"அம்மா, எனக்கு இந்த ட்ரெஸ், பேண்ட்ஸ், ஜாக்கெட் எல்லாம் வேணாம்"
"ஏண்டா.... எல்லாம் நியர்லி புதுசா இருக்கே."
" இப்ப நான் இளைச்சுட்டேன். இதெல்லாம் ரெண்டு சைஸ் பெருசா இருக்கு"
" சரி. பூனைக்குக் கொடுத்துறலாம். நோ ப்ராப்ளம்"
மகள் வீட்டைக் காலி செஞ்சுக்கிட்டு இருக்காள். ஏகப்பட்ட சாமான்கள். வேற ஊருக்குப் போறதால், உடனடியாத் தேவைப்படாதவைகளையெல்லாம் நம்ம வீட்டுலே போட்டுட்டுப்போகச் சொல்லி இருக்கேன். இனி ஒருக்கிலும் தேவை இல்லாதவைகளையெல்லாம் சரிபார்த்து ரெண்டு கூறு கட்டப்போறேன். பயன்படுத்தக்கூடியவைகள், ஒரேதா ஒழிச்சுக்கட்ட வேண்டியவைகள்னு பிரிக்கணும்.
ஒரு சர்வே விவரம் சொல்லவா? குப்பை போடுவதில் கில்லாடிகள் நாங்க(-: உலக நாடுகள் வரிசையில் கூடுதல் குப்பை கொட்டும் நாடுகளில் நியூஸியும் ஒன்னு. வருசத்துக்கு 3.6 மில்லியன் டன் குப்பை போடுறோமாம். இதுலே 90% மறுசுழற்சி செய்யக்கூடியதுதானாம். அதை இப்பத்தான் ஒரு அஞ்சு வருசமாக் கண்டுபிடிச்சு வீட்டுவீட்டுக்கு ரீசைக்கிளிங் பின் ஒன்னு கொடுத்துருக்கு நம்ம சிட்டிக் கவுன்சில். (அடுத்தவருசம் முதல் புது சிஸ்டம் வருது. வரட்டும். அப்புறமா அதைப் பற்றிச் சொல்றேன்)
ஒரு மனுசனுக்கு வேண்டாத பொருள் இன்னொருவருக்குப் பொக்கிஷமா இருக்கலாம் என்ற கருத்துப்படி இங்கே செகண்ட் ஹேண்ட் பொருட்கள் விற்கும் இடங்கள் நிறைய இருக்கு. சால்வேஷன் ஆர்மி, ஸாலீஸ் என்ற பெயரில் அஞ்சாறு இடத்தில் வச்சுருக்காங்க. நமக்கு வேண்டாத பொருட்களை, இவுங்களுக்கு ஒரு ஃபோன் போட்டால் போதும், வந்து எடுத்துக்கிட்டுப் போயிருவாங்க. எலெக்ட்ரிக்கல் ஐட்டங்களுக்குத்தான் கொஞ்சம் கஷ்டம். வேலை செய்யுதான்னு பரிசோதிச்சு ஒரு எலெக்ட்ரீஷியன் சர்ட்டிஃபைடு செஞ்சால்தான் ஸாலீஸ்லே விற்க முடியுமாம். அதுக்கு யாரு செலவு செய்வாங்க?
சிட்டிக்கவுன்ஸிலின் டம்ப் (dump) களில் இப்பெல்லாம் மின்சார உபகரணங்களுக்குத் தனியா ஒரு இடம் ஒதுக்கி வச்சுருக்காங்க. அங்கே கொண்டுபோய் வச்சுட்டு வந்துரலாம். சூப்பர்ஷெட் என்ற ஒரு இடம் இப்ப நாலைஞ்சு வருசமா நடக்குது. அங்கே போனால் ஏராளமான பொருட்கள், அதை வாங்க , அல்லது வேடிக்கைப் பார்க்கன்னு ஒரு கூட்டம் இருந்துக்கிட்டே இருக்கும். சிலசமயம் நல்ல பொருட்கள் பலதும் மாட்டும். எங்க கடைக்கு டிஸ்ப்ளே செய்ய நாலு ஸ்டேண்டுகளை ஒன்னு ஒரு டாலர்ன்னு வாங்குனோம். பழைய புத்தகங்கள், நாவல்கள் டாலருக்கு அஞ்சுன்னு பொறுக்கலாம்:-)
இதெல்லாம் இல்லாம செகண்ட் ஹேண்ட் பொருட்களை வாங்கி விற்கும் கடைகளும் அங்கங்கே இருக்கு. இதுலே பழமையான (ஆண்ட்டீக்) பொருட்கள் விற்கும் கடைகளும் உண்டு. இதெல்லாம் கலெக்ஷன் ஐட்டம் என்றதாலே பயங்கர விலை.
கராஜ் ஸேல் ன்னு வீட்டு கார்ஷெட்டில் வேண்டாத சாமான்களைப் பரப்பிவச்சு, விளம்பரம் உள்ளூர் தினசரியில் கொடுத்தால் மக்கள்வந்து பார்த்துட்டு வேணுங்கறதை வாங்குவாங்க. இப்பச் சீனர்கள் அதிகமா குடியேறிட்டாங்க. பேரம் பேசணுமுன்னு 10 டாலர்னு விலை உள்ள பொருட்களை கொஞ்சம்கூடக் கூசாம 20 செண்டுக்குக் கேப்பாங்க. நமக்கு வெறுத்துப்போயிரும். அரைநாள் செலவுசெஞ்சு வீட்டுவாசலில் உக்கார்ந்துச்
சீப்படுறதைவிட, சேவை நிறுவனங்களுக்குத் தானமாக் கொடுத்தால் புண்ணியமாவது கிடைக்கும்னு கோபாலை வழிக்குக் கொண்டுவந்துருக்கேன்:-)
போனவருசம் பீச்சுக்குப் போகும் வழியில் ' Cats unloved' னு ஒரு கடையைப் பார்த்தோம். என்ன ஏதுன்னு விசாரிக்கலாமுன்னு உள்ளே நுழைஞ்சால் பழைய பொருட்கள் எக்கச்சக்கமா இருக்கு. கேட் ப்ரொடக்ஷன் லீக்( Cat Protection League)னு இங்கே பூனைகளுக்கான ஒரு சேவை நிறுவனம் இருக்கு. அதுதானான்னு பார்த்தால் இது அது இல்லையாம். நாம் நினைச்சுக்கிட்டு இருக்கோம் இங்கே மிருகவதை இல்லைன்னு. ஆனா அவுங்க அங்கே வச்சுருக்கும் போட்டோக்களைப் பார்த்தால் கண்ணுலே கரகரன்னு தண்ணீர் வந்துரும்.
அனாதைப் பூனைகளுக்காக, அவைகளைக் காப்பதற்காக நடக்கும் தர்மஸ்தாபனம் இது. அப்பவே முடிவு செஞ்சாச்சு, இனிமேல்பட்டு 'நல்ல நிலையில் இருக்கும் வேண்டாத பொருட்களைப் பூனைக்கே கொடுக்கணும்'. அதேபோல இதுவரை ஏழெட்டுமுறை கொண்டுபோய்க் கொடுத்ததில் அங்கே வேலை செய்யும் ஆட்கள் நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்களா
ஆகிட்டாங்க.
கடை உள்ளே
தன்னார்வச் சேவையாளர்கள்
இதுபோன்ற சேவை நிறுவனங்களில் எல்லாம் வேலை நடப்பது தன்னார்வப் பணியாளர்கள் மூலமே. பெண்கள் குறிப்பாக 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிகமாக இந்த 'வாலண்டியர் ஒர்க்' செய்கிறார்கள். குழந்தைகள் வளர்ந்து வீட்டைவிட்டு வெளியேறியபின் வரும் காலிக்கூடு/காலிவீடு (empty nest syndrome)பிரச்சனையில் இருந்து விடுபட்டு மனசைத் திசைத் திருப்ப இப்படி வெளியில் வந்து சமூகத்துக்கு ஒரு சேவை செய்வதும் நல்லதுதானே. அதேசமயம் அவர்கள் வயசையொத்த மற்ற நபர்களின் நட்பும் கிடைக்குதே. பெண்கள் மட்டுமில்லாமல் வயதான ஆண்களும் இப்படி தன்னார்வத் தொண்டு செஞ்சு தங்கள் ஓய்வுநேரத்தை இனிமையா ஆக்கிக்கறாங்க.
இந்த வாலண்டியர்ன்னு சொல்லும்போது கெர்ரி(Kerry Downey)யின் நினைவு வருவதைத் தடுக்கமுடியாது. கெர்ரிக்கு 52 வயசு.
Cat Protection League ல் வாலண்டியர். ஒருநாள் ' பூனை ஒன்னு எங்கிருந்தோவந்து ஃப்ளாட்டில் இருக்கு. நீங்க வந்து எடுத்துக்கிட்டுப்போங்க. இல்லைன்னா அதைக் கொன்னுருவேன்'னு வந்த தொலைபேசிச் செய்தியைக் கேட்டு, அந்தப் பூனையைக் காப்பாத்தப் போனாங்க. ரெண்டு நாளைக்குப்பிறகு அவுங்களைப் பிணமா ஒரு இடத்தில் போட்டுருந்த விவரம் கிடைச்சது. பூனைப்பிரேமிகளுக்கு மனசே கொந்தளிப்போச்சு. கொலையாளியைப் பிடிச்சாச்சு. இன்னும் வழக்கு விசாரணைக்கு வரலை.
போன ரெண்டு வார இறுதியிலும் மகளுடைய பொருட்களையெல்லாம் கொண்டுபோய்க் கொடுத்துட்டு வந்தோம். அப்படியே பீச்சுக்கும் போய்வரலாமுன்னு போனா.....போறவழியில் ஒரு பள்ளிக்கூடத்துலே ஸ்கூல்ஃபேர் நடக்குது. அப்பா அம்மாக்கள் தமக்கு வேண்டாதவைகளை ஒழிச்சுக்கட்டும் இன்னொரு வழி இது:-) இங்கே வாங்குன சோஃபாவைத் தள்ளிக்கிட்டுப் 'பெடஸ்ட்ரியன் க்ராஸிங்கில்' ஓடும் இளைஞர்களைப் பார்த்தோம்.
தெருவைக் கடக்கும் சோஃபா:-)
பள்ளிக்கூடத்துக்குள்ளே போகணுமுன்னு கோபால்கிட்டே சொன்னதுக்கு, 'இப்பத்தானே கழிச்சுக்கட்டுனதைக் கொண்டுவந்து பூனைக்குக் கொடுத்தோம். இப்பப் புதுக் குப்பை சேர்க்கணுமா?' என்றார்.
ஸ்கூல் ஃபேர்
ஸ்கூல் பேரில் சாமான்கள்
இன்னிக்குக் காலையில் 'கோகி' தண்ணீர் குடிக்கும் பாத்திரம் கைநழுவிக் கீழே விழுந்து உடைஞ்சுருச்சு. அதே போல ஒன்னு கிடைச்சால் வாங்கலாம்.
மத்தபடி 'வெறும் வேடிக்கை'ப் பார்க்கத்தான் போறோமுன்னு உறுதி மொழி கொடுத்தேன். ஆனால்........ செடி வைக்க ஒரு ப்ளாண்ட் ஸ்டேண்ட் கண்ணுலே பட்டுச்சு. அது என் தப்பா?
வாங்கிட்டொம்லெ:-)
கெர்ரி
இந்தப் பதிவை கெர்ரிக்கு சமர்ப்பிக்கின்றேன். அவர் ஆத்மா சாந்தி அடையவும் பிரார்த்திக்கிறேன்.
Tuesday, October 07, 2008
பேண்ட்ஸ் பெருசா இருந்தா, அது பூனைக்கு!
Posted by துளசி கோபால் at 10/07/2008 03:24:00 PM
Labels: Cats Protection League, School Fair, அனுபவம், குப்பை
Subscribe to:
Post Comments (Atom)
27 comments:
மீ த ஃபர்ஸ்ட்டு :)
//இந்தப் பதிவை கெர்ரிக்கு சமர்ப்பிக்கின்றேன். அவர் ஆத்மா சாந்தி அடையவும் பிரார்த்திக்கிறேன்./
:(
நானும் எனது அஞ்சலிகளை இங்கு செலுத்திக்கொள்கிறேன்.
அப்படியே இந்த பின்னூட்டத்தையும் கெர்ரிக்கே சமர்ப்பியுங்கள்
இப்படி ஒரு சாவா? :(
அடடே! பூனைக்குக் குடுக்குற வசதியா. எங்கிட்டக் கூட கொஞ்சம் துணிகள் இருக்கு. போட்டுக்கலாம். ஆனா போட்டு அலுத்துருச்சேன்னு வெச்சிருக்கேன். யாருக்குக் குடுக்குறதுன்னு தெரியலை இங்க. ஆனா வெலைக்கெல்லாம் விக்க விருப்பமில்லை. இந்தியாலன்னா யாருக்கும் குடுத்திருக்கலாம்.
அந்தம்மாவை ஏன் கொலை செஞ்சாராம்? பூனையைக் காப்பாத்துறதால கொலையா! என்ன கொடுமை டீச்சர் இது.
அவருடைய ஆன்மா அமைதி பெற ஆண்டவனை வணங்குகிறேன்.
;(
நல்ல சேவை..
எங்க வீட்டுக்கு பக்கத்தில் இதே போல் நாய்குட்டிங்களுக்கு இருக்கு..
என்னப்பா இப்படிக்கூட ஒரு மரணமா. எதுக்குப்பா இப்படிச் செய்வாங்க.
ஏதாவது காரணம் உண்டா.
வாங்க சென்ஷி.
நன்றிப்பா.
வாங்க குடுகுடுப்பை.
சமர்ப்பிச்சாச்சு. நன்றி
வாங்க கொத்ஸ்.
ரொம்ப வருத்தமான முடிவு(-:
வாங்க ராகவன்.
அங்கேயும் இதுபோல சாரிட்டிக்கு நடத்தும் கடைகள் இருக்கும். நாம் துணிகளையோ பொருட்களையோ கொடுத்துட்டா விற்பனையை அவுங்களே பார்த்துப்பாங்க. கிடைக்கும் காசு தர்மக் காரியங்களுக்குப் போகும்.
அதே சமயம் நம் பொருட்கள் தேவைப்பட்டவங்களுக்குப் பயனாவும் இருக்கும்.
அந்த ஆளுக்குப் பூனைகளைப் பிடிக்காதாம். ட்ராப் செஞ்சு பிடிச்சுத் தண்ணித் தொட்டியில் அமிழ்த்திக் கொன்னு போட்டுருவாராம். இது என்ன மாதிரி மன வியாதின்னு தெரியலை(-:
வாங்க கோபி.
வருத்தம்தான்(-:
வாங்க தூயா.
நம்மை நம்பி இருக்கும் உயிர்களுக்கு எதாவது செஞ்சா நல்லாத்தானே இருக்கு.
வாங்க வல்லி.
அந்த ஆளுக்கு ஏதோ மனவியாதிப்பா. ராகவனுக்கு எழுதுன பதிலைப் பாருங்க.
ஐயோன்னு மனசுக் கஷ்டமாப் போயிருது.
கெர்ரிக்கு எனது அஞ்சலிகளையும் செலுத்திக்கொள்கிறேன்... :-(
இது போன்ற நல்ல காரியங்களில் தன்னார்வத்துடன் ஈடுபடுவது மகிழ்ச்சியளிக்கிறது.... அந்த அம்மா தான் பாவம்.. :(
பரவாயில்லையே,பூனைக்காக உருக பலர் இருக்காங்க போல் இருக்கு.
நல்ல பணி.
//இந்தப் பதிவை கெர்ரிக்கு சமர்ப்பிக்கின்றேன். அவர் ஆத்மா சாந்தி அடையவும் பிரார்த்திக்கிறேன்.//
She looks so lovely :((. கஷ்டமா இருக்கு டீச்சர். May her soul rest in peace.
கெர்ரி ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்..
பாவம் கெர்ரி.
சைக்கோக்கள் மிகுந்த இந்த காலக்கட்டத்தில் பெண்கள் மிக கவனமாக இருக்க வேண்டியதாக இருக்கிறது.
வாங்க தமிழ் பிரியன்.
இங்கே தன்னார்வச் சேவை செய்யும் வாய்ப்புகள் அதிகம் இருக்கு. இதுக்குன்னு இருக்கும் நிறுவனத்துக்கு ஒரு ஃபோன் போட்டால் போதும்.
நமக்கு விருப்பமான துறையில் பணி செய்யலாம்.
நான் குழந்தைகள் லைப்ரெரியில் கிட்டத்தட்ட 13 வருசம் லைப்ரேரியனா இருந்தேன்.
வாங்க குமார்.
பூனைக்காக மட்டுமில்லைங்க. பறவைகள் (வாத்து உட்பட) உருகுபவர்கள் அதிகம்தான்.
இப்போ வசந்தகாலமாச்சே. வாத்துகள் குஞ்சு பொரிக்கும் சீசன். நல்ல மெயின் ரோடில் குழந்தைகுட்டிகளுடன் தெருவைக்கடந்து போகும் வாத்துக் குடும்பத்துக்கு வழிவிட்டுக் கார்கள் நிற்பதை அடிக்கடி பார்க்கலாம். நாம்தான் தெருவில் கவனமாக் கண்ணுவச்சுக்கிட்டே போகணும்.
வாங்க புதுவண்டு.
நல்ல சுபாவம் உள்ள லேடி. நேத்து மாலை வந்த செய்தித்தாளில் இவுங்களைப் பத்தி இன்னொரு செய்தியும் இருந்துச்சு.
தன்னுடைய உயிலில் 5000 டாலர்கள் எஸ்.பி.சி.ஏ வுக்கு எழுதி வச்சுருந்தாங்களாம். இவுங்க வீட்டை விற்கப்போட்டுருக்காம். வித்து அந்தக் காசு வந்தவுடன் கொடுப்பாங்களாம். வீட்டுச் சாமான்களை அவுங்க நிறுவின இந்த கேட்ஸ் அன்லவ்டு க்கு அனுப்பிட்டாங்களாம். அவுங்க பூனைகளை வேறு வீடுகளில் தத்து எடுத்துக்கிட்டாங்களாம்.
இது குடும்பம் சொன்ன சேதி.
வாங்க மதுரையம்பதி.
துயரத்தில் பங்கேற்றதுக்கு நன்றிங்க.
வாங்க க.ஜூ.
சைக்கோக்களுக்கு பெண் என்ன? ஆண் என்ன? மற்ற உயிர்கள்தான் என்ன?
வித்தியாசம் பார்த்தா நடந்துக்கறாங்க.
ஆபத்துன்னா அனைவருக்கும்தான்ப்பா. எல்லோரும் கவனமா இருக்கணும். இல்லையா?
வாங்க மொக்கைச்சாமி.
ஆறுதல் வார்த்தைக்கு நன்றிப்பா.
Post a Comment