Thursday, May 15, 2008

மூன்று வருசத்துக்குப் பிறகு கிடைச்ச மூன்று பைகள்.

லார்நாக் கோட்டையின் தொடர்ச்சின்னு வச்சுக்கலாம்.

நம்ம பழைய வீட்டை விக்கப் போட்டுருக்கு. அதனால் வீட்டைக் கொஞ்சம் ஒழுங்குசெய்யப் போயிருந்தோம். அங்கே காராஜில் இருந்த ஒரு அலமாரியைத் தற்செயலாத் திறந்து பார்த்தால்......மூணு பைகள் இருக்கு. நம்மளுதுதான். எப்படி இங்கே தங்கிப்போச்சு? இந்த அழகுலே வீட்டைக் காலி செஞ்சுருக்கோமா? மூணுவருசமா இந்தப் பக்கமே வரலையேன்னு எடுத்துக்கிட்டு வந்தோம்.


அன்னிக்கு மாலை இருட்டிக்கிட்டு வருது,கூடவே மழையும். நல்ல நேரமா அமைஞ்சுபோச்சேன்னு ஒவ்வொரு பையாத் திறந்து பார்க்கிறேன். எல்லாம் பயணம் சம்பந்தப்பட்ட காகிதங்கள், விவரங்கள், பயணத்தில் வாங்குன பொருட்களின் ரசீதுகள்.


என்னாங்கடா இது? கொசுவத்திக்கே கொசுவத்தியா?


தெற்குத்தீவை முதல்முறைச் சுற்றிய விவரங்கள் முழுசும் அப்படியே லட்டு மாதிரி கையில். ஆஹா......


லார்னாக் காஸில் போய்வந்த சமயம். டனேடின்னு சொன்னதும் கோபுவின் நினைவு. மகளைவிட ஆறு மாசம் பெரியவன். இவன் என்னைச் சந்திச்சப்ப,
இவனுக்கு வயசு ஏழு/எட்டு இருக்கும். இங்கே எங்கூரில் Zoo வில் மீர்கேட் களை முதல்முறையா மக்கள் காட்சிக்கு வச்சாங்கன்னு போயிருந்தோம். அதுக்கு ஒரு மாசம் முன்னாலே இருந்தே அந்தப் படங்களைத் தினமும் தொலைகாட்சியில் காமிச்சு, எங்களை உசுப்பிவிட்டுருந்தாங்க. முதல்நாள் முதல் ஷோ பார்க்கும் வெறியில் இருந்தோம்:-)



அதுகளைப் பார்த்து, 'அய்யடா..... செல்லம் போல இருக்கே'ன்னு சொல்லிக்கிட்டு இருந்தேன் மகளிடம்.


பொது இடத்தில் இதுக்குத்தான் வாயைத் திறக்கக்கூடாது......


ஒரு சிறுவன், புன்முறுவலோடு என் அருகில் வந்து 'ஆர் யூ ஃப்ரம் ஸ்ரீலங்கா?' என்றான்.


'இல்லையே. நான் இந்தியாவிலிருந்து. நீ ஸ்ரீலங்காவா?'


"நானும் இந்தியாதான்"


" இந்தியாவில் எங்கே?"


" கேரளா"

" தானெந்தா இவிடே ஒற்றைக்கோ?"


" இல்லா. அச்சனும் அம்மையும் அதா அவிடே"


இது போதாதா? பாப்பநியூகினி யூனியில் வேலை அப்பா & அம்மாவுக்கு. இங்கே நியூசியில் நிரந்தரக்குடியுரிமைக்கு விண்ணப்பிக்க எண்ணம். அதான் ஒருமுறை நேரில் வந்து ஊர்நிலவரம் பார்த்துட்டுச் செய்யலாமுன்னு பயணத்தில் இருக்காங்க.


அன்னைக்கு இரவுச் சாப்பாடு எங்கள் வீட்டில். மூத்ததாக ஒரு மகளும் உண்டு. மறுநாள் காலை ஃப்ளைட்டில் திரும்பிப்போயாச்சு. அதுக்குப்பிறகு
மகள் இங்கே மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைச்சுவந்து படிப்புத் தொடங்கியாச்சு. இங்கே மருத்துவம் படிக்க டனேடின் யூனியில்தான் தொடங்கணும்.



அடுத்தரெண்டாம் வருசம் குடும்பம் இடம்பெயர்ந்தாச்சு. விரிவுரையாளர் வேலைகளை விட்டுட்டு வந்துட்டாங்க. இங்கே சொந்தமா எதாவது தொழில் செஞ்சுக்கலாமுன்னுதான்.


அவுங்களைப் பார்க்கத்தான் நாங்களும் போயிருந்தோம். என்னை எப்படிப் புடிச்சேன்னு கேட்டதுக்கு,அந்த 'அய்யடா...............' வால்தானாம்!


நர்ஸரி, டெலிவரி ரூம் இப்படி 'வழிகாட்டி' விவரிச்சதும், 'புள்ளி பிரசவிச்சது இவிடேயா' ன்னு கோபுவின் அம்மா சொல்லிக்கொண்டிருந்தார்.


( போன பகுதியின் முதல் பாரா இங்கே வரணும்)


மகளுக்குப் பிரசவம் என்ற சொல்லின் பொருள் தெரியாமல் முழிக்கிறாள். பொதுவா நாம் குழந்தை பெத்தாங்கன்னு சொல்லிடறோம் இல்லே?


கோட்டையில் மேலும் கீழுமா ஒரு இடம்விடாம ஏறி இறங்குனோம். இங்கே இருக்கும் ஒரு தொங்கும் ஏணிப்படிக்கட்டு அபூர்வமானதாம். பூமியின் தென்கோளத்தில் இப்படி இது ஒன்னுதான் இருக்காம்.


இவ்வளவு வீட்டுச்சாமான்கள், கட்டிடச் சாமான்கள் எல்லாம் எப்படி 1000 அடி உசரத்துக்குக் கொண்டுவந்து சேர்த்தாங்களாம்? காளைகள் இழுத்துக்கிட்டு வந்துச்சாம். அப்ப பிரமிட் கட்ட சரிவான ரேம்ப் போட்டு இருப்பாங்கன்னு சொல்வதைக் கற்பனை செஞ்சு பார்க்கலாம். நம்ம தஞ்சாவூர் கோயில் கோபுரத்துக்குக் கல்லை இப்படித்தான் ஏத்துனாங்கன்னு படிச்ச நினைவு வந்துச்சு.


சரி. கதையை எங்கே விட்டேன்? வில்லியம் லாநார்க் தற்கொலை செஞ்சுக்கிட்டார். அப்ப அவருக்கு வயசு 65.


உயில் எழுதுன மனுசர், அதுலே கையெழுத்துப் போடாம வச்சிருந்துருக்கார். தன்னோட முடிவை அவரே எதிர்பார்த்திருந்துருக்க மாட்டார், இல்லே?



கோட்டை யாருக்கு என்ற போட்டியிலும் சொத்தைப் பிரிக்கவும் தகராறு வந்துச்சு. ஒரு மகள்தான் இறந்துபோச்சே. இப்ப இருக்கும் அஞ்சு மக்களுக்கும், கடைசி மனைவிக்கும் நியாயமாப் பாகம் பிரிச்சுக்க வழி இல்லாமப்போச்சு. பேசாம வித்துத் தொலைக்கலாமுன்னு முடிவு செஞ்சாங்க. பிள்ளைங்க எல்லாம் எலிஸாவுக்குப் பிறந்ததுதான். மற்ற ரெண்டு மனைவிகளுக்கும் சந்தான பாக்கியம் இல்லை.



இவ்வளோ பெரிய கோட்டையை யாரு வாங்குவாங்க? கொஞ்சம் கொஞ்சமா அதுலே இருந்த மரச்சாமான்களையெல்லாம் ஏலத்துலே வித்துருக்காங்க.
ஆறுவருசம் இதுக்கிடையில் ஓடிப்போச்சு. கன்னியா ஸ்த்ரீகள் மடமாக் கொஞ்சநாள் இருந்துச்சு.



அந்தக் காலத்துலே 125,000 பவுண்ட் செலவுலே கட்டுனதை........ அரசாங்கமே வாங்கிக்கிச்சு. விலை? வெறும் 3000 பவுண்ட். எதுக்கு வாங்குச்சாம்?


மனநோயாளிகளுக்கான ஆஸ்பத்திரி நடத்த! பத்துப் பன்னெண்டு வருசம் நடந்த ஆஸ்பத்திரியை அப்புறம் வேற இடத்தில் புதுக் கட்டிடத்துக்கு மாத்துனதும் காலியாக் கிடந்த கோட்டை விஷமிகள் கையிலே மாட்டிப் பாழாக ஆரம்பிச்சது.


ஒரு தம்பதிகள் இதை வாங்கிக் கொஞ்சம் புதுப்பிச்சுவச்சாங்க. கோட்டைக்கு இப்ப மின்சாரவசதி கிடைச்சது. அவுங்களாலும் 12 வருசத்துக்கு மேலே இதைக் கட்டிக் காப்பாத்த முடியலை. இவுங்களுக்கோ வயசாகிக்கிட்டுப் போகுது. வித்துறலாமுன்னா யாராவது வாங்க முன்வரணுமே.


ஏலத்துலே போட்டுப் பார்க்கலாமா? வாங்கறவங்க இடிச்சுட்டு, அதுலே இருக்கும் விலை உயர்ந்த மரங்களை எடுத்துக்கலாம்னு விளம்பரம் செஞ்சாங்க. ஏலம் நடக்கற அன்னிக்குச் சும்மா வேடிக்கை பார்க்கவந்த ஒரு ஜோடி, திட்டம் ஏதுமில்லாமச் சட்னு ஏலம் கேட்டுட்டாங்க. அல்ப விலைக்குக் கோட்டை, கைக்கு வந்துருச்சு. 1250 பவுண்ட் தான். (தெரிஞ்சுருந்தா நாம் வாங்கி இருக்கலாம்)



ஒரு ஆர்வத்துலே வாங்கிட்டாங்களே தவிர இதை வச்சுக்கிட்டு என்ன செய்யறது? யானையைக் கட்டித் தீனி போட முடியுமா? அடுத்தவருசமே இன்னொரு கைக்குத் தள்ளிவிட்டுட்டாங்க.



இப்படிப் பல கைகள் மாறி 1967 லே பார்க்கர் குடும்பம் இதை வாங்கி நல்லபடியாப் பராமரிக்கிறாங்க இதுவரை.


கோட்டையைப் பார்க்க ஆட்கள் வந்து போறாங்கன்னாலும் அங்கே நிரந்தரமா இருப்பது மூணு பேர்தானாம். வில்லியமோட முதல் மனைவி, அவுங்க செத்த அறைவாசலில் அப்பப்ப வந்து நின்னுக்கிட்டு இருப்பாங்களாம்.


கேத்தி, சின்னப்பொண்ணுதானே? தனக்காகக் கட்டுன டான்ஸ் ஹாலில் தனியா உலாத்துமாம்.


வில்லியம், இனியும் அங்கே இங்கேன்னு சுத்தி 'வாழ்க்கை'யைத் தொலைக்காம, இப்பவாவது கோட்டையைக் கவனிக்கலாமுன்னு வந்துட்டாராம்.


ஜிலோன்னு இருக்கும் கோட்டையில் தனியாச் சுத்திப்பாருங்க நீங்க. மிதந்துவரும் மூணுபேரையும் உங்களுக்கும் அதிர்ஷ்டமிருந்தால் உணர்வீங்க.

இப்பத்துக் கோட்டைச் சொந்தக்காரம்மாவுக்கு ஒரு 'அனுபவம்' கிடைச்சதாம். நடுங்கிப் போயிருப்பாங்க....பாவம்.


குதிரைலாயத்துலே வந்து தங்குறவங்களும் இப்படித் தென்படுதான்னுப் 'பார்க்க' வர்றாங்களோ என்னவோ?


மகளின் முத்துப்போன்ற கையெழுத்தில் ஒரு காகிதம் கிடைச்சது. என்னவா இருக்குமுன்னு பார்த்தால்..........என்னை அப்படியே பின்னாலே பயணப்பட வச்சுட்டாளே.......


அட! மகள் பதிவு எழுதி இருக்காள்:-))))) அப்ப அவளுக்கு வயசு 11. நம்ம வீட்டின் மூத்த பதிவர்:-)))


அதையே இங்கே போட்டுருக்கேன்.
சரியாத் தெரியலைன்னா கீழே இருக்கு பாருங்க அதில் என்ன இருக்குன்றது.






other things we did in Dunedin. We went to a castle in the which was built in the 1860's. The castle is called 'Larnach's Castle' because William Larnach built it. The castle is quite big inside. You have to pay $9.50 per adult and $3.50 per child!.


It's expensive isn't it?


In the front garden there is a small fountain, a smalla square pond with a few white geese in it. Small archways in a row facing the pond. Vines and flowers have growed up the archways. The archways looked pretty but the pond didn't because nobody had cleaned it had gone yucky greeny colour. On the front entrance there aretone lions,one on each side of the steps going up. Like this




இடப்பக்கம் படிக்கட்டுவரிசை, அதில் இருக்கும் சிங்கம்:-))))

மூன்று பைகளில் கிடைச்ச விவரங்கள் ஒரு 500 பதிவுக்காவது தேறும்.
பார்க்கலாம் என்ன எழுத மூடு வருதுன்னு.

கோட்டைக்குப் பிறகு அங்கே பெங்குவின் பறவைகள் சிலைருக்கும் கடற்கரைக்குப் போனோம்.. ஒருத்தர் மட்டும் 'காணக் கிடைச்சார்'
கோபுவுடன், வீட்டின் மூத்த பதிவர்:-)

31 comments:

said...

துளசி மேடம்! அட்சய பாத்திரம் மாதிரி அந்த பைகள்ளேர்ந்து விஷயம் வந்துட்டே இருக்கும் போல.இனி போர் அடிக்காது.உங்க வீட்டு மூத்த பதிவருக்கு வாழ்த்துக்கள்.
பாராக்களுக்கு இடையில் நிறைய இடைவெளி வருதே.கொஞ்சம் பாருங்களேன்.

said...

வாங்க பிரேம்ஜி.

//அட்சய பாத்திரம்//

அட! நல்ல தலைப்பா இருக்கே. எடுத்துவச்சுக்கறேன்.அப்புறம் பயன்படுத்திக்கலாம்.

நன்றிப்பா.


நேத்தே ட்ராஃப்ட் போட்டுவச்சுட்டு இன்னிக்கு பப்ளிஷ் செஞ்சேன். இடைவெளி நிறைய வந்ததுக்கு இதுவும் ஒரு காரணமோ என்னவோ?

இப்ப ஒரு மாதிரி சரி செஞ்சாச்சு. பார்த்துட்டுச் சொல்லுங்க, முடிஞ்சா.

நம்மவீட்டு மூத்தபதிவர் கவிதையெல்லாம் எழுதுவாங்க ஒரு காலத்தில். அந்த நோட்புக் கிடைச்சால்
வெளியிடணும்.

காலவெள்ளத்தில் பழைய திறமைகள் எல்லாம் ஒதுங்கிப் போயிருக்கு(-:

said...

உயில் எழுதுன மனுசர், அதுலே கையெழுத்துப் போடாம வச்சிருந்துருக்கார். தன்னோட முடிவை அவரே எதிர்பார்த்திருந்துருக்க மாட்டார், இல்லே?
இப்படியா முடிவு தெரியா வாழறது??
எங்களுக்கு இப்பவே தெரியுது!! :-)

said...

வாங்க குமார்.

//எங்களுக்கு இப்பவே தெரியுது!! :-)//

இல்லையா பின்னே? :-)))))



அதுக்குத்தான் கையெழுத்துப்போட்டே வக்கீலுக்குக் கொடுத்தாச்சு.

மாத்தணுமுன்னா ( உயிரோடு இருக்கும்போது:-))

எப்ப வேணா மாத்தி எழுதிக்கலாமே!

said...

துளசி மேடம்! இப்ப பாராக்கள் சரியா வருது.

said...

நன்றி பிரேம்ஜி.

said...

I am the present

said...

//மூன்று பைகளில் கிடைச்ச விவரங்கள் ஒரு 500 பதிவுக்காவது தேறும்.
பார்க்கலாம் என்ன எழுத மூடு வருதுன்னு.//

இதுதான் போன பதிவில் சொன்ன மேட்டரா!! அப்படிப் போடு அருவாள!! :))

said...

ஹா..ஹா.. பழைய பையிலருந்து பதிவா?:))))))))

கலக்குங்க அக்கா:)

said...

வாங்க இளா.

present நல்லது.
past, history :-))

said...

வாங்க கொத்ஸ்.

அருவாளைத் தப்பான இடத்தி(மேட்டரி)ல் போட்டாச்சா......
அச்சச்சோ.....:-))))

said...

வாங்க ரசிகன்.

சம்பவம் நடந்த தினம் எடுத்த (மூத்த பதிவரின்) படங்கள் ரெண்டு இப்பப் புதுசாச் சேர்த்துருக்கேன்.

Anonymous said...

நல்ல நினைவுகளாகத் தான் எங்களுக்கு தருகின்றீர்கள்.
///நேத்தே ட்ராஃப்ட் போட்டுவச்சுட்டு இன்னிக்கு பப்ளிஷ் செஞ்சேன். இடைவெளி நிறைய வந்ததுக்கு இதுவும் ஒரு காரணமோ என்னவோ?///
:)))))))

said...

ஆஹா.....கிரிக்கெட் ரசிகரே,

மொதல்லே கை இப்படிக் கொடுங்க.

யாரும் கவனிக்கிறாங்களான்னு பார்த்தேன்.

நம்ம மக்கள்ஸ் வரிக்கிடையில் படிப்பாங்கன்னு நான் கோபால்கிட்டே பீத்திக்குவேன். வீண் போகலை:-)))

said...

துளசி நானும் பரண் ல பழய மூட்டை ஒன்னாவதுகிடைக்குதான்னு பாக்கவா..

மூத்தபதிவரின் பதிவு சூப்பர்..
அதுவும் அம்மா மாதிரியே.. போட்டோ க்கு பதிலா படம் போட்டு வேற ..

பிள்ளைக்கு என்ன ஒரு அக்கறை பணம் பத்தி எல்லாம் கவலைப்பட்டிருக்கே..

said...

//என்னாங்கடா இது? கொசுவத்திக்கே கொசுவத்தியா?//

//தெற்குத்தீவை முதல்முறைச் சுற்றிய விவரங்கள் முழுசும் அப்படியே லட்டு மாதிரி கையில். ஆஹா......//

பின்னூட்டமும் நீங்களே போட்டு வச்சுட்டீங்க..! என்ன செய்ய?

ஆனா அந்தக்கோட்டை மட்டும் நம்ம நாட்டில் இருந்தா..அதுதான் ரெஜிஸ்ட்ரார் ஆபீஸ் ஆகியிருக்கும்.
எல்லா உயிலும் அங்கதான் பதியணும். :)

said...

வாங்க கயலு.

வீட்டுக்கு வீடு மூட்டைகளுக்கு கொறைவா என்ன?

இதைத்தான் 'தேடுங்கள் கண்டடைவீர்கள்'ன்னு பைபிளில் சொல்லி வச்சுருக்கு:-)

பணம் பத்தின அக்கறை எல்லாம் இந்தப் பதிமூணு வருசத்தில் போயே போச்......

இப்பெல்லாம் 'ஜஸ்ட் ஃபார்ட்டி டாலர்ஸ்' தானாம்(-:

said...

வாங்க சுரேகா.

கோட்டையை ஏன் ரெஜிஸ்தரார் ஆஃபீஸ் ஆக்கணும்.

நம்ம அரசியல்வா(வியா)திகள் இதைத் தன் கோட்டையா எடுத்துக்க மாட்டாங்களா?

அதான் ஆளாளுக்கு அதைக் கொண்டான், இதைக் கொண்டான் ன்னு பட்டப்பெயர் இருக்கே.

கோட்டையைக் கொண் (ன்றா)டான் சரியா வராது?

said...

அந்த கடோசி போட்டோவிலே என்ன எழுதிருக்குனு
படிச்சீகளா ?

Every man is an architect

அப்பவே கோபாலுவைப்பத்தி எத்தனை
நல்லா எழுதியிருக்காக !!

உங்களுக்குத் தோணிச்சா ?

சுப்பு
தஞ்சை.

said...

புதையலே கிடைச்சிருக்குன்னு சொல்லுங்க...

ஒவ்வொண்ணா எடுத்துவிடுங்க. ரசிக்கத்தான் நாங்க இருக்கோம்ல

said...

வாங்க சுப்பு.

நல்லா இருக்கீங்களா? கொஞ்சநாளா உங்களைக்காணோமேன்னு தவிச்சுட்டேன். உங்க பக்கம் வந்து எதாவது மெயில் ஐடி இருக்கான்னுக்கூடப் பார்த்தேன்....ஊஹூம்........

கோபாலுவைப் பத்தின்னா சொல்றிங்க?

கோபாலுக்கு 'எழுத்து' அப்ப நல்லாத்தான் இருக்கு போல:-))))

(இல்லாமயா நாங்க வாய்ச்சிருக்கோம்!)

said...

வாங்க சுந்தரா.

//ரசிக்கத்தான் நாங்க இருக்கோம்ல//

இதுக்குப் பெயர்தான் சொ.செ.சூ.:-))))

(காப்பிரைட் வரவணையான்)

said...

வீடு ஒன்று
பைகள் மூன்று
அதில் நினைவுகளோ கோடிக்கோடி
அவைகளைத் தேடித் தேடி
பதிவுகளாகப் பாடிப் பாடி
வருகின்ற துளசி டீச்சருக்கு வாழ்த்துகள். :)

அந்த அரமணை ரொம்பச் சல்லிசா வித்திருக்காங்க. கெடைச்சிர்ருந்தா ரெண்டு வாங்கிப் போட்டு ஓட்டலாஅ மாத்தீருக்கலாம்.

said...

வாங்க ராகவன்.

ஆம்ஸ்டர்டாமில் கவிதை வகுப்பில் சேர்ந்துட்டீங்களா? :-))))


அரண்மனை இப்ப ஒரு பகுதியில் ( குதிரை லாயத்தில்) ஓட்டலாத்தான் இருக்கு.

பெரிய கட்டிடத்தில் படுக்கும் வசதி செய்யலை அங்கெதான் பேய் இருக்கே.

டூரிஸம் அவார்ட் போனவருசத்துலே இதுக்குக் கிடைச்சிருக்கு.

said...

பிசாசு உலாத்துற எடத்துக்கு அப்பவே போய் வந்துட்டீங்களா:))

பொண்ணு அழகுப்பதிவா போட்டுருக்கு. எங்க அதிர்ஷ்டம் ,,மூணு பை கிடைச்சிருக்கு. எழுதுங்க எழுதுங்க. படு சுவாரஸ்யம். கொப்பு என்ன செய்யறார் இப்ப?

said...

சாரி.கோபுனு திருத்திப் படிங்க.

said...

வாங்க வல்லி.

கோல்ட் & ஃபீவர் இப்பப் பரவாயில்லையா?

வெய்யல் கொளுத்துதா?

நானிருக்கும் இடத்தில் பிசாசுக்கு என்ன வேலை? நான் போன அன்னிக்கு ஓசைப்படாமல் ஒளிஞ்சுக்கிச்சு:-)))

கொப்பு நிஜமாவே உச்சாணிக்கொப்பில்தான் இருக்கா(ன்)ர்.

சிட்னியில் நல்ல வேலையில். கம்ப்யூட்டர் எஞ்சிநீயர்.

மாஸ்டர்ஸ் முடிச்சு இப்ப Phd பண்ணறாருன்னு நினைக்கிறென்ன்.

said...

"அலாவுதீனும் அற்புத விளக்கும்" த்ரில்லர்ர் போல "துளசி அம்மாவும் தொலைந்து கிடைத்த பைகளும்"! இது எப்படி இருக்கு? விளக்கைத் தேய்க்கத் தேய்க்க விரும்பியது கிடைத்தது. பையைக் கிளறக் கிளற பதிவர்களுக்கு உங்களிடமிருந்து 500 அற்புதங்கள் காத்திருக்கு. பிரேம்ஜி அட்சய பாத்திரமாக ஆரம்பித்து வைத்ததை அற்புத விளக்காக (இப்போதைக்கு) முடித்து வைக்கிறேன்.

said...

டீச்சர்..

கொடுத்து வெச்சவுக நீங்க.. அடுத்த ஒரு வருஷத்துக்கு மேட்டர் கைல இருக்கு.. ஜமாய்ங்க..

//நானிருக்கும் இடத்தில் பிசாசுக்கு என்ன வேலை?//

அதானே.. பேய் மனுசங்களை மட்டும்தானே........................................

said...

வாங்க ராமலக்ஷ்மி.

ரொம்பவே 'பில்ட் அப்' கொடுத்துட்டேனோன்னு இப்ப உதறல்:-)))))

said...

வாங்க உண்மைத்தமிழன்.

'பாயிண்டைப் பக்குவமாப் பிடிச்சீங்க':-))))

நீங்க கோட்டை பார்க்கப்போகும் நாளில் 'பொண்ணு' வரும். கேரண்டி.

அதெல்லாம் 'நான்' சொல்லிவச்சுருவேன்:-)