Tuesday, October 21, 2008

ஈழம்- தூயாவின் அழைப்பை ஏற்று.

1. ஈழம் பற்றி உங்களுக்கு எந்த அளவிற்கு தெரியும்? அனுபவங்கள்?

உண்மையைச் சொன்னால் அதிகம் ஒன்னும் தெரியாது. சிலோன் ரேடியோ மட்டுமே ரொம்பப் பரிச்சயமா இருந்தது என் சின்னவயசு நாட்களில். ஒருமுறை அண்ணன்(அப்பெல்லாம் ஸ்ரீலங்கா என்ற பெயர் இல்லை) சிலோனுக்குச் சுற்றுலா போய்வந்தப்ப ஒரு ஜார்ஜெட் புடவை வாங்கிவந்தார். அழகான ஊர்ன்னு அவர் சொல்லக் கேள்விதான். வெளிநாட்டுச் சாமான்கள் எல்லாம் மலிவாக் கிடைக்குது. ஃப்ரீ போர்ட்ன்னு சொன்னார்.

நான் தமிழ்நாட்டை விட்டு 35 வருசமாகப்போகுது.அதுக்குப்பிறகு இருந்த மாநிலங்களில் தமிழ்நாட்டுச் செய்திகள் ஒன்னும் அதிகமா வந்ததில்லை. நாட்டை விட்ட பிறகு ரொம்பச் சுத்தம்...... 1987-இல் நாங்கள் ஃபிஜித்தீவுகளில் இருந்தப்ப, வேறெந்த நாட்டுக்கோ (கனடான்னு நினைக்கிறேன்)கொண்டுபோறோமுன்னு சொல்லி, விஸா ஒன்னுமில்லாமல் எப்படியோ ஃபிஜிவந்து சேர்ந்துட்ட அகதிகளைப் பற்றிச் செய்தி வந்துச்சு. அதுலே சில பெண்களை உள்ளூர் வாலிபர்கள் திருமணம் செஞ்சுக்க முன்வந்தாங்க. மற்றவர்களை அரசு திருப்பி அனுப்பிட்டாங்க. சேதி வந்து நாங்க போய்ப் பார்க்குமுன்னே எல்லாம் நடந்து முடிஞ்சுருச்சு.

ஒரு இலங்கைக் குடும்பம், எங்கள் நண்பர்களுக்கு நண்பர்களா இருந்தாங்க. அவுங்களும் பிரச்சனையைப் பற்றி ஒன்னும் சொன்னதில்லை.
ஒர்க் பர்மிட்டில் வந்தவங்க அவுங்க. சில வருசங்களில் இங்கிலாந்துக்குப் போயிட்டாங்க.

இங்கே நியூஸியில் இப்ப ஒரு பத்துப்பதினைஞ்சு வருசமா இலங்கை மக்கள் அதிகம் வரத்தொடங்கி இருக்காங்க. தமிழ்ச்சங்கம் ஆரம்பிச்சமுதல் அவுங்களில் பலரோடு நல்ல தொடர்பு இருக்கு. போராட்டம்,தகவல்கள் எல்லாம் அவுங்ககிட்டே இருந்து கேட்டறிஞ்சதுதான்.

சுநாமி வந்தப்ப இங்கே நிதி திரட்டி இலங்கைக்கு TRO வுக்கு அனுப்புனோம்.
அதுலேயும் ஊழல் நடந்ததாக இங்குள்ள சிலர் நினைக்கிறாங்க. அது என்னன்னு எனக்குப் புரியலை. இவுங்களுக்குள்ளேயே பலவிதக் கருத்துவேறுபாடுகள் இருக்கு. (மேலும் இப்போதைக்கு தமிழ்ச்சங்கத்துலே இருக்கும் தமிழ்நாட்டுத் தமிழ்க் குடும்பம் எங்கது மட்டும்தான்)


2. தமிழீழத்திற்கு உங்கள் ஆதரவு எந்த அளவிற்கு உண்டு?

எனக்கு இதுக்குப் பதில் சொல்லத் தெரியலை. தனிநாடா ஆகணுமா? தமிழ்நாட்டைத் தனிநாடா ஆக்குவோமுன்னு சொன்ன கட்சிகள் நினைவுக்கு வருது. ஒரு நாட்டைத் துண்டு போடுவது லேசுப்பட்டக் காரியமா எனக்குத் தோணலை. தெரியாத விஷயத்தில் வாயை மூடிக்கிட்டு இருப்பதுதான் உத்தமம். அப்படியும் மீறி.... சொல்ல விரும்புவது என்னன்னா.... இந்தியாவில் தமிழகம் ஒரு மாநிலமா இருப்பது போல இலங்கையிலும் தமிழர்கள் உள்ள பகுதி ஒரு மாநிலமா ஆகி, அங்கே தனி மந்திரிசபை அமைத்து ஆட்சி நடத்தலாம். அதே சமயம் அது மத்திய ஆட்சிக்கும் உட்பட்டுச் செயல் படணும் என்று நினைக்கிறேன்.3. ஈழத்து செய்திகளை ஆர்வத்துடன் படிப்பீர்களா? எங்கு படிப்பீர்கள்?

ரொம்ப ஆர்வமுன்னு சொல்லிக்கமுடியாது. வலையில் சிலவற்றையும், தமிழ்மணத்தில் சகபதிவர்கள் எழுதுவதில் சிவற்றையும் படிக்கிறேன்.

4. அண்மையில் தமிழ்நாட்டிலிருந்து ஈழத்தமிழர்களுக்காக ஒலிக்கும் குரல்களை பற்றிய உங்கள் கருத்து என்ன?

இதைச் செய்ய இவுங்களுக்கு 30 வருசமாச்சான்னு இருக்கு. முளையில் கிள்ளி எறிந்திருக்கவேணாமோ? வளரவிட்டுட்டாங்களேன்னு இருக்கு.5. ஈழத்தில் தினம் தினம் செத்துக் கொண்டிருக்கும் எம் உறவுகளுக்கு சொல்ல விரும்புவது?

ரெண்டு வலிமையுள்ளவர்களுக்கிடையில் எளியவர்கள் மாட்டிக்கிட்டு அவதிப் படுவதை நினைத்தால் மனசுக்குக் கஷ்டமா இருக்கு.இங்கே மட்டுமில்லை, உலகில் எங்கெங்கே சண்டை நடக்குதோ அங்கெல்லாமும் நடுவில் அகப்பட்டுக்கிட்டுக் கஷ்டப்படுவது சாதாரண மக்கள்தான். இந்தியாவில்கூடப் பாருங்க ரெண்டு மதச்சண்டையில் குண்டு வெடிக்கும்போதெல்லாம் இழப்புப் பொதுமக்களுக்குத்தானே?


தூயா கேட்டதும் என்ன சொல்றதுன்னு கொஞ்சம் முழிச்சேன். தெரிஞ்சவரை உண்மைகளை மட்டும் சொல்லி இருக்கேன். புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கை உண்டு.

இந்தத் தொடருக்கு எழுதும் விருப்பம் உள்ளவர்கள் இதையே ஒரு அழைப்பாக எடுத்துக் கொண்டு எழுதுங்க.

16 comments:

said...

//இதைச் செய்ய இவுங்களுக்கு 30 வருசமாச்சான்னு இருக்கு. முளையில் கிள்ளி எறிந்திருக்கவேணாமோ? வளரவிட்டுட்டாங்களேன்னு இருக்கு.///

உண்மையாய் அனைவரின் மனங்களிலும் விடைதெரியாமல் விளைந்து நிற்கும் கேள்வி?

இத்தனை ஆண்டுகள் எதற்காக காத்துக்கிடந்தார்கள்? உயிர் பலிகளின் எண்ணிக்கை பார்க்கவா?

said...

வாங்க ஆயில்யன்.

தமிழ்மணத்தில் இணைக்க முடியலை.
புதுப்பதிவு இல்லைன்னு சொல்லுது.

உங்க கண்ணுக்கு அகப்பட்டது எப்படி? ரீடர்லே இருக்கா?

//இத்தனை ஆண்டுகள் எதற்காக காத்துக்கிடந்தார்கள்? உயிர் பலிகளின் எண்ணிக்கை பார்க்கவா?//

(-:

said...

ரீச்சர், நம்மளை யாராவது கேட்டாங்கன்னா உங்க பதிவுக்கு ஒரு சுட்டி குடுத்துட்டு ஓரமா உக்கார்ந்துருவேன்!!

said...

//ரெண்டு வலிமையுள்ளவர்களுக்கிடையில் எளியவர்கள் மாட்டிக்கிட்டு அவதிப் படுவதை நினைத்தால் மனசுக்குக் கஷ்டமா இருக்கு//

நல்ல சொன்னீங்க மேடம்..பாதிக்கப்படுவது என்னவோ ஏதும் அறியா அப்பாவிகள் தான்

said...

நல்ல பதிவு,

//இதைச் செய்ய இவுங்களுக்கு 30 வருசமாச்சான்னு இருக்கு. முளையில் கிள்ளி எறிந்திருக்கவேணாமோ? வளரவிட்டுட்டாங்களேன்னு இருக்கு./// என்று கேட்டிருக்கீங்க!

அதுக்கு விளக்கம் சொல்ற மாதிரி நானும் ஒன்ன எழுதியிருக்கேன் நேரம் கிடைத்தால் போய் பாருங்க...

என்னமோ தெரியலீங்க தமிழ்மணத்துக்கு தொடுப்பு கொடுக்க முடியவில்லை..... (நாம ஒன்னும் கணணியில் கோட் புலி கிடையாதே அதுதானா இருக்கும்).

said...

முதலில் பதிவிற்கு நன்றி சொல்லிக்கின்றேன் :)

said...

வாங்க கொத்ஸ்.

என்ன.... இன்னுமா உங்களை யாரும் கேக்கலை??????

அச்சச்சோ.....

said...

வாங்க கிரி.

எல்லா நாட்டுலேயும் சண்டைன்னு வந்தாலே பாதிப்பு அப்பாவிகளுக்குத்தான்(-:

said...

வாங்க ஜோசப் இருதயராஜ்.
முதல்முறையா வந்துருக்கீங்கபோல?

நலமா? வருகைக்கு நன்றி.

உங்க வீட்டுப் பக்கம் போய் வந்தேன் நேத்து. நல்லாத்தான் சொல்லி இருக்கீங்க.

said...

வாங்க தூயா.

அழைப்புக்கு நன்றிப்பா.

said...

I got to know your blog today. It's nice to read someone writing in Tamil from New Zealand.

said...

டீச்சர் எப்படி இருக்கீங்க?

தலையச் சுத்தி உங்க பதிவுக்கு வந்துள்ளேன்.பூனைக்கு யார் மணி கட்டுவாங்கன்னு பார்த்து இறுதியா கலைஞர் மூலமாக ஈழம் மீண்டும் தலை தூக்குகிறது.இரு பக்கங்களின் வன்முறைகள் பார்க்கவும்,படிக்கவும் மனம் வேதனை அடைகிறது.இத்தனை கால ஈழத்து விசயங்களை அசை போட்டு நிகழ்காலத்துக்கு வந்தால் விளைவுகள் எப்படியிருந்த போதிலும் புலிகளை ஒதுக்கி விட்டு ஈழத்துக்கு ஒரு முடிவு இல்லை என்றே தோன்றுகிறது.புலிகளின் வெற்றியில் கூட இன்னும் தீர்க்கப் பட வேண்டிய தீர்ப்புக்கள் ஏராளமாக இருக்கிறது.ஆனால் தோல்வியில் ஈழத் தமிழர்களுக்கு எந்த உத்தரவாதம் எதிர்காலத்தில் வரும் என தெரியவில்லை.வடக்குப் பக்கம்தான் போரின் நிலை என்றால் விடுபட்ட கிழக்கு எப்படி இயங்குகிறது என்று பொதுவாக அனுமானிக்கும் சூழல் கூட இல்லை.உயிர்ப் பலிகளின் இறுதியில் மனித நேயம் மட்டுமே வெற்றி பெறும் என்பதனை இரு தரப்பும் உணர்ந்தால் ஒழிய இந்த 30 ஆண்டு கால ஈழத்து சரித்திரத்துக்கு விடைகள் தெரியப் போவதில்லை.ஒரு சுனாமியில் கூட பாடங்கள் கற்றுக் கொள்ள முடியாமல் நீளும் வாழ்க்கை வேதனை அளிக்கவே செய்கிறது.அதே நேரத்தில் அதனையும் மீறும் போர்க்குணம்........????????

said...

வாங்க கலையரசன்.

வணக்கம். நலமா?

முதல் வருகைக்கு நன்றி.

தமிழ் எப்படி நாடுகளை இணைக்குதுன்னு பாருங்க.

நெதர்லாந்து & நியூஸிலாந்து :-)

said...

வாங்க ராஜ நடராஜன்.

நலமா? எங்கே ஆளையே காணோம்?

மனிதனுக்கு இருக்கும் ஈகோவை என்னன்னு சொல்ல? போர்க்குணமும் அதில் ஒன்றுதான்(-:

said...

Just for curiosity came to your page . out of curiosity posting this comment. ( not sure if you guys accept comments in english - may be you are one of those tamil arvalargal)

I will answer to this question alone ( chuma oru time passukunu vechunga porupu illatha tamilana vena sollunga kavalai ellai.)

1. ஈழம் பற்றி உங்களுக்கு எந்த அளவிற்கு தெரியும்? அனுபவங்கள்?

oru izha tamilaroda 8 masam sernthu iruntha anubavam, avaruku thani uthi koduthu avara pesa vitu keta anubavam, "Nantha" padam parka vechu parkum pothay avaruku mogam irandu azhugai vanthathai partha anubavam, action padam parkarapa thidirunu avar odambu thuki potu azhurtha partha anupavam, Indian peace force avar vayila AK 47 vechu onuku adika vecha anubavatha avar solla keta anubavam, avar eppadi naatta vitu thapi vanthu thanoda manaiviyavum, maganiyum kuti poga kashtapadratha avar kankalai parthu ketun unarntha anubavam, avar mullama avarudiya palla nanbargaludan ezha war patri nerediyaga keta anubavam... neeriya kelvi gyana anubavam iruku.

oru izhathu islamiya nanbaroda 11 masam thangi avar samaithu sapitu vallarntha anubavam... thangai matumvathu usuroda irukanu daily phone pani kekurapa pakathula ninukitu iruntha anubavam. athay nanbar eppadi srilankalernthu india vanthu india passport vangi india citizena agi india va vitu veli natula india citizena vazhara anubavathai nerla parthu therinchukita anubavam.. avan indian citizenavum avar thangai srilankan citizenagavum pirinchu vazhara vedhaniayoda solla keta anubavamnu neriya iruku..

19 masam nan pazhagiya elllangaai tamilargal ellorum sarasari pamaran arasiyal selvaku ellatha LTTE thodarpu ellatha ( i hope so ) oru satharna elangai tamilan.

neriya kelvi gyanam iruku ....anna intha blog worldla palla peru izha situation vechu entha anubavaum ellama thanoda karutha pathivu panratha nenachukitu panra alambal than manasuku romba khastama iruku.

Ithula ena kodumaina pathivu potu athula suda vaku vatham aramechu athu arasiyal nedi patu, enamoo foriegn policy fulla karachu kudichu thelivu udaya periya pandithar mathiri than sollra oru karuthuku justification koduthu suda nallu comment potu ena panna try panranganu yosikarapa mansula oru anthangam.. ena kodumaida ithelamnu... seri pathi potureenga seriokay..

I hear in blog community , bloggers join hands and do lot of responsiblt things.. i hear lot of singapore, malaysian , norway tamilians are in the group .. why not you people open up to share your one day salary and collect and find a proper way and leagal way to send your contribution ( NOT TO LTTE) but to RED cross / medical team etc.

Pesurenga ezhuthureenga... yen oru nalla kariyatha eduthu seiya mudiyalla . May be you guys are doing and i am not aware and i am mistaken . May be you guys and your group of bloggers are trying towards or may be executing the same. Insha allaha.. it is done as i believe.

chuma thodar podatheenga, chuma pesathinga.. pesi pesi ayachu .. etha seiyunga seiyanumnu manasu iruku ungaluku atha adutha leveluku eduthu ponga anna legala panunga ... formality kandupudinga...

Sollanumnu thonichu soliten.. May be you can moderate the comment to avoid publishing in your post. Nan enna kezhuchenu kepenga.. nan oru kaiyalagatha poramboka irunthutu poren.

I am posting the same comment in all the bloggers page where i see they joining hands in this chain tagging - not to gain publicity - just making my views registered as you trying to register your thoughts throgh the chain tagging. If you think i am doing a publicity - its okay can be judged so. no issues.

said...

வாங்க தெரிஞ்சவராவும் தெரியாதவராகவும் இருப்பவரே.

இதை எதுக்கு மாடரேட் செய்யணும். உங்க கருத்தைத்தானே சொல்றீங்க?

அதேதான், ரெண்டு சிங்கங்கள்கிட்டே மாட்டிக்கிட்டு நடுவில் நிற்கும் ஆடுகள்தான் சாதாரண மக்கள்.