Tuesday, October 21, 2008

புதிரான புதிரின் விடை.

நேத்துக் கேட்டக் கேள்விக்கு இதுதான் விடை. தொட்டுக்க ஆலிவ் ஆயில் வச்சுக்கும் டிஷ். நடுவுலே கொஞ்சம் ஊத்திக்கனும். ரொட்டித் துண்டை அதில் தொட்டுக்கிட்டு அந்த வரிவரியா இருக்கும் அடுக்குகளில் தேய்ச்சுக்கிட்டே இழுத்தால் கூடுதலா ஒட்டி இருக்கும் எண்ணெயை வழிச்சே எடுத்துறலாமாம்.

போதுண்டா சாமி. ஒவ்வொன்னுத்துக்கும் என்னாமாதிரி கண்டுபிடிப்புகள்!!!!
பத்தில் இருந்து அஞ்சுக்கு வந்துருக்கு. இன்னும் சில வாரங்களில் ரெண்டு இல்லேன்னா ஒன்னுன்னு வரும். அப்போ பார்த்துக்கலாமுன்னு இருக்கேன்.

இட்லிமொளகாய்ப்பொடி & எண்ணெய்க்கு சரிவருமா?


யாரும் அடிக்கவரலைன்னா தமிழ்பிரியனுக்காக இந்தப் படம்.

அஞ்சற்க:-))))கேள்வியெல்லாம் கிடையாது.

இதுக்குப் பெயர் ஸால்ட் பாத்( Saltbath) பழையகாலப் பாத்திரம். கல் உப்பு போட்டுவச்சுக்குவாங்களாம். (அந்தக் காலத்துலே டேபிள் ஸால்ட் இல்லை போல)அடுப்புக்குப் பக்கத்தில் வச்சுக்கிட்டுச் சமைக்கும் சமயம் தேவைப்படும்போது கையாலே எடுத்துப் போட்டுக்க ஏதுவா இருக்குமாம்.

இப்போ நமக்கும் பயன் இல்லைன்னாலும் பார்க்க அழகா இருக்கேன்னு மார்கெட்லே புடிச்சாந்தேன்:-)


17 comments:

said...

//ஒவ்வொன்னுத்துக்கும் என்னாமாதிரி கண்டுபிடிப்புகள்!!!!//

அதானே:)!

இரண்டாவது ஜாடி அழகுதான்.

said...

ஹ்ம். ஆலிவ் இலையில் குழந்தைக்கண்ணன் படுத்துறங்க.... ஆமா, ஆலிவ் எண்ணெயில் மிளகுபொடியைத் தேய்த்துச் சாப்பிடும் போது, மிளகும் போய்விடாதா? அட கஷ்ட காலமே!

அந்த செட்டியார் பொம்மை - ஸால்ட் பாத் நல்லா இருக்கு பாக்க. பாத்திரம் தேய்ப்பான் (ஸ்க்ரப்பர் / ஸ்பஞ்ச்) போட்டு வச்சுக்கலாம் போலிருக்கு (கீழே ட்ரெயின் இருக்கான்னு தெரியல).

said...

எங்க வூட்டு உப்புச் சாடியே படம் எடுத்துப் போடவா ? யாரு பாப்பாங்க ?

said...

நன்னி டீச்சர்!

///cheena (சீனா) said...

எங்க வூட்டு உப்புச் சாடியே படம் எடுத்துப் போடவா ? யாரு பாப்பாங்க ?//
ஒரு முடிவோட தான் எல்லாம் இருக்கீங்களா?

said...

வாங்க ராமலக்ஷ்மி.

//இரண்டாவது ஜாடி அழகுதான்.//

ஆமாங்க. அழகை, அழகுன்னு சொல்லத்தானே வேணும்:-)))))

said...

வாங்க கெக்கேபிக்குணி.

கீழே ஓட்டைகள் இல்லை. இருந்தா விண்டோஸில் எல்லாம் அழுக்காத் தண்ணீர் ஊறிவந்துரும்.

ஸ்க்ரப்பர் வச்சா....சோப் தண்ணீர் காய்ஞ்சு அசிங்கமாத் தெரியுமேப்பா.

நான் டூத்பிக், கார்க்குன்னு சிலதைப் போட்டுவச்சுருக்கேன்.

விளக்கின் விளிம்பில் உள்ள எண்ணெய்ப்பிசுக்கு அழுக்கை நோண்ட இந்த டூத்பிக்:-)

said...

வாங்க சீனா.
முதல்லே படத்தைப் போடுங்க.அப்புறம் சொல்றோம் யாரு பார்த்தோமுன்னு:-))))

said...

வாங்க தமிழ்பிரியன்.

நீங்க உப்புன்னதும் 'உப்பிட்டேன்':-)))))

said...

\\நீங்க உப்புன்னதும் 'உப்பிட்டேன்':-)))))//

ஆமா இனி அவர் உப்பிட்டவரை உள்ள்ளவும் நினைப்பார்..

டூத் பிக் டிப்ஸ் .. நைஸ்.

said...

நல்லாத்தனிருக்கு. இதுக்கெல்லாம் ரூ போட்டு யூசிப்பாங்களோ?

said...

my yuukippu 50%correct.bath tub,salt bath..this one is .salt tub.naan logically right

said...

வாங்க கயலு.

பாத்திரம் தேய்க்கும் சிங் பக்கத்தில் ஒரு ட்ரேயில் சின்னதா டூத் ப்ரஷ் ( புதுசா வாங்கிக்கணும்) வச்சுருக்கேன். மடக்கி இருக்கும் தட்டு விளிம்பில் தேய்க்க. ஹார்ட்வேர் கடையில் கிடைக்கும் ரொம்ப ஃபைனா இருக்கும் உப்புத்தாள் (எமெரி பேப்பர்)வாங்கிச் சின்னத் துண்டுகளா வெட்டி வச்சுக்கிட்டா, தோசைக்கல் பின்பக்கம் கருப்பாப் பிடிக்கும் அழுக்கை ஜோரா எடுத்துறலாம். பாத்திரம் பளபளக்கச் சின்னச்சின்ன டிப்ஸ்ன்னு பதிவு போடவா? :-)))

said...

வாங்க நானானி.

இதெல்லாம் ப்ராடெக்ட் & ரிசர்ச்லே வராது?

said...

வாங்க கோமா.

குதிரைக்கு குர்ரமுன்னா ஆனைக்கு அர்ரம். 50% கரெக்ட்:-)))))


சால்ட் பாத் புதிருக்கான விடை இல்லைப்பா. அது கொசுறு,நம்ம தமிழ் பிரியனுக்கு:-))))

said...

உங்கூர் தான் முயற்சி பண்ணிபார்க்கிற இடமா?
சரியாக இருந்தா உலகத்தின் மற்ற மூலையில் பார்க்கலாம் போல்.

said...

வாங்க குமார்.

நாங்கதானே சூரியன் உதிக்கும் நாடு. அதனால் எதானாலும் இங்கே இருந்துதான் தொடங்கணும்:-)))))

துபாயைச் சும்மா அக்கு அக்கா அலசிப் பதிவு எழுதறீங்க. அதுக்குப் பாராட்டுகளை இங்கே சொல்லிக்கறேன்.

உங்க பின்னூட்டப்பெட்டி அப்பப்ப வேலை நிறுத்தம் செஞ்சுருது(-:

said...

இதெல்லாம் வைக்க உங்க வீட்ல எப்படி இடம் கண்டுபிடிக்கிறீங்க?