Monday, April 17, 2006

சார், போஸ்ட்.

பயண விவரம் பகுதி 19

கடலைமாவு 1 கப்
அரிசிமாவு அரைக் கப்
வெங்காயம் அரைக் கப்( நறுக்கியது)
பச்சை மிளகாய் 3 பொடியா அரிஞ்சது
.தேங்காய் கால் கப் ( பல்லுப் பல்லாய் நறுக்குனது)
உப்பு உங்கள் ருசிக்கேத்தபடி.

எல்லாத்தையும் ஒண்ணாக் கலந்து இட்டிலிமாவு பதத்துக்குக் கெட்டியா கரைச்சு வச்சுகுங்க.அப்புறம், கொஞ்ச நேரம் கழிச்சுச் சொல்றேன் என்ன செய்யலாமுன்னு.


'ஆதத் ஸே மஜ்பூர்' னு சொல்றது எவ்வளோ உண்மை. மனுஷன் பழக்கத்தின் அடிமைதான். ஒவ்வொருத்தருக்குஒவ்வொரு பழக்கம். எனக்கு, சனிக்கிழமையன்னிக்குக் கட்டாயம் கோவிலுக்குப் போகணும். ரொம்பப் பக்கத்துலே மூணு நிமிஷ நடையிலே இருக்கு கோவில். ஆனா அங்கே போகப் பிடிக்கலை. மத்த நாட்கள்லே பரவாயில்லை. சனி மட்டும் அங்கே போகவேகூடாது.


யோசிச்சுப் பார்த்தப்ப இங்கே, சவுத் உஸ்மான் ரோடுலே சிவாவிஷ்ணு கோயில் இருக்கே, அங்கே போகலாமுன்னு நினைச்சு அங்கே போனேன்.மஹாவிஷ்ணு சன்னதியில் எண்ணி நாலுபேர். அதுலே ரெண்டு பேர் பட்டர்கள். மற்ற ரெண்டுபேர் சேவார்த்திகள்.கொஞ்சம் வயதான தம்பதிகள். ஏதோ அபிஷேகம் செய்யன்னு எல்லாச் சாமான்களோட வந்து சன்னிதிக்கு முன்னாலே உக்கார்ந்திருக்காங்க. நான் கொண்டுபோன துளசியை வாங்கி அங்கே ஒரு மேசையிலே இருக்கற பூக்களோடு வச்சுட்டு,'இப்ப அபிஷேகம் முடிஞ்சு அலங்காரம் பண்ணும்போது போடறேன்'னு இதமாச் சொல்றார் பட்டர். இது!!!!


'ஆமாமாம், இவளுக்குக் கூட்டமெ இருக்கக்கூடாதுன்னு அலட்டிக்கறா'னு யாரும் சொல்லிறாதீங்க. இந்தியா மாதிரிஒரு நாட்டுலே கூட்டத்தைப் பாக்கலைன்னாத்தான் பயம் . அங்கே வந்துட்டுக் கூட்டம் கூடாதுன்னு சொல்வேனா?கூட்டம் இருந்தாலுமே, மக்கள் மனசுலெ, மனுஷனை மனுஷனா மதிக்கணுமுன்ற நினைப்பு இருக்கணுமுல்லே?அதிலேயும் கோயில்களிலே, சாமி சிலையைத் தொட்டு அலங்காரம் பண்ணி பூஜை செய்யரவங்க இன்னும் எவ்வளோதன்மையா நடந்துக்கணும்? மனுஷனே 'கஷ்டம் தாங்காம எதோ மனக்குறையோடுதான்' கோவிலுக்குப் போறான்.நொந்து இருக்கறவனுக்குச் சாமியைப் பார்த்தா ஒரு மனோதிடம் வரும், நம்ம குறை தீர்ந்துருமுன்னு.


'அட, நீ ஒண்ணும் மனுஷனைத் தலையிலே தூக்கிக் கொண்டாட வேணாம்ப்பா, அலட்சியம் காமிக்காம இருக்கலாமுல்லே?மூஞ்சைச் சுள்ளுன்னு வச்சுக்கிட்டு ஏனோதானோன்னு சாமிக்கு நெய்த்தீபம் காமிக்கறது நல்லாவா இருக்கு?காசைப் பார்த்த உடனே கரிசனம் காமிக்கறே? அப்ப உனக்கு இன்முகம் காட்டவும் வரும்?'ம்ம்ம்ம்ம்ம்?



அபிஷேகம் முடிஞ்சு, திரை போட்டு அலங்காரம் முடிச்சு, இதோ ஜிலுஜிலுன்னு ஜொலிக்கறார் பெரும் ஆள். அதான்பெருமாள். தீபாராதனை காமிச்சு, அப்புறம் பக்கத்துப் போர்ஷனிலே இருக்கற மனைவிக்கும் தீபாராதனை ஆச்சு. மனசுக்கும்நிம்மதியா இருந்துச்சு. ஆனா தொண்டைதான் ஒரே வலி. புகை, மாசுன்னு உள்ளெபோய் கொஞ்சம் கஷ்டப்படுத்திக்கிட்டு இருக்கு.பேசாம ரெண்டு நாள் ரெஸ்ட் எடுக்கணுமுன்னு தீர்மானிச்சு அப்படியே ஆச்சு. ரெஸ்ட்டுன்னா என்ன படுத்த படுக்கையா?கொஞ்சம் கடைகண்ணி, நண்பர்களோடு பேச்சுன்னு போச்சு. ஆங்... சொல்ல மறந்துட்டேனே. ஃபோன் லைன் வேணுமுன்னுகேட்டிருந்தது வந்துருச்சு. ஆனா தமிழ்மணம் பார்க்கமுடியாம 'லேப்டாப்' ஊருக்குப் போயாச்சு(-:கல் இருந்தா நாயைக் காணொம், நாய் இருந்தாக் கல்லைக் காணொம்.ஆமாம், இந்தப் பழமொழி எப்படி வந்துச்சு?எதுக்குங்க நாயை அப்படி அடிக்கணும்? பொல்லாத ஆளுங்க போல.


நாங்க( நான், மது, அருணா) லேடீஸ் எல்லாம் சேந்து ஒருநாள் லேடீஸ் டே அவுட் போகணுமுன்னு ப்ளான்வச்சிருந்தோம். என்னைக்குன்னு முடிவாகலை. அதுக்குள்ளே, திங்கக்கிழமை மத்தியானம் அவுங்க வீட்டுலே சாப்புடவரணுமுன்னு மது கூப்புட்டிருந்தாங்க. பக்கத்துலேதான் இருக்காங்க. போய்ச் சேர்ந்தேன். அதே பில்டிங்லே மதுவோட ஊர்க்காரங்க ஒரு தோழியும், விஜயவாடாவைச் சேர்ந்த இன்னொரு தோழியும் இருக்காங்க. இந்தமூணுபேரும் ஜமா சேர்ந்தாங்கன்னா அவ்வளோதான். இப்போ நான் வேற! நல்லா அரட்டை அடிச்சோம். அவுங்கெல்லாம் வாய்பாட்டுக்கு வாயும், கைபாட்டுக்குக் கையுமா இருக்காங்க. உடுப்புகளிலே எம்ப்ராய்டரி நல்லாப் போடுறாங்கப்பா.


பருப்புருண்டைக் குழம்பு, பீன்ஸ் பொரியல், அது இதுன்னு ஜமாய்ச்சுட்டாங்க. நானும் ஜஸ்டிஃபை பண்ண வேண்டியதாப்போச்சு. கொஞ்சநேரம் தமிழ்மணம் அங்கே பார்த்தேன். மதுவோட மூணு புத்தகம் இதுவரை வெளிவந்திருக்கு. கவிதைத் தொகுப்புகள். கொஞ்சம்கூட அலட்டலே இல்லாம இதமாப் பேசறாங்க. அடுத்து அவுங்க எழுதப்போறவிஷயத்தைப் பத்திக் கொஞ்சம் சீரியஸ்ஸா விவாதிச்சோம். சமஸ்கிருதம் ரொம்ப நல்லாத் தெரிஞ்சவுங்க. நான்ரெண்டே வருசம் படிச்சேந்தான். அதுலே வர்ற 'அம், அஹ'வைத்தவிர எல்லாம் மறந்துட்டேன்(-:


சரி, 'வந்த வேலை'தான் ஆச்சே, கிளம்பலாமுன்னா எங்கே விட்டாங்க? காஃபி போட்டுக் கொடுத்தாங்க. எனக்குவாழ்க்கையே வெறுத்துப்போச்சு:-) அவுங்களுக்குக் காஃபி, டீ பழக்கமெல்லாம் இல்லையாம். ஆனா நானு? ஒருகாலத்துலே காஃபியிலேயே குடியிருந்தவளாச்சே! சரிப்பா. குடிக்கிற ( அட, இந்த காஃபி & டீ) பழக்கம் இல்லைன்னாஅதைப் போடவாவது கத்துக்கிட்டு இருக்கக்கூடாதா? நறநறநற....... பார்க்கலாம், அடுத்தமுறை நான் அங்கே போறதுக்குள்ளேஅருமையாக் கத்துக்குவாங்கன்னு நினைக்கிறேன். மது, கத்துக்குவீங்கதானே? கவிதை எழுதற கை காஃபி போடக்கூடாதா?


அடுத்த ஐட்டமா தட்டுலே வருது தபால்!


ஆங்.... இதுதான் சரியான இடம்,செய்முறையைச் சொல்ல:-))


வடைசட்டியிலே எண்ணெயைக் காயவச்சு, அது நல்லா சூடானப்புறம், கரைச்சு வச்சுருக்கற மாவைக் கரண்டியாலெ மோந்து, ஊத்தணும். கொஞ்சநேரம் வேகட்டும். திருப்பிவிட்டு ரெண்டு பக்கமும் வெந்ததும் ஜல்லிக்கரண்டியாலே எடுத்துரணும்.இதுக்குப்பேர் 'தபால் வடை'யாம். மொதல்லே இதுக்கும் வடைக்குமே சம்பந்தம் இல்லை. இதுலே தபாலுக்கும் இதுக்கும்என்ன சம்பந்தம்? எந்த ஊருலெ இது ஃபேமஸ்ன்னு சொல்லிரட்டா? 'ராஜ பாளையமாம்'! போச்சுரா....


'சார் போஸ்ட்'ன்னு சொல்லிக்கிட்டு பரிமாறணுமா? இல்லே மொத மொதல்லே சமையல் செஞ்ச புதுமணப்பொண்,தன்னுடைய சமையலை அப்பா அம்மா ரசிக்கட்டுமுன்னு போஸ்ட்டுலே அனுப்புனதாலேயா? எப்படி இந்தப் பேரு....? வீட்டுக்கு வந்து சேர்ந்தப்புறமும், தபாலை மனசுலே போட்டு உருட்டிக்கிட்டு இருந்தேன்.இன்னும் இங்கே இருக்கப்போற கொஞ்ச நாளுக்கு இந்த டிவியிலே என்னதான் அப்படி இருக்குன்னு பாத்துரணும்.


நான் முந்தி எழுதியிருந்தேன் பாருங்க இந்த 'ஹோப் பவுண்டேஷனை'பத்தி, அவுங்களுக்கு ஒரு செக் வச்சிருந்தேன்,இந்தமுறை நேரில் கொடுக்கலாமுன்னு . நம்ம நளினி & சந்தோஷ், தாம்பரத்துலே இருக்கற ஹோமை நடத்துறவங்க. ஆனா இதோட ஆஃபீஸ் இங்கே பெசண்ட் நகருலே இருக்கு. மலர்விழின்றவங்க Director-Women and Children Program.இவுங்களோட எனக்கு ஒரு மூணு வருஷமா இமெயில் தொடர்பு இருக்குங்க. அவுங்களுக்கு ஒரு போன் போட்டுஎப்ப வந்தா சவுகரியப்படுமுன்னு கேட்டதுக்கு, நாங்களே வந்துடறோம்னாங்க, கூட நளினியும் வாராங்களாம். நளினிக்குநம்ம வீடும் தெரியும். வந்தாங்க ரெண்டு பேரும். முகத்துலே அப்படி ஒரு சந்தோஷம். பள்ளிக்கூடத்துக்கு அனுமதிகிடைச்சிருச்சாம். எந்த பள்ளிக்கூடம்?


குடிசைமாற்று வாரியம் மீனவர்களுக்கும், மற்றும் வீடில்லாத மக்களுக்கும் ஒரு பத்துவருசத்து முன்னாடி ஈஸீஆர் ரோடுலே வீடுங்க கட்டிக் கொடுத்தது நினைவிருக்குங்களா? அங்கே குடிபோனவங்க பலரும், வேலைக்கு வர்றதுக்குக்கஷ்டமாப்போச்சுன்னு அந்த வீட்டையெல்லாம் வாடகைக்கு விட்டுட்டு பழையபடி தெருவோரத்துலே வந்து தங்கிட்டாங்கன்னுமுந்தி எப்பவோ படிச்ச ஞாபகம். இப்பத்தான் ச்சென்னையோட எல்லை எதுன்னே தெரியாம மகாபலிபுரம் வரைச்சென்னையாமே! ஜனம் பெருகப்பெருக எல்லா இடத்துலேயும் ஹவுஸ் ஃபுல்தானே?


இப்படிப் பெரியவங்க எல்லாம் வேலைக்காகக் கிளம்பி வந்துடறாங்களா, அவுங்க புள்ளைங்க எல்லாம் அங்கே வீட்டாண்டயேச் சும்மா சுத்திக்கிட்டு இருக்குதுங்க. வேண்டாத பழக்கமெல்லாம் கத்துக்கிட்டு வீணாப் போயிக்கிட்டுஇருக்கற பசங்களுக்காக ஆரம்பிச்ச பள்ளிக்கூடம்தான் இது. ஒரு வீட்டை வாடகைக்குப் புடிச்சுப் பள்ளிக்கூடம்ஆரம்பிச்சாச்சே தவிர, இது நடத்தறதுக்கு முறையான அனுமதி வாங்க, இவுங்க படாதபாடு பட்டுருக்காங்க.இது இருக்கற இடம், காஞ்சீபுரம் மாவட்டமாம். அங்கேதான் ரெஜிஸ்த்தர் செய்யணுமுன்னு சட்டமாம். அங்கே போனா,'கையிலே ஏதும் கொடுக்கலை'ன்றதுக்காக அலையவிட்டுருக்காங்க. இவுங்களும் அலைஞ்சாலும் அலையலாமே தவிர,கொடுக்கறதுக்குக் கையிலே ஒண்ணும் இல்லை( விரலைத்தவிர!)ன்னு இருந்துருக்காங்க. ஒண்ணுத்துக்கும் பேராதுன்னுதெரிஞ்சபிறகு, 'தொலை'ன்னு அனுமதி கிடைச்சிருச்சு. இதைத்தான் சந்தோஷமாச் சொன்னாங்க.


இந்தப் பள்ளிக்கூடத்துக்கு நீங்க கட்டாயம் வந்து பார்க்கணுமுன்னு கேட்டுக்கிட்டாங்க. நானும், நம்ம அருணா, மதுவோடசேர்ந்து போகலாமுன்னு நினைச்சுக்கிட்டு, என்னைக்கு வரோங்கறதைப் போன்போட்டுச் சொல்றேன்னு சொன்னேன்.பகல் உணவுக்கு நளினியும், மலர்விழியும், நானும் போய் சாப்புட்டுக்கிட்டேக் கேட்டது, அந்தப் பள்ளியோட தலைமை ஆசிரியைஅங்கே வேலைக்கு வந்த கதையை.

21 comments:

said...

நீங்கள் சொல்வதைப் பார்த்தால் தவல(ள) வடை என்று சொல்லப்படுகின்ற தோசை போல இருக்கிறது. வெங்காயம் போடாமல் பலகாரம் கழிக்க செய்வதுண்டு!

said...

// உப்பு உங்கள் ருசிக்கேத்தபடி. //

நானும் நிறையா இடத்துல இதே டயலாக் படிச்சுட்டேங்க ..

இவ்வளவு தெளிவா சமையல் குறிப்பு சொல்றீங்க .. உங்க ருசிக்கேற்பவே உப்போட அளவையும் சொல்லீட்டா வசதியா இருக்குமே :) இத்தனையும் நம்பி செய்யறவங்க உங்க ருசிய நம்பாம போயிடுவாங்களா என்ன :D

said...

மணியன்,

தவலை வடையா? அப்படிங்கறீங்க? ஒருவேளை இருக்குமோ?ம்ம்ம்

said...

babble,
உங்க விளக்கம் சரியா இருக்குங்க. எடின்பரோவில் ஒரு நாய்க்கு( Greyfriars BOBBY) சிலை வச்சுருக்காங்க. இங்கே நியூஸியிலேயும்
நாய்க்குச் சிலை இருக்குங்க.

ஆனா நம்ம ஆளுங்க இப்படி கல்லாலெ நாயை அடிக்கணுமுன்னு எடுத்துக்கிட்டோம் பாருங்க(-:

said...

சுகா,

நான் உப்பு கொஞ்சம் குறைவாத்தான் போடுவேன்.
ரொம்ப உப்பு தின்னா ரோஷம் கூடிருமாமே? நமக்கென்னத்து அதுன்னுதான்....:-)
சரி இவ்வளவு சொல்றிங்க, உப்பு ஒரு அரை ஸ்பூன் போட்டுக்குங்க.

said...

துளசிக்கா

மாவை கரண்டிலெ எடுத்து போடும்போது தபால்! தபால்! னு
போடாம , மெதுவா போடறதுனால வந்த பெயர் காரணமா இருக்குமா .

அப்போ மெதுவடையா இருக்குமா ,

அடடா , வடையிலெதான் எத்தன வடை ! ச்சீ வடைய நெனச்சாலெ வாய்
குழருது . (ழகரம் போட்ட காரணம் வாயில ஜொள்).

கீர வடை, ஆம வடை , பருப்பு வடை , உளுந்து வடை , மெது வடை ,
தவள வடை.,மசால் வடை ,நான் வெஜ் கொத்து கறி வடை ,மிளகு வடை
இப்ப தபால் வடை .....
லிஸ்ட் முடிவடையாது.(அவள் விகடன் முப்பது நாள் முப்பது வடை வரப்போகுதுங்கோ)

துருக்கி-ல செய்யுற falafel கூட வடை -ல சேத்திதான்.

இந்த லிஸ்ட்ல மெட்ராஸ் வடை-கறி சேத்தாதீங்க.

(கோவை அன்னபூர்ணா வடை சாம்பார் வெட்டியது உண்டா.)

முடிஞ்சா வடை ஸ்பெஷல் எடிஷன் பதிவு போடுங்க


பெருசு

said...

பெரு(சு)

வடையோட மகத்துவம் பெரு(சா) இருக்கேங்க.

falafel கூட கொண்டைக்கடலையை வேகவச்சுட்டு செய்யற வடைதான்.
என்ன, கொஞ்சம் மென்னியைப் பிடிக்குது.

//குழருது . (ழகரம் போட்ட காரணம் வாயில ஜொள்).//
ஜொள் இல்லாட்டாலுமே 'குழறல்' குழறல்தான்:-))))

அதென்னங்க எல்லாரும் சொல்லிவச்சாப்புலெ அன்னபூர்ணா வடைசாம்பார்னு சொல்லிக்கிட்டு இருக்கீங்க?
அடுத்தமுறை 'வெட்டிறணும்'.
எனக்குக் கோவைன்னா கொஞ்சம் அலர்ஜிதான். எல்லாம் அங்கே ஏற்பட்ட ஒரு அனுபவம்.
ஒரு கடையிலே ..... அது ஒண்ணும் ரொம்பப் பெரிய விவகாரம் இல்லேதான். ஆனா ஏமாத்துனாங்க பாருங்க, அது.
அல்பத்துக்கு ஏமாத்துனதும்/ நாங்க ஏமாந்ததும்தான் கசப்பு. இத்தனைக்கும் கோபால் அங்கே 5 வருசம் குப்பை
சேர்த்துருக்கார்:-)

30 குழம்பு சரி. தினமும் எதாவது குழம்பு வேணும்தான். ஆனா இந்த போண்டா, வடையெல்லாம் 30நாள் சேந்தாப்புலெ
செய்யமுடியுமா? 'அவள்'லே வந்தாலும் வந்துரும். என்னவோ போங்க.

said...

babble கோவிச்சுக்கக் கூடாது...நீங்க "அதை நாய்ன்னு நெனச்சி பாத்திங்கனா, அது கல்லால செஞ்சதுங்கறது மனசுக்கு தெரியாது "// இது சும்மா யாரோ சொல்லிட்டுப் போன விளக்கம் அப்டின்னுதான் நினைக்கிறேன். எங்கேயாவது நாய் சிலை பார்க்கிறோமா?just straight meaning-தான் இருக்கணும். நாயைப் பார்த்தா பயந்து ஓடுவோம். ஒரு சேன்ஞ்சுக்குக் கல்ல விட்டு எறியலாமான்னு பார்த்தா அப்ப கல் கிடைக்காது.தேடி கல்லைக் கண்டுபிடிச்சிச்சா, அப்போ நாய் வாலைச்சுருட்டிக்கிட்டு எங்கேயோ ஓடியிருக்கும். அம்புடுதான்...என்ன சொல்லுதிய...! many a slip between cup and lip...

said...

டீச்சர்...நீங்க சொல்ற தபால் வடைய அம்மாவும் செய்வாங்க...ஆனா அதுக்குக் கடல மாவு போண்டான்னு பேரு. அதோட தலைல சாம்பார ஊத்தி ஊற வெச்சி வெட்டோ வெட்டுன்னு வெட்டீருக்கேன். இப்ப இல்ல...சின்னப் புள்ளைல....

said...

'சார் போஸ்ட்'ன்னு சொல்லிக்கிட்டு பரிமாறணுமா? இல்லே மொத மொதல்லே சமையல் செஞ்ச புதுமணப்பொண்,தன்னுடைய சமையலை அப்பா அம்மா ரசிக்கட்டுமுன்னு போஸ்ட்டுலே அனுப்புனதாலேயா? எப்படி இந்தப் பேரு....? வீட்டுக்கு வந்து சேர்ந்தப்புறமும், தபாலை மனசுலே போட்டு உருட்டிக்கிட்டு இருந்தேன்..//

அடடா எத்தனை முக்கியமான ஆராய்ச்சி..

சரி உங்க பதிவோட ஆரம்பத்த படிக்க துவங்குனதும் இதென்ன சமையல் குறிப்பு? தப்பான தளத்துக்கு வந்துட்டோமோன்னு மேலே அட்றச மறுபடியும் பார்த்தேன்.

கடைசியிலதான் புரிஞ்சது..

இருந்தாலும் உங்க ஸ்டைலே ஸ்டைலுதாங்க.. வடையப் பத்தி சொல்ல தொடங்கி இடையில உங்க இரக்க சிந்தனைக்கு ஒரு கோடு காட்டி.. உங்க தோழிகளை சந்திச்சி அரட்டையடிச்சி.. அப்படியே நீங்க பேசறத கேக்கறா மாதிரி இருந்திச்சி..

ஒரு ரெண்டு மூனு நாளா அத படிக்க முடியாம என்னவோ போல இருந்துது..

said...

ஏங்க தருமி,

கல்லைக் கண்டால் கடவுளைக்காணொம்.
கடவுளைக்கண்டால் கல்லைக்காணோமுன்னு இருந்துருக்கலாம். இல்லை?

சரி, பேபலைக் கேட்டுருக்கீங்க. அவரே பதில் சொல்லட்டும்.

said...

ராகவன்,

அம்மா செய்வாங்களா? அதுக்கு என்ன பேர்? தபால் போண்டாவா?

ஆனா, நான் தின்னது போண்டாவா இல்லையே(-:

போண்டாவுக்குள்ளே லெட்டர் இருக்குமா? :-)

said...

டிபிஆர்ஜோ,

//ஒரு ரெண்டு மூனு நாளா அத படிக்க முடியாம என்னவோ போல இருந்துது.. //

அடடா. ரெகுலர் வாசகரை விட்டுறக்கூடாது.

//.............உங்க ஸ்டைலே ஸ்டைலுதாங்க.. //
அது. அங்கெதாங்க இந்த துளசி 'நிக்கறா' இல்லீங்களா? :-)

said...

// ராகவன்,

அம்மா செய்வாங்களா? அதுக்கு என்ன பேர்? தபால் போண்டாவா? //

இது போண்டா மாதிரி உருண்டையா இருக்காது. கொஞ்சம் அப்பிடி இப்பித்தான் இருக்கும். ஆனா நல்லாயிருக்கும். சென்னைக்குப் போனதும் அம்மாவ செய்யச் சொல்லனும்.

நாங்க தபால் போண்டான்னெல்லாம் சொல்ல மாட்டோம். போண்டா போண்டாதான்.

// ஆனா, நான் தின்னது போண்டாவா இல்லையே(-:

போண்டாவுக்குள்ளே லெட்டர் இருக்குமா? :-) //

தபால்ல கூடத்தால் பால் இருக்கு. அதுனால தபால்ல பால் கிடைக்குமா டீச்சர்.

said...

ராகவன்,

//தபால்ல கூடத்தால் பால் இருக்கு. அதுனால தபால்ல பால் கிடைக்குமா டீச்சர். //

கிடைக்குதேப்பா. பால்பவுடர் தபால்லே வருதே:-)))

said...

துளசி
மல்மார் வீக்லி பார்த்தாச்சா? எப்படி இருக்கு?

said...

பத்மா,
மாலாமால் வீக்லி இன்னும் பார்க்கலை. ப்ளேடாமே(-:

ப்ரியதர்சன் படங்கள் இப்பெல்லாம் ஒரே அறுவைதான்.

said...

அய்யோ துளசிம்மா
இப்படியா கவுப்பீங்க

காப்பி, டீ மது போட்டா நல்லா இருக்கும்.
உலகத்தில வேற எங்கேயும் இந்த ருசி கிடைக்காதுன்னு இவர் சொல்றது அப்ப பொய்யா:-)))))

கூகிள் ல மதுமிதாஸ் ப்ளாக்ன்னு போட்டேன். உங்கள் துளசி தளம் வந்தது.
பாத்துட்டே வந்தேன்.
சார் போஸ்ட் வந்ததும் போச்சு
'ங்ஏ' என்று விழித்தபடி

மது

said...

ஆ...... மது.

இது உங்க கண்ணுலே பட்டுருச்சா?

தெரியாமல்லே 'போஸ்ட்' செஞ்சேன்:-))))

said...

கடைசியிலே சிவா விஷ்ணுவை அம்போனு விட்டுட்டீங்களே.
பட்டரை ஒரு கேள்வி கேட்டு (பங்களூரில போட்ட ) அவதாரம் எடுக்காம விட்டின்ங்க.
இதே தொல்லை. மன உளைச்சல்
என்னை தொந்தரவு செய்வதால்கோவில் விஸிட் குறைகிறது.தபால் ஆபீஸ் மகள் என்பதால்ரொம்ப ரசிச்சேன் வடையை.தவல வடை வேற. அரைச்சு செய்யணும்.//மரத்தில் மறைந்தது மாமத யானை// என்று கூட மொழி உண்டு.
உங்களுக்குத் தெரிந்து இருக்கும்.பாபிள்
சொல்றதுதான் சரி

said...

வாங்க வல்லி.

இன்னிக்கு இந்தப் பதிவுக்கு ஒரு மீள் உயிர் கொடுத்தது சாக்ஷாத் மதுவேதான்:-)))))

ஆமாம், அவதாரம் 'பொட்டுபொட்டு'ண்ணு எதுக்கெடுத்தாலும் எடுக்க முடியுமா?
'மெளஸ்' குறைஞ்சுறாதா?

திருப்பதி தேவஸ்தானம் கோயிலைவிட சிவா விஷ்ணுலேதான் மனசுக்கு நிம்மதி
வந்துச்சுப்பா.