Wednesday, October 22, 2008

புரோகிதர் சொன்ன 'குட்டி'க் கதை

போனவாரம் ஒரு பூஜைக்குப் போயிருந்தோம். தோழி புதுவீடு வாங்கியிருந்தாங்க. இது நம்ம இந்தியன் ஸ்டைல் கிரகப்பிரவேசமும் இல்லை, வெள்ளைக்கார ஸ்டைல் ஹவுஸ் வார்மிங்கும் இல்லை. ச்சும்மா ஒரு பூஜைதான்னு சொன்னாங்க.

புதுசா வந்துக்கிட்டு இருந்தப் பேட்டை. தெருவின் பெயரை எப்பவோ கேட்ட ஞாபகம். இருந்துட்டுப் போகுதுன்னு விட்டுத்தொலைக்க முடியுதா? மூளையைக் குடைஞ்சதுலே, இதே தெருவில் சில வருசங்களுக்கு முன்னே ஒரு கிரகப்பிரவேசத்துக்கு வந்துருக்கோம். அதுக்கப்புறம் அந்தத் தோழி வீட்டை வித்துட்டு வேற ஊருக்குப் போயிட்டாங்க. ஒருவேளை அதே வீட்டைத்தான் இவுங்க வாங்கிட்டாங்களோ? அப்படி இருந்தால் ஒரே வீட்டின் ரெண்டாவது கிரகப்பிரவேசத்துக்குப் போறோமோ?

வீட்டைக் கண்டுபிடிச்சதுமே தெரிஞ்சது இது, அது இல்லை. அப்ப அது எது? மீண்டும் மண்டைக் குடைச்சல். (கடைசியில் அந்தத் தோழிக்கே ஒரு மின்மடல் கொடுத்தேன். வீட்டு எண்ணைத் தெரிஞ்சுக்கலேன்னா என் தலை வெடிச்சுருமுன்னு:-) தொலையட்டும் அப்படியாவதுன்னு விடாம அவுங்க உடனே எண்ணைத் தெரிவிச்சுப் பதில் மடல் போட்டாங்க) அது, இது இல்லை!

நல்லவீடு. முன்புறத் தோட்டத்தில் சிலைகளுடன்கூடியச் செயற்கை நீர் ஊற்று. வாசல் கதவுக்கு வெளியே ரெண்டு யானைகள். உள்ளே நுழைஞ்சப்ப ஒரு இருபதுபேர்கள் இருந்தாங்க. தோழியின் அக்காவும், அப்பாவும் பக்கத்து நாடு ஆஸியில் இருந்து வந்துருந்தாங்க. பண்டிட் ஒருத்தர் ஆண்கள் இருந்த வெளிவெராந்தாவில் பேசிக்கொண்டிருந்தார். கூடத்தில் மணை போட்டுப் பட்டுத்துணி விரித்து அதுலே ஒரு ஸ்ரீராமர் பட்டாபிஷேகப் படம். அதற்கு முன்னால் ஒரு சின்ன எவர்சில்வர் குடத்தில் மஞ்சள்பூசிய தேங்காயுடன் ஒரு கலசம். கீழே சுத்தியும் பூஜைக்கான சாமான்களை அழகாக அடுக்கி வச்சுருந்தாங்க. இதையெல்லாம் ஒட்டி, இரும்பில் செஞ்ச ஒரு ஹோமகுண்டம் உட்கார்ந்திருந்தது.

டோலக், ஹார்மோனியம், ஜால்ரான்னு இசைக்கருவிகளுடன் அதை வாசிக்கும் ஆட்களும் வந்து சேர்ந்தாங்க. ராமாயணப் புத்தகம் ஒன்னு குறுக்குப் பலகை உள்ள பீடத்தில் பட்டுத்துணி போர்த்தியபடி இருந்தது. பண்டிட் பூஜையை ஆரம்பிச்சார். விஷ்ணு சகஸ்ரநாமத்தில் சில சுலோகங்களுடன் இன்னும் சில மந்திரங்களையும் சொன்னதும் தோழியை ஹோமகுண்டத்தில் மாங்கட்டைகளைப் போட்டு ஹோமம் ஆரம்பிக்கச் சொன்னார். அவர் இருந்த இடத்தில் இருந்தே மந்திரங்கள் (எல்லாம் ஸ்வாஹா ஸ்வாஹா தான்)சொல்லச் சொல்லத் தோழி ஹோமத்தில் போடச்சொன்னவைகளை ஒவ்வொன்னாப் போட்டாங்க. தோழியின் மகள்கள் இருவரும் தாயின் வஸ்திரத்தின் ஓரங்களைத் தொட்டுக்கிட்டுத் தாயின் ரெண்டுபக்கத்திலும் உக்கார்ந்து இருந்தாங்க. எல்லாம் கனெக்டட்:-)

தீ படபடவென கொழுந்துவிட்டு எரியுது. வீட்டின் உள்புறக் கூரையைத் தொட்டுருமோன்னு எனக்குக் கவலை. குளிருக்காகச் சாத்தியிருந்தக் கதவு, ஜன்னல்களால் புகை வெளியேறமுடியாமல் உள்ளேயே மண்டுது. ஆஹா.... இப்ப ஸ்மோக் அலாரம் கத்துமுன்னு காதைத் தீட்டிவச்சுக்கிட்டு இருக்கேன். ஊஹூம்.....புகையால் எரியும் கண்களைத் திறந்து சீலிங் மேல் நட்டேன்.
ஸ்மோக் அலாரம் இல்லவே இல்லை. அது எப்படி சிட்டிக் கவுன்ஸில் இந்த வீட்டை விட்டுச்சுன்னு தெரியலையே...... இது இப்பக் கட்டிய வீடு இல்லை. மூணுநாலு வருசத்துக்கு முந்தி கட்டுனதுதான். வீடு இப்பக் கைமாறி இருக்குன்னு மாத்திரம். அப்படியும் ஏன் அலாரம் வைக்கலை? ஒருவேளை முழுசையும் கழட்டி எடுத்துருக்காங்களா? (எதா இருந்தாலும் இது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். தோழிக்குத் தொலைபேசிச் சொல்லணும்)

ஒருகட்டத்தில் தாங்க முடியாமல் பின் கதவைக் கொஞ்சம் திறந்ததும் புகையெல்லாம் வெளியேறுச்சு. ஹோமகுண்டத்தையும் அலாக்காத் தூக்கித் தோட்டத்தில் வச்சுட்டார் ம்யூஸிக் பார்ட்டியில் இருந்த ஒரு இளைஞர்.

பண்டிட் ராமாயணக் கதையைச் சொல்ல ஆரம்பிச்சார். ஸ்ரீ ராமர் காட்டுக்குப் போனபிறகு பரதன் அவரைத் தேடிவந்த பகுதி. தந்தை சொற்படி பரதனே நாட்டை ஆளணுமுன்னு சொல்லி நீதி வழுவாமல் ஆட்சி செய்வது பற்றி விளக்கம் சொல்றார். மனுசன் செய்யக்கூடாதவைகளைச் சொல்றார். அதுலே ஒன்னு புறம் பேசுதல். அடுத்தவங்களைச் சொற்களால் அடிக்கக்கூடாது. பொரணிபேசும் மனுசர்கள் சகவாசம் கூடாது. யாராவது அடுத்தவங்களைப் பத்தி இல்லாததும் பொல்லாததுமாச் சொல்லும்போது, ஜூஸியா இருக்கேன்னு அதையெல்லாம் காது கொடுத்துக் கேக்கறதும் பாவத்தில் ஒன்னு. மனுசர்களுக்கு உள்ளும் புறமும், எண்ணம் நடத்தை எல்லாம் ஒன்னா இருக்கணும். இந்த இடத்தில்தான் அந்தக் குட்டிக் கதை வந்துச்சு.

ஒரு ஆட்டுக்குட்டி இருந்துச்சு. ஒருநாள் பார்க்கவே பயங்கரமா இருக்கும் கொடியமிருகம் ஒன்னு அதை எப்படியோ வளைச்சுப்பிடிச்சு அடிச்சுத் தின்னப் பார்த்துச்சு. அப்ப அந்தவழியா வந்த ஒரு மனுசன் ஆட்டுக்குட்டியை அந்த மிருகத்துக்கிட்டே இருந்துக் காப்பாத்தி, தன்னோட வீட்டுக்குக் கொண்டுபோய் வளர்க்கிறார். தினம் நல்ல இலை தழை எல்லாம் கொடுத்து அன்பாக் கவனிச்சுக்கிட்டார். ஆட்டுக்குட்டிக்கு ரொம்ப மகிழ்ச்சியான வாழ்க்கை. அப்படியே வளர்ந்து பெருசாச்சு.


ஒருநாள் அந்த ஆட்டைவெட்டிச் சமைக்கலாமுன்னு அந்த மனுசன், பெரிய கத்தியைத் தீட்டி எடுத்துக்கிட்டு வந்து ஆட்டின் முன்னால் நிக்கறார். அந்த ஆடு இதைப் பார்த்ததும் கரகரன்ன்னு கண்ணீர்விட்டு அழுதுச்சு. அப்புறம் இருந்தாப்போல இருந்து 'இடி இடி'ன்னு ஒரே சிரிப்பாச் சிரிச்சது. இப்ப மனுசனுக்கு ஒரே திகைப்பு.

'உன் அழுகைக்குக் காரணம் தெரியும், சாகப்போறோமேன்னு அழுதே. இப்ப எதுக்காக இப்படிச் சிரிக்கிறே'?ன்னு கேட்டதுக்கு ஆடு சொல்லுச்சாம், ஒருநாள் என்னை அந்தப் பயங்கரமான கொடிய மிருகத்துக்கிட்டே இருந்து காப்பாத்துனீங்க. அந்த மிருகத்தோட உருவமும் செய்கையும் கொடியதா இருந்து கண்ணுக்குத் தெரிஞ்சது. ஆனா என்னை அன்போடு வளர்த்துட்டு, இப்பக் கொல்ல வந்துருக்கீங்க. என்னை ஒருநாள் கொன்னு தின்னணும் என்ற எண்ணத்தோடு உள்ளுக்குள்ளே கொடுமைக்காரனா இருந்துக்கிட்டே அன்பா இருக்கறதுபோல் இவ்வளோ நாளா நடிச்சீங்களே. உள்ளே வேற வெளியே வேற ன்னு இனம் காணமுடியாம நீங்க நடந்துக்கிட்டதை நினைச்சுத்தான் சிரிப்பு வந்துருச்சு'ன்னு.

கொஞ்சம் யோசனை செஞ்சு பார்த்தால்........... இது எவ்வளோ உண்மை. பொய் முகங்கள் ஏராளம். இல்லை? மனிதரில் இனங்காண முடியலையே (-:

தீப ஆராதனையோடு பூஜை முடிஞ்சது. தோழி வந்திருந்த அனைவரையும் வணங்கி, வீடு நாலு மாசத்துக்கு முன்னால் வாங்கினதைச் சொல்லி உடனே கிரகப்பிரவேசம் செய்யமுடியாமல் போச்சு. அதுதான் இப்போ ஒரு பூஜை நடத்தறோம். என் அப்பா அம்மா வந்து இங்கே இந்த வீட்டில் என்னோடு இருப்பாங்கன்னு ஆசையா இருந்தேன். இப்ப அப்பா பெரிய அண்ணன் வீட்டுக்குப் போய் ஒரு மாசம் இருந்துட்டு, இங்கே என்னுடன் வந்து இருக்கப்போறார்ன்னு சொன்னாங்க. சொல்லும்போதே தொண்டை அடைச்சமாதிரி குரல் கம்மிக் கண்ணில் தண்ணீர் வந்துருச்சு. காரணம்?

வீடு வாங்கி, ( நாலு மாசம் முன்பு) குடியேறும் விசேஷத்துக்காக அப்பா அம்மா ஆஸியில் இருந்து இங்கே வந்துருந்தாங்க. வந்த இடத்தில் அம்மாவுக்குத் திடீன்னு உடல்நிலை சரியில்லாமல் போய் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆனாங்க. வீட்டுச் சாவி கிடைச்ச அன்னிக்கு அம்மா இறந்துட்டாங்க. ஆசையா வாங்குன வீட்டை அம்மா இருந்து பார்க்கலையேன்ற துக்கம் தோழிக்கு(-:

ப்ரசாதம் எல்லோருக்கும் பரிமாறினதும் சுடச்சுட ஏலக்காய் டீ. இதை முடிச்சதும் பஜனை பாட ஆரம்பிச்சாங்க. அமர்ன்னு ஒருத்தர் ரொம்ப அழகா ஒரு பாட்டுப் பாடுனார். இவர் பாடுவாருன்னே எனக்குத் தெரியாது. அவர் ஹார்மோனியத்தை எடுத்து, ஸ்வரக்கட்டைகளை அமுக்கிப் பார்த்ததும், ச்சும்மா ( என்னைப்போல) பாவனை காட்டுறாருன்னு இருந்தேன்! இத்தனைக்கும் அவுங்க கிறிஸ்துவர்கள். ராமரைப் பற்றிய பஜன் சூப்பர். யாரோட பாட்டுன்னு கேட்டேன். ஜக்ஜீத்தோடதாம். அதுக்குப்பிறகு இன்னும் சில பாட்டுக்கள் பாடுனாங்க. அதுக்குள்ளே டின்னர் தயாரா மேசைக்கு வந்துருச்சு.

ஃபிஜி இந்தியர்களின் ராமாயண மண்டலிக்கு நாங்கள் ஒரு 20 வருசமாப் போய்க்கிட்டுத்தான் இருக்கோம். மக்கள் அதிகமாச் சேரச்சேர கருத்துவேறுபாடுகளும் வர்றது சகஜம்தானே? இப்ப அதுவே நாலு மண்டலியாப் பிரிஞ்சு கிடக்கு. நாங்கள் இன்னும் தாய் மண்டலிக்குத்தான் போறோம். மற்ற இடங்களில் இருந்து அழைப்பு வந்தாலும் ஒரே நாளில் எல்லா இடத்திலும் விழா வைக்கறதாலே போக முடிவதில்லை. எதுக்கு இதை இங்கே சொல்றேன்னா..... நாங்க போகும் தாய் மண்டலியில் பாட்டுக்கள், பஜன்கள் எல்லாம் பாரம்பரிய இசை, 128 வருசத்துக்குமுன்னே முதல் இந்தியர்கள் ஃபிஜிக்குக் கொண்டுவரப்பட்டாங்க பாருங்க பீஹார், ஒரிஸ்ஸாவில் இருந்து, அப்ப அவுங்க பாடிக்கிட்டு இருந்த அதே ஸ்டைல். கொஞ்சம் 'கச்சாவா' இருக்கும். பாடுறவங்களும் அப்படியே இருப்பாங்க!!!!

ஆனா இங்கே பாட்டுகள் எல்லாம் லைட் ம்யூஸிக் ரகமா, ஜனரஞ்சகமா இருக்கு. பாடுபவர்களும் கல்யாணவீட்டுக் கச்சேரிகளில் நாம் பார்ப்போமே அந்த ரகம். இவுங்களுக்குன்னு இருக்கும் பண்டிட், கதையெல்லாம் சொல்லிப் பிரசங்கம் செய்யறார். காலமாற்றம் நல்லாவே புரியுது!

தோழியின் நாய்க்கு, வீட்டுக்குள்ளே இத்தனை பேர் கூடி இருக்கும்போது, தன்னையும் உள்ளே கூப்புடலையேன்னு ஒரே குறை. கண்ணாடிக் கதவில் எட்டிப் பார்த்துப் பிறாண்டிக்கிட்டே இருந்துச்சு. விரலுக்குப் பிடித்தம் இல்லாமல் கண்ணாடியில் வழுக்கிவழுக்கிப் போய்க்கிட்டு இருந்துச்சு. பாவம்.

தோழியும் நம்மைப்போல ஒரு யானைப்ரேமி. வீட்டில் அழகழகான யானைகள். ஆனாலும் இப்போ புதுவரவா அங்கே இருக்கும் ஒரு யானை எனக்கு வருத்தத்தையே தந்துச்சு. நீண்ட தந்தங்களோடுப் பெரிய யானை ஒன்னு முழங்கால்போட்டு குனிஞ்சு உக்கார்ந்துருக்கு. அதன் முதுகின்மேல் பெரிய கண்ணாடி வச்ச காஃபி டேபிள். பாவம். யானை..... எவ்வளவு பெரிய உருவம். கஷ்டப்பட்டு இப்படி முட்டிபோட்டுருக்கேன்னு எனக்குப் பாவமா ஆயிருச்சு.நம்ம வீட்டிலும் ஒரு சின்ன யானை உக்கார்ந்த நிலையில் இருக்குதான். எனெக்கென்னமோ, நம்மது, விளக்குக் கம்பத்தில் சாய்ஞ்சு, ஓய்வா உக்கார்ந்து, சந்தோஷமா சிரிக்கிறாப்போலயும். தோழி வீட்டு யானை கஷ்டப்பட்டு குனிஞ்சு சுமைகளைத் தாங்கிச் சிரமப்படுவது போலவும் ஒரு தோணல். இந்த மனசு இருக்கு பாருங்க இல்லாத கற்பனையெல்லாம் செஞ்சுக்கிட்டு அல்லாடுறதுலே கெட்டி!

49 comments:

said...

ஆட்டுக்'குட்டி'க் கதையா?ஆனைக்'குட்டி'க் கதையா?

said...

புரோகிதர் சொன்ன ஆட்டுக்குட்டிக் கதை அருமை.

நம்மீது காரணமில்லாமல் / ஆதாயம் இல்லாமல் அன்பு வைப்பார்களா ? என்றும் யோசிக்க வைக்குது இல்லையா ? ஒரு விதத்தில் சரி என்றாலும், எல்லோர் மீதும் சந்தேகக் கண் வை என்றும் சொல்வதாகவும் படுது :(

எல்லாவற்றிலுமே சுயநலம் இருக்கிறது என்பதைச் சொல்லும் இந்த கதையில், 'அன்பு' என்பதைப் பயன்படுத்தி யாரையும் ஏமாற்ற முடியும் என்றும் சொல்கிறது.

ஆனால் அதெல்லாம் ஒரு நாள் வெளிப்பட்டு, வெளிச்சத்துக்கு வந்துடும் இல்லையா ?

ஒருவரின் செயலில் போலித்தனம் இல்லையெனில் பிறரின் அறிவுரைகள் எதுவுமே தேவைப்படாது.

said...

//பொய் முகங்கள் ஏராளம் இல்லை? மனிதரில் இனங்காண முடியலையே (-:
//

உண்மைதான்..

said...

கோபால் கேமரா எடுத்துட்டு வர மறந்து போய் உங்க கிட்ட வாங்கிக்கட்டிக்கிட்டாரு போல! :)

said...

//புரோகிதர் சொன்ன ஆட்டுக்குட்டிக் கதை அருமை.//

good one, for the same reason i buy meat from the shop:)

said...

கதை எல்லாம் நல்லா இருந்தது.

//யாராவது அடுத்தவங்களைப் பத்தி இல்லாததும் பொல்லாததுமாச் சொல்லும்போது, ஜூஸியா இருக்கேன்னு அதையெல்லாம் காது கொடுத்துக் கேக்கறதும் பாவத்தில் ஒன்னு.// அப்படின்னு படிச்சப்புறம், அய்யய்யோ, பதிவுலகை விட்டே போயிடணுமா? சரி சரி, நான் இல்லாதது சொல்லிடப் போறேனா, இல்ல, நீங்க தான் அதுக்கு காது கொடுத்து கேட்கப் போறீங்களா?

:-)

said...

ஆட்டுக்குட்டி கதை நல்ல பாடம்.. :)
வீட்டிற்குள் நுழைவதற்கு முன் இரண்டு யானை இருந்ததே? அந்த ப்டத்தைக் காணோம்?... ;)
இந்த யானையைப் பார்த்தா கஷ்டமா தான் இருக்கு. தந்தத்தை வேற யாரோ வெட்டி இருக்காங்க.. :(

said...

எப்படித்தான் இப்படி தத்ரூபமாக எல்லோருக்கும் போய்வந்த அனுபவத்தை தருவது போல எழுதறீங்களோ?...எனக்கும் கொஞ்சம் கற்றுத்தாருங்க ரீச்சர் :)

//ஸ்ரீ ராமர் காட்டுக்குப் போனபிறகு பரதன் அவரைத் தேடிவந்த பகுதி. தந்தை சொற்படி பரதனே நாட்டை ஆளணுமுன்னு சொல்லி நீதி வழுவாமல் ஆட்சி செய்வது பற்றி விளக்கம் சொல்றார்//

இதே போல பரதன் தந்தை இறந்த அதிர்ச்சியில் தன் தாய் கைகேயியை திட்டுகிறான். அப்போது பல பாவங்களையும் சொல்லி அதெல்லாம் கைகேயியைச் சேரும் என்று சொல்கிறான்.

மேலே இராமன் சொன்னதாகச் நீங்க சொன்னது, மற்றும் பரதன் சொன்னது ஆகிய இரண்டுமே தர்மசாஸ்திரத்தினை அடிப்படையாக கொண்ட பகுதிகள்.
பரதன் சொன்னவற்றை இரு பதிவுகளாகப் போட எண்ணமிருக்கு..நேரம் கிடைக்கையில் செய்கிறேன். :)

said...

தமிழ்பிரியன் பாடத்தை ஒழுங்கா வாசிக்கலைன்னு தெரியுது.. யானை இவங்க வீட்டு யானை,, அதுவும் சந்தோஷமா சிரிக்கும் யானை..

said...

நான் சூரஜ் குண்ட் மேளால இப்படி நிறைய டேபிள் பார்த்தேன்.. ஒரு பெண் குப்புறப்படுத்துக்கிட்டு காலை தூக்கி ஆட்டிட்டு சாவகாசமா எதோ படிக்கிறா.. அவ தலை மேல இருந்து இந்தபக்கமும் அவ கால் மேல் அந்த பக்கமுமா கண்ணாடி .. :)

said...

திருமதி துளசி கோபால் அவர்களுக்கு,

உங்கள் கதை அருமை.

ராமாயணம் பயன்படுத்த வேண்டிய இடத்தில் படிக்கும் கால சூழல் இல்லை.

கடல்கடந்தாலும் நம் சம்பிரதாயங்களை மதிக்கும் உங்களை போன்றவர்களுக்கு எனது வணக்கங்கள்.

said...

மனுசன் செய்யக்கூடாதவைகளைச் சொல்றார். அதுலே ஒன்னு புறம் பேசுதல். அடுத்தவங்களைச் சொற்களால் அடிக்கக்கூடாது. பொரணிபேசும் மனுசர்கள் சகவாசம் கூடாது. யாராவது அடுத்தவங்களைப் பத்தி இல்லாததும் பொல்லாததுமாச் சொல்லும்போது, ஜூஸியா இருக்கேன்னு அதையெல்லாம் காது கொடுத்துக் கேக்கறதும் பாவத்தில் ஒன்னு. மனுசர்களுக்கு உள்ளும் புறமும், எண்ணம் நடத்தை எல்லாம் ஒன்னா இருக்கணும். //

இதை ராமராஜாவிடம் யாரும் சொல்லலை போல இருக்கு :-) எவனோ தன் பொண்டாட்டியைப் பற்றி புரளி பேசினான்ன்னு
கர்பிணி மனைவியை காட்டுக்கு துரத்தியதற்கு என்ன பாவம் பீடிக்கும் ?

said...

நீங்கள் எழுதியுள்ளது , அந்த விழாவிற்கு நாங்களே போய் வந்த மாதிரி இருந்தது !

said...

Super-ah irukku aunty kadhaiyum, adhai paththina unga narration-um..!! :)))))))

said...

வாங்க தங்ஸ்.

ஆடோ ஆனையோ குட்டி இருக்குன்றதுதான் முக்கியம்

:-))))

said...

வாங்க கோவியாரே.

மனுசர்கள் செயலில் போலியும் கலந்து இருக்குதுன்றது எல்லா யுகங்களுக்கும் பொதுவோ என்னமோ?

அதனால்தானே அரசு எப்படி இருக்கணுமுன்னு விளக்க வேண்டிய நிலமை!!!!

said...

வாங்க பூச்சாண்டியார்.

உண்மையோ உண்மை!
வருகைக்கு நன்றி

said...

வாங்க கொத்ஸ்.

வீட்டுலே நடக்கும் ப்ரைவேட் ஃபங்ஷனுக்குக் கெமெரா கொண்டுபோறது
ஃபோர்மச் ஆகிறாது? நல்லாவா இருக்கும்.

கெமெராவுக்கும் கோபாலுக்கும் சம்பந்தம் ஏதும் இல்லை என்று அறிவிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளிட்டீரே என்னை.....

said...

வாங்க குடுகுடுப்பை.

நியூஸியில் 'புச்சர்' கடைகள் அருகி வருது. பரவாயில்லையே.... எல்லாரும் வெஜிடேரியனா மாறிட்டாங்கன்னு நினைக்காதீங்க.

சூப்பர் மார்கெட் இப்ப இந்த வேலையைச் செய்யுது

said...

வாங்க கெக்கேபிக்குணி.

சொல்வது, கேட்பது ரெண்டும் கூடாது.

ஆனால் வலைகளில் பார்ப்பது, படிப்பது பரவாயில்லையான்னா கேக்கறீங்க?:-))))

said...

வாங்க தமிழ் பிரியன்.

இது நம்ம வீட்டு மாக்கல் யானை. முன்னொரு காலத்துலே இதுதான் பிள்ளையாரா இருந்துச்சு. அப்ப மகாபாரதம் எழுத எழுத்தாணிக்காக அவரே தன் தந்தத்தை ஒடைச்சாருன்னு கேள்விப்படலையா? அதுதான்...அப்ப உடைஞ்ச கொம்பு!

said...

வாங்க மதுரையம்பதி.

கட்டாயம் இதைப்பற்றிய பதிவுகள் எழுதுங்க. நல்லவற்றைப் படிப்பதும் நன்று அல்லவா?

உள்ளதை உள்ளபடி எழுதுறதுதான். அதுக்குன்னு தனிப்பயிற்சி உண்டா என்ன? 'சுருக்'கத்தான் பயிற்சி வேணும்.

எல்லாம் காலையில் எழுந்தேன். காஃபி குடித்தேன் வகைதான்:-))))

said...

வாங்க கயலு.

100 அடிச்ச மகிழ்ச்சியிலே பாடத்தைக் கவனிக்காம விட்டுட்டார். போனாப் போகட்டும். பரவாயில்லை:-)

புதுவிதமா டிஸைன் செய்யறோமுன்னு இப்படித்தான் அசட்டுத்தனமா செஞ்சுவைக்கிறாங்க(-:

said...

வாங்க ஸ்வாமி ஓங்கார்.

வணக்கம். நலமா?

முதல் வருகைக்கு நன்றி.

said...

வாங்க உஷா.

ராமாயணத்தில் நீங்க சொல்லும் பகுதி வருமா? பட்டாபிஷேகத்தோடு முடிவடைஞ்சுறாதா?

எதுக்கும் அடுத்தமுறை புரோகிதரைப் பார்க்கும்போதுக் கேட்டுச் சொல்லவா?

said...

வாங்க அருவை பாஸ்கர்.

எங்கே ரொம்ப நாளா ஆளைக் காணோம்? நலமா?

விழாவுக்கு நான் போனா நீங்க எல்லாம் போன மாதிரிதான்:-)

said...

வாங்க ஸ்ரீமதி.

தொடர்ந்து படிச்சுட்டு அப்புறம் சொல்லுங்க:-))))

வாரம் 3 தான்.

said...

இயல்பான நடையில் தெளிந்த நீரோடை விவரித்தது அருமை.

said...

//மனுசர்களுக்கு உள்ளும் புறமும், எண்ணம் நடத்தை எல்லாம் ஒன்னா இருக்கணும்.//

நல்ல கருத்து. காந்தியடிகளுடைய வாசகம் ஒண்ணு நினைவு வருது -"Happiness is when what you think, what you say and what you do are in harmony."

சீக்கிரம் தோழியை smoke alarm வாங்கி வைக்க சொல்லுங்க துளசிம்மா :)

said...

அருமையான கதை டீச்சர். படிச்சுட்டு வலையுலகை நினைச்சு பாத்தேன், விரக்தியான ஒரு சிரிப்பு வந்தது.


இத மாதிரி கதைகளை ஒரு சீரிஸா போட்டீங்கன்னா ஜுனியருக்கு கதை சொல்ல வசதியா இருக்கும். :)

said...

ம்ம்..;)

said...

///முத்துலெட்சுமி-கயல்விழி said...

தமிழ்பிரியன் பாடத்தை ஒழுங்கா வாசிக்கலைன்னு தெரியுது.. யானை இவங்க வீட்டு யானை,, அதுவும் சந்தோஷமா சிரிக்கும் யானை..///

டீச்சர், எங்க அக்காவுக்கு நான் உங்க கூட அந்த கிரகப் பிரவேசத்துக்கு வந்தது தெரியாது போல... அதான் போட்டு கொடுக்குறாங்க.. ;)
(அப்பாடா தலை தப்பியது டீச்சரோட புண்ணியமா இருக்கட்டும்)

said...

தினம் ஒரு பதிவு போட்டாலும் படிக்க நான் ரெடி. ஆட்டுக்குட்டி கதை தான்பா யதார்த்தம்.

எதையும் எதிர்பாராம என்னதான் நடக்கிறது இங்க,உலகத்தில?

இந்த யானையைப் பார்த்தால் பிள்ளையாரை கிரிக்கெட் விளையாட வைக்கிறாங்களே அவங்க ஞாபகம்தான் வருது.

மண்டி போட்ட யானைக்கு என் அனுதாபம்.:(

said...

அஞ்சு வருடமா என்னுடைய உடல் நலத்துக்காக வேண்டிகிட்டு நான்வெஜ் சாப்பிடாம இருந்த என் தங்கமணியவே இப்ப சாப்பிட வெச்சிருக்கேன் நானெல்லாம் திருந்திருவேனா டீச்சர்?

said...

எங்கு சென்றாலும் கண்களையும் காதுகளையும் திறந்தே வைத்திருக்கும், அபார நினைவாற்றல் கொண்ட அருமைச் சகோதரி துளசியின் ஒவ்வொரு பதிவுமே என்னை அவரின் தீவிர ரசிகனாக்குகிறது.

said...

வாங்க ராஜாராமன்.

வணக்கம். நலமா?

முதல் வருகைபோல இருக்கே!


நன்றி.

மீண்டும் வருக:-)

said...

வாங்க கவிநயா.

கருத்துக்கு நன்றி.

நாளைக்குத் தீபாவளி விழா நிகழ்ச்சியில் தோழியைச் சந்திக்கும்போது சொல்லத்தான் நினைக்கிறேன்:-)

said...

வாங்க அம்பி.

//இத மாதிரி கதைகளை ஒரு சீரிஸா போட்டீங்கன்னா ஜுனியருக்கு கதை சொல்ல வசதியா இருக்கும். :)//

சீரியஸ்ஸாச் சொல்றீங்களா?

அவர் வளர்ந்துவிட்டால் உங்களால் கதை விடமுடியாதே:-))))

said...

வாங்க கோபி.ன்

றி

said...

வாங்க தமிழ்பிரியன்.

வரும்போது உங்க புதுக்கெமெராவை ஏன் கொண்டுவரலை?

said...

வாங்க வல்லி.

ஆதாயம் இல்லாம யாரும் ஆத்தோடு போகமாட்டங்கன்னா சொல்றீங்க!!!

said...

வாங்க குடுகுடுப்பை.

ரங்கு சொன்னதைத் தங்கு கேட்டுருக்காங்க. இதுலே திருந்தலோ திருத்தலோ என்ன இருக்கு?

said...

வாங்க சீனா.

பின்னூட்டப்பெட்டி இன்னிக்கு ரொம்பவே வேலை நிறுத்தம் செஞ்சுருச்சு.

பதிவுலக நண்பர் உதவியால் மீட்டேன்.

பதிவுலகம் எப்படி நல்ல நட்புகளையும், உதவின்னும்போது உதவக்கூடிய நல்ல மனத்தையும், பதிவுகளுக்கு ரசிகரையும் தந்துருக்குன்னு பாருங்க.

said...

துளசி, ஆத்தோட போகிறதுக்கும் நியாயம் கற்பிப்பாங்க:)
''சில '' அப்படிங்கற வார்த்தையையும் சேர்த்துக்குங்க:)

said...

நல்ல நிகழ்வு.. அருமையான கதை.. அற்புதமான படம்.. நன்றி டீச்சர்..

said...

நீங்களும் குட்டிக்கதை எழுதறீங்களா டீச்சர்? :)

அருமையான கதை, பதிவு!

உங்க பதிவுகளைப்படிக்கும் போது நீங்க லைஃபை ரொம்ப எஞ்சாய் பண்ணுவது போல தோணும். ஒரு வேளை என்னுடைய கற்பனையோ?

said...

வல்லி,

ஆத்துக்கும் அவதூறு வந்துருமா!!!!

said...

வாங்க வெண்பூ.

கதையை ரசிச்சதுக்கு நன்றி.

said...

வாங்க க.ஜூ.

இப்ப 'குட்டி'சீசன் இல்லையா? அதான்:-)

அம்பதுக்கு மேலே எல்லாம் போனஸ். அதான் கிடைச்ச வாழ்க்கையை முழுசா அனுபவிக்கிறேன், அதன் மகிழ்ச்சிகளையும், துன்பங்களையும் சேர்த்து. விகிதாச்சாரம்தான் கூடும், குறையும்.