Sunday, April 09, 2006

இந்த பூ ???பூப்பூவா பூத்திருக்கு,
பூமியிலெ ஆயிரம்பூ,
பூவிலே இந்த பூ
என்ன பூ?


மொத்தமா மூணு படம் போடறேன்.
என்ன பூவுன்னு சொல்லுங்கப்பூ.


பர்ப்பிள் கலர் பூ ரெண்டு படமும் ஒரே வகைதான்


36 comments:

said...

ஏதாவது எழுத வேண்டும் என்று எழுதாதையும்

said...

தெரியலீங்களே..

ஆளுங்களையே அடையாளம் தெரியாது இதுல பூவ எங்க:-(

said...

ஓ இந்த பூவா. எனக்கு நல்லா தெரியுமே. இது தான் என்னோட ஆளுக்கு பிடிச்ச பூ. ஹி...ஹி

said...

கேந்திப்பூ மாதிரி இருக்கே ஒன்னு!

said...

யாழ்கோபி,

இதுலே கொஞ்சம் விவ(கா)ரம் இருக்கே!
கேள்வியே கேக்கக்கூடாதுன்னா எப்படி?

said...

டிபிஆர்ஜோ,

இன்னும் ஒரு நாள் பார்த்துட்டுப் பதில் சொல்லட்டுமா?

said...

கிறுக்கன்,

உங்க ஆளு தினமும் இதைத்தான் 'சூடி'க்கிறாங்களா?:-)

said...

உதயகுமார்,

அந்த மஞ்சள் பூ என்னன்னு எனக்கும் தெரியாது. ஆனா அது 'கேந்திப்பூ' இல்லை.

அந்த மற்ற பூ....?

said...

குறிஞ்சிப்பூ. சரியா? எப்போ ஊட்டி போனீங்க? மஞ்சள் பூ சரியாப் பார்க்கலியே? பார்த்துட்டு நாளை சொல்லவா?

said...

//அந்த மஞ்சள் பூ என்னன்னு எனக்கும் தெரியாது.//

http://www.arhyel.ca/
Brigus/more/
dandelion-0697_b.jpg


மஞ்சள் பூ டாண்டிலயன். if this
is a weed, this is dandelion
அன்புடன்
சாம்

said...

1) jethota
2) neermel milli
o.k?

said...

//பூப்பூவா பூத்திருக்கு,
பூமியிலெ ஆயிரம்பூ,
பூவிலே இந்த பூ
என்ன பூ?//

ஒருவேளை குஷ்பூவா..? :)

said...

கீதா,

இல்லை.அது குறிஞ்சிப்பூ இல்லை. மஞ்சப்பூவை நாளைக்குச் சொல்லுங்க. பரவாயில்லை.

said...

சாம்,

இல்லீங்க, இந்த அந்த லயன் இல்லையே:-)

said...

சிவஞானம்ஜி,

இப்ப நீங்க சொன்ன பூ எதுன்னு தெரியலைங்க. நீர்மேல் மல்லி?
ஆனா இது அது இல்லைன்றது மட்டும் புரியுது.

said...

நிலவுநண்பன்,

ஒரேதா 'குஷ்பூ' இல்லேன்னு சொல்லமுடியாது. பர்ப்பிள் பூவுலே லேசா ஒரு 'குஷ்பூ' இருக்கே:-)

said...

adhu enakkum teriadhunga
enakku teriyadha poo padathai neenga kattina, namakku theriyadha oru peyarai naa solla mudiyadha?
he he he he he!

said...

Purple flower is from onion ;)

said...

சிவஞானம்ஜி,

:-)))))

கனவுகாண்கிறவரே,

இது வெங்காயம் இல்லீங்க.

said...

:-))))) what is this?

said...

என்னங்க சிவஞானம்ஜி,

இது ஸ்மைலிங்க. மெய்யாலுமா என்னான்னு தெரிலே?

said...

இந்த பூவ நியூசில ஒரு வீட்டுல பார்த்த ஞாபகம் ஆனா என்ன பூவுன்னு .........

said...

ஆமாமாம். அங்கே சிங்கையிலே இந்தப்பூவு இல்லைன்னுகூட யாரோ சொல்லிக்கிட்டு இருந்தாங்க:-)

said...

ஊதா நிறத்திலே இருக்கிற பூ ப்ளாஸ்டிக் பூ!

மஞ்சளைப் பாத்தா டான்டிலியன் மாதிரித்தானி இருக்கு.. ஆனா நீங்க இல்லைன்னு சொன்னா சரியாத்தானிருக்கும்! :O)

said...

//ஊதா நிறத்திலே இருக்கிற பூ ப்ளாஸ்டிக் பூ!//

ரொம்பத்தான் லொள்ளூ-)))

said...

பூப்பூவா பூத்திருக்கு பூமியிலே ஆயிரம் பூ...பூவிலே சிறந்த பூ என்ன பூ!!!!!!!!!

துளசி டீச்சரின் வலைப்பூ!

அதற்கு ஏனிந்த மலைப்பு!

அதற்குக் காரணம் உழைப்பு!

நமக்கும் வேண்டும் பொறுப்பு!

அப்பொழுதுதான் எல்லாருக்கும் தெரியும் நமது இருப்பு! :-)

said...

ராகவன்,

மொட்டை அடிச்சதும் 'வரகவி' ஆயிட்டீங்களா?

said...

துளசி அது (மஞ்சள்பூ) ஆர்கிட் வகையை சேர்ந்தது!

பேப்ப்ள் பிளாஸ்டிக் மாதிரியும் இருக்கு ஆனா தூலிப் வகையில் இதே போல் வெள்ளை வண்ணத்தில் பார்த்திருக்கிறேன்

said...

மீனா,

பிழையான பதில்(-:

said...

வரகவியா......யாரோ ஒரு கிரேக்க வீரன் தாடியில வீரத்த வெச்சிருந்தானாம். தாடிய எடுத்ததும் வீரம் போயிருச்சாம். அது போல தலைமுடில அறியாமையை வெச்சிருந்தேன்னு சொல்றீங்களா. :-))))))

அந்த மஞ்சப்பூ தலவெட்டிப் பூ. பேரு மறந்து போச்சு...சொன்ன பேச்சு கேப்பியா கேப்பியான்னு கேட்டுட்டு கேக்க மாட்டியான்னு முடிச்சுப் பூவோட தலையச் சுண்டி விட்டுறனும். அதுதான் சின்னப்பிள்ளைல செஞ்சோம்.

அடுத்த பூ என்ன..வெங்காயம் மாதிரி இருக்கு..இஞ்சியோ?

said...

ராகவன்,

அந்த முடி பலம் இருந்தவர் 'சாம்சன்'

இதுவரை யாரும் விடை சரியாச் சொல்லலை.
நானே பதிலை ஒரு ச்சின்னப்பதிவாப் போட்டுருக்கேன் இப்ப.

said...

அந்த ஊதாப்பூ... லில்லியா..?

said...

அந்தப்பூ... லில்லிப்பூ

said...

ரொம்ப நாள் ஆயிருச்சோ, விடையைச் சொல்ல?

வாங்க விஸ் கிட்.

இது லில்லி இல்லீங்க.

இதுதான் குங்குமப்பூ எடுக்கறமே அந்தப்பூ.

said...

துளசி அக்கா!
இந்தப் பூ 34 எனு கிடக்கே! என்று பார்த்தேன். படத்தைப் பார்த்ததும்; இதை தொலைக்காட்டியில் பார்த்தேனே! பெயர் தெரியுமே! பதில் போடுவோம்; எனக் கீழே பார்த்தால், நீங்கள் பதில் இட்டுள்ளீர்கள். இது ஸ்பெயினில் விளைவிக்கப்படுகிறது. இதன் மஞ்சள் நிற மகரந்தக் காம்புகளுக்கெ மதிப்பு,இவை கையாலே பிரித்தெடுக்கப்படுகின்றன; ஆங்கிலம்,பிரான்ஸ் மொழிகளில் saffron என்கிறார்கள்; ஒரு கிலோ குங்குமப்பூ எடுக்க சுமார் 250 கிலோ ;பூக்கள் வேண்டும்.கிராம் கணக்கிலே விற்கப்படும். இங்கே சில சமையல்களுக்குப் பாவிக்கப்படுகிறது. சின்ன வெங்காயத்தின் அளவிலுள்ள கிழங்குகளிருந்தே பயிர் செய்யப்படுகிறது.
யோகன் பாரிஸ்

said...

யோகன்,

இது ரெண்டு மாசத்துக்கு முந்தின பதிவு.
இப்பத் திடீர்னு மறுபடி 'தானே' வந்திருக்கு.
நீங்க சொன்ன விவரங்கள் எல்லாம் சரியானவைகளே.

இந்தக் குங்குமப்பூ இந்தியாவிலே காஷ்மீரத்திலும் பயிர் செய்யறாங்க. இப்ப இங்கே நியூஸியிலும் ஆரம்பிச்சுருக்காங்க.