Thursday, October 16, 2008

பொழுதன்னிக்கும் சினிமா, என்ன சினிமா?

சரியான ஆளாப் பார்த்துத்தான் பாபா தொடர் பதிவுக்கு அழைச்சுருக்கார். தமிழனையும் சினிமாவையும் பிரிக்கவே முடியாதுன்னு சொல்லிக்கிட்டு இருப்பேன். ஆனாத் தமிழ்நாட்டைவிட்டு வெளியே வந்தபிறகுதான் அது தமிழனைன்னு தப்பாச் சொல்லிட்டோம்! மனுசன்னு இருக்கணுமுன்னு தோணிச்சு. ஆனா ஒன்னு தமிழ்சினிமா நடிகனையும் அரசியலையும் பிரிக்க(வே)முடியாதுன்றதுதான் இப்போதைய உண்மை. அது இருக்கட்டும் ஒரு பக்கம். இப்பக் கேட்ட கேள்விக்குப் பதிலைச் சொல்லிட்டுப் போறேன்:-)

நம்ம கயல்விழி முத்துலெட்சுமியும் வெள்ளாட்டுக்குக் கூப்புட்டாஹ.


1 - அ. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?

சரியா நினைவில்லை. வீட்டுலே எப்பச் சினிமாவுக்குக் கிளம்பறாங்களோ அப்ப எல்லாம் கூடவே போறதுதான்.

சினிமாவோடு உள்ள தொடர்பு( ச்சும்மாப் பார்ப்பதில் மட்டும்) விட்டுவிட்டு இருந்துச்சு. முதல் 10 வயதுவரை ஓரளவு மாசம் ஒரு முறைன்னு இருக்கும். அப்புறம் சில வருசம் படமே பார்க்கலை. ஹாஸ்டல் வாசத்தில் மாசம் ரெண்டு மூணு. கல்யாணத்துக்குப் பிறகு தமிழ்நாட்டை விட்டாச்சு. நாட்டை விட்டுப் போன இடத்தில் முதல் 6 வருசம் சில தமிழ்ப் படங்களை ஹாங்காங்கில் இருந்து வரவழைச்சுப் பார்த்தோம். நியூஸி வந்த பிறகு ஒரு 10 வருசம் 'நோ டமில்' படம். ஊர்போய் வரும் வழியில் சிங்கையில் இருந்து நாலைஞ்சு வாங்குவோம். இப்ப 9 வருசமா தமிழ்ப்படங்கள் பார்க்க ஆரம்பிச்சாச்சு.1 - ஆ, நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா?

அரையும் முக்காலுமா நிறையப்படம் பார்த்துருக்கேன். பாதியிலே தூங்கி, சினிமா விட்டும் எழுந்திரிக்காமத் தூங்கிக்கிட்டே அக்கா இடுப்பிலே சவாரி செஞ்சு வர்றதும் உண்டு. முதல் சினிமா............கீலு குர்ரம் (தெலுகு)

1 - இ. என்ன உணர்ந்தீர்கள்?

கடலை முட்டாயைக் கையில் வச்சுருந்தோமே...அது எங்கியோ விழுந்துருச்சு போல இருக்கேன்னுதான் பலமுறையும்.2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

வெய்யில்னு ஒரு தமிழ்ப்படம் 2007 வது வருசம் ஜனவரி முதல் தேதி. புரசைவாக்கம் அபிராமி தியேட்டரில். அதுக்கு முன்னே அரங்கில் பார்த்த்து மகளிர்மட்டும். தேவி பாலாவில் 1994 ஜூன் மாசம்.

நியூஸியில் கடைசியாக அரங்கில் பார்த்தப் படம் ஹிந்தி. ஜ்யோதா அக்பர்.
(பயமா இருந்துச்சு. அரங்கில் கோபாலும் நானுமா நாங்கள் இருவர்மட்டும்)

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

புதுசுன்னா.................சத்யம். நம்ம வீட்டுலேதான். வேற எங்கே? உணர அதுலே என்ன இருக்கு? ஆங்.............

கதாநாயகன் நெஞ்சுலே சுடப்பட்டு இறந்துபோறது அதிசயமா இருந்துச்சு. ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோய், ஆப்பரேஷன் செஞ்சு குண்டுகளை எடுத்து,'டொங்'ன்னு அந்த கிட்னி ட்ரேயில் போட்டுருவாங்க. ஆஸ்பத்திரி வெளியில் கோடிக்கணக்கான மக்கள்ஸ் வந்து குய்யோ முறையோன்னு கத்துவாங்க. கதை நாயகி, கோவிலில் தொங்கும் மணிகளை எல்லாம் ஆவேசமா அடிச்சுக்கிட்டேப் பாட்டுப்பாடிக் கையில் கற்பூரம் ஏத்திக்கிட்டு சாமிகிட்டே சபதம் போடுவாங்கன்னு நினைச்சேன். ஏமாத்திட்டாங்க:-)))))

முந்தாநாள் கடைசியாப் பார்த்த ஹிந்திப்படம் Shaurya. காஷ்மீர் அட்டகாசமா இருக்கு.


4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா.

துலாபாரம். சாரதா நடிச்சது. சினிமாப் பார்க்கும்போது எதுக்கும் அழுவாதக் கல்மனசுக்காரி அப்படித் தேம்பித் தேம்பி அழுதேன். இந்தப் படம் மட்டும்தான்.

சென்னையில் வாழ்ந்த காலத்தில் மேற்குமாம்பலம் நேஷனலில் வரும் பழைய படங்களை ஒன்னுவிடாமல் பார்த்துருவேன். இப்பக்கூட பழைய சினிமா ஒன்னு 'எம் ஜி.ஆர் நடிச்ச அபிமன்யூ' வாங்கிவந்தேன். எம் ஜி ஆர் எப்ப வருவாரோன்னு கண்ணைத் திறந்துவச்சுக்கிட்டே இருந்தேன். படம் முடிய ஒரு நிமிசம் இருக்கும்போது வந்தார்:-)

இப்ப ஒரு 9 வருசமா நான் தமிழ்ப் படங்களுக்கான வீfடியோ லைப்ரெரி நடத்திக்கிட்டு இருக்கேன். எல்லாக் குப்பைகளும் வந்துருது. அதனால் தாக்கம் கீக்கமுன்னு ஒன்னுமே வர்றதில்லை.

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - அரசியல் சம்பவம்?

அப்படி ஒன்னும் இல்லை.


5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?

தொழில்நுட்பமுன்னு சொன்னால்...இந்த க்ராஃபிக்ஸ் வச்சுக்கிட்டுப்பூந்து வெள்ளாடுறாங்க. இது மட்டும் இல்லைன்னா எல்லாம் ஊத்திக்கும்.


6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

விகடன், குமுதத்தை வேற என்னன்னு சொல்றது? அந்தக் காலத்தில் பேசும்படம்னு ஒரு பத்திரிக்கையில் சினிமாச் சமாச்சாரம் வரும். இப்ப எல்லாப் பத்திரிக்கைகளும் சினிமாவையே முன்னிறுத்தி வியாபாரம் செய்வதால் ச்சீன்னு போச்சு. ஆனா ஒன்னு, சினிமா விமரிசனம் மட்டும் நான் படம் பார்க்குமுன் படிக்கவே மாட்டேன். எந்த முன்முடிவும் இல்லாமப் படம் பார்க்கத்தான் பிடிக்கும்.


7. தமிழ்ச்சினிமா இசை?

கர்நாடக இசையில் மட்டுமே ஆரம்பிச்ச சினிமா இசை, அதுக்குப்பிறகு பலகட்டங்களைத் தாண்டி இப்ப இரைச்சலில் வந்து நின்னுருக்கு. (60,70,80 களில் பாடல்கள் நல்லா இருந்துச்சு) என்னாலே இப்போதுவரும் எதையும் ரசிக்க முடியலை. எப்பவாவதுத் தப்பித்தவறி ஒன்னோரெண்டோ கொஞ்சம் மெலோடியா வருவதைமட்டும் விரும்பிக் கேக்கறேன். ஆனா எங்க வீட்டிலே கோபாலுக்கு எல்லாப் பாட்டுமே பிடிக்கும் என்பதுதான் என் வாழ்வின் மிகப்பெரிய சோகம்! காதுக்கு மூடி இருந்தாத் தேவலைன்னு நினைச்சுக்கிட்டே 'இயர்ப்ளக்' வச்சுக்குவேன்.

உண்மையைச் சொன்னால் பாடல் காட்சிகள், குழு நடனங்கள் எல்லாத்தையும் நம்ம படங்களில் இருந்து தூக்கணும். படத்தை, ரசிகர்மனதில் கொண்டுபோக பின்னணி இசை மட்டுமே போதும்.


8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

மலையாளம், ஹிந்திப் படங்கள் பார்ப்பேன். உலகமொழின்னா ஆங்கிலப்படங்கள் எப்பவாவது பார்ப்பேன். உள்ளூர் தொலைக்காட்சியில் வாரம் 4 சினிமா வருதுதான். ஆனா நான் பார்க்க விரும்பலை.

கூடுதல் செய்தி: எங்க வீட்டுலே கேபிள் டிவி, சன் டிவி, ஸ்டார் ப்ளஸ் இப்படி எதுவும் போட்டுக்கலை.

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

ஐயோ நல்லாக் கேட்டீங்க. இங்கே படப்பிடிப்புக்கு வரும் குழுவினருடன் நல்ல தொடர்பு இருந்துச்சு. அவுங்களுக்கெல்லாம் உள்நாட்டுலே, ஒர்க் பர்மிட் முதக்கொண்டு எல்லா வசதிகளும் செஞ்சு கொடுப்பவர் நம்ம நெருங்கிய நண்பர். அவர் ஃபிஜி இந்தியர் என்பதால் தென்னிந்தியக் குழுவரும்போது மொழிக்குழப்பம். அங்கேதான் என் 'பணி' இருந்துச்சு.

பல பிரபலங்களையும் சந்திச்சோம், போட்டோ எடுத்திக்கிட்டோம், அவுங்களுக்கு நம்ம சாப்பாடு எல்லாம் செஞ்சு கொடுத்தோமுன்னு இருந்தோம்.
சிலர் வந்தவுடன் நமக்கு தொலைபேசுவாங்க. (நம்ம வீட்டுக் குழம்பு ருசி லேசுலே விட்டுருமா என்ன?)
உள்ளூர் வசதி செய்யும் நண்பர்ன்னு சொன்னேன் பாருங்க, அவர் ஒரு படப்பிடிப்பு நடந்துக்கிட்டு இருக்கும்போது மாரடைப்பில் காலமாகிட்டார். அப்போ முதல் எனக்கும் சினிமாக்காரங்களைச் சந்திக்கும் சுவாரசியம் விட்டுப்போச்சு.

வெளிநாட்டுலே நாலு பாட்டு எடுத்துட்டா தமிழ் சினிமா மேம்பட்டுருமா என்ன?

நியூஸின்னா
ஆளில்லாத ரோட்டிலே
டூயட்:-)10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

புதுசுபுதுசா படங்கள் வந்துக்கிட்டுத்தான் இருக்கும். பட உலகக் கனவோடு மக்கள் நகரத்துக்கு வந்துக்கிட்டுதான் இருக்கப்போறாங்க. நாட்டோட மக்கள் தொகை இந்த அளவில் பெருகிக்கிட்டே இருக்கும்வரை எல்லாம் வந்துதானே ஆகணும். தரமான படங்கள் வருமான்னுதான் தெரியாது. நாட்டை வழிநடத்தும் தலைவன் சினிமா மூலம்தான் வரணுமுன்னு 'விதி' இருக்கு(-:


11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

விட்டது சனியன்னு இருக்கும். இதைப்போல இன்னும் சில விஷயங்களுக்கும் ஒரு பத்துவருசம் தடா போடணும். அது இங்கே இப்போ வேணாம். பின்னாளில் ஒருசமயம் சொல்வேன்.

தமிழர்களுக்கு என்ன ஆகுமுன்னா......... முதல்லே கொஞ்சநாள் கதறிட்டு, அப்புறம் உருப்படியா நேரத்தை செலவு செய்வாங்க.

ஏண்டா இவகிட்டேக் கேட்டோமுன்னு தவிக்காதீங்கப்பா. மனசுலே உள்ளதை உள்ளபடிச் சொல்லணும்தானே? நானென்ன நடிக்கவா முடியும்?

இந்தத் தொடர் பதிவுக்கு நான் அழைக்கவிரும்பும் நண்பர்கள் எல்லோரையும் ஏற்கெனவே பலர் அழைச்சுட்டதால் கொஞ்சம் தேடிப்பார்க்கணும் விட்டுப்போனவங்க இருக்காங்களான்னு.

1. நானானி (தமிழ்நாடு இந்தியா)

2 ராமநாதன் ( ரஷியாப் புகழ்)

3. உதயகுமார் (வெளிகண்ட நாதர்)

4 சின்ன அம்மிணி (ஆஸ்தராலியா)

5 கிவியன் ( ஸ்காட்லாந்து)

மேலே சொன்ன பஞ்ச ரத்தினங்கள் எங்கிருந்தாலும் உடனே மேடைக்கு வரணுமுன்னு அன்புடன் அழைக்கின்றேன்.

என்றும் அன்புடன்,
துளசி.

56 comments:

said...

அடடா..

நான் இப்ப தான் உங்களை சினிமா பத்தி எழுத அழைத்து ஒரு பதிவு போட்டேன்..அதுக்குள்ள வேற யாரோ முந்திக்கிட்டாங்க போலிருக்கே!

said...

//கூடுதல் செய்தி: எங்க வீட்டுலே கேபிள் டிவி, சன் டிவி, ஸ்டார் ப்ளஸ் இப்படி எதுவும் போட்டுக்கலை.//

வாரத்துக்கு 3 பதிவு போடறீங்க, இதிலிருந்தே எங்களுக்கு தெரியுது டீச்ச்ர்.

said...

உண்மையா சினிமா பத்திச் சொல்ல வேண்டியது இப்படித்தான்.
வெளியூர்ல இருந்துகிட்டு சந்திவி பார்க்காம இருக்கிறவங்க நீங்க ஒருத்தராத்தான் இருக்க முடியும். இந்த ஊரில இவங்களைத் தவிர மத்த எல்லாரும் விஜய்,ஜயான்னு முழக்கறாங்க.சீரியல் ஒண்ணுத்தையும் விடறது கிடையாது. வேலைக்குப் போகிற பொண்ணு கூட ஏதோ ஒரு சீரியல் பார்ப்பதற்காக வீட்டுக்கு ஓடி வந்து பார்த்துட்டு அப்புறம்தான் பிள்ளைகளையே கவனிக்கறா:))

said...

ரீச்சர்,

நீங்க என் பதிவில் சொன்ன பின்னூட்டத்துக்கு இங்க ரிப்பீட்டே சொல்லிக்கிறேன். ஆனா அதுக்குப் பதில் அங்கதான்!! :))

said...

கேள்வியையே பிரிச்சி கேள்வியாக்கி யாதர்த்தமான பதில்கள் சொல்லி கலக்கிட்டிங்க டீச்சர் ;)

said...

அரிதாரம் பூசாத நேர்மையான பதில்கள். அரங்கில் அமர்ந்து பார்த்தது 1994-க்குப் பிறகு 2007-ல் தான் என்கிற செய்தி வியக்க வைத்தது. 2003-க்கப்புறம் எனக்கு அடுத்த வாய்ப்பு இன்னும் கிடைக்கவில்லை.

said...

\\
தமிழனையும் சினிமாவையும் பிரிக்கவே முடியாதுன்னு சொல்லிக்கிட்டு இருப்பேன்
\\

யார் சொன்னது...இந்த உண்மையை...:)

said...

அதிரடியான பதில்கள் டீச்சர்...!

said...

அனுபவத்தோட எழுதி இருக்கறிங்க...

said...

சினிமாவுக்கும் உங்களுக்கும் தொடர்பு குறைவு தான் போல.. :)
தமிழ் தொ(ல்)லைக் காட்சி இல்லையென்பதால் தமிழக அரசியல் தெரியும் வாய்ப்பு குறைவு தான். நல்ல விஷயம்.

said...

துள்சி!
இந்திய துணைக்கண்டத்திலிருந்து வரும் ஒரே...ஒரு விவிவிஐபினு ஒசத்தீட்டீங்க.
இப்பத்தான் ஜல்ப்பு,இருமல் எல்லாம் கொறஞ்சிருக்கு. இருந்தாலும் நியூசி விஐபியின் அழைப்பை ஏற்று வருகிறேன். நேற்றே வல்லியும் அழைத்துவிட்டார்கள். ரெண்டு பேருக்கும் சேத்து. சேரியா..?

said...

கடைசியில் பெரிய குண்டா தூக்கிப்போட்டுட்டீங்களே! பாட்டு டேன்ஸ் வேணாமா.. படம் இல்லன்னா கூட பரவாயில்லை பாட்டு இல்லன்னா பசங்க என்ன பண்ணுவாங்க..

said...

present teacher! :))))))

said...

//புதுசுன்னா................சத்யம்//


ஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:(:(:( நான் என் வருத்தத்தை தெரிவிச்சிக்கறேன்

said...

//இப்பக்கூட பழைய சினிமா ஒன்னு 'எம் ஜி.ஆர் நடிச்ச அபிமன்யூ' வாங்கிவந்தேன். எம் ஜி ஆர் எப்ப வருவாரோன்னு கண்ணைத் திறந்துவச்சுக்கிட்டே இருந்தேன். படம் முடிய ஒரு நிமிசம் இருக்கும்போது வந்தார்:-)
//

சின்ன பொண்ணா இருக்கறப்போ, தூர்தர்ஷனில் இந்தப் படம் போட்டப்போ, என்கிட்டயும் இதச்சொல்லி ஏமாத்தியே(எனக்கு அப்போ எம்ஜிஆர், ரஜினி, கார்த்திக் படங்கள்னா அவ்ளோ பிடிக்கும்) அன்னைக்கு முழுசா என்னை நல்ல பொண்ணா ஆக்கி கொடுமப்படுத்தினாங்க, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்........ கடசீல பவ்வ்வ்வ்வ்வ்வ்வ் ஆனதுதான் மிச்சம்

said...

//விகடன், குமுதத்தை வேற என்னன்னு சொல்றது? அந்தக் காலத்தில் பேசும்படம்னு ஒரு பத்திரிக்கையில் சினிமாச் சமாச்சாரம் வரும். இப்ப எல்லாப் பத்திரிக்கைகளும் சினிமாவையே முன்னிறுத்தி வியாபாரம் செய்வதால் ச்சீன்னு போச்சு.//

super:):):)


//கதாநாயகன் நெஞ்சுலே சுடப்பட்டு இறந்துபோறது அதிசயமா இருந்துச்சு. ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோய், ஆப்பரேஷன் செஞ்சு குண்டுகளை எடுத்து,'டொங்'ன்னு அந்த கிட்னி ட்ரேயில் போட்டுருவாங்க. ஆஸ்பத்திரி வெளியில் கோடிக்கணக்கான மக்கள்ஸ் வந்து குய்யோ முறையோன்னு கத்துவாங்க. கதை நாயகி, கோவிலில் தொங்கும் மணிகளை எல்லாம் ஆவேசமா அடிச்சுக்கிட்டேப் பாட்டுப்பாடிக் கையில் கற்பூரம் ஏத்திக்கிட்டு சாமிகிட்டே சபதம் போடுவாங்கன்னு நினைச்சேன். ஏமாத்திட்டாங்க//

:):):):):):)

said...

ஹை ரொம்ப ரொம்ப நல்லாயிருந்தது..!! :)))))))என்ஜாய் பண்ணி படிச்சேன்..!! :))

said...

வணக்கம் நியுசியின் ஏக போக பதிவாயினி,

"பஞ்ச்-ரத்தினங்கள்ள" நம்ம பேரயும் இழுத்துவுட்டுடீங்க. பாய பிராண்டியாவது எழுத பாக்குறேன். ஆடி அம்மாவாசையா இருந்தாலும் எப்ப பதிவு போட்டாலும் உங்களுக்கு தெரிஞ்சுருது. வருகைக்கு நன்றிய இங்க சொல்லிக்கிறேன்.

said...

நல்லா சுவாரசியமா எழுதியிருக்கீங்க. ரசிச்சுப் படிச்சேன்.

said...

//1 - இ. என்ன உணர்ந்தீர்கள்?

கடலை முட்டாயைக் கையில் வச்சுருந்தோமே...அது எங்கியோ விழுந்துருச்சு போல இருக்கேன்னுதான் பலமுறையும்.//

சிரிக்கிறேன் சிரிக்கிறேன். சிரிச்சுக்கிட்டே இருக்கிறேன்:)))!

said...

//விட்டது சனியன்னு இருக்கும்//...ரொம்ப ரசித்தேன் இந்த வரிகளை :))

said...

//'வெயில்'னு ஒரு தமிழ்ப்படம் 2007- வது வருசம் ஜனவரி முதல் தேதி. புரசைவாக்கம் அபிராமி தியேட்டரில்.//

அப்போ எங்களுக்கே தெரியாம, எங்க ஊருக்கு வந்துட்டு, எங்களையும் பார்க்காம படத்தை மட்டும் பார்த்திட்டு திரும்பிப் போயிருக்கீங்க..

டீச்சர் இது உங்களுக்கே நியாயமா..

said...

வாங்க அதுசரி..

பந்திக்கு முந்திக்கிட்டதாலே இன்னொருக்காச் சாப்பிட முடியலை(-:

ஒரே ஒரு வயிறு வச்சவனை என்னான்னு சொல்றது.....

said...

வாங்க குடுகுடுப்பை.

ரேடியோ கூடப் பரவாயில்லைப்பா. ஆனா இந்த டிவி நேரங்கொல்லியா இருக்கே(-:

said...

வாங்க வல்லி.

அவுங்கெல்லாம் 'ருசி கண்ட பூனைகள்'
நானு, இந்த தனியார் சேனல்கள் வருமுன்னே நாட்டை விட்டு எஸ்கேப்பு ஆனதால் ருசி தெரியாம 'வளர்ந்துட்டேன்'ப்பா:-))))

said...

வாங்க கொத்ஸ்.

அதெல்லாம் அங்கெயும் பார்த்துட்டொம்லெ:-)

said...

வாங்க கோபி.

உண்மையையே சொல்லும்போது இப்படியெல்லாம் ஆகிருதுப்பா:-))))

said...

வாங்க ரத்னேஷ் சீனியர்.

அந்த 1994 படம் கூட சரியா நாலு வருசம் நாலு மாசம் நாலு நாள் கழிச்சு இந்தியா வந்தப்பப் பார்த்ததுதான். அண்ணன் மகள் கல்யாணமுன்னு புண்ணியம் கட்டிக்கிட்டாள். இல்லேன்னா அப்போ ஊருக்கே வந்துருக்க மாட்டோம். அதுக்கப்புறம் சிலபல தடவைகள் வந்தாலும் இருக்கும் சில நாட்களில் நண்பர்களையும் உறவுகளையும் சந்திக்கவே நேரம் சரியா இருந்துச்சு.

படம் பார்க்கன்னு மூணு நாலுமணி நேரம் செலவிடமுடியலை.

said...

வாங்க தமிழன்.

இப்படி அதிரடியாப் பின்னூட்டம் போடும் உங்க ஸ்டைல்தான் ரொம்பப் பிடிச்சிருக்கு:-)

said...

வாங்க தமிழ் பிரியன்.

விட்டதைப் புடிக்கிறமாதிரித்தான் இப்பத் தமிழ்சினிமாவோடு 9 வருசம் தொடர்பு.

இதையும் இந்த டிசம்பரோடு முடிச்சுக்கலாமான்னு இருக்கு. நம்ம வீடியோ லைப்ரெரியில் வரும் 100 சதவீத லாபத்தை அப்படியே ஒருசிலச் சாரிட்டிகளுக்குக் கொடுக்கறோம். இப்பப் பலர் வீடுகளில் சன் இத்தியாதிகள் வந்துருச்சு. மேலும் கம்ப்யூட்டரில் டவுன்லோடு செஞ்சு பார்த்துக்கறாங்க. நட்டத்தில் ஓடும் லைப்ரெரியை நடத்தணுமான்னு யோசனை.

படத்துக்கு நஷ்டப்படும் காசை அப்படியே தர்மத்துக்கு அனுப்பிறலாமுன்னு இருக்கேன். குறைஞ்சது நம்ம நேரமாவது மிச்சம் ஆகுமே.

said...

வாங்க நானானி.

வாராய் நீ வாராய்ன்னு நீங்க ஆரம்பிக்கும்போதே தெரியும், சரியான பார்ட்டி நீங்கதான்னு.

ஆரம்பியுங்க கச்சேரியை:-)))

said...

வாங்க கயலு.

யாரை நம்பி நாம் பொறந்தோம்?

சினிமாப் பாட்டுக்களையா? நீங்க வேற....

சினிமா வருமுன்பும் ஆடல் பாடல்கள் இருந்துச்சேம்மா. எத்தனை அழகான பாடல்களை நாட்டியமா மேடைகளில் பார்க்கிறோம்.

பாரதியார் பாடல்களுக்கு நாட்டியம் ஆடுனாவே போதுமே.

இப்போ வரும் சினிமாப் பாட்டுக்கு நடனமாடினா உடம்புபூரா சுளுக்கிக்காதா!!!

வெறும் பாட்டுக்களுக்காகத் தனி ஆல்பம் வரணும்ப்பா.

said...

வாங்க கீதா.

கொத்ஸின் வழியிலே நடக்க ஆரம்பிச்சாச்சா? :-))))))

said...

வாங்க ராப்.

அனுபவிச்சுப் படிச்சீங்கன்னு புரியுது:-)))
இன்னிக்குத்தான் தனம், ஜெயம் கொண்டான் வந்துருக்கு:-)

said...

வாங்க ஸ்ரீமதி.

எனக்கும் ஒரு தோழி உங்க பெயரில் இருக்காள். காஞ்சீபுரத்துக்காரி. அவளோடு அடிச்ச லூட்டியெல்லாம் நினைவுக்கு வருது:-)

said...

வாங்க கிவியன்.

நாட்டையே எனக்கு மட்டும் பட்டாப் போட்டுக் கொடுத்துட்டீங்க.

நன்றிக்கடனா உங்களை ரீடர்லே போட்டு வச்சுருக்கேன். அதான் 'டான்'ன்னு பார்த்துப்புடறது:-)

said...

வாங்க ஜ்யோவ்ராம் சுந்தர்.

அடடா.... வராதவங்க வந்துருக்கீங்க!
நலமா?

அடிக்கடி வந்து போங்க. நம்ம வீடுதான்.

said...

வாங்க ராமலக்ஷ்மி.

சிரிப்பு தான் ஆரோக்கியத்துக்குச் சிறந்த மருந்து.(விளம்பரம் எப்படி???)

said...

வாங்க மதுரையம்பதி.

'சட்'னு வந்து விழுந்த வரி.

ரசித்ததுக்கு நன்றி.

said...

வாங்க உண்மைத் தமிழன்.

ரகசியமா ஏதும் செய்யலீங்களே.....வரும் விவரம் சொல்லி இருந்தேனே. நடேசன் பார்க்குலே பதிவர் சந்திப்பு எல்லாம் இருந்துச்சேங்க.

போய்வந்த பிறகு ச்சும்மா இருக்காம ஒரு 20 பதிவு போட்டு எல்லாரையும் கதறவச்சுட்டேனே:-)

நீங்கதான் நம்மை அப்பக் கண்டுக்கவே இல்லை(-:

said...

என் பேர் கூட என் அம்மாவோட தோழி பேர் தான்..!! :)))

said...

//நாட்டை வழிநடத்தும் தலைவன் சினிமா மூலம்தான் வரணுமுன்னு 'விதி' இருக்கு(-://

துள‌சி அம்மா போல‌ எல்லாரும் வெளிலே இருந்தா இப்ப‌டித்தான் இருக்கும்.
பொறுத்த‌து போதும் பொங்கி எழு அப்ப‌டின்னு ஒரு ப்ர‌ஸ் ரிலீஸ் செஞ்சுட்டு,
தாய்த்திரு நாடு அது ந‌ம்ம‌ த‌மிழ் நாடுன்னு சொல்லிட்டு, இங்க திரும்பி வ‌ந்து
புற‌ந்த‌ ஊரு, அது என்ன‌ வ‌த்த‌ல‌ குண்டா ? , அங்கென மையமா வச்சு, ஒரு புதுசா
ஒரு க‌ட்சி ஆர‌ம்பிங்க‌.. ந‌ம்ம‌ ப‌திவாள‌ர்க‌ள் எல்லாவ‌த்தையும் அங்கெங்கே
மாவ‌ட்ட‌ செய‌லாள‌ராப் போடுங்க‌.. உங்க‌ ஃப்ரென்ட்ஸ் எல்லாரோயும் க‌ட்சிக்குக்
கொள்கை என்ன‌வாயிருக்க‌ணும்னு சொல்லி ஒரு ம‌க‌ளிர் மா நாடு போடுங்க‌.

( ஹி...ஹி.. என்னை கொடியேத்த‌ச் சொல்லி அழைப்பீங்க‌ல்ல‌ ! )

முய‌ற்சியுடையோர் இக‌ழ்ச்சி அடையார். அத‌னால‌, எப்ப‌டியும் ஒரு 2050 வாக்கிலே
சி எம் ஆயிடுவீங்க‌...


எப்ப‌டி ந‌ம்ம‌ ஐடியா !

த‌ப்பித்த‌வ‌றியும் என்னை மின்சாரத்துக்கு மினிஸ்ட‌ரா போட்டுடாதீங்க‌.. ஆமாம்,
இப்ப‌வே சொல்லிட்டேன்.


மீ. பா.
த‌ஞ்சை.

said...

யக்கோவ்...

துலாபாரம் பார்த்துட்டு இருந்த போது, டீவி ல தான், பக்கத்து வீட்டு பொண்ணு 7 மாத கர்ப்பம், அவளும் சேர்ந்து படம் பார்த்தா...அவ அழுத அழுகை என்னால மறக்க முடியாது..

அப்ப நான் காலேஜ் ல படிச்சுட்டு இருந்தேன்... இதைப் பார்த்த பாட்டி அவ அழுகறத பார்த்தா வயித்துல இருக்குற குழந்தை என்ன ஆகுமோன்னு பயமா இருக்கு... போங்க லூசுங்களா...போய் வேற ஏதாவது பேசுங்கன்னு துரத்தி விட்டாங்க

படப் போடறானுங்க பாருன்னு பாவம் படம் எடுத்தவருக்கும், நடித்தவர்களுக்கும், சென்னை தூர்தர்ஷனுக்கும் ஒரே திட்டு பாட்டி கிட்ட...:-)))

said...

//கடலை முட்டாயைக் கையில் வச்சுருந்தோமே...அது எங்கியோ விழுந்துருச்சு போல இருக்கேன்னுதான் பலமுறையும்.//


கிகிகககிகி

said...

//உண்மையைச் சொன்னால் பாடல் காட்சிகள், குழு நடனங்கள் எல்லாத்தையும் நம்ம படங்களில் இருந்து தூக்கணும்//

எனக்கும் அம்புட்டு ஆசைங்க இது நடக்கணும்னு ... ம்ம்.. முடவன், கொம்புத்தேன் அது இதுன்னு ஞாபகம் வருது :-(

said...

பஞ்ச ரத்தினங்களா, பிஞ்ச ரத்தினங்கள் இல்லியே!!!!!!:):)
நேத்துதான் இண்டெர்னெட் கனெக்ஷன் கிடைச்சுது. கிட்டத்தட்ட ஒரு மாசமா வலைப்பக்கம் போகவே முடியலை. உங்க அழைப்பு கிடைச்சுது, ரங்கமணி தவறாம மெசேஜ் சொல்லிட்டார். சீக்கிரமே எழுதறேன்

said...

டீச்சர் வழக்கம் போல கலக்கிபுட்டீங்க. உங்க பாணியிலே பதில்கள் படிக்கவும் ரொம்ப சுவாரஸ்யம்.

said...

ஸ்ரீமதி,

அம்மாங்க போலவே பொண்ணுங்களும் இருக்கணும். தோழியை மறக்க வேணாம்:-))))

said...

வாங்க மீனாட்சி அக்கா.

சொந்த ஊர் எதுன்னு எனக்கே தெரியாது அக்கா. நினைவில் நின்ற ஊர்தான் வத்தலகுண்டு.

மாநாடுன்னா..... ஏற்கெனவே மருதைக்காரர் ஒருத்தர் போட்டுட்டார்போல. எனக்கெங்கே இளைஞர் அணி வரப்போகுது? ஹூம்...

//முய‌ற்சியுடையோர் இக‌ழ்ச்சி அடையார். அத‌னால‌, எப்ப‌டியும் ஒரு 2050 வாக்கிலே
சி எம் ஆயிடுவீங்க‌...//

ஆனா அதுக்குமுன்னாலே அடிப்படைத் தகுதிக்காக நான் நடிகை ஆக வேணாமா? குறைஞ்சபட்சம் டிவி சீரியலில் மாமியார் ரோல் கிடைக்க ஏற்பாடு செஞ்சுருங்க. அப்புறம் கொடி ஏத்த உங்களைக் கூப்புடாம இருப்பேனா? :-)

கொடுமையான மாமியாருக்கு நான் நல்லா பொருத்தமா இருப்பேனாம். கோபால் சொல்லிக்கிட்டு இருக்கார்!

said...

வாங்க மங்கை.

அதுவும் அந்தக் கோர்ட் சீன்லே கல்மனசும் கரைஞ்சுரும்(-:

said...

வாங்க தூயா.

உங்க ட்ரேட்மார்க் சிரிப்பாணி:-))))))

said...

வாங்க தருமி.

சரியான பழமொழிதான்.

இப்படியெல்லாம் படம் வரணுமுன்னு கனவுகூடக் காணமுடியாது. டேஞ்சர்.
கனவுலேயும் 'ஹையா...கனவுக்காட்சின்னு லல்லல்லா ன்னு கும்பலா வந்துருவாங்க பாடி ஆட'
(-:

said...

வாங்க சின்ன அம்மிணி.

ஆஹா நெட் வந்துருச்சா. சகுனம் சரியா இருக்கு. சூடம் காட்டி அம்சமாத் தொடங்குங்க படப்பூஜையை:-)

said...

வாங்க சதங்கா.

ரசிச்சதுக்கு நன்றிப்பா.

said...

Nanri Thulasi. Thank you :)

said...

ஆட்டம் போட வச்சதுக்கு நன்றி பாபா:-)