Monday, June 14, 2010

நரசிங்கமியாவ் :-)

மெள்ள காதுக்கருகில் வந்து 'அது பூனை'ம்மான்னார் கோபால். நெசமாவா? கண்ணை அங்கே ஓட்டினேன். மேல்பாதி சரி. கேட்ஸ் ஃபேமிலி.. ' கிட்டே போகும் வழி மண்பாதையா இருக்கே. வெறுங்காலுடன் நீ வராதே நான் போய் பார்க்கிறேன்'னு போனவர் சொல்றார்.

அழகான சின்னதா ஒரு அலங்கார நுழைவு வாயில். இளங்காளியம்மன் கோவில். மூணு நிலைக் கோபுரத்தோடு கருவரையில் காளி. கொஞ்சம் கூட்டம் இருக்கு. ஏதோ குடும்ப விழா போல. இன்னொருபக்கம் ஷாமியானா போட்டுச் சமையல் விறுவிறுப்பா நடக்குது. பெரிய பெரிய பாத்திரங்களில் ஆக்கிக்கிட்டு இருக்காங்க. வெங்காயம் தக்காளி பச்சைமிளகாய் அரிஞ்சு வச்சது சின்னக் குன்றுகளாக!சந்நிதிக்கு முன்பு இருக்கும் மண்டபத்தில் கூட்டம். உறுமிக்கொட்டு ஓசையெழுப்பக் காத்துக்கிடக்கு. சின்னக்குடங்களில் நூல் சுற்றிக் கட்டிக்கிட்டு இருக்காங்க கலசம் வைக்க. நூல் சுற்றுபவர்தான் பூசாரியாக இருக்கணும். அவராண்டைபோய் ஒரு கும்புடு போட்டுக்கிட்டு தூரக்கே தெரிஞ்ச சிலையைக் காட்டி, 'என்ன சாமி?'ன்னேன். 'ஆங்...... அதுவா......ராமாயணம். ராமர் சண்டை போட்டாரு. மூனாவது அவதாரம்'னு குழறும் குரலில் சொன்னார். ஃபுல் தண்ணி இந்த நேரத்துலே. குழறல் வாய்க்கு மட்டும்தான் (அதானே குடிக்குது) ஆனா எம்பூட்டுக் குடிச்சாலும் ஆளு ஸ்டெடின்றதுபோல் கைகள் மட்டும் பரபரன்னு கலசத்துலே நூல் சுத்துது!
பஞ்சபாண்டவர் என்றால் தெரியாதா, கட்டில் காலைப்போல் மூணு பேர் என்று சொல்லி, ரெண்டுவிரல் காட்டி, ஒரு கோடு எழுதினானாம்!
என்னடா இந்த 'பூனை'க்கு வந்த நிலமைன்னு உத்துப் பார்த்தேன். மரப்பாச்சி போல இருக்கும் ஹிரண்யகசிபுவை மடியில் வச்சுருக்கும் நர சிங்கம்!! அடுத்து ஒரு கூரைப்போட்ட சந்நிதி நவகிரகங்களுக்கானது. இருந்த இடத்தில் இருந்தே கேமெராவை ஜூம்(??) செய்ஞ்சு எல்லோரையும் கிட்டவரவழைச்சுப் பார்த்துக்கிட்டு இருந்தேன். கூடி இருந்த பசங்களுக்கெல்லாம் இண்ட்ரெஸ்ட்டு கூடிப்போச்சு. என்னை எடுங்க என்னை எடுங்க டிவிலே வருமான்னு கேக்குதுங்க அப்பாவிகளா!
தலவிருட்சமான வேப்பமரத்தடி மேடைக்குப் பக்கத்தில் மொழ அகல சரிகைச்சேலை கட்டுன பெண் பொங்கல்வச்சுக்கிட்டு இருந்தாங்க. எனக்கு ரொம்பப் பிடிச்சப் பச்சைக்கலரும் சக்கரைப்பொங்கலும். ஆஹா.....

தலவிருட்சத்தை மொட்டை அடிக்கிற வேண்டுதலோ என்னவோ..... கிளைகிளையா உடைச்சுத் தோரணம் கட்டுவதும் வாளி நிறைய மஞ்சத்தண்ணீர் கலக்குவதுமா இன்னொரு பக்கம் வேலைகள் பரபரன்னு நடக்குது.

என்ன விழான்னு விசாரிச்சேன். காதுகுத்தப் போறாங்களாம். ஒரு ஆறேழுவயசு இருக்கும் விழா நாயகிக்கு. பொண்ணு பெயரைத்தான் மறந்துட்டேன். ஏதோ சினிமா நடிகை பெயருன்னு மட்டும் நினைவில் இருக்கு. நமீதா? ஊஹூம்....இப்போதைக்கு விழாநாயகின்னே வச்சுக்கலாம்.
பிங்க் நிற உடுப்பில் ஜொலிப்பு.
சின்னப்பசங்க கூட்டம் ஓடியாடிக்கிட்டு இருப்பது ஒரு பக்கம், பூஜைக்கான ஏற்பாடுகளைக் கவனிக்கும் பெரியவர்கள் ஒரு பக்கம். விருந்துக்கானவைகளை ஆக்கி எடுக்கும் 'ஆண்கள்' ஒரு பக்கமுன்னு எந்தக் காலத்திலோ நடந்த, என் மனசின் உள்ளே ஒளிஞ்சு நின்ன காட்சிகள் இப்போ இதோ என் கண் முன்னால்.
எதுக்கெடுத்தாலும் போஸ்டர், பேனர், ஆடம்பரமுன்னு போய்க்கிட்டு இருக்கும் இந்தக் காலத்தில் இப்படி எளிமையா நடக்கும் குடும்ப விழாக்களைப் பார்ப்பதே அபூர்வமாகிக்கிடக்கே.
நாகரீக உலகில் மனசில் கள்ளம் சீக்கிரம் நுழைஞ்சுருது. அதுவும் நகரங்களில் குழந்தைத்தனத்தைத் தக்கவைப்பது கஷ்டமான காரியம். இங்கே இந்தப் பிள்ளைகளைப் பார்க்கும்போது மனசுக்குள்ளே ஒரு நிறைவு வந்துச்சு. அதே சமயம் கள்ளமில்லாத குழந்தைத்தனத்தைத் தொலைத்த ஒரு தலைமுறையின் நினைவு கொஞ்சம் சங்கடப்படுத்தியதும் உண்மைதான்.
கோவில் வளாகத்தில் நாகேஸ்வரிக்குன்னு ஒரு தனிச்சந்நிதி இருக்கு. தரிசனம் செஞ்சுக்கிட்டு அங்கிருந்து கிளம்பினோம். பேசாம இங்கேயே இருந்து சாப்பிட்டுப் போயிருக்கலாமோன்னார் கோபால். 'கடா வெட்டு' நடக்கப்போகுதுன்னார் ட்ரைவர். நெசமாவா?

'அங்கே ஒரு பக்கம் கட்டிப்போட்டுருந்தாங்களே'ன்னார். ஐயோ...... நல்லவேளை நான் பார்க்கலை. இல்லைன்னா மனக்குடைச்சல் ஆகி இருக்கும்:(
ஒத்தாண்டவருக்கும் எனக்கும் அதென்னவோ நேரம் ஒத்துப்போகலை. இதுவரை நாலுமுறை இந்தப் பாதையில் வந்தாச்சு. ஒவ்வொருமுறையும் சாத்திய கதவுதான். எப்போ தாழ் திறக்கப்போறாரோ? காலையில் 11 மணிக்கெல்லாம் கோவிலைப் பூட்டிட்டால் எப்படிங்க??


சாப்பாடுன்னதும் எங்கியாவது போய்த்தானே ஆகணுமுன்னு ஈஸிஆர் ரோடில் மால்குடிக்குப் போனோம். ரெஸ்டாரண்டின் உள் அலங்காரங்கள் நல்லா இருக்கு. குழந்தைகளுக்கு மொழி அறிமுகத்தை விளையாட்டாச் செஞ்சுருக்காங்க. கோலம் போட்ட மெனு கார்ட் அழகு. சாப்பாடும் பரவாயில்லை.
ஆனா நான்வெஜ் அயிட்டங்கள் பயங்கரக் காரமுன்னு கோபால் சொன்னார். நடப்பன, ஊர்வன, நீந்துவன, பறப்பனன்னு எல்லாமே நான்வெஜ் 'தாலி'யில் இன்க்ளூடட்.

மண் அடுப்புக்குள்ளில் மாடர்ன் கேஸ். அருமை. மாலைவேளைகளில் ஆப்பம், தோசை எல்லாம் கண்முன்னே செஞ்சு தர்றாங்களாம்.

36 comments:

said...

a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_FCAIce2NVWk/TBXOaz3WPEI/AAAAAAAAL7c/eztsCockoUc/s1600/SDC10377.JPG">

==========

"a onblur" munnaal oru "<" miss ayiduchu. Fix pannungo.

Anonymous said...

//பொண்ணு பெயரைத்தான் மறந்துட்டேன். ஏதோ சினிமா நடிகை பெயருன்னு மட்டும் நினைவில் இருக்கு. நமீதா? ஊஹூம்.//

நமீதாவா :)

உங்களுக்கு பிடிச்ச நடிகை நமீதாவா?
கேஆரெஸ் நடத்துன ஒரு புதிர்ல கூட நமீதான்னு 'கரெக்டா' பதில் சொல்லியிருந்தீங்க :)

said...

Tirumalisai is nice. There are lot of small vilages temples in and around chennai

said...

வாங்க ராஜ்.

முனை முறிஞ்சது எப்படின்னு தெரியலை. இப்பச் சரி பண்ணி இருக்கேன்.

கவனிச்சுச் சொன்னதுக்கு ரொம்ப நன்றி

வருதான்னு பாருங்க

said...

வாங்க சின்ன அம்மிணி.

புதுசா வந்தவங்க பெயர் ஒன்னும் நினைவில் இல்லைப்பா. நான் கொஞ்சம் பழையகாலத்து ஆளு.

மச்சான்களின் விருப்பம் எதுவோ அதுவே...மச்சிகளின் விருப்பமானால்..... ஆனால்.... ஆனால்....

said...

வாங்க ராம்ஜி_யாஹூ.

உண்மைதான். நகர எல்லையை விட்டுப் போகணும். நேரம் கிடைப்பதுதான் அருமை!

said...

ஒத்தாண்டவர், சாயந்திர வேளைல கட்சி கொடுப்பார் துளசி.

காது குத்தல் படங்களும் கோவில் காட்சிகளும் நல்லா இருந்துச்சு.
வால் சிங்கள் பூனை மாதிரி போஸ் கொடுக்கிறாரெ.:)

காதுகுத்திக்கப் போற பொண்ணு பேரு சிநேகா.:)

said...

கிராம‌க்குழ‌ந்தைக‌ளின் க‌ண்ணில் ஒரு க‌வ‌ர்ச்சி இருக்கும்,இதே மாதிரி வேலூர் ர‌த்தின‌கிரி கோவிலில் ஒரு கிராம‌க்குழ‌ந்தையை ப‌ட‌ம் எடுத்த‌ ஞாப‌க‌ம் வ‌ருது.

said...

\\மச்சான்களின் விருப்பம் எதுவோ அதுவே...மச்சிகளின் விருப்பமானால்..... ஆனால்.... ஆனால்// ஹாஹாஹா..

ஆமா நீங்க சொன்னமாதிரி குழந்தைகளிடம் இருக்கும் கள்ளங்கபடமில்லா தூய்மைக்கு இப்ப குறைவு தான்..

said...

உற்றுப் பார்க்கும் அந்த பெண் குழந்தையின் படம் கண்ணில் இருந்து மறைய நாளாகும். இந்த முறை படங்கள் ரொம்ப கவிதையாய் இருந்தது.

said...

உங்களுக்குன்னே ஸ்பெசலா தலைப்பு ஆர்டர் செய்யுவீங்களாக்கும்:)

said...

//உற்றுப் பார்க்கும் அந்த பெண் குழந்தையின் படம் கண்ணில் இருந்து மறைய நாளாகும். இந்த முறை படங்கள் ரொம்ப கவிதையாய் இருந்தது.//

கண்கள் மட்டும் தனியா டாலடிக்குது.

எனக்கு சாப்பாட்டு பாத்திரமே கவிதை.

said...

கோவில் படம் நல்லா இருக்கு டீச்சர். போட்டோவிலேகூட நல்ல வெயில் தெரிகிறது கோவிலை சுற்றி மரங்கள் குறைவு என்பதால்.சாப்பாடு நல்லா இருக்கு டீச்சர்:))))))

said...

டீச்சர் ஒரு காலத்துல இதே மாதிரி பிஜியில் பொங்கல் கிண்டின போட்டோ நினைவுக்கு வந்தது..:)

said...

வணக்கம் டீச்சர். ரெண்டு மாசமா ஊரில் இல்ல...திரும்ப வந்தவுடனே டீச்சரோட பொங்கலும்,மால்குடி விருந்தும்...மிச்சத்த படிச்சுட்டு வந்துடுறேன்.

said...

வாங்க வல்லி.

பொழுது சாயுமுன் கூடடையணும் என்பதால் கொஞ்சம் தொலைவிலே இருக்குமிடங்களுக்குப் போகமுடிவதில்லைப்பா:(

சிநேகாவா? ம்ம்ம்ம்ம் இல்லை.
ரம்பாவோ???

said...

வாங்க குமார்.

குழந்தை வயசு வேற அப்படி. ஒரு மூணு வயசுதான் இருக்கும். மிரட்சி கலந்த ஒரு ஆர்வம் பார்வையில்:-)

said...

வாங்க கயலு.

அதிவேக வளர்ச்சி காரணமோ?

இன்னிக்கே விதை நட்டு, இப்பவே பழம் பறிக்கணும் என்ற கொதிப்பு:(

said...

வாங்க ஜோதிஜி.
'நாகரீகக் கலப்பு' இல்லாத எளிமை, அலங்காரம், செய்கை இதெல்லாம்தான் காரணம்.

இன்னும் சிலவருசங்களில் இவையும் 'காணாமல்' போகலாம்:(

said...

வாங்க ராஜ நடராஜன்.

தலைப்பு ஒன்னுதான் எப்பவும் நல்லா அமைஞ்சு போகுது:)


வயிற்றுக்கும் வேண்டிதானே இருக்கு. கவிதையைச் சொன்னேன்:-)

said...

வாங்க சுமதி.

எனக்கும் யாராவது ஆக்கி வைக்கும் சாப்பாடு இப்பெல்லாம் நல்லாவே இருக்கு:-)

said...

வாங்க தமிழ் பிரியன்.

ஆஹா.... நினைவு இருக்கா!!!!

அது நீலப்புடவை இங்கே பச்சை:-))))

said...

வாங்க சிந்து.

என்னமா ஒரு வரவேற்பு பார்த்தீங்களா?

விருந்து முடிஞ்சதுன்னு அரியர்ஸ் ஆரம்பிங்க.

said...

Poonaiyo puliyo illainga. Recharge pannuthunu adutha avatharaththukku.

said...

present teacher.

said...

//மொழ அகல சரிகைச்சேலை கட்டுன பெண் பொங்கல்வச்சுக்கிட்டு இருந்தாங்க. எனக்கு ரொம்பப் பிடிச்சப் பச்சைக்கலரும் சக்கரைப்பொங்கலும். ஆஹா.....//

மொழ அகல சரிகைச்சேலை...சான்ஸே இல்லை.அட்லீஸ்ட் சர்க்கரைப் பொப்க்கலாவது கெடச்சுதா?

said...

//இப்படி எளிமையா நடக்கும் குடும்ப விழாக்களைப் பார்ப்பதே அபூர்வமாகிக்கிடக்கே.//

உண்மைதான் துள்சி!

எங்க பெரியதாத்தா இருந்தவரை அவரது பிறந்தநாளை ஆழ்வார்குறிச்சி சிவசைலம் கோவிலில் கொண்டாடுவோம்.குடும்பம் மொத்தமும் அங்கேதானிருக்கும். சொன்னாமாதிரி சமையலும் சாப்பாடும் அமர்க்களப்படும்.ஹூம்...அது ஒரு காலம்!!!

said...

சுவரஸ்யமான பதிவு, படங்களுடன்.

said...

வாங்க ஹூ நோஸ்.

முதல்வருகைக்கு வணக்கம்.

அடுத்த அவதாரமுன்னா கல்கிக்கு முன்னாலெயா?

இருந்தாலும் இருக்கும், சாமீஸ் ஐடியாக்கள் எல்லாம் 'யாருக்குத் தெரியும்'? :-)

said...

வாங்க காஞ்சனா.

வருகைக்கு நன்றி.

said...

வாங்க நானானி.

'வெட்டுக்குப் பிறகுதான்' பொங்கல் கிடைக்குமில்லையா? நமக்கு நோ ச்சான்ஸ்:(

ஊரையெல்லாம் கூட்டாமக் குடும்பம் எல்லாமே சேர்ந்து செய்யும்விழாவை நானும் சின்னப்பிள்ளையா இருக்கும்போது அனுபவிச்சு இருக்கேன்.

பெரிய குடும்பம் என்பதால் அரை ஊர் வந்த மாதிரிதான்:-))))

said...

படங்கள் கிராமத்து விழாக்களை நினைவூட்டுகின்றன.

said...

வாங்க மாதேவி.

இது சென்னையை ஒட்டியே இருக்கும் கிராமம்தான் இப்போதைக்கு.

said...

என்னதான் மலேசிய காரிய நான் பிறந்திட்டாலும் நம்ம நாட்டு சமையலு என்ன விட்டு போய்டும ?

said...

வாங்க தனாசின்னதுரை.

அதானே? ஊர் விட்டுப்போயிட்டால் சாப்புடாம இருந்துருவோமா?

இல்லை..ருசி பழகுன நாக்கைத்தான் வெட்டிப்போட்டுர முடியுதா?

எனக்குக் கூட்டாளி ஆகிட்டீங்க நீங்களும் இப்போ:-)

மலேசிய நண்பர்கள் நமக்கு ஏராளம்.

said...

டீச்சர் ரெம்ப நாளா பாடம் படிக்கவரலைனா மாண்புமிகு மாணவன் பட்டம் கிடைக்குமா ?