இப்பத்தான் டிவி நடிகை வைஷ்ணவி தற்கொலைன்னு ஒரு நியூஸ் தினமலரில் பார்த்தேன்.
யாருக்காவது மேல்விவரம் தெரியுமா? இவுங்க எந்த வைஷ்ணவி?
யாராயிருக்குமுன்னு தெரியறவரை மண்டைக் குடைச்சல்தான்.
ஆனா, பாவமா இருக்கு.
ஏங்க இப்படி?
Tuesday, April 18, 2006
வைஷ்ணவி
Posted by துளசி கோபால் at 4/18/2006 02:50:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
31 comments:
http://www.dailythanthi.com/article.asp?NewsID=252632&disdate=4/18/2006&advt=1
Thanks arunmoli.
She used to compere the 'Kondaattam' in a cool & subtle manner. Also saw her act in some serials. My condolences.
இவர் 'இது ஒரு காதல் கதை', என்ற தொடரின் ஆரம்பத்தில் நடித்தவரா? அதில் பார்த்தது போல் ஞாபகம்.
துடுக்குத்தனமானப் பெண்ணாக, நன்றாக நடித்திருந்தார்.
சோகமான முடிவு... :(
தற்கொலை செய்றதுக்கு அசாத்திய துணிச்சல் வேண்டும். தற்கொலை செய்கிற அளவுக்கு தைரியம் உள்ளவங்கங்களுக்கு, வாழ்க்கையில் நிகழும் சாதாரண சிக்கல்களை எதிர் கொள்ளும் தைரியம் இல்லாமல் போனது ஏனோ?
எமோசன்ஸ் சில நேரங்களில் புத்தியை மழுங்கடித்து விடுகிறது.
வாழ்வில் அனைவருக்கும் எப்போதாவது ஒரு முறையாவது இது போன்ற எண்ணம் தோன்றுவதுண்டு. அதில் 99.99999% பேர் மீண்டு, பிழைத்து விடுகிறார்கள். சிலர் மாட்டிக் கொள்கிறார்கள்.
D the Dreamer, பாலா, ஸ்ரூசல்
ரொம்ப நன்றிங்க. இந்தப்பெயரில் எனக்கு ஒருத்தரைத் தெரியும். அதான் ரொம்ப ஷாக்காயிருச்சு.
இப்பப்பாருங்க இவுங்க, அவுங்க இல்லேன்னதும் மனசுலே ஒரு நிம்மதி வந்தாலும், என்னை நினைச்சே
எனக்கு ச்சீன்னு இருக்கு.( சாவுலேகூடப்பாருங்க தெரிஞ்ச, தெரியாத வித்தியாசம் வந்துருது)
ச்சின்னவயசுப் பொண்ணு, பாவங்க. ஏந்தான் இப்படிச் செஞ்சுக்கறாங்களோ? அந்தப் பெற்றோர்களை ஒரு விநாடி
நினைச்சுப் பாத்துருக்கலாமுல்லே. போனவங்களுக்கு விடுதலை. இனி இந்த நினைவோட வாழப்போற குடும்பத்துக்கு?
D the Dreamer
என்னங்க நீங்க இப்படிச் சொல்றீங்க.
குற்ற உணர்ச்சியாப் போயிருச்சுங்க. அதான் மன்னிப்பா எழுதிட்டேன்.
புரிஞ்சுக்கிட்டதுக்கு நன்றிங்க.
காலையில் ஒருவர் வந்து என்னிடம் வைஷ்ணவி தற்கொலை பற்றி ஏதாவது கேள்விப்பட்டாயா என்று விசாரித்தபோதுதான் தெரியவந்தது.
இருந்தும், சௌகார் ஜானகியின் பேத்தியா அல்லது அதே பெயர் கொண்ட வேறொரு நடிகையா என்பது தெரியவில்லை...
வெங்கடேஷ் வரதராஜன்,
ரியாத்
ஏன்தான் இந்த நடிகைகள் எல்லாம் தற்கொலை செய்றாங்கன்னு தெரியலை
பணம் மட்டுமே நிம்மதியைத் தந்துவிடாது என்பதற்கு இவர்களெல்லாம் ஒரு உதாரணங்கள்
பாரதீய மாடர்ன் ப்ரின்ஸ்,
என்னங்க பேரு இவ்வளோ நீளம்?
இவுங்க ச்சின்னப் பொண்ணுங்க. வயசு 22தான் ஆகுதாம். என் மக வயசு. என்ன துக்கம் பாருங்க அந்தப் பெத்தவங்களுக்கு.
நிலவு நண்பன்,
இந்த டிவி நடிகைகளுக்கெல்லாம் பணம் அவ்வளா இல்லீங்க. அன்னன்னைக்கு பட்டுவாடா செஞ்சுடறாங்களே தவிர தொகை என்னவோ ச்சின்னதுதான்.
மன தைரியம் வேணுங்க. எதையும் எதிர்த்து நிக்கற துணிவு இல்லென்னா இப்படித்தாங்க.
//ஏன்தான் இந்த நடிகைகள் எல்லாம் தற்கொலை செய்றாங்கன்னு தெரியலை// இவங்க தற்கொலைகள் தான் கலர்படத்தோட செய்தியாகுது, அதுனால உங்களுக்கு அப்படி தோணுது.. வயசு/பால்/தொழில் வித்தியாசம் இல்லாமத்தான் இந்த தற்கொலை பரவுது..
இல்லாமைங்கிறத விட.. பிடிவாதமும், கேட்டதெல்லாம் கிடைக்கும்ங்கிற மாதிரி செல்லமா வளர்க்கிறதும் தான் நிறையா இடத்துல இதுக்கு காரணமா இருக்கு..
பாவங்க.. இந்த பொண்ண அந்த கொண்டாட்டம் காமடி தொகுத்து வழங்குனதுலருந்து நிறைய சீரியல்ல பார்த்திருக்கேன்..
இந்த வயசுல..ச்சே.. இந்த பொண்ணுங்களுக்கு ஏந்தான் இந்த தற்கொலை நினைப்பு வருதோ தெரியலை.. சாவற வயசா அது..? கொடுமைங்க..
"dina malar" le parunga
தற்கொலை செய்யும் அளவு `தைரியம்' வரணும்னா எந்த அளவு மன அழுத்தம் இருந்திருக்கணும். ஜீவீ மாதிரி அறிவு ஜீவிங்களே அதிலிருந்து தப்ப முடியலையே.
இளம் பெண்களின் தற்கொலைகள் மனதுக்குள் நம நம என்ற உணர்வை ஏற்படுத்துவது தவிர்க்க முடியவில்லை.
ராசா, டிபிஆர் ஜோ & தாணு
என்னங்க செய்யறது? மனசு உறுதியா இருக்க வேணாமா? இப்பெல்லாம் குடும்பத்துலே புள்ளைங்க கம்மின்றதாலே
செல்லம் கொடுக்கத்தானே வேணும். அப்பா அம்மா அன்பைப் புரிஞ்சுக்கிட்டா இதுபோல முடிவு எடுக்காதுங்கதானே?
மனசுக்குக் கஷ்டமாப் போயிருதுங்க.
சிவஞானம்ஜி,
உங்க சுட்டிக்கு நன்றி. அருண்மொழி சொன்னவுடனே தந்தியிலே பார்த்தேங்க.
துளசிக்கா
சினிமா உலகத்துல தற்கொலை செஞ்சுக்கறவுங்க எல்லாம் ஏன் பெண்களாவே
இருககாங்க.(ஜீவி தவிர).
(திறமயான நடிகைகள் சில்க் ஸ்மிதா,விஜி மனசுக்குள்ள வந்து போறாங்க)
பெருசு
யோகன்,
நீங்க சொன்னது சரி. ஆனா இதுலே எதுக்கு குஷ்பூவை இழுத்தீங்க?
பத்திரிக்கைக்காரனும், அரசியல்வாதிங்களும் திரிச்சுமறிச்சு எழுதறதையும், செய்யறதையும்வச்சு ஒருத்தரை
விமரிசிக்கலாமா? எல்லாம் அவுங்க பொழைப்பைப் பாக்கறாங்கப்பா.
தான் சொன்னது சரின்ற உறுதி இருக்கணும். இல்லேன்னா இப்படி எதுக்கெடுத்தாலும் 'தற்கொலை'ன்னு ஒரு
நியதி வந்துறாதா?
இங்கே மத்த நாடுகளிலே நடக்குறதைப் பார்த்தா குஷ்பு சொன்னது( உண்மையில் அவுங்க சொன்னது,பத்திரிக்கையில் போட்டது இல்லை)
தப்பா சரியான்னு அவுங்கவுங்களே தீர்மானிக்கணும்.
பெரு(சு)
சினிமாதாரகைகள் வெளிச்சத்துலே இருக்காங்க. அதனாலேயும் மீடியாவாலேயும் இது சட்னு வெளியே வந்துருது.
ஆனா உலகத்துலே எத்தனைபேர் இப்படித் தவறான முடிவு எடுத்துடறாங்க அதெல்லாம் ஒரு வரிச் செய்திகளாவோ,இல்லே
கணக்கெடுப்பாவோ வரும். அவ்வளோதான்.
இது இன்னும் ஆண்கள் உலகம்தானேங்க. அதனாலே ஆண்களுக்கு மனோதிடம் கூடியிருக்கு. இங்கே எங்க ஊர்லே
ரெண்டு பள்ளிக்கூடப் பொண்ணுங்க, ஒரு பையன் எஸ் எம் எஸ் கொடுத்துத் தொந்திரவு செய்யறான்னு தற்கொலை
செஞ்சுகிச்சுங்க போன வாரம். இதை எங்கேபோய் சொல்றது?
வைஷ்ணவி ஒரு பிராமணப் பெண் என்று ஏதோ ஒரு பத்திரிக்கையில் படித்தேன்.
காதல் கத்தரிக்காய் என்று வாழ்க்கையைத் தொலைக்கிறார்கள் பாவம்.
ஏங்க திருப்பாச்சி,
//காதல் கத்தரிக்காய் என்று வாழ்க்கையைத் தொலைக்கிறார்கள் பாவம்//
காதல் தோல்வி? சரியாக்கூட இருக்கலாம்.
ஆனா பிராமணப்பெண்...? என்ன சொல்ல வர்றீங்க? இதுக்கும், தற்கொலைக்கும் என்ன சம்பந்தம்? ஹூம்...
வருத்ததிற்குறிய செய்தி :-(
Some Updates here
யோகன்,
எல்லாம் இந்தப் பத்திரிக்கைகள் செய்யறதுதானே? இந்த 'இண்டியா டுடே'யும்
கருத்துக் கேட்க ஏன் சினிமா நடிகைகளைக் கேக்கணும்?
ஒட்டுமொத்த தமிழ்ப்பெண்களுக்கும் இவுங்கதான் பிரதிநிதியா?
இத்தனைக்கும் அவுங்க தமிழ்சினிமாவுலே நடிகையே தவிர தமிழ்நாட்டுலே
பொறந்தவுங்ககூட இல்லையேப்பா.
பத்திரிக்கைக்கும் பரபரப்பும் கவர்ச்சியும் வேணும்,அதான் இப்படி.
எதுவுமே அவுங்கவுங்க அனுபவத்தைவச்சுச் சொல்றதுதானே உண்மை. அதேபோல்
அவுங்களும் சொல்லி இருக்கலாம்.
ஏற்கெனவே எல்லா இடத்திலும் இது பேசப்பட்டு இப்பத்தான் அடங்கி இருக்கு.
இதை நாம ஏன் கிளறணும்? விட்டுத்தள்ளுங்க.
ஆமாம் கோபி. மனவருத்தமாதான் இருக்கு.
வைஷூ தற்கொலை பண்ணிட்டாளா ? எல்லாம் சுத்த பொய்.! நேத்து கூட முகூர்த்தம்,மலர்கள் சீரில்ல பார்த்தேன்!
சும்மா எல்லாரும் வாய்க்கு வந்தத பேசாதீங்க பாவம் அந்த பொண்ணு
குஷ்பூவை வேற ஒருவிதத்துல உதாரணமா எடுத்துக்கலாம் அக்கா.. அவங்களுக்கும் சுந்தரோட கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு முன்னாடி எத்தனையோ கஷ்டங்கள் இருந்துது.. பிரபு அவங்களைத் திருமணமே பண்ணி, விட்டுட்டுப் போனதெல்லாம் தாண்டி அப்போ கூட தற்கொலை பண்ணிக்கணும்னு அவங்க நெனக்கலியே.
தேர்தல் சமயத்துல அவங்க எங்க, அ.தி. மு.கவுக்கு ஆதரவா பிரசாரம் பண்ண வந்துருவாங்களோன்னு கொடும்பாவி எரிக்கிறது எல்லாம் பண்ணாங்க.. அந்த சமயத்திலயும் தைரியமா எதிர்த்து நின்னதுக்காகவும் குஷ்புவ நாம ஒரு உதாரணமாவே காட்டலாம்..
வாழ்க்கைல சோதனைகள் வரும் தான்.. அதெல்லாம் தாண்டி எத்தனையோ நடிகைகள் நல்லா இல்லியா? காஞ்சனான்னு ஒரு நடிகை இருந்தாங்க.. அவங்க வீட்டைச் சேர்ந்தவங்களே அவங்களை நடிக்க வச்சு ஏமாத்தி சொத்தெல்லாம் எடுத்துகிட்டு இப்போ தனியா விட்டுட்டாங்கன்னு சமீபத்துல படிச்சேன். அந்த மாதிரி ஆளுங்களே உயிரோட, தனியா வாழ்க்கையை எதிர்கொண்டு வாழும்போது, வைஷ்ணவி மாதிரி சின்னப் பொண்ணுங்களுக்கு என்ன வந்துது?.. அன்பான அம்மா, அப்பா, சாப்பாடு எடுத்துகிட்டு ஓடி வந்த தங்கச்சி இவங்களை விட்டுட்டு போகறதுக்கு எப்படித் தான் மனசு வந்துச்சோ..
பாரதி,
பொண்ணுங்க மன உறுதியோடு இருக்கணும். அதுவும் இந்தமாதிரி படிச்சப்
பொண்களுக்கு எது சரி எது தப்புன்னு தெரியணுமா இல்லையா?
அந்த ஆளுக்கும் கல்யாணமாகிக் குழந்தைகள் இருக்குன்னு பேப்பரிலே படிச்சேன்.
பாவம் அந்த மனைவியும் புள்ளைங்களும்(-:
செயகுமார்,
இது லொள்ளூதானே? முந்தி ரெகார்ட் செஞ்சுவச்சதைத்தானே டிவியிலே
போடறாங்க. இல்லேன்னா 'லைவ்'நாடகமா?
பொன்ஸ்,
நன்றே சொன்னீர்கள். நன்றிம்மா.
Bharaniru_balraj,
இறந்தவர்கள் மேல் ஏதும் சொல்ல விருப்பமில்லை.
ஆகவே உங்க கமெண்ட்ஸை பப்ளிஷ் செய்யலை. மன்னிக்கவும்.
Thulasi,
you are absolutely right in highlighting this matters regarding women.It is always the girls who get affected.but why suicide?and she came across as a bubbly person in TV shows.manasu romba kashta pattathu.thanks for hearing me here.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மானு.
Post a Comment