என்னன்னு நினைக்கிறது? 'நீ ஒரு தக்காளி'ன்னு நினைச்சேன்.
எல்லாம் இப்ப ஒரு ஏழெட்டுவருசமாத்தானே உன்னோடு பழக்கம். சீனர்கள்
இங்கே அதிகமாக் குடியேறுனபிறகுதான். அதுவும் நியாயம்தானே?
இப்ப நம்ம இந்திய மக்களுக்காக எத்தனை ஸ்பைஸ் ஷாப் வந்துருச்சு.
அவுங்கவுங்களுக்குப் பரிச்சயமான சுவையை, தீனியை விடமுடியுதா?
போனவாரம் நமக்கான ஒரு கடையில் 'வைகை'ன்னு போட்டுருந்த நொறுக்ஸ் பாக்கெட்டுகள் இருந்துச்சு. என்னடா நமக்குத் தகுந்தமாதிரி 'மதுரை'யே வந்துருக்கு! அரிசி முறுக்குன்னு தமிழ், மற்றும் மலையாளம், தெலுங்கு, கன்னடத்தில் எழுதி இருக்கு அந்தந்த மொழிக்கேற்றப் பெயர்களில்!
தென்னிந்திய மார்கெட்டைப் பிடிக்கும் உத்தி. நல்லது. ஆனா இதை மும்பாய்லே இருந்து ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனி அவுங்க பேரையும் சேர்த்து அச்சடிச்சு அனுப்பறாங்க. விலையும் நியாயமானதா இருக்கு இப்போதைக்கு. ருசி?
தென்னிந்திய மார்கெட்டைப் பிடிக்கும் உத்தி. நல்லது. ஆனா இதை மும்பாய்லே இருந்து ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனி அவுங்க பேரையும் சேர்த்து அச்சடிச்சு அனுப்பறாங்க. விலையும் நியாயமானதா இருக்கு இப்போதைக்கு. ருசி?
மாதிரிக்கு ரெண்டு பாக்கெட் வாங்கிவந்தேன். நம்ம ஊர் ருசிதான். அப்பாடா.....
ஹல்திராம் சமாச்சாரம் மாதிரி எல்லாத்துலேயும் ஆம்ச்சூர், சிட்ரிக் ஆஸிட் போட்டுத் தொலைக்காம இருக்கு.
ஹல்திராம் சமாச்சாரம் மாதிரி எல்லாத்துலேயும் ஆம்ச்சூர், சிட்ரிக் ஆஸிட் போட்டுத் தொலைக்காம இருக்கு.
சரி, தக்காளிக்கு வர்றேன்........ கடையில் ஒரு பக்கம் குவிச்சு வச்சுருக்காங்க. என்ன ஏதுன்னு தெரியாத நிலையில் மக்கள் தயங்குவதைத் தெரிஞ்சுக்கிட்டு ஒரு தட்டுநிறைய இதைத் துண்டு போட்டு வச்சு டூத் பிக்குகளும் அடுக்கி 'சாம்பிள் டேஸ்ட்' பார்க்க வச்சிருக்கு. ஒரு பயத்தோடும் தயக்கத்தோடும் தின்னு பார்த்தா.... இனிப்பாத்தான் இருக்கு. நுங்குபோல வாயிலே வழுக்கிப்போகும் தன்மை. தோல் பக்கம் மட்டும் கொஞ்சம் கட்டியா இருக்கு. நுங்குன்னா நம்ம பக்கம் சில நுங்கு கொஞ்சம் முத்திப்போய்க் கல்நுங்கா இருக்கும், கடிச்சுத் திங்கறதுபோல. எங்க வீட்டுலே எல்லாருக்கும் இளசா அப்படியே மெலிசா வழுக்கி வாயில் நிக்காமத் தொண்டையில் சட்'னு இறங்கிரும் பாருங்க, அதுதான் பிடிக்கும். எனக்கோ..... நறுக்குன்னு கடிக்கணும். கொஞ்சம் முத்துனதை நம்ம பக்கம் தள்ளி விட்டுருவாங்க. அசரமாட்டேன். அப்ப இருந்தே இடும்பிதான்:-) (விளையும் பயிர் முளையிலே தெரியுமாமே)
இதுக்குப்பேர் பெர்ஸிம்மோம்(Persimmom)ன்னு இங்கே கடைகளில் எழுதி வச்சுருக்காங்க. ஆனால் விக்கியண்ணன் பெர்ஸிம்மோன்னு(Persimmon) சொல்றார். மோமோ, மாமோ. மோனோ, இல்லை மானோ எதா இருந்தால் என்ன? திங்க நல்லா இருக்கு. சப்போட்டாப்பழம் விதை மாதிரி ஒன்னு சில பழங்களில் இருக்கு. லிமிட்டட் ஸ்டாக்:-)
அசப்புலே தக்காளி போல இருக்கும் ஆரஞ்சுச் சிகப்பு இதுன்னா, இன்னொண்ணு நம்ம லோக்கல் சமாச்சாரம். ஃபெய்ஜோவாஸ். (Feijoas). பச்சைக் கொய்யாக்காய் மாதிரி இருக்கேன்னு பார்த்தா...லேசா கொய்யாவாசனை வருது. அடங்கொய்யால:-))))
பிரேஸில் நாட்டுலே இருந்து மத்த இடங்களுக்குப் பரவி இருக்கு. அந்த நாட்டைச் சேர்ந்த ஒரு பிரபல தாவர இயல் நிபுணரைக்( João da Silva Feijó)
கௌரவிக்கும் விதத்தில் ஜெர்மனியைச் சேர்ந்த இன்னொரு தாவர இயல் நிபுணர் இந்தப் பழத்துக்கு Feijoas ன்னு பெயர் சூட்டிட்டார்.) மத்தவங்களை மனம்திறந்து பாராட்டவும் பெரிய மனசு வேணும் இல்லே?
கௌரவிக்கும் விதத்தில் ஜெர்மனியைச் சேர்ந்த இன்னொரு தாவர இயல் நிபுணர் இந்தப் பழத்துக்கு Feijoas ன்னு பெயர் சூட்டிட்டார்.) மத்தவங்களை மனம்திறந்து பாராட்டவும் பெரிய மனசு வேணும் இல்லே?
தோழி வீட்டுலே மரம் இருப்பது யாருக்காக?:-)
பழுத்துச்சா இல்லே, பச்சைக்காயான்னு சொல்லமுடியாம 'எவர்க்ரீன்' கலர்தான் இதுக்கு. ரெண்டா நறுக்கினா உள்ளே மங்கிய வெளுப்பு நிறத்தில் ஜெல்லி போலத் தெரியுது. அப்படியே ஒரு ஸ்பூனால் வழிச்சு வாயிலே போட்டுக்கலாம். கொய்யாப்பழ வாசனையோடு இனிக்குது. தோல்பகுதிக்குக் கிட்டே லேசான துவர்ப்பும் புளிப்பும் சேர்ந்த ருசி.(அதானே தோலோடு முழுங்கணுமே எனக்கு) கொஞ்சம் 'க்ரிட்டியா' இருக்கு நாக்குக்கு.
இப்பெல்லாம் உலகம் ரொம்பவே சுருங்கிப்போச்சு. இந்தியாவிலும் எல்லாமே இறக்குமதி ஆகுதுல்லையா? கிடைச்சா..... ஒன்னு 'வாங்கி'த் தின்னு பாருங்க.
இதோட மரங்கள் இங்கே நியூஸியில் நல்லாவே வளருது, நம்ம வீட்டைத்தவிர. நானும் அஞ்சு வருசமா ஒரு செடியைத் தொட்டியில் வச்சு வளர்த்துக்கிட்டு இருக்கேன். போற போக்கைப் பார்த்தான் நம்மது 'போன்ஸாய்' ஆகிரும்போல!
ஆமாம்..... தமிழ்ச் சினிமாவுலே மட்டும்தான் கதாநாயகியரின் தொப்புள்லே ஆம்லெட்,பம்பரம், இடுப்புச் சுளுக்கிருச்சுன்னு சொல்லி எண்ணெய் ஊத்தி உருவறதுன்னு சகலவிதங்களுக்கும் சீன் வச்சுரும் இயக்குனர்கள் இந்த தொப்புளுக்கு என்ன சொல்வாங்களோ? இது புதரக இறக்குமதி. தொப்புள் கொடிஉறவு என்பது இதுதானோ என்னவோ? :-))))
கலிஃபோர்னியா நேவல் ஆரஞ்சு.
தொப்புளுக்கு ஒரு குளோஸ் அப்! (உண்மையைச் சொல்லுங்க, கவர்ச்சியாவா இருக்கு?)
நல்லாச் சாப்புடுங்க. நம்ம வகுப்பில் இன்னிக்கு பழமோ பழம்தான்.
பழம் தின்னுக் கொட்டைபோட்டவங்கன்னு பெருமைப்பட்டுக்கலாம் தானே?
இல்லையா பின்னே?
49 comments:
ரீச்சர், எங்க ஊரில் பெர்ஸிமான் அப்படின்னுதான் சொல்லுவாங்க. நம்ம ஊர் மாம்பழத்துக்கு அப்புறம் எனக்குப் பிடிச்ச பழம் இதுதான்.
நேவல் ஆரஞ்சு உரிச்சா அதுக்கு உள்ள இருக்கிற சின்ன பழம் ரொம்ப டேஸ்டா இருக்கும்!!
அந்த கொய்யாப் பழம் பத்தி தெரியலை. ஆனா நம்ம ஊரு கொய்யாப்பழம் மாதிரி வருமா....
அப்புறம் சொல்ல மறந்துட்டேனே. பெர்ஸிமான் தோலில் சிறிய முட்கள் மாதிரி தடித்த முடி இருக்கும். கையை குத்தவும் செய்யும். நல்லாப் பழுத்து சாப்பிட்டால் சூப்பரா இருக்கும்....
டீச்சர்,முதல் ஆளா இன்னிக்கு வகுப்புக்கு வந்துட்டேன்னு நினைக்கிறேன்.
சூப்பரா இருக்கு..படங்களும் அதற்கான விளக்கங்களும்.. :)
அந்தத் தக்காளிப் பழம் மாதிரி இருக்குறதை இன்னிக்குத்தான் பார்க்குறேன்.அழகா இருக்கில்லையா?
அந்தக் கொய்யாவும் தான்.
நிஜமாவே அந்தத் தொப்புள் பழத்துக்கு தொப்புள் இருக்கா?இல்லேன்னா கடைக்காரர் ஓட்டை போட்டுட்டாரா?
உங்க செடியிருக்குற தொட்டியை மாத்திப் பாருங்க டீச்சர்..சிலநேரம் வேர் செல்ல இடமில்லாட்டியும் இப்படித்தான் மரம் சுருங்கும்.
////நல்லாச் சாப்புடுங்க. நம்ம வகுப்பில் இன்னிக்கு பழமோ பழம்தான்.
பழம் தின்னுக் கொட்டைபோட்டவங்கன்னு பெருமைப்பட்டுக்கலாம் தானே?////
எங்க சாப்பிடறது? படம் பார்த்து இச் கொட்டுறதோட நிறுத்திக்க வேண்டியதுதான்.
அதெல்லாம் இங்கே கிடைச்சாத்தானே?
Reliance - Fresh, Birla - More மாதிரி பெரிய செயின் ஸ்டோர் காரங்க வரவழைத்து விற்றால் - விலையும் கட்டுபடியாகிறமாதிரி இருந்தால் மட்டுமே சுவைக்கின்ற சாத்தியம் உண்டு. இல்லையென்றால் இல்லை!
வாங்க கொத்ஸ்.
வகுப்புத் தலைவனா லட்சணமா முதல்லே வந்ததுக்கு நன்றி.
விக்கியண்ணனும் 'மான்'னே சொல்றார்:-)
எந்த முள் சொல்றீங்க? முதல் படத்தில் பழத்தில் அடியில் தெரியுதே அதா?
அதை வெறும் நகத்தால் கிள்ளி எடுக்க வருதேப்பா.
நம்மூர் கொய்யா மாதிரி வரவே வராது....
உள்ளே கூழா இருக்கு.
இங்கே தாய்லாந்து கொய்யா டப்பாவில் அடைச்சு வருதே சக்கரைத்தண்ணீரில் ஊறவச்சது. லேசா அப்படி ஒரு ருசின்னு வச்சுக்கலாம்.
வாங்க ரிஷான்.
செடி 'பாட் பவுண்ட்' இல்லை. ரொம்ப மெதுவா வளருது. ரெண்டு வருசமா நாலைஞ்சு பூக்கள் வந்து போகுது. குளிர்ன்னு இப்ப கன்சர்வேட்டரிக்கு மாத்தி இருக்கு. நாடாறு மாசம் காடாறு மாசமுன்னு இருந்தால் இப்படியாகுமோ என்னவோ?
ஒவ்வொரு பழமா எடுத்துத் தொப்புள் வைக்க 'புதரக அதிபரே' வந்து செஞ்சாத்தான் உண்டு.
இது ரெட்டைப் பழம்போல உருவாகுதாம். உரிச்சுப் பார்த்தால் தொப்புள் பக்கத்தில் ரொம்பக் குட்டியூண்டா ஒரு ஆரஞ்சு சில சுளைகளோடு இருக்கும். அந்தப் பாகம் நல்ல ருசி. (பிள்ளைக்கறி?)
ரெட்டைப்புள்ளெகளாச்சே...
விதையில்லாத வகைகள்தான்.
லீடர் உங்களுக்கு முன்னாலேயே வந்துட்டார்.
//சூப்பரா இருக்கு..படங்களும் அதற்கான விளக்கங்களும்.. :)//
ரிப்ப்ப்பீட்ட்டே........
வாங்க வாத்தியார் ஐயா.
அந்தச் 'சீனத்தக்காளி' சீக்கிரமா வந்துருமுன்னு நினைக்கிறேன்.
ந்தக் கொய்யா நீண்ட பயணத்துக்குத் தாங்காது.
எல்லாம் மேட்டர் ஆஃப் டைம்.
துளசி மேடம்! புதிய பழ வகைகளை பற்றி தெரிஞ்சிகிட்டேன்.நன்றி.
நேவல் ஆரஞ்சு மட்டும் கிடைக்குது.
வாங்க ச்சின்னப் பையன்.
கிடைச்சா விடாதீங்க.
வாங்க பிரேம்ஜி.
உலகம் பூரா புதுசுபுதுசா என்னென்னவோ இருக்கு.
நமக்குத்தான் இவைகளைப் பத்தித் தெரிஞ்சுக்க முடியலை.
இப்ப வலை இருப்பதால் 'நான் பெற்ற இன்பம்'.... தான்:-)))
வாங்க ராமலக்ஷ்மி.
குளிர் ஆரம்பிச்சுருச்சு. இனிமேல் இங்கே மூணு மாசத்துக்கு பழங்கள் எல்லாம் வடகோளத்துலே இருந்துதான் வரணும்.
நேவல் சாப்பிட்டுப் பார்த்தீங்களா?
ஆனாலும் நம்ம 'கமலா'வுக்கு ஈடாகாது.
ஒரு முறை சுவைத்த பின் நேவலுக்கு டாட்டா! ஏன்னா, கமலா கமலாதான்!
//என்னை முதல்முதலாகப் பார்த்தபோது என்ன நினைத்தாய்?
என்னன்னு நினைக்கிறது? 'நீ ஒரு தக்காளி'ன்னு நினைச்சேன்.//
இதைக் கேட்டாலே சந்தோஷப்படக்கூடிய ஒருவர் நம் திரையுலகில் இருந்தார் (இன்னும் இருக்காரான்னு தெரியல்லே). அவர்தான் ஹீரோ கம் வில்லன் கம் தயாரிப்பாளர் தக்காளி சீனுவாசன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ரீச்சர், பழங்கள் அருமை. ஆனா அந்த தொப்புள் பழம் பார்க்க கொஞ்சம் உவ்வேன்னு இருக்கு. ஆமா உங்களுக்கு சீதாபழம் பத்தி தெரியுமா? எங்க வீட்டிலே ஒரு மரம் இருந்துச்சு. அதை பறித்து சின்ன அக்காவுக்கு தெரியாம வைக்கோல் போர், உமிபானை துணி பீரோ எல்லாத்திலும் பழுக்க வச்சி அக்கா திருடி திங்கும் முன்னே நான் தின்னு வ்வ்வ்வ்வ்வாவ் அந்த ருசியே தனி. கருப்பு கொட்டைகளை கடாசிவிட்டு மாவுமாதிரி கொஞ்சம் கொர கொரன்னு இருக்கும் அந்த ஜெல் மாதிரியான சதை சாப்பிடும் போதும், பழம் முடிஞ்ச பின்னே முதலில் வேண்டாம் என தூக்கி போட்ட தோல் பகுதியை யாரும் பக்கத்தில் இல்லை என உருதி செஞ்சுகிட்டு மெதுவா எடுத்து கரண்டுவதும் அப்படி ஒரு டேஸ்ட் போங்க அது. அது அங்க நியூசியிலே இருக்கா???எழுதுங்க ரீச்சர்!!!
வாங்க டோண்டு.
அட! நான் 'அந்தத் தக்காளி'யை மறந்தேபோனேன். ஆனாலும் 'தேங்காயளவுக்கு' தக்காளிக்குப் புகழ் இல்லைதானே?
டீச்சர்,
பழங்கள் பற்றிய படங்களும், செய்திகளும் அருமை.
//மோமோ, மாமோ. மோனோ, இல்லை மானோ எதா இருந்தால் என்ன?//
சிங்கையில் இருந்த போது நிறைய பார்த்திருக்கிறேன். ஆனா சாப்பிட்டுப் பார்த்ததில்லை. அப்பவே பதிவு போடப்படாதா ???? :)) இங்க கிடைக்குதா பார்க்கிறேன்.
வாங்க அபி அப்பா.
ரொம்பத்தான் உங்களுக்கு.....
அருமையா நீங்க விவரிச்சதைவிட நான் எழுத ஏதாவது இருக்கா என்ன?
சூப்பராச் சொல்லிட்டீங்களே சீ(த்)தாப் பழத்தை:-)))
இங்கே இல்லை. ஆனா ஒரு சமயம் சிட்னியில் paddy market இல் கிடைச்சது. வாங்கி மகளுக்குக் கொடுத்தேன். அவளுக்கும் ரொம்பப்பிடிச்சது இந்த கஸ்டர்ட் ஆப்பிள்.
நான் தமிழில் இதன் பெயர் சொன்னதும் அவள் கேட்டாளே ஒரு கேள்வி.....
"தென் வேர் ஈஸ் தட் கை ராமர்ஸ் ஃப்ரூட்?"
வாங்க சதங்கா.
இப்போதான் எதைப் பார்த்தாலும் பதிவெழுதலாமான்னு கை துடிக்குதே....
அதான்.:-)
இங்கே சீஸன் இப்போது. எல்லாம் இறக்குமதிதான்:-)
நாடே இனி கொஞ்ச நாளில் முழுக்கச் சீனர்வசமாகும்போல் இருக்கு.
"தென் வேர் ஈஸ் தட் கை ராமர்ஸ் ஃப்ரூட்?"
:))))!
பழங்களெல்லாம் சப்புக்கொட்ட வைக்குது. தொப்புள்பழம் ரொம்ப கவர்ச்சி! ஆமா..? பம்பரம் விட்டுப் பார்த்தீர்களா?
சீதாப்பழத்துக்கு அபிஅப்பா சொன்னதே நானும்.
ராமர்பழம்தானே..கண்டுபிடிச்சிட்டாப் போச்சு!!!ஆனாலும் உங்க பெண்ணும்
உங்களை மாதிரி லொள்ளுதானோ?
நல்ல லொள்ளு!!!!
என்னங்க ராமலக்ஷ்மி,
இப்படிச் சிரிப்பாணியா இருக்கு!!!
இதுக்குத்தான் நம்ம கலாச்சாரம் பண்பாடுன்னுக்கிட்டு ந்சம்ம பாட்டி சொன்ன கதைகளையெல்லாம் நம்ம பசங்களுக்கு எடுத்துவிடக்கூடாதுன்றது.
பேரக்குழந்தைகளுக்குன்னாப் பிராப்ளம் இருக்காதுல்லே?
நப்பாசைதான்;-)
வாங்க நானானி.
சொன்னா நம்பமாட்டீங்க....
நம்மகிட்டே ஒரு பம்பரம்கூட இருக்கு.
கார்பெட்லே விடமுடியலைன்றதுதான் குறை.
முந்தி ஃபிஜியில் இருந்தப்ப பம்பரம் விடுவதும் அப்பீட் எடுக்கறதும் குழந்தையின் உள்ளங்கையில் சுத்தவிடுறதுமா மஜாதான்:-)))
மகளுக்கு லொள்ளு கொஞ்சம் கூடுதல்தான்.
எட்டடி பதினாறடி......
அது ஒண்ணுதாங்க குடும்பச் சொத்தா இருக்கு:-)
உங்கள் பதிவுகளை படிக்கும்போதெல்லாம் பசி எடுக்கிறது
Persimmon அப்படீன்னுதான் இங்கே சூப்பர் மார்கெட்லயும் போட்டிருக்கு, சீதாப்பழம்கூட கஸ்டர்ட் ஆப்பிள் னு கிடைக்குது. ஒரு பழம் எட்டு டாலர். எங்க வீட்டுல ஒரு சீதாப்பழம் இருந்துச்சு. ஆனா அண்ணன் , அக்கா யாருக்கும் பிடிக்காது. நமக்கு வந்த வாழ்வுக்கு கேக்கணுமா
வாங்க முரளிகண்ணன்.
இனிமேல் சாப்பாடு ஆனபிறகு மட்டுமேப் பதிவைப் படியுங்க:-))))
அடுத்தவாரம் 'உணவுத்திருவிழா வாரம்' வைக்கலாமுன்னு இருக்கேன்.
வசதி எப்படி?
வாங்க சின்ன அம்மிணி.
சீத்தா கிடைச்சாளா? அடடா.... நமக்கு இன்னும் அந்த பாக்கியம் வரலையே.....
புஷ்பக விமானத்துக்கு எங்கே போவேன்?
இல்லேன்னா துளசிப் பாலம் கட்ட வேண்டியதுதான்.
தீவு, நடுவில் கடல் எல்லாம் பொருந்தி வருது பாருங்க:-)
இங்கே ஆரஞ்சும் பச்சையும் கோபாலுக்கு அவ்வளவா விருப்பம் இல்லை.
தனியொருவளா 'முடிச்சுக்கிட்டு' இருக்கேன்.
// கலிஃபோர்னியா நேவல் ஆரஞ்சு//.
// தொப்புளுக்கு ஒரு குளோஸ் அப்! (உண்மையைச் சொல்லுங்க, கவர்ச்சியாவா இருக்கு?)
//
என்னம்மா இப்படி ஒரு கேள்வியைக் கேட்டுட்டீங்க. அதுவும் 'உண்மையைச் சொல்லுங்க'ன்னு
வேற சொல்றீங்க ..
நான் என்னத்த சொல்லுவேன். எப்படி சொல்லுவேன்.
வீட்டுகாரரு வேற ஊரிலே இல்ல.. பாத்தூட்டா என்ன சொல்வாரோ தெரியல்லீங்க
இருந்தாலும் சொல்லிப்போடறேனுக ..
இந்த கவர்ச்சி சமாசாரமே நிலைச்சு நிற்கிறது இல்லைங்க..
இன்னிக்கு இருக்கும் நாளைக்கு போயிடும்.
கவர் பண்ணி இருக்கிற வரைக்கும்தாங்க எதற்கும் கவர்ச்சி.
கவர் போயிடுச்சுன்னா சீன்னு போயிடுங்க.
சும்மாவா சொன்னாங்க அந்தக் காலத்துலே
பொம்பள சிரிச்சாப்போச்சு, புகையிலை விரிச்சாப்போச்சு .. அப்படின்னு
எதிலும் ஒரு அடக்கம், ஒரு மறைவு இருக்கணும்க, அதுலே தாங்க அழகு கீது.
இன்னொரு சமாசாரம் இருக்குங்க.
இப்ப வர இந்த தினுசு ஆரஞ்சு, கொய்யா, ஆப்பிள் எல்லாமே genetically modified
அப்படின்னு எங்க ஊட்டுகாரரு ஹின்டு பேப்பர்லே போட்டிருக்குதாம். சொல்றாரு.
அலர்ஜி வரும் கான்ஸர் வரும் அப்படின்னு போட்டிருக்குதாம். நீங்க படிச்சீகளா ?
ஒரு மாசத்துக்கு முன்னாடி ஞாயிறு ஹின்டுலே விலாவாரியா போட்டிருக்காங்க.
ஆப்பிள் இறக்குமதி ஆவுதுங்க .. பேரிக்கா மாதிரி இருக்குதுங்க.
ஆரஞ்சு . கலர் சூப்பரா இருக்குங்க. டேஸ்ட் நம்ம ஊட்டி ஆரஞ்சு இல்லைங்க.
மாம்பழம் இறக்குமதி சரக்கெல்லாம் மண் மாதிரி இருக்குங்க.
இதெல்லாம் யாருங்க கவனிக்கப் போறாங்க ?
உலகம் எல்லாமே நீங்க சொன்ன கவர்ச்சி பின்னாடிலே போவுது ..
மீனாட்சி பாட்டி.
தெரியாத்தனமா ஒரு நாள் சாப்பிட்டுவிட்டு அடிமையாகிவிட்டேன். இங்கு விலை கொஞ்சம் அதிகம்.
\\எனக்கோ..... நறுக்குன்னு கடிக்கணும். கொஞ்சம் முத்துனதை நம்ம பக்கம் தள்ளி விட்டுருவாங்க. அசரமாட்டேன். \\
ஐஐஐ.....டீச்சர் நானும் அப்படி தான்...சென்னையில இளசா கிடைக்கிறது ரொம்ப கஷ்டம் வேற..;))
படங்கள் எல்லாம் கலக்குது டீச்சர்...;)
உள்ளேன் டீச்சர்,
சில நேரங்கள்ல (காலங்கள்ல) நேவல் ஆரஞ்சு, கண்ல படும்.
//என்னை முதல்முதலாகப் பார்த்தபோது என்ன நினைத்தாய்?//
தலைப்பப் பார்த்துட்டு, நான் கூட...சரி விடுங்க.:D :D
பி.கு.:அட!பதிவுக்கு முன்னாடிப் படம் பார்த்துட்டோம்ல.அதனால,தலைப்பப் பார்த்துட்டு நான் கூடத் தக்காளின்னு தான் நினைச்சேன்னு சொல்ல வந்தேன். :)))).பதிவு ருசியா இருந்தது டீச்சர்.
வாங்க மீனாட்சி பாட்டி.
நீங்க 'கவர்ச்சி பற்றி'ச் சோனது அவ்வளவும் நெசந்தான்.
இங்கே நம்ம நாட்டுலே ஜெனெடிக்லி மாடிஃபைடு எதுக்கும் அனுமதி இல்லீங்க. அந்தவரை தப்பிச்சேன்.
கீரை காய்கள் எல்லாம் கூட ஆர்கானிக் வகைன்னு பூச்சிமருந்து அடிக்காத வகைகள் கிடைக்குது.
ஆனாலும் இங்கேயும் கான்சர் நிறையத்தான். பாதிக்கும் மேல் தோல் புற்றுதான். அதான் ஓஸோன் லேயரில் ஓட்டை இருக்காமே(-:
வாங்க குமார்.
ஒரு நாலைஞ்சு வாங்கிக்கலாம்.
இங்கே இப்ப கிலோ 3.50க்குக் கிடைக்குது.
வாங்க கோபி.
கல் மனசுதான் கூடாது இல்லே?:-))))
சின்னப்புள்ளையில் ஆல்மண்ட் உள்ளே இருக்கும் கோழிமுட்டை முட்டாயை வாயில் அடக்கிக்கிட்டு இருப்பேன். அதானே ரொம்ப நேரம் திங்க முடியும்.
பொரு(ள்)விளங்காய் உருண்டையும் இதே கேட்டகிரிதான்:-))))
வாங்க நியூபீ.
ருசியா இருந்துச்சா? பேஷ் பேஷ்.
அடுத்தவாரம் முழுசும் சாப்பாடே போட்டுறவா? :-))))
ரீச்சர்
ரெண்டு சந்தேகம்..
நம்பர்-1. இந்தப் பதிவுக்கு நான் என்ன கமெண்ட் போட முடியும்..?
நம்பர்-2.. எப்பவும் பதிவு போடறதுக்கு முன்னாடியே கொத்தனாருக்கு மட்டும் சொல்லிருவீங்களா..? எல்லாப் பதிவிலேயும் அவர்தான் முதல் ஆளா வந்து நிக்குறாரு..?
இடும்பி,
நான் இடும்பன் கச்சி இல்ல - அதுக்கு எதிர்க்கச்சி - முத்தல் எல்லாம் பிடிக்காது. சீத்தாப்பழம் பிடிக்கும். தொப்புள் ம்ம்ம்ம் - குளோசப் உவ்வே தான். இவ்வளவு பழங்களையும் தேடிப்பிடிச்சு தெரிஞ்சிக்கிட்டுல்ல வாங்கிச் சாப்பிடணும். ம்ம்ம்ம்ம்
வாங்க உண்மைத் தமிழன்.
1. குறைஞ்சபட்சம் படம் 'பளிச்'ன்னு இருக்குன்னு சொல்லலாம்:-)
2. கொத்ஸ் நம்ம வகுப்புக்கு லீடர். அவர்தாம் மொதல்லே வரணும். வகுப்பறை ஒழுங்கா இருக்கா, கரும்பலகையைப் பளிச் ன்னு துடைச்சு வச்சுருக்கான்னெல்லாம் யார் செக் பண்ணுவா சொல்லுங்க?:-))
அவர் தூக்கமில்லாம எப்பவும் அலெர்ட்டா இருந்துக்குவார்.ஆமா....
வாங்க டெல்ஃபீன்.
பழங்களை வச்சு 'யாரையோ'விரட்டலாமாம்:-))))
வாங்க சீனா.
நலமா? என்ன ரொம்ப நாளுக்கு ரொம்ப நாளு?
பழங்கள் கிடைக்குதான்னு பார்க்கப்போனீங்களா என்ன?
இப்ப எல்லாமே கிடைக்குமளவு உலகம் சுருங்கிருச்சு.
ஒவ்வொரு பழமா எடுத்துத் தொப்புள் வைக்க 'புதரக அதிபரே' வந்து செஞ்சாத்தான் உண்டு//
வந்துட்டாலும்.....
அப்பாடி இவ்வளவு கவர்ச்சி காட்டக் கூடாதுப்பா துளசி. கலருக்கு கலர். அழகுக்கு அழகு ருசி தூக்கலா இருக்கும் போல இருக்கே:)
சூப்பர் படங்கள். என்ன கை அரிக்குதா:))
என் கை இப்போ பின்னூட்டம் மட்டுமே போட அரிக்குது!!!!
வாங்க வல்லி.
சொறிப்பிடிச்சவன் கையும், ஆடுன காலும், எழுதறவங்க கையும்/மனமும் சும்மா இருக்குமா? :-)))))
சுவையான பதிவு திருமதி.துளசி.
பெர்சிமன் பழம் 2 வடிவங்களில் வருகிறது; உருண்டை மற்றும் முந்திரிபழம் போன்று. முந்திரி பழம் போன்ற வடிவம் சில சமயம் நாக்கில் அரிப்பைத் தருகிறது. உருண்டையே சிறந்தது. பெர்சிமன் பற்றி மார்க் ட்வெய்ன் ஹக்கில்பெரி ஃபின்னில் சொல்வார்.
Feijoas என்பதை ஃபியிஹோஸ் என்பதாக உச்சரிக்க வேண்டும்.ஸ்பேனிஷ்,போர்த்துகீசிய மொழிகளில் jo என்பது ho என்பது போல. h வந்தால் அதற்கு ஒலி கிடையாது...ஒரு தகவலுக்கு ;)
//தொப்புளுக்கு ஒரு குளோஸ் அப்! (உண்மையைச் சொல்லுங்க, கவர்ச்சியாவா இருக்கு?)//
ஹீ ஹீ ஹீ அப்படி எல்லாம் சொல்ல படாது...
அப்புறம் ஊர்ல இருந்து என் அம்மாவ கூட்டிட்டு வந்துட்டேன்.. இனி நாங்களும் இப்படி சாப்பிடுவோம்ல :-)
டீச்சர்,என்ன உங்களை இங்கிட்டு http://rishansharif.blogspot.com/ இன்னும் காணோம்? :)
வாங்க வாசன்.
நலமா? ரொம்ப நாளாச்சே உங்களைப் 'பார்த்து'!
உங்க 'நாயார்' எப்படி இருக்கார்?
இங்கே அந்த முந்திரி வடிவம் நல்ல வேளையா வர்றதில்லை:-)))
கூடுதல் தகவலுக்கு நன்றி. நம்ம தோழி ஒருத்தர் 'ஜெயா'வை 'யெயா'ன்னுதான் கூப்புடுவார்.அவுங்க மொழியில் j என்பதை y ஆக உச்சரிக்கிறார்களாம்.
வாங்க கிரி.
சிங்கையே ஒரு குட்டி இந்தியாவா இருக்குல்லே? அங்கே நம்ம சாப்பாட்டுக்கு என்ன பஞ்சம்?
ஆனாலும் அம்மாவின் கைமணம் நம்ம கோமளத்துக்கு வருமோ?
:-))))
அம்மாகிட்டேக் கேட்டு புதுசமையல் குறிப்புகள் போடுங்க.
வாங்க ரிஷான்.
ஒரு மூணுநாலு வாரமா கொஞ்சம் ஓட்டம் (வலை மொழியில் சொன்னால் ஆணிகள்) கூடிப்போச்சு.
முந்தாநாள் முதல் 'ஹைபர்நேட்' காலம் தொடங்குச்சு. கண்ணு தொறக்கும்போதெல்லாம் மெதுவா உங்க வீடுகளுக்கெல்லாம் பொடிநடையில் வருவேன்:-)))
Post a Comment