Sunday, October 19, 2008

பச்சை + வெள்ளை = ?

ப்ரொக்கலிக்கும் காலி ஃப்ளவருக்கும் கல்யாணம்

'வாளைமீனுக்கும்....' ராகத்தில் பாடிப்பாருங்க. சரியா வருதா?

ஆச்சு கல்யாணம். அப்புறம் குழந்தை குட்டிங்கதானே? அப்படிப் பொறந்ததுதான் இந்த ப்ரொக்கோ ஃப்ளவர்.(Brocco flower) அப்படியே காலியை உரிச்சுவச்சமாதிரி வடிவம். ப்ரொக்கி ஜாடையில்(வண்ணத்தில்) அழுத்தமா இல்லாம, வெள்ளையுடன் ஒரு தீற்றல் கலந்த பச்சையா ஒரு பொ(பு)து நிறம். சிநேகாக் கலர்ன்னு இப்ப வலம்வருதே அந்த நிறமா இது இருக்கோ? ( புடவை ஒன்னு வாங்கி வச்சுருக்கு. வெளியே எடுத்துப் பார்த்துட்டுச் சொல்லவா?














ப்ரொக்கொ பூ ( மேலே 2 படங்கள்)

புதுக் காய்களை உங்களுக்கு அறிமுகப்படுத்தும் பொறுப்புணர்ச்சியோடு இருந்த என் கண்ணுக்கு இது மட்டுமில்லாம இன்னொண்ணும் அகப்பட்டது. இதுக்குப் பெயர் விட்லோஃப். (whitlof) தாமரை மொட்டுப்போல இருந்துச்சு. விலை கொஞ்சம் அதிகம்தான். கிலோ 15 டாலர். நாமென்ன ஒரு கிலோவா வாங்கப்போறோம்? சின்னதா ஒரு பூ போதும். தின்னு பார்த்துட்டு ஆவன செய்வோமே......


100 கிராம் கூட இல்லாத அந்த பூவுக்கு தப்பான எண்ணில் தட்டிக் கடைக்காரம்மா 2.85 வாங்கிருச்சுன்னு நாலைஞ்சு நாளைக்குப் பிறகுதான் கண்டுபிடிச்சேன். (கார்லே அந்த ரசீது விழுந்து கிடந்துச்சு) சரியான மண்டகப்படி கிடைச்சது கோபாலுக்கு. எத்தனை முறை சொல்லி இருக்கேன், ஸ்கேன் செஞ்சு விலை மானிட்டரில் தெரியும்போது ஒரு கண்ணு வைக்கணுமுன்னு! ப்ரோக்கோப் பூவைப் பத்தி அந்தம்மாக்கிட்டேச் சின்னப்பேச்சுக் கொடுத்துக்கிட்டே நம்ம புத்திமதியைக் கோட்டை விட்டுருக்கார்(-:

சூப்பர்மார்கெட்டுலேயும் கவனமா இல்லாட்டி , தேவையில்லாமக் காசை வீணாக்கணும். வேலை செய்யும் பசங்க எல்லாம் ஹைஸ்கூல் மாணாக்கர்கள். பகுதி நேர வேலை இங்கேதான் சுலபமாக் கிடைக்கும். ஏனோ தானோன்னு பில் போடறதுதான். பல காய்கறி & பழங்ககளின் பெயர் தெரியாம சூப்பர்வைசரைக் கூப்பிட்டுக் கேப்பாங்க சிலர்(-: தப்பான பில்லைக் காட்டிக் கேட்டோமுன்னா இருக்கவே இருக்கு oops...sorry!

இந்த விட்லோஃப் மனுசனை விட்டியாக்கிருச்சு. சாலட்லே அப்படியே சேர்க்கும் லெட்டூஸ் வகைதான். சேர்த்தேன். நறுக்கினதும் உள்ளே பார்த்தால் சவாய் கேபேஜ் போல் சில இதழ்களில் அலையாய் ஒரு நெளிவு.. சுவை?
நல்லாவே இல்லை. லேசான கசப்பு. இதுக்கும் சேர்த்து கருவிக்கிட்டு இருக்கேன் மனுசனை இப்ப.



அந்தப் ப்ரொக்கோ பூவும் அப்படி ஒன்னும் நல்ல ருசியா இல்லை. அதே காலியின் சுவைதான். அதுவும் நம்ம ஸ்டைலில் மிளகாய், மஞ்சள், மல்லின்னு சேர்த்ததும் நிறம் மாறி ஒரு அழுக்குப் பச்சையா இருந்துச்சு.

ஆகக்கூடி இன்றைய சமையல் தண்ட வகையில் வந்தது(-:

சரி. ஒருநாள் அப்படின்னா ஒரு நாள் இப்படித்தான். அதுதான் வாழ்க்கை( அடடா என்னா தத்துவம். என்னா தத்துவம்)

அது இருக்கட்டும் ....வந்துட்டுப்போறவுங்க வெறுங்கையாப் போகாம, இதோ இது என்னன்னு கண்டுபிடிச்சுச் சொல்லிட்டுப் போங்க.



42 comments:

said...

//
வந்துட்டுப்போறவுங்க வெறுங்கையாப் போகாம, இதோ இது என்னன்னு கண்டுபிடிச்சுச் சொல்லிட்டுப் போங்க.
//


எதை டீச்சர்? :0)

said...

ப்ரோக்கோ ஃபிளவர் ரொம்ப கலர்ஃபுல்லா இருக்கு..ஒரு வேளை அதை இன்டியன் ஸ்டல்ல பண்ணாது, ஜஸ்ட் ஸ்டீமிங் மட்டும் பண்ணா நல்லாருக்குமோ? தவிர ப்ரோக்லி, கேப்பேஜ் இதை இன்டியன் ஸ்டைல்ல பண்ணாலே நல்லா வராதே, ஸ்டீமிங் ட்ரை பண்ணி பாருங்க!

said...

வாங்க அதுசரி.

//எதை டீச்சர்? :0)//

அதுசரி............. படம் பார்க்கலையா?

அந்தக் கடைசி..........

ஸ்டீம் பண்ணியெல்லாம் பார்த்தாச்சு. ஆனால் சப்பாத்திக்குத் தொட்டுக்கணுமுன்னா கொஞ்சம் கறியாத்தான் செய்யவேண்டி இருக்கு.

said...

பீங்கான் பெளல். சரியா? என்ன உபயோகத்துக்குன்னு தெரியல.

அங்கும் அப்படியா? இங்கே பிரபல சூப்பர் மார்க்கெட் ஒன்றில் ஒரு தடவை ஒரு பாக்கெட் நல்லெண்ணெய்க்கு பதில் 8 பாக்கெட் என பில் அடித்து விட்டார்கள். தோராயமா நமக்கு எவ்வளவு வரும்னு மனசில ஒரு கணக்கு இருக்கும்தானே? கண்ணில அதே எண்ணெயை விட்டுக் கொண்டுதான் இருக்க வேண்டியிருக்கு பில் போடுகையில்:))!

said...

பிராக்கோ பூ பாக்க நல்லா இருக்கு, அடுத்த முறை வாங்கிட்டு வந்து வீட்ல வாங்கிக்கறேன்.:)

said...

ப்ரொக்கலி இங்க கூட கிடைக்குது... நமக்கும் சமையலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதால் வாங்கும் சந்தர்ப்பம் கிடையாது.
அந்த பெளல் உப்பு, மிளகு போட்டு வைக்கிறதுக்கா?

said...

கொஞ்சம் கொஞ்சமா ஊத்திக் கலக்கவேண்டிய எதோ ஒரு விசயத்துக்கு உதவும்ன்னு தோணுது..இந்த கிண்ணம்.அடுக்கடுக்கா இருக்கே.

said...

விட்லோஃப்
சீன முட்டகோஸ் மாதிரி இருக்கு.ஒரு தடவை சிங்கையில் வாங்கி அது தண்ணீர் வற்றுவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.

said...

இந்த whitlof வெஜ் பார்த்தால்,கேபேஜுக்கும் லெட்யூஸ்[சரியா எழுதியிருக்கேனா]தம்பதியருக்குப் பிறந்த குழந்தை மாதிரி ரெண்டு பேரோட ஜாடையையும் அப்படியே உரிச்சு வச்சிருக்கு....

said...

அந்த வட்ட தட்டு, அடுக்கடுக்காய் இருப்பதைப் பார்த்தால்,பிளேட்டை சாய்க்காமலேயே ,ரசம் சாதம்,பாயாசம் போன்ற திரவ உணவுகளை, கடைசி சொட்டு விடாமல் ,வெட்டுவதற்கு ஏதுவாக இருக்கும் போலிருக்கு.....சரிதானே?

said...

இந்த whitlof வெஜ் பார்த்தால்,கேபேஜுக்கும் லெட்யூஸ்[சரியா எழுதியிருக்கேனா]தம்பதியருக்குப் பிறந்த குழந்தை மாதிரி ரெண்டு பேரோட ஜாடையையும் அப்படியே உரிச்சு வச்சிருக்கு....

said...

//
வந்துட்டுப்போறவுங்க வெறுங்கையாப் போகாம, இதோ இது என்னன்னு கண்டுபிடிச்சுச் சொல்லிட்டுப் போங்க.
//

Coffee கப் வெக்கிற சாசர் (Saucer)..சரியா??

said...

எதோ பவுல் மதிரி இரூக்கு. ஆனா உங்களை வச்சுகிட்டு ஒண்ணும் சொல்ல முடியாது.
எதையாவது ஏலியன் போட்டோவா இருக்கும்னுநினைக்கிறேன். ப்ரொக்கோலியே ரெண்டாம் பட்சம். இய்தில் க்ராஸ் வேற:)
ஆளைவிடு!!!!!

said...

படங்கள் அழகாக இருக்கின்றன. இந்த Whitlof நானும் ஒரு முறை வாங்கினேன்.
1 ரீ ஸ்பூன் ஓயிலில் பூண்டு வெங்காயம், பட்டை தாளித்த பின் சிறியதாக வெட்டிய கிழங்கும் சேர்த்து விட்லோவ் கொட்டிக் கிளறி 1/4 கப் தேங்காயப்பால் உப்பு, மிளகாய்ப் பொடி, தனியா பொடி சேர்த்து பிரட்டல் கறியாகச் செய்து எடுத்திருந்தேன். சாப்பிடக் கூடியதாக இருந்தது.

said...

டீச்சர்... இதெல்லாம் இங்கயும் கெடைக்குது. ப்ரோக்கோபூவுல புளிக்கொழம்பு வெச்சுப்பாருங்க. சூப்பரா இருக்கும். இல்லைன்னா.... லேசா மெளகா வெங்கயாத்தோட வதக்கி....புளி சேத்துத் துவையல் அரைச்சிருங்க. சூப்பரோ சூப்பரு.

இதே மாதிரி அஸ்பாரகஸ் கிடைக்கும். அதுலயும் கொழம்பு வைக்கலாம். இல்லைன்னா....அஸ்பாரகஸ்+குடமிளகாய் போட்டு கூட்டு வெச்சாலும் நல்லாருக்கும்.

கீழ இருக்குறது பீங்கான் தட்டா? மொமொன்னு எழுதீருக்கு. அப்படியொரு தின்பண்டமும் இருக்கு.

Anonymous said...

துளசி டீச்சர்,

http://thooya.blogspot.com/2008/10/blog-post_2581.html

நன்றி

said...

வாங்க ராமலக்ஷ்மி.

வேணுமுன்னு செய்யதில்லை. எல்லாம் கீ போர்டில் தட்டும்போது தப்பானதை அடிப்பதால்தான். நாமும் கவனமா இருந்தோமுன்னா பிரச்சனை இல்லை.

கஷ்டப்பட்டுச் சம்பாரிக்கும் காசை ஏனோதானோன்னு விடமுடியுதா? அதுவும் கடைக்காரருக்கு ஏன் விடணும்? சாரிட்டிக்கா நடத்தறாங்க?

பீங்கான் தான். விடையை கொஞ்சநேரத்தில் பதிவிடறேன்

said...

வாங்க குடுகுடுப்பை.

நம்ம ராகவன் ஒரு செய்முறை போட்டுருக்கார் பாருங்க.

said...

வாங்க தமிழ் பிரியன்.

உப்புன்னதும் இன்னொண்ணு நினைவுக்கு வருது.

ப்ரொகொலியை ப்ரைய்ட் ரைஸ்லே சேர்த்துக்கலாம். கலர்ஃபுல்லாவும் இருக்கும். சத்தும் உள்ளது.

said...

வாங்க கயலு.

கொஞ்சம் கொஞ்சமா ஊத்தி.....ஆஹா..... கொஞ்சம் பக்கத்துலே வந்துருக்கீங்க:-)

said...

வாங்க குமார்.

இது லெட்டூஸ் வகையாம். ஸாலட் செஞ்சுக்கலாம்.

ஆனா சமைக்கலாமான்னு தெரியலை. நம்ம மாதேவி பின்னூட்டத்துலே ஒரு செய்முறைச் சொல்லி இருக்காங்க பாருங்க.

said...

வாங்க கோமா.

எல்லாம் சரியாத்தான் சொல்லி இருக்கீங்க:-)


ரசம் சாதம் , பாயசம் ......

நோ ச்சான்ஸ்!

விடைப் பதிவு விரைவில்:-)

said...

வாங்க வெண்பூ.

நோ கப் & நோ சாஸர்:-)

said...

வாங்க வல்லி.

பவுல்தானா?


ப்ரொகொலி ரெண்டாம் பட்சமா?

ஒருமுறை நான் ஒரு அறுவை சிகிச்சை முடிஞ்சு வீட்டுக்கு வந்தநாளில் நம்ம தோழி இதுலே சத்து நிறையன்னு ஒரு சூப் பண்ணிக்கிட்டு வந்து கொடுத்தாங்க. என் நிலை எப்படி இருந்துருக்கும்!!!!

தோழி ஒரு டாக்டர் என்பது உபரித் தகவல்:-)

said...

வாங்க மாதேவி.
செய்முறைக்கு நன்றி. அடுத்தமுறை செஞ்சுறலாம்.

said...

வாங்க ராகவன்.

அஸ்பாரகஸ் இங்கேயும் கிடைக்குது. இதை அப்படியே நிக்கவச்சு ஸ்டீம் செய்ய ஒரு பாத்திரம்கூட விக்கறாங்க. நம்மூர் தூக்குப்போணி மாதிரி. (ஒன்னு வாங்கிட்டொம்லெ)

துவையல் படிக்க நல்லா இருக்கு. செஞ்சுருவொம்.

said...

வாங்க தூயா.

அழைப்புக்கு நன்றி.

முயற்சிக்கிறேன்.

said...

hink that bowl is from petshop

said...

சகல்கலாவல்லி துளசி எதை வைத்து வேண்டுமானலும் சுவாரசியமாக எழுதுவதில் திறமைசாலி - பொறாமையாக இருக்கிறது

said...

goma,

நம்ம ஜிகேவுக்கு இந்த அளவு சரிப்படாது. உள்ளங்கை அளவுதாம்ப்பா இருக்கு.

said...

வாங்க சீனா.

திறமைசாலி.....

?????????
அப்டீன்னா என்ன?

ட்யூஷன் எடுக்கணுமுன்னா ரெடி.

என்ன சொல்றீங்க?:-)

said...

appO athu bath tub for
GK.
hi hi :))

said...

check out the comments/suggestions for ur pic
http://picasaweb.google.com/pitcontests/PIT_October_2008_Entries#5256516226182535954
;)

said...

இந்த விட்ஃலோப் பெரிசு பெரிசா நறுக்கிப்போட்ட சூப்பை சாப்பிட்டிருக்கிறேன். நல்லாதானிருந்துச்சு! எனக்கு வித்தியாசமான சுவைகளும் ருசிகளும் ட்ரைபண்ணப் பிடிக்கும்.

said...

ப்ராக்கலி என் மகள் அருமையாக சூப் செய்து தருவாள். நல்லாருக்கும்

said...

கப் & சாசரின் சாசர் அது சர்தானா..துள்சி..சர்தானா?

said...

அக்கா,
கோபால் மாமா பண்ண முக்கியமான தப்பு அந்த பில்லைத் தூக்கிப் போடாம கார்ல விட்டது தான் போல :)

said...

கோமா,

ஜிகேவோட கை மட்டும்தான் டப்புக்குள்ளே போகமுடியும்:-))))

சொல்ல மறந்துட்டேனே. ஜிகேவை நலம் விசாரிச்சதுக்கு நன்றி சொல்லச் சொன்னான். அவன் பாவம். எழுதத் தெரியாத கைநாட்டு:-)

said...

வாங்க சர்வேசன்.

ரொம்ப நன்றி. நீங்க சொல்லாட்டி அந்தப் பக்கம் போயே இருக்கமாட்டேன்!

said...

வாங்க நானானி.

சூப்புலே போட்டதால் அந்தச் சிறுங்கசப்பு தெரிஞ்சுருக்காது இல்லே?

கொடுத்துவச்ச மகராசி. மகள் சூப்பெல்லாம் செஞ்சு தர்றாங்க.

கப்பும் இல்லை சாஸரும் இல்லைப்பா:-))))

said...

வாங்க பொன்ஸ்.
நலமா? ஆளையே காணோம்?

கடைசியில் ப்ரொக்கொல்லி உங்களை இழுத்தாந்துருச்சு:-))))


கோபால் இந்தப் பதிவைப் படிச்சதில் இருந்து கார் படு சுத்தமா இருக்கு:-))))))

said...

ராகவன்,

உங்க பின்னூட்டங்களைப் படிச்சுட்டு, நீங்க சமையலிலும் கெட்டின்னு கோபால் சொல்லிக்கிட்டே இருக்கார்!!!!

ஆமாம். அந்த மொமொ என்னமாதிரி தின்பண்டமுன்னு சொல்லுங்களேன்.

இந்த மொமொ ஒரு ப்ராண்ட் நேம்தான். எல்லாமே சீனத் தயாரிப்புன்னாலும் இந்தக் குறிப்பிட்ட ப்ராண்ட் பீங்கான் பாத்திரங்கள் ரொம்பவே தரம் உள்ளது. சீனரும் காசுக்கேத்தமாதிரி செஞ்சு அனுப்புறாங்க.