Thursday, April 13, 2006

வடே வடே ....

பயண விவரம் பகுதி 18

வடே வடே ....


'சூடா இருக்கா?' முன்வரிசையிலே இருக்கறவர் கேக்கறார்.


என்ன வடைன்னு பார்த்தா வெறும் மெதுவடை. எனக்கு மசால்வடை தின்னணுமுன்னு ரொம்ப நாளா ஆசை. என்னதான்வீட்டுலே செஞ்சாலும் ஹோட்டல் வடையிலே இருக்கற 'க்ரஞ்சினஸ்' வர்றதில்லைங்க. இந்தப் பயணம் முழுசும்,வடையைப் பார்த்தாலோ, இல்லே மெனுக்கார்டுலே இருந்தாலோ விடாமக் கேக்கறதுதான். 'மெதுவடை'ன்னு வர்றபதில் அவ்வளவா சுவாரஸ்யப்படாது. டி. நகர்லே சாகித்யன்னு ஒரு ஹோட்டல்லே ஆதித்யன்னு ஒரு ரெஸ்டாரண்ட்இருக்கு. அங்கே ஒருக்கா காலை உணவு( பஃபே) சாப்புடப்போனப்ப மசால்வடைன்னு எழுதி ஒரு பாத்திரத்துக்கிட்டே இருந்துசுங்களா, ஆசையாப் போய் திறந்து பார்த்தா, அடச்சீ ! அங்கே இருந்த பேரர்கிட்டேகேட்டதுக்கு அசட்டுச் சிரிப்போடு அந்த அட்டையத் திருப்பி வச்சார், மெதுவடைன்னு எழுதியிருக்கு.


எங்க இவரும் சொல்றார், டீக்கடையிலேதான் கிடைக்கும். பயமில்லன்னா வாங்கிரலாமுன்னு. ஆசைதான் எல்லா துக்கத்துக்கும்காரணம். நமக்குக் கொடுப்பனை இருந்தா எப்பவாவது கிடைக்குமுன்னு இருந்துட்டேன்.


வடைக்கு அப்புறம் சாண்ட்விச், போண்டா, காஃபி & டீன்னு எதாவது ஒண்ணை வித்துக்கிட்டே இருக்காங்க.ஒரு டீ மட்டும் வாங்கிக் குடிச்சோம். உக்காந்த இடத்துலே இருந்தே உடம்பை இப்படி அப்படி அசைக்காம வாங்கித் தின்னுக்கிட்டே எப்படியும் 8.15க்குப் போய்ச் சேர்ந்துரலாம். நம்ம பயணம் ரயில்லே நடக்குதுன்னு உங்களுக்குத் தனியாச் சொல்லணுமாங்காட்டியும்? பகலாச்சுங்களே, அப்படியே வெளியே வேடிக்கைக் கொஞ்சம் பார்க்கலாம். பல இடங்கள் செம்மண் பூமியா வரட்சியாத்தான் இருக்கு.


பாருங்க, ஒரு நாள் பாழாப் போச்சு. காருக்காக காத்து நின்னப்ப, மச்சினர்கிட்டே வேலை செய்யற பையன் ஸ்கூட்டர்லேவர்றான். 'அம்பாஸிடரு'க்கு வரமுடியலையாம். எங்களை டாக்ஸி பிடிச்சு ஏத்திவிட வந்தானாம்! ஏன்? எங்களுக்குஒரு டாக்ஸி எடுத்துப் போகத்தெரியாதாமா? நல்ல கூத்து. 300 ரூபாய் கொடுத்து மச்சினர் வீடுபோய்ச் சேர்ந்தோம். நேரவிரயம். இப்பவே மணி 11.30 ஆயிருச்சு.


பேப்பரைப் புரட்டுனப்ப, நேத்து நடந்த டென்னிஸ் டோர்னமெண்ட் பார்க்க மாதவன் வந்திருந்ததா படத்தோடு செய்தி.ஆமாம், நானும் பார்த்தேன் ஏர்ப்போர்ட்லேன்னு சொன்னதும் அவுங்க கண்ணுலே ஒரு பளிச். போக முன்னூறு, வர முன்னூறு, காலைச்சாப்பாடு இருநூத்து அம்பதுன்னு எட்டுநூத்துஅம்பது ரூபாய் செலவு செஞ்சு மாதவனைப் பார்த்துருக்கு.


அதுக்குள்ளே பிருந்தாவனுக்கு டிக்கெட் எடுத்துக்கிட்டு வந்தாச்சு மச்சினர் பையன். இந்த 'செல்' விஷயத்தைச் சொல்லி கொஞ்சம் 'டாப் அப்' பண்ணிக்கலாமுன்னு இவர் போய் 300 ரூபாய்க்கு ஒரு கார்டு வாங்கியாந்தார்.அதைச் சுரண்டி அந்த நம்பரைப் போட்டா ஒண்ணும் ஆகலை. கடை ரொம்பப் பக்கத்துலேதான் இருக்குன்னு அங்கே போய்க் கேட்டா, 'அட, இது கர்நாடகாவுக்கு மாத்திரம் உள்ள ரீ சார்ஜ் கார்டு. உங்களுது மெட்ராஸ்லே ஆரம்பிச்ச அக்கவுண்ட்டா, அதுக்கு வேற ஒரு கார்டு இருக்கு'ன்னு பதில் வருது. சரி அதையாவது கொடுங்கன்னா, 'நீங்க இந்தக் கார்டைச் சுரண்டியாச்சு. இனிமே இதைத் திருப்பி எடுக்க முடியாதே'ன்னார். போனாப்போகட்டும், அந்தவேற கார்டு ஒண்ணு தாங்கன்னா அது தீர்ந்து போச்சாம். போட்டும் பீடை விட்டது. இந்த 'செல்' இருந்தும் தொல்லை,இல்லாமலும் தொல்லை.


ரெண்டரைக்கு ரயில் டாண்னு கிளம்பிருச்சு. ஆனா நம்ம நேரம் பாருங்க, மெதுவா ஒவ்வொரு ஸ்டேஷனா நின்னு நின்னுபோகுது. ஒரு வேளை இது பிருந்தாவன் பாஸஞ்சரோ? மனசு வந்து ஸ்பீடு எடுத்தப்ப நல்லா இருட்டிப்போச்சு. செண்ட்ரல்வந்து சேர்ந்தப்ப 8.55.


இறங்கி ஒரே ஓட்டமா ப்ரீபெய்டு டாக்ஸிக்குப் போய் டாக்ஸி புடிச்சு ஏறி உக்காந்தாச்சு. அப்ப ட்ரைவர் பையன்கிட்டேஒரு பெரியவர் வந்து சொல்றார், 'இவுங்கள டி.நகருலே கொண்டு விட்டுட்டு வா'னு. பையன் முகம் பேயறைஞ்சாப்புலேஆச்சு. டி.நகர் தெரியாதாம்! 'ஏம்ப்பா, எப்படி டாக்ஸி ஓட்ட பர்மிட் கிடைச்சுச்சு. லைசன்ஸாவது இருக்கா?'ன்னு கேட்டேன்.பையன் ஊருக்குப் புச்சாம்ப்பா. அப்புறம் அந்தப் பையனை இறங்கச் சொல்லிட்டுப் பெரியவரே வண்டியை எடுத்துட்டார்.


'செண்ட்ரல் ஜெயில்' பாலத்துமேலே போனப்ப தரிசனம் ஆச்சு. நடந்து போறவங்க எல்லாம் நம்மளை முந்திக்கிட்டுப்போறாங்க. மொதல்லே நம்ம பில்டிங் கீழே கடை அடைக்கறதுக்குள்ளே ஃபோனை ரீ சார்ஜ் செஞ்சுக்கணும். மவுண்ட்ரோடுலே போறோம். அஞ்சு இல்லே அதிகம் போச்சுனா ஒரு பத்து கிலோ மீட்டர் ஸ்பீடுலே போறோம். நமக்குன்னு அமையுது பாருங்க.


'இவ்வளவு வேகம்தான் இந்த வண்டி போகுங்களா?'கேட்டது எங்க இவர்.

'இல்லீங்க. நல்ல ஸ்பீடு எடுக்குங்க' பெரியவர்.

'எடுக்குமா? அப்ப எங்கெ?' ன்னு கேட்டப்புறம்தான் பெரியவருக்கு உரைக்குது, என்னமோ ஞாபகத்துலே மெதுவாப்போறோமுன்னு. அப்பன்னு பார்த்து ட்ராஃபிக்கும் அவ்வளவா இல்லே. வேகம் புடிச்சு போய்ச் சேர்ந்து, ரீசார்ஜ் செஞ்சுஅண்ணனைக் கூப்புட்டு வந்துட்டோமுன்னு சொல்லி, சாகித்யன் போய் சாப்புட்டு தூங்கச் சொல்ல பதினொண்ணரை.

ஒரு நாள் வேஸ்ட்டாப் போச்சேன்னு இவர்தான் புலம்பிக்கிட்டே இருந்தார்.


அடுத்தநாள் காலையிலே இருந்து 60 மணிநேரம் தூங்காம இருக்கணும். ஆனா என்னை அங்கே விட்டுட்டு இவர்மட்டும் திரும்பிப்போறதை நினைச்சுக்கிட்டு மனுஷன் டென்ஷனாகி ராத்திரி நல்லாவே தூங்கலையாம்.


ஆனா, நானு இவர் இல்லாதப்ப செஞ்சு முடிக்கவேண்டிய வேலைகள் நிறைய இருக்கறதாலேயும், தனிக்காட்டு ராணியாஷாப்பிங் அனுபவத்தில் திளைக்கப்போறதையும் நினைச்சுக்கிட்டே அருமையான தூங்கியிருக்கேன்:-)


மறுநாள், அண்ணன் வீட்டு விருந்து, முதல்நாளே செஞ்சிருக்க வேண்டிய வேலைகள், ச்சின்ன மச்சினர் வீட்டுக்குப்போய்'டாடா' சொல்றதுன்னு ஓட்டம். ஏர்ப்போர்ட் போக சாயந்திரம் ஏழரைக்குக் கால்டாக்ஸிக்கு சொல்லியிருக்கு. இன்னும் பொட்டிங்களை அடுக்கலை. இதுவரை வாங்குனதை இவரே எடுத்துக்கிட்டுப் போறேன்னு சொன்னாதாலே தைய்யக்கடைக்குப் போய் துணிகளை வாங்கிக்கணும். இந்த அழகுலே மவுண்ட் ரோடுலெ இருந்து தி. நகர் வர்றதுக்குடாக்ஸிக்காரர் தேர்ந்தெடுத்த வழி சவுத் போக் ரோடு. மணி 6 இஞ்ச் இஞ்சா நகருது காரு.


அடிச்சுப்புடிச்சு எல்லாம் செஞ்சு, இவரை ஏர்ப்போர்ட்டுக்கு அனுப்பிட்டுக் கவலையா உக்கார்ந்துருக்கேன். ஏன்?'பேக்கேஜ் ஓவர் வெயிட்ன்'னு எவ்வளோ தீட்டப்போறாங்களோ....?


பி.கு: அனைவருக்கும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து(க்)கள். இந்த வருசம் உலகம் பூரா லீவுதான், வெவ்வேறு காரணத்துக்கு.


படம்: சுந்தரி சில்க்ஸ் வாசலில் இருக்குற யானை.

33 comments:

said...

இனி தனிக்காட்டு ராஜ்ஜியமா? புகுந்து விளையாடுங்க.

said...

சேச்சி:
//ஆமாம், நானும் பார்த்தேன் ஏர்ப்போர்ட்லேன்னு சொன்னதும் அவுங்க கண்ணுலே ஒரு பளிச். போக முன்னூறு, வர முன்னூறு, காலைச்சாப்பாடு இருநூத்து அம்பதுன்னு எட்டுநூத்துஅம்பது ரூபாய் செலவு செஞ்சு மாதவனைப் பார்த்துருக்கு//

மாதவன் ஏர்போர்ட் போனாலே பிரச்சனை தானோ (அன்பே சிவம் ஞாபகம் இருக்கா சேச்சி)

சேச்சிக்கும் குடும்பத்தாருக்கும் எங்களது இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

said...

கொத்ஸ்,

வாங்க வாங்க. எப்படி இருக்கீங்க?

பூந்து விளையாடலாம்தான். ஆனா இந்த 'மனசாட்சி' பேஜார் பண்ணிடுச்சுங்க. கொஞ்சமாத்தான் ஆடுனேன், ஹூம்...

said...

அட, ஆமாம். இதை மறந்துட்டேன் பாருங்க டி ராஜ்.
குழப்பங்களுக்குக் காரணம் தெரிஞ்சுபோச்சு:-)

ஹேப்பி விஷு!

said...

சின்னதா இருந்தாலும் யானை தான்கா டாப் :)

said...

பொன்ஸ்,

யானையை மிஞ்ச முடியுமா?

நம்ம வீட்டுலே ஒரு பெரிய கலெக்ஷன் இருக்கு. ஒரு நாள் அவுங்களையெல்லாம் ஒண்ணா சேர்த்துப் படமெடுக்கணும்.

said...

துளசிக்கா

புது வருஷத்துக்கு வடை பாயாசம் உண்டா.

கோவை அன்னபூர்ணா-ல இட்லி-வடை-சாம்பார் சாப்பிட்டதுண்டா

said...

பெரு(சு)

நீங்க புது(சு)ங்களா? வாங்க, வாங்க.
கோவை அன்னபூரணாவுலே அந்த ஃபேமிலி ரோஸ்ட் சாப்புட்டு இருக்கேன்.

நாளைக்குப் பகல் ஒரு விருந்துக்குப் போறேன். இன்னைக்கு நம்ம பஞ்சாப் மாநிலக்காரங்களுக்கு வருசப்பிறப்பு.
நாளைக்கு லீவுநாள் ( குட் ஃப்ரைடே) என்றதாலே கொண்டாட்டம் நாளைக்கு வச்சுருக்காங்க. நமக்கும் பண்டிகையாச்சே.
அதை வீட்டுலே எளிமையாக் கொண்டாடிட்டு, அங்கே போய் நீங்க சொன்னதை, மைனஸ் வடை(!) சாப்புடவேண்டியதுதான்.

said...

ஆகா ஒலகம் பூரா லீவா.........எங்களுக்கு இல்லையே...எங்களுக்கு இல்லையே.........ஏற்கனவே ராஜ்குமாருக்காக இன்னைக்கு பாதுகாப்பு லீவு. நாளைக்கு......ஓஓஓஓஓஓஓஓஓஓ பேசாம லீவு எடுக்கலாமா....வேலையிருக்கே..........

மசால்வடையோட மொறுமொறுப்புக் காரணம் அத அரைக்கிறதுல இருக்கு. ரொம்ப மையவும் இருக்கக் கூடாது. அதே மாதிரி மாவுல கொஞ்சம் நல்லெண்ணெய் ஊத்திப் பெணஞ்சாலும் மொறுமொறுன்னு வரும்னு சொல்வாங்க. நாஞ் செஞ்சி பாத்ததில்லை. வடைன்னா...விருதுநகர் ஸ்டேஷன்ல விக்கிற வடைதான் வடை. மத்ததெதுக்கெல்லாம் தடை.

said...

ராகவன்,

'குட் ஃப்ரைடே'வுக்கு அரசாங்க விடுமுறை இல்லையா? ஏன்?

இங்கே எங்களுக்கு நாலுநாள் லீவு. திங்கள் கிழமை ஈஸ்ட்டர் மண்டே.

வடை..... என் மசால்வடை (-:

said...

Thulasi, will make masaal vadai tomorrow. Vaasanai ange vanthaal sollavum.Guindy Hotel Rajbhavan,. Keerai masaal vadai pramaatham aaga irukkum.so remember it the next time. seekkiram varavum.Yaanai arasaatchi vaazhga!! yezhisai.

said...

manu,இந்த டிப்ஸ் எல்லாம் முன்னாடியே கொடுத்திருந்தா ஒரு வெட்டு வெட்டி இருக்கலாமே(-:

சரி.அடுத்தமுறை வந்துரலாம்.

said...

// இந்த 'செல்' இருந்தும் தொல்லை,இல்லாமலும் தொல்லை.//
Thulsi Akka,
very correct. pls read

http://maraboorjc.blogspot.com/2005/11/1.html

http://maraboorjc.blogspot.com/2005/12/2.html

http://maraboorjc.blogspot.com/2005/12/3.html

http://maraboorjc.blogspot.com/2005/12/4.html

romba nezhamna mannichukkunga!

said...

Hotel மாதிரி வீட்டிலே மசால் வடை முறுமுறுவென வரக் கீழ்க்கண்ட யோசனையை முடிந்தால் பின்பற்றவும்.
துவரம்பருப்பு- 1 ஆழாக்கு.
கடலைப்பருப்பு-1/2 ஆழாக்கு
உளுத்தம்பருப்பு-1 கரண்டி(2 டேபிள்
ஸ்பூன்)
1மணி நேரம் ஊற வைத்துக் கொற கொறவென்று உங்களுக்குத் தேவையான உப்பு, மிளகாய்(சிவப்பு), பெருங்காயத்தூள் சேர்த்து அரைக்கவும். பாசிப்பருப்பு ஒரு கரண்டி எடுத்துக்கொண்டு நன்றாகக் கழுவி அரைத்ததில் கலக்கவும்.ஒரு விதை நீக்கிய ப.மிளகாய், தோல் நீக்கிய இஞ்சி, கருகப்பிலை, கொத்துமல்லி சேர்த்துத் தேவையானால் பொடிப்பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும்.வடை செய்து சாப்பிட்டுப் பார்த்து விட்டுச் சொல்லுங்கள். என் அனுபவத்தில் துவரம்பருப்பு கூடச் சேர்த்தால் அடை, வடை போன்றவை முறுமுறு வென்று இருக்கும். எங்கள் மதுரைப் பக்கம் பண்டிகைக்கு இந்த முப்பருப்பு வடை தான் செய்வோம்.

said...

அப்புறம் தேன்கூடு பார்த்துதான் 2 நாள் ஒப்பேற்றினேன்.

said...

மசால் வடை மொறுமொறுவென மந்திராலயம் ரோடு ஸ்டேஷனில் கிடக்கும். அங்கே இட்லி, வடை, Coffee போன்ற எல்லாமும் நன்றாக இருக்கும். அடுத்த முறை முயற்சி செய்யவும்.

said...

துளசி
புத்தாண்டு வாழ்த்துகள். இங்கயும் ஸ்கூல் மட்டும்தான் லீவு. ஆபீஸ் உண்டே(வேலை உண்டு).
ராகவன் இப்ப பின்னூட்டத்தில எல்லாம் ஒரே கவிமயமாயிட்டு வருது.
பருப்பௌ அரைக்கும்போது மொறமொறன்னு அரச்சு, வெங்காயம் தூவி, நல்லெண்ணெய் சேர்த்து செஞ்சா நல்லா வரும்:) இப்பெல்லாம் வீட்டுல வடையும் கிடையாது அடையும் கிடையாது.

said...

"ஒருவிதை நீக்கிய ப.மிளகாய்"


இதமாதிரி வடை சுடுறத கேள்வி பட்டதுல்ல இன்னும் கொஞ்சம் விளக்கமா சொல்ரீங்களா கீதா சாம்பசிவம்.............

said...

அக்கா,
நீங்க வேற லீவு லீவுன்னு செல்லி வேறுப்பேத்தாதிங்க.. உலகம் பூரா லீவா இருந்தும் நமக்கு இல்லையே.

said...

// ராகவன்,

'குட் ஃப்ரைடே'வுக்கு அரசாங்க விடுமுறை இல்லையா? ஏன்? //

அந்த வயித்தெரிச்சலை ஏன் கேக்குறீங்க டீச்சர்.....எங்களுக்குச் செவ்வாக் கெழம எதுக்கோ லீவு விட்டாங்க. வியாழக் கெழம ராஜ்குமார் லீவு வாங்கிக் கொடுத்தாரு. ஆனா அதுக்கு அடுத்த சனிக்கிழமை ஆபீசுக்கு வரனும். இன்னைக்கு லீவு இல்லை. இருந்தும் என்ன...வீட்டுல இருந்து வேல செய்ய வேண்டியிருக்கும்.

// இங்கே எங்களுக்கு நாலுநாள் லீவு. திங்கள் கிழமை ஈஸ்ட்டர் மண்டே. //

நாலு நாள் லீவா! ம்ம்ம்ம்....நடக்கட்டும் நடக்கட்டும்...நான் இந்த வாரக்கடைசிய கொண்டாட்டமாக் கொணாடாடுறேன். (சரி...எப்படிக் கொண்டாடுறது....)

said...

மரபூராரே,

நாளைக்குத்தான் நேரம் இருக்கும் உங்க லிங்கு எல்லாம் படிக்க.

படிச்சுட்டு மயிலை அனுப்பறேன்.

said...

கீதா,

மும்மொழிஞ்சதுக்கு நன்றி.

அது என்ன எங்க மதுரைப்பக்கம்?
எந்த ஊருன்னு கரீட்டாச் சொல்லுங்க.

வெளியே சாப்புடப் பயந்துக்கிட்டுத்தான்..... இப்படி.

தீ போல சூடா இருந்தாச் சாப்புடலாம். ஆறிப்போனது 'பயம்'!

said...

பத்மா,

வடைக்குத் தடை(தடா?) சரி. அடைக்கு ஏன்? எல்லாப் பருப்பும் சேர்த்து நல்லாத்தானே இருக்கும்.
சக்தி நிறைஞ்சதாச்சேம்மா.
கூட அந்த அவியல்தான் வேண்டாத வேலை. ரெண்டும் சேர்ந்தா 'ஹெவி' ஆயிரும்.

யாரு இந்த காம்பினேஷனை ஆரம்பிச்சது?

said...

சிங். செயகுமார்,

பச்சை மிளகாயிலிருந்து ஒரே ஒரு விதையை எடுத்துப் போட்டுட்டு மீதியை வெட்டி வடைமாவுலே போடணும்.

இப்படியெல்லாம் குறுக்குக் கேள்விகேட்டா கீதாவுக்கு சமையலெ மறந்துரும், ஆமா.:-)

said...

சந்தோஷ் & ராகவன்,

ஏன்னப்பா இப்படிச் சொல்லிட்டீங்க. சரி கவலையை விடுங்க. உங்களுக்கு ஆறுதல் சொல்லியே இதோ ஒரு நாள் லீவு போயிருச்சு. இன்னும் மூணூ நாளை எப்படியாவது கஷ்டத்தோட தள்ளிவுடட்டுமா?

said...

விதை நீக்கிய ஒரு பச்சை மிளகாய் என்பது அந்த மாதிரி ஒரு விதை நீக்கிய என்று வந்திருக்கிறடஹு. நம்ம ஆளுங்க கண்ணிலே விளக்கெண்ணை ஊத்திக்கிட்டுத்தான் பாஆஆஆஆர்க்க்கறாறாறாங்க. மதுரை என்றால் மதுரையே தான். பக்கத்திலே மேல்மங்கலம் சொந்த கிராமம் என்றாலும் அங்கே அப்போ அப்போ போய் வந்ததுதான். முழுக்க முழுக்க மதுரை தான்நம்ப சொர்க்கம்.

said...

கீதா,
நமக்கும் மதுரைப் பக்கம்தான் மாமியார் வீடு. போடி!( நாயகனூர்).
நம்ம ஆளுங்க லேசுப்பட்டவங்கல்லெ. கண்ணுலே 'ஆலிவ்' எண்ணெய் ஊத்திக்கிட்டுப் படிப்பங்க:-)))

said...

dear thulasi, puthaandu nal vaazhthukkal. in our house adai goes with pachai milagai chutney, vennai+vellam.. aviyal yellaam later addition endru ninaikkiren. sorry Thulasi. blogging is a very new subject and experience to my near 60 age. so will follow everybody's site and try to do my best.If I had known you are coming would have loved to have you and mr.gopal in our house.Still here goes ,, our invitations to you and family. yezhisai

said...

துளசிக்கா. இந்தப் பதிவை முன்னாலேயே பாத்திருந்தா புத்தாண்டுக்கு வீட்டுல உங்கப் பேரச் சொல்லி மசால்வடை சுட்டுச் சாப்புட்டிருக்கலாம். இப்ப லேட்டாச்சு. சனிக்கிழமையோ ஞாயிறன்றோ செய்யணும். எங்க வீட்டுல பருப்பை ஊறப்போட்டு அரைச்சுக் குடுக்கிறது வீட்டம்மா; வடை சுடறது நம்ம வேலை. மறு நாள் வரை வடை மொறு மொறுன்னு இருக்கும். :-)

said...

manu,

என்னங்க நீங்க மனு வா இல்லே மானுவா?

வலைஞர் உலகத்துலே புது, பழசுன்னெல்லாம் கிடையாதுங்க. வந்துட்டீங்கல்லே அதாங்க முக்கியம்.
வயசென்ன வயசு? மனசுக்கு இருக்கற வயசுதாங்க முக்கியம். உடம்பு... அது கெடக்குது களுதை,
விட்டுத்தள்ளுங்க.( இப்படிச் சொல்லிக்கிட்டாத்தாங்க இந்த 50+க்கு ஒரு தெம்பு வருது!)

'பொருணைக்கரையிலே' இங்கிலிபீஸு ப்ளொக் பார்த்தேங்க. இங்கே வீட்டைவிட்டு வெளியே காலுகுத்தினா
இங்கிலிபீஸுதானுங்க. அதாலே தமிழை மட்டும் தேடிப்பிடிச்சுப் படிக்கறதுன்னு ஆயிருச்சு. இல்லாததுதானே
அருமை. என்ன சொல்றீங்க?

அடைக்குத் தொட்டுக்கற விஷயத்துலே நான் ரொம்பச் சுத்தமுங்க. மொருமொருன்னு செஞ்சு தொட்டுக்க
ஒண்ணுமே இல்லாமத் தின்னுருவேன். வீட்டுலே இவருக்குத்தான் சட்டினி, இல்லேன்னா சாம்பார். அதுவும்
இல்லேன்னா பழைய குழம்பு எதாச்சும் ஃப்ரிஜ்ஜுலே இருக்கே அதுங்க.

பேசாம ஒரு தமிழ் ப்ளொக் தொடங்கிருங்க.அப்புறம் பாருங்க, நீங்க எங்கியோ போயிருவீங்க.

அடுத்தமுறை வர்றப்ப உங்களைக் கட்டாயம் சந்திக்கணுங்க.

said...

குமரன்,

அந்த மொறுமொறு ரகசியம் என்னவோ? கோபாலுக்காச்சும் சொல்லிக் குடுங்களேன்.
இனிமே எல்லாப் பண்டிகைகளிலும் மசால்வடை மட்டும்தானே? வடைமாலைக்கும் இனிமே
அதுதான்.

வீட்டம்மாகிட்டே கேட்டு ஒரு ரெஸிபியைப் போடுங்களேன். அந்த ஆட்டல் ரகசியம்?

said...

maanu endre vaithu kollalaam. thamizh arambikkalaam.vaazhthukkalakku thanks. ungal arumaiyaan anbukkum nanRi.

said...

மானு,
நன்றின்னு சொல்லிட்டுப் போய்க்கிட்டே இருக்கக்கூடாது.
அடிக்கடி 'வீட்டுப் பக்கம்' வந்து போகணும் ஆமா. சொல்லிட்டேன்.