வலைஞர்களே,
புத்தாண்டுக் கொண்டாட்டம் முடிஞ்சதா? புதுப் படம் ரிலீஸ்க்குப் போய் வந்தாச்சா? இன்னும் என்னென்ன விதமாக்கொண்டாடுனீங்க?
உங்களுக்குத்தான் தெரியுமே, ஊருக்கு முன்னாலே எல்லாப் பண்டிகையும் கொண்டாடுற ஆள் நானுன்னு. இருக்கற தேசம் அப்படிங்க!
இன்னைக்குப் புத்தாண்டு நமக்கு மட்டுமில்ல, நம்ம கேரள அன்பர்களுக்கும்தான்றது உங்களுக்குத் தெரியும்தானே?
பஞ்சாப் மானில சகோதரகளுக்கும் நேத்துதான் புது வருஷம் வந்துச்சுங்க. அதுக்குப் பேர் வைஷாகி. இன்னிக்குத்தான்அவுங்களும் அதைக் கொண்டாடுனாங்க. இப்பத்தான் அங்கே போயிட்டு வந்தேன்....
வழக்கத்தைவிட இந்த வருஷம் ரொம்ப நல்லா அமைஞ்சு போச்சு. காரணம்?
சாப்பாடுன்னு அங்கே யாருங்க குரல் விடுறது?
ரெண்டு ப்ரொஃபஷனல் பாடகர்ங்க. ஆக்லாந்துலே இருந்து வந்திருந்தாங்க. என்னா பாட்டுங்கறீங்க? அருமைங்க.பக்க வாத்தியம் ஆர்மோனியம் & தப்லாதாங்க. பாடிக்கிட்டே அருமையா வாசிச்சாங்க. புது அனுபவமா இருந்துச்சு.(அங்கங்கே இந்துமதம், தமிழ்ப்புத்தாண்டு இன்னைக்குக் கொண்டாடுறமே, அது உண்மையான தமிழ்ப்புத்தாண்டு இல்லைன்றவிவாதங்கள் நடந்துக்கிட்டு இருக்கு. அதைப் பத்தி ஒரு பதிவு விலாவறியாப் போடணும். ஆனா, இந்த சீக்கியர்களின் மதம் இருக்கு பாருங்க, அதுலெ இருக்கறதைப் படிச்சா ஏதோ வெளிச்சம் வர்றமாதிரி இருக்குங்க. சரி அதெல்லாம்அப்புறம்.)
இந்த சந்தோஷத்தை உங்ககிட்டே சொல்லிக்கலாமுன்னுதான் இந்தப் பதிவு.
ஆங்... இன்னும் ஒண்ணு சொல்லவிட்டுப்போச்சுங்க. சிஃபின்னு ஒரு தளம் இருக்குல்லே. அவுங்களோட தமிழ்ப் பதிப்புலே புத்தாண்டு மலர் வெளியிட்டுஇருக்காங்க. அதுலெ நம்ம கட்டுரை ரெண்டு வந்துருக்குங்க. இங்கேயும், இங்கேயும்.
முடிஞ்சாப் பாருங்க.
இன்னொருக்கா எல்லோருக்கும் வாழ்த்து சொல்லிக்கறேன்.நல்லா இருங்க.
Friday, April 14, 2006
இன்னைக்குப் புத்தாண்டு
Posted by துளசி கோபால் at 4/14/2006 04:53:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
14 comments:
இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள் துளசி அக்கா.
puthandu vazhthukkal
செல்வன்,
உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்து(க்)கள்.
நல்லா இருங்க.
புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா. உங்க கட்டுரைகள் படிக்க முடியலை :( சிஃபி தமிழ் ஏதோ புது எழுத்துரு.. படிக்க முடியவில்லை.. அவங்க எழுத்துரு இன்ஸ்டால் பண்ணியும் படிக்க முடியவில்லை :(.. ஆபீஸுக்குப் போய்த் தான் முயற்சி பண்ணனும்: (
சிவஞானம்ஜி,
உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்து(க்)கள்
ஆர்த்தி,
உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்து(க்)கள்
பொன்ஸ்,
உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்து(க்)கள்
என்ன, படிக்கமுடியலையா? பொன்னான தருணம் போயிருச்சா? :-)
கவலையை விடுங்க. அதுக்கு உங்க பார்வையில் பட நேரம் வரலை.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்துக்கள்.
&
HAPPY EASTER!
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!! ஆண்டை எங்கிருந்து ஆரம்பித்தாலும் 365 நாள் ஆனால் வயது ஒன்று ஏறும் தானே !:)
வாங்க கெஜே!
உங்களுக்கும் இனிய புத்தாண்டு & ஈஸ்ட்டர் வாழ்த்து(க்)கள்.
முட்டை தின்னீங்களா? ஈஸ்ட்டர் எக்:-)
மணியன்,
பழைய பாட்டு ஒண்ணு நினைவுக்குவருதே.
'ஆண்டொன்று போனால் வயதொன்று போகும் அதற்கும் முன்னாலே வா வா வா....'
இனிய புத்தாண்டு வாழ்த்து(க்)கள்.
உங்களுக்கும் என்னுடைய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ஏங்க உங்க கட்டுரைகள் வேறு தளங்களில் வர்றது ஒன்னும் புதுசு இல்லையே. நீங்க யாரு.. துளசிங்க..
உங்க திறமைய நீங்களே அடிக்கடி மறந்துடறீங்க..
வாழ்த்துக்கள்.
இனிய தமிழ்ப் புத்தாண்டுகள் டீச்சர். என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.
இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்
டிபிஆர்ஜோ, ராகவன் & நிலவு நண்பன்
உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
சும்மா 3 நாள் கழிச்சுச் சொல்றேன். அது பரவாயில்லை.
இன்னும் 362 நாள் இருக்கே வருசம் முடிய:-)
\
டிபிஆர்ஜோ,
ஹேப்பி ஈஸ்ட்டர்.
Post a Comment