சமீபத்தில்(!) 1434 இல் செடி என்ற இடத்துலே(தாய்லாந்தின் வட பகுதி) மின்னல் வெட்டுன ஒரு சமயம் இவரைக் கண்டு பிடிச்சிருக்காங்க. 34 வருசம் அங்கே இருந்துருக்கார். அதுக்கப்புறம் ச்சியாங்மாய் என்ற இடத்துக்கு அப்போதிருந்த மன்னர் இவரைக் கொண்டு போயிட்டார். அங்கேயே 1551வது வருசம் வரை வாசம்.
அப்போ அங்கே ஆட்சி செஞ்சுக்கிட்டு இருந்த மன்னருக்கு ஆண் வாரிசு இல்லை. ஒரே ஒரு மகள்தான். லாவோஸ் நாட்டு மன்னருக்கு அவளைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்தாங்க. அவுங்களுக்கு ஒரு மகன் பிறந்தான். இளவரசர் பேர் செய்செத்தா. இவருடைய (அம்மாவின் அப்பா)செத்தபிறகு பேரனுக்கே பட்டம் கட்டுனாங்க. அப்ப இவருக்கு வயசு வெறும் பதினைஞ்சுதான். சிலவருசங்களுக்குப் பிறகு லாவோஸ்லே இவருடைய அப்பா இறந்துட்டார். அங்கேயும் அரியாசனம் காத்துக்கிடக்கு.(கொடுத்து வச்ச வர்) செய்செத்தா, லாவோஸ்க்குக் கிளம்பிப்போனப்பக் கையோடு மரகத புத்தரை எடுத்துக்கிட்டுப் போயிட்டார். போறப்பக் கட்டாயம் ஒரு நாள் இங்கே மறுபடி வருவேன் புத்தரோடுன்னு சொல்லிட்டுப் போனாராம். ஆனால்.....வார்த்தை தவறிவிட்டார் இந்தக் கண்ணப்பர்.ஆச்சு 12 வருசம்.
1564லே பர்மாக்காரங்க இவுங்களோடு யுத்தத்துக்கு வந்துருக்காங்க. தாக்குப்பிடிக்க முடியாம வேற இடத்துக்குப் போய் தலைநகரம் அமைச்சுக்கிட்டார். நீ போகுமிடமெல்லாம் நானும் வருவேன்னு புத்தரும் கூடவே போயிருக்கார். .214 வருசம் ஆயிருச்சு. இதுக்குள்ளே பல மன்னர்கள் வந்து போயிருப்பாங்கதானே? மாறாதவர் புத்தர் மட்டுமே.
1778லே முதலாம் ராமா என்ற அரசர் ( பாங்காக் ஆளு) புத்தர் இருந்த ஊருக்குப் படையெடுத்துப் போயிருக்கார். அங்கே இருந்து நம்ம புத்தரை இங்கே கொண்டுவந்துட்டார். தொன்புரி என்ற கோயிலில் வச்சுக் கும்பிட்டுக்கிட்டு இருந்தார். (இங்கத்து ராஜாக்களுக்கு பட்டம் கட்டுனவுடன் ராமா என்ற பட்டப் பெயர் கொடுக்கறாங்க. இப்போ இருக்கும் ராஜா 9 வது ராமா. ராம ராஜ்யம்தான், இல்லே)
அப்புறமாக் கொஞ்சநாளில் (1784 மார்ச் மாசம் 22 தேதி) இவருக்குத் தனியா ஒரு கோயிலை அரண்மனை வளாகத்துக்குள்ளேயே கிழக்கில் கட்டி அங்கே பிரதிஷ்டை பண்ணிட்டார் ராஜா ராமா. இதுதான் இப்ப நாம் பார்த்துக்கிட்டு இருக்கும் மரகதப் புத்தர் வரலாறு. இந்தக் கோயிலை Wat Phra Kaew ன்னு தாய் மொழி யில் சொல்றாங்க. உங்களுக்காவது உச்சரிக்க முடியுதான்னு பாருங்க.
பர்மாக்காரர்களொடு நடந்தச் சண்டையில் ஏற்பட்ட களேபரத்தில் இவர் எங்கியோ மண்ணில் புதைஞ்சு மறைஞ்சுட்டார்.அப்புறம் ஒரு பேய்மழையில் இவர் மேலே இருந்த மண்ணெல்லாம் மறைஞ்சுபோய் ஜொலிச்சுருக்கார். கண்டுபிடிச்சு வச்சுக்கிட்டாங்க. (கதை 1)
முதல்லே மண்ணால் ஆன சிலைன்னு நினைச்சு எடுத்துப்போய் வச்சுக் கும்பிட்டுருக்காங்க. ஒரு நாள் மூக்காண்டை இருந்த மண்கட்டி பெயந்துபோச்சு. உள்ளே பார்த்தால் பச்சையா மினுங்கிச்சு. அதுக்கப்புறம் அடையா ஒட்டியிருத மண்ணை எல்லாம் எடுத்துட்டாங்க. (கதை 2)
இப்படி இவருக்கும் ரெண்டு மூணு கதைகள் இருக்கு.
இவரை ஒரு சமயம் வேற இடத்துக்கு மாற்றலாமுன்னு நினைச்ச ராஜா, சிலையைத் தூக்கிவர ஒரு யானையை அனுப்புனாராம். அந்த யானை போகும் வழியில் ஒரு முச்சந்தியா ரோடு கிளை பிரியும் இடம் வரை பேசாமல்(?) வருமாம். அங்கே வந்தபிறகு சிலை இருக்கும் ஊருக்குப் போகும் பாதையை விட்டுட்டு வேற சாலையில் போச்சாம். இதே மாதிரி மூணு முறை நடந்துச்சாம். அப்போதான் ராஜா உணர்ந்தாராம், மரகத புத்தரை இடம் பெயர்க்க விடாமல் சில சக்திகள் காவலா இருக்குதுன்னு. (கதை 3)
சிலை ரொம்பப் பெருசு கிடையாது. ஒரு 66 செ.மீ நீளம்தான். சப்பணம் போட்டு அமர்ந்திருக்கும் கோலம். ரெண்டு கால் முட்டிகளுக்கிடையில் உள்ள தூரம் 48.3 செ.மீ. புத்தர் சிலைகளில் அவர் எந்தக் கையை எப்படி வச்சுருக்கார் என்றதுக்கெல்லாம் கூட எதேதோ பொருள் சொல்றாங்க. இவர் வலது கையை வலது முழங்கால் முட்டியில் வச்சுருக்கார். இப்படி கை இருந்தால் ஒரு தீர்மானத்தோடு இருக்கார் என்று பொருளாம்.
சிலை அமைப்பைப் பார்த்தால் தென்இந்தியாவிலோ இல்லை இலங்கையிலோ செஞ்சுருக்குமோன்னு கூடச் சில ஆராய்ச்சியாளர்கள் நினைக்கிறாங்களாம்.
இப்ப இருக்கும் கோயில் ரொம்ப அருமையாக் கட்டி இருக்காங்க. இங்கே மூணு வாசல் இருக்கு. நடுப்புறம் இருக்கும் ஆடம்பரம் அதிகம் இல்லாத சின்னூண்டு வாசல் வழியா வரும் உரிமை அரச குடும்பத்துக்கு மட்டும்தானாம்.
புத்தருக்கு ஒரு கோடைகால உடை, ஒரு மழைக்கால உடைன்னு மன்னர் செஞ்சு கொடுத்துருக்கார். அதுக்கப்புறம் வந்த மன்னர் குளிர் காலத்துக்குன்னு இன்னொரு உடை செஞ்சு கொடுத்தாராம். இப்ப மூணு உடைகள். வருசம் மூணு முறை உடை மாற்றம். இது ஒரு திருவிழா மாதிரி கொண்டாடுவாங்களாம். அந்தக் காலத்தில் இந்தப் பூசை முடிஞ்சதும் புனித நீரை அங்கே மண்டபத்தில் கூடி இருக்கும் அதிகாரிகள், முக்கியஸ்த்தர்கள் மீது தெளிப்பாங்களாம். இந்தப் பழக்கம் இப்பக் கொஞ்சம் மாறி இருக்கு. சாதாரண மக்களுக்கும் இந்த வாய்ப்புக் கிடைக்கணுமுன்னு அன்றைய தினம் கோயிலுக்கு வெளியே & உள்ளே கூடி இருக்கும் மக்கள் மீது தெளிக்கிறாங்களாம். பன்னீர். ஒரு துளியாவது நம்ம மேலே விழாதான்னு மக்கள் ஆர்வமாக் காத்திருக்காங்களாம். அப்படி விழுந்துச்சுன்னா, அந்த வருசம் எல்லாம் மங்களகரமாத் தங்கள் வாழ்க்கையில் நடக்கும் என்ற நம்பிக்கை.
இவரைத்தவிர, ஒவ்வொரு மன்னர்கள் ஆட்சியின் போதும் அவுங்க செஞ்சு வச்ச புத்தர் சிலைகள் ஏராளமா இங்கே வச்சுருக்காங்க. சுவரில் ராமாயணம், புத்தர் சரித்திரம் வாழ்க்கை வரலாறுன்னு அட்டகாசமான, பிரமாண்ட அளவிலான ம்யூரல் ஓவியங்கள். இதையெல்லாம் கவனமாப் புதுப்பிக்கும் பணி இப்ப நடந்துக்கிட்டு இருக்கு.
கருடனுக்கும் நாகத்துக்கும் ஆகவே ஆகாது. இங்கே இதைப்போல 112 கருடன் &
நாகம் சிற்பம் இருக்கு.
கோயில் மணி ஓசை ஒன்றைக் கேட்டதாரோ?
14 comments:
இப்ப பாருங்க,அட்டகாசமாக படம் மேலே சொடுக்கி பெரிதாக்கி --- பிரமாதமாக இருக்கு.
ஜேட் புத்தர்னதும் நமக்கு ஜாக்கி சான்னோட Around the World in 80 days படம் ஞாபகம் வருது. கதை 3 ல வர்ர மாதிரி சில சமயம் கடவுள் இப்படித்தான் பண்ணணும்னு உணர்த்துவார். நமக்குத்தான் அது புரியறதில்ல.
அட! ஆமாம்.......
என்ன செஞ்சீங்க குமார்?
ரீச்சர், என்ன படங்கள் எல்லாம் தாறுமாறா வந்திருக்கு? அவை பற்றிய வருணனைகள் எல்லாம் கூட கிட்டவே இல்லை!
ஆனா சொடுக்கினா பெருசாத் தெரியுதே!! :))
சொடுக்கினால் பெரிசாத் தெரியறது. அழகாவும் இருக்கு. ஏகத்துக்கு இப்படி வர்ணம் கொட்டிக் கிடகே.
அருமை அருமை அருமை. சரித்திரச் செய்திகளும் அருமை.
உங்களை நான் பேராசிரியர்னு அழைக்கப் போறேன். அவ்வளவு விரிவான விளக்க உரை. நல்லா இருக்குப்பா.
வாங்க சின்ன அம்மிணி.
சிட்னியில் ஒரு (ஷாப்பிங் ஏரியா)இடத்தில் ஜேடுலே செஞ்ச பெரிய சீன அலங்காரம் பார்த்தேன்.
இங்கே புத்தர் என்றதால் ராஜா கோயில் கட்டிட்டார்.
வாங்க கொத்ஸ்.
க்ளிக்குனா பெருசாத் தெரியணுமுன்னு நான் கூகுள் ஆண்டவர்கிட்டே வேண்டிக்கிட்டதுக்குக் கைமேல் பலன் கொடுத்துட்டார் போல இருக்குப்பா.
வருணனைகள் ஏறக்குறைய கிட்டேயே இருக்கேப்பா.
இனி கூகுள் ஆண்டவருக்கு தீபாராதனை, மொட்டை எல்லாம்
வேண்டுதல் வைக்கணுமோ?:-)))
வாங்க வல்லி.
நீங்க டீச்சர்.நான் பேராசிரியை.
சரியா வருதாப்பா? :-)))))
அடுத்த டூர் எங்க டீச்சர் ;))
மரகத புத்தர் வரலாறு நல்லா இருந்துச்சி...படங்கள் எல்லாம் நன்றாக இருக்கு ;)
வாங்க கோபி.
கொஞ்சம் பாட்டனி வகுப்புக்காக உங்களைத் தோட்டத்துக்குக் கொண்டுபோகலாமான்னு ஒரு யோசனை இருக்கு.
(போயஸ்) கார்டன் டூர்:-)))))
டீச்சர்ங்குறத மறுபடியும் கதை சொல்லி நிரூபிச்சிட்டீங்க. சூப்பர்.
ஜேட் எனப்படுவது மரகதம் இல்லை. எமரால்டுதான் மரகதம். மரகதம் கண்ணாடி மாதிரி இருக்கும். கேடு கண்ணாடி மாதிரி இருக்காது. ஆனா ரெண்டும் ஒரு குடும்பந்தான்னு நெனைக்கிறேன். சரியாத் தெரியலை.
வாங்க ராகவன்.
ஜேடு எமரால்டும் ஒரே மாதிரி இல்லைன்னாலும் எமரால்டின் பச்சை நிறத்தை மட்டும் மனசுலே வச்சுக்கிட்டு இவரை எமரால்ட் புத்தர்ன்னு சொல்றாங்களாம். மரகதம் ஒளி ஊடுருவிபோகும். ஜேடு பச்சைக் கலர் பளிங்கு மாதிரிதான்.
இதுலேயும் இளம்பச்சை முதல் கடும்பச்சைவரை இருக்கு.
இங்கே நியூஸியிலும் ஒரு வகை ஜேடு கிடைக்குது. அதை நெஃப்ரைட் ன்னு சொல்றாங்க.
மவோரிகளுக்கு அது ஒரு ஸ்பெஷல்.
துளசி,
படங்கள் அருமை. விளக்கம் அதை விட அருமை.
வருகைக்கு நன்றி சீனா.
Post a Comment