இன்னிக்குக் காலையில் நண்பரிடமிருந்து வந்த ஒரு மடல் இந்த விவரங்களைச் சொல்லி இருக்கு. வலைகூறும் நல்லுலகத்துக்காக இதைத் தமிழ்ப் 'படுத்தி' இங்கே போட்டிருக்கேன்.
உங்கள் வீட்டின் பாதுகாப்புக்காக:
இன்னிக்கு நம்ம வீட்டாண்டை போய்க்கிட்டு இருந்தப்ப தெருவில் கேஸ் சிலிண்டர் வீடுகளுக்கு சப்ளை செய்யும் ஒருவரைப் பார்த்தேன். அவர் வச்சிருந்த வண்டியில் சில சிலிண்டர்கள் 'தேமே'ன்னு உக்கார்ந்துருச்சு.
ஒரு படம் புடிச்சு இங்கே போட்டுருக்கேன் பாருங்க.
இதுலே A07 இருக்கு, கவனிச்சீங்களா? இதுக்கு என்ன அர்த்தம்?
' A' இது வருசத்தை நாலாப் பிரிச்சு முதல் கால் பகுதியைக் குறிக்குது. ஜனவரி முதல் மார்ச் வரை
'07 ' இது வருசம் . 2007
இது இந்த சிலிண்டரின் காலாவதியைக் குறிப்பிடும் சொல். அதாவது 2007 மார்ச் வரைக்கும்தான் இந்த சிலிண்டருக்கு ஃபிட்னெஸ் இருக்கு. இதுக்கப்புறம் அதுலே உள்ள பாகங்கள் ஏதாவது பழுதடையும் வாய்ப்பு இருக்கு. பயன்படுத்தக்கூடாது என்ற எச்சரிக்கை.
காலாவதியானவைகளை இன்னொருக்கா அதுக்குண்டான பரிசோதனைகளைச் செய்து சரியாக்கி மறுபடி புது அட்டையுடன் பயனுக்கு விடலாம். இதைச் செய்ய எதாவது திட்டம் & குழு இருக்கணும் இல்லே?
இது எதையும் செய்யாம 'இருந்துட்டுப்போகுது கழுதை'ன்னு இருந்தா விபத்து ஏற்படும் சான்ஸ் நிறைய இருக்கு. சில விபத்துக்கள் இப்படி ஏற்பட்டு இருக்கு.
சிலிண்டர் வெடித்து மரணம் என்றெல்லாம் பத்திரிக்கைச் செய்தி வர்றதை நாமும் எத்தனை முறை வாசிச்சு இருக்கோம்.
இதுவரை இப்படி சிலிண்டருக்கு ஒரு காலாவதி இருக்குன்னு எனக்குத் தெரியவே தெரியாது. உங்களில் சிலருக்குத் தெரியாம இருந்திருக்கலாம்.
சரி, எப்போ இது காலாவதின்னு தெரிஞ்சுக்கறதாம்?
இங்கே பாருங்க எப்படின்னு ஒரு சுலப வழி.
The alphabets stand for quarters -
-- A for March (First Qtr)
-- B for June (Second Qtr)
-- C for Sept (Third Qtr)
-- D for December (Fourth Qtr)
அடுத்து வரும் 08, 07, 06 இதெல்லாம் வருசம். 2008, 2007, 2006
இனிமேப்பட்டு வீடுகளுக்கு சிலிண்டர் மாத்தும்போது, நமக்கு வர்ற சிலிண்டரில்
இந்த விவரத்தைக் கவனிச்சுப் பாருங்க. காலாவதியானதை 'வேணாம்'ன்னு கண்டிப்பாச் சொல்லுங்க.
இந்த விவரத்தை நமக்குத் தெரிஞ்சவுங்க, தெரியாதவங்கன்னு இல்லாம கூடியவரை அனைவருக்கும் சொல்லுங்க.
விபத்து, மரணம் இவைகளைத் தடுக்க, ஏதோ நம்மால் ஆன ஒரு காரியம்.
நமக்கு இவ்வளோ விவரம் தெரிஞ்சுபோச்சுன்னு கேஸ் சப்ளையருக்குத் தெரிஞ்சுருச்சுன்னா...... ஒருவேளை இந்த tagஐ எடுத்துட்டு அனுப்புவாரோ என்னமோ(-:
எதுக்கும் எல்லாரும் கொஞ்சம் கவனமா இருங்க.
மெயிலில் சேதி சொன்ன நண்பருக்கு மெத்த நன்றி
26 comments:
ரீச்சர், நிச்சயமான தகவல்தானா? அது அந்த சமயத்தில் வாயு நிரப்பட்ட குறியீடாகக் கூட இருக்கலாம் என்ற எண்ணம் எழுந்ததால் இக்கேள்வி. இத்துறையில் இருப்பவர்கள் யாரேனும் உறுதிபடக் கூறினால் தேவலாமே.
வாங்க கொத்ஸ்.
நமக்கு மயில் அனுப்புனவர், ஒரு டிஸ்ட்ரிப்யூட்டர்கிட்டே விளக்கம் கேட்டுத்தான் எழுதி இருக்கார்.
ஆனால் இந்த லைனில் இருக்கும் நம் மக்கள்ஸ் யாராவது இன்னும் விளக்கினால் நல்லது.
யாரும் முன்வரைலைன்னா பேசாம 'விக்கிப் பசங்களை'க் கேக்கணும்:-)
கேள்விப்பட்டதே இல்லை.
இனிமேல் தான் பார்க்கனும்.
வாங்க குமார்.
பயனுள்ள செய்தியா இருக்கேன்னுதான் உடனே போட்டேன்.
(அப்பாடா..... ஒரு பயனுள்ள செய்தி கிடைச்சிருச்சு)
நிச்சயம் பயனுள்ள ஓர் எச்சரிக்கை செய்தி. துள்சி! மக்கள்ஸ் பயனுறவேண்டும் என்ற நல்லெண்ணத்துக்கு நன்றிகள் கோடி!!
நானும் விஜாரிக்கிறேன். சேரியா?
யப்பா. நான் கேள்விப்பட்டதே இல்லையே. துளசி நன்றி,. இனிமே இதைப் பத்தி ஒரு அவேர்னஸ் கிடைக்கும் இல்ல.
பார்க்கலாம்பா.
வாங்க நானானி.
சமூக சேவை அப்பப்பக் கொஞ்சம் செஞ்சுகிட்டேன்:-)
சேரிப்பா:-)))
வாங்க வல்லி.
நானும்கூட இன்னிக்குக் காலைவரை இதைக் கேள்விப்படலை.
ஆனா எல்லாத்துக்கும் ஒரு லைஃப் இருக்குமுல்லே. இங்கே கேஸ் ஃபயர் ப்ளேஸ் வச்சுருந்தா அதுக்கு ஃபிட்னெஸ் வாங்கணும்.
அதைப்போல அங்கேயும் பாதுகாப்புக்கு இருக்கோ என்னவோ!
\\வடுவூர் குமார் said...
கேள்விப்பட்டதே இல்லை.
இனிமேல் தான் பார்க்கனும்.
\\
ரீப்பிட்டே...;)
வாங்க கோபி.
நானும்தான்!
ஆமா....வல்லி & நானானி,
உங்க வீட்டு சிலிண்டரில் இப்படி எதாவது tag இருக்கான்னு பார்த்தீங்களா?
யாராவது பார்த்துச் சொல்லுங்கப்பா:-)))
ஓ இப்படி எல்லாம் இருக்கா .. ஊரில் இருக்கவங்க்ளுக்கு சொல்றேன் எனக்கு இங்க பைப் கேஸ் தான் வருது...
இது உண்மைதான். இன்று என் வீட்டில் இருந்த சிலிண்டரில் D-09என்னும் குறியீடு இருந்தது. எனவே இது date of filling கிடையாது. பகிர்தலுக்கு நன்றி.
வாங்க கயல்விழி.
கட்டாயம் சொல்லுங்கப்பா வீட்டுச் சொந்தங்களுக்கும் நாட்டுச் சொந்தங்களுக்கும்.
வாங்க முரளிகண்ணன்.
அப்பாடா......வயித்துலே பாலை வார்த்தீங்க.
இதுவரை யாருமே இதைக் கவனிச்சுச்சொல்லலையே..... எதாவது உடான்ஸ் மெயிலைப் பதிஞ்சிட்டோமுன்னு இருந்துச்சு:--)
நன்றிங்க.
// இலவசக்கொத்தனார் said...
ரீச்சர், நிச்சயமான தகவல்தானா? அது அந்த சமயத்தில் வாயு நிரப்பட்ட குறியீடாகக் கூட இருக்கலாம் என்ற எண்ணம் எழுந்ததால் இக்கேள்வி. இத்துறையில் இருப்பவர்கள் யாரேனும் உறுதிபடக் கூறினால் தேவலாமே. //
கொத்ஸ், டீச்சர் சொல்வது சரியென்றே தோன்றுகிறது. பயன்முடிவு தேதி தெரியாமல் வாய்வடைத்த தேதியைச் சொல்லி என்ன பயன்? ஆகையால் அது பயன்முடிவுத்தேதியாக இருக்கவே வாய்ப்புள்ளது.
அடடா இப்படி எல்லாம் கூட இருக்கா? தெரியாம போச்சே! ரொம்ப நன்றி டீச்சர்.
துளசி டீச்சர்,
இங்கெல்லாம் கேஸ், ட்யூபில் அல்லது மின்சாரம் தான்.
//இந்த விவரத்தை நமக்குத் தெரிஞ்சவுங்க, தெரியாதவங்கன்னு இல்லாம கூடியவரை அனைவருக்கும் சொல்லுங்க.
//
உங்க நல்ல எண்ணத்திற்கு வாழ்த்துக்கள் :)
வாங்க ராகவன்.
நம்ம முரளிகண்ணன் பதில் சொல்லி இருப்பதைப் பாருங்க. உண்மைதான்.
வாங்க நிஜமா நல்லவரே.
பயனுள்ள பதிவு போடலைன்னு நாளைக்கு யாராவது நாக்குமேலைப் பல்லைப்போட்டுக் குத்தம் சொல்ல முடியாது பாருங்க:-))))
வாங்க சதங்கா.
இங்கேயும் சில இடங்களில் பைப் லைன்லே கேஸ் உண்டு. நம்ம தெருவில் இல்லை(-:
ஆனா நமக்கு ஆளுயர சிலிண்டர் ரெண்டு வச்சிருக்கு. அதுவும் வீட்டுக்கு வெளியில் தோட்டப் பகுதியில். அங்கிருந்து பைப் கனெக்ஷன் அடுப்பு, சுடுதண்ணீர் காய்ச்சன்னு போகுது.
இதுவில்லாம இங்கே நிறையப்பேர் வீடுகளில் BBQ க்காக சின்ன சிலிண்டர்களில் கேஸ் ரொப்பி (பெட்ரோல் பங்குகளில் வாங்கிக்கலாம்)வச்சுக்கறாங்க. காலிச் சிலிண்டர்களைக் கடையில் கிடைக்கும்.
நம்ம வீட்டிலும் அவுட்டோர் குக்கிங் செய்யலாமுன்ன்னு ஒண்ணு வாங்கி வச்சுருக்கோம்.
ஒருநாள் அங்கே சமைக்கலாமுன்னா குளிரா இருக்கு எப்பவும்(-:
எங்க வீட்டில் உள்ள ஒரு சிலிண்டரில் c-12 என்றும் இன்னொன்றில் d-12 என்றும் எழுதி உள்ளது !
வாங்க அறுவை பாஸ்கர்.
// c-12 என்றும் இன்னொன்றில் d-12 என்றும் எழுதி உள்ளது //
அடக்கடவுளே......
முரளிகண்ணன் வார்த்த பால் எல்லாம் இப்பத் தயிராப்போச்சு(-::
2005இலேயே விவாதித்திருக்கிறார்கள்....
இந்த தளத்தில்
வாங்க மணியன்.
நலமா? ரொம்ப நாளா உங்களைப் பார்க்கலையே?
சுட்டிக்கு நன்றி.
எல்லாம் முந்திக்கிட்டு இருக்காங்க.
நல்லதுதான்.
தயிர் மறுபடி(யும்) பாலாகிவிட்டது:-)))
எனது பெயர் ராம். நீங்கள் கூறுவது சரிதான். நான் LPG துறையில் தான் பணிபுரிகிறேன். காலாவதி ஆனா cylinder என்று தெரிந்தே அதில் Gas நிரப்பப்பட்டு மக்களுக்கு விநியோகம் செய்வது தான் நம் நாட்டின் அவல நிலை. கேள்வி கேட்க ஆளில்லை. தவறாக நினைக்க வேண்டாம் நம் நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை. இதுவே இதுபோன்ற தவறுகளுக்கு காரணம்.
வாங்க ராம்.
நம்மூரில் மனித உயிர்களுக்கு மதிப்பு ஏது? இந்த அலட்சியத்தால்தான் என்னவெல்லாமோ நடந்துபோகுது:(
வருகைக்கும் கருத்துக்கும் என் நன்றிகள்.
Post a Comment