எல்லாம் வ.வா.சங்கத்துலேர்ந்து வந்துச்சு.. கூடவே அன்பளிப்பா ஒரு பூனக் குட்டியும் இருக்கும் பாருங்க.

மொதல்ல யானைதான் அனுப்பலாம்னு பார்த்தேன்.. ஆன கடைசி நேரத்துல கஸ்டம்ஸ்ல பிரச்சனை பண்ணிட்டாங்க..

நீங்க ஜெயிச்சி வந்ததுக்கு அப்புறம் தமிழக யானை மற்றும் பிராணிகள் நல்வாழ்வுத் துறைக்கு அமைச்சராப் போடலாம்னு தலைவர் சொல்லறாரு..

said...

பொன்ஸ்,

நன்றிம்மா. சமயம் பார்த்து தலைவருக்கு ஆப்பு வச்சுரும்மா. இதோ வந்துக்கிட்டே இருக்கேன்.:-)

said...

சரிதாங்கா.. ஆண்டிப்பட்டில ஜெயிச்சிட்டு, பிராணிகள் நல்வாழ்வுத்துறையா?.. முதல்வர் பதவியே குடுக்கலாமேன்னு, இன்னிக்குத் தான் தலகிட்ட சொல்லிகிட்டிருந்தேன்..

அதெல்லாம் நான் பாத்துக்கறேன்.. நீங்க சரி சொன்னதே போதும்..

said...

பமக கொ.ப.செ துளசி டீச்சர் வாழ்க
நியூசிலாந்துக்கே நியூசே வாழ்க
வவாச-வைத் துரத்த வந்த பெருமையே வாழ்க
பின்னூட்டக்கலையின் தாயே வாழ்க
உலகம் சுற்றும் வாலிபியே எழுக
கொள்கை முழக்கம் தருக!

மற்றவர்கள் வந்து மயக்கப் பார்ப்பார்கள். அவர்கள் வலையில் வீழ்ந்திடாத திமிங்கிலமே! இது திறமையைக் காட்ட வேண்டிய களம். நீயூசிலாந்து மக்களுக்கு வத்தக்கொழம்பு ஊற்ற வேண்டிய நேரம். எழுக! கடமையைத் தொடர்க!

said...

என்ன ராகவன்,

தேர்தல் கூட்டப் பேச்சை ரொம்பக் கேக்கறீங்களா?

இதோ எழுந்துட்டேன். கடமையைச் செய்ய என் கரம் துடிக்கிறது?
எங்கே அந்த வத்தக்குழம்பு?
( சீக்கிரம் நல்லா பேக் செய்து அனுப்பி வைக்கவும்.நம்ம வீட்டுலே
ஒரு வாரத்துக்கு சமைக்காம அதை வச்சே சமாளிச்சுருவேன்)

said...

பொன்ஸ்,
வத்தக் கொழம்பு வேணுமா?

said...

வத்தக் குழம்பா..
ஆகா சூப்பர்..

அப்படியே ரெண்டு சுட்ட அப்பளமும் அனுப்பினா... துளசி அக்கா பேரச் சொல்லி சாப்பிட்டுக்குவேன்.. :)

said...

பொன்ஸ்,

நான் சொன்னேன்னு நம்ம ராகவன்கிட்டே இருந்து வாங்கிக்குங்க, கொஞ்சம் வத்தக் கொழம்பை:-)

said...

ராகவன், என் அட்ரஸ் அனுப்பவா?? :)

said...

பொன்ஸ்,

சூட்கேசுக்குள்ள என்ன் இருந்ததுன்னு சொல்லவே இல்லையே ?))

said...

வாங்க ஜெயஸ்ரீ,

உங்களைத்தான் எப்படிப் பிடிக்கறதுன்னு யோசனையா இருந்துச்சு.

உங்கமெயில் ஐடியைத் தட்டி விடுங்க. உங்களுக்கும் ஒரு ஸூட்கேஸ் அனுப்புனாப் போச்சு:-)))))