ஹாங்காங் ஹோட்டலில் என் பல் தேய்க்கும் பிரஷை மறந்து வச்சுட்டு வந்துட்டேன். போதாக்குறைக்கு அங்கே வாங்குன ஒரு ஸ்வெட்டரையும் பெரிய பெட்டிக்குள்ளே வச்சுட்டு, ப்ளைட் முழுக்க 'பாட்டு'க் கேக்கவேண்டியதாப் போச்சு. 'எத்தனை முறை சொன்னேன், அதை ஹேண்ட் லக்கேஜ்லே வச்சுக்கோன்னு.......'
'பெட்டியை அடுக்குனது யாரு? இவர்தானே? அப்பக் கவனிச்சிருக்கக்கூடாதா?' மனசுக்குள்ளே பொறுமினேன்.
நான் கொஞ்சம் சாது. அவ்வளவா 'வாயாட மாட்டேன்'.
மெய்யாலுமா?
ஓஓஓஓ 'அப்ப' ன்னு சொல்ல விட்டுப் போச்சா? :-)
இதுக்குப் பரிகாரமாத்தான் இந்த 27 வருசத்துலே கண்ணும் கருத்துமா வளர்த்து விட்டுருக்கேன்.
காலையில் சிட்னி ஏர்ப்போர்ட்லே இறங்குனதும் இன்னும் 3 மணி நேரம் போகணும் அடுத்த ஃப்ளைட்க்கு. 'பாட்டு' தொடர்கின்றது. பல்லுவேற தேக்காமல் எப்படியோ இருக்கு. பத்துமணிக்கு குவாண்டாஸ் 'வண்டி' புறப்பட்டாச்சு.
'இதைக் கடிச்சுத் தின்னாலே போதும். பல் விளக்குனமாதிரிதான்'ன்னு சிரிச்சுக்கிட்டே என் கையில் ஒரு பச்சை நிற ஆப்பிளைத் திணிச்சிட்டுப் போறாங்க அந்த ஏர்ஹோஸ்ட்டஸ்.
அடப்பாவிகளா.....ஒரு டூத் ப்ரஷ் கேட்டா இப்படியா? இப்படியும் ஒரு ஆப்பிள் இருக்கா? மொதல்மொதலாப் பார்க்கிறேன். ஒரு வேளை காயோ என்னவோ?
க்ரானி ஸ்மித்ன்னு பெயராம். ஆஸ்தராலியன் கண்டுபிடிப்பு. . பறக்கறது க்வாண்டாஸில். அவுங்க ஊரில் முதல்முதலா 1868 லே 'மரியா ஆன் ஸ்மித்' என்ற பெண்மணி ஓட்டுச்செடி மூலம் விளைவிச்சதாம் இது. அதான் அந்தம்மா பெயரையே வச்சுட்டாங்க.
புளிப்பான புளிப்பு. மாங்காய் ஊறுகா மாதிரி செஞ்சுக்கலாமா?
அய்ய............. நல்லாவே இருக்காது. மாங்காய் ஏகப்பட்டது கிடைக்கும்போது விஷப்பரிட்சை ஏன்? ஒரு ஆறு வருசம் மாங்காயோ மாங்காய்.
நியூஸிக்கு வந்த பிறகு.............
கடைகளில் கொட்டிவச்சுருக்கும் ஆப்பிள்களில் இத்தனை வகையா? வாயைப் பிளந்தேன்............
அப்புறம் 'பிக் யுவர் ஓன்' விளம்பரம் பார்த்து ஆப்பிள் பறிக்கப்போனோம். கிலோ 50 செண்ட். ஆர்வக்கோளாறில் இந்த மரம், அந்த மரமுன்னு பாய்ஞ்சு
20 கிலோ ஆப்பிளை வாங்கிவந்து ஐயா தின்னு அம்மா தின்னு''ன்னுச் சீப்பட்டுப் போச்சு. அப்பவும் பச்சை ஆப்பிளையெல்லாம் பறிக்கலை:-) ஆப்பிள் எல்லாம் செக்கச் செவேலுன்னு இருக்கணுமே. ஆப்பிள் மரத்தை வாழ்க்கையில் மொதமொதப் பார்த்தா.........எதைப் பறிப்பேன்? எதை விடுவேன்?
பச்சையை எதுக்கு வாங்கறாங்கன்னு இருக்கும். ஆப்பிள் பை'ன்னு ஒரு தீனி செய்யத்தானாம். மகள் சின்னவளா இருக்கும்போது அதையும் செஞ்சு பார்த்தேன் சிலமுறை. நமக்கு அவ்வளவா அப்பீல் ஆகலை.
இந்த வீட்டைக் கட்டறதுக்குக்காக, பழைய வீட்டையும் இடிச்சு, இங்கே இருந்த தோட்டத்தையும் அழிச்சப்போ மனசுக்கு லேசா ஒரு வலி. 11 ஆப்பிள் மரங்கள். வகைக்கு ஒண்ணா இருந்துச்சு.
எல்லாம் போச்சுன்னு இருந்தப்ப.....வேலிக்குப் பக்கத்தில் ஒரு மரம் எப்படியோத் தப்பிப் பொழைச்சுக் கிடக்கு. க்ரீன் ஆப்பிள். க்ரானி ஸ்மித். 'ஆப்பிள் பை' செஞ்சா?
தின்ன ஆள் வேணாமா?
நம்ம மரத்து ஆப்பிள் கொஞ்சம் புள்ளி விழுந்துருக்கும். பூச்சி மருந்தெல்லாம் அடிப்பதில்லை. ஆர்கானிக் வகையாக்கும். ஆமா....:-)))
ரெண்டு மாசமுன்னே ஒரு பூஜைக்காக ராமாயண மண்டலிக்குப் போனப்ப, அங்கே புதுவிதமான ஒரு ஊறுகாய் (அப்படின்னு வச்சுக்கலாம்) இருந்தது. டேஸ்ட் அட்டகாசம். செஞ்சது யாருன்னு தெரியலையே........ அங்கே விசாரிச்சதில் யாருக்கும் செய்முறை தெரியலை. உத்தேசமா ஒரு ரெஸிபி கிடைச்சது. கறிப்பவுடர் போட்டுருக்காங்க(ளாம்)
நம்ம கைவண்ணத்தைக் காமிச்சதில் ஏறக்கொறைய, இன்னும் சொன்னா அருமையான ருசியில் அமைஞ்சுபோச்சு.
சரி. வாங்க. அடுக்களைக்கு. செஞ்சே பார்த்துறலாம். நம்ம மரத்துலே இருக்கும் காய்களையும் ஒரு வழி செஞ்சுறவேணாமா? :-))))
தேவையான பொருட்கள்.
பச்சை ஆப்பிள் 1 மீடியம் சைஸ்.
கேரட் 1 சின்னதா இருந்தா 2
மிளகாய்ப்பொடி முக்கால் தேக்கரண்டி
கறிப்பவுடர் அரைத்தேக்கரண்டி
வெந்தியம் அரைத் தேக்கரண்டி.
உப்பு முக்கால் தேக்கரண்டி
எண்ணெய் 1 தேக்கரண்டி
வினிகர் ஒரு அம்பது மில்லி.
ஆப்பிளையும், கேரட்டையும் நல்லாக் கழுவிக்குங்க. இப்ப அதை நறுக்கணும். எப்படி? ஜூலியன் கட்டிங். 5 செ.மீ நீளத்துக்கு தீக்குச்சி மாதிரி நறுக்கிக்கணும். ஆப்பிளின் நடுப்பாகத்துலே இருக்கும் கொட்டைகளையும், அதைச் சுற்றி இருக்கும் நார்ப்பகுதிகளையும் எடுத்துக் குப்பையில் போட்டுருங்க. தீக்குச்சி மாதிரி அவ்வளோ மெலிசா வேணாம். கொஞ்சம் திக்கா இருக்கணும். இதோ படத்துலே காமிச்ச மாதிரி.
இதுக்குத்தான் கொஞ்ச நேரம் அதிகம் எடுக்கும். நறுக்குன துண்டங்களை ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் போட்டு வினிகரையும் சேர்த்துக் கிளறி ஊறவிடுங்க. உலோகப்பாத்திரம் வேணாம்.
ஒரு வாணலியை அடுப்பில் வச்சுச் சூடாக்கி வெந்தியத்தைப் போட்டு கடும் ப்ரவுண் நிறத்துக்கு வறுத்து எடுத்துக்குங்க. ஆறுனதும் மிக்ஸியில் போட்டுப் பொடிச்சுக்கணும். நல்லா உத்துப்பாருங்க. அடியிலே கொஞ்சூண்டு ஒட்டிக்கிட்டு இருக்கா? அதுதான்....
அதே வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து லேசாச் சூடானதும் மிளகாய்ப்பொடி & உப்பு சேர்த்துட்டு உடனே அடுப்பை அணைச்சுருங்க. இந்த சூட்டிலேயே அது பக்குவமாகிரும். அதுலே கறிப்பவுடர் சேர்த்துக் கலக்கிட்டு,
வினிகரில் ஊறும் காய்களை மட்டும் எடுத்து( அந்த வினிகர் இனி வேணாம்)
வாணலியில் சேர்த்துக் கலக்கிட்டு அந்த பொடிச்ச வெந்தியத்தைச் சேர்த்துக்கிளறி அதே கண்ணாடிப் பாத்திரத்தில் எடுத்து வச்சுக்கணும்.
நல்லா 'வெடுக் வெடுக்'குன்னு கடிக்க வரும். லேசான புளிப்புடன் உடனடி ஊறுகாய் தயார்.
இதை இன்னொரு நாள் வேற மாதிரி செஞ்சு பார்த்தேன். மிளகாய்ப்பொடிக்குப் பதிலா ஊறுகாய் மசாலா ஒரு தேக்கரண்டி, ஒரு சிட்டிகை கறிப் பவுடர். மத்ததெல்லாம் மேலே சொன்ன முறைதான்.
வெந்தியம் அரைத் தேக்கரண்டிக்காக வறுத்துப்பொடிக்கணுமா? வேற வேலையே இல்லையான்னு சலிச்சுக்குறவங்களுக்கு: ஒரு ரெண்டு மூணு தேக்கரண்டி வெந்தியத்தை வெறும் வாணலியில் வறுத்துப் பொடி செஞ்சு ஒரு சின்னக் கண்டெய்னரில் போட்டு ஃப்ரிட்ஜ்லே வச்சுக்கலாம். கெடவே கெடாது.
தேவைப்படும்போது அரைத்தேக்கரண்டி அதுலே இருந்து எடுத்துப் போட்டுக்கலாம்.
செஞ்ச அன்னிக்கே தின்னுருங்க. பாக்கி ஆச்சுன்னா ஃப்ரிட்ஜ்லே வச்சு மறுநாளைக்கு. அதுக்கப்புறம் வச்சாத் தாங்காதுன்னு ஒரு எண்ணம்.
டிஸ்கி: 'தலைப்பு' விவகாரமாக்க வேணாம். அந்த நிமிஷம் மனசில் இப்படித்தான் தோணுச்சு:-)
51 comments:
சரி,தலைப்பை விவகாரமக்கவில்லை.:-)
போட்டால்லாம் அமர்க்களமா இருக்கு. இந்தியாவுல எப்படி செய்யறது?. ஒரு டஜன் கிராணி பார்சல்
//'இதைக் கடிச்சுத் தின்னாலே போதும். பல் விளக்குனமாதிரிதான்'ன்னு சிரிச்சுக்கிட்டே என் கையில் ஒரு பச்சை நிற ஆப்பிளைத் திணிச்சிட்டுப் போறாங்க அந்த ஏர்ஹோஸ்ட்டஸ்.//
//அடப்பாவிகளா.....ஒரு டூத் ப்ரஷ் கேட்டா இப்படியா? //
கடைசியில பல்ல விளக்குனிங்களா இல்லையா? :-))
ஆப்பிள் ஊறுகாய்னே தலைப்பு வச்சிருக்கலாம். :-)
அப்ப இந்த ஆப்பிள சாப்பிடக் கூடாதா? பல்லு விளக்கி துப்பிரனுமா? இது தெரியாம ரெண்டு மூணு வாட்டி சாப்பிட்டுடேனே டீச்சர். :-((
எங்க உங்க க்ளாஸ் லீடரக் காணோம்? ஒவ்வொரு வாட்டியும் அவர்தான் ஏதோ செய்து பாக்குற மாதிரி உங்க சமையல் குறிப்புல சந்தேகம் எல்லாம் கேப்பாரே?
// நான் கொஞ்சம் சாது. அவ்வளவா 'வாயாட மாட்டேன்'.//
கோபாலு அம்மாகூட அதேதான் சொல்றாக.
மீனாட்சி பாட்டி.
தஞ்சை.
அருமையான ஊறுகாய்! நாமே வளர்த்து நாமே பறித்து நாமே(நாமேதானே?) செய்த ஊறுகாய் என்றால் நாவில் எச்சியும் ஊறாதோ?படங்கள் பார்த்தால் உடனே செய்யத் தோணும்...தோணிடுச்சி!!!
இந்த பச்சை ஆப்பிளை தொக்கு செய்து பாருங்கள்!!சூப்பராயிருக்கும் நான் செஞ்சிருக்கேன்.
ஆமா...விமானத்தின் டாய்லெட்டில்
டூத்ப்ரஷும் சின்ன ட்யூப் பேஸ்டும் இருக்குமே!!!நான் யூஸ் பண்ணாட்டாலும் ஞாபகத்துக்கு எடுத்து வெச்சிருக்கேன்!!
தலைப்பை படிக்கவே இல்லைன்னு மட்டும் சொல்லிக்கறேன். :-)
அட மிக்ஸட் வெஜிடபிள் ஊறுகாய்..
:-)
//எங்க உங்க க்ளாஸ் லீடரக் காணோம்? ஒவ்வொரு வாட்டியும் அவர்தான் ஏதோ செய்து பாக்குற மாதிரி உங்க சமையல் குறிப்புல சந்தேகம் எல்லாம் கேப்பாரே?//
இது சூப்பர்... :-)
ஆமா, எந்த லீடரைச் சொல்றீங்க?.. இந்தியா வாழ் லீடரா, இல்லை அமெரிக்கா வாழ் லீடரா?.
இந்திய லீடர், எல்லோருக்கும் வாத்தியார், ஆனா டீச்சர் க்ளாஸ்ல மட்டும் க்ளாஸ் லீடர்... :-)
\\ஓஓஓஓ 'அப்ப' ன்னு சொல்ல விட்டுப் போச்சா? :-)\\ அதுதான பாத்தேன். கோபால் சாராவது, உங்க கருத்துக்கு இப்ப மறுப்பு சொல்லறதாவது
\\'இதைக் கடிச்சுத் தின்னாலே போதும். பல் விளக்குனமாதிரிதான்'ன்னு சிரிச்சுக்கிட்டே என் கையில் ஒரு பச்சை நிற ஆப்பிளைத் திணிச்சிட்டுப் போறாங்க அந்த ஏர்ஹோஸ்ட்டஸ்\\
என்னது உங்க ஊர்ல பல் எல்லாம் விளக்குவீங்களா!!!!!
\\நம்ம மரத்து ஆப்பிள் கொஞ்சம் புள்ளி விழுந்துருக்கும். பூச்சி மருந்தெல்லாம் அடிப்பதில்லை. ஆர்கானிக் வகையாக்கும். ஆமா....:-)))\\
உங்க வீட்டு திராட்சையை விட்டிட்டீங்களே!!!
//வினிகர் ஒரு அம்பது மில்லி.\\
வினிகர் ருசி எனக்கு பிடிக்கறதில்லை, எலுமிச்சம்பழம் பிழியலாமா
\\பச்சை ஆப்பிள் 1 மீடியம் சைஸ்.\\
கேரட் இல்லாமல் வெறும் பச்சை ஆப்பிள் மட்டும் போட்டு நான் செய்வேன். நல்லாவே இருக்கும். வெறுமே தாளிச்சு மிளப்பொடி தூவி சாப்பிடுவேன். நாந்தான் டிமிக்கி சுந்தரியாச்சே. வெந்தயம் வறுத்து பொடிச்சு இதெல்லாம் நடக்கற காரியமா??
கொத்தனார் இல்லாத குறைய கொஞ்சம் தீத்துவைச்சிட்டேன்னு நினைக்கிறேன்.
இன்னொண்ணு சொல்ல மறந்துபோட்டேன் டீச்சர், இந்த ஆப்பிளுக்கு Cooking Apple னும் பெயர் உண்டுன்னு எங்க சில்வியா பாட்டி சொல்லக்கேட்டிருக்கேன்
வாங்க குமார்.
விவரமாத்தான் இருக்கீங்க:-)))
வாங்க முரளிகண்ணன்.
இப்பெல்லாம் கிவி ஃப்ரூட், அவகாடோன்னு எல்லாமே நம்ம சிங்காரச் சென்னையில் கிடைக்குதே.
இதுவும் கிடைக்குமுன்னு நினைக்கறேன். இல்லைன்னா அடுத்தமுறை வரும்போது கொண்டு வர்றேன்.
'அத்தனையும் தின்னுவேன்'னு வாக்குத் தரணும்.ஆமா:-)))
வாங்க கிரி.
எங்கே? வெறும் விரலால் பல்லைத் தேய்ச்சதா பாவனை செஞ்சுக்கிட்டேன்.
வீட்டுக்குப்போனதும் குளிக்கும்போது வெறும் பேஸ்ட் வச்சுப் பல் துலக்கினேன்.
மறுநாள் கடை திறந்ததும் புது பிரஷ் வாங்கியாச்சு.
இந்த அழகில் வீடு போய்ச் சேர்ந்ததும்,
ஒரு கல்யாணத்துக்குக் கிளம்பவேண்டியதாப் போச்சு.
அந்த சம்பவத்துக்குப் பிறகு எக்ஸ்ட்ரா பிரஷ் வாங்கி வச்சுக்கும் பழக்கம் வந்துருச்சு.
வாங்க ஸ்ரீதர்.
தின்னுட்டீங்களா? அந்தப் புளிப்பையா?
உச்சந்தலைக்கு ஏறியிருக்குமே புளிப்பு(-:
ஒரு நாள் லீடரைக் காணோமுன்னதும் வகுப்பே ஆடிப்போயிருக்கு!!!!
'ஆப்பிள் ஊறுகாய்' ன்னுத் 'தலை'ப்பு வச்சால் மொட்டையா இருக்காது?
வாங்க மீனாட்சி பாட்டி.
நான் மாமியார் மெச்சிய மருமகள் பாட்டி.
எப்பவுமே 'தூரமா' இருக்கேனில்லையா?
அது:-))))
வாங்க நானானி.
தொக்கு எல்லாம் செஞ்சு பார்த்தாச்சு.
அதை சாண்ட்விச் ஃபில்லிங்காவும் தின்னுருக்கேன்.
எல்லாம் ஒவ்வொரு முறைதான். அதுக்குமேலே தாங்காது(-:
இப்ப விமானங்களில் சேவை எவ்வளவோ முன்னேறி இருக்கு.
ஆனாலும்..... க்வாண்டாஸ் கொஞ்சம் கஞ்சப்பேர்வழிகள்தான்.
அதுவும் 26 வருசம் முந்தி.....
சொல்லவே வேணாம்(-:
வாங்க மதுரையம்பதி.
இன்னிக்குப் பாருங்களேன்,சொல்லிவச்சுக்கிட்டு இந்த ரெண்டு லீடர்ஸ் காணாமப்போயிருக்காங்க.
பேசாம 'காணவில்லை' விளம்பரம் கொடுக்க வேண்டியதுதான் தமிழ்மணத்தில்.இல்லே?
வாங்க சின்ன அம்மிணி.
நம்ம 'திராட்சைத் தோட்டத்தை' வெளியில் சொல்லிக்கவேணாமென்ற அடக்கம்தான்.
எலுமிச்சம்பழம் ஜூஸ் கொஞ்சம் கூடுதலாப் பிழியுங்க.
தின்ன முடியாத புளிப்பை எப்படியாவது சமைச்சாவது தீர்த்துக்கட்டணுமேன்னு குக்கிங் ஆப்பிள்னு வச்சுருக்காங்க போல.
இந்த ஆப்பிள் பைக்கு ஏகப்ப ப்ரவுண் சுகர் போடணும்.
கொத்தனாருக்கு ப்ராக்ஸி கொடுத்ததுக்கு அவர் நன்றி சொல்வார்:-))))
கொத்ஸ்,
எங்கிருந்தாலும் வகுப்புக்கு உடனே வரவும்.
பதவி பறிபோகும் அபாயம் இருக்கிறது.
எப்ப எப்பன்னு இருக்காங்க மக்கள்ஸ்:-)))
// /ரெண்டு மாசமுன்னே ஒரு பூஜைக்காக ராமாயண மண்டலிக்குப் போனப்ப, அங்கே புதுவிதமான ஒரு ஊறுகாய் (அப்படின்னு வச்சுக்கலாம்) இருந்தது. டேஸ்ட் அட்டகாசம்.//
எங்க ஊரிலே அக்காரவடிசல், சுண்டலுக்காக ராமாயணம் கேட்க போவார்கள்.
ந்யூசிலே ஊறுகாய் வாங்க போவார்கள் போல் தெரியுது.
சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
ராமாயணம் கேட்க பெருமாள் கோவிலுக்கு வரக்கூடாதோ ?
http://arthamullavalaipathivugal.blogspot.com
superb..
என்னங்க சுப்பு ரத்தினம்.....
அக்காரவடிசல் சுண்டல் எல்லாமும் கொடுத்துக் கூடவே சாப்பாடும் போட்டு அனுப்புவதுதான் எங்க நியூஸி ஸ்டைல்.
வீட்டுக்குப்போய் சமைக்கணுமேன்னு இருக்கும்போது சத் சங்கத்தில் மனம் லயிக்குமா?
அதான் செவிக்கும் உணவு, மனசுக்கும் உணவு. கடைசியில் வயிற்றுக்கும் உணவு.
கோயிலுக்குப் போனாலும் பெருமாள்
சாப்பாடு போட்டே திருப்பி அனுப்பறார்.
நான், வேற எதாவது வேண்டிக்கலாமுன்னு வாயைத் திறக்கவேமுடியாது.
சாதத்தால் என் வாயை அடைச்சுப்புடுறார்.
என்னன்னு சொல்ல !!!
வாங்க தூயா.
ஹை....பிடிச்சிருக்கா?
நன்றி தூயா.
இங்க தமிழ் நாட்டிலும் பச்சை பசேல் ஆப்பிள் கிடைக்குது புளிப்பு சுவையோடு.ஆனா ஒரிஜினலா னு தெல்லேது.இப்பெல்லாம் பாருங்க ஆப்பிள் என்றாலே ஏதோ டோக்கன் நெம்பர் மாதிரி லேபில் ஒட்டித்தான் விக்கிறாங்க.
கண்மணி,
அப்ப அது நியூஸி எக்ஸ்போர்ட்தான்:-))))
இங்கே வாழைப்பழத்துக்கும் லேபில் உண்டு:-))))
எங்க அம்மாவுக்குப் பிடிச்ச ஊறுகாய்;) (அம்மா புராணமாயிருக்கு எனக்கு இந்த வாரம். வல்லியம்மா வீட்டுல, இப்ப உங்க வீட்டுல). இதோட பச்சைமிளகாய அரிஞ்சு அப்படியே (அரிஞ்ச ஆப்பிள், காரட், உப்பு) குவிக் ஊறுகாய், ஆப்பிள் நல்லா புளிச்சா தான் இதுக்கு நல்லாயிருக்கும்; இல்லன்னா, எலுமி. ஜூஸ் போடணும்.
ஆப்பிள் டர்னோவர்க்கு இது நல்லா இருக்கும். நான் வீட்டுல செய்யுற "பேக்(கு)" ஐடம் பொதுவாக முட்டை பயன்படுத்தாம.. ஸோ, இதுக்கு நல்லா பில்டப் கொடுத்து செஞ்சு கொடுத்துடுவேன்.
ஸாலட் க்கு நல்லாயிருக்கும். உங்க ஸ்டைல்ல ஊறுகாய் அடுத்த தடவை செஞ்சுட வேண்டியது தான்.
தலைப்பு படிக்கவேயில்லை:-)
ம்.. சொல்ல மறந்துட்டேன். இதே செய்முறையில், க்ரான்பெர்ரி ("பக்கம்" இக்கன்னா. இல்லன்னா ஆச்சி பெர்ரின்னு சொலவடையாகிடும்;) யிலும்... க்ரான் பெர்ரி ஊறுகாய் மட்டுமில்லை, ஸன்ட்ரைட் தக்காளி (தக்காளி வற்றல்) இலும் ஊறுகாய் செய்யலாம். (என் பசங்க செர்ரி ஊறுகாய்னு சொல்லிட்டே சாப்பிடுவாங்க).
டீச்சர், தக்காளி வற்றல்னு சொல்லியிருக்கேன். ஒரு "அக்ராஸ் தெ வெர்ல்டு" ப்ராஜக்டு போட்டு, தக்காளியை டீஹைடரேட்டர்ல வற்ற வைச்சு ஊறுகாய் கம்பெனி தொடங்கிடுவோமா?
ஒரு ஆறு மாசம் முன்னாடி இதே பதிவைப் போட்டிருந்தீங்கன்னா, அன்பா(!!!) ஒரு சினேகிதி வாங்கித்தந்த ரெண்டு கிலோ ஆப்பிளை வீணாக்கியிருக்கமாட்டேன்
:-(
கிடைக்குது பெங்களூரில் பச்சை ஆப்பிள் 'ஆஸி', 'ந்யூசி' என்று ஒட்டப் பட்ட ஸ்டிக்கர்களுடன்.
செய்து பார்த்து விட்டுச் சொல்கிறேன் மேடம்!
இதை விட வேற என்ன வேலை?செஞ்சு பார்த்துட்டோம்.
சூப்ப்ப்பரா..... இருக்கு...நன்றி துளசி மேடம்.
//'ஆப்பிள் ஊறுகாய்' ன்னுத் 'தலை'ப்பு வச்சால் மொட்டையா இருக்காது?
//
ஆப்பிள் 'மொட்டையா'த்தானே இருக்கும். வழுக்கைன்னு கூட சொல்லலாம். கிவிப் பழம் கொஞ்சம் முடி வளர்ந்த மாதிரி இருக்கும். ஹி...ஹி...
கேரட்டும் சரி ஆப்பிளும் சரி திராவிட நாட்டிற்குரிய காயோ பழமோ இல்லை என அருமையாக தலைப்பிலேயே சொன்ன ரீச்சர் அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்!!
அப்புறம் ரெண்டு நாள் லீவு போட்டுட்டுப் போனா அதுக்குள்ளா பதவி போயிடுமா? அவங்களுக்குத் தெரியலை ஆழம் தெரியாம காலை விடறோமுன்னு. இந்த பசங்களை கட்டி மேய்க்கிறது என்ன சும்மாவா? அதுவும் ரீச்சர் வேற கொஞ்சம் லீனியண்டா இருக்காங்களா...
கிரானி ஸ்மித் என்ற பெண்ணைப் பெருமைப்படுத்தும் விதத்தில் இருக்கும் பெயரில் காழ்ப்புற்று அதே ஆப்பிளை மொட்டை வழுக்கை எனச் சொல்லி அதற்கு ஈயம் பூச நினைக்கும் ஸ்ரீதர் அண்ணாச்சி அவர்களுக்கு என் பாராட்டுக்கள். சாரி. கண்டனங்கள் அப்படின்னு படிச்சுக்குங்க.
//அதே ஆப்பிளை மொட்டை வழுக்கை எனச் சொல்லி அதற்கு ஈயம் பூச நினைக்கும் //
இங்க பாத்தீங்களா. ஆம்பிளைப் பேருலயும் ஒரு ஆப்பிள் இருக்கு.
இப்பதான் நிம்மதி ஆச்சு. பச்சப்புள்ளய்ய என்னமா மிரட்டறாங்கய்யா.
இனிய உளவாக ஈயம்பித்தளை கூறல்
கனியிருப்ப (ஊறு)காய்கவர்ந் தற்று.
வாங்க கெக்கேபிக்குணி.
அம்மா புராணமா? நமக்கு வயசு ஏறஏறத்தான் அம்மா நினைவு அதிகம் வருதுன்னு நினைக்கிறேன்.
டர்னோவர் எல்லாம் செஞ்சாத் திங்க ஆள் வேணாமா? நாங்க ரெண்டே பேர். முதியோர் வேற. கோபால் கிருஷ்ணன் நான் சமைச்சதைச் சாப்பிடவே மாட்டான். அவனுக்குத் தனிச் சாப்பாடு.
இங்கே ஆலிவ் ஆயிலில் ஊறவச்ச 'dried'தக்காளி வத்தல் கிடைக்குது. அட்டகாசமா இருக்கு.
எல்லாம் இம்போர்ட்தான் ஃப்ரம் இடாலி.
க்ரான்பெர்ரி செஞ்சு பார்த்துடறேன். ஸ்ப்ரிங் வரட்டும்.
வாங்க சுந்தரா.
//ஆறுமாசம்....//
எதுக்கும் வேளை வரவேணாமா?
மறுபடி உங்க தோழியை வீட்டுக்கு அழைக்கவும். அதான் பார்த்தே ஆறுமாசம் ஆச்சேன்னு காரணம் காட்டுனா ஆச்சு:-)))
வாங்க ராமலக்ஷ்மி.
அது ...அதேதான்.
அடுத்த பின்னூட்டம் பாருங்க,நம்ம பிரேம்ஜியோடது.
வாங்க பிரேம்ஜி.
என்னதான் தியரி வகுப்புன்னாலும், ப்ராக்டிக்கல்ஸ் மாதிரி வராதுல்லே?
நிறையப்பேருக்கு 'மனோதிடம்' கொடுத்த பின்னூட்டம் உங்களோடது:-)))
வாங்க கொத்ஸ்.
லாங் வீகெண்ட்ன்னு 'வாஷிங்'டன் பயணமோன்னு நினைச்சேன்.
நானும் இதே லாங் வீக் எண்டில்தான்
ஒயிட் ஹவுஸுக்கு(வேடிக்கை பார்க்க)
போயிருந்தேன் ஒருமுறை.
நீங்க இல்லேன்னதும் வகுப்பே ஆடிப்போச்சு:-)))))
ரீச்சர், தங்கமணியோட அக்கா சூப்பரா க்ரான்பெரி ஊறுகாய் செய்வாங்க.
ஸ்ரீதர்,
கொத்ஸ் வந்தாச்சு:-)))))
தாடிக்காரர் என்னமா....எல்லா சிச்சுவேஷனுக்கும் 'ரெண்டு ரெண்டு வரி' எழுதிவச்சுட்டுப் போயிருக்காருன்னு பாருங்களேன்!!!!!
மற்ற சந்தேகங்கள் & விளக்கங்களுக்கு...
ஓவர் டு கொத்ஸ்:-))
கொத்ஸ்,
தங்கமணியின் அக்காவையோ அல்லது கிரான்பரி ஊறுகாயையோ உடனே இங்கே அனுப்புங்க. எனக்கு அவுங்களோடு கொஞ்சம் பேசணும்.
முடியாதா? சரி போகட்டும்.
அவர்களிடம் கேட்டு சமையல்குறிப்பையாவது அனுப்பலாமுல்லே?
//ஹாங்காங் ஹோட்டலில் என் பல் தேய்க்கும் பிரஷை மறந்து வச்சுட்டு வந்துட்டேன்//
அதான் அவ்வளவா வாயாட மாட்டீங்களா டீச்சர் :P ?
ஊறுகாய் பார்க்க அழகா இருக்கு..செஞ்சு பார்த்துட்டு சொல்றேன்..
மேக்ஸீமம் 2 நாள்ங்குறதுதான் இடிக்குது டீச்சர்... :)
ஆகாஅ ஊறுகா அருமை - படங்களும் அருமை - குறிப்புகள் சொல்லும் போது எவ்வளவு கவனத்துடன் சிறு சிறு செய்திகளைக் கூட விடாமல் கூறுகிறீர்கள்.
துளசி, 26 ஆண்டுகளுக்கு முன்னால் கோபால் இவ்வளவு பேசுவாரா ? பாவம் அடக்கிட்டீங்களே !
வாங்க ரிஷான்.
கொஞ்சமா 1 + 1 ன்னு செஞ்சுபாருங்க.
நிறையச் செஞ்சாப் பக்கத்து வீட்டுக்காரர்கள், நண்பர்கள்ன்னு ஒரு இலவச இணைப்பு இருக்கேப்பா:-)))
வாங்க சீனா.
34 லே 26 போச்சுன்னா எவ்வளவு?:-)
எட்டு.
அவ்வளவு வருஷமாச் சும்மா இருந்தீங்க:)
ஊறுகாய். ச்சும்மா வாயூறுதே.
பச்சைல சிவப்பு மிளகாய்ப் பொடி. ஆரஞ்சு காரட். செய்துடலாம்.
வாங்க வல்லி.
எட்டு ரொம்பக் கரெக்ட்டு.
அதான் விட்டுப்பிடிக்கிறதுன்னு சொல்றது.
எட்டை(மட்டும்)விட்டேன்.....
விட்டதையும் சேர்த்துப் பிடிச்சேன்:-))))
'அங்கே'யே ஒரு நாள் செஞ்சு பாருங்க. மருமகள் கண்ணில் நீர், அட! ஆனந்தக் கண் நீர் வரட்டும்:-)
மீ தி 50?
ஆமாம் கொத்ஸ்.
'தூண்டில்காரருக்கு மிதப்பு மேலே கண்'
ச்சும்மா ஒரு பழமொழி:-))))
Post a Comment