Tuesday, May 20, 2008

எங்கூர் நர'சிம்ஹர்'

நேத்து நம்ம கோயிலில் நரசிம்ஹர் ஜெயந்திக் கொண்டாட்டம். பிரஹலாதன் கதையைச் சொல்லிக்கிட்டு இருந்தார் ஒருத்தர். வழக்கம்போல் சொதப்பல். அதையெல்லாம் வழக்கம்போல் நாமும் கண்டுக்கலை. ஆனால் ஒரே ஒரு விசயம் அவர் சொன்னது எனக்குப் புதுசா இருந்துச்சு.



"ராமா அவதாரத்தில் ராமர் நடந்துவந்த பாதையில் ஹிரண்யனின் எலும்புக்கூடு ஒரு இடத்தில் இருந்தது. ஸ்ரீராமர் அதன்மேல் தண்ணீர் தெளித்ததும் பொன்னுருவாக ஹிரண்யன் உயிர்த்தெழுந்தான். ராமரை வணங்கிப் பின் மேலுலகம் சென்றான்."


நெசமாவா?




நம்ம கேயாரெஸ் ஆழ்வார் விளக்கம் சொல்வாருன்னு ஒரு எண்ணம்தான்.


ஆரத்திக்கு முன்பு சின்னதா ஒரு ஸ்கிட்.


ஹிரண்யன், பிரஹலாதனிடம் உன் நாராயணன் எங்கே? எங்கே? என்றுக் கேட்டுக்கொண்டு சபைக்கு வந்தான். இந்தத் தூணில் இருக்கிறானா என்று தூணை(கதவை)த் தன் கத்தியால் தட்டியதும் நரசிம்ஹம் வந்தது.



ஹிரண்யனைத் தூக்கித் தன்மடிமேல் போட்டுக்கொண்டு 'சோஃபா'வில் அமர்ந்தது. வயிற்றைக்கிழித்துக் குடலை எடுத்து மாலையாகப் போட்டுக் கொண்டது.




கோபத்துடன் உடல் சிலிர்க்க உட்கார்ந்து இருந்தவரைப் பிரஹலாதன் வணங்கித் தன் தந்தைக்கு மோட்சம் அளிக்கச் சொன்னான்.


மங்கையர் பூமாரி பொழிந்தனர்.

நரசிம்ஹம் அனைவரையும் ஆசீர்வதித்துவிட்டுச் சென்றது.
ஒரே ஒரு சின்ன விளக்கு மட்டுமே அந்த ஹாலில் இந்தக் காட்சிக்காகப் போட்டு மாலைமயங்கும் நேரத்தைக் காட்டியிருந்ததால் படங்கள் 'பளிச்' என்று வரலை.

37 comments:

said...

/////படங்கள் 'பளிச்' என்று வரலை.////

வந்தவரைக்கும் பார்க்கும்படியாகத்தான் இருக்கிறது டீச்சர்!நன்றி

said...

வாங்க வாத்தியார் ஐயா.

இன்னிக்கு உங்க ராசிக்கான பலன்: நீண்டநாள் எண்ணம் நிறைவேறும்.

சரியா?

லீடரை முந்திக்கிட்டீங்களே அதான்...:-))))

said...

//////துளசி கோபால் said...
வாங்க வாத்தியார் ஐயா.
இன்னிக்கு உங்க ராசிக்கான பலன்: நீண்டநாள் எண்ணம் நிறைவேறும்.
சரியா?
லீடரை முந்திக்கிட்டீங்களே அதான்...:-))))////

ராசி பலன் எல்லாம் நமக்குத்தான். லீடர்களுக்கு இல்லை!
அதுவும் நம்ம கொதனாருக்கு இல்லை!
அவர் சகட யோகக்காரர்.
அதனால்தான் ஜெர்சியில் இருக்கிறார்!
ஒபாமா பதவிக்கு வந்ததும் பாருங்கள்.
இவர் உலகம் முழுவதும் அறியப்பட இருக்கிறார்!

said...

வாத்தியார் ஐயாக்காக நான் தான் விட்டுக்கொடுத்தேன்.
நமக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லி இருந்தீகளே அது எதுக்கு?

said...

வாவ்!! ஸ்கிட் அருமையாக இருக்கிறது.. சூப்பர்!!!

said...

வாங்க சிபி அப்பா.

எதோ கன்ஃப்யூஷனாப் போச்சோ?


சிபிக்குப் பொறந்தநாள் வாழ்த்தை உங்ககிட்டேக் கொடுத்தனுப்பினேன்.

said...

வாங்க ச்சின்னப் பையன்.

இந்தவருசம் வளவளன்னு இழுக்காம ஸ்கிட் 'நறுக்'ன்னு இருந்துச்சு.

சிங்கமுகம் ரொம்பப் பிடிச்சுப் போச்சு.

said...

அவுங்கள்லாம் அந்த ஊர்க்காரங்க மாதிரி தெரியுது..பரவாயில்லயே..! முயற்சி பண்ணி ஏதோ சொல்ல வராங்களே.!

படங்கள் நல்லாத்தான் வந்திருக்கு!

நரசிம்மரைப்பற்றி 2 பேர் பதிவு போட்டுட்டீங்க ! புதுகைத்தென்றலும் போட்டிருக்காங்க!

said...

ரீச்சர், நீங்க சொன்னா மாதிரி வாத்தியாருக்கு விட்டுக் குடுத்தாச்சு. இப்போ அவரு நல்ல சுறுசுறுப்பா வகுப்புக்கு வருவாருதானே. நாளையில் இருந்து நான் வழக்கம் போல வரலாமா அல்லது இன்னும் கொஞ்சம் விட்டுத் தரணுமா?

நாடகம் நல்லாவே இருந்தது. இதெல்லாம் யாரு ஏற்பாடு?

said...

Skit நல்லாருக்கு. குழந்தைகளுக்கு அவர்களின் வேர் எங்கிருக்கிறது என்று தெரிந்தேயிருக்கிறது.

said...

வாங்க சுரேகா.

எல்லாம் நம்ம ஹரே கிருஷ்ணா கோயில் ஆட்கள்தான். வெள்ளைக்காரர்கள்ன்னுத் தனியாச் சொல்லணுமா?:-))))

அந்தப் பொண்களுக்குப் புடவை, பொட்டு எல்லாம் எப்படிப் பளிச்சுன்னு இருக்கு பாருங்க.

புதுகைப்பதிவைப் பார்த்தேன்.

said...

வாங்க கொத்ஸ்.

நீங்க வழக்கம்போலவே வாங்க. அவருக்குத் தினமும் விட்டுத்தரணுமுன்னு இல்லை:-))))

அவர் வகுப்பு எடுக்கப் போகவேண்டாமா?

நாடகம் நல்லா இருந்ததை வச்சே 'இது என்னோட ஏற்பாடு இல்லை'ன்றதைப் புரிஞ்சுக்க வேணாமா?:-)))

said...

வாங்க நானானி.

வேர்? இதெல்லாம் பறிச்சு நட்ட செடிகள்:-))))

said...

அட, சூப்பரா கதை சொல்லி இருக்காங்களே!

என்ன நரசிங்கம் கொஞ்சம் நல்லா சாப்டனும் போலிருக்கு.

ஹிரண்யனை விட புஷ்டியா இருக்க வேணாமோ ..? :))

said...

வாங்க அம்பி.

சிங்கம் மட்டுமா?

சுரனோ அசுரனோ எல்லாருமே ஹெல்த்நட்ஸ் இங்கே:-))))

said...

டீச்சர் அங்கேயும் இதே கதைதானா..?

நடிப்புத் திறமையை வெளிப்படுத்த எத்தனையோ வழிகள் இருக்கே..?

said...

சிங்கம் நல்லா இருக்காரு. ஆனா ரொம்பச் சோனி. நானே தட்டுனா விழுந்துடுவார்.

எலும்புக்கூடுக்கு ராமர் விமோசனம் கொடுத்தாரா. அதிசயமா இருக்கே.

ந்ருசிம்ஹர் கை பட்டதுக்கு அப்புறம் அங்க ஒண்ணுமே மிச்சமில்லாமல் மோக்ஷ்ம்தானே சொல்வாங்க,. சிரத்தையாதான் செய்திருக்காங்க.

said...

பறிச்சு நட்ட செடிகள் இரண்யன் கதையா பேசும் அங்குள்ள புராணமல்லவா பாடும்? செடிகளின் வேரில் சொந்த மண்வாசம் வீசத்தான் செய்யும்! ஹுக்கும்!

said...

படங்கள் நல்லா இருக்கு. சிரத்தை எடுத்துச் செய்யும் குழந்தைகளைப் பார்க்க சந்தோஷமா இருக்கு...

நம்ம ஊர்ல நரசிம்மர் கதை தெரியாத பல (சிறிய / பெரிய) குழந்தைகளை எனக்கு தெரியும்:‍-(

said...

எல்லாரும் வெள்ளைக்காரக் கொழந்தைங்க போலத் தெரியுது. ம்ம்ம்ம்ம்...

கே.ஆர்.எஸ் ஆழ்வார் வந்து கதை சொல்வார்னு நானும் காத்திருக்கேன்.

said...

வாங்க உண்மைத்தமிழன்.

நரசிங்கம் 'கதை' உலகெல்லாம் ஒன்னே:-))))

இது நடிப்புத் திறமைக்காகச் செய்யலை.

said...

வாங்க வல்லி.

சிங்கர் பார்க்கத்தான் ஒல்லி. ஹிரண்யனை அலாக்காத்தூக்கி மடியில் கிடத்திக்கிட்டார்.

இருட்டில் கேமெரா செட்டிங்ஸ்ஸைத் தடவிக்கிட்டு இருந்தேன்.

இல்லேன்னா அதையும் படம் எடுத்துருக்கலாம்.

said...

நானானி,
வேற மதத்தில் இருந்து ஹரே கிருஷ்ணா இயக்கத்துக்கு மாறிய மக்கள் இவுங்க.

அவுங்க வேர் எதுப்பா?

said...

வாங்க கெக்கேபிக்குணி.

//நம்ம ஊர்ல நரசிம்மர் கதை தெரியாத பல (சிறிய / பெரிய) குழந்தைகளை எனக்கு தெரியும்:‍-(//

நெசமாவாச் சொல்றீங்க!!!!!

எனக்கு விவரம் தெரிஞ்சு முதல்லே கேட்டது நரசிம்ஹன் கதைதான்.

எப்படின்னா..... விளக்கு வைக்கும் நேரம் பசிக்குதுன்னு பிடுங்குவேன்.

நிலைப்படியில் போய் உக்காருவேன்.

இதெல்லாம் கூடாதுன்னா விளக்கம் இல்லாம அடங்குவேனா?

said...

வாங்க ராகவன்.

ஹிரண்யன் ஃப்ரம் ஸ்விஸ்.

கோயில் பண்டிட். இவர்தான் நம்ம மக்கள்ஸ்க்கு கல்யாணம் அப்புறம் கடைசிவழின்னு எல்லாத்துக்கும் நம்ம கம்யூனிட்டிக்குச் செஞ்சுதர்றார்.

இன்னும் 'நம்ம ஆழ்வாரை'க் காணோம்!

said...

//இன்னும் 'நம்ம ஆழ்வாரை'க் காணோம்!//

ஆகா! இது வேறயா!
நானே ஒரு green baby! (அதாங்க பச்ச புள்ள)!
இதுல நான் எங்க ஆழறது! :-))

வெளக்கம் எல்லாம் வெவரமானவங்க, தலைமை டீச்சர், வகுப்பு டீச்சர், வகுப்புத் தல ஓபாமா தான் கொடுக்கணும்! நான் சத்துணவு மட்டுமே சாப்டு அப்பீட் ஆவுற இஸ்டூண்ட்டு! :-)

ஸ்கிட் படங்கள் கொஞ்சம் க்ளியரா வரல போல! போட்டோகிராபர் நரசிம்மரைப் பார்த்து பயப்படும் அளவுக்கு, சிங்கம் அம்புட்டு கோவமா எல்லாம் இல்லீயே! ஆளும் ஸ்டீல் பாடி தான்! :-))

//மங்கையர் பூமாரி பொழிந்தனர்//

இதுக்கு வேணும்னா வெளக்கம் கொடுக்கறேன்! :-))

said...

நரசிம்மர் பக்கத்துல கூடை வச்சிக்கிட்டு இன்னோரு பச்சப்புள்ள நிக்குதே!
அது பேரு என்னான்னு சொன்னீங்கன்னா, "அடி"யேன் வெளக்கம் கொடுக்கறேன்! :-)))

said...

வாங்க க்ரீன் பேபி.

////மங்கையர் பூமாரி பொழிந்தனர்//

இதுக்கு வேணும்னா வெளக்கம் கொடுக்கறேன்! :-))//

த்தோடா......பச்சப்புள்ளெ பேச்சா இது?

எங்களுக்கு வேண்டிய விளக்கம் ஹிரண்யனின் எலும்புக்கூடு & ராமர்.

said...

//எங்களுக்கு வேண்டிய விளக்கம் ஹிரண்யனின் எலும்புக்கூடு & ராமர்//

சாரி டீச்சர்; நேத்து நைட் அசந்து தூங்கப் போயிட்டேன் ஒங்க பதிவு படிச்சிக்கிட்டே! :-)

அங்கிட்டு சொற்பொழிவு செய்தவர் தப்பா புரிஞ்சிக்கிட்டாரு போல!

இரணியன் தவம் செய்யும் போது தான், புற்று சூழ்ந்து எலும்புக் கூடா ஆயிருவான். பிரம்மா தோன்றி அவன் மேல் நீர் தெளித்து தேகத்தைக் கொடுப்பார்! (எல்லார் தேகத்தையும் எடுப்பதற்காக :-))

இராமன் காட்டில் காணும் எலும்புக் கூடு, துந்துபி என்னும் அரக்கியோடது! அவளை ஏற்கனவே வாலி கொன்னு போட்டிருப்பான்! எலும்புக் கூடு டைனோசார் போல இருக்கும்!

சுக்ரீவன் இராமனின் ஆற்றலைச் சோதித்துப் பார்க்க, அந்த எலும்புக் கூட்டை நகர்த்த முடியுமா என்று கேட்க, இராமன் கூட்டினை ஒற்றைக் கால் விரலால் நெம்புவான்!

இரண்டுத்தையும் மிக்ஸ் பண்ணிக்கிட்டாரு போல உங்க போதகர்! :-)

நரசிம்மப் பெருமாள் இரணியனை சம்ஹாரம் செய்த உடனேயே ஆளு வைகுந்தம் சென்று விடுவான்! அதான் பிரகலாதன் அவன் அப்பாவுக்கு நற்கதி கேக்குறானே!

அந்த நல்ல கதிக்கு ராமாவதாரம் வரை வெயிட் பண்ண வேண்டியதில்ல! இன்ஸ்டண்ட் வரம் கொடுக்கப்பட்டு விடுகிறது!

ராமாவதாரத்தில் தான் அதே இரணியன், கும்பகர்ணனா மீண்டும் வந்து விடுகிறானே! அப்பறம் என்ன!

said...

en viLakkam nethu nite-ey anupichene; innum vanthu cheralaiyaa?

said...

ஆழ்வார் திருவடிகளே சரணம்..

ரீச்சர், உங்க ஊர்ல இந்த அளவு நரசிம்ம ஜெயந்தி நடந்திருக்கு, ஆனா பெங்களூர்ல எல்லாம் மிக அதிகம் இல்லை..பல பெருமாள்களில் ஒரு விசேஷமும் இல்லை. :(

said...

விளக்கத்துக்கு நன்றி 'நம்ம ஆழ்வாரே'.


அடுத்தமுறை 'காலட்சேபம்' பண்ண நபரைக் கோயிலில் பார்த்தால்
'கேட்டுறப்போறேன்' ஆமா:-))))


சிங்கம் இப்பத்தான் வந்து சேர்ந்துச்சு. இங்கே சிங்க ரூபமா வந்ததால் இமிக்ரேஷனில் 'சட்'னு உள்ளெ விட்டுருக்க மாட்டாங்க.:-)

எதுக்கெடுத்தாலும் ஃபைன் போட்டுத் தாளிச்சுருவாங்கப்பா.

said...

வாங்க மதுரையம்பதி.

ஹரே கிருஷ்ணா கோவிலில் ஒன்னு கட்டாயம் சொல்லணும். சிரத்தையா வைணவ சம்பந்தப்பட்ட எல்லா விழாக்களும் கொண்டாடிருவாங்க. நமக்கும் ஃபோன் மூலம் தகவலும் அனுப்பிருவாங்க.

அந்த 'டிவோஷன்' பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

said...

கொஞ்ச நாளைக்கு முன் ஆந்த்ராவில் இருக்கும் அஹோபிலம் போயிருந்தோம்.கரடு முரடான மலை.அதுல 9 நரசிம்மர் கோயில் இருக்கு. அந்த இடத்தில் தான் நரசிம்மவதாரம் நடந்ததாக ஐதீகம். கோவிலுக்கு போய்ட்டு வரும்போது ஒரு வயசான அம்மாவாய் பாத்தோம். அவங்க அந்த கோயில பத்தி ஒரு விஷயம் சொன்னாங்க. சாதரணமா பக்தன் தான் கடவுளுக்காக காத்து இருப்பான், ஆனா இந்த இடத்தில மகா விஷ்ணுவே பக்தன் ப்ரகாலத்கனுக்காக காத்து இருந்ததாக சொன்னாங்க. அதாவது, ப்ரகாலதன் அவங்க அப்பா கிட்ட எந்த தூன காட்டுவனோனு எல்லா இடத்துலயும் காதிருந்தராம். ஏன்னா அவன் ஒரு எடத்த காட்டி அங்க அவர் இல்லன்னா தன் பக்தன் சொன்னது பொய்யாக கூடாதுன்னு நெனச்சு எல்லா இடத்திலும் இருந்தாராம்.உண்மையான பக்தினா இது தானோ?

said...

;)

said...

வாங்க முகுந்தன்.

எல்லாத் தூணிலும் இருந்தாரா?

அட! அருமையா இருக்கே!!!!

பிரகலாதனின் பக்தி......

ஊஹூம். யாரும் கிட்டே நெருங்க முடியாது!!!

said...

வாங்க விக்னேஷ்வரன்.

ரசிப்புக்கு ஒரு நன்றி.