Friday, June 18, 2010

பனிக்குழையம்

இன்று புதிதாகத் தெரிஞ்சுக்கிட்ட சொல்.

பனிக்குழையம்.

யாராவது 'ஆப்பிள்' என்ற சொல்லைத் தமிழ்ப்படுத்தினால் நலம்.

ஆப்பிள் பெண்ணே நீ யாரோ?

பனிக்குழையச்சிலையே நீ யாரோ?

மொழிபெயர்ப்பு சரியா வருதுங்களா?
படம்: தினமலரில் இருந்து. நன்றி

53 comments:

said...

ஆப்பிள் - பெயர் சொல்லை தமிழ்படுத்து கடினம், பண்புப் பெயர்களை தமிழ்படுத்தலாம், ஐஸ் கிரீம் என்பதில் ஐஸ் என்பது குளிர் தன்மை என்னும் பண்புப் பெயர். க்ரீம் என்றால் குழைவு.

பொட்டாடோ.........உருளும் தன்மையிலான கிழங்கு வகை என்பதால் உருளை கிழங்கு என்று வைத்துக் கொண்டார்கள்.

மிளகைப் போன்ற காரத் தன்மை உடைய ஒருவகைக் காய் என்பதால் சில்லி என்பது மிளகாய் ஆனது.

ஆப்பிள் தமிழகத்தில் பிற்காலத்தில் வந்திருக்கலாம் அதனால் அதற்கு பெயர் வைக்காமல் புழக்கத்திற்கு வந்துவிட்டது என்று நினைக்கிறேன்.
:)

said...

என் டிச்சர் இப்படி?

said...

செம்மொழி மாநாட்டுக்கு தங்களின் பங்களிப்போ

said...

"Mankal palam"
Source(s):
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E

one more name= TOPPAIVAAI PALAM.

said...

மரக்குழையம்பழம்!! :))

said...

chennai-la idhu madhiri innum niraya ippo irukku. Kadaigalin peyar thamizhil irukkanummnu sonna udane, enna ennamo pudhusu pudhusa vaarthaigal peyar palagaikalil theriyudhu.

said...

சில வருடங்களுக்கு முன் "கொட்டை வடி நீர்" என்ற பதத்தை கேட்டதில் இருந்து இந்த இங்கிலீஷ் டு தமிழ் அருஞ்சொற்கள் நினைப்பையே ஒழித்துவிட்டேன். அதற்கு முன் சும்மா இருக்கும் போது இதை செய்வதுண்டு.

ஐஸ்கிரீம் - பால் பனி சாந்து (இது எப்படி இருக்கு?) :P

said...

'கடினம்’ என்ற பேச்சுக்கே இடமில்லை. மொழியில் எல்லாம் முடியும்.

அறிஞர்கள் ஒன்றுகூடி ஒருபெயரைத் தேர்ந்தெடுக்கலாம்.

இந்தியில் பாமரர் ஆரும் ஆப்பிள் என்று சொல்வதில்லை. ’சேப்’ என்றுதான் ஆப்பிள் இந்தியில். பள்ளி இந்தி அரிச்சுவடியிலேயே அது சொல்லிக்கொடுக்கப்படுகிறது.

தமிழில் மட்டும் ஏன இவ்வாறு தனிப்பெயரில்லை?

இங்கிலீசை, ஆங்கிலம் என்று சொல்லவில்லையா? கம்யூட்டரை கணணி என்று சொல்லவில்லையா?

சோம்பேறித்தனமே காரணம்.

said...

Apple means Fruit in Greek.

Vilaam Pazham is called Wood Apple, and Seetha Pazham as Custard Apple are some examples to indicate Apple means Fruit.

Or you can get all biblical and call it as a forbidden fruit or something...

said...

செம்மொழி மாநாட்டுக்கு தங்களின் பங்களிப்போ
--------------
புரியவில்லையா நன்மனம். ஆப்பிள் ஒரு "பழம்" என குறிப்பால் உணர்த்துகிறார் டீச்சர்.(தற்குறிப்பேற்ற அணி)

சிவப்பா இருப்பதெல்லாம் ஆப்பிள் பழமல்ல, கோவத்தில் சிவந்த கோவை பழமாக கூட இருக்கலாம்.

said...

பனிக்குழையமா. எனக்கு குளுகுளு கூழ் தான் பிடிச்சிருக்கு :)

said...

பனிக்குழையம் ரொம்ப நல்லா இருக்கு டீச்சர்:))

said...

பனிக்குழையமா:)
என் வாழ்நாள்ல ஐஸ்க்ர்ரிம் சாப்பிட முடியாவிட்டாலும் அதை நினைத்தாவது சில்லுனு(ஓ இதுவும் ஆங்கிலம் தானே) இருக்கும்னு நினைச்சுப்பேன்.
ஆப்பிள்க்கு மலை சம்பந்தமா ஏதாவது பேரு தான் வைக்கணும்:)

said...

தமிழ் விக்கிப்பீடியாவில் ஆப்பழம்,குமளிப்பழம் என்று போட்டிருக்கிறார்களே

said...

"பனிக்குழையம்" நல்ல தமிழ்சொல். ஆனால் பேச்சு வழக்கில் யாராவது சொல்லுவார்களா?

said...

மொழி என்பது மனிதன் ஏற்படுத்திக் கொண்டது தானே தவிர மொழிக்காக எந்த ஒரு மனிதனும் தோன்ற வில்லை என்பது
இங்கு ஈண்டு நோற்கல் பாலரிது.பொறியியல் துறையில் இன்னும் நாற்பதாயிரம் ஆங்கில வார்த்தைகளுக்கு மேல் நாம் மொழி மாற்றம் செய்ய வேண்டிஉளது.இங்கு மலாய் சிங்கப்பூர் தமிழ் எப்படி சீன மொழி வழக்கை தனதாக்கி கொண்டதோ அதைப்போல் ஏன் தமிழ் நாட்டிலும் ஆங்கில வார்த்தைகளை தனதாக்கி கொள்ள முடியாது?

said...

டாக்டர்,
நீங்கள் பனிக்குழையம் சாப்பிட வேண்டாம் என்று சொல்லிப் பாருங்கள் உங்களைக் காண வரும் நோயாளிகளிடம். உற்சாகமாகத் தலையாட்டிவிடுவார்கள்:)

said...

ஆப்பழம்,குமளிப்பழம்.
நன்றி திரு.பிரகாசம்.
நடைமுறைக்கு எப்போது வருகின்றது என்று பார்க்க வேண்டும்.

said...

இது போன்ற வீர விளையாட்டுக்கு என் சார்பாக களத்தில் கண்ணன்.

said...

ஏன் இந்த கொலைவெறி?

said...

நண்பர்களே,

தாமதமா இங்கே பதில் சொல்ல வந்ததுக்கு மன்னிக்கணும்.

பயங்கர வெய்யில். பனிக்குழையம் வாங்கப் போயிருந்தேன்:-)

said...

வாங்க கோவியாரே.

பெரிய கவி(பேரரசு)களே, ஆப்பிளை அப்படியே ஆப்பிளாகவே எடுத்துக்கிட்டாங்க. தமிழில் எழுதுனாவே தமிழாகிருதுங்களே:-)))))

said...

வாங்க பிரியமுடன் பிரபு.

செம்மொழி மாநாட்டுக்காக தினமலர் புதுசா ஒரு இணைப்பு வச்சுருக்காங்க. அங்கே எட்டிப் பார்த்துட்டேன். அதான்.....விளைவு இப்படி:-)

said...

வாங்க நன்மனம்.

மாநாட்டுக்கு என் பங்களிப்பு வேற

அதைப்பற்றிய பதிவு ஒன்னும் போடாமல் இருப்பதுதான்.

said...

வாங்க ராம்ஜி _யாஹூ.

விவரங்களுக்கு நன்றி.

said...

வாங்க ஷங்கர்.

ஆஹா..... பெயரைப் பதிவு செஞ்சுருங்க.

said...

வாங்க பிரசன்னா.

பெயர்ப்பலகை மட்டும் தமிழில் இருந்தால் போதுமா?

அப்படியே தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பக்கமும் காதை ஓட்டினால் தேவலை.

said...

வாங்க ஹூ நோஸ்.

அடுத்தமுறை சென்னை வரும்போது,

பனிக்குழையம், பால்பனிச் சாந்து ன்னு கடைகளில் கேட்டுப்பார்க்கிறேன்:-)

said...

வாங்க ஜோ அமலன் ராயன் ஃபெர்னாண்டோ.

தமிழ்ப்படுத்தவே ஒரு குழு இருக்குன்னு கேள்விப்பட்டுருக்கேன்.

அவுங்கதான் 'கண்டுபிடிச்சு'ச் சொல்லணும்.

வருகைக்கு நன்றி.

said...

வாங்க ராஜ்.

அந்த விலக்கப்பட்டக் கனியாலேதான் பூவுலகில் இவ்வளவு குழப்பம். இப்பப் பாருங்க அதன் பெயரிலும் குழப்பம் வந்துருச்சு:-))))))

said...

வாங்க சின்ன அம்மிணி.

கூழ் கூழ்..... கூல்.........

said...

வாங்க சுமதி.

த க்ரெடிட் கோஸ் டு ஐஸ்க்ரீம் கடைக்காரர்.

said...

வாங்க வல்லி.

சுகர்ஃப்ரீ குழையம் எல்லாம் இன்னும் இங்கே வரலையாப்பா????

said...

வாங்க பிரகாசம்.

ஆஆஆஆப்பழம்!!!!!

சினிமாப் பாடல் 'ஆசிரியர்கள்' இன்னும் இதையெல்லாம் கவனிக்கலைபோல இருக்கே!!!!

தகவலுக்கு நன்றி.

said...

வாங்க டொக்டர் ஐயா.

சென்னைக்குப்போகும்போது பரிசோதிக்கணும்.

ரெண்டு ஸ்ட்ராபெர்ரி குழையம் ப்ளீஸ்...

said...

வாங்க தனாசின்னதுரை.

முதல்வருகைக்கு நன்றி.

நீங்க சொன்னது ரொம்பச்சரி.

said...

வல்லி,நடைமுறைக்கு நாம்தான் கொண்டுவரணும்.

சண்டிகரில் சீஸன் சமயங்களில் ஆப்பழம் ஒரு பெட்டி (7 கிலோ இருக்குமாம்) நூறே ரூபாய்களாம்.
ஆஆஆஆஆ

said...

வாங்க கிரி.

எய்தவன் இருக்க அம்பை நோவானேன்:-)))))

தினமலர் உபயமல்லவா!!!!

said...

வாங்க கிரி.

எய்தவன் இருக்க அம்பை நோவானேன்:-)))))

தினமலர் உபயமல்லவா!!!!

said...

வாங்க ஜோதிஜி.

கண்ணன் களமிறங்கி 'முதல்' பந்துலேயே சிக்ஸர் அடிச்சாச்சு:-)

said...

பனிக்குழையம் வித்தியாசமாக இருக்கு.

said...

திரு கோ.வி அவர்கள் கூறியிருப்பது வாஸ்தவம்தான். நாம் முடிந்தவரை தமிழ்ப்படுத்தலாம். இல்லவிட்டால் அப்படியே கூறுவது தவறில்லை. ராக்ஃபெல்லெர் என்பதை பாறை விழுந்தான் என்று கூற முடியுமா? (முன்பு ஒருமுறை நெடுஞ்செழியன் அவர்கள் ஷேக்ஸ்பியரை செகப்பியர் என்று கூறியதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்!!) சில நாட்களுக்கு முன்பு விஜய் தொலைக்காட்சியில் என் மகள் airtel super singer junior என்று ஒரு நிகழ்ச்சி பார்த்துக் கொண்டிருந்தபோது அதில் அறிவிப்பாளராக வந்த பெண் முதல் நடுவர்களாக இருந்த மலயாளத் தமிழ்ப்பாடகர்கள் வரை அனைவரும் நூற்றுக்கு ஒன்றிரண்ரு தமிழ் வார்த்தைகள் மட்டுமே பேசினார்கள். இதையெல்லாம் யார் தடை செய்வது.
இவர்கள்பாட்டுக்குக் கடைகளில் ஏதோ ஒரு பெயரைத் தமிழ் எழுத்துக்களில் எழுதியிருந்தால் போதும் என்றால் தமிழ் வளர்ந்துவிடுமா?

said...

((சென்னை : சென்னையில் தமிழில் பெயர் எழுதாத வணிக நிறுவங்களின் பெயர் பலகைகள் அகற்றப்பட்டன. சென்னை மாநகராட்சி இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது. மேயர் மா. சுப்ரமணியன் தலைமையிலான மாநகராட்சி ஊழியர்கள், சென்னை அண்ணா சாலையில் தமிழில் பெயர் எழுதாத வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.))


மேற்கண்ட செய்தி இன்றைய தினமலரிணைய தளத்தில் வெளியாகியிருந்தது.

said...

dear thulasidhalam friends,
need not to say,this thamizl
site gives me more happy.
as a new one,it may be some
mistakes in my views n thoughts.
but i thank u for showing passions
of luv n affection.i'm very joyful in
this day , coz mrs.thulasigopalan
gives her wlcome in personal
i thanking for her kind heart n once again
thank for all tamil ppl in the world

thanasinnaduri
malaysia

said...

வாங்க மாதேவி.

எல்லாம் செம்மொழி படுத்தும் பாடு:-))))

said...

பிரகாசம்,

இதெல்லாம் ஊருக்கு மட்டும் உபதேசம், நமக்கில்லை மக்களேன்ற வகையில் வரும்.
எல்லோருக்கும் இருப்பை உணர்த்த அப்பப்ப இப்படி எதாவது செஞ்சு விசுவாசம் காமிக்கவேண்டிய கட்டாயம்தான்.

ரெட் ஜெயண்ட், நைன் க்ளௌட்ஸ் எல்லாம் ஜுஜுபி:-))))

said...

தனாசின்னதுரை,

சாமி இல்லைன்னு ஒரு பக்கம் சொல்லிக்கிட்டே மொழியைச் சாமியாக்கிக் கோவில் கட்டி அதில் வைக்கும் விந்தை நமக்கே நமக்கானது.

ஆனால் வெளிப்படையா மொழி என்பது மனிதர் தம்முள் பேசுவதற்கும் கருத்துப்பரிமாற்றத்துக்குமான கருவின்னு சொன்னோமுன்னா....நாமெல்லாம் துரோகிகள் லிஸ்ட்டுலே சேர்க்க்கபடுவோம்:(

அடிக்கடி நம்ம வீட்டுப்பக்கம் வந்து போங்க.

உங்கள் வருகை மகிழ்ச்சியா இருக்கு.

said...

தனா சின்னதுரை,

எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.

பனிக்குழையத்துலே மீன் கலந்தா நல்லாவா இருக்கும்?

said...

அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு
என் சமையல் பகுதியை எந்த
பகுதியில் எவ்வாறு போஸ்ட்
செய்வது? மிகவும் குழப்பமாக
உள்ளது ...வழி காட்டவும் ..

அன்புடன்
தனசின்னதுரை செறேம்பன் மலே

said...

அன்புள்ள தனாசின்னதுரை,

உங்கள் வீட்டுப்பக்கம் வந்து பார்த்தேன்.

http://thanasinnadurai.blogspot.com/

சரியாகத்தான் சமையல் குறிப்பு அங்கே போட்டுவச்சுருக்கீங்க.

இப்ப நீங்க செய்யவேண்டியதெல்லாம் தமிழ்மணம் என்ற திரட்டிக்குப்போய் அங்கே உங்கள் வீட்டைப் பதிவு செஞ்சுக்கணும். பத்திரம் எல்லாம்தான் ரெடியா இருக்கே. மூணு போஸ்ட் போட்டுருக்கீங்களே அதுதான் வீட்டுப்பத்திரம்:-)

http://www.tamilmanam.net/index.html

said...

Dear author mrs Thulasigopal,
Welcome to my home(ungal vitu pakkam saryathan samayal kuripu potu vachurikinga)thanx for ur nice comments.Followed ur instruction . After a long struggle i had reg my name in the tamilmanam.com.but i sorry to say i cudn't post my writings in it.think ur thulasidhalam is more easier than tamilmanam to post my Recipe..to be very thankful,if u alot a platform in ur site..
thanasinnadurai
seremban. malaysia

said...

அன்புள்ள தனா சின்னதுரை,

தமிழ்மணம் என்பது ஒரு நாடக அரங்கம் போல. ஸ்டேஜ். நம்ம இடுகைகளை நம் சொந்தப் பதிவில் வெளியிட்டுவிட்டு அவைகளைத் தமிழ்மணத்திற்கு அனுப்பணும். இதுக்கான ஒரு கருவிப்பட்டையை உங்க டெம்ப்ளேட்டில் சேர்க்கணும். விவரங்கள் தமிழ்மணத்தின் முகப்புப்பக்கம் கிடைக்கும்.

அதுலே இணைச்ச பிறகு, கொஞ்ச நேரத்துக்கு முகப்புப்பக்கத்தில் நாம் 'நடித்துக் கொண்டிருப்போம்'. ஸ்டேஜ்ஜுன்னு சொன்னது அதுக்குத்தான். நம்ம பார்ட் நாடகத்தில் அப்போ நடக்குது. இதுலேயும் ட்ராஃபிக் கூடுதலா இருந்தால் ஸீன் சட்னு மாறி நாமும் காணாமப்போயிருவோம். ஆனாலும் மேடையில் தோன்றும் அந்த நேரம் பலரின் கவனத்துக்கு ஆளாவோம்.
இது ரொம்ப முக்கியம்.

இன்னும் சந்தேகம் இருந்தால் உங்கள் மெயில் ஐடியை ஒரு பின்னூட்டமா எனக்குச் சொல்லுங்க. அதை வெளியிடமாட்டேன். எனக்கு மட்டுமே.

குட்லக்.

said...

குளிர்களி என பயன்படுத்தலnமே... ஐஸ்கிறீம் என்பதற்கு பதிலாக