ஹைய்யோ...என்ன ருசி என்ன ருசி!
சின்னப் பயலே , சொல்றதைக் கேட்டுக்கோ.
Chef க்கு மிஞ்சி உலகில் ஒன்னுமே இல்லை,ஆமாம்.
பெரியவங்க சொல்றது உன் நல்லதுக்குத்தான்
இவ்வளோ உயரமா வளருவேனா? நெசமாவாச் சொல்றீங்க?
அப்பப்ப 'டைம் பாஸ்'க்கு இதுவும் வேண்டித்தானே இருக்கு!
(Bill)Cats always prefer Chef !!! Meow.........
எப்படியெல்லாம் போஸ் கொடுக்கறேன் பாருங்க!
பெரியவங்க சொன்னாப் பெருமாள் சொன்னமாதிரி!!
ஜொலிக்கும் இளமையும் (உடல் நரைச்ச)முதுமையும்
என்னைப்போல் 'ஷக்தி மியாவ்' ஆகணுமுன்னா 'CHEF' ப்ராண்ட்டை விடாதே.
அம்மாவின் 'பின்' குறிப்புகள்:
இது விளம்பர யுகமாப் போயிருச்சே......
ப்ராடக்ட் ரெடி, மாடலும் ரெடி. ஆனா மாடலுக்கு மூடு வரணுமே. காத்திருந்து காத்திருந்து, PITக்காகப் புடிச்சதில் சில உங்கள் பார்வைக்கு. நல்லவேளை இப்ப டிஜிட்டல் வந்துருச்சு. படபடன்னு 94 படம் எடுத்துத் தள்ளிட்டேன். பழைய நாட்களா இருந்தால்..................... ஃபில்ம் ரோல் வாங்கியே போண்டியாகி இருப்பார் ஒருத்தர்:-)))))
முதல் படத்துலே காதை வெட்டுனதாலே அதை போட்டிக்கு அனுப்ப முடியலை (-:
Tuesday, October 14, 2008
அம்மாவின் பேச்சுக்கு ஆடிய ஆண் ' மாடல்'!!!
Posted by துளசி கோபால் at 10/14/2008 08:17:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
35 comments:
பிட் போட்டிக்காக ? ஓ !
கலக்கல் படங்கள் !
ஜிகேவுக்கு வாழ்த்துகள் !
வாங்க கோவியாரே.
வாழ்த்துகளுக்கு நன்றி.
'ஒட்டுத்துணியில்லாமல் மாடலிங் செஞ்ச ஜிகே'ன்னு தலைப்பு வைக்கலாமுன்னு நினைச்சேன்:-)))))
ஜூப்பர் படங்கள்! அத விட ஜூப்பர் மாடல்! :)
//'ஒட்டுத்துணியில்லாமல் மாடலிங் செஞ்ச ஜிகே'ன்னு தலைப்பு வைக்கலாமுன்னு நினைச்சேன்:-)))))//
ம்ஹூம்... ஒண்ணும் சொல்றத்துக்கில்ல.. :)
முதல் படம் சூப்பர். மற்றதும் அருமை.
//பழைய நாட்களா இருந்தால்..................... ஃபில்ம் ரோல் வாங்கியே//
இதையேதான் நானும் நினைப்பேன். ஒரு படத்தை தேற்ற குறைந்த பட்சம் இருபதாவது சுட வேண்டியிருக்கு:)!
வெற்றி பெற வாழ்த்துக்கள்!
வெற்றி பெற வாழ்த்துக்கள் டீச்சர் ;)
வெற்றி பெற வாழ்த்துக்கள் :))
பொறுமையாக இத்தனை போட்டோக்கள் எடுத்த டீச்சர்க்கும் அத்தனை நேரமும் மிக பொறுமையாய் போஸ் கொடுத்த மியாவ்க்கும் வாழ்த்துக்கள் :))
குட்டி மியாவ் ரொம்ப கஷ்டப்பட்டு அந்த 3 chefக்கு மேல கொண்டு போய் உக்கார வைச்சு எடுத்த படம் நல்லா இருக்கு :)))) (எம்புட்டு பொறுமை இந்த குட்டி வயசுலயே....?!!!)
கலக்கல் படங்கள் டீச்சர்.. குழந்தைகளை படமெடுக்கவே நானெல்லாம் திணறுவேன்.. நீங்கள் பூனைகளை வைத்து இவ்வளவு அழகாக எடுத்திருக்கிறீர்கள், ரெண்டும் செமையாக போஸ் குடுக்குது.. சுத்திப் போட்டாச்சா??
நல்ல மாடல் நல்ல போட்டோகிராபர்.. டப்பாமேல எல்லாம் ஏற்றி எடுத்திருக்கீங்க.. 96 ஆ நல்ல பொறுமை தான்..
க்யூட் :)
வெற்றிக்கு வாழ்த்துக்கள்!
டப்பா மேல் குட்டியா இருப்பது அழகா இருக்கு..:)
இந்த குட்டிப் பையனை இதுவரைக் காட்டிய மாதிரி தெர்லியே?
கலக்கல் :)
அட ஜிகே, அம்மாவுக்கு இத்தனை சம்ர்த்தாப் போஸ் கொடுத்திருக்கியே.
ஆமாம்,, அந்த கப்பு பொம்மை உனக்கு ரொம்பப் பிடிக்குமா.
சமத்துக் கப்பு,சம்த்து ஜிகே.
துளசியின் முயற்சிக்கு ஜே.
படங்கள் எடுத்த திறமைக்கு வாழ்த்துகள்.
"ஹை! ஸூ மியாவ்! குட்டிப் பாப்பா மியாவ்! ரத்னேஷ்க்கு வேணும்; ரத்னேஷ்க்கு வேணும்" என்று அடம் பிடிக்க ஆரம்பித்துள்ள ஜூனியரை என்ன செய்வதென்று தெரியவில்லை.
அழகான படங்கள். டப்பாவின் மீது அவ்வளவு உயரத்தில் எப்படிப் பொறுமையாக உட்கார்ந்திருக்கிறது!
வாங்க கவிநயா.
அதெல்லாம் வெறுதே 'ச்சும்மா':-))))
வாங்க ராமலக்ஷ்மி.
என்ன வெற்றியா? சரியாப் போச்சு:-))))
வாங்க கோபி & ஜி.
இதெல்லாம் ச்சும்மா 'இருத்தலின் அடையாளம்'ப்பா.
கணக்குலே சேர்க்கக்கூடாது:-)))
வாங்க ஆயில்யன்.
குட்டிக்கும் இருக்கும் பொறுமை நமக்கு இருக்க வாய்ப்பே இல்லை!!!!!
ஆடாது அசையாது சொன்ன இடத்துலே உக்கார்ந்துருக்கும் நம்மச் செல்லக் 'குட்டி':-))))
வாங்க வெண்பூ.
பெருசுதான் அவ்வளவா அடங்காதுப்பா.
சின்னது 'சூப்பர் ' குட்டி:-))))
வாங்க கயலு.
பொறுமையின் பூஷணமுன்னு ஒரு பட்டம் கொடுக்கக்கூடாதா?
எனக்கில்லேப்பா..... குட்டிக்கு:-)
வாங்க தஞ்சாவூரான்.
வெற்றி..........?????????
ஹஹஹஹஹஹ்ஹ்ஹா....
இப்படி உசுப்பி உசுப்பித்தான் ஒடம்பே ரணமா இருக்கு!!!
வாங்க தமிழ் பிரியன்.
சின்னதுக்குச் சொந்தக்காரி நானில்லை.
கோகிதான் உரிமையாளர்:-))))
அதான்............அவரோட டெடி மியாவ் பற்றி ரொம்பச் சொல்லலை:-)
வாங்க தூயா.
கலக்குனாத்தான் தெளிவு கிடைக்கும்:-)
நன்றிப்பா.
வாங்க வல்லி.
ஜிகேவுக்கு ரொம்ப மகிழ்ச்சி உங்க பின்னூட்டம் பார்த்து.
எப்படியோ ச்சும்மா உக்காந்துத் தின்னாம,
உழைச்சு 'மாடலிங்' செய்து சாப்பிடும்
உழைப்பாளியாம்:-)
வாங்க ரத்னேஷ்.
ஜூனியருக்கு மியாவ் பிடிக்குமா? இன்னொரு ப்ரேமியைப் பார்த்து எனக்கும் மகிழ்ச்சி.
சின்னவரை அவருக்கே தந்துரலாம். பிரச்சனை இல்லை.
கலக்கல் போஸ்கள்!!மாடலுக்கு எவ்வளவு சம்பளம்?
வாழ்த்துக்கள்!
ஹை!துள்சி! டின் மேலே ஒக்காந்துருக்கும் கருப்பு பூனைக் குட்டி பொம்மைதானே? ஒரே போஸிலிருக்கிறது? விளக்கம் தேவை!
நானானி, வல்லிம்மா சொல்லியிருப்பதைப் பார்க்கலியா?
//ஆமாம்,, அந்த கப்பு பொம்மை உனக்கு ரொம்பப் பிடிக்குமா.
சமத்துக் கப்பு,சம்த்து ஜிகே.//
ஆனாலும் துளசி மேடம் சிரித்தபடியே யாரிடமும் கப்புவை விட்டுக் கொடுக்கல பாருங்க:)))!
படம் செலக்ட் செய்து சொல்லலைப்பா. பாவமில்ல. ஜிகே கண்ணு ! எல்லாத்திலயும் சூப்பரா இருக்கே.
வாங்க நானானி.
சம்பளம் & போனஸ் கொடுக்கறோம்.
அக்கரோவா காட் மீன்கள் ஃப்ரெஷாக் கொடுப்பது போனஸ்:-)
நானானி,
அவர் கோகியின் 'டெடி மியாவ்':-)))))
நம்ம 'கப்பு' வேற மாதிரி இருப்பார்.
ராமலக்ஷ்மி.
விளக்க உதவிக்கு நன்றிப்பா.
வல்லி,
உங்க 'பாராட்டுமழையில்' ரொம்பவே நனைஞ்சுட்டான்ப்பா:-))))
Post a Comment