Saturday, June 12, 2010

நட்புகளுக்கு ஒரு சேதி


அன்புள்ள நண்பர்களே,

வணக்கம். 'நியூஸிலாந்து ' என்ற தலைப்பில் ஒரு புத்தகம் வெளிவந்துள்ளது.
சந்தியா பதிப்பகம் அருமையான முறையில் வெளியிட்டிருக்கிறார்கள்.

இந்த செய்தியை உங்கள் அனைவரோடும் பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

உங்கள் ஆதரவுக்கும் அன்புக்கும் என் மனமார்ந்த நன்றி.

இன்றுதான் புத்தகம் என் கைக்குக் கிடைத்தது.

103 comments:

Anonymous said...

வாழ்த்துக்கள் டீச்சர். இது இரண்டாவது புத்தகமா?
பிப்ரவரியில ஒண்ணு வரப்போகுதுன்னு சொன்ன ஞாபகம். அதான் கேட்டேன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்ல சேதி .. வாழ்த்துக்கள்.

எல் கே said...

evlo vilai ??? kandippa vangaren

kulo said...

vaazhthukkal. Udaney enakkonnu vaangiruven.

துளசி கோபால் said...

வாங்க சின்ன அம்மிணி

அதே அதே. ஜஸ்ட் ஒரு நாலே மாசம் பிந்திப்போச்சு:-)))))

வாழ்த்து(க்)களுக்கு நன்றிப்பா

துளசி கோபால் said...

வாங்க கயலு.

நன்றிப்பா.

துளசி கோபால் said...

வாங்க எல். கே.

பக்கம் 352

விலை 200 ரூ

துளசி கோபால் said...

வாங்க குலோ.

வாழ்த்துகளுக்கு நன்றி.

வாசிச்சபிறகு விமரிசனம் எழுதுங்க.

நன்மனம் said...

வாழ்த்துக்கள் டீச்சர்.

கோவி.கண்ணன் said...

நல்வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.

நூல் ஒன்றை முன் பதிவு செய்து கொள்கிறேன்

gulf-tamilan said...

வாழ்த்துகள் டீச்சர்!!!

ராமலக்ஷ்மி said...

வாழ்த்துக்கள் மேடம்.

உங்கள் ‘அக்கா’ தொடரும் புத்தகமாய் வரவேண்டுமென்பது என் விருப்பம்:)!

மதுரையம்பதி said...

வாழ்த்துக்கள் டீச்சர். :-))

பெங்களூரில் கிடைக்குமா?..இங்கு கிடைக்கும் முகவரி இருந்தால் சொல்லுங்க..

சாந்தி மாரியப்பன் said...

வாழ்த்துக்கள் துளசியக்கா.

கோமதி அரசு said...

வாழ்த்துக்கள்!

கோமதி அரசு said...

வாழ்த்துக்கள்!

வல்லிசிம்ஹன் said...

அன்பு துளசி, மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நீங்கள் அனுபவித்து எழுதிய இந்தப் புத்தகமும் எல்லோரையும் போய்ச் சேர வேண்டும். பயனுள்ள பல செய்திகளும் சுவையான சம்பவங்களும் நிறைந்திருக்கும் இந்தத் தொடர் இப்போது புத்தகமாக வந்திருப்பது,அதுவும் பதிவுலக தோழியின் வாயிலாக! மிகவும் பெருமையாக இருக்கிறது. மனப்பூர்வமான வாழ்த்துகள்.

M.Rishan Shareef said...

வாவ்..வாழ்த்துக்கள் டீச்சர்.
உங்கள் புத்தகங்கள் இலங்கையில் எங்கு கிடைக்கும்?

இலவசக்கொத்தனார் said...

ரீச்சர், ஜூப்பரு!!

ILA (a) இளா said...

நீங்க(ளும்) பெரிய்ய்ய எழுத்தாளினி ஆனதுக்கு வாழ்த்துக்கள்!

கோபிநாத் said...

வாழ்த்துக்கள் டீச்சர் ;))))

ஜோதிஜி said...

நான் வாழ்த்துகள் சொல்ல வரவில்லை. கோபத்தை பகிர வந்துள்ளேன்.

கடந்த ஒரு வருடம் தான் என்னுடைய வலை அனுபவம். உங்கள் அனுபவத்தை யோசித்துப் பார்த்தால் மயக்கமே வருகிறது.

நான் படித்தவரைக்கும் எந்த தலைப்பும் வீண் இல்லை என்று உணரக்கூடிய மொத்த இடுகையில் பல உள்ளது போல் உங்களது எழுத்துக்களும் ஒன்று.

ஒவ்வொருவரும் என்னுடைய தரவரிசைப்பட்டியல், வந்தவர் போனவர் என்று சுயபுராணம் பாடாமல் என் கடன் பணி செய்து கிடப்பதும் நீங்கள் தான்.

ஒரு வேளை நீங்கள் நண்பர்கள் என்ற பகுதியை தொடக்கம் முதல் சேர்த்து இருந்தால் குறைந்த பட்சம் இந்நேரம் 600 க்கு மேற்பட்டவர்களாவது உங்களுடன் சேர்ந்த பயணம் செய்து கொண்டுருப்பார்கள்.

வாங்கிய அவார்டு ரிவார்டு என்று எந்த புரூடாவும் விடாமல் எப்படி இப்படி?

மற்றொன்று ஒவ்வொரு புத்தகமும் வெளியிடும் போது தேவைப்படுபவர்கள் மின் அஞ்சல் வாயிலாக தெரியப்படுத்துங்கள் என்று தைரியமாக நீங்கள் உங்கள் கோரிக்கையை வெளியிடலாம்.

புத்தகக்கடைகளில் விற்கும் புத்தகங்கள் என்பதற்கு தனியான உழைப்பு உண்டு. அல்லது விளம்பர வீச்சு என்று ஏதோ நமக்கு புரியாத அரசியல் அது.

ஆனால் இவ்வளவு கஷ்டப்பட்டு உணர்ந்து எழுதி மற்றவர்களுக்கு விரும்புபவர்களுக்கு சேராவிட்டால் அந்த உழைப்புக்கு என்ன அர்த்தம்? பதிப்பாளர்கள் நிலைமை என்ன?

அதன் மூலம் உண்மையான ஆர்வமான மக்களை இனம் கண்டு கொள்ளவும் முடியும்.

தபால் செலவு உடன் மின் அஞ்சலில் சொல்லுங்கள். முகவரி தருகின்றேன்.

இந்த நியூசிலாந்த என்னைப்போன்ற ஏற்றுமதியாளர்களுக்கு மிக முக்கியமான புத்தகம்.

மறுபடியும் வாழ்த்துகள் சொல்ல மாட்டேன். டூடூடூ........

துளசி கோபால் said...

வாங்க நன்மனம்.

வாழ்த்து(க்)களுக்கு நன்றி

துளசி கோபால் said...

வாங்க கோவியாரே.

வாழ்த்துகளுக்கும் பாராட்டுகளுக்கும் நஞ்றி.

புத்தகம் 'சந்தியா'விடம்தான் வாங்கிக்கணும்.

பன்னாட்டு விமான நிலையத்துள்ளே புத்தகக்கடையிலும் இருக்கும்.

துளசி கோபால் said...

வாங்க கல்ஃப் தமிழன்.

வாழ்த்து(க்)களுக்கு நன்றி

துளசி கோபால் said...

வாங்க ராமலக்ஷ்மி.

வாழ்த்துகளுக்கு நன்றிப்பா.

ஆண்டவனின் விருப்பமும் அதுவானால்..... அதுவானால்......

அக்காவும் வரலாம்!

துளசி கோபால் said...

வாங்க மதுரையம்பதி.

வாழ்த்து(க்)களுக்கு நன்றி.

பெங்களூரில் கிடைக்குமா என்று தெரியலை. பதிப்பகத்தாருக்கு ஒரு மடல் அனுப்பி இருக்கேன். தபால்செலவு உட்பட எவ்வளவு அனுப்பினால் அனுப்பித்தருவார்கள்ன்னு கேட்டு.

பதில் வந்ததும் இங்கே தெரிவிக்கிறேன்.

துளசி கோபால் said...

வாங்க அமைதிச்சாரல்.

நன்றிப்பா.

துளசி கோபால் said...

வாங்க கோமதி அரசு.

வாழ்த்து(க்)களுக்கு நன்றிங்க.

துளசி கோபால் said...

வாங்க வல்லி.

உங்களைப்போன்ற நல்ல நட்புகள் கிடைச்சதே இந்தப் பதிவுகள் மூலமாகத்தான்.

எனக்கும் மனசுக்கு நிறைவா இருக்குப்பா. அது ஒரு மூணுவருச உழைப்பு.

துளசி கோபால் said...

வாங்க ரிஷான்.

வாழ்த்து(க்)களுக்கு நன்றி.

இலங்கையில்????

தெரியலையேப்பா:(

துளசி கோபால் said...

வாங்க கொத்ஸ்.

நன்றி. வகுப்புத்தலைவன் இவ்வளோ லேட்டாவா வர்றது????:-))))

துளசி கோபால் said...

வாங்க இளா.

உண்மைதாங்க. ஒரு புத்தகம் போட்ட எழுத்தாளர். ஒன்றுக்கு மேலென்றால் பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய எழுத்தாளர்.

எத்தனை புத்தகமோ அத்தனை 'ய்' சேர்த்துக்கலாம்:-)

துளசி கோபால் said...

வாங்க கோபி.

நன்றி !

துளசி கோபால் said...

வாங்க ஜோதிஜி.

உங்க 'கோபம்' புரியுது. ஆனால் நான், நானாத்தானே இருக்கமுடியும்????

எழுதுவதோடு நம் கடமை முடிஞ்சுருதுன்னுதான் எப்பவும் நினைக்கிறேன்.

அன்பின் மிகுதியால் நட்புகள் தரும் க்ரீடம், வைரம் எல்லாம் மனசுக்குள்ளே இருந்தால் போதாதா?

இதுவரை (ரெண்டே புத்தகம்தான்) விற்பனை விஷயத்தையெல்லாம் கவனிக்கவில்லை. இனிமேலும் அப்படித்தான்.

இன்னிக்குக்கூட நம் தமிழ்மணம் வேலை செய்யலை. அதில் விவரம் வெளிவராமலே போயிருச்சு. ஆனாலும் நட்புகள் கவனிச்சு வந்து பின்னூட்டி வாழ்த்து(க்)களைச் சொல்லி இருக்காங்க.


இந்த அன்பு போதாதா மனம் நிறைய!

ஒருவருக்கு மட்டும் மடலில் விவரம் சொன்னேன்.

பதிப்பகத்துக்கு மடல் அனுப்பி இருக்கேன். பதில் வந்ததும் சொல்றேனே

ராம்ஜி_யாஹூ said...

best wishes

Ganesan said...

வாழ்த்துக்கள் டீச்சர்.
352 பக்கமா?

உழைப்புக்கு நீங்கள் செலுத்திய அன்பின் பால் வெளிவந்த புத்தகமாக உணர்கிறேன்

Muruganandan M.K. said...

வாழ்த்துக்கள் துளசி கோபால். உங்கள் படைப்புகள் நூலாக வந்ததையிட்டு மிக மகிழ்ச்சி.

Porkodi (பொற்கொடி) said...

wow!!! hearty congratulations teacher! :D

virutcham said...

புத்தகம் போடும் அளவு எழுத்தாளர்னு எனக்கு தெரியலையே. பயணம் போயிகிட்டே பதிவு எழுதிகிட்டே இதுக்கும் நேரம் ஒதுக்க முடிஞ்சுதா ?
வாழ்த்துக்கள். வரும் பாதகக் கண்காட்சியில் இடம் பெற மாதிரி சந்தியா அவர்கள் ஏற்பாடு செய்தால் நிறைய பேர் வாங்க எதுவாக இருக்கும்.

கிரி said...

எழுத்தாளர் துளசி கோபாலுக்கு என் வாழ்த்துக்கள் :-)

butterfly Surya said...

ஆஹா. வாழ்த்துகள். வாங்கி படித்துவிட்டு இன்னொருமுறை வாழ்த்துகிறேன்.

கோபால் சார் நலமா..?

HVL said...

வாழ்த்துக்கள்!

துளசி கோபால் said...

வாங்க ராம்ஜி_யாஹூ

நன்றி

தருமி said...

மனமுவந்த வாழ்த்துக்கள்

துளசி கோபால் said...

வாங்க காவேரி கணேஷ்.

428 பக்கங்களில் ஆரம்பிச்சுக் கொஞ்சம் கொஞ்சமா மூணு ப்ரூஃப் ரீடிங் முடிச்சு எடிட் செஞ்சதுலே 352 லே வந்து நின்னுருக்கு.

வாழ்த்து(க்)களுக்கு நன்றி

துளசி கோபால் said...

வாங்க டொக்டர் ஐயா.

நன்றி நன்றி

துளசி கோபால் said...

வாங்க டொக்டர் ஐயா.

நன்றி நன்றி

துளசி கோபால் said...

வாங்க பொற்கொடி.

மிகவும் நன்றிப்பா

துளசி கோபால் said...

வாங்க விருட்சம்.

//பாதகக் கண்காட்சியில்...//

தட்டச்சுப்பிழை என்று நம்புவோமாக:-))))

போன புத்தகம் புத்தகவிழா சமயத்தில்தான் வந்தது.

அடுத்த விழாவுக்கு எப்படியும் ஆறு மாசம் இருக்கே. இன்னொன்றைக் கொண்டுவர முயற்சிக்கலாம்:-)))))

துளசி கோபால் said...

வாங்க கிரி.

நம்ம சிங்கை ஜெயந்தி சங்கர் 20 புத்தகம் போட்டும் அடக்கமா இருக்காங்க. நாம் இப்படி பத்துலே ஒரு பாகம் போட்டு ஆடலாமா? !!!!

வாழ்த்து(க்)களுக்கு நன்றி

துளசி கோபால் said...

வாங்க சூர்யா.

புத்தகம் கைக்கு வந்ததும் உங்களைத்தான் நினைச்சேன். இவ்வளோ பிந்துமுன்னு 'அப்போ' நினைக்கலை:(

கோபால் நலம். அவர்தான் கூடுதல் மகிழ்ச்சியா இருக்கார்.

வாழ்த்து(க்)களுக்கும் விசாரிப்புக்கும் நன்றி

துளசி கோபால் said...

வாங்க ஹெச் வி எல்.

வாழ்த்து(க்)களுக்கும் முதல்வருகைக்கும் நன்றி.

cheena (சீனா) said...

அன்பின் துளசி

நல்வாழ்த்துகள் துளசி - எழுத்தாளராகி புத்த்கம் வெளிவந்ததற்கு - அதுவும் முருகனின் முன்னுரையுடன் - நன்று நன்று

எங்கு கிடைக்கிறது

நல்வாழ்த்துகள் துளசி
நட்புடன் சீனா

மாதேவி said...

'நியூஸி" படைப்புக்குக்கு வாழ்த்துகள் துளசி கோபால்.

மதுரை சரவணன் said...

புத்தகம் வாங்கி படித்து விடுகிறேன். வாழ்த்துக்கள் . என் பிளாக் veeluthukal.blogspot.com ஒரு ஆசிரியரா ஒரு கருத்து சொல்லிட்டு போங்க...

pudugaithendral said...

congrats. romba santhosham

பாரதி மணி said...

ஆமா, அது என்ன //வணக்கம். 'நியூஸிலாந்து ' என்ற தலைப்பில் ஒரு புத்தகம் வெளிவந்துள்ளது//???.பளிச்னு ‘என் புத்தகம்’னு சொல்லவேண்டியது தானே! என்ன தான் தற்பெருமை பிடிக்காதுன்னாலும் இப்படியா?

என்னைப்போல் 'One Book Wonder" ஆக இல்லாமல், ஜெயமோகன் மாதிரி ஆண்டுக்கு பத்து புத்தகங்களாவது வெளிவர என் மனமார்ந்த வாழ்த்துகள்! உங்கள் க்லைச்சேவை நாட்டுக்குத்தேவை!!! உடனே வாங்கிப்படிக்கணும்.

ஆசியுடன்,
பாரதி மணி

முத்துகுமரன் said...

அட்டைப்படத்தில் பூனைக்குட்டி இல்லாததற்கு என் கடுமையான கண்டனங்கள்..

மற்றபடிக்கு வாழ்த்துகள் டீச்சர் :-)

வடுவூர் குமார் said...

வாழ்த்துக்கள்.

virutcham said...

அச்சச்சோ தப்பு தப்பா எழுதிட்டேனா?
சரியாய் புரிந்து கொண்டதற்கு நன்றி
புத்தகக் கண்காட்சி தான்

Santhiya said...

Hearty Congrajulations!!!!My wishes for this one and more books to come.

Unknown said...

oh great... vangiduvoom...

துளசி கோபால் said...

வாங்க தருமி.

நன்றி.

உங்க புத்தகம் வந்துருக்கே. அதுக்கு என் இனிய வாழ்த்து(க்)கள்.

துளசி கோபால் said...

வாங்க சீனா.

நன்றி.

சந்தியாவில் கிடைக்கும். மதுரையில் எங்கேன்னு தெரியலை.

துளசி கோபால் said...

வாங்க மாதேவி.

நன்றிப்பா.

துளசி கோபால் said...

வாங்க மதுரை சரவணன்.

அதென்ன விழுதுகளா?

கல்விக்கான வலைப்பதிவுன்னு போட்டுருக்கீங்க. அதுலே காதல் (கவிதை) இருக்கு.

ஒருவேளை இதுதான் செக்ஸ் எஜுகேஷனோ!!!!!

ச்சும்மா..... நோ அஃபென்ஸ் ப்ளீஸ்

துளசி கோபால் said...

வாங்க புதுகைத் தென்றல்.

நன்றிப்பா.

துளசி கோபால் said...

வாங்க பாரதி மணி ஐயா.

வாழ்த்து(க்)களுக்கு நன்றி.

பத்தா? தாங்காது. சரக்கில்லை:(

'அடக்கம் அமரருள் உய்க்கும்' அதான்.....

படிச்சுட்டு மொத்த விரும்புபவர்களிடம் இருந்தும் தப்பிக்க வழி இருக்கான்னு பார்த்துக்கிட்டு இருக்கேன்:-)

துளசி கோபால் said...

வாங்க முத்துகுமரன்.

போன புத்தகத்தில் அவர்தான் நாயகன்.அட்டையில் வந்தார்.

இதுலேயும் நியூஸி நாட்டுப்பூனைகள்ன்னு ஒன்னு போட்டுருக்கலாமோ!!!!!

துளசி கோபால் said...

வாங்க குமார்.

நன்றி

துளசி கோபால் said...

வாங்க சந்தியா.

நன்றிப்பா.

துளசி கோபால் said...

வாங்க கிருஷ்ண பிரபு.

நன்றி.

வாசிச்சுட்டுச் சொல்லுங்க. கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.

துளசி கோபால் said...

பதிப்பகத்தில் இருந்து வந்த மடல்:

Pls Send Rs. 230/- for All (Local & Outstation)


நூல்கள் வாங்க விரும்புபவர்கள் தங்கள் முகவரியைத் தெளிவாக (தொலைபேசி எண்ணுடன்) எழுதவும்.
சந்தியா பப்ளிகேஷன்ஸ் என்ற பெயரில் வரைவோலை அல்லது பணவிடை
அனுப்பினால் உடனே நூல்களை அனுப்பி வைக்கிறோம்.

மேலும் விவரங்களுக்கு அணுகவும்:
சந்தியா பதிப்பகம்
எண் 57, 53ஆவது தெரு, 9வது அவென்யூ
அசோக் நகர், சென்னை - 600 083
தொலைபேசி 24896979
அலைபேசி 98411 91397

thandora said...

உங்கள் பயனங்களை புத்தக மாக்கி newziland பார்க்க முடியாதவர்களையும் மனகண்ணில் பார்க்க வைத்ததற்கு நன்றி.

மணியன் said...

நன்றே சொன்னீர், வாழ்த்துகள் டீச்சர் !! உங்கள் எழுத்துக்களை அச்சில் காண ஆவலாக உள்ளேன்.

Test said...

வாழ்த்துக்கள் டீச்சர்

துளசி கோபால் said...

வாங்க தண்டோரா.

நியூஸி பயணக்கதைன்னு சொல்ல முடியாது. அங்கேதான் 22 வருசமா இருக்கோம்.

வாழ்ந்து பார்த்த வரலாறு இது:-)

துளசி கோபால் said...

வாங்க மணியன்.

இதோ அதோன்னு கடைசியில் வந்தே விட்டது அச்சில்:-)

வாழ்த்து(க்)களுக்கு நன்றி

துளசி கோபால் said...

வாங்க லோகன்.

வாழ்த்து(க்)களுக்கு நன்றி

KABEER ANBAN said...

வாழ்த்துக்கள் டீச்சர்,

இன்னமும் பல புத்தகங்கள் வெளிவரவேண்டும். சந்தியா பதிப்பகம் வலை வழி விற்பனை செய்வதில்லையா?

தங்கள் உழைப்புக்கு மேலும் சிறப்புகள் கூட இறைவன் அருள் புரியட்டும்.

துளசி கோபால் said...

வாங்க கபீர் அன்பன்.

வாழ்த்து(க்)களுக்கு நன்றி.

பணம் அனுப்பினால் புத்தகம் அனுப்புவாங்களாம். இதே பின்னூட்டங்களில் விவரம் மேலே இருக்குதுங்க.

shansnrmp said...

Author:Thulasi Gopal
Title :New Zealand
Publisher:Sandia Pathipagam
Version:Tamil
Price:200 INR

Books available at Books Park.
Karur.639002

www.thebookspark.com

ப்ரசன்னா said...

Vaazthukkal teacher. Udane vaangiduren. Padichittu innoru comment

cheena (சீனா) said...

மதுரையில் மல்லிகை புக் செண்டரில் 10 % தள்ளுபடியில் நியூஸிலாந்து வாங்கி விட்டேன் - படிக்கணும் - படிக்கறேன் - சரியா

நல்வாழ்த்துகள் துளசி
நட்புடன் சீனா

அது ஒரு கனாக் காலம் said...

வாழ்த்துக்கள் டீச்சர் .... ஊருக்கு வரும் பொழுது கண்டிப்பா வாங்கிடனும்

துளசி கோபால் said...

வாங்க ஷண்முகம்.

முதல்வரவுக்கு நன்றி.

தகவல்களுக்கும் நன்றி.

வாசித்து முடித்துவிட்டு உங்கள் கருத்துக்களைச் சொன்னால் மகிழ்வேன்.

துளசி கோபால் said...

வாங்க ப்ரசன்னா.

வாழ்த்து(க்)களுக்கு நன்றி.

கருத்துக்களுக்கு.... காத்திருக்கிறேன்.

துளசி கோபால் said...

ஆஹா... பத்து சதம் கழிவா!!!!

ஜமாய்ங்க சீனா:-)

நீங்களும் செல்வியும் உங்க கருத்துக்களைச் சொல்வீங்கன்னு ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

துளசி கோபால் said...

வாங்க அது ஒரு கனாக் காலம்.

வாழ்த்து(க்)களுக்கு நன்றி.

ஊர் விஜயம் எப்போ?

மறக்காம இருக்க முடிச்சுப்போட்டு வச்சாச்சா? :-))))

shansnrmp said...

ஆசிரியர் அவர்களுக்கு ,
தங்களின் நியுசிலாந்து
புத்தகத்தில் இன்னும் சில
பகுதிகலே படிக்க வேண்டி
உள்ளது.கருத்துரு நிலையில்
மட்டுமே உள்ளது

துளசி கோபால் said...

வாங்க ஷண்முகம்.

இன்னும் இந்தியாவில்தான் இருக்கேன். வாசிச்சு முடிச்சதும் ஆட்டோ அனுப்புவீங்களா?

மொத்தணுமுன்னா நேரிலும் வரலாம்:-))))

கருத்துக்களை எதிர்நோக்கிக் காத்திருக்கேன்.

shansnrmp said...

அன்புள்ள ஆசிரியருக்கு ,
வணக்கம் ...வேலையும் பள்ளியும் தொடங்கி ,கடைசியாக என் மனதில் இருந்து முடிய ..உங்கள் பதிவுகள் ஆழமாகவே உள்ளது.
அங்கங்கு ஏற்படும் சில சலிப்புகள் கூட உங்கள் பேச்சு வழக்கு எழுது நடையிலும் , நூல் முழுதும் விரவியிருக்கும் உங்கள் நகைச்சுவையாலும் ஈடுகட்டபடுகிறது ..''புலம் பெயர்ந்த இலக்கியத்திற்கும் ,பயண இலக்கியத்திற்கும் நடுபடது '' என்று சொன்து மிகையாகது..மாவோரிகளின் வருகை , ஆங்கிலேயர்களின் புதிய கண்டுபிடிப்பு , பின்னர் மண்ணின் மைந்தர்களான மாவோரிகளை வெற்றிகொள்தல்..மிக விரிவாகவே பதிந்த உள்ளீர்கள் .தங்களின் கிரைஸ்ட் சர்ச் நகர அமைப்பு , கவுன்சிலில் அறுபது சதம் விடு தோட்டத்திற்கு ஒதுக்க வேண்டிய கட்டாயம் இத்தியாதி ...மிகவும் அருமை தற்பொழுதுள்ள அரசியல் நிலவரங்கள் ,ஊழல் குறைந்த உலக நாடுகளில் நியுசிகு இரண்டாவது இடம்..மிக நன்றாக எழுதியுளிர்கள் ..நன்றி

சந்தியா பதிப்பகத்தாரின் பதிப்புகள் நேர்த்தியாகவும் அழகாகவும் உள்ளது ..அவர்களுக்கும் நன்றி..

அன்புடன் சண்முகம்

shansnrmp said...

cont...நியூசியில் தமிழரின் நிலை குறித்து சிறிது எழுதியிருக்கலாம் ..புத்தகத்தின் கூடுதல் நிலை
குறித்து விட்டுவிட்டீர்கள் என்று நினைக்கிறன்..
தங்களின் பார்வைக்கு .... தஞ்சை தமிழ் பழ்கலை
கழகம் வெளியிட்டுள tamils abroad non -asian countries
author s நடராஜன் அவர்களின் நூலில் நியூசி தமிழர்களை
பற்றிய விபரங்கங்கள் கிடைகின்றன .
''In 1856 in Newzealand A ship-bell with Tamil letters engraved on it was discovered..''
request to my beloved author mrs thulasigopal to pls note the above said version..
think, it may b very helpful to you..
நன்றி .. அன்புடன் ஷண்முகம்

ஜோதிஜி said...

அங்கங்கு ஏற்படும் சில சலிப்புகள் கூட உங்கள் பேச்சு வழக்கு எழுது நடையிலும் , நூல் முழுதும் விரவியிருக்கும் உங்கள் நகைச்சுவையாலும் ஈடுகட்டபடுகிறது

100% correct

துளசி கோபால் said...

வாங்க ஷண்முகம்.

ஒருவழியா வாசிச்சு முடிச்சுட்டீங்க.

ஆரம்பகால அரசியல் நிலவரங்களும், குறிப்பாக மண்ணின் மைந்தர்கள் , இடங்கள் பெயர்களும் கொஞ்சம் சலிப்பைத் தருவதென்னவோ உண்மைதான். ஆனால் வரலாறை மாற்றி எழுத முடியாதில்லையா?

நியூஸியைப் பொறுத்தவரை தமிழர்கள் நிலை நன்றாகவே இருக்கிறது. தனியாகப் பிரிச்சுப்பார்த்து சௌகரியங்கள் செஞ்சுக்கவேண்டியதில்லை. எல்லா மக்களைப்போலவே அவர்களும் நடத்தப்படுகிறார்கள். அதான் சட்டம் ஒழுங்கு அனைவருக்கும் சமம் என்று இருப்பதால் அனைத்தும் ஒரு ஒழுங்கோடவே இருக்கு இதுவரை.

நீங்கள் கொடுத்த கூடுதல் விவரங்களுக்கு நன்றி. இந்த வெண்கலமணியை வெலிங்டன் நகர அருங்காட்சியகத்துலே வச்சுருக்காங்க. பல நூற்றாண்டுகளுக்கு முன் கடல் வாணிபத்தில் சிறப்பா இருந்த காலக்கட்டத்துலே கடல் நீரில் அடிச்சுவரப்பட்டதாக இருக்கணும்.

இதைப்பற்றி ஓரிரு வரிகள் தொலைக்காட்சியில் பார்த்த நினைவு.

தங்கள் பொறுமைக்கு ஒரு சல்யூட்.

நன்றி. வணக்கம்.

துளசி கோபால் said...

வாங்க ஜோதிஜி.

சிரிக்கத் தெரியாத மனுஷன் ஜீவிச்சு இருந்து என்ன பயன்?
அதான் அங்கங்கே முடிஞ்சவரை ஒரு சின்னப் புன்முறுவலையாவது முகத்துலே கொண்டுவரலாமேன்னு .....

ஒரு முயற்சி:-)

shansnrmp said...

Dear author,
thanx for ur reply dated on 6/26/10
I, know its difficult to trace the evidence
about the early migration of the Tamils in
NZ. ok.
i hv logged on ur Fiji site.it is very nice.
in this i wish to exert every efforts to you.

Unless NYZ , Fiji is an island of inhabitants many
Indians,especially Tamils.Need not to say that we hv
enough evidence about the migration of the Tamils.

Rejoice with salute for ur Fiji book..

bye.

keep in touch
shivashanmugam

துளசி கோபால் said...

வாங்க சிவஷண்முகம்.

நியூஸியும் ஒரு தீவுதான். ஃபிஜியை விடப் பெருசு.

தங்களுடைய கருத்துக்களுக்கு நன்றி. அடுத்த பதிப்பில்(?) இன்னும் கொஞ்சம் சேர்த்து எழுதலாம் என்றிருக்கிறேன்.

shansnrmp said...

பெண்னென்று சொல்லடியோ
ஒரு பேயும் இறங்கும் என்பார்..........
.................................
தெற்கு மாகடலுக்கு நடுவினிலே
ஆங்கோர் கண்ணற்ற தீவினிலே
தனிக் காட்டினிற் பெண்கள் புழுங்குகின்றார்
அந்த கரும்பு தோட்டத்தினிலே .

''என் மகள் பிறந்தபோது, தன் மூப்பையும் பார்க்காமல் நம் வீட்டிற்கே வந்து குழந்தையைத் தூக்கிவைத்துக் கொண்டு ஆசீர்வதித்தார்கள்.அவர்கள் வெளியே போவதை நிறுத்தியே பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஏனோ உங்கள் வீட்டுக்குக் கட்டாயமாகப் போகவேண்டும் என்றுசொன்னார்கள் என்று அவருடைய மகன் தெரிவித்தார்.''

படிக்கும்போது மனதில் இருந்த பாரத்தை இறகிவைததுபோல்
இருந்தது ...நன்றி
அன்புடன்
சிவஷன்முகம்

Advocate P.R.Jayarajan said...

எனக்கொரு புத்தகம் வேண்டும்...

Advocate P.R.Jayarajan said...

என்னோடது 100-வது காமன்ண்டா அல்லது 101-ஆ?

Advocate P.R.Jayarajan said...

100-தான். ரொம்ப சந்தோசம்..
இதுவரைக்கும் எந்த பதிவுக்கும் இந்த அளவு கமன்ட் நான் பாத்ததில்லை..