Thursday, October 09, 2008

ரத்னேஷ் ஜூனியருக்கு:-)

அங்கே க்ளிக்கினால் வராததால் , இங்கேயே அழகர் கோவில், நூபுரகங்கையில் எடுத்த சில படங்கள் ஜூனியரின் பார்வைக்கு.

மொத்தம் எத்தனை குரங்கும் குட்டிகளும் இருக்குன்னு எண்ணிச் சொல்லணும்,ஆமா:-))))

படங்களைக் க்ளிக்கினால் பெரிதாகத் தெரியும்(என்று நினைக்கிறேன்)

அழகரின் கோயில்










மேலே எல்லாம் கோவிலுக்கு வெளியே
கீழே உள்ளபடம் கோவிலுக்கு உள்ளே




நூபுரகங்கை மரத்தின் மேலே



தூக்கணாங்குருவிக் கூடுகள்



கங்கைக்குப் போகும் படிகள்

14 comments:

said...

முதல் படம் கோவிலை அழகாகக் காட்டுகிறது டீச்சர்.. அதென்ன கோவிலுக்குள் ஒரு அம்பாஸிடர் கார் நிற்கிறது.. அழகரும் பல்லக்கு வேணாம், காரே போதும்னு சேஞ்ச் ஆகிட்டாரா?? :)))

said...

ஆஞ்சநேயர் சாமி பரிணாம வளர்ச்சியின்
அடையாளமா டீச்சர்?

said...

தூக்கணாங்குருவி கூட்டை நான் பாத்ததே இல்லை. அடேங்கப்பா, எவ்ளோ அழகா இருக்கு!

அப்புறம் அழகர் கோவில்னா எந்த ஊரு? மதுரைக்கு பக்கத்தில இருக்க அழகர் கோவில சொல்றீங்களா?

said...

பூனையிலிருந்து ஜூனியருக்காக,ஆஞ்சனேயடுக்கள் படம் போட்டீங்களா?
பின்னணி என்னன்னு சொல்லலிய்யே துளசி. அதுவும் மூணு தடவை ஒரு பதிவு வந்து இப்பதான் பார்க்கிறேன்:)

said...

கோவில் அழகா இருக்கு துளசி மேடம் :)

said...

வாங்க வெண்பூ.

கோவில் வளாகத்துக்குள்ளே கார் நிக்குதுனா அது யாராவது விஐபி வந்த வண்டியா இருக்கும்.

ஆனா அது நான் இல்லை:-)

said...

வாங்க குடுகுடுப்பை.

அவர்தானே தன் இனத்துக்கும் மனுசருக்கும் 'பாலம்' போட்டவர். அதுதான்:-)

said...

வாங்க அதுசரி.

தூக்கணாங்குருவிக் கூடு ரொம்ப விநோதமான அமைப்புலே இருக்குல்லே. தொங்கும் கூட்டின் அடியில் நுழைவு வாயில் இருக்கும்.
இதுலே இன்னொரு ருசிகரமான விஷயம் என்னன்னா....ஆண்குருவிகள்தான் கூடு/வீடு கட்டணும். கட்டிமுடிச்சதும் பொண்ணு போய் செக் பண்ணும். வீடு பிடிக்கலைன்னா..... அதை அப்படியே விட்டுட்டு வேற வீடு புதுசாக் கட்டச் சொல்லும்.

வீடு ரெடியானபிறகு அப்ரூவல் ஆனாத்தான் குடும்பம், குழந்தை எல்லாம்.

இந்தப் பெண்களுக்குத்தான் எவ்வளோ விவரம், விதரணைன்னு பாருங்க!!!!

said...

வாங்க வல்லி.

முட்டாளுக்கு மூணுமுறைன்னு இருக்கும் பழமொழி தமிழ்மணத்துக்குத் தெரிஞ்சுருச்சுப்பா.

இந்தப் பதிவை இணைக்கவிடாமச் சதி செஞ்சது. புது இடுகை எதுவும் இல்லைன்னு. நானும் அப்படியே விட்டுரும் ஆளா? உனக்காச்சு எனக்காச்சுன்னு இன்னொருக்காப்பப்ளிஷ் செஞ்சேனா.... இப்ப ரெண்டுவாட்டிக் காமிச்சது.

அதுலே ஒன்னை டிலீட் செஞ்சேன். இப்ப என்னன்னா டிலீட் செஞ்சதை மட்டும் தமிழ்மணத்துலே காமிச்சது. உள்ளே நுழைஞ்சால் 'காலி இடம்'

ஆகக்கூடி இந்த் ரெண்டும் போயிருச்சேன்னு புதுசா இன்னொன்னு போட்டேன். இப்ப பழசுலே ஒன்னும் புதுசு ஒன்னுமா ரெண்டு.

குரங்குப் பதிவுன்னதும் 'சேஷ்டை' தாங்கலைப்பா!!!!

said...

வாங்க க.ஜூ.

கோவில்களே அழகுதானேப்பா. நான் ரொம்பவும் 'மிஸ்' செய்வது நம்மூர் கோவில்களையும் பழங்களையும்தான்(-:

said...

நான் வேறு ஏதோ ரத்னேஷ் என்று நினைத்தேன். :-)

said...

துளசிகோபால் மேடம்,

உங்களுடைய //முட்டாளுக்கு மூணுமுறைன்னு இருக்கும் பழமொழி தமிழ்மணத்துக்குத் தெரிஞ்சுருச்சுப்பா.//

என்கிற வரிகளையும் வடுவூர் குமாருடைய, "நான் வேற ஏதோ ரத்னேஷ்னு நினைச்சேன்" என்கிற வரியையும் ரசித்தேன்.

தூக்கணாங்குருவிக் கூடு பற்றிய புதிய தகவலுக்கு நன்றி.

குரங்குகளை ஜூனியரை விட்டு எண்ணச் சொல்வதில் ஒரு சிறு சிக்கல் இருக்கிறது. அவன் பள்ளியில் சொல்லிக் கொடுத்திருக்கும் முறைப்படி அவன், ஒரு படத்தில் இருக்கும் பழங்களையோ பூக்களையோ குரங்குகளையோ பென்சிலால் குறுக்குக் கோடு போட்டுக் கொண்டே எண்ண வேண்டும். இவன் என்ன செய்வான் என்றால், முதலில் எல்லாவற்றின் குறுக்காகவும் கோடுகள் போட்டு விடுவான்.பிறகு பென்சிலை எடுத்து விட்டு பார்வையால் எண்ணுவான். (எப்போதும் சரியாக எண்ணிச் சொல்லி விடுவான். நெருக்கமான பூக்களின் எண்ணிக்கை கூட பதினேழு இருந்தாலும் பார்வையிலேயே எண்ணிச் சரியாகச் சொல்லி விடுவான். அப்படி என்றால் பென்சிலால் குறுக்குக் கோடு போடாமல் எண்ணுடா என்று சொன்னால் கேட்பதில்லை. டீச்சர் சொல்லிக் கொடுத்திருக்கிறார்களாம்). இப்போது கூரிய பென்சில் முனையுடன் லாப்டாப் ஸ்க்ரீனில் கோடுகள் போட்டு விட்டு கண்களால் எண்ணிச் சொல்ல அவன் தயார்; நான் தான் தயாராக இல்லை.

said...

வாங்க ரத்னேஷ் சீனியர்.

பேசாம ஜூனியருக்கு ப்ரிண்ட் அவுட் எடுத்துத்தான் கொடுக்கணும்போல!!!!

இந்த வயசுலே மட்டும் டீச்சர் சொல்லுவதுதான் வேத வாக்கு.
'மிஸ்'ஸுக்கு மிஞ்சி யாருமே இல்லை:-)

said...

வாங்க குமார்.

ஜூனியர் பெயரில்தான் சீனியரைக் கூப்பிடும் காலம் இது:-))))