'வாயை மூடிக்கிட்டு இருக்க உனக்கு உரிமை இருக்கு. எது நடந்தாலும், அதாவது குற்றங்கள் எதாவது நடந்து அதைப் பற்றி எனக்குத் தெரிஞ்சிருந்தாலும் காவல்துறைக்கு அதைப் பற்றித் தகவல் தெரிவிக்காம இருக்க உனக்கு உரிமை இருக்கு'.
என்னடா கதை இது?
அதுக்குத்தான் குற்றங்கள் முக்கியமா கொலை நடந்துபோச்சுன்னா, 'தகவல் தெரிந்தவர்கள் யாராவது முன்வந்து விவரம் சொல்லுங்கோ'ன்னு காவல்துறை
அறிவிப்பு என்ற பெயரில் 'கெஞ்சுதோ'?
right to silence law ன்னு ஒன்னு இருப்பது இப்பத்தான் எனக்குத் தெரியவந்துச்சு.
எதுக்கு இப்படி ஒரு சட்டம் ன்னு கொஞ்சம் 'தேடி'ப் பார்த்ததில்
கிடைச்ச சிலது ஆச்சரியமா இருக்கு. அமெரிக்காவில் காவல்துறை Miranda warning
'மிராண்டா வார்னிங்'னு எச்சரிக்கை தருவாங்களாம். குற்றவாளின்னு சந்தேகப்படும் நபருக்கு அவருடைய உரிமைகளை நினைவு படுத்தும் எச்சரிக்கையாம். விருப்பம் இல்லேன்னா வாயை மூடிக்கலாம்.
எர்னெஸ்ட்டோ மிராண்டாவைப் பத்தி வலையில் கிடைச்ச பகுதி பெரிய கதையாத்தான் இருக்கு. சம்பவம் சமீபத்தில் நடந்ததுதான் 1963 லே.
தமிழ்ச் சினிமா மூலம் மட்டுமே காவல்துறையைப் பத்தித் தெரிஞ்சுக்கிட்டு இருக்கும் என்னைப்போன்ற ஆட்களுக்கு இந்த மிரட்டும் வார்னிங்தான் தெரியும். முட்டிக்கு முட்டித் தட்டி, நகக்கண்ணுலே ஊசி ஏத்தி, லாடம் கட்டின்னு என்னென்னவோ 'சிகிச்சைகள்' இருக்குல்லே?
அதுக்குத்தான் ஏர்போர்ட்லே இமிகிரேஷன் & கஸ்டம்ஸ் பகுதியில் சந்தேகத்துக்குரிய பயணிகள் கிட்டே 'இப்ப நீங்க எது சொல்றீங்களோ, அதை உங்களுக்கு எதிராப் பயன்படுத்தும் வாய்ப்பு இருக்கு'ன்னு எச்சரிக்கை விடறாங்களோ?
இதையும் இங்கே நம்ம தொலைக்காட்சியில் காமிக்கும் 'பார்டர் செக்யூரிட்டி' என்ற தொடரில் கவனிச்சதுதான்.
இப்ப எதுக்கு இப்படி மன உளைச்சல் எனக்கு?
மூணுமாசக் குழந்தைங்க , ரெட்டைப்பிள்ளைங்க ஆஸ்பத்திரியிலே அட்மிட் ஆகி இறந்து போயிட்டாங்க. அட்மிட் ஆனப்பப் பரிசோதிச்சதில் ரெண்டு குழந்தைகளுக்கும் தலையில் பலத்த அடி மண்டை ஓடு பல இடங்களில் விரிசல் விட்டுருக்கு.. கால் எலும்பு உடைஞ்சு போயிருந்துச்சு.
குழந்தையோட அம்மா அப்பாவைப் பத்தி ரொம்பச் சொல்ல முடியாது. அவுங்க சொந்த வாழ்க்கை இல்லையா?
காவல்துறை இந்த விஷயத்தைக் கையில் எடுத்ததில் இந்தக் குழந்தைகளோட அப்பாவைக் கைது செஞ்சு காவலில் வச்சாங்க.
அப்புறம் நிறைய குடும்ப அங்கத்தினர்களை விசாரிச்சாங்க. ஆளாளுக்கு சில விஷயங்களைச் சொன்னாலும் 'உண்மை'யை யாரும் சொல்லலை. குடும்பத்துக்குள்ளே மவுனச்சுவர்.
இந்தக் குழந்தைகளுக்கு முன்னாலே பிறந்த 'ஒரு வயசுக் குழந்தையான அண்ணன், தம்பிகளைத் தள்ளி விட்டுட்டான்'னுகூடச் சொன்னாங்க.
ரெண்டு வருசம் ஆகிப்போச்சு. இதுக்கிடையில் குழந்தையின் அம்மா, அந்த அப்பாவுடன் உறவை முறிச்சுக்கிட்டாங்க. அந்த ஒரு வயசுக்குழந்தையை அப்போ அரசாங்கம் ( CYFS சில்ரன் & யூத் & ஃபேமிலி செர்வீஸ்) வேற இடத்தில் வச்சு வளர்க்குது. அந்தப்புள்ளைக்கு இப்ப 3 வயசு.
அம்மாவுக்கு இந்த மூணு பிள்ளைங்க இல்லாம இன்னும் 3 பிள்ளைங்க, வேற பார்ட்னர்ஸ்க்குப் பிறந்தவங்க 13,11, 8 வயசுகளில் இருக்காங்க. (விடுங்க இது ரொம்பப் பெரிய கதை)
போனவாரக் கடைசியில் தீர்ப்பு வந்துச்சு. இந்த அப்பாவைக் குற்றம் செய்யாதவர்ன்னு ஜூரிகள் சொல்லிட்டதாலே விடுதலை ஆகிட்டார்.
நல்லது . இவர் குற்றம் செய்யலைன்னா அப்ப யார் குற்றவாளி?
இப்பத்தான் காவல்துறை சொல்லிருச்சு.' இந்தக் கேஸை மூடிட்டோம். இனிமேல் இதைப்பற்றிய விவரம் இல்லை. செய்யறதைச் செஞ்சாச்சு.' சொன்னவர் இந்த விசயத்தைக் காவல்துறை சார்பில் விசாரித்தக் குழுவின் தலைவர். 'என்னைப்பொறுத்தவரை இனிமேல் இந்த விஷயத்தில் செய்வதற்கு ஒன்றுமே இல்லை'. தேசீயத்தொலைக்காட்சியில் இப்படி அறிவித்தார். 'எல்லாம் முடிந்தது'
ஹா.....அப்படியா?
என்னைப்போன்றப் பொதுமக்களுக்குப் பயங்கரக் கோபம். 'சரிப்பா. அப்பன் குற்றவாளி இல்லை.அதுவரை சரி. உண்மையான குற்றவாளியாருன்னு போலீஸ் கண்டுபிடிக்கணுமா இல்லையா?'
கேஸ் குளோஸ்டுன்னா என்னா அர்த்தம்? மூணுமாசக்குழந்தைங்க தற்கொலையா செஞ்சுக்கிச்சு? ரெட்டைக் கொலை செஞ்ச குற்றவாளி சுதந்திரமா நம்மிடையில் உலாத்தலாமா?
எங்க பிரதம மந்திரி (ஹெலன் க்ளார்க் அம்மா)யும் சொன்னாங்க, இந்தக் கேஸை மறுபடித் திறக்கணும். உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடிச்சே ஆகணும். ரெண்டு பிள்ளைங்களுக்கும் நியாயம் கிடைக்கணும்.
ஒப்பினியன் போல் நடந்துச்சு.
பேசாமல் இருக்கும் உரிமையை மறுபரிசீலனை செய்யணுமா?
ஆமாம்னு மெஜாரிட்டி சொல்லுது.
பிரதமர் இந்தக் கேஸை மறுபடி நடத்தணுமுன்னு சொல்லலாமா?
63 சதவீதம் 'எஸ்'ன்னு சொல்லுது.
இறந்த குழந்தைகளின் அம்மாவோட வக்கீல், பிரதமர் (வாயைப்)பொத்திக்கிட்டு இருக்கணுமுன்னு அறிக்கை விடுறாங்க.
இன்னிக்கு உதவிப் போலீஸ் கமிஷனர் டிவி நேர்காணலில் வந்து,
இங்கே காவல்துறை சுதந்திரமா செயல்படும் வகையில் அமைஞ்சிருக்கு. யாரும் முக்கியமா அரசியல்வாதிகளின் தலையீடு கூடாதுன்னு சொல்றார்.
என்னதான் நடக்குது?
பிஞ்சுகளுக்கு நியாயம் கிடைக்குமா?
மேல்விவரம் வேணுமுன்னா நிறைய இங்கே கொட்டிக்கிடக்கு.
நம்ம விக்கியண்ணன் இப்படிச் சொல்றார்.
அம்மாவைப் பற்றிய விவரம் இங்கே
Tuesday, May 27, 2008
மனசில் ஒரு முள்(-:
Posted by துளசி கோபால் at 5/27/2008 09:10:00 PM
Labels: kahui twins
Subscribe to:
Post Comments (Atom)
22 comments:
படிக்கவே வருத்தமாயிருக்கு டீச்சர்!
என்ன செய்யறது? உங்க ஊர் தர்ம நியாயம்
இப்படித்தான்கிறபோது?
ரொம்ப டூ மச்சா இருக்கே. இன்னிக்கு இங்க படிச்ச ஒரு தகவல். இறந்த மகனின் உடலை ப்ரீசரில் வைத்துவிட்டு ஒரு வருட காலம் இருந்திருக்காங்க. அதே ப்ரீசரை சாப்பாடு வைக்க பயன்படுத்தி வேற இருக்காங்க. என்னாத்த சொல்ல........
வாங்க வாத்தியார் ஐயா.
தர்மம், நியாயம் எல்லாம் எல்லாருக்கும் ஒன்னுபோல இருக்கவேணாமா?
தனிமனித உரிமை முக்கியம்தாஅன். அதுக்காக......
இந்தக் குடும்பம் மவோரி இனம் என்றதால் வேறுவிதமான ரைட்ஸ் இருக்குன்னு நினைச்சுக்கிட்டு எங்கியோ யாரோ அக்கிரமம் செஞ்சுக்கிட்டு இருக்காங்க.....
வாங்க கொத்ஸ்.
ரெண்டு வாரம் முன்பு மூணு குழந்தைங்க (நியூ பார்ன்) ஃப்ரீஸர்லே இருந்து வீட்டின் பெரிய மகன் கண்டுபிடிச்சதா ஒரு செய்தி இங்கே டிவியில் சொன்னாங்க.
அக்கிரமத்துக்கு எல்லையே இல்லாமப்போய்க்கிட்டு இருக்கேப்பா....(-:
:(
சொல்லப்படாத வரைக்கும் எல்லாத் தவறுகளும் மூடி மறைக்கப் படுவது காலம் காலமாக நடப்பதுதானே!
அதுதான் சட்டமாயும் இருக்கிறது!
அவரவர் நியாயம் அவரவர்க்கு!
நிரூபிக்கப் படாத வரைக்கும் எல்லாருமே நிரபராதிகள்தான் இங்கு!
நம்ம நாடு இந்த விஷயத்தில் தேவலாமோ?? உண்மையான உறுத்தல் இருக்கோ இல்லையோ எதிர் கட்சியினர் வறுத்தெடுத்து விடுவார்கள் என்ற பயத்திலாவது அரசு அக்கறை காட்டும்..
மனதைப் பிசைகிறது மேடம்!
வருத்தமான நிகழ்வு.
:-((
மேடம் ,
இது என்ன பிரமாதம் !
எங்க ஊரில் முன்னாள் அமைச்சரை நாடு ரோடில் ஓட ஓட வெட்டி கொன்றனர் .
அனைவரும் இப்பொழுது விடுதலை ஆகி விட்டனர் . எங்கள் அரசும் மேல் முறையீடு ஏதும் செய்யாது !
இது எங்கள் ஊர் சட்டம் .
எங்கள் ஊரில் சட்டம் தன் கடமையை செய்யும் என்பார்கள் ஆளும் ஆட்சியினர் .அதற்கு மேல் நடவடிக்கை ஏதும் இருக்காது என்று நாங்கள் அர்த்தம் புரிந்து கொள்ள வேண்டும் !
அடடே!
நம்ம ஊரில்தான் இப்படி!
உங்க ஊரிலெல்லாம் ரொம்ப நியாயமா நடந்துக்குவாங்கன்னு நினைச்சேன் .
அங்கயும் இந்தக்கதைதானா?
சந்தோஷம்...!
அந்த ரெண்டுகுழந்தைகளும் உயிர்த்தெழுந்து வந்து சொன்னாத்தான் உண்டோ?
:(
சே இப்படியுமா இருக்கின்றது சட்டம். நம்ம போலிஸ் இதில் பாராட்டப்பட வேண்டியவர்கள். அடிக்கிற அடியில் செய்யாத குற்றத்தைக் கூட ஒத்துக் கொண்டு விடுவார்கள். குழந்தைகள் இறந்தது திரும்பப் போவதில்லை. இனி என்ன செய்வது?
Human can't be a 'ஆண்டவன்'.
அறுவை பாஸ்கர் சொன்னதுதான் நடக்குது. குற்றவாளிகள் கம்பீரமாக
நடந்து வந்து விடுதலையாகி விழா கொண்டாடுவது இங்கேதான் நடக்கும்.
கேட்பார் இருந்தும் கேட்க தைரியமில்லை.
பச்சிளம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டு உயிர் வாழ்வதையே தடுக்கும்
கோரமெல்லாம் நடந்தும் முறையான நடவடிக்கை இல்லை.
அவர்கள் குடும்ப முன்னேற்றத்தை
தடுப்போரிடமிருந்து தடுத்தாத்கொள்ளவே
நேரம் சரியாயிருக்கு!!! வேறென்னத்த..
சொல்ல.
நம்ப ஊரில் பஞ்சமா என்ன.. இதோ இரண்டு வாரமா தினம் எங்களூரில் டிவி பேப்பருக்கு தீனி போடுவது இதே மாதிரி செய்தி தான். 14 வயசு பொண்ணு கழுத்தறுத்து கொலை 45 வயது வேலைக்காரன் மாடியில் அதே போல கொலை செய்து கிடக்கார்.. அம்மா அப்பா டெண்டிஸ்ட் .. கூர்மையான ஆயுத ம் கொண்டு கொலை.. அது டாக்டரோ புட்சரோ தானா இருக்கனும். அப்பா மேல சந்தேகம்.. ஆனா அவரு நான் இன்னோசண்ட் ன்னு சொல்றாரு.. கேஸ் நகரர வழி காணோம்.
அநியாயம்பா.
ஆனா நம்ம ஊரில நடக்கிறது அதையெல்லாம் ஒண்ணுமில்லங்கறதை மாதிரி செய்துடும்.
நீங்க சொல்கிற கேஸ் விபரீதமா இருக்கே. ரொம்பப் பாவம் .பிஞ்சுகள்.
==(((((
பின்னூட்டி இந்த சோகத்தில் பங்கெடுத்த நண்பர்களுக்கு நன்றி.
நம்மூரில் அரசியல்வாதிகளைக் கொல்றதுக்கு எதாவது பகை, பதவின்னு 100 காரணம்.
இங்கே மூணேமாசம் ஆன குழ்ந்தைகளைக் கொன்னதுதான் மனசுக்குப் படபடப்பா இருக்கு. அந்தப் பிள்ளைகளும் 11 வாரம் குறைப்பிரசவத்தில் பிறந்தபிள்ளைகள்.
வறுமைன்னு காரணம் காட்ட முடியாது.
அரசாங்க உதவிப்பணம் வாரத்துக்கு $2087.48 கிடைக்குது அந்த குடும்பத்துக்கு.
இன்னும் உள்ளே போய்ப் பார்த்தால் மனசுக்குக் கஷ்டமான விசயம் நிறைய இருக்கு இந்த வழக்கில்.
அங்கங்கே பிள்ளை இல்லாத தம்பதிகளை நினைக்கும்போது ஆண்டவனின் அரசாங்கத்தில்கூட இப்படி அநியாயமான்னு மனம் கசந்து போகுதுங்க.
வருத்தமா இருக்கேன்.
என்ன கொடுமை டீச்சர்:-((
//நம்மூரில் அரசியல்வாதிகளைக் கொல்றதுக்கு எதாவது பகை, பதவின்னு 100 காரணம்.//
அதேதான் நானும் நினைத்தேன். பால் மணம் மாறா பாலகர்கள் என்ன பாவம் பண்ணியிருக்க முடியும்?
கயல்விழி சொல்லும் கேஸ் ஒரு வாரமா செய்தியிலே இருக்கு. அப்பா மட்டுமா தான் 'இன்னொசெண்ட்' என்கிறார்..அம்மாவும் சேர்ந்து புருஷனுக்கு வக்காலத்து வாங்குகிறார்.
நம்மாலே வருத்தப் பட மட்டும்தான் முடியுது. ஆண்டவன் அரசாங்கத்திலேயும் பெட்டிஷன் கொடுத்திருக்கீங்க! பார்க்கலாம் மேடம்!
கொடுமை...;(
பாவம் டீச்சர்..
அந்தக் குழந்தைகளைப் பாருங்க..பூப்போல துயிலுது..அதைக் கொல்ல எப்படித்தான் மனசு வருதோ? :(
எல்லா நாட்டிலயும் "மனித உரிமைத் திணைக்களம்'னு ஒண்ணு இருக்கே..
அது அங்க என்ன பண்ணுது?
துளசி,
மனம் வருந்துகிறது - மழலைச் செல்வங்களை கொலை செய்து விட்டார்களே ! பதைபதைக்கிறது மனம் 00 நம் கையாலாகதா தன்மையை நினைத்து
என்ன நடக்கிறது உலகமெங்கும்
வாங்க நண்பர்களே.
இந்த ஒரு வாரத்துலே மூணு ஹை ப்ரொஃபைல் கேஸ்களில் ஜூரி நாட் கில்டின்னு வெர்டிக்ட் கொடுத்துருக்காங்க.
அதனால் அந்த சைலன்ஸ் சட்டத்தை ரிவ்யூ செய்யணுமுன்னு மக்கள் அரசை வற்புறுத்துறோம்.
தெரிஞ்ச உண்மையைச் சொல்ல வைக்கணும்.
Post a Comment