Sunday, May 11, 2008

அன்னைக்கு அன்பளிப்பு






நம்மூர்ச் சந்தைக்குப் போயிருந்தோம். மேய்ச்சலில் கிடைத்தவை இவை.
கத்தாழை வகையில் ரெண்டு வெள்ளி செலவு.



யானையைப் பார்த்ததும் அந்தக்காலக் கார்ப்பரேஷன் குப்பைவண்டி மாதிரி
'டக்'ன்னு கால் நின்னுபோச்சு. ( மாடு இழுக்கும் குப்பை வண்டி. குப்பைத் தொட்டியைப் பார்த்தால் மாடு தானே நின்னுரும்)



யானை வண்டி ஓட்டுது ஜோரா இருக்கே. 'என்ன விலை ?' ன்னு கேட்டேன். அஞ்சு டாலராம். பக்கத்தில் க்ளிப் போர்டு வச்சுருக்கும் பெரிய யானையுடன் சேர்த்துதான் இந்த விலையாம்!!!!


அட! மலிவு.
ஆனாலும் சந்தையில் பேரம் பேசாம வாங்கலாமா?




"நாலு டாலருக்குத் தருவீங்களா?"
"தரேன். இன்னிக்கு நல்ல மூடுலே இருக்கேன்." ( சொன்னது கடைக்காரம்மா)



ஆஹா..... 'ஹேப்பி மதர்ஸ் டே'ன்னு சொல்லிட்டு யானைகளை வீட்டுக்கு ஓட்டிவந்தோம்:-)))
பதிவில் 2 பரிசோதனை வேறு இன்னிக்கு.



1. படத்தைக் க்ளிக்கினால் பெருசா வருதான்னு பார்க்க.


2. கோபால் இதை வலை ஏத்தி இருக்கார்:-) (ட்ரெயினிங் நடக்குது)


அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்து(க்)கள்.

10 comments:

said...

எல்லா அம்மாக்களுக்கும் என் அன்னையர் தின வாழ்த்துகள்.

said...

துளசி மேடம்! யானைக்குட்டி சூப்பரா இருக்கு.

said...

யானைக்குட்டி அம்மாக்கு சூட்கேஸ் நிறைய அன்பு கொடுக்கிறதா:)
அருமையா இருக்குப்பா.
ஜிகே படம் போட்டு இருக்கணும். இன்னும் அழகா இருக்கும்.
அனைத்து அம்மாக்களுக்கும் அவர்கள் அன்புக்கும் வாழ்த்துகள்.

said...

//(ட்ரெயினிங் நடக்குது)//
இருக்கிறவங்க எல்லாருத்தையும் நல்லா இருக்க விடமாட்டீங்களா?

//எல்லா அம்மாக்களுக்கும் என் அன்னையர் தின வாழ்த்துகள்.//
@ கொத்ஸ்...
இந்த மாதிரி அரசியல் பின்னூட்டங்களை அனுமதித்த உங்களை நான் மிகவும் கடுமையாக கண்டிக்கிறேன்..

said...

வாங்க கொத்ஸ்.

உங்க தங்கமணிக்கு வெறும் வாழ்த்து மட்டும்தானா?

பரிசு விசயத்தைச் சொல்லலை?

said...

வாங்க பிரேம்ஜி.

அது ஃபோர்வீல் வச்சுருக்கு:-)))

said...

வாங்க வல்லி.

அது க்ளிப் போர்ட்.

அதுலே எதாவது படம் வரையணும்.

நல்ல ஸ்டிக்கர் இருக்கான்னு தேடணும்ப்பா.

நம்ம கற்பனை வளத்துக்கு கம்மியா என்ன?

ஜிகே நலம். என் கையைத் தட்டிவிட்டு ரத்தகாயம் பண்ணிட்டான்.
எல்லாம் தங்கம் ஆசைதான்.

said...

வாங்க இளா.

அப்படியெல்லாம் நிம்மதியை எதிர்பார்க்கலாமா?

அதுவும் இங்கே....:-)))

said...

அன்னையர் தின வாழ்த்துக்கள் ;))

\\1. படத்தைக் க்ளிக்கினால் பெருசா வருதான்னு பார்க்க.\\

ம்ம்...சரியாக இருக்கு...;)

\\(ட்ரெயினிங் நடக்குது)\\

டீச்சர் கொடுக்கிற ட்ரெயினிங்னா சும்மாவா!!!..பதிவு கலக்குது ;)

said...

வாங்க கோஒபி.

வாழ்த்துகளுக்கு நன்றி.

வீட்டுலேயும் வகுப்பு எடுக்கவேண்டியதாப் போச்சுப்பா:-))))