குட்டிக்குட்டியாக் குண்டுகுண்டா இருக்கும் கத்திரிக்காயைப் பார்த்ததும் எங்க ரெண்டு பேருக்கும் எப்பவுமே வரும் எண்ணம் இப்பவும் வந்துச்சு. லா.ச.ராவின் கத்தரிக்காய்க் கதை!
ரொம்ப வருசங்களுக்கு முந்தி எங்கியோ (விகடன், குமுதமா இருக்கலாம்) படிச்சோம். அப்பெல்லாம் நம்ம வாசிப்புகள் இந்த ரெண்டையும் விட்டால் மூணாவதா கல்கி.
"வறுமை நிறைந்த குடும்பத்திலே, சாப்பிட ஏதுமில்லாமல் குழந்தைகள் எல்லாம் போய் எங்கியோ வேலி ஓரத்தில் முளைச்சுக்கிடக்கும் கத்தரிச்செடியில் இருந்து பறிச்சுவந்த கத்தரிப்பிஞ்சுகளைக் கறியாக்குவாங்க அம்மா. கொழந்தைகள் எல்லாம் வெறுமனே அதை மட்டும் தட்டுலே போட்டு வழிச்சுத் தின்னுட்டுத் தரையில் உருளுங்கள்.''
மனசை விட்டு அகலாத கதை. இதை ஒருசமயம் சொல்லப்போய், நம்ம கீதா சொன்னாங்க அவுங்க மனசுலே இதைப்போல நிற்பது 'வளை'ன்னு. நானோ ஒரு திண்டிப்போத்து. அதான் தின்னும் சமாச்சாரம். அவுங்கவுங்களுக்கு ஏதுவா ஏதோ ஒண்ணு:-)
கத்தரிக்காயிலும் நீட்டுக்கத்தரி எனக்குப் பிடிக்காது. உருண்டையா இருக்கணும்.
கோல்கோல்வாலா ச்சாஹியே. லம்பாவாலா பஸந்த் நை.
இது நம்மக் கடைக்காரம்மாவுக்கும் நல்லாவே தெரியும். எல்லாம் ஃபிஜியில் இருந்து வருவதுதான்.
இன்னிக்கு என்னவோ ஏறக்குறைய ஒரே மாதிரி அளவில் கிடைச்சது. பொடி அடைச்சு முழுசா வதக்கித் தரவான்னு கேட்டதும் கோபாலுக்கு வாயெல்லாம் பல் & மனசெல்லாம் ஜில்.
நம்ம 'தனி' வழியில் அடுப்பு & மைக்ரோவேவ் அடுப்புக் காம்பினேஷனில் சமைச்சு எடுத்தேன். எண்ணெய் ரொம்பச் சேர்க்காமல் நேரம் ரொம்பச் செலவாகாமல் செஞ்சது.
முழுக்கத்தரிக்காய் எண்ணெய்க் கறி.
கத்தரிக்காய் - 8
மிளகாய் வத்தல் 8
தனியா விதை 2 டேபிள் ஸ்பூன்
உ. பருப்பு 1 டேபிள் ஸ்பூன்
க. பருப்பு 1 டேபிள் ஸ்பூன்
பெருங்காயத்தூள் அரைத் தேக்கரண்டி
தேங்காய்த் துருவல் 1 மேசைக்கரண்டி( கொத்ஸ்க்கு இது மைனஸ்)
எண்ணெய் 1 தேக்கரண்டி
இன்னும் ரெண்டு மூணு தேக்கரண்டி எண்ணெய் வேணும். எதுக்குன்னு அப்புறமாச் சொல்றேன்.
வாணலியை அடுப்பில் வைத்து ஒரு தேக்கரண்டி எண்ணெயில் தனியாவிதை, பருப்புகள் சேர்த்து வறுக்கணும். முக்கால் வாசி வறுபட்டதும் மிளகாய் சேர்க்கணும். கூடவே பெருங்காயத்தூள். கடைசியா அந்தத் தேங்காய்த்துருவல்.
அடுப்பை அணைச்சுட்டுக் கத்தரிக்காயை நறுக்க ஆரம்பிங்க. பாவாடை(?) இல்லாமல்தான் இங்கே வருது. காம்பை நறுக்கிட்டு, நாலாப் பிளந்துக்கணும். அடிவரை நறுக்க வேணாம். பார்க்க முழுசா இருக்கணும். ஆனால் நாலுபாகமாத் திறக்கவும் வரணும்.
புழுப் பூச்சி இருக்கான்னு பரிசோதிச்சுக்குங்க.
நறுக்குனதை தண்ணீரில் போட்டு வையுங்க.
வறுத்துவைத்திருக்கும் சாமான்களைச் சட்னி ஜாரில் போட்டு ஒரு தேக்கரண்டி உப்பு, ஒரு தேக்கரண்டி ஆம்ச்சூர் ( பயந்துறாதீங்க. காய்ஞ்ச மாங்காய்த் தூள்தான் இது. இந்தியன் கடைகளில் கிடைக்கும். நானே ஒரு காம்ச்சோர். அதான் ஆம்ச்சூர். கிடைக்கலைன்னா கவலையை விடுங்க. கொஞ்சூண்டு புளி சேர்த்துக்கலாம். கொட்டையை எடுத்துறணும்) சேர்த்துப் பொடிச்சுக்கணும்.
வாணலியைக் கழுவ வேணாம்:-) இன்னொருக்கா அதுக்கு வேலை இருக்கு.
கத்தரிக்காய் மிதக்கும் தண்ணீரை வடிச்சுட்டு, அதை ஒவ்வொண்ணா எடுத்துத் திறந்து இந்தப் பொடியை அடைக்கணும். மீதி இருக்கும் பொடியை ஒரு குட்டிக் கண்டெயினரில் போட்டு ஃப்ரிட்ஜில் வைக்கணும். அதை இன்னொரு சமையலுக்கு எடுத்துக்கலாம்.
பொடிஅடைச்ச காய்களை ஒரு மைக்ரோவேவ் பாத்திரத்தில் அடுக்கி ஒரு 25 மில்லித் தண்ணீர் சேர்த்து மைக்ரோவேவ் அவனில் 100 சதமானம் பவரில் அஞ்சு நிமிஷம் வச்சு எடுங்க.
அந்தக் 'கழுவாத' வாணலியை மீண்டும் அடுப்பில் ஏத்தி, அந்த ரெண்டுமூணு தேக்கரண்டி எண்ணெய் ஊத்திக் காய்ஞ்சதும் அரைடீஸ்பூன் கடுகு, ஒரு இணுக்குக் கறிவேப்பிலை சேர்த்துக் கடுகு வெடிச்சதும் வெந்தக் கத்திரிகளை அலுங்காம நலுங்காம வாணலியில் ஒவ்வொண்ணாச் சேர்த்து மிதமான தீயில் வதக்கணும். அப்பப்பத் திருப்பி விடுங்க. எல்லாப் பக்கமும் வறுபட்டு, ப்ரவுண் நிறமா வரணும். இதுக்கு ஒரு அஞ்சு நிமிசம் எடுக்கும்.
ரொம்ப மெனெக்கெடாம, சீக்கிரம் செஞ்சு வச்சுட்டேன்.
நல்லா இருந்துச்சாம்........
நானாக நொய்நொய்ன்னு கேட்டபிறகு சொன்னார்:-))))
Monday, May 12, 2008
கத்தரிக்கா.....குண்டு கத்தரிக்கா
Posted by துளசி கோபால் at 5/12/2008 09:56:00 AM
Labels: eggplant, சமையல் குறிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
34 comments:
ஸ்ஸ்ஸ்ஸ் சூப்பரோ சூப்பர் டீச்சர்! இதோ சமைக்க ஆரம்பிச்சுட்டேன்!
காம்பை நறுக்கிட்டு, நாலாப் பிளந்துக்கணும்
இந்த முறை ஊருக்கு போன போது,அம்மா இதை செய்தபோது நான் தான் காயை நறுக்கினேன். காயின் கால் வாசி பிளந்தால் போதும் என்றும் இல்லாவிட்டால் அதில் வைக்கும் பொடி அதிகமாகிப்போகும் என்றார்.
வாங்க கவிஞரே,
நலமா? ரொம்ப நாளா ஆளையே காணோம்?
இன்னிக்குச் சிங்கை மக்களுக்குப் பொழுது விடிஞ்சது கத்தரிக்காயிலா? :-))))
பார்க்கும் போதே சுவை தெரிகிறது. செஞ்சு பார்த்திருவோம்.
வாங்க குமார்.
கால்வாசி பிளந்தால் போதுமா?
அடடா..... நான் கொஞ்சம் அதிகமாவே பிளந்துட்டேன் போல!
நம்மூர்லே ரொம்பப் பிஞ்சுக் காய் கிடைக்கும். அதிகமாப் பொடி தாங்காது.
இந்த ஃபிஜிக்காய் கொஞ்சம் கெட்டிதான். (நம்ம வெட்டு குத்து அடி உதையெல்லாம்) நல்லாவே வாங்கிக்குது:-)
எங்கள் பகுதியில் உ.பருப்பு, க.பருப்பிற்குப் பதிலாக, பொட்டுகடலையை உபயோகிப்பார்கள். சூப்பராக இருக்கும்! செய்து பாருங்கள் டீச்சர்!
வாங்க பிரேம்ஜி.
செஞ்சுட்டுச் சொல்லுங்க.
ரொம்ப தூரத்தில் இருக்கேன்.ஆட்டோ வராதுன்ற தைரியம்தான்:-)
வாங்க வாத்தியார் ஐயா.
பொட்டுக்கடலையா?
அட! இருக்கே நம்ம கிட்டே.
செஞ்சுருவோம்.....
சூப்பர் டீச்சர்...2-3 நாள் முன்னாடி அம்மா பண்ணினாங்க...இதே பக்குவம் தான்..ஓவன் தவிர :)
//நானாக நொய்நொய்ன்னு கேட்டபிறகு சொன்னார்//
இதென்ன புதுசா நமக்கு?... :)
ஒரு நாள் நானே செய்யும் பொழுது எந்த விதமான பொருளையும் விடாம எல்லாவற்றையும் போட்டுப் பண்ணிடலாம். வாத்தியார் ஐயா சொன்னதையும் கணக்கில் எடுத்துக்கலாம்.
எனக்கு கத்ரிக்காய் சுத்தமா பிடிக்காது. :(
ஆனா நீங்க படத்தில் போட்டிருப்பது நல்லா இருக்கு. :)
இப்படி ஒரு சுலபமான வழி இருக்கா. பொட்டுக்கடலை போட்டு செஞ்சு பாத்துருவோம். முதல்ல இந்த கத்திரிக்கா வரட்டும் இந்தியக்கடைல. கண்கொத்திப்பாம்பு மாதிரி போய் வந்துருச்சான்னு பாத்துகிட்டே இருப்போம்ல. புது வழிமுறைக்கு தேங்க்ஸ் டீச்சர்
நானும் இப்படித்தான் செய்வேன் ஆனா ஆம்சூர்+தேங்காய் கிடையாது. பின் வானலியில் பிரட்டிவிட்டு கொஞ்சமேகொஞ்சம் எண்ணெய் சேர்த்து பின் அவனில் கிரில் செய்துவிட்டாலும் ரொம்ப சுலபமாக இருக்கும்..
நல்லா இருந்துச்சாம்........
நானாக நொய்நொய்ன்னு கேட்டபிறகு சொன்னார்:-))))
எல்லாவீட்டிலூம் நிலமை இதானா!!!
நான் என்னவோ இங்க மட்டும்தான் இப்படின்னு நினைச்சேன்.
நீ கேக்கலை நான் சொல்லலை, இது அயித்தானி ஆவி வந்த டயலாக்.
எங்க புதுக்கோட்டை பக்கத்துல கிரிக்கட்டலைன்னு ஒரு கிராமம் இருக்கு அங்கேர்ந்து பிஞ்சு கத்திரிக்கா
கொண்டுவந்து கீரக்காரம்மா கொடுக்கும்போதுதான் என்ணைய் கத்திரிக்காய். தேனாய் இனிக்கும்.
சேம் ப்ளட், இன்னிக்கு இங்கயும் கத்திர்க்காய் தான்.
இந்தக் கத்திரிக்காய் போறாதே என் பசிக்கு.
பரவாயில்லை டிபனாச் சாப்பிடுறேன்.
உண்மையாலுமே பத்து நிமிஷத்தில ஆயிடுச்சாப்பா.
நினைக்க நினைக்க நெஞ்சுக்குள்ளே....ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:)
<===
நல்லா இருந்துச்சாம்........
நானாக நொய்நொய்ன்னு கேட்டபிறகு சொன்னார் ===>
===))))
சமைச்சது (எதிர்பார்த்ததுக்குத் தகுந்தபடி)நல்லா இருந்தா, எந்த ர.மணியும் தானாவே சொல்வாங்க ===))))
ஒரு ப்ளேட் பார்சல்
முந்தா நாள் தான்.. வாட்டெவர் இட்டீஸ்.பீர்க்கங்காய்.. . செய்தேன் உங்கரெசிப்பி பாத்து.. தினம் ஒரு சமையல் போட சொல்லு துளசியைன்னு கேட்டுகிட்டாங்க என் வீட்டுக்காரங்க.. :)
வாங்க மதுரையம்பதி.
என்ன இருந்தாலும் இந்த 'அம்மா'க்களின் கைப்பக்குவம் வர்றதில்லை நமக்கு.
அதான் வாய் நிறைய கத்தரிக்காய் இருக்கே. எப்படி பதில் சொல்வதாம்? :-))))
வாங்க கொத்ஸ்.
// ஒரு நாள் நானே செய்யும் பொழுது....//
அப்ப வீட்டுலே தினமும் சமையல் தங்குவா?
அடடா..... கைக்குழந்தையை வச்சுக்கிட்டுச் சிரமப்படாதேன்னுட்டுப் பூந்து வெள்ளாடவேண்டியதுதானே?
இந்த சந்தர்ப்பம் கிடைக்குமா?:-))))
(அதாவது உடனடியா?)
வாங்க அம்பி.
எனக்கும்தான் கத்த்ரிக்காய் பிடிக்காமல் இருந்த காலம் உண்டு.
ஒண்ணும் கிடைக்காத ஊருக்கு வந்தபிறகு கத்தரிக்காய்ன்னு காகிதத்தில் எழுதி அதை வச்சே குழம்பு செஞ்சும் இருக்கேன்:-))))
படம் இன்னும் அழகா எடுத்துருக்கலாம். அதென்னவோ நமக்கு பரிமாறுமுன் அலங்கரிக்கக் கை வர்றதில்லை(-:
ப்ரஸண்டேஷன் முக்கியம்னு எப்பத் தோணப்போகுதோ?
வாங்க சின்ன அம்மிணி.
இன்னொரு வகையிலும் செய்யலாமாம். தோழி மின் அரட்டையில் வந்து சொன்னாங்க.
பொடி அரைக்கும்போது,வதக்கிய வெங்காயம் சேர்த்து அரைச்சு, அடைக்கலாமாம்.
கொஞ்சம் ஈரப்பசை இருப்பதால் நல்லா ஒட்டிப்பிடிக்கும் இல்லே?
நானும் செஞ்சு பார்க்கணும். ஒரு மாசம் ஆகட்டும். உடனே மறுபடின்னு செய்யக்கூடாது.
ரொம்பச் சின்ன வயசுல காய்கறியே சாப்பிட மாட்டேன். எங்க அத்தை திட்டுவாங்க. மீனு கோழி கறின்னா திம்பேன். தூத்துக்குடில மதியம் வீட்டுல இருந்து எடுத்துட்டுப் போன சாப்பாட்டை பக்கத்துல இருந்த நண்பன் வீட்டுல சாப்ப்பிட்டேன். அப்ப புளியூத்துன கத்தரிக்காய் குடுத்தாங்க. நல்லாருந்துச்சு வீட்டுல சொல்லி செய்யச் சொல்லி திட்டு வாங்கினேன். :) ஏன்னா அத வீட்டுல அடிக்கடி செய்வாங்களாம். ஹி ஹி
அதுக்கப்புறம் கத்தரின்னா விடுறதில்லை. திரும்பவும் அம்மா அப்பா கிட்ட வந்தப்புறந்தான் வெட்டுகத்திரிக்காய் சாப்டது.
சொரியாசிஸ் வந்தப்ப எல்லாரும் அறிவுரை சொன்னாங்க. கத்தரியே தொடாதன்னு. நானும் கொஞ்சம் பயந்திருந்தேன். இப்பல்லாம் வெட்டுறதுதான். :)
வாங்க கிருத்திகா.
அவன் ஐடியா சூப்பர். ஆனா நிறையச் செஞ்சாப் பரவாயில்லை.
நம்மூட்டுலே வெறும் 8. நம்ம மின் அவனோ பெரிய அளவு. 5 பர்னர் அடுப்பு.
இது சூடாகி வேலை ஆரம்பிக்குமுன் வாணலியில் வறுத்துறலாம்.
நம்ம 'அவன்' மினி ஸ்டோரேஜ்தான்.
சூடாக இருக்கும் எண்ணெய் வாணலி, தோசைக்கல் இவை வைக்குமிடம்:-)
வாங்க புதுகைத் தேன்றல்.
லோகமந்தா அன்னி ஒக்கட்டே.....
அயித்தான்களும், அத்தங்காக்களும்:-)))
வாங்க வல்லி.
இது போதாதா?
அடடா......
நம்மவீட்டுலே இதுவே ரெண்டு வேளைக்கு வரும்.
3 +1 & 3 +1
:-))))
வாங்க சாமான்யன் சிவா.
//சமைச்சது (எதிர்பார்த்ததுக்குத் தகுந்தபடி)நல்லா இருந்தா, எந்த ர.மணியும் தானாவே சொல்வாங்க ===))))//
ரங்குகளின் 'சரித்திரத்தை' மாற்றி எழுதப்போறீங்களா? :-)))))
வாங்க முரளி கண்ணன்.
ஒரு ப்ளேட் அனுப்பியாச்சு. கொ(கூ)ரியர் வருதான்னு கவனிங்க:-)))
வாங்க முரளி கண்ணன்.
ஒரு ப்ளேட் அனுப்பியாச்சு. கொ(கூ)ரியர் வருதான்னு கவனிங்க:-)))
வாங்க கயல்விழி.
பீர்க்கங்காய் நல்லா இருந்துச்சா?
நீங்களாவது சொல்லக்கூடாதா?
இனி தங்குகளையும் நொய்யணுமா?:-))))
வாரம் ஒரு ரெஸிபி போடலாமுன்னு ஐடியா இருந்துச்சு. செஞ்சுருவோம்.
ரசிகப்பெருமக்களின் வேண்டுகோளின் படின்னு .....:-))))))
//
நல்லா இருந்துச்சாம்........
நானாக நொய்நொய்ன்னு கேட்டபிறகு சொன்னார்:-))))//
ஹா..ஹா,.... வேற வழி?:P
அம்மா வைக்கும் சூப்பர் எண்ணைக் கத்தரிக்காய் குழம்பு சுவை ஞாபகம் வருது:)
வாங்க ரசிகன்.
அம்மா வைக்கும் குழம்பா?
ஆமாங்க. அதுலே அப்படி என்னதான் போடறாங்களோ..... அந்தக் கைப்பக்குவம் நமக்குச் சுட்டுப்போட்டாலும் வர்றதில்லை (-:
Post a Comment